Yarl Forum
புலம்பெயர்முதியவர்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: புலம்பெயர்முதியவர்கள் (/showthread.php?tid=8035)



புலம்பெயர்முதியவர்கள - ganesh - 10-05-2003

முதியவர்கள்


- ganesh - 10-05-2003

புலம்பெயர் நாடுகளில் வசித்து வரும் முதியோர்களில் சிலர் தமது
மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றபோதிலும் சிலர் தமது குடும்பங்கள் இந்த நாடுகளில் இருந்தபோதும் குடுமபங்களைப் பிரிந்து அவர்களுடன் எந்தவித தொடர்புமின்றி தனிமையில் வாழ்வதை நாம் காணக்கூடியதாகவுள்ளது வேறு சிலர் தமது வயதுபோன பெற்றோர்களை இங்கு அழைத்துவிட்டு நடுத்தெருவில் விட்டுள்ளார்கள் இவற்றுக்கெல்லாம்
காரணம் என்ன? வயது போன பெற்றோர்கள் எமக்கு சுமையா?
வேறு சிலர் கணவன் மனைவிவேலைக்கு செல்வதால்
தமது பிள்ளைகளைப்பராமரிப்பதற்கு என்ற விசேடமாக வரவழைத்து
வீட்டிற்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள் சில முதியோர்கள் தமக்கு பிள்ளைகளே
வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் இதற்கெல்லாம் காரணம் என்ன?


- nalayiny - 10-05-2003

24 மணிநேர தனித்தமிழ் வானொலியானஉவடிஉ யினால் நடாத்தப்பட்ட அந்திப்புூக்கள் நிகழ்ச்சிக்காக எடுதப்பட்ட கவிதை இது. கனடாவில் எம் முதியவர் படும் அவலங்களை இளையபாரதியால் நடாத்தப்படும் முதியோர் அரங்கிநூடாக அறிந்து கொண்டதன்
விழைவாக எழுதப்பட்ட கவி இது.


அந்திப்புூக்கள்.

பண்டய தமிழர் நாம்
பண்பாடாய் வாழ்ந்த வாழ்வு
படுதுயர் ஆனதுவோ?
பாழாயப்; போனதுவோ?

அப்புவும் ஆச்சியும்
அடிமரத்தின் கீழ் கால் நீட்டி
அமர்ந்து பேசிட்டு
அயர்ந்து தூங்கிய காலம் தான் வாராதோ?

ஊழிக்கூத்து உயிரைகுடிக்க
விரைந்தோடி வந்திட்டோம்
விடியலையும் மறந்திட்டோம்

பேரன் மலர்வால் பேயறைக்த வாழ்வென
பாட்டி புலம்ப
பாஸ்போட்டெடுத்து பாசாகிவந்தனர்.

கனடாவில் கால் பதித்த போது
கனவே கண்டனர் கள்ளமில்லா மனதினர்.
களிப்புடனே இறுமாந்தும் நின்றனர்.

எண்ண ஓட்டங்களுக்கு எண்ணிக்கை தான் ஏது?
கணக்கெடுக்க ஆளுமில்லை
கண்டுகொள்ள மனமுமில்லை
கடுகளவும் பாசமில்லை
வெள்ளை உள்ளங்கள்
வெம்பியே கவலையுள் மாய்ந்தனர்.

பிள்ளைகள் மனது
வெள்ளை மனது அல்ல என்ற
வேசம் புரிந்தனர்
வெறுமையாய் ஆயினர்.

கொட்டும் பனியிலே
நரம்புகள் தந்தி மீட்ட
சோக கீதம் இசைத்தனர்
சோகை இழந்து போயினர்.

பிள்ளைகளோ கடுகதியாய் விரைந்தனர்
காசு சேர்க்க முனைந்தனர்
அன்பையே விலை பேசினர்
அமைதியற்ரு அலைந்தனர்.

துன்பத்திலே துவண்டு போகாமல்
இன்பத்திலே திழைத்து வாழுங்கள்.

வாழ்நாள் முழுவதும் வாழத்துடித்து
வாரிசுகளுக்காக வாழ்ந்தும்,வாழாமலும்
வாழ்ந்தது போதும்.
இறுதி வாழ்வை,இன்பமாய்,உமக்காய் வாழுங்கள்.

தனித்து வாழுங்கள்
தள்ளி நின்று-உம்
பிள்ளைகளைரசித்துப் பாருங்கள்.
இடைக்கிடை வாசல் சென்று வாருங்கள்.
வரவேற்ப்பைப் பார்த்து பூரித்து போவீர்கள்.

போதும் வாழ்வு என்று எண்ணாது
ஏனோ தானோ என்று வாழாது
வாழ்வை எப்படி கைக்குள் அடக்குவதென
ஏங்கி நிக்காமல் மனங்களை ஏணி ஆக்குங்கள்.

சிறியவள் நான் இருந்தாலும்
சில நிமிடத்துளிகள் உங்களுடன்.

பணம் சம்பாதித்த பெருமை ஆணுக்கு
சாந்தமே உருவமாய் கொண்டு
குடும்பமே கோவில் என
தன்னலம் கருதாது வாழ்ந்திட்ட
மனையாளை உற்று நோக்குங்கள்
உங்கள் முன் இன்னும் கூனிக்குறுகி-அவளை
வாஞ்யுடன் இழுத்து அணையுங்கள்.
அவள் சேவை பெரிதென உரக்க கூறுங்கள்.
இன்றாவது உங்கள் அன்பை புூரணமாய் உனர்த்துங்கள்.
நீங்கள் உணர்த்தாத அன்பை,பாசத்தை எப்படி பிள்ளைகளிடம்?
எம்மை வழி நடத்துங்கள்.

கால்பிடித்து விடும் மனையாளின்
கை நோகும் என நினைத்து
கையை வாஞ்சையுடன் வருடி விடுங்கள்.
வாரிசுகளுடன் வாழ்ந்த போது
இவற்றை செய்ய மறந்திருப்பீர்கள்.

தன்னலம் மறந்து தரணியே போற்றாது
வாழ்ந்து மடிந்த மனையாளிற்காய்
ஒரு முறை கதறி அழுங்கள்.
மனிதம் இன்றாவது உயிர்க்கட்டும்.

வில்லங்கமான விடயம்-ஆனால்
விடயம் பொதிந்துள்ள சோக நிகழ்வு-எம்
இனத்திற்கு இடப்பட்ட இடர்மிகுந்த சாபம்.
அடிவாங்கும் முயர்ச்சி தான்.-இருந்தாலும்
அறவே இல்லாதொளிக்கும் புரட்சி
மனிதம் வாழும் மனங்கள் மட்டும்
கண நேரம் விதவைக்கோலம் புூணுங்கள்.
ஐயையோ மனம் ஏற்க மறுக்கிறதே.
எப்படி என்னவனின் நினைவை
தூக்கி எறிய முடியும்?
உறவின் மூலம் கிடைத்த
உடல் மாற்ரத்தைத்தான்
போக்க முடியுமா?-எம்
வாசத்தில் உதித்தமுத்துக்களை
மறக்க முடியுமா?
இவை முடியாதென்றால்
எப்படி புூ,பொட்டு,பட்டை மட்டும்
இச் சமூகம் பறிக்க முடியும்.?

சட்டங்கள் ஏதும் உண்டோ என
புரட்டிப் பார்த்தேன், தென்படவில்லை
இட்டது சட்டமென
இருட்டடிப்பு எம் வாழ்வில்.
ஐயகோ இது மனித உரிமைமீறல் அன்றோ
மீறலை நாமே தகர்த்தெறிவோம்.

ஏய் பெண்ணே
எப்படி உன்னால்
விதவைக்கோலம் புூண்டு
உன்னவனின் நினைவை
மறந்தேன் என்று
போலி வாழ்வுவாழ முடிந்தது?

துணைகள் சகிதம்
வாழும் உள்ளங்களே
மரணம் என்பது
வந்த பின் தெரியாதது
ஏட்டில் எழுதப்படாத-எம்
உணர்வால் அறியப்படாதது
யார் முதல் இறப்போம்
யார் அறிவர்?
இருப்பினும் இன்னலது போக்க
இங் கொண்டு தாளை நிரப்புங்கள்.
உயில் ஒன்று தயார் தானே
நான் மாண்டாலும்-என்
மனையாளின் புூ, பொட்டு, தாலியை
பறிக்க யாருக்கும் உரிமை இல்லை
சபாஸ் எங்கே கரகோசம்
ரணத்துடன் வாழ்ந்து
ரணமாய் மடியாது இது காக்கும்

இவற்ரை ஏற்ரிட மறுக்கும்
மானிட மாக்களே
மரணித்த மனிதத்தை
மீட்பது எப்போ?
இளையவர் எமக்கு வழிகாட்டியாய் இருங்கள்

கண்ட கவலை எல்லாம்
கனவாய் போகட்டும்
நடப்பவை இனி
நல்லதாய் அமையட்டும்

முதியோரை அரவணைத்து
அன்பு மொழி பேசி
கைகளை இறுகப்பற்ருவோம்
மனங்களது ஒருமித்து
புூவாய் புூக்கட்டும்.
______
ஆக்கம்-
நளாயினி தாமரைச்செல்வன்
2000


- ganesh - 10-06-2003

நன்றி உங்கள் கவிதைக்கு

நான் அறிந்த சம்பவம் ஒன்று மனைவிக்காக தந்தையார் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்
ஒரு வயோதிபர் நாடுதிரும்ப பணம்
இல்லாதபடியால் அயலவர்கள் பணம் சேர்த்து அவரை நாட்டுக்கு
அனுப்பியுள்ளார்கள் இன்னும் எத்தனையோ எழுதுங்கள் உங்கள்
கருத்துக்களை