Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 396 online users.
» 0 Member(s) | 394 Guest(s)
Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,181
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,175
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,574
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,272
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,566
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,999
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,394
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,063
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,968
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,232

 
  ஒவ்வொருவருக்குள்ளும் பெண் ஒரு பகுதி!
Posted by: சாமி - 10-02-2003, 07:03 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

மராத்தி எழுத்தாளர் விஜயா ராஜ்த்யாñõ: ஆண், பெண் என்ற பேதம் தேவையற்றது என்பது என் உறுதியான கருத்து. ஆனால், பெண்களுடைய மனம், உடம்பு இரண்டுக்குமே சில தனிப்பட்ட அனுபவங்கள் உள்ளன. பெண்களின் உடம்பு வித்தியாசமானது, மனம் வித்தியாசமானது. அவர்களின் கலாசாரமே மாறுபட்டது.

என்னுடைய "விதேஹி', "கமல்' சிறுகதைகளில் ஆண் பெண் உறவை, செக்ஸ் உணர்வை, வேறு கோணங்களிலிருந்து சித்தரித்திருப்பதாக கூறுவதா? "விதேஹி' என்றால் உடம்பு குறித்தான பிரக்ஞையற்ற நிலை என்று பொருள்.


பிரசவ சமயத்தில் மனைவியுடன் கணவன் இருந்து, பிள்ளை பெறும் நிகழ்வைப் பார்த்து, தானும் அவ்வேதனையை, சிலிர்ப்பை அனுபவிக்கிறான். ஒரு படைப்பின் ரகசியம் அவனுக்குப் புரிகிறது. மனைவியினுள் தானும் அடக்கம், அவளும் தானும் ஓர் அங்கம் என்பது புரிந்து நெகிழ்வதைத் தான் "விதேஹி' நுணுக்கமாகச் சித்தரிக்கிறது. இக்கதை பெரும் வரவேற்பைப் பெற்றது.

"கமல்' கதையும் கணவன் மனைவி உறவை இன்னொரு கோணத்திலிருந்து சித்தரிப்பது தான். உடலுறவை விரும்பாத மனைவி, அது தேவைப்படும் கணவன் இருவரும் ஒரு சினிமாவுக்குப் போகின்றனர்.

படத்தில் வரும் காதல் காட்சியினால் உணர்ச்சி வசப்படுபவர்கள் வீட்டுக்கு வந்து உடலுறவு கொள்கின்றனர். நிஜமான காதலில் அன்றி, செயற்கையாக உறவு கொண்ட உணர்வில் மனைவி வருந்துவது தான் கதை. பல பெண்கள் கதாநாயகியுடன் தங்களை அடையாள படுத்திக் கொண்டது இக்கதையின் வெற்றி.

தன்னம்பிக்கையோடு தன் சுய அடையாளத்தைப் பெண்கள் தேடும் காலம் இது. ஒவ்வொருவருக்குள்ளும் பெண் ஒரு பகுதியாக இருப்பது உண்மை எனும்போது, நான் ஏன் அவள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் சிந்திக்கக்கூடாது? இருப்பினும், பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை மட்டுமே நான் எழுதுகிறேன் என்பது தவறான கருத்து.

என்னை ஒரு பெண்ணியவாதி என்று முத்திரை குத்துவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. நான் ஆண்களை எதிரிகளாகக் கருதுவதில்லை. ஒரு பெண்ணின் முழுமையான வளர்ச்சியில், விடுதலையில், ஆண்களின் பங்களிப்பு என்ன என்று உணர்ந்தவள் நான். ஆணும் பெண்ணும் பரஸ்பர மரியாதையுடன் வாழ்வதுதான் எல்லாவிதத்திலும் நல்லது.

நன்றி: தினமலர்

Print this item

  புற்று நோயை குறைக்க வெள்ளைப்பூண்டு
Posted by: சாமி - 10-02-2003, 06:55 PM - Forum: மருத்துவம் - No Replies

வெள்ளைப் பூண்டினை தொடர்ந்து உணவில் சேர்ப்பதால் வயிறு மற்றும் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் அபாயம் குறைவதாக "தி அமெரிக்கன் ஜர்னல் ஆப் கிளினிகல் நியூட்ரிஷன்' என்னும் மருத்துவ, உணவு துறை சார்ந்த பத்திரிகையின் சார்பில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது.

* இந்த பத்திரிகையின் சார்பில் நடைபெற்ற ஆய்வின் முடிவில், வெள்ளைப் பூண்டினை தொடர்ந்து உணவில் சேர்ப்பதால் வயிற்று புற்றுநோய் அபாயம் 50 சதவிதமும், பெருங்குடல் அபாயம் 33 சதவிகிதமும் குறைவதாக தெரிய வந்துள்ளது.

* இந்த ஆய்விற்காக உணவும், புற்று நோயும் என்னும் தலைப்பில் 300 ஆய்வுகளும், புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெள்ளைப்பூண்டின் பங்கு என்னும் தலைப்பில் 22 ஆய்வுகளும் நடைபெற்றன.

* ஹெலிசோபாக்டர் பைலோரி என்னும் பாக்டீரியம் வயிற்று பகுதியில் காணப்படுகின்றது. இதுவே கேன்சருக்கு காரணம் என தெரிய வருகின்றது. கேன்சருக்கான இக்காரணியை கட்டுப்படுத்தும் குணம் வெள்ளை பூண்டிற்கு இருப்பதாக இந்த ஆய்வு கூறுகின்றது. வெள்ளைப்பூண்டில் உள்ள சல்பரே "ஹெலிசோபாக்டர் பைலோரி' பாக்டீரியத்தை செயலிழக்க செய்கின்றது என இந்த ஆய்வு கூறுகின்றது.

* பெருங்குடல் பையிலிருந்து மலக்குடல் வரை விரிந்துள்ள பகுதியில் ஏறு குடல், குறுக்கு குடல், இறங்கு குடல் என மூன்று பகுதிகள் உள்ளன. இந்த மூன்று பகுதிகளிலும் ஏற்படக்கூடிய புற்றுநோய் அபாயத்தை பெருமளவில் குறைக்க வெள்ளைப்பூண்டு பயன்படுகின்றது.

* 100 கிராம் வெள்ளைப் பூண்டில் 62.8; புரதம் 6.3; கொழுப்பு 0.1; கார் பா ஹைடிரேட்டு 29.0; கால்சியம் 0.03; பாஸ்பரஸ் 0.31; இரும்பு 1.3 மில்லி கிராம், வைட்டமின் சி 13 மில்லி கிராம் ஆகியவை உள்ளன. இதில் செம்பு இருப்பதாகவும் தெரிகின்றது.

* சுவாசக்குழாய், தொண்டை, நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் நோய்கள்; கக்குவான் இருமல் ஆகியவற்றுக்கு அருமருந்தாக இந்தியாவில் பயன்பட்டு வந்த வெள்ளைப்பூண்டு தற்போது அமெரிக்க மருத்துவ இதழின் ஆராய்ச்சியினால் வயிறு மற்றும் குடல் புற்று நோயையும் தடுக்கும் என தெரிய வந்துள்ளது சிறந்த விஷயமாகும்.

நன்றி: தினமலர்

Print this item

  பாலியல் சம்பந்தமான கெளரவ பெண் கொலை
Posted by: AJeevan - 10-02-2003, 03:42 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (10)

<span style='font-size:25pt;line-height:100%'>பாலியல் சம்பந்தமான
கெளரவ பெண் கொலை</span>
<img src='http://www.frauenheilkunde-praxis.de/templates/Care/img/669999/bild3.jpg' border='0' alt='user posted image'>

ஈராக்கின் குர்திஸ் இனத்தின் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டிருந்த அப்துல்லா யொன்னெஸ்
10 வருடங்களுக்கு முன்னர் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாமெனும் பயத்தினால் நாட்டை
விட்டு வெளியேறி லண்டணுக்கு வந்தார்.அவரது அரசியல் தங்சக் கோரிக்கை லண்டனில் ஏற்றுக் கொள்ளப் பட்டதால் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புதியதொரு வாழ்கையைத் தொடங்கினார்.


காலப் போக்கில் தனது குழந்தைகள் குர்திய நாட்டு இஸ்லாமிய கலாசாரத்தை விட்டு ஐரோப்பி கலாச்சாரத்தை பின்பற்றத் தொடங்கிதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவர் தமது குழந்தைகளை கண்டித்தது மட்டுமல்லாமல், அவர்களை ஈவிரக்கமின்றி தண்டித்தும் இருக்கிறார்.

திடீரென ஒரு நாள் எவரும் எதிர்பாராத விதத்தில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கொடுரமாக கொலை செய்யப்பட்டுக் காணப்பட்ட அப்துல்லாவின் மகளான 16 வயது கெசு யொன்னசை அல்கொய்தா தீவிரவாதிகள் வீட்டினுள் நுழைந்து தாக்கி தன் மகளை கொலை செய்து விட்டு
சென்று விட்டதாக அப்துல்லா போலீசிடம் புகார் கொடுத்தார்.


ஆனால் நீதிமன்றத்தில் புதியதொரு தகவல் ெவளிப்பட்டப்பட்டது.

அது
16 வயது கேசு இறப்பதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதமொன்று போலீசாரிடம் சிக்கி அது நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டதுதான்.
<b>
அக் கடிதம்:-</b>


<span style='color:green'>
இனி வணக்கம் அப்பா, இதுவரை உங்களை கஸ்டப்படுத்தியதற்கு வருந்துகிறேன் அப்பா.
அப்பா நீங்கள் விரும்பி விதத்திலான மகளாக வளர என்னால் முடியாமல் போனதையிட்டு மிகு வருத்தமாக இருக்கிறது.
இருந்தாலும் அப்பாவுக்கு விருப்பமில்லாதவற்றையும் செய்ய வேண்டியிருக்கிறதே.
ஆனாலும் அப்பாவுக்கு வயசானாலும் உங்கள் கை-கால்களின் வலு இன்னும் இளமையாகவே இருக்கிறது. நான் உங்கள் கை- கால்களின் பலத்தை காட்டக் கிடைத்த ஒரு பொருளாகத்தான் என்னை நான் நினைக்க வேண்டியிருக்கிறது.
மிக அருமை. நான் எங்கே போகப் போகிறேன் என்பது கூட எனக்கு தெரியவில்லை.
அதனால் என்னைத் தேடாதீர்கள் அப்பா.</span>

என்று
அக்கடித்தை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற கெசு முயற்ச்சி செய்தாலும் அது நிறைவேறவேயில்லை.

அவள் ஒரு ஐரோப்பிய கிறிஸ்தவ இளைஞனுடன் ஏற்பட்டிருந்த காதல் தொடர்பு காரணமாக அவளது தந்தையால் கத்தியால் குத்தப்பட்டும் கழுத்து வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டது குடும்ப கௌரவமும் கலாச்சாரமும் காப்பாற்ற பட வேண்டுமென்ற காரணத்தால்.

இக் கொலையை விசாரித்த நீதிமன்றம் கெசுவின் தந்தையான அப்துல்லாவுக்கு ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பளித்தது.
<span style='color:red'>

தமது கௌரத்தை காப்பாற்ற நடத்தப்படும் கொலைகள் தொடர்பாக : குடும்ப கௌரவங்களை பாதுகாக்க நடத்தப்படும் வன்முறைகள் பெண்களின் பாலியல் பிரச்சனைகளை முன் வைத்தே ஆரம்பமாகிறது.

ஓரு பெண்ணிண் வாழ்கை முறை , அவளது உடைகள், அவள் வாழும் விதம் ஆகியவை குடும்ப கௌரவத்தை காப்பாற்ற கூடிய விதத்தில் அமைய வேண்டுமென்றே ஆண்வர்கவாதிகள் எண்ணுகிறார்கள்.

ஓரு பெண் தன் குடும்ப கௌரவம் -மதம் - கலாச்சாரம் மற்றும் கொள்கைகளை மீறினால் அவர்களது குடும்ப கௌரவத்தை இழிவு படுத்துவதாக எண்ணுகிறர்கள். இப்படியாக தினம் தோறும் உலகின் ஏதாவது ஒரு இடத்தில் 13 பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்கிறது பெண் உரிமைக்கான லண்டன் மனித நேய அமைப்பு.

ஆனால் இப்படியான குடும்ப கௌரவத்தை அவமதிப்பதான குற்றச்சாட்டுகள் ஆண் வர்க்கம் மேல் சுமத்தப்படுவதில்லை என்று அது மேலும் கூறுகிறது.

உலகத்தில் வாழும் இப்படியான அல்லலுக்கு தினந்தோறும் சிக்கிக் கொள்ளும் 5000 பேருக்கு இளைக்கப் படும் கொடுமைகளை தட்டிக் கேட்கவோ தண்டனை வாங்கிக் கொடுக்கவோ முடியாமலிருப்பது வருத்தத்துக்குரியது என்று கூறுகிறது இவ் அமைப்பு.

இப்படியான கொலைகள் எந்த சமயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று லண்டனின் தலைமை இஸ்லாமிய அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.

ஆனாலும் இவை கிழக்காசியாவிலும் அரபு நாடுகளிலும் மிகக் கடுமையாக இருக்கிறது.
பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் இவை இன்றும் நடை முறையில் இருக்கிறது. இருப்பினும் இவை இங்கே சட்டத்துக்கு புறம்பானதேயாகும். யோர்தானின் சில பகுதிகளிலும், சிரியாவிலும் இந்நிலையை நேரடியாகவே காண முடியும். இந் நாடுகளில் நீதிக்கு புறம்பானதாகவும் இல்லை ,ஏற்புடையதாகவும் இல்லை. இங்கே இவற்றை மாற்றவோ எதிர்க்கவோ ஆட்சியாளர்கள் யோசிப்பதோ கண்டு கொள்வதோ இல்லை.

கொலை செய்யப் பட்ட கெசுவை கொலை செய்த அவளது தந்தைக்கு வேறு சில குர்திஸ் இனத்தவர்களது உதவி கிடைத்திருப்பதான தகவல்கள் கிடைத்ததையடுத்து லண்டன் போலீசார் தொடர் துப்புத் துலக்கலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆசியாவில் மட்டுமல்ல ஐரோப்பி நாடுகளிலும் இப்படியான பெண் வதைகளும் கொலைகளும் இடம் பெறுவதாகக் கூறும் லண்டன் நகர போலீசின் தலைமை அதிகாரியான அன்டி பேக்கர் கடந்த வருடத்தில் மாத்திரம் இப்படியாக லண்டனில் மட்டும் 12 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்.
[size=14]இது குடும்ப கௌரவ - கலாச்சார கொலைகள் என்பதை விட மனித நேயமற்ற பாலியல் மிருக வதைக் கொலைகள் என்று தனது விசனத்தையும் தெரிவித்திருக்கிறார்.</span>

அடுத்த வாரம் லண்டன்-சுவிஸ் பெண்கள் அமைப்பு தரும் இலங்கை பெண்கள் தொடர்பான கொலைகள் பற்றிய குறிப்புகள் வெளியிடப்பட இருககிறது.

Print this item

  - அலை - திரை விமர்சனம்
Posted by: Alai - 10-01-2003, 11:18 PM - Forum: சினிமா - No Replies

மீனாக்சிசங்கரின்

Print this item

  காந்தியடிகளின் பிறந்த நாளை நினைவுகூரும் கவிதை
Posted by: சாமி - 10-01-2003, 07:59 PM - Forum: கவிதை/பாடல் - No Replies

ஜ. கோபிநாத்


மகாத்மா

நீ கற்பித்த
சத்தியம்
பதவிப் பிரமாணங்களிலும்
சத்தியப் பிரமாணங்களிலும்
சாகடிக்கப்படும்போது...

நீ கடைப்பிடித்த
அகிம்சை
ஆயுதப்போராட்டங்களிலும்
அடக்குமுறைகளிலும்
அழிக்கப்படும்போது...

நீ பாடுபட்ட
தீண்டாமை ஒழிப்பு
தேநீர்க் கடைகளிலும்
தெய்வத் திருப்பணிகளிலும்
செல்லாக் காசாகும் போது...

நீ வலியுறுத்திய
சகோதரத்துவம்
சாதிச் சங்கங்களிலும்
சனாதனச் சங்கிலிகளிலும்
சிக்கலாகும் போது...

மகாத்மா!
உன்னை நினைக்கின்றேன்
கண்ணை நனைக்கின்றேன்.

நீ களையெடுக்கச்
சொன்னதெல்லாம்
மக்கள் மனங்களில்
தலையெடுத்துக்கொண்டு...

நீ கடைப்பிடிக்கச்
சொன்னதெல்லாம்
மக்கள் மனங்களில்
கறை பிடித்துக் கொண்டு...

மறந்துமிங்கே
மறுபிறவி எடுத்து விடாதே
மகாத்மா நீ !
கோட்சேக்களின் கூடாரமாய்
−ன்றைய பாரதம்.

நன்றி: ஆறாம் திணை.கொம்


எனது கருத்து: திலீபனைக் மரணிக்கவிட்டபோதே இந்தியாவைப்பற்றி நாம் தெரிந்துகொண்டுவிட்டோம்.

Print this item

  இணைய அரட்டை
Posted by: சாமி - 10-01-2003, 07:50 PM - Forum: இணையம் - No Replies

மூர்

இன்று ஊடகத்துறையின் வளர்ச்சி எல்லைகள் கடந்து உலகளாவிய செல்வாக்குப் பெற்ற சாதனமாக விளங்குகின்றது. அதிலும் குறிப்பாக இலத்திரனியல் சாதனங்களின் வருகை ஊடகத்துறையில் இதுவரை இல்லாத புதுமைகளை வேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கணிணி இணையத்தின் பயன்பாடு ஊடகத்துறையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் வளர்ச்சிகள் அதிகம்.

இணையத்தைப் பயன்படுத்தும் முனைப்பில் பல்வேறு நாடுகளும் அதிகமாகவே நாட்டம் கொண்டுள்ளார்கள். இன்று இணையங்களை தனது அனைத்து வகையான தேவைகளுக்கும் பயன்படுத்தும் நாடுகளில் முன்னணியில் இருப்பது அமெரிக்கா.

அமெரிக்காவிற்கு இணையப் பயன்பாடு பல வழிகளிலும் சாதகமான விடயங்களாகவே உள்ளன. ஆனாலும் சாதகமான தன்மைகளைவிட, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவே இன்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இணைய அரட்டை சிறுவர்களை தவறாக வழிநடத்துகிறது. சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் பெருகிவருவதற்கும் காரணமாக உள்ளது. அமெரிக்காவில் இந்நிகழ்வுகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளன.

குற்றங்கள் பெருகும் இருட்டறை என இதை பலரும் வர்ணிப்பதுண்டு. மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவு குறித்து சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு, மற்றும் பாதுகாப்பின் தேசிய அமைப்பைச் சேர்ந்த கிளிஸ் அட்கிசைன் கருத்து தெரிவிக்கையில்

''மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இந்த முடிவு உண்மையில் வரவேற்கப்படும் ஒரு விஷயம். இதன் மூலம் உலகில் அன்றாடம் எங்கோ ஒரு மூலையில் நமக்குத் தெரியாமல் இந்த இணைய அரட்டை மூலம் நடக்கும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் தடுக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம். நாங்கள் நீண்ட காலமாகவே இந்த இணைய அரட்டை விஷயத்தில் எதிர்ப்பு காட்டி வந்துள்ளோம்'' எனக் குறிப்பிட்டார். இதுபோல் பல்வேறு மனித உரிமைவாதிகளும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்கள்.

இணைய அரட்டையானது பூகோளமயமாக்கப்பட்டிருந்தாலும் அதனால் எந்தவித நன்மையும் இல்லை. இதுவரை நன்மையான பக்கங்களைவிட தீமையான பக்கங்களே இதன் மூலம் அரங்கேறி உள்ளது. இணைய அரட்டையில் பயன்பாடு எதை நோக்கி? எதற்காக என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இணைய அரட்டையின் பயன்பாடு மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளது என்பது பொதுவான உண்மையாகும்.

இலவசசேவை அல்லது பணம் செலுத்துவதன் மூலம் இணைய அரட்டை சேவையை வழங்கிவரும் நிறுவனங்களும் தமது சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் குறித்த உண்மை நிலையை ஏற்றுக் கொண்டுள்ன.

''இணையமானது எந்தளவிற்கு இன்று முன்னேறியுள்ளதோ அதே அளவிற்கு சிறுவர்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் அது அக்கறை செலுத்தத் தவறிவிட்டது. அவ்விஷயத்தில் அது செய்ய வேண்டிய பாதை நீண்டது'' என சிறுவர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஓர் அதிகாரி கருத்து தெரிவித்தார். ஆக எந்தவொரு அறிவியல் தொழில்நுட்பமும் அதன்பாடும் மனித சிந்தனைக்கும் மானிட மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் அமைய வேண்டும். இணையம் போன்றவற்றின் பயன்பாடு மேலும் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய காலம் நம்முன் வந்துள்ளது.

இதனொரு கட்டமாகவே இணைய அரட்டை சேவையை இடைநிறுத்தும் முடிவு.

நன்றி: ஆறாம் திணை.கொம்

Print this item

  நானும் நீயும்
Posted by: சாமி - 10-01-2003, 07:39 PM - Forum: கவிதை/பாடல் - Replies (10)

நானும் நீயும்
06.04.2003


நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்றுகொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்கு பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப்பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.
- ஜெயபாஸ்கரன்

நன்றி: ஆனந்தவிகடன்

Print this item

  படமெடுத்துப் பாழாய்ப் போக...!
Posted by: சாமி - 10-01-2003, 07:38 PM - Forum: சினிமா - No Replies

படமெடுத்துப் பாழாய்ப் போக...!
06.04.2003

'திரைக்கதை எழுதுவது எப்படி' என்று ஒரு புத்தகம் எழுதி அது பரபரப்பாக விற்றது. நண்பர் மணிரத்னத்திடம் அதைச் சொன்னபோது அவர், 'எனக்குக் கவலையாக இருக்கிறது' என்றார். எனக்கும், எத்தனை பேர் மோசமான திரைக்கதைகள் எழுதப்போகிறார்களோ என்பதுதான் கவலை. அந்தப் புத்தகத்தைப் படித்த ஆயிரக்கணக்கானவர்களில், பத்து பேர் நல்ல திரைக்கதை எழுத முடிந்தால் அது எனக்கு வெற்றி. திரைக்கதை எழுதுவது எப்படி என்பதை விட, திரைப்படம் எடுப்பது எப்படி என்பதைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுகிற அளவுக்கு 'மீடியா ட்ரீம்ஸ்' நிறுவனத்தில் எனக்கு அனுபவம், ஐந்து திரைப்படங்களில் ஏற்பட்டுவிட்டது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், திரைப்படம் எடுக்காமல் இருப்பது எப்படி என்பதைப் பற்றிய அனுபவம்தான் அதிகம் பெற்றேன்.

முதன்முதலாக, இளம் டைரக்டர்கள் நம்மை அணுகுவார்கள். நான் எழுதிய அத்தனையும் படித்திருப்பதாகச் சொல்வார்கள். 'என்ன படித்தீர்கள்?' என்று குறிப்பாகக் கேட்டால், 'அதாங்க! இதில எழுதுறிங்களே... அது' என்று பதில் வரும். எதாவது ஒரு பிரபல டைரக்டரின் பெயரைச் சொல்லி, அவரிடம், 'அசிஸ்¢டண்டாக ஒர்க் பண்ணிருக்கேன்' என்று சில பெயர் தெரியாத படங்களின் தலைப்புகளைச் சொல்வார்கள். தான் ஒரு நல்ல 'சப்ஜெக்ட'¢ வைத்திருப்பதாகச் சொல்லி, சிக்கனமான செலவில் முப்பது நாளில் முடித்துக் கொடுப்பதாக தாய் மேல் ஆணையாகச் சத்தியம் ª¢சய்வார்கள். 'என்ன சப்ஜெக்ட்?' என்று கேட்டால், பேப்பர் எதையும் காட்ட மாட்டார்கள். விஸ்தாரமாக, யாருக்கும் புரியாமல் கதை சொல்வார்கள். சொல்லும் போது அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொள்வார்கள். நடிகர்களின் பெயர்களையும் பயன்படுத்தி கதை சொல்வார்கள்.

உதாரணம் : 'கட் பண்ணா, ரகுவரன் கேரக்டர் ஹைஸ்பீட்ல நாப்பதெட்டு ஃப்ரேம்ல வறாருங்க! அப்ப இந்த விவேக் கேரக்டர் குறுக்க வந்து டைம் என்னன்னு கேக்கறாரு. இந்த இடத்தில் ஒரு காமெடி பிட் வக்கறோம'¢ இப்படித்தான் கதை செல்லும். அவர்கள் பேச்சை நம்பி மாட்டினோம் என்றால் போச்சு!

இம்மாதிரி அணுகப்படும் ப்ரொட்யூசர்களுக்கு எச்சரிக்கையாக சில விதிகள் -

எந்த பட்ஜெட்டு¢ம், குறிப்பிட்ட தொகையை இரண்டு மடங்கு மீறும். இதற்கு மனசுக்குள் தயாராக இருக்க வேண்டும். அதாவது, அவர்கள் ஒரு கோடிக்குள் படத்தை முடிக்கிறேன் என்று சொன்னால், இரண்டு கோடிக்குத் தயாராக இருக்க வேண்டும்.

யாருக்கும் வெற்றிப் படத்தின் ஃபார்முலா தெரியாது.

அதேபோல, ஒரு படத்தை மூன்று மாசத்தில் முடிக்கிறேன் என்று ஒருவர் சொன்னால், ஆறு மாசத்துக்குத் தயாராக இருக்க வேணடும். படத்தை பதினெட்டு நாளில் முடிப்பேன் என்று ஒருவர் சொன்னால், உடனே அவரை வழி அனுப்பவும். சம்மதத்துக்காக பொய் சொல்கிறார்.

படத்தில் எதாவது ஒரு ஸ்¢டார் இருந்தால், அதற்¢காக ஒரு அரை மடங்கு கூடுதல் பணம், நேரம் இரண்டுமே. தயாராகவும். ஒரு நாளைக்கு ஷ¨ட்டிங் செலவு முப்பதாயிரம் என்று சொன்னால், புளுகுகிறார் என்று அர்த்தம். தமிழ் சினிமாவின் ரேட் ஒரு நாளைக்கு ஒரு லட்சம். பாடல் காட்சி, நடனக்காட்சி, ஸ்டண்ட் இவைகளுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லடசத்திலிருந்து, இரண்¢டு லட்சம் ஆகும். பெரிய டிபன் பாக்ஸில் குறைந்த பட்சம் இருநூறு பேர் தின்றே தீர்ப்பார்கள். இதை யாரும் எதும் செய்ய முடியாது. கலாச்சாரம் இப்படி!

அளவிடக்கூடிய விஷயங்கள் - போஸ்ட் ப்ரொடக்ஷன் என்கிறார்களே, லாப் சார்ஜ், எடிட்டிங் ஸ்¢டுடியோ, டப்பிங் ஸ்டுடியோ போன்றவை. படச்சுருள் விலை தெரிந்த விஷயம். காமிரா வாடகை, கிரேன் வாடகையும், ஜெனரேட்டரும் தெரிந்த விஷயம். ஆனால் எத்தனை பிலிம் சுடுகிறார்கள் என்பது தெரியாத விஷயம். டைரக்டருக்கு டைரக்டர் மாறும்.

டிஜிட்டலாக எடுத்தால் படச்சுருள் தேவையில்லை. இறுதியில் பிலிமுக்கு மாற்றும்போது ஒரே முட்டாக சாப்பிடும்.
படத்தைக் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில், எடுத்ததாக சரித்திரம் இல்லை. பத்து பதினைந்து விழுக்காடு மீறலுக்குள் எடுத்தால் அது வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள படம். வெற்றி விழுக்காடு 5%. இதையெல்லாம் படித்த பின்னும் உங்களில் சிலர் படம் எடுக்கும் தைரியம் பெற்றால், கடவுள் உங்களைக் காப்பாற்றட்டும்!
- சுஜாதா

நன்றி: அம்பலம்

Print this item

  சிட்டுக் குருவி
Posted by: சாமி - 10-01-2003, 07:34 PM - Forum: தமிழும் நயமும் - Replies (1)

சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் - வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை, துளித் துளிக் கால்கள்.

இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்துகொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண். மற்றொன்று பெண். இவை தம்முள்ளே பேசிக் கொள்கின்றன. குடும்பத்துக்கு வேண்டிய உணவு தேடிக் கொள்கின்றன. கூடுகட்டிக் கொண்டு, கொஞ்சிக் குலாவி மிக இன்பத்துடன் வாழ்ந்து முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பசியில்லாமல் காப்பாற்றுகின்றன.

சிட்டுக்குருவி பறந்து செல்வதைப் பார்த்து உனக்கு அடிக்கடி பொறாமையுண்டாகும். ஆஹா! உடலை எவ்வளவு லாகவத்துடன் சுமந்து செல்கின்றன. இந்தக் குருவிக்கு எப்போதேனும் தலை நோவு வருவதுண்டோ? ஒரு முறையேனும் தலை நோவை அனுபவித்த முகத்திலே இத்தனை தெளிவு இருக்க நியாயமில்லை. பயமும் மானமும் மனிதனுக்குள்ளது போலவே குருவிக்கும் உண்டு. இருந்தபோதிலும், ‡ணந்தோறும் மனிதருடைய நெஞ்சைச் செல்லரிப்பது போலே அரிக்குங் கவலைத் தொகுதியும், அதனால் ஏற்படும் நோய்த்திரளும் குருவிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.


தெய்வமே, எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்க மாட்டாயா? பாழ்பட்ட மனிதர் கூட்டத்தையும், அதன் கட்டுகளையும், நோய்களையும், துன்பங்களையும், பொய்களையும் உதறி எறிந்துவிட்டு, நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்லமாட்டேனா? ஆஹா! எத்தனை தேசங்கள் பார்க்கலாம்! எத்தனை நாடுகள், எத்தனை பூக்கள், எத்தனை மலைகள், எத்தனை சுனைகள்! எத்தனை அருவிகள், எத்தனை நதிகள், எத்தனை கடல் வெளிகள்! வெயில், மழை, காற்று, பனி இவையெல்லாம் என் உடம்புக்கு நன்றாய் வழக்கப்பட்டு, இவற்றால் நோய்கள் உண்டாகாமல் எப்போதும் இன்ப உணர்ச்சிகளே உண்டாகும். இந்த நிலை எனக்கு அருள் புரியலாகாதா? குருவிக்குப் பேசத்தெரியும்; பொய் சொல்லத் தெரியாது. குருவியில் ஆண் பெண் உண்டு; தீராத கொடுமைகள் இல்லை. குருவிக்கு வீடுண்டு; தீர்வை கிடையாது. நாயகனில்லை; சேவகமில்லை.

தெய்வமே, எனக்கு இவ்விதமான வாழ்க்கை தரலாகாதா? குருவிக்கில்லாத பெருமைகள் எனக்கும் சில அருள் செய்திருக்கிறாய் என்பது மெய்தான். ஆராய்ச்சி, பக்தி, சங்கீதம், கவிதை முதலிய இன்பங்கள் மனிதனுக்குக் கைகூடும். குருவிக்கு இயல்பில்லை. ஆனாலும், இந்த இரண்டுவித இயல்பும் கலந்து பெற்றால் நான் பரிபூரண இன்பத்தை அடையமாட்டேனா?

இந்தக் குருவி என்ன சொல்லுகிறது?

''விடு'' ''விடு'' ''விடு'' என்று கத்துகிறது. இ·து நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பது போலிருக்கிறது.

விடு, விடு, விடு-தொழிலை விடாதே. உணவை விடாதே. பேட்டை விடாதே. கூட்டை விடாதே. குஞ்சை விடாதே. உள்ளக் கட்டை அவிழ்த்துவிடு. வீண் யோசனை விடு. துன்பத்தை விடு.

இந்த வழி சொல்லுவதற்கு எளிதாயிருக்கிறது. இதனை நன்றாக உணர்ந்து கொள்ளுதல் எளிதன்று. உணர்ந்து பின்னும் இவை வழக்கப்படுத்துதல் அருமையிலும் அருமை.


''விடு'' என்ற பகுதியிலிருந்து ''வீடு'' என்ற சொல் வந்தது. வீடு என்பது விடுதலை. இதை வடமொழியில் முக்தி என்கிறார்கள். இந்த நிலைமையை இறந்துபோனதன் பின்பு பெறவேண்டும் என்று பெரும்பாலோர் விரும்புகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையிலேயே, இப்போதே, அந்நிலையை விரும்புதல் நன்று.

விடுதலையே இன்பத்திற்கு வழி; விடுதலை பெற்றோர் வறுமையிலிருந்து மாறி செல்வமடைவார்கள். மெலிவும் நோயும் நீங்கி வலிமையும் உறுதியும் பெறுவார்கள். சிறுமை நீங்கிப் பெருமை காண்பார்கள். துன்பங்கள் நீங்கி இன்பம் எய்துவார்கள்.

வா; நெஞ்சே, பராசக்தியை நோக்கிச் சில மந்திரங்கள் சாதிப்போம்.

நான் விடுதலை பெறுவேன்; எனது கட்டுக்கள் அறுபடும், நான் விடுதலை பெறுவேன். என்னிச்சைப்படி எப்போதும் நடப்பேன். என்னிச்சையிலே பிறருக்குத் தீங்கு விளையாது. எனக்கும் துன்பம் விளையாது. நன்மைகளே என்னுடைய இச்சைகள். இவற்றை நான் எப்போதும் நிறைவேற்றும்படியாக ‡ணந்தோறும் எனக்குப் பிராணசக்தி வளர்ந்து கொண்டு வருக. உயிர் வேண்டுகிறேன். தலையிலே இடி விழுந்த போதிலும் சேதப்படாத வயிர உயிர். உடலை எளிதாகவும், உறுதியுடையதாகவும், நேர்மையுடையதாகவும் செய்து காக்கின்ற உயிர்.

அறிவு வேண்டுகிறேன்; எந்தப் பொருளை நோக்கு மிடத்தும், அதன் உண்மைகளை உடனே தெளிந்து கொள்ளும் நல்லறிவு; எங்கும் எப்போதும், அச்சமில்லாத வலிய அறிவு.

பிற உயிருக்குத் தீங்கு தேடமாட்டேன்; என்னுடைய உயிருக்கு எங்கும் தீங்கு வரமாட்டாது.

பராசக்தி, நின்னருளால் நான் விடுதலை பெற்று இவ்வுலகத்தில் வாழ்வேன்.

நன்றி: அப்புசாமி.கொம்

Print this item

  பொறுக்கி எடுத்த படங்கள்.
Posted by: Paranee - 10-01-2003, 12:36 PM - Forum: நகைச்சுவை - Replies (13)

பொறுக்கி எடுத்த படங்கள்.

<img src='http://www.vikatan.com/av/2003/oct/05102003/p119.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.vikatan.com/av/2003/oct/05102003/p120.jpg' border='0' alt='user posted image'>

www.vikatan.com

Print this item