Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படமெடுத்துப் பாழாய்ப் போக...!
#1
படமெடுத்துப் பாழாய்ப் போக...!
06.04.2003

'திரைக்கதை எழுதுவது எப்படி' என்று ஒரு புத்தகம் எழுதி அது பரபரப்பாக விற்றது. நண்பர் மணிரத்னத்திடம் அதைச் சொன்னபோது அவர், 'எனக்குக் கவலையாக இருக்கிறது' என்றார். எனக்கும், எத்தனை பேர் மோசமான திரைக்கதைகள் எழுதப்போகிறார்களோ என்பதுதான் கவலை. அந்தப் புத்தகத்தைப் படித்த ஆயிரக்கணக்கானவர்களில், பத்து பேர் நல்ல திரைக்கதை எழுத முடிந்தால் அது எனக்கு வெற்றி. திரைக்கதை எழுதுவது எப்படி என்பதை விட, திரைப்படம் எடுப்பது எப்படி என்பதைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுகிற அளவுக்கு 'மீடியா ட்ரீம்ஸ்' நிறுவனத்தில் எனக்கு அனுபவம், ஐந்து திரைப்படங்களில் ஏற்பட்டுவிட்டது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், திரைப்படம் எடுக்காமல் இருப்பது எப்படி என்பதைப் பற்றிய அனுபவம்தான் அதிகம் பெற்றேன்.

முதன்முதலாக, இளம் டைரக்டர்கள் நம்மை அணுகுவார்கள். நான் எழுதிய அத்தனையும் படித்திருப்பதாகச் சொல்வார்கள். 'என்ன படித்தீர்கள்?' என்று குறிப்பாகக் கேட்டால், 'அதாங்க! இதில எழுதுறிங்களே... அது' என்று பதில் வரும். எதாவது ஒரு பிரபல டைரக்டரின் பெயரைச் சொல்லி, அவரிடம், 'அசிஸ்¢டண்டாக ஒர்க் பண்ணிருக்கேன்' என்று சில பெயர் தெரியாத படங்களின் தலைப்புகளைச் சொல்வார்கள். தான் ஒரு நல்ல 'சப்ஜெக்ட'¢ வைத்திருப்பதாகச் சொல்லி, சிக்கனமான செலவில் முப்பது நாளில் முடித்துக் கொடுப்பதாக தாய் மேல் ஆணையாகச் சத்தியம் ª¢சய்வார்கள். 'என்ன சப்ஜெக்ட்?' என்று கேட்டால், பேப்பர் எதையும் காட்ட மாட்டார்கள். விஸ்தாரமாக, யாருக்கும் புரியாமல் கதை சொல்வார்கள். சொல்லும் போது அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொள்வார்கள். நடிகர்களின் பெயர்களையும் பயன்படுத்தி கதை சொல்வார்கள்.

உதாரணம் : 'கட் பண்ணா, ரகுவரன் கேரக்டர் ஹைஸ்பீட்ல நாப்பதெட்டு ஃப்ரேம்ல வறாருங்க! அப்ப இந்த விவேக் கேரக்டர் குறுக்க வந்து டைம் என்னன்னு கேக்கறாரு. இந்த இடத்தில் ஒரு காமெடி பிட் வக்கறோம'¢ இப்படித்தான் கதை செல்லும். அவர்கள் பேச்சை நம்பி மாட்டினோம் என்றால் போச்சு!

இம்மாதிரி அணுகப்படும் ப்ரொட்யூசர்களுக்கு எச்சரிக்கையாக சில விதிகள் -

எந்த பட்ஜெட்டு¢ம், குறிப்பிட்ட தொகையை இரண்டு மடங்கு மீறும். இதற்கு மனசுக்குள் தயாராக இருக்க வேண்டும். அதாவது, அவர்கள் ஒரு கோடிக்குள் படத்தை முடிக்கிறேன் என்று சொன்னால், இரண்டு கோடிக்குத் தயாராக இருக்க வேண்டும்.

யாருக்கும் வெற்றிப் படத்தின் ஃபார்முலா தெரியாது.

அதேபோல, ஒரு படத்தை மூன்று மாசத்தில் முடிக்கிறேன் என்று ஒருவர் சொன்னால், ஆறு மாசத்துக்குத் தயாராக இருக்க வேணடும். படத்தை பதினெட்டு நாளில் முடிப்பேன் என்று ஒருவர் சொன்னால், உடனே அவரை வழி அனுப்பவும். சம்மதத்துக்காக பொய் சொல்கிறார்.

படத்தில் எதாவது ஒரு ஸ்¢டார் இருந்தால், அதற்¢காக ஒரு அரை மடங்கு கூடுதல் பணம், நேரம் இரண்டுமே. தயாராகவும். ஒரு நாளைக்கு ஷ¨ட்டிங் செலவு முப்பதாயிரம் என்று சொன்னால், புளுகுகிறார் என்று அர்த்தம். தமிழ் சினிமாவின் ரேட் ஒரு நாளைக்கு ஒரு லட்சம். பாடல் காட்சி, நடனக்காட்சி, ஸ்டண்ட் இவைகளுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லடசத்திலிருந்து, இரண்¢டு லட்சம் ஆகும். பெரிய டிபன் பாக்ஸில் குறைந்த பட்சம் இருநூறு பேர் தின்றே தீர்ப்பார்கள். இதை யாரும் எதும் செய்ய முடியாது. கலாச்சாரம் இப்படி!

அளவிடக்கூடிய விஷயங்கள் - போஸ்ட் ப்ரொடக்ஷன் என்கிறார்களே, லாப் சார்ஜ், எடிட்டிங் ஸ்¢டுடியோ, டப்பிங் ஸ்டுடியோ போன்றவை. படச்சுருள் விலை தெரிந்த விஷயம். காமிரா வாடகை, கிரேன் வாடகையும், ஜெனரேட்டரும் தெரிந்த விஷயம். ஆனால் எத்தனை பிலிம் சுடுகிறார்கள் என்பது தெரியாத விஷயம். டைரக்டருக்கு டைரக்டர் மாறும்.

டிஜிட்டலாக எடுத்தால் படச்சுருள் தேவையில்லை. இறுதியில் பிலிமுக்கு மாற்றும்போது ஒரே முட்டாக சாப்பிடும்.
படத்தைக் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில், எடுத்ததாக சரித்திரம் இல்லை. பத்து பதினைந்து விழுக்காடு மீறலுக்குள் எடுத்தால் அது வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள படம். வெற்றி விழுக்காடு 5%. இதையெல்லாம் படித்த பின்னும் உங்களில் சிலர் படம் எடுக்கும் தைரியம் பெற்றால், கடவுள் உங்களைக் காப்பாற்றட்டும்!
- சுஜாதா

நன்றி: அம்பலம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)