Yarl Forum
ஈர உணர்வுகள் ... :!: - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: ஈர உணர்வுகள் ... :!: (/showthread.php?tid=8040)



ஈர உணர்வுகள் ... :!: - vaiyapuri - 10-04-2003

நிலத்திலிருந்து
ஆவியாகி
மேகம் தொட்டதும்
மழையாகி

நிலம் தொட
வந்து செல்லும்
மழையே மழையே..!

நீ நிலம் தொட்டுப் - பின்
உள் உறைந்து
செழிப்பில் - ஒரு
கதை சொல்லி

தோன்றித் தோன்றி
மறைகிறாய்
நெடு நாட்களில்
தோன்றாமலும்
விடுகிறாய்..

ஐயகோ.

நீ தோன்றும் நாள் பார்த்து
வரட்சியும்
நீ மறையும் நாள் பார்த்து
விதை நிலமும்
உணர்வுகளைக் கொட்டுகின்றன..

நாங்களும் தான்,

நிலமிழந்தோம்
நிஜமிழந்தோம்
நினைவிழந்தோம்
நிர்க்கதியானோம்

கண்டதெல்லாம் மறந்து போச்சு..
அந்தக் கோர நினைவுகளைத் தவிர !
கொண்டதெல்லாம் இழந்துமாச்சு..
அந்தக் கனவின் உணர்வினைத் தவிர !

உணர்வுகளுக்குள் ஒரு ஈரம்
இன்னமும்
உருக்குலையாமல் தொக்கு நிற்குது

உயிர்களுக்குள் ஒரு மாற்றம்
அது இன்னமும்
உருவெடுக்காமல் தோற்று நிற்குது

ஏனென்றும் தெரியவில்லை
எதுவென்றும் புரியவில்லை
இனிமேலும் பொறுமையில்லை..

என் மூச்சது முடிந்திடுமோ ?
தாகம் தீர முன்
உயிரதுவும் மாய்ந்திடுமோ ?

ஏக்கம் - அது வாழவும் விடுவதாயில்லை..!

புழுதிக் காற்றிலும்
மண்ணின் வாசத்திலும்
மீண்டும் உருண்டு புரள.,

ஆலமரத்தின் அடியிலும்
என் தாய் மண்ணின் மடியிலும்..
அருதியாய் - நான்
இறுதியாய் - தாங்கி நிற்கும்

மூச்சுக்காற்றுக்காய் ஈர உணர்வுகளுடன்........ :!:

வையாபுரி.


- yarl - 10-05-2003

கொண்டதெல்லாம் இழந்துமாச்சு..
அந்தக் கனவின் உணர்வினைத் தவிர !

பாராட்டுக்கள்


- Paranee - 10-05-2003

வாழ்த்துக்கள் நண்ப வையாபுரி
உங்கள் கவிதைகள் சற்று வித்தியாசமான சிந்தனை
தொடரட்டும்

நட்புடன் ந.பரணீதரன்


- AJeevan - 10-05-2003

[b]<span style='font-size:25pt;line-height:100%'>அழகன் </span>
<img src='http://216.194.72.245/tamilmovies/images/main/images/gallery_pics.gif' border='0' alt='user posted image'>
இசை: மரகதமணி
பாடல்: சாதி மல்லிப் பூச்சரமே
குரல்: S P பாலசுப்ரமணியம்


[size=15]சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையுள்ள ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

(சாதி மல்லிப்)

[size=15]எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்லா ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

(சாதி மல்லிப்)

[size=15]உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா
படிச்சத புரிஞ்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

(சாதி மல்லிப்)


- vaiyapuri - 10-08-2003

வித்தியாசமான சிந்தனை அஜீவன் !

எல்லாரும் அவையவை எழுதுறதத்தானே போடினம்
சின்ன மாற்றத்திற்காக இப்படியொரு முயற்சியா?

ஆஹா ஓஹோ அருமை அஜீவன் !


நன்றி : யாழ் , பரணி. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->