Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீதிக் கதைகள்
#1
இரட்டைச் சோகம்
ஒரு பருந்து மலை உச்சியில் இருந்து கொண்டு, கீழே ஒரு முயல் ஓடுவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது, அதைக் கொத்திச் சென்று சாப்பிடும் எண்ணத்தில். அதை ஒரு வேடன் கவனிப்பதை கவனிக்கவில்லை. அவன் குறிபார்க்க சமயம் இருந்து அம்பெய்தி பருந்தை வீழ்த்தினான். பருந்து சாவதற்குமுன் தன் மார்பில் பாய்ந்த அம்பை ஒருமுறை பார்த்தது. அதில் தன் இறகுகள் வைத்து அமைந்திருப்பதைக் கண்டது.

''இது இரட்டை சோகம். என் சிறகிலிருந்து இறகெடுத்துச் செய்த அம்பே என்னைக் கொன்றது'' என்றது.


நீதி:- துரோகம் நம்மிடமே ஒளிந்திருக்கலாம்.

__________________________________


மயக்கமா கலக்கமா

இரண்டு தவளைகள் தம் புதிய சூழ்நிலையை யோசித்தன. ஒரு தவளை பெருமைப்பட்டது. ''பரவாயில்லை இதுவரை மழையில் நனைந்து தவித்துக் கொண்டிருந்தோம். இப்போது நல்ல கதகதப்பான இடம் கிடைத்துவிட்டது. போர்வையும் கிடைத்துவிட்டது. உண்ண உணவும் கிடைத்துவிட்டால் இதைப்போல சுகம் எதுவும் கிடையாது''.

அதற்கு மற்ற தவளை, ''முட்டாளே! உன் குரல் வளத்தால்தான் இந்த கதி நமக்கு வந்துள்ளது. உண்ண உணவு கிடைப்பதற்கு பதில் நாம் உண்ண உணவாகப் போகிறோம்'' என்றது.

''நீ என்ன சொல்கிறாய்?''¢

''நாம் கதகதப்பாக இருப்பது பாம்பின் வயிற்றுக்குள்¢!''¢

நீதி:- நுணலும் தன் வாயால் கெடும்.

____________________

பலநாள் திருடன்

நரிக்கு வயசாகிவிட்டது. அதனால் சுலபமாக ஆடுகளைப் பிடிக்க முடியவில்லை. மேய்ச்சல் நிலத்தில் ஒரு செம்மறியாட்டைக் கஷ்டப்பட்டு பிடித்து சாப்பிட்¢டது. அதன் மேல்தோல் பாக்கியிருந்தது. 'ஒரு ஐடியா! இந்த தோலைப் போர்த்திக்கொண்டு நான் ஆடுகளுக்கிடையே ஊடாடலாமே! ஒவ்வொரு ராத்திரியும் ஒரு ஆட்டை சாப்பிட்டு கொள்ளலாமே!. என் உணவுப் பிரச்னை தீர்ந்துவிடுமே. இந்த ஐடியா எனக்கு ஏன் முன்பே தோன்றவில்லை' என்று திட்டமிட்டு ஆடுகளுக்கிடையே புகுந்து கொண்டது. சுற்றுப்பட்ட ஆடுகளுக்கு அந்த அன்னியன் யார் தெரியவில்லை. 'குண்டாக இருக்கிறான். நமக்கேன் வம்பு. ஆட்டு ஜென்மங்கள் நாம். கேள்வி கேட்கக்கூடாது' என்று வாளாயிருந்துவிட்டன.

ஆட்டு இடையன் கணக்கில் கெட்டிக்காரன். எண்¢பத்தோரு ஆடுகளில் ஒன்று குறைந்தாலும் அவனுக்கு அந்தாஸாவாகத் தெரியவரும். தினம் ஒரு ஆடு குறைவதை கவனித்து கவலைப்பட்டான். ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. எங்கே போகின்றன? மேய்ச்சலின்போது ஒருவேளை வழி தவறித் திரிகின்றனவா என்பதை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை.

ஒருமுறை அவன் பண்ணைக்கு உறவுக்காரர்கள், அவனைப் பார்க்க வந்தார்கள். பண்ணையின் பெருமையை சுற்றிக் காட்டினான். அவர்கள் ''ஆட்டுக்கால் சூப் வைக்க வேண்டும். ஒரு நல்ல கொழுத்த ஆடு கொடு.'' என்றார்கள். ஆட்டுத்தோல் போர்த்திய நரிதான் குண்டாக தெரிந்தது.

''அதோ அந்த ஆட்டை எடுத்துக்கொள்ளுங்கள்''¢ என்றான்.

பதறிப்போன நரி ''அய்யோ நான் ஆடு இல்லை. நரி'' என்றது.

'ஓ! நீதானா, தினம் கணக்கு குறைவதற்குக் காரணம்? போடு'¢ என்று நரியைச் சாகடித்தான்.

நீதி:- எந்த வேஷமும் வெளி வந்துதான் ஆகவேண்டும். எப்போது என்பதில்தான் வேறுபாடு.

______________________

சூரப்புலி நாய்

அந்த நாய்க்கு நல்ல குரல். குரைத்தால், கிராமமே குரைப்பது போல பெரிசாக சப்தம் கேட்கும். இதில் அதற்கு ரொம்ப பெருமை. இதனால் கிராமத்தைச் சேர்ந்த கொல்லர்¢ ஒருவர் அந்த நாயை விலைக்கு வாங்கினார். அது போகிற வருகிறவரையெல்லாம் பார்த்தது, பலமாகக் குரைத்ததைப் பார்த்¢து கொல்லனார் பெருமைப்பட்டார்.

ஒருமுறை கிராமத்து பஞ்சாயத்து தலைவர் மகளைப் பார்த்து நாய் உற்சாகமாகக் குரைத்து, துரத்தியது. அந்தப் பெண் தன் தந்தையிடம், ''என்ன தலைவர் நீங்கள்? கிராமத்து கண்ட கண்ட நாய்களெல்லாம் என்னைப் பார்த்து குரைப்பதைத் தடுக்க முடியவில்லையே!'' என்றாள்.

உடனே கொல்லரைக் கூப்பிட்டு, நாயைக் கட்டிப் போடும்படி சொன்னார்.

அவர் நாயை சங்கிலி கொண்டுவந்து ஒரு பெரிய மரத்துடன் இணைத்துக் கட்டிவிட்டார். நாயால் நகர முடியவில்லை. நாய் இதையும் பெருமையாக நினைத்துக் கொண்டு ''பார்! நம் எஜமானர் என் திறமையை வியந்து மரத்தை இழுப்பதற்காகக் கட்டிப் போட்டிருக்கிறார்'' என்று அதை இழுக்க முற்பட்டது. கிராமத்தவர் கைகொட்டிச் சிரித்தார்கள். நாய் அதை பாராட்டு என்று எண்ணிக்கொண்டு இன்னும் பலமாக இழுத்தது.

நீதி:- சிலருக்கு எது தண்டனை, எது பாராட்டு என்பதே தெரியாது.

நன்றி
அம்பலம்
Reply
#2
சாமியை கனநாட்களாக காணவில்லையே..? எங்கே போனார்?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
Quote:அந்த நாய்க்கு நல்ல குரல். குரைத்தால், கிராமமே குரைப்பது போல பெரிசாக சப்தம் கேட்கும்.

இது நல்ல நகைச்சுவை...

கதைகளுக்கு நன்றி சாமி.
[size=16][b].
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)