![]() |
|
இப்படியும் நடக்கிறது... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: இப்படியும் நடக்கிறது... (/showthread.php?tid=8077) |
இப்படியும் நடக்கிறது.. - kuruvikal - 09-27-2003 <img src='http://thatstamil.com/images14/thaali-60.jpg' border='0' alt='user posted image'> 300 பெண்களின் தாலிகளுடன் கோவில் பூசாரி எஸ்கேப்! மாங்கல்ய பூஜை என்ற பெயரில் 300க்கும் மேற்பட்ட பெண்களிடம் தாலியை வாங்கிய கோவில் பூசாரி அவற்றை அடகு வைத்து விட்டு லட்சக்கணக்கான பணத்துடன் தலைமறைவாகி விட்டார். கடலூர் மாவட்டம் வடலூல் சீதாராமன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் பூசாரியாக இருந்து வந்தவர் லட்சுமி நரசிம்மன். இவர் கோவிலுக்கு வரும் பெண்களிடம், ராமர் பாதத்தில் உங்களது தாலிகளை 48 நாட்கள் வைத்து பூஜை செய்தால், தோஷம் அனைத்தும் விலகி சுபிட்சம் பெறுவீர்கள் என்று கூறியுள்ளார். பூசாரியே சொல்லியதால் பெண்கள் தங்களது தாலிகளை கழற்றிக் கொடுத்துள்ளனர். கழுத்தில் மஞ்சளைக் கட்டிக் கொண்டனர். தாலிச் சரடும் தங்கத்தில் இருந்தால் அவற்றை செயின்களோடு சேர்த்து வாங்கியுள்ளார். இதில் பெரும்பாலான பெண்கள் தங்களது கணவருக்குத் தெரியாமல் தாலியைக் கழற்றித் தந்துள்ளனர். தாலியைத் தர தயங்கிய பெண்களிடம், கணவருக்கு தோஷம் இருப்பதாகவும் பூஜை செய்யாவிட்டால் அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்றும் மிரட்டியுள்ளார். இப்படியாக சுமார் 300 பெண்களில் பல சைஸ்களில் மாங்கல்யத்தை வாங்கியுள்ளார். இந்தத் தாலிகளுக்கு பூஜை நடப்பதாக பூசாரி கூறியதால், தினமும் பெண்கள் வந்து அவர் தந்த பூவை மட்டும் வாங்கிச் சென்றனர். நெடுநாட்களாக பூஜை நடப்பதாகவே அவர் கூறிக் கொண்டிருந்தால் சந்தேகமடைந்த சில பெண்கள் தங்களது கணவன்மார்களிடம் விஷயத்தைக் கூற, அவர்கள் பூசாரியின் வீட்டுக்குள் புகுந்து தர்ம அடி தந்து தாலியை மீட்டுச் சென்றுள்ளனர். இந் நிலையில் திடீரென்று பூசாரி லட்சுமி நரசிம்மனின் வீடு பூட்டிக் கிடந்தது. தனது குடும்பத்துடன் அவர் தலைமறைவாகியிருந்தார். அப்போது தான் அவர் 300 தாலிகளுடன் எஸ்கேப் ஆனதும், அந்தத் தாலிகளை ஒரு அடகுக் கடையில் வைத்து பணம் பெற்றுக் கொண்டு ஊரை விட்டு காலி செய்ததும் தெரியவந்தது. தாலியைக் கழற்றிக் கொடுத்தவர்களில் நெய்வேலி மின் கழக உயர் அதிகாரிகள் சிலரின் மனைவிகளும் அடக்கம் என்று கூறப்படுகிறது. அந்த அடகுக் கடை ஆசாமிக்கும் பூசாரிக்கும் லிங்க் இருக்கலாம் என்று தெரிகிறது. தங்களது கணவர்களுக்கு இந்த விஷயம் தெரியாது என்பதால், இதுவரை தாலியை இழந்த பெண்கள் யாரும் நேரடியாக காவல் நிலையத்தில் புகார் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். புகார் வந்தால் தான் நாங்கள் ஏதாவது செய்ய முடியும் என்கின்றனர் போலீசார். தகவல் தற்ஸ் தமிழில் இருந்து பிரதி எடுக்கப்பட்டது...! உதவி சுரதாவின் பொங்குதமிழ்...! - kuruvikal - 09-28-2003 56ன் அட்டகாசம்: அலறிய 65! விருதுநகர் மாவட்டம் திருச்சுழி என்ற இடத்தில் 65 வயது மூதாட்டியை 'ஈவ் டீசிங்' செய்ததாக(!) 56 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சுழி அருகே உள்ள மேல்உடைகுளம் என்ற ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 56 ). இதே பகுதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் ரேஷன் கடையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த மூதாட்டியை வழி மறித்த கோவிந்தராஜ், கேலியும்,கிண்டலும் செய்துள்ளார். மேலும் மிக ஆபாசமாகவும் பேசினாராம். இது குறித்து அந்த மூதாட்டி போலீஸில் புகார் கொடுக்கவே, சேட்டை செய்த கோவிந்தராஜை போலீஸார் கைது செய்தனர். :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தகவல் தற்ஸ் தமிழில் இருந்து பிரதி எடுக்கப்பட்டது...! உதவி சுரதாவின் பொங்குதமிழ்...! - kuruvikal - 09-30-2003 <img src='http://www.webulagam.com/news/photonews/images/2003/09/30_marriage.jpg' border='0' alt='user posted image'> தென்னிந்தியாவில் பருவ மழை பொய்த்துவிட்டதால் பல மாநிலங்கள் தண்ணீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் குடிநீருக்கு பெரிதும் அல்லல்பட்டு வருகின்றனர். விலங்குகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற மூடநம்பிக்கையையொட்டி சென்னையில் கழுதை, குரங்கு உள்ளிட்ட 18 வகை உயிரினங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணமான கழுதைகளை ஆசிர்வதிக்கும் பெண்கள். :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ----------------------------------- தகவல் சுரதாவின் பொங்குதமிழ் உதவி கொண்டு வெப்புலகத்தில் பிரதி எடுக்கப்பட்டது...! - yarl - 09-30-2003 அதற்கு அடுத்தநாள் மழை பெய்ததென்பதுதான் செய்தியே - sOliyAn - 09-30-2003 பெய்ததா? ம்.. அதுகளின்ரை காட்டிலை மழை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 10-03-2003 வட்டிப் பணம்: மனைவியுடன் பிரச்சினை 2 மகள்களைக் கொன்று தந்தையும் தற்கொலை வட்டிக்குக் கொடுத்த பணம் திரும்பி வராதது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த பஸ் ஓட்டுநர், தனது இரண்டு மகள்களைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக இருந்தார். அவர் அக்கம் பக்கத்தில் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்தார் ராஜகோபால். ஆனால் அவரிடம் பணம் வாங்கிய பலரும் திருப்பித் தரவில்லை என்று தெரிகிறது. இதனால் வீட்டில் அவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த ராஜகோபால், தனது மகள்கள் இருவரையும் தூக்கில் மாட்டிக் கொன்றார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார். -------------------------------------- மனிதாபிமானம்...மனிதம்..இரக்கம்...அன்பு....பாசம்...நேசம்...பொறுமை.... நிதானம்.... சகிப்புத்தன்மை....எல்லாம் மறைந்து காசும் அசுரமும் வளருதோ....இன்று உலகில் வாழ்பவன் மனிதனா...அசுரனா...?! :evil: :roll: :evil: :?: :evil: -------------------------------------- தகவல் தற்ஸ் தமிழில் இருந்து பிரதி எடுக்கப்பட்டது...! உதவி சுரதாவின் பொங்குதமிழ்...! - Mullai - 10-04-2003 <span style='font-size:25pt;line-height:100%'>கணவனுக்கு ஹெரோயின் வாங்க பிள்ளைகளை விற்றாள் மனைவி</span> விலை 3750 ரூபா: ஒரு பிள்ளைக்கு 3 வயது: மற்றப்பிள்ளை 7 மாதம் ~ஹெரோயின்| போதைப் பொருள் குடிக்க கணவனுக்குப் பணமில்லை. பணமில்லாத கணவனுக்குப் பணம் தேடிக் கொடுக்க மனைவி தனது இரு பிள்ளைகளையும் விற்றாள். இரு பிள் ளைகளினதும் விலை 3 ஆயிரத்து 750 ரூபா! விற்கப்பட்ட இவ்விரு பிள்ளை களும் தெஹிவளை பகுதியிலுள்ள இரு வீடுகளிலிருந்து கல்கிசை பொலீ ஸாரினால் மீட்கப்பட்டனர். பிள்ளை களை வாங்கிய இரு பெண்களும் பிள் ளைகளை விற்ற தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டனர். விற்கப்பட்ட இரு பிள்ளைகளில் மூத்த பிள்ளையின் வயது 3, மற்றப் பிள்ளையின் வயது 7 மாதம். இப்பிள்ளைகளின் தந்தை ஒரு மேசன். ஹெரோயின் குடிக்க அவருக்கு ஒரு நாளைக்கு 500 ரூபா தேவை என்பது பொலீஸ் விசாரணைகளி லிருந்து தெரியவந்திருக்கிறது. ஹெரோயினுக்கு அடிமையான கணவன் தொழிலுக்குச் செல்லாத தால் ஹெரோயின் வாங்க பணம் தேடிக் n;காடுக்க வேண்டிய நிலை மனைவிக்கு ஏற்பட்டது. பணம் தேட வழியில்லா ததால் மூத்த பிள்ளையை சில தினங்க ளுக்கு முன்னர் அவர் 3 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்றிருக்கிறார். அப்ப ணமும் ஹெரோயினுக்குத் தீர்ந்து போகவே இரண்டாவது பிள்ளையை 250 ரூபாவுக்கு விற்றார். இப்பிள்ளைகளின் தாய் கித்துல் கல பகுதியைச் சேர்ந்தவர். கணவனின் ஹெரோயின் பழக்கத்தால் அவர் தனது குடும்பத்திலிருந்து விலகியிருந்தார். நன்றி உதயன் - kuruvikal - 10-07-2003 எல்லை மீறிய அன்பு............. <b>மனைவியின் சாவு: மின்சாரம் பாய்ச்சி கணவர் தற்கொலை</b> மனைவி இறந்த துக்கம் தாளாமல் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார் கணவர். சென்னை ஆவடியில் உள்ள ராணுவ டேங்குகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தவர் நாராயணன். கடந்த மாதம் பிரசவத்தின்போது இவரது மனைவி இறந்து விட்டார். குழந்தை மட்டும் உயிர் தப்பியது. மனைவி இறந்ததால் நராயணன் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்தார். இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றார். ஆனால், உறவினர்கள் அவரைக் காப்பாற்றி விட்டனர். இந் நிலையில் நேற்று மின்சார வயரை கையில் கைட்டிக் கொண்டு மறு முனையை சுவிட்சுடன் இணைத்தார். பின்னர் கட்டிலில் படுத்துக் கொண்டு சுவிட்சை இயக்கியுள்ளார். மறு விநாடியே மின்சாரம் பாய்ந்து அவர் இறந்தார். நீண்ட நேரமாக அறைக்குள் சென்ற நாராயணனைக் காணாத உறவினர்கள் கதவை உடைத்துத் திறந்தனர். அப்போது மின்சாரம் பாய்ந்து நாராயணன் தற்கொலை செய்து இறந்து கிடந்தது தெரியவந்தது. -------------------------------------------- தகவல் தற்ஸ் தமிழில் இருந்து பிரதி எடுக்கப்பட்டது...! உதவி சுரதாவின் பொங்குதமிழ்...! - ganesh - 10-07-2003 நம்பினால் நம்புங்கள் இங்கிலாந்தில ஒரு விவசாயிக்கு ஒரு தலைமயிரும் இல்லை ஒருமுறை அவர்படுத்தபோது அவரின் மாடுவந்து அவரின் தலையை நக்கிவிட்டது என்ன ஆச்சரியம் ஒரு கிழமையில் அவரின் தலையில் சகலமயிர்களும் முளைக்கத்தொடங்கிவட்டது நீங்களும்; செய்துபார்க்கலாம் ஆனால் இதற்கு நான் பொறுப்பல்ல - kuruvikal - 10-07-2003 அட அப்படியா சங்கதி...அப்ப அந்த மாடு எங்க மேயுதெண்டு சொல்லுங்கோ...பிறகு பாருங்கோவன் பிசினஸ் எப்படிக் களைகட்டுதெண்டு...இன்ரனஸனல் லெவலில போகாட்டி.....?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vaiyapuri - 10-08-2003 விஞ்ஞான உலகத்திலை உதுகளும் நடக்குது.. முடிஞ்சா மாட்டைப் பிடியுங்கோ கணேஸ். குருவிகள் சொல்லுறா மாதிரி டாட்டா பிர்லா ரேஞ்சுல உயரலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ganesh - 10-08-2003 நான் ஒரு சஞ்சிகையில் படித்தேன் முடீந்தால் விரைவில் அறியத்தருகிறேன் - ganesh - 10-08-2003 ஜேர்மனியில் போதை தரக்கூடிய இலைஒன்றை உட்கொண்ட 16 வயதுடைய இளைஞன் ஒருவன் பெரிய கத்தரிக்கோல் ஒன்றினால் தமது நாக்கு உட்பட பல உறுப்புக்களை வெட்டியுள்ளார் இச்சம்பவம் உண்மையா? இப்போதை தரக்கூடிய தாவரம் தென்அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அறியப்படுகின்றது - vaiyapuri - 10-08-2003 கணேஸ் பிச்சு உதர்றீங்க..ஆகட்டும் ஆகட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ganesh - 07-02-2004 இந்தியாவில் இரண்டு சகோதரிகள் தமது தந்தையைகொலைசெய்து உடல் உறுப்புகளை சாப்பிட்டு விட்டார்கள் - ganesh - 07-02-2004 இங்கிலாந்தில் ஒரு பெண் 8 பிள்ளைகளுக்கு தாய் ஆனால் அந்த எட்டுபிள்ளைகளுக்கும் 8 தந்தையர் - வெண்ணிலா - 07-03-2004 <b>யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னைப் பெண்ணாக மாற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை ஒன்றை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பெரும் பணச்செலவில் மேற்;கொண்டுள்ளார். இவ்வறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிவுற்றதாகவும் அவர் சிகிச்சையை தொடர்ந்து மகிழ்ச்சியாக காணப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த இளைஞனின் உடலுறுப்புக்கள் சில நீக்கப்பட்டுள்ளதுடன் பெண் தன்மைக்குரிய ஹோமோன்களைத் தூண்டுவதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுள்ளன. மேலும் பிளாஸ்ரிக் சிகிச்சை மூலம் பெண்ணாக அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளாதாகவும் தெரியவருகின்றது. சுமார் 25 இலட்சம் ருபா செலவிலேயே மேற்படி சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடபகுதியைச் சேர்ந்த இந்த இளைஞன் லண்டனைச் சேர்ந்த நபர் ஒருவருடன் நீண்டகாலம் நட்பை வளர்த்து வந்ததாகவும் அந்த நட்பு காதலாக மாறி இறுதியில் அவரை திருமணம் செய்யும் நோக்குடனேயே இவர் பெண்ணாக மாற விரும்பியதாகவும் தெரிவிக்கப்புடுகிறது. சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து விரைவில் அவர் லண்டன் பயணமாகுவார் எனவும் தெரியவருகின்றது.</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: :evil: - வெண்ணிலா - 07-03-2004 <b>மேற்கூறப்பட்ட சுவாரசியமான செய்தி 02.07.2004 ல் வெளியான வீரகேசரி நாளிதழிலிருந்து.</b> - vasisutha - 07-03-2004 நல்ல முன்னேற்றம் தான். - ganesh - 07-06-2004 நோர்வேப்பெணமணி ஒருவரை பாகிஸ்தான் நாட்டுக்கார ஒருவர் அப்பெண்ணின் அனமதியின்றியே அப்பெண்ணை மணந்துள்ளார் எப்படி இது முடியும் என்று நினைக்கிறீர்களா? பல வருடங்களுக்கு முன் களவாடப்பட்ட அப்பெண்மணியின் முக்கிய தஸ்தாவேக்களை வைத்து அந்த பாகிஸ்தானியர் அப்பெண்ணை மணந்துள்ளார் |