09-28-2003, 07:29 PM
"மனிதனின் இள வயதிலேயே, அதாவது முப்பது அல்லது அதற்கு முன்பாகவே, அவனது தனி மனித பண்புகளில் மாற்றம் ஏற்படுவது நின்று விடும்படியாக அவனது ஜீன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன'', என்பது ஒரு பரவலான கருத்து. ஆனால், அவ்வாறு இல்லை என்கிறது அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு (ஏ.பி.ஏ.,) .
* இவர்கள் நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியின் மூலம் மனிதனின் பண்புகள் அவனது வாழ்நாள் முழுவதும் மாறி கொண்டே தான் இருக்கின்றன என்று கண்டறிந்துள்ளன. மனிதனின் வாழ்நாள் முழுவதும், அவனது குணங்களில் ஒரு சிறிய மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்கிறது இவ்வாராய்ச்சி. இருபத்தியொன்றிலிருந்து அறுபது வயது வரை உள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 514 பேரிடம் அவர்களது ஒத்துக் கொள்ளும் மனம், நரம்பியல் குணங்கள், வெளிப்படையான தன்மை மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றை ஆராய்ந்தனர் இவ்வாராய்ச்சியில் சஞ்சய் ஸ்ரிவாஸ்தவா, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆலிவர் ஜான் போன்றவர்கள் நடுத்தர வயதிலும் மாற்றம் ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளனர்.
* ஒரு மனிதனின் இருபது வயதுகளில் அதிகமாக இருக்கும் விழிப்புணர்வு தன்மை அவனது வாழ்நாள் முழுவதும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இது மனிதனின் பொறுப்புணர்ச்சி, சரியான நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை வைத்து கணக்கிடப்பட்டது. முப்பதுகளில் மிக அதிகமாக அதிகரிக்கும் ஒத்து கொள்ளும் மனப்பாங்கு மனிதனின் தாரளமான, அன்பான உதவிகரமான நடவடிக்கைகள் மற்றும் பிறரிடம் கொண்டுள்ள உறவுகளை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது.
* பெண்களின் நரம்பியல் குணங்கள் வயது ஏற ஏற குறைந்து கொண்டே போனது. ஆனால், ஆண்களில் அது குறையவில்லை. மனதளவில் நிலையற்ற தன்மையினையுடையவர்களை வைத்து இது கண்டறியப்பட்டது. மன அழுத்தம் மற்றும் பிற உடல் நலக் கோளாறுகளுடன் இது தொடர்புடையது.
ணி வெளிப்படையாக இருக்கும் தன்மை ஆண்களிலும், பெண்களிலும் வயது ஏற ஏற குறைந்து கொண்டே போகிறது. இது போன்று பல தனிமனிதப் பண்புகளை பற்றி ஆராய்ந்த அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு, மனிதன் பண்புகள் அவனது வாழ்நாள் முழுவதும் மாற்றமடைந்து கொண்டே இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்துள்ளன.
நன்றி: தினமணி