Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 227 online users.
» 0 Member(s) | 224 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,226
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,595
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,279
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,594
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,024
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,413
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,110
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,014
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,236

 
  அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா?
Posted by: Shankarlaal - 02-22-2006, 09:44 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (15)

அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா? மு.ஐஸ்வர்யா, திருப்பாச்சேத்தி.

ஆமாம். மூளையில் பற்பல மன உணர்வுகளுக்கென்று கெமிக்கல்கள் உள்ளன. அழுது முடியும்போது இந்த கெமிக்கல்கள் மறைவதால் ஒரு நிம்மதி கிடைக்கிறது. வேறு ஒரு நிகழ்ச்சியால், வேறு ஏதாவது மன உணர்வு தோன்றும் வரை அந்த நிம்மதி நீடிக்கும். நம் மனதில் பொங்கித் ததும்பி அலை மோதும் உணர்வுகள் யாவும் எண்ணங்களால் தூண்டப்படும் கெமிக்கல்களின் தாக்கங்களால் ஏற்படுபவையே கோபம் என்ற உணர்வு வசத்திலிருக்கும் போது உண்மையில் மூளையில் அதற்கான கெமிக்கலின் ஆதிக்கம் நிலவுகிறது. அதன் ஆதிக்கம் நீடிக்கும் வரை மனதில் கோபம் தணியாது மனம் சமாதானமடையாது. கெமிக்கல்களின் அளவு, நீடித்திருக்கும் நேரம் பொறுத்து ஒருவரது சோகம், கோபம் முதலான உணர்வுகள் நிலைக்கும்.

http://www.dinamalar.com/

Print this item

  பறவை காய்ச்சலுக்கு ஏன் பயப்பட வேண்டும்?
Posted by: Shankarlaal - 02-22-2006, 09:43 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - No Replies

பறவை காய்ச்சலுக்கு ஏன் பயப்பட வேண்டும்?

சென்னை: பறவைக் காய்ச்சல் நோய் குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சமயத்தில் வீண் வதந்திகளை கேட்டு பீதி அடையாமல், நோய் குறித்த உண்மைகளை அறிந்து கொள்வது நல்லது. பறவைக் காய்ச்சல் பற்றிய அடிப்படைத் தகவல்கள் பின்வருமாறு:

* பறவைக் காய்ச்சல் என்பது என்ன?

"ஏவியன் இன்புளூயன்சா' என்பது இதன் மருத்துவப் பெயர். எளிதில் பரவக் கூடிய இந்த தொற்றுநோய் பறவைகளின் சுவாச உறுப்புகள், வயிறு மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளை பாதித்து ஒட்டுமொத்த செயலிழப்பை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக, வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளை அதிகம் பாதிக்கக் கூடியது. இத்தாலியில் 1878ம் ஆண்டில் முதன்முறையாக இந்த நோய் கண்டறியப்பட்டது.

* பறவைக் காய்ச்சல் மனிதர்களை எவ்விதம் பாதிக்கிறது?

பறவைக் காய்ச்சல் வைரஸ் பொதுவாக மனிதர்களை தாக்குவதில்லை. ஆனால், 1997ம் ஆண்டிற்குப் பின்னர் 180 பேர் இந்த பறவைக் காய்ச்சல் வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1997ம் ஆண்டில்தான், முதல்முறையாக ஹாங்காங்கில் ஒரு நோயாளிக்கு பறவைக் காய்ச்சல் நோய் தொற்றியுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. "எச்5என்1' டைப் 1 என்ற முதல்ரக தொற்றுநோய் வைரஸ் கிருமியே அதற்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

* பறவைக் காய்ச்சல் நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்துள்ளதா?

இதுவரை இல்லை.

* தற்போதைய பிரச்னை என்ன?

பறவைகளும், மனிதர்களும் தற்போது அதிகமாக பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். சில சமயத்தில் பன்றி, குதிரை போன்ற விலங்குகளும் பாதிப்படைகின்றன. இந்த நிலையில், பறவைக் காய்ச்சல் ஏற்படுத்தும் அபாயக் கிருமி, மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றுகிற வகையில் வளர்ச்சி மாற்றம் பெற்றுவிடக் கூடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. ஒருவேளை அப்படி நடந்து விட்டால்... அதற்கு சாத்தியக் கூறுகள் கொஞ்சம் தான். மனிதர்களிடையே தொற்றக் கூடிய சக்தி பெற்று புதிதாக பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என்றே விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும், இந்த நோய்க்கான சிகிச்சை முறைகளோ, உரிய மருந்துகளோ நம்மிடம் இல்லை.

* இதுவரை பறவைக் காய்ச்சல் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது?

கடந்த 1997ம் ஆண்டில்தான் ஹாங்காங்கில் பல லட்சக்கணக்கான பறவைகள் இறந்துபோன பிறகு தான் "எச்5என்1' கிருமியையே அறிய முடிந்தது. இதன் பிறகு அங்கு ஏராளமான கோழிகள் கொல்லப்பட்டதன் மூலம் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த 2003 மற்றும் 2004ம் ஆண்டுகளில் இதே வகை கிருமிகள் தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் துளிர்விட்டு, 10 கோடி பறவைகள் கொல்லப்பட்டன. 2004ம் ஆண்டிலேயே ஜுன் மாதம் ஆசிய நாடுகளில் பல இடங்களில் மீண்டும் பயமுறுத்தியது.

மனிதர்களுக்கு என்ன பாதிப்பு என்று பார்த்தால், இதுவரை 180 பேர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதில், 90 பேர் இறந்துள்ளனர். இந்த கிருமி தற்போது, மத்திய ஆசிய நாடுகள், ஜப்பான் மற்றும் ரஷ்யாவுக்கு பரவியுள்ளது. துருக்கி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வந்த பறவைகளிடமும் இந்த நோய்க் கிருமி காணப்படுகிறது.

* பறவைக் காய்ச்சல் நோயில் இருந்து மனிதர்களை காப்பாற்ற ஏதும் மருத்து உள்ளதா?

ஆசிய நாடுகளில் காணப்படும் "எச்5என்1' கிருமிகளிடம் இருந்து மனிதர்களை பாதுகாக்க தற்போது எந்த மருந்து வகையும் இல்லை. எனினும், இதற்காக நடைபெற்று வரும் சில மருத்துவ பரிசோதனை முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. தற்போது, சுவிஸ் நாட்டு தயாரிப்பான "தமிப்ளூ' எனும் மருந்து, நோய் வராமல் தடுக்கவும் மற்றும் நோயின் ஆரம்பகட்டத்திலும் மட்டுமே பயனளிக்கும். பிரிட்டனில் மருத்துவர் பரிந்துரையின் பேரிலேயே இந்த மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்து தயாரிக்கும் ரோக் என்ற நிறுவனம், 30 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கத்தக்க மருந்துகளை உலக சுகாதார அமைப்புக்கு தருவதாக கூறியுள்ளது.

http://www.dinamalar.com/

Print this item

  ஜெனீவாவில் காத்திருக்கும் பொறி
Posted by: yarlmohan - 02-22-2006, 09:37 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>- முப்பது ஆண்டுகளாகப் போராடிவரும் தமது சகஜீவிகளைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ளாமல், வெளிநாட்டு நிபுணர்கள் வந்து வகுப்பு எடுக்கும் நிலையிலேயே அரசின் மிக மூத்த அமைச்சர்கள் காணப்படுவது எதைக்காட்டுகிறது?

- முன்பு ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ்காந்தி செய்தார். இப்பொழுது மஹிந்த யாரைவைத்துச் செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.</b>

"உங்களுக்குச் சமாதானம் வேண்டுமானால் உங்களை அதற்கு ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள்" என்று ஒரு லத்தீன் வாசகம் உண்டு. கொழும்பில் கடந்தசில வாரங்களாக நடைபெற்றுவரும் ஏற்பாடுகளை வைத்துப்பார்த்தால் ஒன்றில் அரசாங்கம் ராஜதந்திர ரீதியாக மிகவும் கத்துக்குட்டி நிலையில் உள்ளது என்ற முடிவுக்கு வரநேரிடும். அல்லது அரசாங்கம் சமாதானத்துக்கு விசுவாசமில்லை என்ற ஒரு முடிவிற்கும் வரலாம்.

அரசாங்கம் உண்மையாகவே பேச்சுவார்த்தைக்கு தன்னை விசுவாசமாக ஆயத்தப்படுத்திவருகிறது என்று ஒரு கதைக்காக எடுத்துக்கொண்டாலும் அதற்காக அவர்கள் தருவித்திருக்கும் நிபுணர்களால் எவ்வளவுதூரத்துக்கு அவர்களை ஆயத்தப்படுத்த முடியும்?

இச்சிறு தீவில் கடந்த சுமார் முப்பது ஆண்டுகளாகப் போராடிவரும் தமது சகஜீவிகளைப்பற்றி அதிகம் தெரியாத ஒரு நிலையிலேயே, அதாவது இது விஷயத்தில் வெளிநாட்டு நிபுணர்கள் வந்து வகுப்பு எடுக்கும் நிலையிலேயே அரசாங்கத்தின் மிக மூத்த அமைச்சர்கள் காணப்படுகிறார்கள் என்பது எதைக்காட்டுகிறது?

பிரச்சினையில் ஆழ அகலத்தைப் புரிந்துகொள்வது என்றால் முதலில் அவர்கள் உள்ளுரிலேயே அணுகக்கூடிய ஆட்கள் இருக்கிறார்கள். முதலாவதாக அவர்களுடைய அமைச்சரவையிலேயே ஒரு உறுப்பினராக இருக்கும் டி. குணசேகரவிடம் வகுப்பு எடுக்கலாம். ஒற்றையாட்சி முறைக்குள் ஏன் பிரச்சினையைத் தீர்க்க முடியாதுஎன்பதை அவரிடம் கேட்டுத்தெளியலாம். அவரைத்தவிர பேராசிரியர் ஜெயதேவஉயாங்கொட இருக்கிறார். பேராசிரியர் சுசரித்த கமலத் இருக்கிறார். விக்ரர் ஐவன் இருக்கிறார். இவர்களைப் போன்ற உள்ளுர் நிபுணர்களை அழைத்து ஆலோசனை கேட்கலாம்.

ஜீ.எல்.பீரிஸோ அல்லது மிலிந்த மொறகொடவோ வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தியவர்கள் அல்லர். அவர்கள்செய்த சமாதானம் ஆறு சுற்றுப்பேச்சுக்களின் பின் இறுகிப்போய் நின்று விட்டதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.

மற்றது நாராயண சுவாமியிடம் வகுப்பு எடுப்பது பற்றியது. நாராயண சுவாமி விடுதலைப் புலிகளின் உள் வட்டங்களுக்குள் தொடர்ச்சியாக பழகிய ஒருவரல்லர். றொகான் குணரட்ணவைப்போல அவரும் இரண்டாங்கை, மூன்றாங்கை தகவல்களை வைத்துக்கொண்டு எழுதுபவர்தான். அவரும் அவரையொத்த எல்லாருமே விடுதலைப் புலிகளை தமது நோக்கு நிலையிலிருந்து பார்ப்பவர்கள்தான். விடுதலைப் புலிகள் இயக்கத்தை, அதை அதுவாகப் பார்க்கத் தயாரில்லாத இவர்களுக்கு புலி மனம் எனப்படுவது எளிதில் பிடிபடாது வழுக்கிச் செல்லும் ஒன்றாகவே - 'இலூசிவ்' ஆகவே - தோன்றமுடியும்.

நாராயணசுவாமி மட்டுமல்ல றொகான் குணரட்ண மட்டுமல்ல புதுடில்லியில் இருந்துகொண்டு தமது பிராந்திய பேரரசு நலன்களுக்கூடாக தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் பார்க்கும் எவருக்குமே புலிகள் இலூசிவ் ஆகத்தான் இருப்பர். கொழும்பிலிருந்துகொண்டு புலிகளை தமது நோக்குநிலையில் இருந்து பார்க்கும் எல்லா அறிவுஜீவிகளும் ஊடகக்காரர்களும் என்றைக்குமே புலிமனத்தைக் கண்டுபிடிக்கப்போவதில்லை. யாரெல்லாம் புலிமனதை, அதை அதுவாகப் பார்க்க முடியாதிருக்கிறார்களோ, அல்லது அதை அதுவாகப் பார்க்க மறுக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் அது 'இலூசிவ்' ஆகத்தான் இருக்கும்.

புலிமனதை அதை அதுவாகப் புரிந்துகொள்வது என்பது தமிழர்களை தமிழர்களிற்கேயான பிரச்சினைகளுக்கூடாகப் புரிந்துகொள்வதுதான். தமிழர்களின் பிரச்சினைகளை அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சிக்கூடாக புரிந்துகொள்ளும் எவரும் அந்தப் பிரச்சினைகளின் தவிர்க்கவியலாத ஒரு விளைவே புலிகள் என்பதைக் கண்டுபிடிப்பார்கள்.

எனவே புலிமனதைக் கண்டுபிடிப்பது என்பது அதன் ஆழமான அர்த்தத்தில் தமிழர்களின் பிரச்சினைகளைக் கண்டுபிடிப்பதுதான். இதற்கு ஹவார்ட்டில் படித்து பட்டம்பெற வேண்டியதுமில்லை நாராயண சுவாமியிடம் வகுப்பெடுக்க வேண்டும் என்றுமில்லை.

பிரித்தானியக் கடற்படையின் புகழ்பெற்ற தளபதியாக இருந்தவர் நெல்சன். இவருக்கு ஒரு கண் இல்லை. தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் அதிகம் வளர்ச்சியடைந்திராத அந்நாட்களில் கடற்கரையிலிருந்து காட்டப்படும் சமிக்ஞைகளே சமர்களை வழிநடத்தின.

தளபதி நெல்சன் சமர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் போது கள யதார்த்தத்திற்கேற்ப முடிவுகளை எடுக்க விரும்பினால் கரையை நோக்கி பார்வையிழந்த தனதுகண்ணை வைத்துக்கொள்வாராம். இதன் மூலம் கரையில் காட்டப்படும் சமிக்ஞைகள் தனக்குத் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு தன்முடிவுப்படி சண்டையை வழிநடத்துவாராம்.

நெல்சனின் சகோதரர்கள் இப்பொழுதும் புதுடில்லியிலும், கொழும்பிலும் இருக்கிறார்கள். அவர்கள் எதையாவது புரிந்துகொள்ள விரும்பவில்லை என்றால் அதைப்பார்க்காமலேயே விட்டுவிடுகிறார்கள். ஜெனிவாவுக்குப் போகவிருக்கும் அரச தரப்புப் பிரதிநிதிகளும் இப்படி நெல்சனின் கண்கொண்டே பிரச்சினைகளைப் பார்க்க விரும்புவது தெரிகிறது. மெய்யாகவே அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புவார்களாயின் அவர்கள் ஆலோசனை பெற்றிருக்கவேண்டியது வேறு ஆட்களிடமே.

எனவே கொழும்பில் நடந்தவை அனைத்துப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பயிற்சிப்பட்டறைகள் அல்ல. மாறாக பிரச்சினைகளைக் காலம் கடத்தவும் விடுதலைப்புலிகளை ஒரு புதிய பொறிக்குள் சிக்கவைப்பதற்குமாகத்தான் அவர்கள் புலிமனதைப் படிக்கிறார்கள்.

அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுடன் ஒத்துப்போய் அல்லது அதிகம் விட்டுக்கொடுப்பதுபோல ஒரு போக்கைக்காட்டி அதன் மூலம் விடுதலைப்புலிகளை மேற்கு நாடுகளுடன் முரண்பட வைக்கும் விதத்தில் ஒருபொறி கொழும்பில் தயாராகி வருகிறது. இது 1987இல் ஜெயவர்த்தன இந்தியாவுடன் சேர்ந்து செய்த ஒரு பொறியைப்போன்றதே. அந்தப் பொறி நடுவராக வந்த இந்தியாவை விளையாட்டு வீரராக்கியது. முடிவில் அது தமிழர்களையும் இந்தியாவையும் மோத விட்டது.

ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ்காந்தி நடத்தினார். அதிலிருந்து தொடங்கி சிதையத்தொடங்கிய இந்திய -ஈழத்தமிழ் உறவுகள் முற்றாக வழமைக்குத் திரும்பிவிடாத ஒரு பின்னணியில் இப்பொழுது புலிகளையும் மேற்குநாடுகளையும் மோதவிடும் விதத்தில் ஒரு புதியபொறி வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது முன்பு ரணில் வைத்திருந்த பொறியின் திருத்தப்பட்ட ஒரு வடிவமாகவும் இருக்கலாம். முன்பு ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ் காந்தி செய்தார். இப்பொழுது மஹிந்த தன்னுடைய யுத்தத்தை யாரைவைத்துச் செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.

முன்பு ரணில் ஒஸ்லோவிலும், டோக்கியோவிலும் பொறிவைக்க முயன்றார். இப்பொழுது மஹிந்த ஜெனிவாவில் பொறி வைக்க முயல்கிறார். தமிழீழ விடுதலைப் போராட்டம் இது வரை எத்தனையோ பொறிகளைக் கண்டுவிட்டது. முதலாவது பொறி திம்புவில் வைக்கப்பட்டது. அங்கிருந்து தொடங்கி டோக்கியோ வரையிலும் விதம்விதமான பொறிகள் வைக்கப்பட்டன. சில பொறிகள் தர்மர்பொறிகள். சிலபொறிகள் வீமன்பொறிகள். சிலபொறிகள் தர்மர்பொறிபோல உருமறைக்கப்பட்ட வீமன்பொறிகள். இப்பொழுது ஒரு புதிய பொறி ஜெனிவாவில் காத்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்னும் எத்தனை பொறிகளைக் கடக்கவேண்டியிருக்கும்?

<b>-நிலாந்தன்-</b>

<i>நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 19-022006
கணனித் தட்டச்சு: திருமகள் (தமிழீழம்)
குறிப்பு: நிலாந்தன் அவர்கள் தமிழீழத்திலிருந்து வெளிவரும் ஈழநாதம் பத்திரிகையில் தொடர்ச்சியாக அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவருவதுடன், புலிகளின் குரல்வானொலியிலும் தனது அரசியல் ஆய்வுகளை வழங்கிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.</i>

Print this item

  புலம்பெயர் தமிழர்கள்,,.. தலைப்பை மூடியது ஏன்..???
Posted by: Thala - 02-22-2006, 12:46 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (47)

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=170378#170378

புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்புவார்களா..? எண்கிற தலைப்பு எதற்காக மூடப்பட்டுள்ளது.? வலைஞன் சொல்வது யாரைப்பற்றி எண்றும் விளக்கம் வேண்டும்....! :?:

மற்றயோரின் கருத்தை அறிய அந்த தலைப்பு திறக்கப்படவேண்டும்.


அது நானாக இருந்தால்...!

ஊமை, தனது கருத்தைக் கூறினார் நான் எனது கருத்தை எனது பாணியில் கூறி இருக்கிறேன். தவிர தமிழீழம் என்னது எங்களின் தாயகம். என்னை விட எனக்கு மிகமுக்கியமானது. நாட்டுக்காய் தங்கள் இன்னுயிர்களை என் உறவுகளை இளந்தவனாய் என்னால் 3ம் தர இடமாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது... நான் அங்கு திருத்தம் மேற்கொள்வதாயும் இல்லை. அது தேவையும் இல்லை. வேண்டுமானால் வெட்டுறுதினர்கள் தூக்கட்டும்....

அதோடு என்னையும் களத்தில் இருந்து தூக்கினால் மகிழ்வேன்...!

Print this item

  விஞ்ஞானிக்கு விசா வழங்குவதில் கெடுபிடி
Posted by: parisian - 02-21-2006, 09:45 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

எனக்கும் அமெரிக்க அணுகுமுறை எரிச்சலையும், கோபத்தையும் தந்தது.

ஆனால் இந்தக்கேள்வியும் எழுந்தது.
கூலிகளை உருவாக்குகிற, தனது சுய சமூகத்தின் முன்னேற்றத்தை விட அமெரிக்காவுக்கு வளம் சேர்க்கவே, திறம்படைத்த கூலிகளை உருவாக்க எல்.கே.ஜி யில் இருந்து பி.எச்.டி வரை கல்வியைத் திட்டமிடும் சமூக அக்கறை இல்லாத கல்வியாளர்கள் தங்களுக்கு சான்றோர்களுக்கு கிடைக்கவேண்டிய மரியாதையை எப்படி எதிர்பார்க்கமுடியும்?

கூலிகளை வேண்டும்போது அதிக கூலிக்கும் வேண்டாத போது தூக்கியெரியவும் செய்வது எஜமானனின் விருப்பம் அல்லவா?

Print this item

  உணவு தொற்றுக்கள்/ உணவு மூலம் பரவும் நோய்கள்
Posted by: KULAKADDAN - 02-21-2006, 09:13 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (2)

உணவு மூலம் ஏற்படும் தொற்றுக்கள், நஞ்சாக்கம் என்பன பல்வேறு நோய்களும், இறப்புக்களும் ஏற்பட காரணமாக இருக்கிறன. உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் பக்ரீரியா, பங்கசு, (பூஞ்சணம்), அமீபா, அல்லது வைரசுக்களாக இருக்கலம். இவை மனிதரில் நேரடியாகவோ அல்லது நச்சு பொருட்களை சுரப்பதன் மூலமோ பல்வேறுபட்ட நோய்களை ஏற்படுத்துகிறன. பெரும்பாலான உணவு பொருட்கள் இலகுவில் பழுதடையும் இயல்புடையதாகவும், நோயாக்கும் நுண்ணங்களின் மாசாக்கமும், அவற்றின் பெருக்கமும் உற்பத்தியாகும் இடம் முதல் உணவு உள்ளெடுக்கும் வரை நிகழவும், தொடர்ந்து பேணும் இயல்புடையதாகவும் இருக்கிறன. நுண்ணங்கிகளால் சுரக்கப்பட்ட நச்சு பொருட்கள் உணவு பரிகரிப்பின் போதோ/சமைக்கும் போதோ அழிக்கப்படாது மீந்து இருக்கலாம். உணவு பரிகரிப்பின் போது அழிக்கப்படாது மீந்து இருக்கும் நோயாக்கும் நுண்ணங்கிகள்/ பரிகரிப்பு முடிந்த பின் ஏற்படும் தொற்றுகள் என்பன மனிதரில் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

வருடம் தோறும் மில்லியன் கணக்கான உணவு மூலமான நோய்கள் ஏற்படுவதாக உலக சுகாதார தாபனம் கணக்கிட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உணவு மூலம் ஏற்படும் நோய்களால் வருடாந்தம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பில்லியன் ஈரோக்கள் இழப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போதைய் சூழ்நிலையில் புதிய அதிக வீரியம் உள்ள நோயாக்கிகள் உருவாகி வருவது மிக சிக்கலான விடயமாக உள்ளது.

முழுமையான கிருமி நீக்கமும், தொற்றில்ல பொதியாக்கமும் உணவின் மூலம் ஏற்படும் நோயாக்கத்தை குறைப்பதில் முக்கிய இடம் வகிக்கிறன. ஆயினும் நுண்ணங்கிகளால் உருவாக்கப்படும் நச்சு பொருட்கள் நோய்களை ஏற்படுத்தமுடியும். கிருமிநீக்கம் மிகவும் தீவிரமான பரிகரிப்புமுறையாக இருப்பதால் உணவின் போசனை கூறுகளும் அதிகளவில் இழக்கப்பட காரணமாகிறது. அத்துடன் உணவின் உண்ணும் தரத்தை பாதிக்கிறது.

கடந்த நூறு வருடங்களில் நுண்ணுயிரியலில் ஏற்பட்ட அபிவிருத்தியானது உணவு தயாரிப்பில் முக்கிய பங்கற்றுகிறது. வெப்பமாக்கல், குழிரூட்டல், வடிகட்டல், கதிர்வீச்சு பயன்பாடு , இரசாயன நற்காப்பு பொருட்கள் சேர்த்தல் என்பன பாரம்பரியமாக உணவு மூலம் பரவும் நோய்களை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.

நுண்ணங்கிகளுக்கிடையிலான இடைத்தொடர்புகள்,இடைத்தக்கங்கள், உணவு நொத்திதல் மூலம் பாதுக்காத்தலில் பயன்படுத்தப்படுகிறது.

உணவின் உள்ளடக்கத்திற்கும் (போசணை பொருட்களின் அளவு)
ஒட்சிசன்
உப்பு
அமில தன்மை
இயற்கை நற்காப்பு பொருட்கள் என்பவற்றுக்கிடையிலான தொடர்பும் உணவு மூலம் ஏற்படும் நோய் தொற்றுக்களை குறைப்பதில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

தொடரும்....................

(எனக்கு நேரம் கிடைக்கும் பொழுதுகளில் மிகுதி பகுதியை தொடராக எழுதுகிறேன்.)

Print this item

  வங்காள முறை பாகற்காய் கறி
Posted by: KULAKADDAN - 02-21-2006, 08:21 PM - Forum: சமையல் - Replies (10)

1 அல்லது 2 பாகற்காய்கள்
1/2 தேக்கரண்டி உப்பு

1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்

1 நடுத்தர அளவுள்ள சீனிக்கிழங்கு

1 பெரிய உருளைக்கிழங்கு

சிறிதளவு பீன்ஸ்

நடுத்தர அளவுள்ள ப்ரோக்களி broccoli

3 மேஜைக்கரண்டி நெய் அல்லது எண்ணெய்

1 தேக்கரண்டி கரம்மசாலா

1 தேக்கரண்டி இஇஞ்சிநறுக்கியது

1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் நறுக்கியது

1 பிரியாணி இலை

2 தேக்கரண்டி உப்பு ருசிக்கேற்ப

2 தேக்கரண்டி வெல்லம்

செய்முறை

பாகற்காயை வட்டம் வட்டமாக நறுக்கி அதில் உப்பு மஞ்சள் தூள் தடவி வைக்கவும். உருளைக்கிழங்கை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பீன்ஸ்களை சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும். பிரோக்களி காம்பை வெட்டி சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு வாயகன்ற வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அதில் பாகற்காய் துண்டங்களைப் போட்டு வறுக்கவும். பொன்னிறமாகும் வரை வறுத்து அதனை எடுத்து எண்ணெய் எடுத்து காகிதத்தில் வைக்கவும். மீத எண்ணெயை ஊற்றி அதில் கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து அதில் இஞ்சி. சிவப்பு மிளகாய் பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டு சற்று வதக்கவும். இதில் வெட்டிவைத்த காய்கறிகளைப் போட்டு 5 அல்லது 8 நிமிடங்கள் வதக்கவும். உப்பு, வெல்லம், ஒரு கோப்பை சுடுதண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். பாக்ற்காயையும் சேர்த்து மூடி கரம்மசாலா சேர்த்து மிருதுவாக வேகும்வரை வைக்கவும்.

இறுதியில் ஹாட் மஸ்டர்ட் என்ற திரவத்தை ஒரு தேக்கரண்டி சேர்த்தும் பறிமாறலாம்.

நன்றி...

http://www.thinnai.com/cooking/co0812021.html

Print this item

  Never Play With A Sri Lankan...
Posted by: KULAKADDAN - 02-21-2006, 07:31 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (3)

Once a Srilankan goes to USA and meets President Bush.

Bush takes him to a jungle to prove that Americans are
technologically advanced. In the jungle, Bush asks the Srilankan
to
start digging. He keeps on digging. When he reaches 100ft Bush
tells him to start searching.The Srilankan finds a piece of wire
.Bush proudly says "You see; even 100 years back we had
telephone".

At this the Srilankan gets really annoyed.

Next year Bush comes to Srilanka. The Srilankan takes him to a
jungle and tells him to start digging. Bush digs 100 ft and
stops.
The Srilankan tells him to continue. He digs 200ft. The
Srilankan
tells him to continue. Bush finally reaches 400ft and Srilankan
tells
him to stop. But Bush doesn't find anything and is annoyed.

Bush asks the Srilankan "What did you want to prove?".

The Srilankan replies " Even 400 years back we had wireless".

மின்னஞ்சலில் கிடைத்தது.....

Print this item

  கண்காணிப்பு குழுவிற்கு புதிய தலைவர்
Posted by: Mathan - 02-21-2006, 05:43 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவராக சுவீடன் நாட்டு பிரஜை நியமனம்

<img src='http://img52.imageshack.us/img52/7050/ulfh23mi.jpg' border='0' alt='user posted image'>


இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவராக சுவீடன் நாட்டு இராணுவ பிரிகேடியர் ஒருவரை நோர்வே அரசாங்கம் இன்று நியமித்துள்ளது.

இலங்கை போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இரு தரப்பினரின் ஆலோசனையின் பின்னர் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் உல்வ் கென்றிக்சன், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தனது பதவியை பொறுப்பேற்பார்.

இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போர் நிறுத்தக் கண்காணிப்பாளரும், சமாதான முயற்சிகளுக்கான மத்தியஸ்தர்களும் ஒரே நாட்டவர்களாக இருக்கக் கூடாது என்று இலங்கையின் புதிய ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் அண்மையில் வலியுறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

BBC tamil

Print this item

  இளங் கலைஞன் &quot;நிரு&quot;
Posted by: இளைஞன் - 02-21-2006, 02:27 PM - Forum: கலைகள்/கலைஞர்கள் - Replies (20)

வணக்கம் அனைவருக்கும்...

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வரும் ஒரு இளம் இசைக் கலைஞன் தான் "நிரு". இவர் பாரிசில் பல இறுவட்டுக்களை வெளியிட்டிருக்கிறார். ஈழத்து கவிஞர்கள் எழுதிய பாடல் வரிகளை இந்தியத் தமிழ்ப் பாடகர்களையும், ஈழத்துப் பாடகர்களையும் கொண்டு பாடவைத்து இவர் வெளியிட்ட இறுவட்டுக்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளன.

அந்தவகையில் தென்னிந்திய திரையுலகில் கலாபக் காதலன் என்கிற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். நமது கலைஞர்கள் நம்மவராலேயே புறக்கணிக்கப்படுகிற மிகக் கவலையான நிகழ்வுகளை நாம் அன்றாடம் எதிர்கொள்கிறோம். எம்மவரின் திறமைக்குரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்பது கவலையான விடயம். எம்மவரே எம்மைக் கண்டுகொள்ளாத நிலையில் இன்னொரு இடத்தில் எமது கலைஞன் வரவேற்கப்படுகிறான் என்பது மகிழ்வுக்குரியதே. இது முற்றுமுழுதாக அந்தக் கலைஞனின் திறமைக்கு, அந்த ஈழத்து இளங்கலைஞனின் முயற்சிக்கு கிடைத்த பலனே. இந்திய சினிமா ஊடகம் எதனால் எமது கலைஞனை உள்வாங்கியுள்ளது என்பது வேறுவிடயம். அதுபற்றி இங்குவேண்டாம். ஆனாலும் கலைஞனுக்குரிய அங்கீகாரம் அங்கு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கதே.

அதனடிப்படையில் அந்தக் கலைஞன் அங்கு இசைத்துறையில் தனது முத்திரையை பதிக்கவும், ஈழத்தமிழ்க் கலைஞர்களுக்கு பெருமைசேர்க்கவும் வேண்டும் என நாமும் மனதாற வாழ்த்துகிறோம். அந்தக் கலைஞனின் வளர்ச்சிக்கு நாம் எம்மாலான ஆதரவை வழங்கவேண்டும். எப்படி? அந்தக் கலைஞன் இசையமைத்த பாடல்களை கேட்டு, அதற்கான எமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும். ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்து அந்த இளைஞன் மேலும் திறம்பட வளர்வதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும். நீங்கள் இங்கு யாழ்களத்தில் எழுதுகிற கருத்துக்கள் நிச்சயமாக அந்தக் கலைஞனை சென்றடையும். எனவே தயக்கமின்றி பாடல்களைக் கேட்டு இங்கு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நாம் கொடுக்கிற வரவேற்பும் அந்த இளங்கலைஞன் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து நிலைபெற உதவும் என்பதை மனதில்கொண்டு உங்கள் கருத்துக்கள இங்கே தெரிவியுங்கள்.

<b>கலாபக் காதலன்</b>
இங்கே அழுத்தி பாடல்களைக் கேளுங்கள்.

mp3 பாடல்கள் எங்கும் தரவிறக்கக் கிடைத்தால் அவற்றையும் இணையுங்கள்.

உங்கள் கருத்துக்களை எழுதுவீர்கள் தானே?

<b>நன்றி</b>

Print this item