Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 361 online users.
» 0 Member(s) | 358 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,221
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,225
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,595
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,278
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,593
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,022
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,412
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,108
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,977
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,236

 
  ஈழத்துக் கவிஞர் கி.பி.அரவிந்தன் நேர்காணல்!
Posted by: Rasikai - 02-22-2006, 07:11 PM - Forum: கலைகள்/கலைஞர்கள் - Replies (7)

<b>இலங்கையில் இன்னொரு போரை நாங்கள் விரும்புவில்லை
ஈழத்துக் கவிஞர் கி.பி.அரவிந்தன் நேர்காணல்</b>

"குழந்தை தோளில் சரிகின்றது
நெஞ்சுக்குள் ஏதோ குமைகின்றது
'நீங்கள் அகதியானது உங்களுக்குச் சரி
என்னை ஏன் அகதியாக்கி அலைச்சலாக்கி..'
மடிபற்றி எழுகின்றது கேள்வி"
'கனவின் மீதி' தொகுப்பில் கி.பி.அரவிந்தன்

'இனி ஒரு வைகறை', 'முகம் கொள்' என்கிற கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து 'கனவின் மீதி' மூலம் ஈழத்துக் கவிதையுலகில் தனியிடத்தை உருவாக்கிக் கொண்ட கி.பி. அரவிந்தனுக்குப் பல முகங்கள். பதினேழு வயதிலேயே வீட்டை விட்டு. போராட்டத்தில் இறங்கிய இவருடைய சொந்தப் பெயர் கிறிஸ்டோபர் ஃபிரான்ஸிஸ். இனப்பிரச்சினையினால் சொந்த நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து பதினைந்து ஆண்டுகளாக பாரீசில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

பல பத்திரிகைகளுடன் இணைந்து தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிற இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர ஃப்ரீலான்ஸ் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறவர். ஐரோப்பிய தமிழ்த் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிற 53 வயதான அரவிந்தன், பல வருட இடைவெளிக்குப் பிறகு சென்னைக்கு வந்திருந்தார். ஹோட்டல் அறை ஒன்றில் இந்த நேர்காணலுக்காகச் சந்தித்தபோது தயக்கங்கள் இல்லாமல் ரொம்ப காலமாகப் பழகிய நண்பரைப்போல பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். புலம்பெயர்வின் இடையறாத வலி தொற்றிய அவருடைய பேச்சு அவர் தங்கியிருந்த அறையைக் கதகதப்பு மிக்கதாக உணரச் செய்திருந்தது.



--------------------------------------------------------------------------------


இனி அவருடன் நிகழ்த்திய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:
<img src='http://img153.imageshack.us/img153/5424/tron0150bc.jpg' border='0' alt='user posted image'>



கி.பி. அ-ன்:
1953ஆம் வருடம் நான் பிறந்தது யாழ்ப்பாணத்தில். என் தாய் தந்தையரின் சொந்த ஊர் நெடுந்தீவு. என் பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் அதன்பின் தொடாந்தும் நான் படித்தது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில். எழுபதுகளுக்குப் பின்னால் தீவிரமான இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினேன். என் அப்பா அரசு ஊழியர். உணவுக் கட்டுப்பாட்டு திணைக்களத்தில் வேலை செய்தார். அம்மா மருத்துவ தாதியாக யாழ் மருத்துவமனையில் பணியாற்றினார். நாங்கள் ஏழு பேர். நான் மூத்த ஆள். எனக்குக் கீழ் ஆறு பேர்.

மணா:
1960களிலேயே இனப் பாகுபாட்டுப் பிரச்சினை தொடங்கிவிட்டதா?

கி.பி. அ-ன்:

அப்போது நான் சிறுவனாக இருந்தேன். 60களில் நடந்த முக்கியமான நிகழ்வு சாதி எதிர்ப்புப் போராட்டம். அது கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில்தான் நடந்தது. நான் சிறு பையன்களாக இருந்தோன். அதில் ஈடுபடவில்லை.

இலங்கையில் தமிழர்கள் மத்தியில் இறுக்கமான சாதி அமைப்பு இருந்தது. சாதிய ஒடுக்குமுறை நீண்டகாலமாக இருந்து வந்தது. 1965க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சியினால் சாதி எதிர்ப்பு ஓர் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டது. மிகப்பெரிய போராட்டமாக மாறி துப்பாக்கிச் சூடுவரை சென்றது. தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையை ஒழித்தல், சமபந்தி போஜனம் போன்றவை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன.


மணா:
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் எடுத்துக்கொண்ட விஷயத்தை அங்கே பொதுவுடைமை இயக்கம் செய்ததா?

கி.பி. அ-ன்:
ஆமாம். சாதிய அடக்குமுறையை முக்கியமான பிரச்சினையாக பொதுவுடைமை இயக்கம்தான் எடுத்துப் போராடியது. சாதி எதிர்ப்பால் சமூகத்தில் சின்னதொரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அதனால் சரிவு என்று சொல்ல முடியாது. சமூகக் குலுக்கம் என்று சொல்லலாம். சாதியப் படிநிலைகள் குலுங்கின. அப்போது ஏற்பட்ட சின்ன அதிர்வு, மனோ நிலைகளில் சின்னதொரு மாற்றத்தைக் கொடுத்தது. இந்தச் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உத்திகள், பயிற்சி முறைகள் பின்னாளில் ஈழப் போராட்டத்தில் உதவியாக இருந்தன. ஈழத்தின் ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சியில் இந்தச் சாதி எதிர்ப்புப் போராட்டம் முன்னோடியாக இருந்தது.

மணா:
இந்தப் போராட்டம் இலங்கையின் எந்தப் பகுதியை முன்னிறுத்தி நடந்தது.

கி.பி. அ-ன்:
சாதிய அடக்குமுறையின் தீவிரம் வெளிப்படையாக தெரிய வந்தது குடா நாட்டில்தான். இங்குதான் மக்கள் செறிவாக வாழ்ந்தார்கள். அதனால் சாதிய ரீதியான பிரச்சினை துலாம்பாரமாக தெரிய வந்தது. அதற்கான போராட்டம் கட்டாயத் தேவையாகவும் இருந்தது. அந்தப் போராளிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றிய அறிவுதான் பிறகு ஏற்பட்ட போராட்டத்திற்கு கைமாற்றப்பட்டது.

மணா:
தமிழகத்தில் 1960களில் மாணவர்கள் மத்தியில் இயல்பான மொழி உணர்வு, இன உணர்வு பரவலாக ஏற்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு அதுதான் பின்னணியாக அமைந்தது. அதுமாதிரியான ஓர் உணர்வு இலங்கையில் இருந்ததா?

கி.பி. அ-ன்:
1950, 60களில் தீவிரமான செயல்பாடு கொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. இலங்கை அளவில் அரசியல் ரீதியாக செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தார்கள். தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த தேசிய உணர்வு, தேசியம் பற்றியதான சிந்தனை தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்போது எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. அதனால்தான் அது மக்களிடம் சரிவை சந்தித்தது. மக்களின் உணர்வை அவர்கள் முழுமையாகப் புறக்கணித்தார்கள். இலங்கை என்கிற தேசிய அளவிலான பார்வையுடன் எதையும் பார்க்க வேண்டும் என்பதான உணர்வில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருந்தார்கள். ஆனால் இவர்கள் தொடக்க நிலையில் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று பேசியவர்கள்தான். பிறகு மாறிவிட்டார்கள்.

மணா:
அந்தக் காலகட்டத்தில் அரசியல் உணர்வென்பது தவிர்க்க முடியாத விஷயமாக மாணவர்களிடம் இருந்ததா?

கி.பி. அ-ன்:
பொதுவாக இலங்கைத் தமிழர்களிடம் தமிழரசுக் கட்சியின் செல்வாக்குதான் அதிகம் இருந்தது. அக்கட்சியின் கருத்தோட்டம், எண்ணப்போக்கு என்பது இங்கிருந்த (தமிழகம்) திராவிட இயக்கத்தின் மொழி பற்றியதான கருத்துக்கள் எல்லாம் கிட்டத்தட்ட இணைவாக்கம் கொண்டதாக இருந்தன.

தமிழ் உணர்ச்சியை ஊட்டி ஊட்டி, மேன்மைப்படுத்தி அதைத்தான் தமிழரசுக் அக்ட்சியினர் அரசியலாக்கினார்கள். ஆனால் அதற்கேற்ற வகையில் செயல்திட்டங்களோ, அதை வழிநடத்தும் முறைகளோ அவர்களிடம் சரியாக அமையவில்லை. இலங்கை அரசியலில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில்தான் அவர்களுக்குக் கவனம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு தமிழ்பேசும் மக்களுக்குட் தீர்வைப்பெற்றுத் தர முயற்சித்தாலும் தோல்விதான் ஏற்பட்டது.

1965இல் தமிழரசுக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் சேர்ந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கிறார்கள். அதில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர் அமைச்சராகிறார். ஆனால் பாராளுமன்றத்தில் அடையாள அட்டை மசோதா போன்று மிக மோசமான சட்டங்களைக் கொண்டு வருகிறபோது தமிழரசுக் கட்சிக்குள் இருந்த தீவிரமான கருத்துக் கொண்டவர்களுக்கு இடையில் பெரிய முரண்பாடு தோன்றியது. தேசிய ரீதியிலான தீவிர நிலை எட்டும் அதே வேளையில்தான், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முனைப்பாக முன்னெடுக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி.

1968 ஆம் ஆண்டு முக்கியமான காலகட்டம். மாணவர்கள் உலகில் எழுச்சிகளும், போராட்டங்களும் நிகழ்ந்தன. 65-70 காலகட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் வியட்நாம் போர், சேகுவாராவின் கொலை என உலகம் முழுவதும் வெவ்வேறான நிலைமை. 1970ல் இலங்கையில் புதிய ஆட்சி. ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியும் எல்எஸ்பியும் கம்யூனிஸ்ட் கட்சி எனச் சிறு சிறு கட்சிகள் சேர்ந்து ஆட்சிக்கு வருகிறார்கள்.

உடனடியாக அவர்கள் வந்து கல்வி பற்றியதான ஒரு கொள்கையை வெளியிடுகிறார்கள். அது தமிழ் மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம். தரப்படுத்துதல் என்ற முறையில் சொல்லப்பட்டது. இதை எதிர்த்து மாணவர்கள் அணிதிரண்டு வீதிக்கு வருகிறார்கள். அது கல்வி அடிப்பையில் கொண்டு வரப்படவில்லை. இன ரீதியான ஒடுக்குமுறை என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இன்றைக்கு முக்கியமாக இருக்கிறவர்களின் அரசியல் பயிற்சிக்கான தொடக்கநிலையாக அதைச் சொல்லலாம். 'நானும் மாணவர்களின் அந்தப் பேரணியில் கலந்து கொண்டேன்' என்று பலரும் சொல்லுமளவிற்கு அது ஒரு தொடக்கப்புள்ளியாக இருந்தது.

மணா:
உங்கள் குடும்ப அளவில் ஏதும் பாதிப்பு நிகழ்ந்ததா?

கி.பி. அ-ன்:
என் தந்தைக்கு பெரியார் கருத்துகளின் மீது ஈடுபாடு உண்டு. வீட்டில் நிறையப் புத்தகங்கள் வைத்திருந்தார். என்னுடைய சிறுவயதில் அவர் திராவிட கருத்துக் கொண்டவராக இருந்தார். ஆசைத்தம்பி, மு.கருணாநிதி, மதியழகன், சி.பி.சிற்றரசு, இப்படி பலரின் புத்தகங்கள் அவரிடம் இருந்தன. ஒரு பெட்டிக்குள் வைத்திருந்தார். பதினைந்தாவது வயதில் புத்தக வாசிப்புத் தொடங்கும்போது பெரியார் மீது எனக்கு விருப்பம் வந்தது. அன்றைக்கு பெரியாரின் சிந்தனைகளை சரியாகப் புரிந்துகொண்டிருப்பேனா என்று தெரியவில்லை. ஆனாலும் வீட்டிற்குள் ஒரு கலகக்காரன் மாதிரி மாறினேன். கிறிஸ்துமஸ¤க்கு எல்லோரும் புது உடுப்புப் போடுவார்கள். நான் போடமாட்டேன். இப்படி அந்த வயதுக்கேற்ற சின்னச்சின்ன கலகங்கள்.

அப்பா நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் எடுத்து வந்து வாசிப்பார். கல்கி, அகிலன் என அந்தக் காலத்து எழுத்தாளர்கள்ன் நாவல்களை வாசிப்பது பழக்கம். வீட்டில் எப்போதும் பேப்பர் வாங்குவார்கள். நெடுந்தீவில் என்னுடைய அம்மாவின் பெரிய அண்ணர் வீட்டில் தங்கிக்கொண்டு படித்தேன். அந்த ஊருக்கு வள்ளம்(படகு) வந்தால்தான் பேப்பர் வரும். அதை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அந்த பேப்பரை வாசித்தபிறகுதான் மற்ற வேலைகளைப் கவனிப்பார்கள்.

நான் மதத்தால் ஒரு கத்தோலிக்கன். கத்தோலிக்க மத வெளியீடுகள் நிறைய வந்தன. எப்படியோ பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் தொடர்ந்தது. அதேவேளையில் யாழ் மத்தியக் கல்லூரியில் இரண்டு பேராசிரியர்கள் முக்கியமானவர்கள். எனக்கு வரலாறு படிப்பித்தவர் தமிழ்நாட்டில் உள்ள பச்சையப்பன், கிறித்தவக் கல்லூரிகளில் படித்தவர். திராவிட இயக்கக் கொள்கைக்காரராக இருந்தார். அண்ணாவின் திராவிட நாடெல்லாம் படித்தவர். அவர் பிரெஞ்சுப் புரட்சி பற்றியெல்லாம் சொல்லித் தரும்போது வெகு ஆர்வத்துடன் சொல்வார். எங்களுக்கு நெப்போலியன் பற்றி நிறைய கற்பனைகள் வரும்.

யூசுப் மாஸ்டர் என்று ஒருவர். அவர் ஜனநாயகம், வாக்களிப்பது எல்லாம் பொய் என்பார். என்ன ஜனநாயகம் என்பார். நாங்கள் படிக்கும்போது இலங்கை கல்வி அமைச்சகம் 'சியவச' என்ற பரிசுத் திட்டத்தை அறிவிக்கிறது. இதை எல்லா மாணவர்களும் வாங்க வேண்டும் என்கிறார்கள். அது சிங்களத்தில் இருந்தது. தமிழர்கள் வாங்கக்கூடாது என்று புறக்கணித்தோம். கல்லூரித் தேர்வுகளை ஒரு மண்டபத்தில் எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு ஆள் வந்து ஒவ்வொரு டேபிளிலும் டிக்கெட் வைத்துவிட்டுப்போனார். "பரீட்சை எழுத மாட்டோம்; டிக்கெட் வாங்க மாட்டோம்" என்று மறுத்தோம். இப்படி எங்களை முடுக்கி விட்டது அந்த வாத்தியார்தான்.

நான் மாணவர் நிலையில் தமிழரசுக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தேன். அவர்கள் புரட்சிகரமாக எதாவது செய்வார்கள் என்று நம்பினேன். பகத்சிங்க் பற்றியெல்லாம் படித்திருக்கிறேன். ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்', போராட்டம் நாவல்களைப் படித்த அனுபவம். இதெல்லாம் சேர்ந்து எண்ணங்களில் மாற்றங்களைக் கொண்து வந்தன.

எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கிறது. அப்போது நாங்கள் அயர்லாந்துப் போராளி தான்பிரீன் பற்றிய புத்தகத்தை ரகசியமாக வைத்திருந்து வாசிப்போம். ஒவ்வொருவராக ரகசியமாகப் பரிமாறிக்கொள்வோம். 'எரிமலைத் தியாகிகள்' என்ற புத்தகத்தை அப்படித்தான் படித்தோம். எல்லாம் தனிச்சுற்றுகளாகச் சுற்றி வரும். கீழ் இயக்கம் ஒன்றைத் துவக்குவதற்கான மனோநிலை அப்போதே தொடங்கியது. இப்படி ஒரு சூழல் உருவாகத் தொடங்கியது.

1972-இல் இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குகிறார்கள். இதுவரை பிரிட்டிஷாரால் வரையப்பட்ட அரசியலமைப்பை இவர்கள் தங்களுக்கானதாகச் செய்யவேண்டும் என்று புதிய அரசு அறிவிக்கிறது. இந்தப் புதிய அரசியலமைப்பு எப்படி இருக்கப்போகிறது, அதில் இங்கே வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான நிலைமை என்ன, இவர்களுக்கான அதிகாரங்களை எப்படிப் பங்கிடப் போகிறார்கள்? என்பது போன்ற விவாதங்களை எல்லாக் கட்சியினரும் பேசத் தொடங்குகிறார்கள். இதை எதிர்கொள்வதற்காக ஒரே தலைமையாக ஐக்கிய முன்னணியாக இணைய வேண்டும் என்று கருத்தெல்லாம் தமிழ் பேசும் மக்களிடம் இருந்தது.

1972-ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்புச் சட்டம் வரையப்படுவதற்கு முன்பு தமிழர் கட்சிகளெல்லாம் சேர்ந்து ஒரு கோரிக்கையை வைக்கிறார்கள். அது நிராகரிக்கப்படுகிறது. 1972, மே 22ஆம் தேதி இலங்கை குடியரசாக பிரகடனம் செய்யப்படுகிறது. இலங்கை சிலோன் என்ற பெயரில்லாமல் ஸ்ரீலங்கா என்ற புதிய பெயர் அறிவிக்கப்படுகிறது.

அந்த நாளை தமிழர்களின் கரி நாள் (கறுப்பு நாள்) என்று தமிழர்களின் ஐக்கிய முன்னணி அறிவிக்கிறது. மக்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. கறுப்புக் கொடி ஏற்ரி துக்க நாளாக கொண்டாட வேண்டும் என்று 15ஆம் தேதியிலிருந்தே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. 'மாணவர்களே பள்ளிக்குச் செல்லாதீர்கள்! ஊழியர்களே அலுவலகங்களுக்குச் செல்லாதீர்கள்!' என்று ஒரு துண்டுப்பிரசுரத்தை ஐக்கிய முன்னணி வெளியிட்டது. நாங்கள் மாணவர்களாக இருந்தபோது அந்தப் பிரசுரத்தை விநியோகித்தோம். அப்போது போலீஸ் என்னையும் சேர்த்து மூன்று பேரைக் கைது செய்கிறது. அதற்குப் பிறகு தலைவர்கள் 'எங்களையும் கைது செய்யுங்கள்' என்றார்கள். அதெல்லாம் ஒரு துவக்கம்.

மணா:
'தமிழ்ப் பேரவை' என்ற அமைப்பைப் பிறகு ஆரம்பித்தீர்களா?

கி.பி.அ-ன்:
சிறையால் வந்ததும் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து 'தமிழ் இளைஞர் பேரவை' என்ற அமைப்பைத் தொடங்கினோம். அதன் தனி நடவடிக்கைகளாக உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் நடாத்தினோம். 1974ம் ஆண்டு நான்காவது தமிழாராச்சி மாநாடு நடக்கின்றது. அதையொட்டி படுகொலை நடக்கின்றது. இது ஐனவரியில். ஜுனில் சிவகுமாரன் இறக்கிறார். ஐனவரிக்கும் ஜுனிற்கும் இடையில் சிவகுமாரன் குழுவினராகிய நாங்கள் பல்வேறு வன்முறையை பாவித்தோம். அதில் தோல்விகள் கிடைத்தன.
ஆறேழு குற்றங்களுக்காக 1976ம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டேன். 77 வரைக்கும் ஒரு வருடம் சிறையில் இருந்தேன். பிறகு பெயிலில் வெளி வருகிறேன். அதேவருட பிற்பகுதியில் வழக்குகள் வரத்தொடங்குகின்றன. ஒவ்வொரு வழக்கிற்கும் பெயில் எடுக்க வேண்டும். இல்லையென்றால் உள்ளுக்குள் போக வேண்டும். வீட்டில் வசதியில்லை. பிரச்சனை. 1978-இல் பயங்கரவாத தடைச்சட்டம் வருகின்றது. பொலீசுக்கு அதிகாரம் கூடி முதற்தடவையாக தெருவில் இரண்டு இளைஞர்களை சுட்டுப் போடுகிறார்கள். அதுதான் முதல் சம்பவம். தொடர்ந்து வெகு வேகமாக நிகழ்ச்சிகள் நிகழத் தொடங்குகின்றன.

மணா:
அந்தக்காலகட்டத்தில உங்களுடைய செயல்பாடுகள் எப்படி இருந்தன?

கி.பி.அ-ன்:
ஈராஸ் அமைப்பில் இருந்தேன். 1978ஆம் ஆண்டு லெபனான் சென்றுவிட்டு சென்னைக்கு வந்தேன். இங்கு பத்திரிகை நடத்துவது, நண்பர்களை ஒருங்கிணைப்பது எனப் பல வேலைகள் செய்தேன். பத்தாண்டுகள் சென்னையில் இருந்தேன். அப்போது தமிழக - ஈழ நட்புறவுக் கழகத்தை நாங்கள் கட்டி வளர்த்திருக்கிறோம். தமிழக அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிநபர்கள் கொண்ட அமைப்பாக அதை வளர்த்தெடுத்தோம். சின்னச் சின்ன புத்தகங்கள் கொண்டு வந்தோம். லங்காராணி நாவலை வெளியிட்டோம். இப்படி பல்வேறு பட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தோம்.

மணா:
நீங்கள் படைப்பு ரீதியாக எந்தக் காலகட்டத்தில இருந்து இயங்க ஆரம்பித்தீர்கள்?

கி.பி.அ-ன்:
1972ல் சிறைக்கு சென்று வந்தபிறகு, வாசிப்பு அனுபவம் இலக்கிய ரீதியான ஆர்வத்தை ஏற்படுத்தியது. முதன்முறையாக ஒரு முக்கியமான நாடகத்தில் நடிக்கத் தொடங்கினேன். அதற்கு நாடகப்போடடியில் முதற்பரிசு கிடைத்தது. அந்த நாடகாசியரிடமிருந்துதான் எழுத்து கணையாழி தாமரை இதுபோன்ற சிறு சஞ்சிகைகளைப் பார்கிறேன். அதில் ஒருவகையான ஈடுபாடு வருகின்றது. ஜெயகாந்தனை தீவிரமாக வாசித்திருக்கிறேன். எஸ்.பொ.வை படிக்கத் தொடங்குகிறேன்.
இரண்டு ஆண்டுகள் (1974ஜுன் தொடங்கம் 1976ஜுன் வரை) தலைமறைவாக வாழ்ந்தபோதுதான் நான் முதன் முறையாக எழுதத் தொடங்கினேன். இரண்டு பெரிய நோட்டுப் புத்தகங்களில் கதை, கவிதைகள் என எழுதியிருந்தேன். நான் கைதானபோது தங்கியிருந்த வீட்டுக்காரர் அவற்றையெல்லாம் கொழுத்தி விட்டார். அதற்குப் பின் தலைமறைவு வாழக்கையில் எரிமலை என்று ஒரு அரசியல் பத்திரிகை நடத்தினோம். நான்கு இதழ்கள் மட்டும் கொண்டு வந்தோம். 'ஈராஸ்' அமைப்பிற்காக ஈழம், தர்க்கீகம், பொதுமை என்ற சில பத்திரிகைகள் வந்தன. நான் சென்னையில் இருந்தபோதுதான் கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.

மணா:
கவிதை எழுதத தொடங்கிய போது யாருடைய தாக்கம் உங்களிடம் இருந்தது?

கி.பி.அ-ன்:
அன்றைக்கு ஈழத்தில் எழுதிக் கொண்டிருந்த இளம் முன்னணிக் கவிஞர்களின் கவிதைகளில் ஈர்க்கப்ட்டேன். எங்களை உந்தித் தள்ளியதில் இந்தக் கவிதைகளுக்கு பெரும் பங்குண்டு. சமகாலத்தில் சேரன், ஜெயபாலன் போன்றவர்கள் கவிதை எழுதுகிறவர்களாக இருந்தார்கள். நாங்கள் வாசிப்பவர்களாக இருந்தோம். அலை, மல்லிகை, சமர் போன்ற பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. கவிதைகளில் என்னைப் பாதித்தவர்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. கல்லூரியில் எனக்கு தமிழ் இலக்கியப் பாடம் விருப்பமானதாக இருந்திருக்கின்றது. கவிதைகளில் அரசியல் கருத்தை வெளிப்படுத்த வேண்டுமென்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. புதுக்கவிதை எழுத இலகுவாக இருந்தது.
வானம்பாடிக் கவிஞர்களின் கவிதைகளும் என்னைப் பாதித்திருக்கலாம். அப்போது புரட்சி வெல்லட்டும், கிழக்கு வெளுக்கின்றது என்பது போன்ற கவிக்குரல்கள் எழுந்தன. மு.மேத்தா, அக்னி புத்திரன், சிற்பி, புவியரசு போன்றவர்களின் கவிதைகளை படித்திருக்கிறேன். அதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.

மணா:
ஈழத்துப் படைப்பாளிகளின் நேரடியான போராட்டக் களத்தைப் பார்த்தவர்கள். அப்படியான ஒரு நிர்ப்பந்தமான சூழல் அனுபவம் இங்குள்ளவர்களுக்குக் கிடையாது இல்லையா?

கி.பி.அ-ன்:
1978ஆம் ஆண்டில் நான் எழுதிய கவிதைகளில் ஐந்து கூட தேறாது. நாங்கள் வெளியிட்ட பத்திரிகைகளின் அட்டையில் கவிதை எழுதுவேன். அந்த அளவில்தான் இருந்தேன். அதற்குமேல் கவிதை எழுதியதில்லை. உண்மையில் என்னுடைய நல்ல கவிதைகளை எழுதத் தொடங்கியது 90களில்தான்.

சென்னையில் இருந்தவரைக்கும் கூட பெரிதாக கவிதை எழுத முயற்சித்ததில்லை. 1988-இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் வருகிறது. எல்லா இயக்கக்காரர்களும் விமானத்தில் திரும்பிச் சென்றுவிட்டார்கள். நான் மட்டும் ஒரு அகதியாக மண்டபம் முகாமுக்குச் சென்றுவிட்டேன். இராமேஸ்வரத்திலிருந்து அகதிக் கப்பலில் காங்கேசந்துறையில் போய் இறங்கிக் கொண்டேன். அகதியோடு அகதியாகப் போனேன். பிறகு எந்த இயக்கத்தோடும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுகள் நண்பர்கள் இயக்கத்திற்கு வாருங்கள் என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். நான் மறுத்துவிட்டேன். 1989-இல் இலங்கையில் எனக்குத் திருமணம் நடந்தது. அதற்குப்பிறகு சென்னைக்கு துணைவியுடன் ஒருதடவை வந்தேன். 1990ஆம் ஆண்டு பிரான்சுக்குச் சென்றேன்.
மணா:
ஏன் பிரான்சைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

கி.பி. அ-ன்:

பிரான்சுக்குப் போக வேண்டுமென்று நான் வரவில்லை. 90ஆம் ஆண்டு கடுமையான காலகட்டம். எங்கள் வீட்டை விட்டு வெளியேறு வேறெங்கேயோ சென்றுதான் தஞ்சம் புகுந்தோம். அந்த நேரத்தில் என் தங்கைக்குத் திருமணம் நிச்சயம் செய்திருந்தோம். அதனால் தங்கையை யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து வந்து கொழும்பில் விடவேண்டும். பயணம் செய்வது பெரும் கஷ்டம். தனியாக அனுப்ப இயலாது. நாந்தான் கூட்டிக்கொண்டு வந்தேன். கொழும்புக்கு வந்த பிறகு என் தம்பி, "நீ தங்கையை அழைத்துக் கொண்டு சிங்கப்பூருக்கு வந்துவிடு. நான் டிக்கெட் தருகிறேன். சிங்கப்பூரையும் பார்த்த மாதிரி இருக்கும்" என்று சொன்னான். சிங்கப்பூருக்குச் சென்றேன். "ஒரே சண்டையாக இருக்கிறது. நீ அங்கு போய் என்ன செய்யப்போகிறார்" என்று தம்பி கேட்டான். அரசியலிலேயே தொடர்ந்து ஈடுபட்டதால் புத்தகம், பேப்பர், பத்திரிகை இதுதான் எனக்குத் தெரியும். வேறு எந்த வேலையும் தெரியாது.

தொழிலும் தெரியாது. அங்கு போய் பத்திரிகையும் நடத்த முடியாது. என்ன செய்யப்போகிறேன் என்பது கேள்விக்குறியாகத்தான் இருந்தது. யாழ்ப்பாணத்தில் மனைவி டீச்சராக இருக்கிறாள். ஒருவரின் வருமானத்தை வைத்து பிழைக்கவும் முடியாது. "நாங்கள் இங்கேயே இருக்கிறோம்' என்று மனைவி சொல்லிவிட்டாள்.

"நீ தனியாக இருக்கிறாய். பாதுகாப்பில்லாத நிலைமை. அதெல்லாம் சரிப்பட்டு வராது. இலங்கை செல்ல வேண்டாம்" என்று சொன்னான் தம்பி. இரண்டாம் நாள் விமானத்தில் ஏற்றி விட்டான். சீனா போய் சுற்றிவந்து இறுதியில் ஜேர்மனியில் இறங்கினேன். சில விசாரணைகளுக்குப் பிறகு அங்குள்ள அகதி முகாமில் கொண்டு போய்விட்டார்கள்.

மணா:
அங்கு மொழிச் சிக்கல் இருக்குமே?

கி.பி. அ-ன்:
மொழிபெயர்ப்பாளர் ஒருவர் வருவார். இல்லையென்றால் நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கதைக்கலாம். பெரும்பாலும் ஜெர்மன் மொழியில்தான் பேசுவார்கள். யு.என்.ஓ. அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசுவார்கள். எனக்கு முகாமில் இருக்கப் பிடிக்கவில்லை. உடனே ஜேர்மனியில் இருந்த தம்பியிடம் "என்னை அழைத்துக் கொண்டு போய்விடு" என்று போன் பண்ணி சொன்னேன். நான்கு நாட்கள் முகாமில் இருந்தேன். அகதிகள் முகாமிலிருந்து வெள்யேறுவது மிகப்பெரிய கஷ்டம். கட்டுப்பாடுகள் அதிகம். ஏதோ முயற்சிகள் செய்து என்னை சில நண்பர்கள் காரில் அழைத்துக் கொண்டு சென்று இன்னொரு ஊரில் தங்க வைத்தார்கள். ஜெர்மனியிலிருந்து பிரான்ஸ¤க்குச் செல்வது களவுதான். கார் மூலம் பிரான்ஸ் சென்றேன். பிரான்சில் இறங்கியதும் ரொம்பக் கஷ்டம். என்ன வேலை செய்வது? ஒன்றும் விளங்கவில்லை. அங்குள்ள வாழ்க்கையும் போன இரண்டு நாட்களிலேயே புரிந்துகொண்டேன்.

மணா:
அந்த மக்களின் கலாசாரத்தோடு பொருந்திப் போக முடிந்ததா? அது உளவியல்ரீதியாக சிக்கலை ஏற்படுத்தியதா?

கி.பி. அ-ன்:
அந்த மண்ணில் இறங்கிய ஒரு நாளிலேயே உங்கள் பிரமிப்பெல்லாம் கொட்டிப் போகும். அப்போதே உணரத் தொடங்கி விடுவீர்கள். நான் எந்த இடத்தில் இருக்கிறேன்? எனது இடம் எது? நான் யார்? நம்மைச் சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் காட்டில் நிற்பதுபோல் தான் தோன்றும். வெளியே போக இயலாது. மற்றவர்களிடம் போய் கதைக்க இயலாது. சாமான்கள் வாங்க முடியாது. எனக்கு மொழி தெரியாது. மொழி தெரிந்த ஆளாகத் தேடித் திரிய வேண்டும். இதெல்லாம் புதிது புதிதான சிக்கல்களாகத்தான் தோற்றம் தரும்.

என் தங்கை வீட்டில் தங்கியிருந்தது கொஞ்சம் உதவியாக இருந்தது. 87-லேயே அவர்கள் வந்துவிட்டார்கள். வர்களுக்கு அங்குள்ள நடைமுறைகள் தெரியும். என் தங்கை குடும்பத்தினரும் நான்கு இளைஞர்களும் ஒரே வீட்டில் இருந்தார்கள். அப்படித்தான் அங்கு இருக்க முடியும். அதில் நானும் ஓர் ஆளாகப் போய் சேர்கிறேன். இதை விட மோசமான வாழ்க்கையும் அங்கு உண்டு. ஒரே அறையில் பதினைந்து பேர் தங்கியிருப்பார்கள். நீங்கள் நம்ப மாட்டீர்கள். 'டேர்ன்' வைத்துப் படுப்பார்கள். அப்படியான வாழ்க்கையெல்லாம் உண்டு. அதுவொரு பெரிய நெருக்கடி. அதை எப்படிச் சொல்வதென்றே புரியவில்லை. பாரீஸ் ஒரு நெருக்கடியான நகரம். இங்குள்ள சிற்றூழியர்களின் பணியைத்தான் நாங்கள் பிரான்ஸில் செய்கிறோம். கூட்டுவது, துடைப்பத் இப்படிப்பட்ட வேலைகள்தான் கிடைக்கும்.

'க்ளீனிங்' என்பது அங்கே பெரிய இண்டஸ்ட்ரி. அடுத்ததாக உணவகங்களில் வேலை. குசினிக்குள் கழுவுகிற வேலை. மற்றது ஒவ்வொரு வீட்டிற்கும் விளம்பர தாள்களை கொண்டு சேர்ப்பது. இந்தப் பணியை ஒரு கம்பனி ஏற்றிருக்கும். ஒரு ஏரியாவில் ஆயிரம் வீடுகளுக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஏழு மாடி, எட்டு மாடி ஏறி இறங்க வேண்டும். அடுத்ததாக கண்காட்சி மண்டபங்களில் வேலை. அங்கு வந்து நிகழ்ச்சி நடத்துகிறவர்களுக்கு ஏற்ற மாதிரி பொருட்களை, இயந்திரங்களை, துணிகளை மாற்றி அமைத்துத் தரவேண்டும். தொடர்ந்து வேலை இருந்துகொண்டே இருக்கும்.

நாங்கள் எவ்வகையான வேலைகள் செய்யக்கூடாது என்று நினைத்தோமோ அவ்வகையான வேலைகளைத்தான் செய்தோம். இது பிரான்ஸின் நிலைமை. தொடக்கக் காலத்தைவிட நிலைமை இப்போது கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பிரான்சிற்கு வந்து கால் நூற்றாண்டாகி விட்டது.

மணா:
நீங்கள் ஆரம்ப காலத்தில் என்ன வேலை செய்தீர்கள்?

கி.பி. அ-ன்:
கிளினீங் வேலைதான் செய்தேன். கார்பெட் சுத்தம் செய்ய வேண்டும். டாய்லெட் கழுவ வேண்டும். மேசை துடைப்பது, சிகரெட் ஆஸ்ட்ரே துடைக்க வேண்டும்.

காலையில் ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு முன்பு மூன்று மணி நேரத்திற்கு முன்பு அங்கு போய் வேலை செய்ய வேண்டும். அலுவலகம் முடிந்ததற்கு பின்பு இரவு ஏழு மணியிலிருந்து 10 மணி வரை சுத்தம் செய்யவேண்டும். அதிகாலை 5 மணிக்கு எழுந்து வெகு தூரம் பயணம் செய்ய வேண்டும். வீட்டுக்கு கிட்ட வேலை இருக்குமென்று சொல்ல இயலாது. குளிர்காலமென்றால் பனி கொட்டிக் கிடக்கும். ஒவ்வொர் நிறுவனத்திற்கும் நேரம் மாறுபடும். இந்த வகையான வேலையைத்தான் செய்தேன்.

இது ஒரு வகையான மனிதப் போர். எதார்த்த நிலைமையை நான் சொல்கிறேன். இதுதான் உண்மை. இதை மறைக்கத் தேவையில்லை. இன்றைக்கு அதை யாரும் சொல்லவும் மாட்டார்கள். நிறைய நிலைமை மாறியிருக்கிறது. இன்றைக்கு எங்களுடைய பெரும்பாலான பெண்கள் க்ளினீங் வேலையைத்தான் செய்கிறார்கள். இந்த வேலைகளை எப்போதும் மறைத்து வாழ்வதுதான் புலம்பெயர் வாழ்வின் அவலம் என்று சொல்லலாம்.

மணா:
இந்த வேலைக்குத் தகுந்த வருமானம் கிடைக்குமா?

கி.பி. அ-ன்:

அடிப்படைச் சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு 7 யூரோ. எட்டு மணி நேரம் வேலை செய்தால் 56யூரோ. அதை இந்தியப் பணத்தில் பெருக்கினீர்கள் என்ரால் இங்கே ஐம்பது ரூபாய் வாங்குவது மாதிரிதான். அதற்குள்தான் வீட்டு வாடகை, மின்சாரக்கட்டணம், உடை மற்ரும் பயணச் செலவுகள் எல்லாமும். இரண்டு வேலை செய்தால்தான் வசதியாக வாழலாம். இது ஒரு வகை வாழ்க்கை நிலை.

எங்களுடைய சமூகம் போரால் பாதிக்கப்பட்ட சமூகம். ஒவ்வொருவரும் ஐந்து பேரைச் சுமந்து ஆகவேண்டும். எங்களுடைய உழைப்பில் மிச்சம் பிடித்து பொருளாதாரம் சிதைக்கப்பட்ட ஒரு தேசத்திற்கு நாங்கள் பணம் அனுப்பியாக வேண்டும். இதற்காக நாங்கள் கடினமாக உழைத்துத்தான் ஆகவேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் எங்கள் போராட்டத்திற்கும் பங்களிப்புச் செய்பவர்களாகத்தான் இருக்கிறோம். இப்படியான வாழ்க்கை எங்களுக்கு இருக்கிறது. இலங்கையர்களை இங்கே பார்க்கும்போது உங்களுக்கு பகட்டுத்தான் தெரியும். மறுக்கவில்லை. அதற்குக் காரணம் நான் மூன்று வருடங்கள் உழைப்பேன். பகல் இரவென்று உழைத்துவிட்டு இரண்டு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு வங்கியில் கடன் வாங்கி இந்தியாவிற்கு வருவேன். அந்த இரண்டு மாதங்களில் இங்கே வாழ்கிற வாழ்க்கைதான் வாழ்க்கை.

ஆயிரம் இரண்டாயிரம் யூரோக்களை கொண்டு வந்து பெருக்கினால் ரூபாய் பல கட்டுகளாக இருக்கும். மீனைக் கொண்டு வா, தங்கத்தைக் கொண்டு வா, ஸாரியைக் கொண்டு வா, நண்பா வா, குடி எல்லாம் நடக்கும். இரண்டு மாதம் முடிந்ததும் கடன் கட்டவேண்டும். ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் பகட்டுதான். இங்கு வந்து நிற்கிற இரண்டு மாதம்தான் தான் ராஜா என்பதை நிரூபித்துக் கொள்கிறான்.

மணா:
இதுபோன்ற நெருக்கடியான வாழ்நிலையில் கவிதை எழுதுவதற்கான மனநிலை எப்படிக் கூடி வந்தது?


கி.பி. அ-ன்:
இதை என்னுடைய தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது. புலம்பெயர்வு நிகழ்ந்ததற்குப் பின்னால், ஒரு சமூகத்திற்கு தனது தாயகம், இழப்புகள் பற்றிய ஏக்கம் தானாகவே வந்து சேரும். அதிலும் பல அந்நியர்களுக்கு மத்தியில் இருக்கும்போது நான் யார்? என்ற முதலாவது கேள்வி எழும்.

ஒரு துருக்கி நிற்கிறான். ஒரு கறுப்பர், அராபியன், தென் அமெரிக்கன், வெள்ளையில் குறைந்த வெள்ளை, கூடிய வெள்ளை, மஞ்சள் வெள்ளை, சிவப்பு வெள்ளை எல்லாம் நிற்கிறார்கள். இப்போது நான் யார்? என்ற கேள்வி இயல்பிலேயே எழும். நீங்கள் நடமாடத் தொடங்கினால் உங்கள் நாடு என்ன? மொழி என்ன? உங்களுடைய பெரிய ஆட்களைச் சொல்லு? கேட்பார்கள். எனக்குத் தெரிந்திருக்காது.

இந்தச் சூழல் என்னைப்பற்றி அறிய நிர்பந்திக்கும் வாசிக்காதவன்கூட ஏதாவது வாசித்தாக வேண்டும். ஊரில் இருக்கும்போது வாசித்ததைவிட வெளியெ வந்த பிறகு வாசித்தது அதிகம். வாசிப்பை பழக்கப்படுத்திக் கொண்டவர்களின் விகிதம் அதிகம்.

Print this item

  மலர்படுக்கை நடுவே-!
Posted by: வர்ணன் - 02-22-2006, 07:08 PM - Forum: கவிதை/பாடல் - Replies (13)

<b>வாளெடுத்தவன் எலாம் வீரனென்றாவானா?
தூரிகை தூக்கியவர் அனைவரும் -ஓவியர் ஆவாரா?

பாரடா நண்பா - பகை -மெல்ல வெல்கிறது-!
நீ இரு - நானும் இருக்கிறேன் என்பதா வேண்டுமிப்போ?
நாம் இருக்கணும்- இதை நாவரழ சொல்லியும் -
கேட்பார் யாருமிலை - நீயாவது - கேளடா!

பச்சைக்கிளியின் சொண்டில் -பற்றி எரியும்
அமிலம்-ஊற்றுவார்- பாவமிது என்று நீ சொன்னால்
அந்த பகுதியையே இழுத்து மூடுவார்!
ஏனடா இப்பிடி-?

எலும்பும் தசையும் மட்டுமா-
மனிதன் என்றாகும்-? உணர்வென்ற ஒன்று வேண்டும்-!
நீ - உறைக்க சொல்லேண்டா - அவருக்கு!

பார் பார்- கருத்து விடுதலை என்று பேசாதிருந்து
கழுகுகள் - உன் தலையில் கூடு கட்டும்
காலம் வந்தாச்சு - சீ போடா- அப்போ-
எமக்காய் சிரித்துக்கொண்டே செத்தவர் கனவு
எல்லாம் இனி பொய்யா - மெய்யா?

உச்சந்தலையில் ஆணியடிக்கலாம் -தவறில்லை
துருப்பிடிக்காத ஆணியடி - கருத்து நாகரிகமாம் -அது!
கவனி - ஒன்று இரண்டாய் -உன் தாய் கூந்தலில்
தீ மூட்டியவர் எலாம் - இப்போ ஒரு குழு என்று -ஆயாச்சு!
நாகரிகமென்ற நாமம் கொண்டு- நாமே அவர்க்கு
பாய் விரித்து பந்தியும் வைச்சாச்சு-!

இனியென்ன - நடுவீட்டுக்குள் சாக்கடை வந்தாச்சு-!
பூக்க்கூடைமேல் - சிறுநீர்கழிப்பதை-பொறுப்பாளர்கள்
அனுமதிச்சாச்சு-அன்றிருந்து இன்றுவரை-
சொரணையற்றுபோனதனால்தானோ - என்னமோ
தமிழனுக்கு - சொந்த-நிலமென்பது -
எட்டா கனவாச்சு-ஆடு நல்லா ஆடு
தலைவா ஆட்டின் தலையென நல்லா- ஆட்டு-!

அழகிய மாமரத்தை அரித்து தொலைத்த-அணிஞ்சிலாய்
நீயும் -மாறு- கவலையில்லை-!

காலத்தின் நகர்வில் - துரோகத்தின் முகங்களில் இந்த களம்
பன்னீர் தெளித்தது - என்றொரு பெயர் வந்தால்-
கவலை இல்லை எனக்கு - நானும் இங்கிருந்திருந்தாலும்-
நான் - நானாகவே இருந்தேன் -!


உனக்கு எப்படியோ- எனக்கு
மலர்ப்படுக்கை நடுவேயொரு மலகுழியை
திறந்து வைப்பதில் உடன்பாடில்லை-!

(யாழ்களத்தின் -நிர்வாகம்- மீதான - சின்ன கோவம்- !எடுத்த எடுப்பில் எடுக்கும்- சில முடிவுகளால்-அதனால்- இது-)</b>

Print this item

  பேச்சு மாறும் இலங்கை அரசு
Posted by: mayooran - 02-22-2006, 06:34 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் நாள் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் இடையே கைச்சாத்திடப்பட யுத்த நிறுத்த ஒப்பந்தம் எமது அரசியல் யாப்பிற்கும் சட்டத்துக்கும் முரணானது. மேலும் சிறிலங்கா குடியரசின் இறையாண்மைக்கும் அதன் பிரதேச ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கிற ஒப்பந்தம் அது"


யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கான பேச்சுக்களுக்குச் செல்லுகிறோம் என்று அறிவித்துவிட்டு ஜெனீவாவுக்கு சிறிலங்கா அரசாங்கக் குழு சென்றது. சர்வதேச சமூகமும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்தும் பேச்சுக்கள் என்று வர்ணித்தன. இந்தப் பேச்சுக்களின் தொடக்கத்தில் உரையாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக் குழுவின் தலைவர் அன்ரன் பாலசிங்கமும் யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகளை சுட்டிக்காட்டி, எவை எவை நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற மக்களின் பிரச்சனைகளைத் தவிர்த்து வேறு எதுவித அரசியல் விமர்சனங்களையும் முன்வைக்காமல் முற்று முழுதாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் செயற்பாட்டை தனது உரை முழுமைக்கும் வலியுறுத்தினார். ஆனால்அறிமுகம் என்ற தலைப்பிட்டு நிமல் சிறிபால டி சில்வா ஆற்றிய உரையின் 4 ஆம் பந்தியில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றி நிமல சிறிபால டி சில்வா கூறியுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்களில் இது ஒரு முக்கியமான கட்டம். அர்த்தமுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையின் அனைத்து இனத்தவருக்குமான பயன் ஏற்படுத்துகிற அடிப்படையில் இப்பேச்சுக்கள் அமைய வேண்டும். கௌரவமான அமைதி என்ற கொள்கையை முன்வைத்து எமது அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறிலங்கா பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் இடையே கடந்த 2002 ஆம் ஆண்டு எமது அரசியல் யாப்புக்கும் சட்டத்துக்கும் முரணான யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இது சிறிலங்கா குடியரசின் இறையாண்மைக்கும், பிரதேச ஒற்றுமைக்கும் சேதம் ஏற்படுத்தக் கூடியது. தற்போதுள்ள பிரச்சனைக்கு பேச்சுக்களின் மூலம் தீர்வு காண இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒரு முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம். எமது அரச தலைவர் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் தொடர்பில் சிறிலங்காவின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கடந்த சில வாரங்களாகக் கூட்டி ஒரு இணக்கப்பாட்டை உருவாக்கியுள்ளோம். எமது வரலாற்றில் இத்தகைய இணக்கப்பாடு காணப்படுவது இதுவே முதன்முறையானது. நாங்கள் எமது மக்களின் முழுமையான ஆதரவுடன் இங்கே ஜெனீவாவுக்கு வந்துள்ளோம். புதிய அணுகுமுறை: இனப்பிரச்சனைக்கு கௌரவமான தீர்வு என்பதை முன்வைத்து 2005 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் எமது அரச தலைவராக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார். எமது அரச தலைவரின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் மகிந்த சிந்தனையானது, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுக்களை நடத்துவதை வலியுறுத்துகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடன் நேரடிப் பேச்சுக்களை நடத்தக் கூட அவர் தயாராக இருப்பதாக அறிவித்தார். ஆத்திரமூட்டும் செயற்பாடுகள் பல நிகழ்த்தப்பட்ட போதும் எமது அரச தலைவர் அமைதி முயற்சிகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, மிகுந்த பொறுமையைக் கடைபிடித்தார். இந்தப் பொறுமையானது எமது பலவீனம் அல்ல. அமைதியின் மீதான எமது ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாகவும். அத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் யுத்த நிறுத்தம் என்பது ஒட்டுமொத்தமாக அர்த்தமற்றதாகவே சீர்குலைந்துவிடும். இந்த நிலையில், உரிய தீர்வு காண்பதற்கு புதிய அணுகுமுறையை எமது அரச தலைவர் மேற்கொள்கிறார். எமது அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவும் கேட்கவும் புதியதாக சிந்திக்கவும் முற்படுகிறது. சனநாயகம் மற்றும் மனித உரிமைகள்: ஆசியாவின் நீண்டகால சனநாயகம் நிலைத்திருக்கும் நாடு எமது சிறிலங்கா. கடந்த 65 ஆண்டுகாலத்துக்கும் மேலாக எமது மக்கள் தமது பிரதிநிதிகளை அனைத்து இனக் குழுக்களுக்களிலிருந்தும் தெரிவு செய்து வருகின்றனர். சிங்களவர், தமிழர், முஸ்லிம், மலாய், பேர்கர் உள்ளிட்ட அனைத்து இன மக்களுக்கும் அனைத்துவிதமான உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கிண்றன. எந்த ஒரு இனத்தவரும் தமது பிரதிநிதியைத் தெரிவு செய்யும் உரிமையை எமது அரசாங்கம் மறுத்தது இல்லை. 2005 ஆம் ஆண்டு சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் நடைபெற்ற நாள் வருத்தத்திற்குரியது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்தனர். கடந்த ஏப்ரல் 2004 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் பல இடங்களில் தேர்தல் முறைகேடுகள் நடந்தன என்பதை சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பாளர்கள் உறுதிப்படுத்தினர். இவை அனைத்தும் சனநாயகத்தை நிராகரிக்கும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள். இந்த நிலையில் அர்த்தமுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தம் கடைபிடிக்கப்பட, வடக்குப் பிரதேச மக்கள் சனநாயகச் செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ள வேண்டும். இலங்கையின் வடபகுதியான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலைப் புலிகளினால் அனைத்து இன மக்களினது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கு - கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதும் அதை தங்களது போர் நடவடிக்கைகளுக்காவே பயன்படுத்தினர். அரசியல் பிரமுகர்களின் படுகொலைகளை நிகழ்த்தினர். யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள்: யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முன்னுரையிலேயே போர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றுதான் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் தங்களது இராணுவ பலத்தை அதிகரித்துக் கொள்ளவே இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய செயற்பாட்டை விடுதலைப் புலிகள் கைவிட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம், கண்காணிப்புக் குழு, சர்வதேச சமூகம் வலியுறுத்திய போதும் அதை அவர்கள் நிராகரித்தனர். இதனால் பாரிய அளவிலான யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நிகழ்த்தப்பட்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் நிலைக்கு வந்தது. கடந்த மாதம் வரை விடுதலைப் புலிகளினால் மொத்தம் 3,519 யுத்த நிறுத்த மீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தால் 163 மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. ஆக 96 விழுக்காடு ஒப்பந்த மீறல்களை விடுதலைப் புலிகளே மேற்கொண்டுள்ளனர். படுகொலைகள், சிறார் படை சேர்ப்பு, கடத்தல்கள், இளைஞர்களைக் கடத்துதல், தற்கொலைத் தாக்குதல்கள், படையினரை படுகொலை செய்தல், பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் பணியாளர்களைச் சித்திரவதை செய்தல் மற்றும் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் என்கிற வகையில் விடுதலைப் புலிகளின் யுத்த நிறுத்த மீறல்கள் உள்ளன. இந்தச் செயற்பாடுகளினால் யுத்த நிறுத்தம் ஒப்பந்தம் சீர்குலைந்து, வடக்கு - கிழக்கில் இயல்பு நிலைமை திரும்புவதில் தடை ஏற்பட்டது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட லக்ஸ்மன் கதிர்காமருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம். இந்தச் சூழலில் முஸ்லிம் சமூகத்தினர் பற்றியும் நாம் சில கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறோம். விடுதலைப் புலிகளால் வடபகுதியிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தமது வீடுகளுக்கு மீள திரும்ப இந்த ஒப்பந்தம் வகை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். கிழக்குப் பிரதேசத்தில் அவர்களது பாதுகாப்பும் பாரிய ஆபத்தில் உள்ளது. ஆகையால் இந்தப் பேச்சுக்களில் முஸ்லிம்களின் பிரச்சனைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆயுதப் போராட்டத்தால் சிறார் பாதிப்பு: விடுதலைப் புலிகளின் படையணியில் 5,368 சிறார்கள் இருப்பதாக யுனிசெஃப் அறிக்கை தெரிவிக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது முதல் சனவரி 30 ஆம் நாள் வரை சிறார் படை தொடர்பிலான 2,011 யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த மீறல்களில் இது 55 விழுக்காடாகும், இது குறித்து அனைத்து சர்வதேச சமூகமும் கவலை தெரிவித்துள்ளது. சிறார் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபரைக் கைது செய்ய காவல்துறையினரை விடுதலைப் புலிகள் அண்மையில் கைது செய்தனர். சட்டம் ஒழுங்கு: 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்னர் பாரிய அளவிலான படுகொலைகள் நடந்தன. ஒப்பந்தத்தின் வரையறைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பாரிய அதிருப்தி கொள்கிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க எமது அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பாதாள உலகக் குழுக்கள், ஆயுதக் குழுக்கள், போதைப் பொருள் கடத்தும் குழுவினரை ஒடுக்குவதற்கு பாரிய நடவடிக்கைகளை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. திருகோணமலையில் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமை, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தப்பட்டமை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை போன்ற அனைத்து குற்றச் செயல்களிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன் நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொருளாதார அபிவிருத்தி: சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற உடன் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிவித்தார். போரினாலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பகுதியில் பொருளாதாரா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. மகிந்த சிந்தனை மூலம் வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு ஏராளமான பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றை மகிந்த ராஜபக்ச தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம். 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் வடக்கு - கிழக்கு மக்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகினர். ஆழிப்பேரலை மீளமைப்புக்காக ஏலவே பல திட்டங்களை நாம் செயற்படுத்தி வருகிறோம். யாழ்ப்பாணத்தில் விவசாயிகளுக்கான சலுகைகளை அறிவித்துள்ளோம். அர்த்தமுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முன்னெடுப்பதின் மூலமே வடக்கு - கிழக்கின் பொருளாதார அபிவிருத்தியை நாம் மேற்கொள்ள முடியும். இறுதியுரை: இன்றைய பேச்சுக்கள் ஒரு புதிய தொடக்கம். இந்தப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு இலக்குகளை அடையும் என்று நம்பிக்கை கொள்கிறோம். வன்முறையற்ற பாதையில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் போர் நடவடிக்கைகள் தவிர்த்த நிகழ்ச்சித் திட்டத்தை விடுதலைப் புலிகள் முன்னெடுக்க வேண்டும் என்றார் நிமல சிறிபால டி சில்வா.

Print this item

  காயம்
Posted by: Thulasi_ca - 02-22-2006, 02:29 PM - Forum: கவிதை/பாடல் - Replies (4)

<img src='http://img104.imageshack.us/img104/1209/kajam7aa.gif' border='0' alt='user posted image'>

Print this item

  புலம் என்பது என்ன.?
Posted by: அகிலன் - 02-22-2006, 01:35 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (6)

புலம் எண்றால் வயல், இடம், திக்கு, அறிவு, துப்பு, நூல் , வேதம், உணர்வு , எண்று பொறுள்படுக்கிறது. ஆனால் இங்கு புலம் என்கிண்ற பகுதியில் அவுஸ்றேலியா, இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி , சுவிசிலாந்து என்கின்ற பொருள்படும் வகையில் பதிவுகள் உள்ளனவே ஏன்.?

Print this item

  இவை யாவும் எனக்கு மட்டுமா?
Posted by: சந்தியா - 02-22-2006, 12:24 PM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

ஓரு தடவை உன்னைப் பார்த்தேன் -ஆனால்
இப்போழுது உன்னைப் பார்த்துக் கொண்டே
இருக்கத் தோன்றுகிறது!
இது நட்பா? காதலா?
இல்லை என் சொந்தமா? - ஆனால்
இப்போழுது என் இதயம் மட்டு;ம் உன்னிடம்


என் மனதுக்குள்ளே புகந்தவனே நீ யார்? - ஏன்
எனது தூக்கத்தை கலைக்கிறாய்?
எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே!
உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ
வரும் வரை பாதுகாப்பேன்!

உன்னுடன் இருக்கும் பொழுது
என் இதயம் எதுவும் சொல்லவில்லை
உன்னைவிட்டுப் பிரிந்தவுடன்
என்னிடம் ஏதேதோ சொல்கிறதே!

இவை யாவும் எனக்கு மட்டுமா?
இல்லை உனக்கும் தான்


பிரியா


இவருடைய முதல் கவி இதுவென நினைக்கின்றேன்

Print this item

  நேசிக்கப் பழகு
Posted by: சந்தியா - 02-22-2006, 11:47 AM - Forum: கவிதை/பாடல் - Replies (9)

முள் தீண்டுகிறது
ஏன்பதற்காக
றோஜா மலரை வெறுக்கலாமா?
வேள்ளம் வருகிறது
என்பதற்காக
மழையை வெறுக்கலாமா?
சோகத்தின் பக்கத்தில்
சொர்க்கம் இருப்பதையும் நீ
சுகத்தின் பக்கத்தில்
துக்கம் இருப்பதையும் நீ
அறிந்து கொள்!
சில சோகங்களை
நேசிக்கப் பழகு
சில சோகங்களை
வாசிக்கப் பழகு
சோகங்கள் - உன்னை
சேதுக்கும் உளி - நீ
சிதையாதே!


து. செல்வக்குமார்


என்னை மிகவும் கவர்ந்த கவி

Print this item

  'கோழி கடத்தல்&quot;: சிறிலங்காவின் புதிய கண்டுபிடிப்பு
Posted by: நர்மதா - 02-22-2006, 11:08 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

'கோழி கடத்தல்": சிறிலங்காவின் புதிய கண்டுபிடிப்பு
-அருஸ் (வேல்ஸ்)-

பொதுவாக இலங்கைத்தீவில் என்ன கோளாறு வந்தாலும் அதற்குக் காரணம் தமிழர்களே என கண்ணை மூடிக்கொண்டு கூறும் வழக்கம் சிங்களவர்களிடம் உண்டு. இது அவர்களுக்கு பரம்பரையினு}டாகக் கடத்தப்பட்ட வியாதி. அரசியல்வாதிகளிலிருந்து பத்திரிகையாளர்கள் வரை எவருமே இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த மாற்ற முடியாத புற்றுநோயின் ஒரு வெளிப்பாடே இந்தியாவிலிருந்து படகுகளில் கடத்திக் கொண்டு வரப்படும் கோழிகள் மூலம் இலங்கையில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பறவைக்காய்ச்சல் நோய் தொற்றக்கூடிய அபாயம் இருப்பதாக வெளிவந்துள்ள கூற்று அமைந்துள்ளது. இது தொடர்பான செய்தியொன்றினை ரொய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்திணைக்களத்தின் பணிப்பாளர் அமரசேகராவே இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது பேட்டியில் 'இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இடம்பெயரும் அல்லது கடத்தப்படும் பறவைகள் முதலில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கே வந்து சேர்கின்றன. ஆனால் அப்பகுதிகளில் நாம் மிருக வைத்தியங்களை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை இருக்கிறது. இப்போதுள்ள நிலைமையின் படி பறைவைக்காய்ச்சல் நோய் இலங்கையிலும் தொற்றுவதற்கான சாத்தியங்களே கூடுதலாக இருக்கின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக தமிழர்கள் தமது பிள்ளைகளின் ஆரம்பக்கல்வியின் போது 'பஞ்ச தந்திரக்கதைகள்" போன்றவற்றையே கற்பிப்பதுண்டு. மூளை விருத்தியைக்கருத்திற்கொண்டே இவ்வாறான கதைகளைச் சொல்வதுண்டு. ஆனால் 'மாதன மூத்தா" போன்ற கதைகளையே பெரும்பாலும் சிங்களக் குழந்;தைகளுக்கு சுவையுடன் சொல்லிக் கொடுப்பதுண்டு. இவற்றின் வெளிப்பாடே பணிப்பாளர் அமரசேகராவின் கருத்து என்றெண்ணி இதனை புறந்தள்ளி விடவேண்டியது தான்.

இந்தியா - தமிழர்கள் தொடர்பாக இப்போது தான் சிங்களவர்கள் 'அதி புத்திசாலித்தனமான கருத்துக்களை வெளியிடுகின்றார்களென்றில்லை. 1970 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணிக் கட்சியில் இருந்தபோது கடுமையான உணவுத்தட்டுப்பாடு நிலவியது. மாவட்டத்திற்கு மாவட்டம் குறிப்பிட்ட அளவுக்குமேல் அரிசி கொண்டுபோக அனுமதியில்லை. பாணுக்குக் கூட இரவிரவாக வரிசையில் நின்றே ஒன்றோ இரண்டோ இறாத்தல் பாண் பெறமுடியும். அப்போது கிளிநொச்சி;த் தொகுதி யாழ். மாவட்டத்தினுள் அடங்கியிருந்தது. (இப்போதும் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்குள் தான்) மாவட்டத்திற்கு மாவட்டம் அரிசி கொண்டுபோகத்தானே தடை - ஏன் ஒரே மாவட்டத்தினுள் இருக்கும் கிளிநொச்சியிலிருந்து மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கு அரிசியைக் கொண்டு செல்ல தடை விதிக்கிறீர்கள் என்று அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. ஒரு சமயம் அப்போதைய விவசாய அமைச்சரான ஹெக்டர் ஹொப்பேகடுவ ஒரு து}தனமான பதிலைச் சொன்னார். 'வல்வெட்டித்துறையிலிருந்து இந்தியாவுக்கு அரிசி கடத்தப்படுகிறது. அது தான் நாட்டில் நிலவும் அரிசித்தட்டுப்பாட்டுக்குக் காரணம்." இந்தப் 'புத்திசாலி" தான் பின்னர் 1982 இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.

இனவாதம் என்ற கண்ணாடியைச் சிங்களவர்கள் போட்டுக்கொண்டிருப்பதால் தான் அவர்களால் எந்தப்பிரச்சனையையும் சரியாக விளங்கிக் கொள்ள முடியாது என்பதற்கு ஹெக்டர் ஹொப்பேகடுவவின் கூற்றுக்கும் அமரசேகராவின் கூற்றுக்கும் இடையில் ஆயிரம் உதாரணங்களைக் கூறமுடியும்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இந்தியாவிலிருந்து கோழிகளைக் கொண்டு வருவதைக் கண்டுபிடித்த அமரசேகராவின் கண்ணாடி அவரது கூற்றில் உள்ள இன்னொரு விடயத்தைப் பற்றி ஏன் அலட்டிக்கொள்ளவில்லை.

'அப்பகுதிகளில் (விடுதலைப் புலிகளின் பகுதிகளில்) நாம் மிருக வைத்தியங்களை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை இருக்கிறது." என்ற அவரது கூற்று எதைக்குறிக்கிறது. மிருகங்களிலும் தமிழ் மிருகம், சிங்கள மிருகம் என்றிருக்கிறதா? இப்பகுதியில் மிருக வைத்தியங்களை மேற்கொள்ள முடியுமாயிருக்கின்றது. என்றால் அதற்கான தவறுக்கு அவரும் அவர் சார்ந்த சிங்கள அரசும் தானே காரணம்? தமது பகுதியில் மிருக வைத்தியம் மேற்கொள்ள அரச வைத்தியர்களுக்குத் தடை என்று விடுதலைப் புலிகள் சொன்னதாக எந்தச் செய்தியுமே வெளிவரவில்லையே?

முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான யாழ். மாவட்டத்தின் கரவெட்டிப்பகுதியில் ஆளற்ற வேவு விமானமொன்று வீழ்ந்ததற்கு நோர்வே புலிகளுக்கு வழங்கிய வானொலிச் சாதனமே காரணம் என்று அந்தச் சாதனத்தாலேயே வீழ்த்தினர் என்று ஒரு புத்திசாலித்தனமான ஜே.வி.பி உறுப்பினர் கண்டுபிடித்தமை பற்றி ஜே.வி.பி இரண்டு தடவையும் புரட்சி (கிளர்ச்சி) செய்து இரண்டு தடவையும் தோற்றது. ஏன் என்பது இப்போது தான் புரிகிறது. என்று ஒரு தமிழ்ப்பத்திரிகை கிண்டல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல முன்னொரு தடவை இலங்கையில் புகைப்பிடிப்போர் வீதம் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகம் என ஒரு அதிகாரி கண்டுபிடித்ததும் நினைவு கூரத்தக்கது.

தென்னிலங்கைப் பத்திரிகைகளும் தமது பங்குக்கு அடிக்கடி ஏதாவது புரளியைக் கிளப்பி பின்பு தாமே அதை நம்பி விடுவதுமுண்டு.

ஆக தாங்கள் செய்யத் தவறிய ஒரு விடயம் தொடர்பான குற்றத்தையும் சிங்களவர் தமிழர்மீதே (குறிப்பாக புலிகள் மீது) போடும் முயற்சி இது.

எந்த மருந்துத் தடை இருந்த போதும் தமது மக்களின் சுகாதாரம் தொடர்பான விடயங்கள், சூழல் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் விடுதலைப் புலிகள் எவ்வளவு கரிசனையாகவுள்ளனர் என்பதை வெளியுலகம் அறிந்த ஒன்று.

சிங்களப் பகுதிகளில் எந்தத் திட்டமும் இல்லாமலே வனவளம் அழிக்கப்படுகின்றது. ஜெயசிக்குறு நடவடிக்கை இடம்பெற்ற காலத்தில் வன்னியிலும் பெருமளவிலான மரங்களை வெட்டி (குறிப்பாக தேக்கு) சிங்கள இராணுவ அதிகாரிகள் பதவிநிலைக்கேற்ப இலட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் மாறியதும் இரகசியமான விடயமல்ல.

தமிழீழ வனவளப்பிரிவு, தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் என்பன வனவளத்தைப் பேண மேற்கொள்ளும் முயற்சிகளில் எத்தனை வீதம் சிங்கள அரசினால் மேற்கொள்ளப்படுகின்றது என்பதைக் கணக்கிட்டால் சுற்றுச்சூழல் தொடர்பாக விடுதலைப் புலிகள் எவ்வளவு கரிசனையுடன் உள்ளனர் என்பது புரியும்.

மேலும் டெங்கு நோய் பற்றிய பீதி தென்னிலங்கையை உலுப்பிய போது அவ்வளவு மருந்துத் தடைகளுக்கும் மத்தியில் தமது பகுதிக்குள் அதை நெருங்க முடியவில்லை.. புலிகளால் அவ்வளவு தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார விழிப்புட்டல், நோய்த்தடுப்பு தொடர்பில்; சிறிலங்கா அரசைவிட விடுதலைப் புலிகள்; எந்தளவிற்கு அக்கறையாக இருக்கின்றனர் என்பது திரு.அமரசேகராவுக்குத் தெரியாவிட்டாலும் அனேகருக்கு நன்கு தெரியும்.

புலிகளின் பகுதிக்குள் இந்தியாவில் இருந்து கோழி கடத்தி வரப்படுகின்றது என்ற கூற்று நகைப்புக்கிடமானது. இது திரு அமரசேகராவிற்குப் புலிகளைப் பற்றியும்; தெரியாது, இலாப நட்ட கணக்கும்; பார்க்கத் தெரியாது என்பதையே வெளிப்படுத்துகின்றது.

சிங்களவர் ஒருவர் தற்செயலாகத் சறுக்கி வீழ்ந்தாலும் அதற்கும் தமிழரே காரணம் எனக் கூறுமளவிற்கு சிறிலங்காவில் இனவாதம் கோலோச்சுகிறது.

தமிழ் நாதம்

Print this item

  ஜெனீவாவில் பேச்சுக்கள்
Posted by: நர்மதா - 02-22-2006, 10:41 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (33)

ஜெனீவாவில் பேச்சுக்கள்- கிழக்கில் தொடரும் தாக்குதல்: ஒரு துணைப்படை வீரர் வீரச்சாவு!

மட்டக்களப்பு கிரானில் சிறிலங்காப் படையினரும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுவினரும் இணைந்து நடத்திய பதுங்கித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் துணைப் படைவீரர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.


கிரான் சிறிலங்கா படைமுகாமிலிருந்து வந்த சிலங்கா படையினர் இன்று புதன்கிழமை காலை 10.15 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய நாராயணபிள்ளை சாந்தகுமார் என்ற துணைப் படைவீரரே வீரச்சாவடைந்தவராவார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் போர் நிறுத்த உடன்பாடு அமுலாக்கம் பற்றிய பேச்சு இன்று ஆரம்பமாவதற்கு 3.30 மணித்தியாலயங்களுக்கு முன்னர் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Puthinam.com

Print this item

  &quot;சைக்கோ' கணவன்
Posted by: Shankarlaal - 02-22-2006, 09:45 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (7)

மனைவியை பேனாவால் குத்தி காயப்படுத்திய "சைக்கோ' கணவன்

<img src='http://www.dinamalar.com/2006feb22/photos/tn31.jpg' border='0' alt='user posted image'>

சென்னை: மனைவியை நிர்வாணப்படுத்தி பேனாவால் குத்தி காயப்படுத்திய "சைக்கோ' கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் கவிதா(24). இவருக்கும் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்த ஜெயச்சந்திரன்(28) என்பவருக்கும் கடந்த 2004ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 10வது நாளில் இருந்தே நகை, பணம் கேட்டு கவிதாவை அடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் கர்ப்பமான கவிதா திருவண்ணாமலையில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றார். பின்னர் கைக்குழந்தையுடன் சென்னை வந்தார். வாரத்தில் சில நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வந்து சென்ற ஜெயச்சந்திரன், "நீ அழகாக இல்லை. அழகான வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்று கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி "இரண்டு மூன்று நாட்களுக்கு தங்கும் வகையில் துணிகளை எடுத்துக் கொண்டு என்னுடன் வா' என்று கூறியுள்ளார். மயிலாப்பூரில் ஜெயச்சந்திரனுடன் வேலை பார்க்கும் காயத்ரி(34) என்ற பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஜெயச்சந்திரன், கவிதாவை தனி அறையில் அடைத்து வைத்தார்.


குழந்தையை தனி அறையில் வைத்து பூட்டி விட்டு, கவிதாவை நிர்வாணப்படுத்தி பணம், நகை கேட்டு கடுமையாக தாக்கியுள்ளார். அவரது உடல் உறுப்புகளை பேனாவைக் கொண்டு குத்தி சித்ரவதை செய்துள்ளார். சமையலறையில் இருக்கும் இடுக்கியை வைத்து உதட்டை பிடித்து இழுத்து காயப்படுத்தினார். இந்த சித்ரவதையின் போது அலறல் சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க கவிதாவின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார். இத்தனை கொடுமைகளையும் காயத்ரி வேடிக்கை பார்த்துள்ளார். சித்ரவதையை அனுபவித்த கவிதா அங்கிருந்து தப்பித்து எழும்பூரில் உள்ள உறவினர் வீட்டில் குழந்தையுடன் தஞ்சம் புகுந்தார். "சைக்கோ' கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் ஆர்.நடராஜிடம் நேற்று புகார் கொடுத்தார்.

http://www.dinamalar.com/

Print this item