| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 232 online users. » 0 Member(s) | 229 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,226
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,595
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,279
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,594
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,024
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,413
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,110
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,014
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,236
|
|
|
| ரேணுகா |
|
Posted by: renuka - 02-21-2006, 02:18 PM - Forum: அறிமுகம்
- Replies (63)
|
 |
Žì¸õ ¿¡ý §Èϸ¡
[size=7]தனி தலைப்பாக பிரித்துள்ளேன் - மதன்
|
|
|
| குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்? |
|
Posted by: Shankarlaal - 02-21-2006, 10:05 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (3)
|
 |
குக்கரில் பொங்காத பால்
குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்? வில்லாபுரம், கருணாகரன், மதுரை.
பால் குக்கரில் பால் நேரடியாகச் சூடுபடுத்தப்படுவதில்லை வெளி அறையிலுள்ள தண்ணீர் கொதித்து ஆவியாகி கிடைக்கும் வெப்பத்தால் சூடுபடுத்தப்படுகிறது. பால் நாலாபக்கமும் சமச்சீராக சூடாகிறது. இதனால் பாலானது கீழே மிகுந்த சூடு அடைந்து கொதித்து மேலேழுவதில்லை.
சாதாரணமாக பாத்திரங்களில் பாலை சூடு படுத்தும்போது பாலின் கீழ்ப்பகுதி மிகுந்த சூடாகவும், மேல்புறம் சற்றே குளிர்ந்தும் இருப்பதால் "கன்வெக்ஷன்' எனப்படும் இயல்பான சுழற்சியால் கீழ்ப்பால் மேலே எழும்ப முயலுகிறது. பாலில் உள்ள கொழுப்பு, கொதிப்பினால் ஏற்படும் நீராவிக் குமிழிகளை நீண்ட நேரம் சிறைப்படுத்தி வைத்திருந்து ஒரு நிலைக்குமேல் காப்பாற்ற முடியாமல் கைவிடும்போது நுரைபோல் பொங்கி வெளிப்பட்டுவிடுகிறது.
பால் குக்கரில் அப்படி கன்வெக்ஷன் சுழற்சி நடைபெறு வதில்லை அதுதான் காரணம்.
http://www.dinamalar.com/
|
|
|
| விடுதலைப்புலிகள் என்னை கொன்று விடுவார்கள் |
|
Posted by: Shankarlaal - 02-21-2006, 09:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>விடுதலைப்புலிகள் என்னை கொன்று விடுவார்கள்: கருணா அலறல் </b>
கொழும்பு, பிப். 21-
விடுதலைப்புலிகள் இயக் கத்தில் தளபதியாக இருந்து வந்த கருணா தனியாக பிரிந்து புதிய அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார். இதை தொடர்ந்து இரு அமைப்புகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
தற்போது கருணா இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் இ-மெயில் மூலம் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
விடுதலைப்புலிகளிடம் இருந்து அனைத்து ஆயுதங்களையும் பறிக்க வேண்டும். சர்வதேச கண்காணிப்புடன் இதை செயல்படுத்தலாம். எங்கள் அமைப்பு மட்டும் அல்லாமல் மற்ற அமைப்புகளிடம் இருந்தும் ஆயுதங்களை பறிக்கலாம்.
விடுதலைப்புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பறிக்காவிட்டால் அவர்கள் என்னை கொன்று விடுவார்கள். அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிக்காதது விடுதலைப்புலிகளுக்கு என்னை கொல்ல சட்டப்பூர்வ அனுமதி அளிப்பது போல உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைதி ஏற்படுத்த இலங்கை அரசின் துணை ராணுவ படையிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க வேண்டும் என்று ஏற்கனவே விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதற்கு பதிலடியாக கருணா இந்த தகவலை வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே ஜெனீவாவில் விடுதலைப்புலிகள்-இலங்கை அரசு பிரதிநிதிகள் இடையே நாளையும் நாளை மறுநாளும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்காக இருதரப்பு பிரதிநிதிகளும் ஜெனீவாவில் உள்ளனர்.
http://www.maalaimalar.com/
<b>EXCLUSIVE - Renegade S.Lanka rebels won't disarm yet</b>
Tue Feb 21, 2006 7:28 AM IST
By Simon Gardner
COLOMBO (Reuters) - A breakaway Sri Lankan rebel leader, whose feuding with the Tamil Tigers is threatening a fragile ceasefire and is central to peace talks this week, said on Monday his forces would only disarm if the main group does.
President Mahinda Rajapakse vowed last week to rein in armed groups the Liberation Tigers of Tamil Eelam (LTTE) say are attacking them, but V. Muralitharan, alias Col. Karuna, who split with the rebels in 2004, told Reuters his group would resume attacks if provoked.
"If Sri Lanka forces disarm all the armed groups and us ... it will only give legitimacy for the LTTE to extend its writ to kill us," former Tiger commander Karuna said in an e-mail interview confirmed via a personal telephone conversation.
"Any hand over of arms must be part of (a) conflict resolution process at a stage when normalcy and trust is established," Karuna added.
He made the coments just two days before the government and the Tigers are due to meet in Switzerland for talks widely seen as a last chance to avoid a return to a two-decade civil war.
"It is important that LTTE too must hand over its weapons at the same time under international supervision," Karuna said.
The Tigers have said that their demand that the government disarms armed groups is a pivotal issue at the Feb. 22-23 talks, and have warned the talks will decide whether there is peace or a return to a war that has already killed more than 64,000 people.
The Tigers accuse the military of helping paramilitaries to mount attacks within their territory mainly in the island's east, which was Karuna's stronghold when he was widely considered to be shadowy rebel leader Velupillai Prabhakaran's No.2. The government denies this.
AIDED BY MILITARY?
Karuna did not say whether he had received help from the military, but a truce monitor testified last year he had seen fighters loyal to Karuna operating near a military base in an army-held area in the east and analysts suspect the government is at least turning a blind eye.
Karuna, who called a unilateral ceasefire ahead of the talks, is living in hiding and spoke by telephone from an undisclosed location. A person known to Reuters who is familiar with Karuna's voice confirmed it was him, but asked to remain anonymous.
"If the LTTE engage in any future unprovoked attacks against us, we will be reviewing our defensive position and will take offensive actions," Karuna said.
"The ball is in their court now ... We will not even hesitate to start offensive actions against the LTTE," added Karuna, who some military sources say they suspect may be in India although others believe he is still in Sri Lanka.
Karuna split from the Tigers, taking an estimated 6,000 loyal fighters with him, in early 2004 after accusing the Tigers' northern leadership of discriminating against Tamils in the east.
Most of his followers are believed to have either returned to civilian life or rejoined the Tigers, and his force is now estimated to number a few hundred at most. He has since launched a political group, Tamileela Makkal Viduthalai Puligal (TMVP).
"We are a politico-military movement ... There is no need to disarm us as we carry arms only to defend ourselves from LTTE attacks," Karuna said. "With regards to our unilateral ceasefire, we will observe this (while) the LTTE keeps away from us."
Karuna said he and his followers planned to join the political mainstream once they were safe from the Tigers and said he would like to see Sri Lanka's protracted ethnic conflict resolved within a federal model.
"Our legitimate struggle has been mismanaged by the LTTE to protect its selfish, hegemonic (sic) interests," he said. "LTTE is not engaged in a national liberation struggle. It is trying to secure and extend its mafia state within the state of Sri Lanka."
Reuters
|
|
|
| உறவுகள் உறவுகள் தான் |
|
Posted by: SUNDHAL - 02-21-2006, 09:13 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (8)
|
 |
இன்றைய உறவுகள் பெரும்பாலும் மேலோட்ட நிலையிலேயே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் உறவுகள் அங்கங்கே பிரிந்து கிடப்பது தான். வாழ்க்கைக்கான நிலைக்களம் ஒரே இடத்தில் அமையாத பட்சத்தில் உறவுகள் தொழிலின் நிமித்தம் திசைக்கொன்றாய் பிரிந்து விடவே செய்கிறார்கள்.
இந்தப்பிரிவு தான் பல உறவுகளின் வேர்களைத் தகர்த்து விடுகிறது. இருக்கிற இடங்கள் தொலைதூரமாகி விடுகிற பட்சத்தில் உறவுகள் இல்லாமலே வாழப் பழகி விடுகிறார்கள்,வாழ்க்கை சூழ்நிலை அந்த அளவுக்கு அவர்களை மாற்றி விடுகிறது என்பதே நிஜமான உண்மை.
இப்படி தனித்து துண்டாடப்படுகிற அந்த குடும்பத்தின் அடுத்த சந்ததி தங்கள் பெற்றோரின் உறவுகள் யாரென்று தெரியாமலே வளர வேண்டிய சூழ்நிலை.
சில உறவுக் குடும்பங்கள் திசைக்கொன்றாய் இருப்பார்கள்.குடும்ப விழாக்கள் என்றால் மட்டும் அழைப்பு வரும்.சிலர் நேரில் வந்து அழைப்பார்கள்.வருஷம் ஒரு முறையோ,நாலைந்து வருஷங்களுக்கு ஒரு முறையோ கூட இப்படியான அழைப்புக்கள் வந்து, விட்டுப்போக இருந்த குடும்ப உறவுகளை தளிர்க்க வைக்கப்பார்க்கும். இந்த மாதிரியான அழைப்புகளுக்குக்கூட போக முடியாத சூழ்நிலை சிலருக்கு அமைந்து விடும்.இதுவே இதுமாதிரியான உறவுக்குடும்பங்களின் கடைசி ஆணிவேரையும் இற்றுப்போகப்பண்ணி விடும்.
இதனால் தலைமுறை இடைவெளி நிரந்தரமாகி விடும்.காலப்போக்கில் உறவுகள் யார்யாரோ என்றாகி விடக்கூடும். சிலர் இருக்கிறார்கள். உறவுகளை விட்டு தொலைதூரத்தில் இருந்தாலும் தங்கள் பிறந்த ஊர்களில் நடக்கிற கோவில் திருவிழாக்களுக்கு எப்படியாவது போய் விடுவார்கள். ஒருவிதத்தில் இது உறவைப் புதுப்பித்துக்கொள்கிற முயற்சி தான்.
இன்னும் சிலர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் வருஷத்தில் பத்து நாளாவது சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள்.பறவைகள் எவ்வளவு உயரத்தில் பறந்து இரை தேடினாலும் தங்கிப்போக தனது கூட்டுக்கு வந்து போகிற மாதிரிதான் இதுவும். இந்த நிலைப்படுத்துதலில் உறவுகள் விட்டுப்போகாமல் தொடரும் வாய்ப்புண்டு.
சிலர் மட்டும் தூரத்தே புலம் பெயர்ந்த நிலையில் உறவுகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இல்லாத மாதிரி ஆகி விடுகிறார்கள். இவர்கள் உறவுகளின் எந்த பலமுமின்றி எப்படியோ பேலன்ஸ் செய்து கொண்டு தங்கள் காலில் நிற்கப் பழகி விடுகிறார்கள். இருக்கிற இடத்தைச்சுற்றி முடிந்தவரை ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.இப்படிப் பட்ட நிலையில் உறவு இவர்களுக்கு இரண்டாம் பட்சமாகி விடுகிறது.இப்படிப் பட்டவர்களுக்கும் ஒருவித சிக்கல் இருக்கிறது. உறவுகளை தொலைத்த இவர்களுக்கு அவர்கள் வீட்டுப்பிள்ளைகளின் திருமணம் என்று வரும்போது தங்கள் கவுரவத்தை நிலைநாட்ட உறவுகள் அவசியமாகத் தோன்றுகிறது.
இந்தப் பட்டியலில் உறவுகளின் எந்தப்பின்னணியும் இல்லாமல் தங்களை வளர்த்துக் கொண்டவர்களும் இருப்பார்கள்.இவர்கள் தங்கள் பெருமையை உறவுகளுக்கு பறை சாற்றவாவது தேடிப்போய் தங்கள் இல்ல விழாக்களுக்கு அழைப்பார்கள்.ஒருவர் தனது உறவின் பெருமையை ஊரறிவதைவிட, உறவறிய விரும்புவதன் விளைவே இதற்குக் காரணம்.இந்த சமயத்தில் உறவுகள் பார்க்கும் ஆச்சரியப்பார்வைகள் தான் இவர்களுக்குக் கிடைத்த மகுடம். இப்படி விட்டுப் பிடித்தாலும் பெருமைபெறுவது உறவுகளின் சங்கமத்தில் தான்.அதை இவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.
இப்படி தேவைக்கும் பெருமைக்கும் மட்டுமே உறவுகள் வேண்டும் என்பது அத்தனை சரியல்ல. இன்றைய விஞ்ஞான தொழில்நுட்பத்தில் தூரம் ஒரு பொருட்டல்ல. தொலைத் தொடர்பு வசதிகள் சர்வ சாதாரணமாகி விட்ட நிலையில் போன் தொடர்புகள் மூலம் உறவு களை தக்க வைத்துக்கொள்ள முடியும்.அலட்சியமும், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையுமே உறவுகளை கிடப்பில் போட்டு விடுகின்றன என்பதே நிஜம். நட்பை நேசியுங்கள்.
சொந்த சகோதரனிலும் அதிகமாய் சிநேகிப்பவருமுண்டு என்று பைபிளே நட்புக்கு மகுடம் சூட்டுகிறது. அதே நேரம் நீங்கள் வேர்களாகவும் கிளைகளாகவும் வெளிப்பட்ட உறவுகளை தொலைத்து விடாதீர்கள்.அங்க அடையாளங்கள் மூலம் உங்களை நீங்கள் அடையாளம் காட்டுவது உலகப்பிரகாரமான அடையாளம்.உறவுகள் வழியாக நீங்கள் வெளிப்படுவது தான் மிகச்சரியான அடையாளம்.
Thanks:Thanthi...
|
|
|
| உடைபடும் தூக்கத்தின் கதவுகள்.... |
|
Posted by: jcdinesh - 02-21-2006, 06:58 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (11)
|
 |
பனி இதல்களின் உட்புறத்தின் புதர்களில்
பாய்வதற்குப் பதுங்கியிருக்கின்றன முத்தங்கள்....
கனவுகளின் புூட்டை உடைத்து என் பிரதேசத்துக்கு
இரவு வேளைகளில் உன்னை கடத்தி வருகிறேன்....
மூடிய இமையின் இருட்டடியில்
நீ ஒரு ஒளி உருவமாய் மிதக்கின்றாய்.....
தூங்கும் உடலுக்குள்
ஒரு புூவாய் யாத்திரை செய்கின்றாய்.....
அதன் அறைகளில் உன் அரிய பயணங்களை
நிச்சயித்துக் கொண்டருக்கிறேன்....
காதலின் தோட்டத்தில
நான் ஒரு புூவாக புூக்கத்தொடங்கி விட்டேன்..
பறித்துக் கொள்ள உன் விரல்கள்
நடுங்குகிறதா? அசைகிறதா?............
<img src='http://img139.imageshack.us/img139/4193/yarl1fo.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| அவளை பிடிக்கும் என்பதால்..! |
|
Posted by: Nitharsan - 02-21-2006, 06:51 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (25)
|
 |
வேதனையை வாழ்க்கை
ஆக்கிவிட்டவள்
அன்புக்கு அர்த்தம் கேட்டால்
காயங்களை மட்டும்
காரணமின்றி தந்தவள்
காதலுக்கு கருத்து
கேட்டால்...
நேற்று வந்த யாரையே
நேசித்தவளுக்கு...
நெடுநாளாய் நேசத்தை மட்டும்
காட்டிய என் உணர்வு
உறைக்காமல் போனது -என்
துரதிஸ்டமே...
கற்பனையில் என் காதல்
கடந்து சென்று விட்டது
களிப்புடன் -அதற்குள்
கனவை கலைத்ததால்
கழிப்பும் காணாமல் போனது
ஆயிரம் சோதனை தாங்கிய
ஆணிவேர்கள் கூட
அழிந்திடும் நிச்சயம்
காதலில் தோற்றிருந்தால்
ஆனாலும்...
இறைவனிடம் கேட்க
எஞ்சியிருக்கிறது ஒரு கேள்வி
நிறைவேறா ஆசையினை
முடிவுறா பயணமதை
வாழ்வழிக்கும் காதலை- ஏன்
வரவைத்தாய் என் மனதில்?
சத்தியம் செய்து விட்டதால்
சமர்களம் எனை வெறுத்ததால்
கனடா என்னை அழைத்தது..
கல்வியினை அணைக்க நினைத்ததால்
கல்லூரி என் படிப்பிடமாகியது
படிப்பிடத்தில் நீ
படித்ததால் நான்..
நெடுநாளாய் படிக்காத
படிக்க விரும்பாத
காதல் பாடம் படித்தேன்
தேர்ச்சி தான் பெறவில்லை
ஆனாலும்..
தேறிவிட்டென் வாழ்க்கையில்
தேற்ற முடியாத சோகம்
தேடியே நான் பெற்ற
காதலுக்காய் மன்றாடுகின்றேன்
அவளை மறக்க முடியாமல்
மனது ஒன்றாகையால்
மரணத்தை அழைக்கிறது
தலைவன் தந்த உறுதியால்
தளராமல் இருக்கின்றது
அன்றே என் நண்பன்
நன்றாய் சொன்னான்
நாமெல்லாம் காதல் கொண்டால்
நாடு என்ன செய்யுமென்று
நட்பாய் நானும்
நண்பனாய் பழகியபின்
நானறியாமல் நடுவில்
எப்படி பிறந்தது காதல்..?
விடுத்த வினாவுக்கு
விடையுமில்லை.. -காதலில்
வீழ்ந்த என்னுள்ளத்துக்கு
மீட்சியுமில்லை..
மீள துயர் மட்டும்
மீட்டுகின்றது முகாரி...
மறக்காத காதலால்
மறுக்கிறது மற்றவற்றை
மனம் விரும்பி
தினம் படித்த பாடம்
குணம் மாறி...
தடம் புரண்டு போனது..
போற வழிக்கு புண்ணியமாய்
போகட்டும் தந்துவிடு
தத்தெடுத்த இதயத்தை
கெஞ்சிக் கேட்க்கிறது
என் சுவாச நாளம்...
கொடுக்க மறுப்பவளிடம்..
மன்றாடி என்ன பயனம்..
மிரட்டி என்ன பயன்..
காலை தியாகம் செய்ய
புத்தனல்ல நான்..
அவள் மனம் கொன்று
மணம் புரிய..
கிட்லருமல்ல நான்
ஆனால்...
அவள் மனதில் நான்
கிட்லராகவே இருக்கிறேன்.
புத்தனாகவே அவன்..
போட்டி இருவருக்குள்ளுமல்ல
காதலுக்குள்
கவிதை கூட அவளுக்காய் அல்ல
என் உணர்வினை
உரைத்திட..
வெறுமை கொண்டமனம்
வேற்று வழி நாடிடாது
வென்று வர
புது கவிதை எழுதுகிறேன்..
புன்னகைக்கும் என்
முகம் பார்ப்பவர்க்கு..
நீறு பூத்த நெருப்பாய்
அனல் வீசும்..என்
அசல் சொல்ல விளைந்தேன்
கொஞ்சிப்பேசும் காதலில்
கெஞ்சி கெஞ்சியும்
பேசாமல் இருக்கும்
பேதையை எண்ணினேன்
எனக்கே அலுப்பாய் தோன்றியது
ஒரே வார்த்தைகளை
மீண்டும் மீண்டும்
கேட்டதால் என்
காதுகளுக்கு கூட சலிப்பு
என் செய்ய
என் இதயம் மட்டும்
இறுக்க பற்றியவளை
காதல் கொள்கின்றது..
இயலுமானவரை...
இன்னும் இன்னும்
அதிகமாகவே காதல் கொள்கிறது
இன்றும் நான் என்னை
மாற்றுகின்றேன்...
அவளுக்கு என்னை
பிடிக்க வேண்டுமென்பதற்காகவல்ல
எனக்கு அவளை பிடிக்கும் என்பதால்...
எழுத்து பிழைகளை திருத்தியுள்ளேன் - மதன்
|
|
|
| அடிப்படையில் நிறைய-! |
|
Posted by: வர்ணன் - 02-21-2006, 04:26 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (4)
|
 |
<b>இந்தியா என்கிறோம் - இலங்கை என்கிறோம்- ஈழம் -என்கிறோம்
ராஜீவ் -காலமானால்- முதுகில் குத்திட்டம் என்கிறாங்க
அதே- ராஜீவ்-எங்க சகோதரர் தலைக்கு மேல டாங்கியால ஏத்தி நசுக்கினத- எங்க முகத்தில நெருப்பு வைச்சத- அயல்நாட்டு அரசியல் என்கிறாங்க-
ராஜதந்திரம் எங்கிறாங்க~!
அறிவியல் நிறைய கொண்டோம்- அதனால அமெரிக்கா கூட- எங்கள கூப்பிடுது - என்னுறாங்க-
கலவரம் வந்தால நீங்க கனடா வரை ஓடினீங்க- சோ- அகதிதான் - நீங்க என்னுறாங்க-
ஒன்னு மட்டும் விளங்கல- திறமை உள்ளவன் - உள் நாட்டில் இருந்தும் சாதிக்க்க முடியாதா?
ஏன் - ஓடினான்?-
காசுக்காகவா-? - அப்போ நீங்க-பொருளாதார அகதி பா-!
உயிரை காப்பாத்திக்க -எவனும் எத்திசையும் ஓடுவான் - அது - உங்களுக்கு லேசில புரியாது-!
முதுகினில் ரவைகள் பாய்ந்தால் தான் - எங்க உணர்வு புரியும்!
கர்நாடகா காரன் அடிச்சு துரத்தி ஓடிவருற தமிழனை விட- பிரபுதேவாவும்-பிரகாஷ்ராஜ்-ம் சூப்பரா பின்னுறாங்க என்னு- ஒரு கனவு உலகம்- அதுவே- உங்க வாழ்க்கையா போச்சு-!
இரத்தம் முகமெங்கும் வழிய ஓடும் எங்கள பார்த்து - ஒரு நக்கல் உங்களூக்கு இருக்கலாம்- அகதி என்று-!
அப்பிடியான அல்ப சிந்தனை சுட்டு போட்டாலும் எமக்கு வராது-!
நேற்றுத்தான் இந்திய ராணுவத்தால் எம் மண்ணில் - எம் மண்ணில் சிதைப்பட்ட எங்கட உறவுகள் நினைவு தினம் என்றானாலும்-
நாளைக்கே ஒரு சண்டை - பாகிஸ்தானுக்கும்- உங்களுக்கும் வந்தால்- நீங்க வெல்லணும் என்னு மட்டுமே - நினைப்போம்! 8)
அது கார்கில் போர் ஆனாலும் சரி-
அவுஸ்ஸோட- இந்தியா-ஆடும் கிரிக்கட் போட்டி ஆனாலும் சரி-!
நிறையவேறுபாடு-! 8)</b>
|
|
|
| பூமிக்கொரு எதிர்காலம் தேடி - விஞ்ஞானச் சிறுகதை. |
|
Posted by: kuruvikal - 02-20-2006, 10:53 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (1)
|
 |
<b>இறுதிக்கட்ட சோதனைகள் நடக்கிறது...</b>
<img src='http://img112.imageshack.us/img112/8382/marsrover7oh.jpg' border='0' alt='user posted image'>
<b>புரொவ் சங்கர்</b> ( திட்டத் தலைவர்) : வணக்கம். எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது ஆய்வு..?!
<b>புரொவ் சுதர்சன்</b> ( வடிவமைப்புக் குழுத் தலைவர்) : நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இன்னும் 5 மாதத்தில விண்ணுக்கு செலுத்திடலாம் சங்கர். அதன் பிறகு உங்கள் கனவு நனவாகிடும்.
இவர்கள் இப்படி பேச்சை ஆரம்பிக்க..சைரனும் ஒலிக்கிறது..
<b>சங்கர்</b> : என்னது சைரன் சத்தம் வருகிறது...
சுதர்சன் வோக்கிடோக்கி மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்கிறார்...
கலோ கலோ....மீண்டும் கலோ கலோஓஓஓஓ
<b>சங்கர்</b>: என்ன தொடர்பு கிடக்குதில்லையோ....??!
<b>சுதர்சன்</b> : ஆமாம் சங்கர். ஒரே இரைச்சலா இருக்குது..
அப்போது அவர்களை நோக்கி ஓடி வருகிறது ரோபோ திலீபன்.. அதைக் கண்டுவிட்டு
<b>சுதர்சன்</b>: என்ன சங்கர்..தன்னியக்க அவசர மீட்பு தொடங்கிட்டுது.. ரோபோ திலீபன் எங்களை நோக்கி வருகிறது..
<b>சங்கர்</b>: பொறுங்கள்..அது என்ன சொல்லப் போகிறது என்று கவனித்து செயற்படுவோம்..
<img src='http://img112.imageshack.us/img112/3261/statacuterobot7kb.jpg' border='0' alt='user posted image'>
சங்கர், சுதர்சனை நெருங்கிய ரோபோ.. தமிழில்... "புரொவ் சங்கர் உங்களுக்கு ஆபத்து.. உடனடியாக இக்கட்டடத்தை விட்டு வெளியேறுங்கள்.
உங்களுக்கு நான் உதவி செய்கிறேன். நீங்கள் இருவரும் என்னைத் தொடர்ந்து வாருங்கள்...
ரோபோ திலீபனின் கட்டளைப்படி தலைவர்கள் இருவரும் அதனைப் பின் தொடர்கின்றனர்...
மிகுதி தொடரும்...
(கள உறவுகளே இத்தொடரை குருவிகள் தான் தொடர வேண்டும் என்ற அவசியமில்லை... நீங்களும் உங்களுக்குள் தோன்றும் கற்பனையை விஞ்ஞான வடிவத்தோடு கலந்து இங்கு தந்து இத்தொடரை நகர்த்திச் செல்லலாம்..கட்டம் கட்டமா...! இறுதி இலக்கு நோக்கி சாமர்த்தியமாக நகர்த்திச் செல்ல நாமும் உங்களுக்கு உதவுவோம்..! முயற்சிப்போமா...!)
இதற்குள் விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்..!
|
|
|
|