Yarl Forum
அவளை பிடிக்கும் என்பதால்..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: அவளை பிடிக்கும் என்பதால்..! (/showthread.php?tid=774)

Pages: 1 2


அவளை பிடிக்கும் என்பதால்..! - Nitharsan - 02-21-2006

வேதனையை வாழ்க்கை
ஆக்கிவிட்டவள்
அன்புக்கு அர்த்தம் கேட்டால்
காயங்களை மட்டும்
காரணமின்றி தந்தவள்
காதலுக்கு கருத்து
கேட்டால்...
நேற்று வந்த யாரையே
நேசித்தவளுக்கு...
நெடுநாளாய் நேசத்தை மட்டும்
காட்டிய என் உணர்வு
உறைக்காமல் போனது -என்
துரதிஸ்டமே...

கற்பனையில் என் காதல்
கடந்து சென்று விட்டது
களிப்புடன் -அதற்குள்
கனவை கலைத்ததால்
கழிப்பும் காணாமல் போனது
ஆயிரம் சோதனை தாங்கிய
ஆணிவேர்கள் கூட
அழிந்திடும் நிச்சயம்
காதலில் தோற்றிருந்தால்

ஆனாலும்...
இறைவனிடம் கேட்க
எஞ்சியிருக்கிறது ஒரு கேள்வி
நிறைவேறா ஆசையினை
முடிவுறா பயணமதை
வாழ்வழிக்கும் காதலை- ஏன்
வரவைத்தாய் என் மனதில்?
சத்தியம் செய்து விட்டதால்
சமர்களம் எனை வெறுத்ததால்
கனடா என்னை அழைத்தது..
கல்வியினை அணைக்க நினைத்ததால்
கல்லூரி என் படிப்பிடமாகியது
படிப்பிடத்தில் நீ
படித்ததால் நான்..
நெடுநாளாய் படிக்காத
படிக்க விரும்பாத
காதல் பாடம் படித்தேன்

தேர்ச்சி தான் பெறவில்லை
ஆனாலும்..
தேறிவிட்டென் வாழ்க்கையில்
தேற்ற முடியாத சோகம்
தேடியே நான் பெற்ற
காதலுக்காய் மன்றாடுகின்றேன்
அவளை மறக்க முடியாமல்
மனது ஒன்றாகையால்
மரணத்தை அழைக்கிறது
தலைவன் தந்த உறுதியால்
தளராமல் இருக்கின்றது
அன்றே என் நண்பன்
நன்றாய் சொன்னான்
நாமெல்லாம் காதல் கொண்டால்
நாடு என்ன செய்யுமென்று

நட்பாய் நானும்
நண்பனாய் பழகியபின்
நானறியாமல் நடுவில்
எப்படி பிறந்தது காதல்..?
விடுத்த வினாவுக்கு
விடையுமில்லை.. -காதலில்
வீழ்ந்த என்னுள்ளத்துக்கு
மீட்சியுமில்லை..
மீள துயர் மட்டும்
மீட்டுகின்றது முகாரி...

மறக்காத காதலால்
மறுக்கிறது மற்றவற்றை
மனம் விரும்பி
தினம் படித்த பாடம்
குணம் மாறி...
தடம் புரண்டு போனது..
போற வழிக்கு புண்ணியமாய்
போகட்டும் தந்துவிடு
தத்தெடுத்த இதயத்தை
கெஞ்சிக் கேட்க்கிறது
என் சுவாச நாளம்...

கொடுக்க மறுப்பவளிடம்..
மன்றாடி என்ன பயனம்..
மிரட்டி என்ன பயன்..
காலை தியாகம் செய்ய
புத்தனல்ல நான்..
அவள் மனம் கொன்று
மணம் புரிய..
கிட்லருமல்ல நான்
ஆனால்...
அவள் மனதில் நான்
கிட்லராகவே இருக்கிறேன்.
புத்தனாகவே அவன்..

போட்டி இருவருக்குள்ளுமல்ல
காதலுக்குள்
கவிதை கூட அவளுக்காய் அல்ல
என் உணர்வினை
உரைத்திட..
வெறுமை கொண்டமனம்
வேற்று வழி நாடிடாது
வென்று வர
புது கவிதை எழுதுகிறேன்..
புன்னகைக்கும் என்
முகம் பார்ப்பவர்க்கு..
நீறு பூத்த நெருப்பாய்
அனல் வீசும்..என்
அசல் சொல்ல விளைந்தேன்

கொஞ்சிப்பேசும் காதலில்
கெஞ்சி கெஞ்சியும்
பேசாமல் இருக்கும்
பேதையை எண்ணினேன்
எனக்கே அலுப்பாய் தோன்றியது
ஒரே வார்த்தைகளை
மீண்டும் மீண்டும்
கேட்டதால் என்
காதுகளுக்கு கூட சலிப்பு
என் செய்ய
என் இதயம் மட்டும்
இறுக்க பற்றியவளை
காதல் கொள்கின்றது..
இயலுமானவரை...

இன்னும் இன்னும்
அதிகமாகவே காதல் கொள்கிறது
இன்றும் நான் என்னை
மாற்றுகின்றேன்...
அவளுக்கு என்னை
பிடிக்க வேண்டுமென்பதற்காகவல்ல
எனக்கு அவளை பிடிக்கும் என்பதால்...

எழுத்து பிழைகளை திருத்தியுள்ளேன் - மதன்


- RaMa - 02-21-2006

போற வழிக்கு புண்ணியமாய்
போகட்டும் தந்துவிடு
தத்தெடுத்த இதயத்தை
கெஞ்சிக் கேட்க்கிறது
என் சுவாச நாளம்...
கொடுக்க மறுப்பவளிடம்..
மன்றாடி என்ன பயனம்..
மிரட்டி என்ன பயன்..
கதலை தியாகம் செய்ய
புத்தனல்ல நான்..
அவள் மனம் கொன்று
மணம் புரிய..
கிட்லருமல்ல நான்
********************************

நிதர்சன் கவிதை சூப்பர். நீளமாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் உணர்ச்சிகளை நல்லாய் தான் பாடம் பிடித்து காட்டீயிருக்கிறீர்கள். உரியவர் உங்கள் உணர்வுகளை விரைவில் உணர்ந்து கொள்ள எனது வாழ்த்துக்கள்.


- இளைஞன் - 02-21-2006

வணக்கம் நிதர்சன் இடைவெளி விடாமல் தொடர்ந்து
எழுதியிருக்கிறீர்கள். அவற்றை கொஞ்சம் கவனியுங்கள்.
எழுத்துப் பிழைகள் உள்ளன. அவற்றையும் திருத்திவிடுங்கள்.


- Nitharsan - 02-21-2006

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி இளைஞன், அவற்றை திருத்தியமைக்கு நன்றி மதன்.....


- jsrbavaan - 02-21-2006

வாழ்த்துக்கள் நிதர்சன்.


- DV THAMILAN - 02-21-2006

உரியவர் உங்கள் உணர்வுகளை விரைவில் உணர்ந்து கொள்ள எனது வாழ்த்துக்கள்.


- iniyaval - 02-21-2006

ம்ம் நீளமான கவிதனில் உம் உணர்ச்சிகளை அழகாக கொட்டியுள்ளீர்கள். உங்கள் காதல் கைகூட வாழ்த்துக்கள்


- Eelam Angel - 02-21-2006

"இன்னும் இன்னும்
அதிகமாகவே காதல் கொள்கிறது
இன்றும் நான் என்னை
மாற்றுகின்றேன்...
அவளுக்கு என்னை
பிடிக்க வேண்டுமென்பதற்காகவல்ல
எனக்கு அவளை பிடிக்கும் என்பதால்..."

<b>மிகவும் உணர்வு பூர்வமான கவிதை நிதர்சன் அண்ணா.
வாழ்த்துக்கள்</b>


- Saniyan - 02-22-2006

ஐயோ . . தலை வெடிக்குது . . .
கொஞ்ச நாளைக்கு இதுகள நிப்பாட்டுறீங்களா?
பிளீஸ் . . . . .


- கறுப்பன் - 02-22-2006

Saniyan Wrote:ஐயோ . . தலை வெடிக்குது . . .
கொஞ்ச நாளைக்கு இதுகள நிப்பாட்டுறீங்களா?
பிளீஸ் . . . . .

Confusedhock: Confusedhock: Confusedhock:


- கறுப்பன் - 02-22-2006

மிகவும் உணர்வு பூர்வமான கவிதை.
வாழ்த்துக்கள்


- Sujeenthan - 02-22-2006

நல்ல கவிதை. உங்கள் உள்ளக்குமுறல்கள் கவிதையில் சிதறிக் கிடக்கின்றன. உங்களை காதலிக்காவிட்டாலும் உங்கள் கவிதையை நேசிப்பார் என நம்புகிறேன்.


- சந்தியா - 02-22-2006

நிதர்சன் அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் கவிக்கு

உங்கள் காதல் கை கூட வாழ்த்துக்கள்


- Vishnu - 02-22-2006

அனுபவித்து எழுதிய உணர்வு பூர்வமான உங்கள் கவிதை.. என் மனதையும் கனக்க வைத்தது நிதர்ஸன். கவிதை நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள். உரியவர் உங்கள் உணர்வுகளை விரைவில் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்.


- Jenany - 02-23-2006

கவிதை அழகா இருக்கு நிதர்சன் அண்ணா....


- Nitharsan - 02-24-2006

எல்லோருக்கும் நன்றிகள்....
புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்களா...? என்பது தானே கேள்வியே....


- அருவி - 02-24-2006

Saniyan Wrote:ஐயோ . . தலை வெடிக்குது . . .
கொஞ்ச நாளைக்கு இதுகள நிப்பாட்டுறீங்களா?
பிளீஸ் . . . . .

அட சனியனிற்கும் இதே நிலைதானா.

சரி நீங்கள் நலமா இருக்கிறியளா கனநாளாக் காணலயே


- renuka - 02-24-2006

(காதல் பாடம் படித்தேன்

தேர்ச்சி தான் பெறவில்லை
ஆனாலும்..
தேறிவிட்டென் வாழ்க்கையில்) Nitharsan வாழ்க்கை¢ø தேர்ச்சி ¦ÀüÚ Å¢ðË÷¸û «Ð §À¡Ðõ.


- hari - 02-24-2006

நிதர்சன் தம்பி உள்ளத்திலும் இவ்வளவு காயங்களா? காயங்களுக்கு மருந்தாக ஒருத்தி வருவாள்! நம்பிக்கையுடன் இருங்கள்! கவலை வேண்டாம்!


- அருவி - 02-24-2006

hari Wrote:நிதர்சன் தம்பி உள்ளத்திலும் இவ்வளவு காயங்களா? காயங்களுக்கு மருந்தாக ஒருத்தி வருவாள்! நம்பிக்கையுடன் இருங்கள்! கவலை வேண்டாம்!
மன்னா என்ன இது அவனவன் காதலியைப்பற்றி கவியெழுத ஒருத்தி வருவாள் என்று சொல்கிறீங்க. :roll:
காதலியுடன் சேருவதற்கு ஏதாவது வழி சொல்லிக்குடுங்க.