Yarl Forum
பூமிக்கொரு எதிர்காலம் தேடி - விஞ்ஞானச் சிறுகதை. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53)
+--- Thread: பூமிக்கொரு எதிர்காலம் தேடி - விஞ்ஞானச் சிறுகதை. (/showthread.php?tid=777)



பூமிக்கொரு எதிர்காலம் தேடி - விஞ்ஞானச் சிறுகதை. - kuruvikal - 02-20-2006

<b>இறுதிக்கட்ட சோதனைகள் நடக்கிறது...</b>

<img src='http://img112.imageshack.us/img112/8382/marsrover7oh.jpg' border='0' alt='user posted image'>

<b>புரொவ் சங்கர்</b> ( திட்டத் தலைவர்) : வணக்கம். எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது ஆய்வு..?!

<b>புரொவ் சுதர்சன்</b> ( வடிவமைப்புக் குழுத் தலைவர்) : நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இன்னும் 5 மாதத்தில விண்ணுக்கு செலுத்திடலாம் சங்கர். அதன் பிறகு உங்கள் கனவு நனவாகிடும்.

இவர்கள் இப்படி பேச்சை ஆரம்பிக்க..சைரனும் ஒலிக்கிறது..

<b>சங்கர்</b> : என்னது சைரன் சத்தம் வருகிறது...

சுதர்சன் வோக்கிடோக்கி மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்கிறார்...

கலோ கலோ....மீண்டும் கலோ கலோஓஓஓஓ

<b>சங்கர்</b>: என்ன தொடர்பு கிடக்குதில்லையோ....??!

<b>சுதர்சன்</b> : ஆமாம் சங்கர். ஒரே இரைச்சலா இருக்குது..

அப்போது அவர்களை நோக்கி ஓடி வருகிறது ரோபோ திலீபன்.. அதைக் கண்டுவிட்டு

<b>சுதர்சன்</b>: என்ன சங்கர்..தன்னியக்க அவசர மீட்பு தொடங்கிட்டுது.. ரோபோ திலீபன் எங்களை நோக்கி வருகிறது..

<b>சங்கர்</b>: பொறுங்கள்..அது என்ன சொல்லப் போகிறது என்று கவனித்து செயற்படுவோம்..

<img src='http://img112.imageshack.us/img112/3261/statacuterobot7kb.jpg' border='0' alt='user posted image'>

சங்கர், சுதர்சனை நெருங்கிய ரோபோ.. தமிழில்... "புரொவ் சங்கர் உங்களுக்கு ஆபத்து.. உடனடியாக இக்கட்டடத்தை விட்டு வெளியேறுங்கள்.
உங்களுக்கு நான் உதவி செய்கிறேன். நீங்கள் இருவரும் என்னைத் தொடர்ந்து வாருங்கள்...

ரோபோ திலீபனின் கட்டளைப்படி தலைவர்கள் இருவரும் அதனைப் பின் தொடர்கின்றனர்...

மிகுதி தொடரும்...

(கள உறவுகளே இத்தொடரை குருவிகள் தான் தொடர வேண்டும் என்ற அவசியமில்லை... நீங்களும் உங்களுக்குள் தோன்றும் கற்பனையை விஞ்ஞான வடிவத்தோடு கலந்து இங்கு தந்து இத்தொடரை நகர்த்திச் செல்லலாம்..கட்டம் கட்டமா...! இறுதி இலக்கு நோக்கி சாமர்த்தியமாக நகர்த்திச் செல்ல நாமும் உங்களுக்கு உதவுவோம்..! முயற்சிப்போமா...!)

இதற்குள் விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்..!


- kuruvikal - 02-21-2006

<img src='http://img119.imageshack.us/img119/8172/tossedsubwaybins018xw.jpg' border='0' alt='user posted image'>

இதோ இந்தக் குறுக்குவழியூடாக புரொவ் சங்கர் மற்றும் சுதர்சனை அழைத்துச் சென்று கொண்டிருந்த ரோபோ திலீபன் திடீர் என்று செயலிழந்து வீழ்கிறது. இதைக் கண்டு..

<b>சங்கர்</b> : சுதர்சன் என்னாச்சு திலீபனுக்கு..என்னதான் நடக்கிறது இங்கு ஒன்றுமே புரியுதில்லையே..

<b>சுதர்சன்</b> : எனக்கும் தான் சங்கர். பொறுங்கள் மீண்டும் ஒரு தடவை வோங்கி மூலம் தொடர்பு கொண்டு பார்ப்போம்...

பொத்தானை அழுத்தி வோக்கியை இயக்கிய சுதர்சன் நிலத்தில் சுருண்டு விழுகிறார்...

இதைக் கண்டு செய்வதறியாது திகைப்புடன்..

<b>சங்கர்</b> : என்னாச்சு சுதர்சன் என்னாச்சு..என்ன செய்தது..என்ன செய்கிறது.. எனக்கு ஒன்றுமா விளங்குதில்லையே.. மை கோட்..

<b>சுதர்சன்</b> : பதில் சொல்ல முடியாது...அனுங்கிய படி..ஒரு மின்னல் தாக்கம் போன்ற அதிர்ச்சியை உணர்ந்தேன் சங்கர்... தலை சுற்றுது கொஞ்சம் பொறுங்கோ..

<b>சங்கர்</b> : ம்.. நீங்கள் அப்படியே ஓய்வெடுங்கள். பெறப்படும் சிக்னலின் வழிதான் உங்களுக்கும் ரோபோ திலீபனுக்கும் பிரச்சனை வந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். எங்கள் ஆய்வகத்தின் சிக்னல் கட்டுப்பாட்டறையை யாரோ அல்லது எதுவோ தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும்.

<b>சுதர்சன்</b> : ஆ..அம்மா.. (என்று தலையைப் பிடித்த படி.. நிமிர்ந்திருந்து கொண்டு)... அப்படித்தான் சங்கர் நானும் நினைக்கிறேன்...

<b>சங்கர்</b> : இப்போ எங்களால் எதுவும் செய்ய முடியாது.. மேலதிக உதவியையும் உடன் பெற முடியாது.. அது வரும் வரை இங்கையே இருப்போம்.. அதுதான் பாதுகாப்பும் கூட.

<b>சுதர்சன்</b> : அதோ சங்கர் அங்கே பாருங்கள்..

<img src='http://img69.imageshack.us/img69/4913/insectrobot8av.jpg' border='0' alt='user posted image'>

<b>சங்கர்</b> : ஆமாம்..அவையென்ன.. புதிசா இருக்கு இந்தச் சூழலுக்கு.. ஆ.. அதில் ஒன்று எம்மை நோக்கி வருகிறது போல

<b>சுதர்சன்</b> : ஆமாம்... நீங்கள் அப்பால் ஓடுங்கள் சங்கர்.

திடீர் என்று.. "சங்கர் ஓடாதே நில்லு"...என்று உத்தரவு வருகிறது. சத்தம் வந்த திசை நோக்கி திரும்பி பார்த்த சங்கர் கண்ட காட்சி..அவரை அதிர வைத்தது...

(தொடரும்..)

(படங்கள் - இதர தளங்களில் பெறப்பட்டன.)

(விமர்சனங்களை..மற்றும் இக்கதைக்கு தங்கள் பங்களிப்பை நல்க விரும்புவோரும்.. யாழ் களத்தில் உள்ள குருவிகளின் "வலைப்பூவேட்டுக்கு"ச் சென்று உங்கள் எண்ணங்களைத் தாருங்கள்..! கதைக்குரிய பங்காளிகள்..எமது அனுமதியின்றியே தங்கள் பதிவுகளை இங்கு செய்யலாம்..!)