Yarl Forum
அடிப்படையில் நிறைய-! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: அடிப்படையில் நிறைய-! (/showthread.php?tid=775)



அடிப்படையில் நிறைய-! - வர்ணன் - 02-21-2006

<b>இந்தியா என்கிறோம் - இலங்கை என்கிறோம்- ஈழம் -என்கிறோம்
ராஜீவ் -காலமானால்- முதுகில் குத்திட்டம் என்கிறாங்க
அதே- ராஜீவ்-எங்க சகோதரர் தலைக்கு மேல டாங்கியால ஏத்தி நசுக்கினத- எங்க முகத்தில நெருப்பு வைச்சத- அயல்நாட்டு அரசியல் என்கிறாங்க-
ராஜதந்திரம் எங்கிறாங்க~!

அறிவியல் நிறைய கொண்டோம்- அதனால அமெரிக்கா கூட- எங்கள கூப்பிடுது - என்னுறாங்க-

கலவரம் வந்தால நீங்க கனடா வரை ஓடினீங்க- சோ- அகதிதான் - நீங்க என்னுறாங்க-

ஒன்னு மட்டும் விளங்கல- திறமை உள்ளவன் - உள் நாட்டில் இருந்தும் சாதிக்க்க முடியாதா?
ஏன் - ஓடினான்?-

காசுக்காகவா-? - அப்போ நீங்க-பொருளாதார அகதி பா-!

உயிரை காப்பாத்திக்க -எவனும் எத்திசையும் ஓடுவான் - அது - உங்களுக்கு லேசில புரியாது-!

முதுகினில் ரவைகள் பாய்ந்தால் தான் - எங்க உணர்வு புரியும்!

கர்நாடகா காரன் அடிச்சு துரத்தி ஓடிவருற தமிழனை விட- பிரபுதேவாவும்-பிரகாஷ்ராஜ்-ம் சூப்பரா பின்னுறாங்க என்னு- ஒரு கனவு உலகம்- அதுவே- உங்க வாழ்க்கையா போச்சு-!
இரத்தம் முகமெங்கும் வழிய ஓடும் எங்கள பார்த்து - ஒரு நக்கல் உங்களூக்கு இருக்கலாம்- அகதி என்று-!


அப்பிடியான அல்ப சிந்தனை சுட்டு போட்டாலும் எமக்கு வராது-!

நேற்றுத்தான் இந்திய ராணுவத்தால் எம் மண்ணில் - எம் மண்ணில் சிதைப்பட்ட எங்கட உறவுகள் நினைவு தினம் என்றானாலும்-

நாளைக்கே ஒரு சண்டை - பாகிஸ்தானுக்கும்- உங்களுக்கும் வந்தால்- நீங்க வெல்லணும் என்னு மட்டுமே - நினைப்போம்! 8)

அது கார்கில் போர் ஆனாலும் சரி-
அவுஸ்ஸோட- இந்தியா-ஆடும் கிரிக்கட் போட்டி ஆனாலும் சரி-!

நிறையவேறுபாடு-! 8)</b>


- Birundan - 02-21-2006

இந்திய ராணுவம் எம்மை அடித்தாலும், இந்திய பாக்கிஸ்தான் சண்டையில் இந்தியாதான் வெல்ல வேண்டும் என்று ஏன் எமது மனம் சொல்லுகிறது? அதுதான் புரியவில்லை.


- Thala - 02-21-2006

Birundan Wrote:இந்திய ராணுவம் எம்மை அடித்தாலும், இந்திய பாக்கிஸ்தான் சண்டையில் இந்தியாதான் வெல்ல வேண்டும் என்று ஏன் எமது மனம் சொல்லுகிறது? அதுதான் புரியவில்லை.

அது ஏன்.....??? :roll: :roll: :roll: கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆனால் இந்தியாவில் சிங்களவர்கள் தமிழர்களை அளிப்பதை வேடிக்கை பார்ப்பார்கள் நாங்கள் வெல்லும் போது அதுக்கு வியாக்கியானம் சொல்லி கேவலப்படுத்தும் சுப்பிரமணிம் சுவாமி, சோ, போண்ற கோமாளிகளும். இந்து என்கின்ற பத்திரிகையும் சொல்லும் விடயங்கள் எங்களின் மனங்களில் பதியாமல் போய் விடுவதும் ஏன்......??? :roll: :roll: :roll:


- நர்மதா - 02-21-2006

இலங்கைத்தமிழர் உண்மையாண அன்னை வெளிக்காட்டுகிறார்கள் (அதற்காக எல்லேரும் என்றில்லை சில புல்லுருவிகளும் உள்ளனர்) அவர்கள் அரசியல்வாதி போல் போலியான அன்பை காட்டுவதில்லை
எங்கள் உறவுகள் பரிதாபமாக இருக்கும் போது நாம் அதை சுட்டிக்காட்டடி வேடிக்கை செய்வதில்லை உண்மையான பாசத்தையே காட்டுகிறேம் இதனால் தான் நம் உறவுகள் பாதிக்கும் போது நாம் அவர்கள் பக்கம் நிற்கின்றோம்


- putthan - 02-21-2006

அது கார்கில் போர் ஆனாலும் சரி-
அவுஸ்ஸோட- இந்தியா-ஆடும் கிரிக்கட் போட்டி ஆனாலும் சரி-!

வருணன் எழுதியது.

இது உங்கள் தனிபட்ட கருத்தாகவே ஏற்றுகொள்ளபடும் நிச்சயமாக அவுஸ்ரேலியாவுக்கும் இந்தியாவிற்கும் கிரிக்கட் போட்டியில் நான் நிச்சயமாக அவுஸ்ரேலியாவிற்குதான் ஆதரவு காரணம் நாம் வசதியாக வாழ்வதற்கும் வாழ்ந்துகொண்டு இருப்பதற்கும், எமது தேசிய போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கு எந்த வகையிலும் தடை இல்லாதனாலும்.