![]() |
|
குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்? (/showthread.php?tid=770) |
குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்? - Shankarlaal - 02-21-2006 குக்கரில் பொங்காத பால் குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்? வில்லாபுரம், கருணாகரன், மதுரை. பால் குக்கரில் பால் நேரடியாகச் சூடுபடுத்தப்படுவதில்லை வெளி அறையிலுள்ள தண்ணீர் கொதித்து ஆவியாகி கிடைக்கும் வெப்பத்தால் சூடுபடுத்தப்படுகிறது. பால் நாலாபக்கமும் சமச்சீராக சூடாகிறது. இதனால் பாலானது கீழே மிகுந்த சூடு அடைந்து கொதித்து மேலேழுவதில்லை. சாதாரணமாக பாத்திரங்களில் பாலை சூடு படுத்தும்போது பாலின் கீழ்ப்பகுதி மிகுந்த சூடாகவும், மேல்புறம் சற்றே குளிர்ந்தும் இருப்பதால் "கன்வெக்ஷன்' எனப்படும் இயல்பான சுழற்சியால் கீழ்ப்பால் மேலே எழும்ப முயலுகிறது. பாலில் உள்ள கொழுப்பு, கொதிப்பினால் ஏற்படும் நீராவிக் குமிழிகளை நீண்ட நேரம் சிறைப்படுத்தி வைத்திருந்து ஒரு நிலைக்குமேல் காப்பாற்ற முடியாமல் கைவிடும்போது நுரைபோல் பொங்கி வெளிப்பட்டுவிடுகிறது. பால் குக்கரில் அப்படி கன்வெக்ஷன் சுழற்சி நடைபெறு வதில்லை அதுதான் காரணம். http://www.dinamalar.com/ - Thala - 02-21-2006 ம்ம்ம்..... தெரிந்திருந்தும் சிந்திக்க தோண்றாத விடயம். இப்படி செய்திகளை.. இதேபக்கத்தில் இணையுங்களேன்... "ஒரு தகவல்" இல்லை... வேறு ஒரு நல்ல தலைப்பைபோட்டு.. - ப்ரியசகி - 02-21-2006 ஆமா..இதுவரை நான் அறியாத தகவல்..நன்றி சங்கர் லால் - MUGATHTHAR - 02-22-2006 ப்ரியசகி Wrote:ஆமா..இதுவரை நான் அறியாத தகவல்..எது.????.............பாலை கொதிக்க வைச்சு குடிக்கனும் எண்டா.......... |