Yarl Forum
நேசிக்கப் பழகு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நேசிக்கப் பழகு (/showthread.php?tid=754)



நேசிக்கப் பழகு - சந்தியா - 02-22-2006

முள் தீண்டுகிறது
ஏன்பதற்காக
றோஜா மலரை வெறுக்கலாமா?
வேள்ளம் வருகிறது
என்பதற்காக
மழையை வெறுக்கலாமா?
சோகத்தின் பக்கத்தில்
சொர்க்கம் இருப்பதையும் நீ
சுகத்தின் பக்கத்தில்
துக்கம் இருப்பதையும் நீ
அறிந்து கொள்!
சில சோகங்களை
நேசிக்கப் பழகு
சில சோகங்களை
வாசிக்கப் பழகு
சோகங்கள் - உன்னை
சேதுக்கும் உளி - நீ
சிதையாதே!


து. செல்வக்குமார்


என்னை மிகவும் கவர்ந்த கவி


- RaMa - 02-22-2006

சுகத்தின் பக்கத்தில்
துக்கம் இருப்பதையும் நீ
அறிந்து கொள்!
சில சோகங்களை
நேசிக்கப் பழகு
சில சோகங்களை
வாசிக்கப் பழகு
சோகங்கள்

அழகான வரிகள்.
இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் சந்தியா.


- Selvamuthu - 02-22-2006

ஆமாம் சந்தியா அழகான கவி வரிகள்.
இணைத்தமைக்கு நன்றிகள்.

களத்திலே கவி ஊற்றுக்கள் நாளுக்குநாள் பெருகுகின்றனவே! பெருகட்டும்! தமிழன்னைக்குப் பெருமை சேர்க்கட்டும்.


- Eelam Angel - 02-22-2006

அழகிய கவி இணைத்தமைக்கு நன்றி சந்தியா


- அனிதா - 02-22-2006

கவி வரிகள் நன்றாக இருக்கு சந்தியா இணைத்தமைக்கு நன்றிகள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vishnu - 02-22-2006

<b>சோகங்கள் - உன்னை
சேதுக்கும் உளி - நீ
சிதையாதே!</b>

அருமையான வரிகள்..
எந்த கஸ்டத்தையும்.. சோகத்தையும்... வாழ்வின் படிகற்களாக... ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ளலாம். :roll:

கவிதையை இணைத்தமைக்கு நன்றிகள்.


- Vishnu - 02-22-2006




- தாரணி - 02-22-2006

வணக்கம் சந்தியா!

உங்கள் கவி நன்றாக உள்ளது.

நன்றி


- சந்தியா - 02-26-2006

கருத்துச் சொன்ன அனைவருக்கும் எனது நன்றிகள்


ஆமாம் ஐயா இப்போது களத்தில் கவிகளையும் கதையளையும் கூடுதலாக காணக்கூடியதாக இருக்கிறது இதனாலை இதை ஏற்படுத்திய யாழ் களத்திற்கும் தாய்மொழிக்கும் பெருமை தானே


- DV THAMILAN - 02-27-2006

கவிதை வரிகள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.