Yarl Forum
"சைக்கோ' கணவன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: "சைக்கோ' கணவன் (/showthread.php?tid=757)



"சைக்கோ' கணவன் - Shankarlaal - 02-22-2006

மனைவியை பேனாவால் குத்தி காயப்படுத்திய "சைக்கோ' கணவன்

<img src='http://www.dinamalar.com/2006feb22/photos/tn31.jpg' border='0' alt='user posted image'>

சென்னை: மனைவியை நிர்வாணப்படுத்தி பேனாவால் குத்தி காயப்படுத்திய "சைக்கோ' கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் கவிதா(24). இவருக்கும் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்த ஜெயச்சந்திரன்(28) என்பவருக்கும் கடந்த 2004ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 10வது நாளில் இருந்தே நகை, பணம் கேட்டு கவிதாவை அடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் கர்ப்பமான கவிதா திருவண்ணாமலையில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றார். பின்னர் கைக்குழந்தையுடன் சென்னை வந்தார். வாரத்தில் சில நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வந்து சென்ற ஜெயச்சந்திரன், "நீ அழகாக இல்லை. அழகான வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்று கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி "இரண்டு மூன்று நாட்களுக்கு தங்கும் வகையில் துணிகளை எடுத்துக் கொண்டு என்னுடன் வா' என்று கூறியுள்ளார். மயிலாப்பூரில் ஜெயச்சந்திரனுடன் வேலை பார்க்கும் காயத்ரி(34) என்ற பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஜெயச்சந்திரன், கவிதாவை தனி அறையில் அடைத்து வைத்தார்.


குழந்தையை தனி அறையில் வைத்து பூட்டி விட்டு, கவிதாவை நிர்வாணப்படுத்தி பணம், நகை கேட்டு கடுமையாக தாக்கியுள்ளார். அவரது உடல் உறுப்புகளை பேனாவைக் கொண்டு குத்தி சித்ரவதை செய்துள்ளார். சமையலறையில் இருக்கும் இடுக்கியை வைத்து உதட்டை பிடித்து இழுத்து காயப்படுத்தினார். இந்த சித்ரவதையின் போது அலறல் சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க கவிதாவின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார். இத்தனை கொடுமைகளையும் காயத்ரி வேடிக்கை பார்த்துள்ளார். சித்ரவதையை அனுபவித்த கவிதா அங்கிருந்து தப்பித்து எழும்பூரில் உள்ள உறவினர் வீட்டில் குழந்தையுடன் தஞ்சம் புகுந்தார். "சைக்கோ' கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் ஆர்.நடராஜிடம் நேற்று புகார் கொடுத்தார்.

http://www.dinamalar.com/


- Rasikai - 02-22-2006

அடக் கடவுளே. Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock: கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- jsrbavaan - 02-22-2006

அந்தக் காயத்திரியை முதலில் போட வேணும்.....


- ப்ரியசகி - 02-22-2006

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
இவங்களை எல்லாம் :twisted: :twisted: அந்த பொம்பிளை வேற :evil: சா :evil:


- RaMa - 02-22-2006

அந்த காயத்திரியை திருமணம் செய்வதற்கு தான் அப்படி எல்லாம் செய்தாரோ?
அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்கணும்


- sankeeth - 02-22-2006

பாவம் அந்த கவிதா. இனி அந்தக்குழந்தையின் நிலை? Cry Cry Cry


- Eelam Angel - 02-22-2006

:evil: :evil: :evil: :evil: :evil: இப்படிப் பட்டவர்கள் இருந்தென்ன இறந்தென்ன!! எத்தனையவது நூற்றான்டில் நாம் வாழ்ந்தாலும் இது மதிரி சில திருந்தாத ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! கவிதவிற்கு நீதி கிடைக்க வேண்டும்


- Niththila - 02-22-2006

பாவம் கவிதா அந்தக்கணவனை :evil: :evil: :evil: :evil: :twisted: