![]() |
|
இளங் கலைஞன் "நிரு" - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கலைகள்/கலைஞர்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=54) +--- Thread: இளங் கலைஞன் "நிரு" (/showthread.php?tid=768) Pages:
1
2
|
இளங் கலைஞன் "நிரு" - இளைஞன் - 02-21-2006 வணக்கம் அனைவருக்கும்... ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வரும் ஒரு இளம் இசைக் கலைஞன் தான் "நிரு". இவர் பாரிசில் பல இறுவட்டுக்களை வெளியிட்டிருக்கிறார். ஈழத்து கவிஞர்கள் எழுதிய பாடல் வரிகளை இந்தியத் தமிழ்ப் பாடகர்களையும், ஈழத்துப் பாடகர்களையும் கொண்டு பாடவைத்து இவர் வெளியிட்ட இறுவட்டுக்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளன. அந்தவகையில் தென்னிந்திய திரையுலகில் கலாபக் காதலன் என்கிற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். நமது கலைஞர்கள் நம்மவராலேயே புறக்கணிக்கப்படுகிற மிகக் கவலையான நிகழ்வுகளை நாம் அன்றாடம் எதிர்கொள்கிறோம். எம்மவரின் திறமைக்குரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்பது கவலையான விடயம். எம்மவரே எம்மைக் கண்டுகொள்ளாத நிலையில் இன்னொரு இடத்தில் எமது கலைஞன் வரவேற்கப்படுகிறான் என்பது மகிழ்வுக்குரியதே. இது முற்றுமுழுதாக அந்தக் கலைஞனின் திறமைக்கு, அந்த ஈழத்து இளங்கலைஞனின் முயற்சிக்கு கிடைத்த பலனே. இந்திய சினிமா ஊடகம் எதனால் எமது கலைஞனை உள்வாங்கியுள்ளது என்பது வேறுவிடயம். அதுபற்றி இங்குவேண்டாம். ஆனாலும் கலைஞனுக்குரிய அங்கீகாரம் அங்கு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கதே. அதனடிப்படையில் அந்தக் கலைஞன் அங்கு இசைத்துறையில் தனது முத்திரையை பதிக்கவும், ஈழத்தமிழ்க் கலைஞர்களுக்கு பெருமைசேர்க்கவும் வேண்டும் என நாமும் மனதாற வாழ்த்துகிறோம். அந்தக் கலைஞனின் வளர்ச்சிக்கு நாம் எம்மாலான ஆதரவை வழங்கவேண்டும். எப்படி? அந்தக் கலைஞன் இசையமைத்த பாடல்களை கேட்டு, அதற்கான எமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும். ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்து அந்த இளைஞன் மேலும் திறம்பட வளர்வதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும். நீங்கள் இங்கு யாழ்களத்தில் எழுதுகிற கருத்துக்கள் நிச்சயமாக அந்தக் கலைஞனை சென்றடையும். எனவே தயக்கமின்றி பாடல்களைக் கேட்டு இங்கு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நாம் கொடுக்கிற வரவேற்பும் அந்த இளங்கலைஞன் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து நிலைபெற உதவும் என்பதை மனதில்கொண்டு உங்கள் கருத்துக்கள இங்கே தெரிவியுங்கள். <b>கலாபக் காதலன்</b> இங்கே அழுத்தி பாடல்களைக் கேளுங்கள். mp3 பாடல்கள் எங்கும் தரவிறக்கக் கிடைத்தால் அவற்றையும் இணையுங்கள். உங்கள் கருத்துக்களை எழுதுவீர்கள் தானே? <b>நன்றி</b> - sinnakuddy - 02-21-2006 http://www.screenindia.com/fullstory.php?c...content_id=3382 வாழ்த்துக்கள் - SUNDHAL - 02-21-2006 ஆ ஆ வாழ்த்துக்கள்...நன்னா இருக்கு...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 02-21-2006 நன்றி இளைஞன் தகவல்களுக்கு. ஏற்கனவே கலாபக்காதலன் திரைப்படம் பற்றி நிறைய எதிர்பார்ப்புக்கள் உண்டு. உங்களது தகவல்கள் அதனை மேலும் அதிகரிக்க வைத்துள்ளன. பாடல்கள் கேட்டேன். நன்றாகவுள்ளன. ஒரு ஈழத்துக் கலைஞன் என்ற வகையில் அவரை வாழ்த்தி வரவேற்கின்றேன். அது போல் இந்தக் கலைஞனுக்கு சந்தர்ப்பம் அளித்து அவர் உயர்விற்கு வழி சமைத்த அனைவருக்கும் நன்றிகள். - jsrbavaan - 02-21-2006 நிருவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்... - KULAKADDAN - 02-21-2006 தகவலுக்கு நன்றி. பாடல்கள் நன்றாக வந்திருக்கிறன. இளம் கலைஞ்ருக்கு வாழ்த்துக்கள். அவர் தன் துறையில் மேலும் வளர இறையருள் கிட்டட்டும். - Mathan - 02-21-2006 இந்த இணைப்பில் நிரு இசையமைத்த கலாபக் காதலன் பட பாடல்களை எம்பி3 வடிவில் தரவிறக்கம் செய்யலாம் .... http://www.tamilbeat.com/tamilsongs/newrel...alabakKadhalan/ - Mathan - 02-21-2006 நிரு இசையமைத்த அல்பம் ஒன்றினை முன்பு கேட்டதாக நினைவு அதன் பெயர் மூங்கில் நிலாவாக இருக்க வேண்டும். கலாபக் காதலன் படத்திற்கு இசையமைத்து திரைப்பட இசையமைப்பாளராக மாறியுள்ள நிரு மேன் மேலும் வளர வேண்டும் நல்ல பாடல்களை தரவேண்டும் அவை புகழ்பெற வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். - tamilini - 02-21-2006 இணைப்பிற்கும் பாடல்களுக்கும் நன்றிகள். நமது கலைஞர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Selvamuthu - 02-21-2006 இசையால் வசமாகா இதயமெது? நல்லதொரு இசைமேதையாக கலையுலகிலே மிளிர எம் ஈழத்தமிழ் கலைஞனுக்கு எனது வாழ்த்துக்கள். - Aravinthan - 02-22-2006 நிருவுக்கு எனது வாழ்த்துக்கள் - Sujeenthan - 02-22-2006 பாடல்களை கேட்டேன். வித்தியாசமாக உள்ளது. வளர வாழ்த்துக்கள். - தூயா - 02-22-2006 வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் - சந்தியா - 02-22-2006 வாழத்துக்களும் பாராட்டுக்களும் நிருவுக்கு - shanmuhi - 02-22-2006 நிருவின் மூங்கில் நிலா பாடல்களைக் கேட்டு இருக்கிறேன். அருமை. தகவல் இணைத்த இளைஞனுக்கு நன்றிகள். வளரும் நிரு குழுவினருக்கு வாழ்த்துக்கள்... - Rasikai - 02-22-2006 இணைப்புக்கு நன்றி இளைஞன். பாடல்கள் நன்றாக இருக்கின்றன. அவர் இத் துறையில் மேலும் சிறந்து விளங்க இரசிகையின் வாழ்த்துக்கள் - RaMa - 02-22-2006 நிரு அவர்கள் மேலும் இத்துறையில் சிறப்புற வாழ்த்துக்கள் இணைப்புக்கு நன்றிகள் இளைஞன். - அனிதா - 02-22-2006 கலாபக் காதலன் பாடல்களை நானும் கேட்டுப்பார்த்தன் ...வித்தியாசமாக.. அருமையாக இருக்கு... நிரு அண்ணாவிற்க்கு பாரட்டுக்களும்..வாழ்த்துக்களும்..! நம் நாட்டுக் கலைஞர் ..அதுவும் இந்தியாவில் எடுத்த ஒரு படத்திற்க்கு இசையமைத்திருக்கார் எண்டால் நமக்கும் பெருமைதான்.,,, அவருக்கு வாய்ப்பளித்தவருக்கும் நன்றிகள்...அவருக்குள் இருக்கும் திறமையை இன்னும் வளர்த்து அவர் இசைத்துறையில் மேலும் வளர வாழ்த்துகிறேன்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Snegethy - 02-23-2006 அறிமுகத்துக்கு நன்றி இளைஞன்.ஏற்கனனே கேட்ட பாடல்களாக இருந்தபோதும் நம்மவர் ஒருவர் இசையமைத்த பாடல் என்றறிந்து திரும்ப பாடல்களைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. - samsan - 02-23-2006 நிருவின் மூங்கில் நிலா ஒலிப்பேலையில் இடம் பெற்ற பாடல்கள்போல் கலாபக்காதலன் திரையிசைப்பாடலும் நன்றாகவே இருக்கிறது.படம் பார்த்தேன் பின்னனி இசையிலே அங்காங்கே சில குறைகள் தெரிந்தாலும். இன்றைய இறைச்சலான திரையிசைக்கு முன்னால் ஒரு அழகான கவி போன்ற உணர்வைத்தரும் இசை நன்று. வாழ்த்துக்கள் நிரு. |