Yarl Forum
கண்காணிப்பு குழுவிற்கு புதிய தலைவர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கண்காணிப்பு குழுவிற்கு புதிய தலைவர் (/showthread.php?tid=767)



கண்காணிப்பு குழுவிற்கு புதிய தலைவர் - Mathan - 02-21-2006

இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவராக சுவீடன் நாட்டு பிரஜை நியமனம்

<img src='http://img52.imageshack.us/img52/7050/ulfh23mi.jpg' border='0' alt='user posted image'>


இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவராக சுவீடன் நாட்டு இராணுவ பிரிகேடியர் ஒருவரை நோர்வே அரசாங்கம் இன்று நியமித்துள்ளது.

இலங்கை போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இரு தரப்பினரின் ஆலோசனையின் பின்னர் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் உல்வ் கென்றிக்சன், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தனது பதவியை பொறுப்பேற்பார்.

இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போர் நிறுத்தக் கண்காணிப்பாளரும், சமாதான முயற்சிகளுக்கான மத்தியஸ்தர்களும் ஒரே நாட்டவர்களாக இருக்கக் கூடாது என்று இலங்கையின் புதிய ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் அண்மையில் வலியுறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

BBC tamil


- jsrbavaan - 02-21-2006

யார் வந்தாலும் இலங்கைப்படைகளின் அடாவடிதனங்கள் மட்டும் குறையாது
அவர்களுக்கு மக்கள்படை தான் சரி...........