![]() |
|
வங்காள முறை பாகற்காய் கறி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: வங்காள முறை பாகற்காய் கறி (/showthread.php?tid=765) |
வங்காள முறை பாகற்காய் கறி - KULAKADDAN - 02-21-2006 1 அல்லது 2 பாகற்காய்கள் 1/2 தேக்கரண்டி உப்பு 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1 நடுத்தர அளவுள்ள சீனிக்கிழங்கு 1 பெரிய உருளைக்கிழங்கு சிறிதளவு பீன்ஸ் நடுத்தர அளவுள்ள ப்ரோக்களி broccoli 3 மேஜைக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் 1 தேக்கரண்டி கரம்மசாலா 1 தேக்கரண்டி இஇஞ்சிநறுக்கியது 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் நறுக்கியது 1 பிரியாணி இலை 2 தேக்கரண்டி உப்பு ருசிக்கேற்ப 2 தேக்கரண்டி வெல்லம் செய்முறை பாகற்காயை வட்டம் வட்டமாக நறுக்கி அதில் உப்பு மஞ்சள் தூள் தடவி வைக்கவும். உருளைக்கிழங்கை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பீன்ஸ்களை சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும். பிரோக்களி காம்பை வெட்டி சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும். ஒரு வாயகன்ற வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அதில் பாகற்காய் துண்டங்களைப் போட்டு வறுக்கவும். பொன்னிறமாகும் வரை வறுத்து அதனை எடுத்து எண்ணெய் எடுத்து காகிதத்தில் வைக்கவும். மீத எண்ணெயை ஊற்றி அதில் கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து அதில் இஞ்சி. சிவப்பு மிளகாய் பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டு சற்று வதக்கவும். இதில் வெட்டிவைத்த காய்கறிகளைப் போட்டு 5 அல்லது 8 நிமிடங்கள் வதக்கவும். உப்பு, வெல்லம், ஒரு கோப்பை சுடுதண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். பாக்ற்காயையும் சேர்த்து மூடி கரம்மசாலா சேர்த்து மிருதுவாக வேகும்வரை வைக்கவும். இறுதியில் ஹாட் மஸ்டர்ட் என்ற திரவத்தை ஒரு தேக்கரண்டி சேர்த்தும் பறிமாறலாம். நன்றி... http://www.thinnai.com/cooking/co0812021.html - sabi - 02-21-2006 செய்முறை இணைப்புக்கு நன்றி குளம் அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 02-22-2006 குளம் நீங்கள் திறமான சமையல்காரர் ..........சா..........சமையல் செய்வீங்க எண்டு எங்களுக்கு தெரியும் ஆனா உடம்புக்கு ஆரோக்கியமான சமையல்கள் செய்வீர்கள் என்பது உங்கடை பாவற்காய் கறியைப் பாக்கேக்கை தெரியுது............. - சந்தியா - 02-22-2006 செய்முறை இணைப்புக்கு நன்றி அண்ணா - அனிதா - 02-24-2006 செய் முறைக்கு நன்றி குளம் அண்ணா... சரி அது என்ன வங்காள முறை பாகற்க்காய் கறி...... :roll: தெரிந்தவர்கள் சிரிக்காதீங்கப்பா.... :oops: :oops: உண்மையா தெரியவில்லை .... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- RaMa - 02-25-2006 இன்று தான் பார்த்தேன் செய்முறைக்கு நன்றி. - Rasikai - 02-25-2006 செய்முறைக்கு நன்றி குளம் ஆமா பிரியாணி இலை என்றால் என்ன>? - Mathan - 02-27-2006 <img src='http://img184.exs.cx/img184/9695/biryanyleaf2we.jpg' border='0' alt='user posted image'> ரசிகை, இதுதான் பிரியாணி இலை. இதை வசி ஏற்கனவே கோழி பிரியாணி தலைப்பில் போட்டிருக்கார் - Mathan - 02-27-2006 MUGATHTHAR Wrote:குளம் நீங்கள் திறமான சமையல்காரர் ..........சா..........சமையல் செய்வீங்க எண்டு எங்களுக்கு தெரியும் ஆனா உடம்புக்கு ஆரோக்கியமான சமையல்கள் செய்வீர்கள் என்பது உங்கடை பாவற்காய் கறியைப் பாக்கேக்கை தெரியுது............. முகத்தார், குளம் பெரும் லொள்ளு ஒவ்வொரு சாப்பாட்டிற்கும் ஒவ்வொரு குற்றம் குறை. எல்லா சத்துக்களும் இருக்கும் உணவை அதுவும் செய்ற்கை ரசாயன பொருட்கள் குறைவாக இருக்கும் உணவை தான் சாப்பிடுவாராம் - ப்ரியசகி - 02-27-2006 <b>பாகற்காய்..கைக்கும்...</b> சின்ன வயதில் படித்த ஞாபகம்..டீச்சர் பாகற்காய் என்றால்..நாங்கள்..பாகற்காய் கைக்கும் என்று சொல்ல வேண்டும்..இல்லண்ணா கை நோகும். இப்ப ஞாபகம் வந்திச்சு. அதற்காக குளம் அண்ணாவோட கறியை செய்து பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பாகற்காய் கறி நன்னா இருக்கும்..ஆனால் இது வங்காள முறை..வித்யாசமா இருக்கே...நிறைய போட்டு செய்றாங்க..ப்ரோக்களி கூட இருக்கு. நானும் அம்மாவை கேட்டு செய்து பார்த்து சொல்கிறேன்..நன்றி குளம் அண்ணா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 02-27-2006 Quote:குளம் பெரும் லொள்ளு ஒவ்வொரு சாப்பாட்டிற்கும் ஒவ்வொரு குற்றம் குறை. எல்லா சத்துக்களும் இருக்கும் உணவை அதுவும் செய்ற்கை ரசாயன பொருட்கள் குறைவாக இருக்கும் உணவை தான் சாப்பிடுவாராம் அப்படித்தான் இருக்க வேண்டும்..இல்லண்ணா அடிக்கடி வருத்தமென்று வேலைக்கு போகாமல் படுக்க வேண்டி வரும்.. :roll: |