![]() |
|
உணவு தொற்றுக்கள்/ உணவு மூலம் பரவும் நோய்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: உணவு தொற்றுக்கள்/ உணவு மூலம் பரவும் நோய்கள் (/showthread.php?tid=764) |
உணவு தொற்றுக்கள்/ உணவு மூலம் பரவும் நோய்கள் - KULAKADDAN - 02-21-2006 உணவு மூலம் ஏற்படும் தொற்றுக்கள், நஞ்சாக்கம் என்பன பல்வேறு நோய்களும், இறப்புக்களும் ஏற்பட காரணமாக இருக்கிறன. உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் பக்ரீரியா, பங்கசு, (பூஞ்சணம்), அமீபா, அல்லது வைரசுக்களாக இருக்கலம். இவை மனிதரில் நேரடியாகவோ அல்லது நச்சு பொருட்களை சுரப்பதன் மூலமோ பல்வேறுபட்ட நோய்களை ஏற்படுத்துகிறன. பெரும்பாலான உணவு பொருட்கள் இலகுவில் பழுதடையும் இயல்புடையதாகவும், நோயாக்கும் நுண்ணங்களின் மாசாக்கமும், அவற்றின் பெருக்கமும் உற்பத்தியாகும் இடம் முதல் உணவு உள்ளெடுக்கும் வரை நிகழவும், தொடர்ந்து பேணும் இயல்புடையதாகவும் இருக்கிறன. நுண்ணங்கிகளால் சுரக்கப்பட்ட நச்சு பொருட்கள் உணவு பரிகரிப்பின் போதோ/சமைக்கும் போதோ அழிக்கப்படாது மீந்து இருக்கலாம். உணவு பரிகரிப்பின் போது அழிக்கப்படாது மீந்து இருக்கும் நோயாக்கும் நுண்ணங்கிகள்/ பரிகரிப்பு முடிந்த பின் ஏற்படும் தொற்றுகள் என்பன மனிதரில் பாதிப்பை ஏற்படுத்த முடியும். வருடம் தோறும் மில்லியன் கணக்கான உணவு மூலமான நோய்கள் ஏற்படுவதாக உலக சுகாதார தாபனம் கணக்கிட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உணவு மூலம் ஏற்படும் நோய்களால் வருடாந்தம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பில்லியன் ஈரோக்கள் இழப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போதைய் சூழ்நிலையில் புதிய அதிக வீரியம் உள்ள நோயாக்கிகள் உருவாகி வருவது மிக சிக்கலான விடயமாக உள்ளது. முழுமையான கிருமி நீக்கமும், தொற்றில்ல பொதியாக்கமும் உணவின் மூலம் ஏற்படும் நோயாக்கத்தை குறைப்பதில் முக்கிய இடம் வகிக்கிறன. ஆயினும் நுண்ணங்கிகளால் உருவாக்கப்படும் நச்சு பொருட்கள் நோய்களை ஏற்படுத்தமுடியும். கிருமிநீக்கம் மிகவும் தீவிரமான பரிகரிப்புமுறையாக இருப்பதால் உணவின் போசனை கூறுகளும் அதிகளவில் இழக்கப்பட காரணமாகிறது. அத்துடன் உணவின் உண்ணும் தரத்தை பாதிக்கிறது. கடந்த நூறு வருடங்களில் நுண்ணுயிரியலில் ஏற்பட்ட அபிவிருத்தியானது உணவு தயாரிப்பில் முக்கிய பங்கற்றுகிறது. வெப்பமாக்கல், குழிரூட்டல், வடிகட்டல், கதிர்வீச்சு பயன்பாடு , இரசாயன நற்காப்பு பொருட்கள் சேர்த்தல் என்பன பாரம்பரியமாக உணவு மூலம் பரவும் நோய்களை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. நுண்ணங்கிகளுக்கிடையிலான இடைத்தொடர்புகள்,இடைத்தக்கங்கள், உணவு நொத்திதல் மூலம் பாதுக்காத்தலில் பயன்படுத்தப்படுகிறது. உணவின் உள்ளடக்கத்திற்கும் (போசணை பொருட்களின் அளவு) ஒட்சிசன் உப்பு அமில தன்மை இயற்கை நற்காப்பு பொருட்கள் என்பவற்றுக்கிடையிலான தொடர்பும் உணவு மூலம் ஏற்படும் நோய் தொற்றுக்களை குறைப்பதில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தொடரும்.................... (எனக்கு நேரம் கிடைக்கும் பொழுதுகளில் மிகுதி பகுதியை தொடராக எழுதுகிறேன்.) - இளைஞன் - 02-21-2006 நன்றி குளம். பயனுள்ள ஆக்கம். தொடர்ந்து எழுதுங்கள். களத்தில் இவைபோன்ற ஆக்கங்கள் வருவது மகிழ்வை அளிக்கிறது. வாசித்து விளங்காதவற்றையும் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்கிறோம். நன்றி மீண்டும். - Rasikai - 02-21-2006 பயனுள்ள ஆக்கத்தை தந்தமைக்கு நன்றிகள் குளக்கோட்டன் |