| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 192 online users. » 0 Member(s) | 190 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,297
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,623
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,050
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,457
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| உலக நடப்பு |
|
Posted by: Mathan - 05-14-2004, 12:15 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (4)
|
 |
இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்
<b><span style='color:#f50000'>இந்தியா
பாஜக 187
காங்கிரஸ் 216
மற்றவை 134
[b]தமிழ்நாடு</b>
திமுக 40
அஇஅதிமுக 00
மற்றவை 00
</span>
நன்றி - வெப் உலகம்
|
|
|
| தொட்டில் மரணம் |
|
Posted by: AJeevan - 05-04-2004, 02:17 PM - Forum: மருத்துவம்
- Replies (2)
|
 |
[align=center:930ef1bdf7]<img src='http://www.kumudam.com/sinegithi/010404/pg-6t.jpg' border='0' alt='user posted image'>[/align:930ef1bdf7]
சென்னையின் பிரபல மகப்பேறு மருத்துவமனை அது. நன்றாக இருந்த அந்தக் கைக்குழந்தை தூங்கும்போதே திடீரென்று இறந்து போனது. எந்தக் காரணமும் இல்லாமல் இப்படி பொசுக்கென்று கைக்குழந்தைகள் இறந்து போவதை தொட்டில் மரணம் (கிரடில் டெத்) என்கிறார்கள் மருத்துவர்கள். என்னதான் நடந்தது?
அதிகாலை நேரம்... குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்டவுடனே மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்த அந்தத் தாய்க்கு ஸ்விட்சை ஆன் செய்ததுபோல் சட்டென்று விழிப்பு தட்டியது. குழந்தை பிறந்து இரண்டு நாட்களே ஆன நிலையில்... அதுவும் சிஸேரியன் பிரசவம் என்பதால் அவரால் எழ முடியவில்லை. துணைக்கு வந்திருந்த சகோதரியை எழுப்பினார். வாரி சுருட்டிக்கொண்டு எழுந்த சகோதரி, மடமடவென்று குழந்தைக்குப் பால் புகட்டினார். பாலைக் குடித்த குழந்தை உறக்கத்தில் ஆழ்ந்தது. அந்த உறக்கம், குழந்தையை மீளாத துயிலுக்கு அழைத்துச் செல்வதற்கான ஒத்திகை என்பதை உணராமல் வெளியே இருள் பிரிந்து கொண்டிருந்தது.
விடிந்தது... அன்றாட செக்_அப் செய்ய வந்த நர்ஸ், குழந்தையின் உயிர்மூச்சு நின்று போயிருந்ததை உணர்ந்து கொண்டார். தயக்கத்துடன் அவர் விஷயத்தைச் சொல்ல, அதிர்ச்சியில் உறைந்து போனது அந்தத் தாயின் உள்ளம். ‘குழந்தை நல்லாத்தானே இருந்துச்சு. நைட்டு பாலுக்கு அழுதுச்சே! நல்லா பால்கூட குடிச்சுச்சே... அதுக்குள்ள என்ன ஆச்சு?’ என்று கேவலுடன் வெடித்து அழுதார் அந்தப் பெண்.
சடன் இன்ஃபேன்ட் டெத் சிண்ட்ரோம், (சுருக்கமாக ‘சிட்ஸ்’), கிரெடில் டெத் என்று விதவிதமான பெயர்களில் இதைப்பற்றி டாக்டர்கள் விளக்கிச் சொன்னாலும் அந்தத் தாய்க்கு தன் குழந்தை கிடைக்கப் போவதில்லை!
சத்தமே இல்லாமல் வந்து கைக்குழந்தைகளின் உயிர்மூச்சை, அமைதியாக நிறுத்தி இப்படி கொடூரம் செய்யும் இந்த தொட்டில் மரணம் என்பது என்ன? எப்படி இது நிகழ்கிறது? என்ற பல தாய்மார்களின் பதற்றமான இந்தக் கேள்விக்கு விளக்கம் தருகிறார் குழந்தைகள் நிபுணரான டாக்டர் பாலச்சந்திரன்.
‘‘நல்லபடியாக, ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைக்குக்கூட இதுபோன்ற அபாயம் நேரலாம். ஒரு விஷயம்... குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்தான் இப்படி நிகழ வாய்ப்பிருக்கிறது.
அதிலேயும் குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களில்தான் இந்த ஆபத்து அதிகம் நிகழ்கிறதாம். குறிப்பாக, குழந்தை பிறந்த இரண்டாவது மாதத்தில் இருந்து நாலு மாதம் வரைதான் ஆபத்து மிக அதிகம்.
சத்தம் இல்லாமல்... வலி இல்லாமல்... எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல்... குழந்தைகள் உறங்கும்போது திடுதிப்பென்று நிகழும் மரணம் இது.
பெரும்பாலும் இதுபோன்ற தொட்டில் மரணங்கள் குளிர்காலத்தில்தான் ஏற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரி, எந்த மாதிரியான குழந்தைகளுக்கு இதுபோன்ற ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்?
லிஸ்ட்டில் முதலில் வருவது ப்ரீமெச்சூர் குழந்தைகள்! அடுத்து குறிப்பிட்ட அளவு இல்லாமல், எடை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஆபத்து இருக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம்... ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து அதிகம் நிகழ வாய்ப்பிருக்கிறது.
இதெல்லாம் ஒரு பொதுவான கணக்குதான். இந்த பிரிவுகளில் உட்படாத குழந்தைகளுக்கும் இந்த ஆபத்து ஏற்படக்கூடும்.
குழந்தைக்கு இப்படியரு ஆபத்து ஏற்படுவதில் தாய்மார்கள் எந்த வகையிலாவது காரணமாகிறார்களா?
ஆமாம்.. இருக்கிறது! அனீமியா என்ற இரத்தசோகை நோயால் தாய் பாதிக்கப்பட்டிருந்தாலோ.. அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் இருபதுக்கும் குறைவான வயதுடையவளாக இருந்தாலோ குழந்தைக்கு இந்த ஆபத்து நிகழலாம்.
தவிர, புகை பிடிப்பது, குடிப்பது, போதை மருந்து உட்கொள்வது போன்ற பழக்கங்களை உடைய தாய்க்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும், இந்த ஆபத்து நிகழ்வதற்கான வாய்ப்பிருக்கிறது.
இதையும் பொதுவாகத்தான் சொல்லலாமே தவிர, இந்தக் காரணத்தினால் இந்த ஆபத்து ஏற்படும் என்று திட்டவட்டமாக சொல்ல முடியாது! மேலே குறிப்பிட்ட பழக்கங்களோ, பிரச்சினைகளோ இல்லாத தாய்மார்களின் குழந்தைகளுக்கும் கூட, சத்தமில்லாத இந்த தொட்டில் மரணம் நிகழலாம் என்பதுதான் துரதிர்ஷ்டவசமான உண்மை!
சரி இப்படியரு ஆபத்து ஏற்படுவதற்கான காரணங்கள் எவை?
காரணம் என்னவென்று தெரிந்தால்தான், சத்தமில்லாமல் வரும் இந்த அசுரனை முற்றிலும் தடுத்துவிட முடியுமே! எதனால் இந்த ஆபத்து ஏற்படுகிறது என்பதற்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன... கூடவே அவற்றைப் பற்றியஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன! ஆனாலும்கூட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த ஆபத்தை பெரிய அளவில் தடுக்க முடியும். இதோ கீழே சொல்லப்படும் விஷயங்களை கவனமாகப் பின்பற்றுங்கள்..
முதலாவது, குழந்தைகளை குப்புறப் படுக்க வைத்து உறங்க வைப்பதை கண்டிப்பாகத் தவிருங்கள். குப்புறப் படுக்க வைக்கும்போது குழந்தையின் உடல் எடை அதன் மென்மையான மார்பு எலும்புகளை அழுத்துவதால் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
குழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்தே பழக்கவேண்டும். இப்படிப் படுக்க வைப்பதால் குழந்தைகளுக்கு மேலே சொன்ன ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 30_50 சதவீதம் வரைக்கும் குறைகிறது என்கின்றன ஆராய்ச்சிகள்!
பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் புகைப்பிடிக்கக் கூடாது. நம்மூரில் பெண்களிடம் இந்தப் புகைப்பிடிக்கும் வழக்கம் அதிகம் இல்லைதான். ஆனால், தவிர்க்க முடியாமல் புகைப்பிடிப்பவர்களின் அருகாமையில் சில பெண்கள் இருக்க வேண்டியதாக இருக்கிறது. இதைத் தவிர்த்து விடுங்கள்.
கிராமப்புறங்களில் சுருட்டு போன்றவை பிடிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். இவர்களும் இதைத் தவிர்த்துவிட வேண்டும்!
குழந்தைக்கு மனத்திருப்தியுடன் தாய்ப்பால் தாருங்கள்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது.
கட்டாயப்படுத்தி குழந்தைக்கு பால் புகட்டாதீர்கள். அது பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும் கூட, ஏப்பம் எடுத்துவிட்டபிறகே குழந்தையை படுக்கையில் கிடத்துங்கள்!
பொதுக் பொதுக் என்று அமுங்காத, உறுதியான ஒரு படுக்கையில் குழந்தையைப் படுக்க வையுங்கள்!
குழந்தை படுத்திருக்கும் அறையில் ‘நோ ஸ்மோக்கிங்’ என்று போர்டு வையுங்கள்.
குழந்தை அருகே கொசுவத்தி சுருள் ஏற்றி வைப்பதையும்கூட தவிர்க்கவும். அதன் புகையும்கூட குழந்தைக்குக் கெடுதல் விளைவிக்கும். கொசுவலை பயன்படுத்தி பழக்குங்கள்.
குடிப்பழக்கம் அல்லது போதை மருந்து பழக்கம் உடையவர்கள் யாராவது இருந்தால், கண்டிப்பாக அவர்களை குழந்தையின் அருகில் படுக்க அனுமதிக்க வேண்டாம்!
மொத்தத்தில் உங்கள் பட்டுப் பாப்பாவை கவனமாக பொறுப்புடன் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு உண்மை என்ன தெரியுமா?
மேலை நாடுகளோடு ஒப்பிட்டால் நம் தமிழகத்தில் இப்படிப்பட்ட குழந்தை மரணங்கள் குறைவுதான்.
காரணம், மேலை நாடுகளில் குழந்தைகளைப் பெற்றோர் தனியாகப் படுக்க வைப்பதுதான். தனியாக படுப்பதால் கதகதப்பையும் ஒரு பிடிமானத்தையும் தேடி, குழந்தை குப்புற கவிழ்ந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம்! இதைப் போன்ற சமயங்களில் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென்று தொட்டில் மரணம் நிகழ்கிறது.
நம்மூர்களில் பெரும்பாலும் நாம் நம் அணைப்பிலேயே குழந்தையை (மல்லாக்க) படுக்க வைத்து மென்மையாகத் தட்டிக் கொடுத்து தூங்க வைப்பதால், அந்த ஸ்பரிசமும், அணைப்பும் கிடைத்த நிம்மதியில் குழந்தை பெரும்பாலும் அப்படியே தூங்கிவிடுகிறது! அணைப்பும் ஆதரவும் எவ்வளவு முக்கியம் என்பதைப் பாருங்கள்!
ஒரு விஷயத்தை நான் முக்கியமாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எதிர்பாராத நிலையில் இதுபோன்ற சத்தமில்லாத ஆபத்தால் தங்கள் குழந்தையை இழந்த பெற்றோர்... குறிப்பாக அந்தத் தாய், தன் அலட்சியத்தால்தான் குழந்தை இறந்துவிட்டதோ என்ற குற்ற உணர்வுக்கு ஆளாகி அவர்கள் தங்களைத் தாங்களே வதைத்துக் கொள்வதுண்டு. இந்தக் குற்ற உணர்ச்சி தேவையற்றது. என்னதான் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் குழந்தையைப் பார்த்துக் கொண்டாலும் சத்தமில்லாத, சரியாகக் காரணங்கள் தெரியாத இந்த ஆபத்து நிகழ்வதை தவிர்க்க முடியாமல் போகலாம்.
தேவையில்லாமல் உங்களை நீங்களே வதைத்துக் கொள்வதில் எந்தப் பலனும் இல்லை. இப்படி பாதிப்பு ஏற்பட்டவர்கள் முதலில் ஒரு நல்ல மனோநல நிபுணரிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது!’’ என்றார் டாக்டர் பாலச்சந்திரன்.
_சு.சசிரேகா
Kumudam
|
|
|
| பார்த்தவரை போதாது |
|
Posted by: Mathan - 05-04-2004, 01:59 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- No Replies
|
 |
விழித்திரையில் லேசர் அலகி மூலம் கூடுதல் படங்கள்
<img src='http://www.tamillinux.org/venkat/myblog/archives/laser_retinal_scanner_concept.jpg' border='0' alt='user posted image'>
மைக்ரோவிஷன் என்ற நிறுவனம் நாம் கண்ணால் காணும் காட்சிகளுடன் கூடவே, மேலதிக விபரங்களையும் விழித்திரையில் நேரடியாகச் சேர்க்கும் கருவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
உதாரணமாக, நாம் ஒரு காரின் இயந்திரத்தைப் பார்க்கிறோம். அதிலிருக்கும் பாகங்களின் வடிவமைப்பு மற்றும் பெயர் அத்துடன் கூடவே காட்டப்பட்டால் எப்படியிருக்கும்.
இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரியவேண்டுமா, மருத்துவர் ஒருவரின் குடலைத் திறந்து சிகிச்சை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக, குடலில் இருக்கும் புற்றுநோயை நீக்கும் அறுவை. அப்பொழுது அவர் பார்த்துக்கொண்டிருக்கும் குடலின் மீது சற்று நேரத்திற்கு முன் எடுத்த எக்ஸ்.ரே படம் கூடவே தெரிந்தால் எப்படியிருக்கும். (சில சமயம் விகடன் தீபாவளி மலர்களில் கடவுள் படங்களின் மீது ஒருவித 'வெண்ணெய்த்தாள்' இணைக்கப்பட்டிருக்கும். அந்த வெண்ணைத்தாளில் சில மந்திரங்கள் அல்லது பாடல்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இப்படி நேரடியாகக் காணும் காட்சியுடன் மேலதிகத் தகவல்களை நேரடியாக கண்களில் சேர்ப்பதுதான் மைக்ரோவிஷனின் உத்தி.
இது எப்படிச் சாத்தியமாகிறது? கண்களில் 'திரையிடப்பட வேண்டிய' வரைபடத்தை ஒரு கணினி உருவாக்கும். பயனர் கண்ணாடியில் ஒரு சிறிய கருவி பொருத்தப்படும். அதிலிருக்கும் செலுத்தியில் அந்தத் தகவல் (கிட்டத்தட்ட கணினி விழியத்தில் VGA Adapter தரும் தகவல்களைப் போல) வந்து சேரும். பெரும்பாலும் கோட்டு வரைபடங்களாகத்தான் இந்தத் தகவல்கள் இருக்கும் (உதாரணமாக, ஒரு கார் எஞ்சினின் வரைபடம்). அங்கிருக்கும் லேசரை X-Y திசைகளில் விரைவாக நகர்த்துவதால் அந்தக் கோடுகள் உருவாக்கப்படும். அந்தத் தகவல் சில ஆடிகள் மற்றும் வில்லைகளின் உதவியால் சரியான அளவிற்கு மாற்றப்பட்டு கண்ணின் விழித்திரையில் திரையிடப்படும்.
ஏன் இப்படிச் செய்யவேண்டும்? புதிதாக கார் பழுதுபார்த்தலைக் கற்றுக்கொள்ளும் ஒருவருக்கு, அடிக்கடி புத்தகத்தைத் திறந்து வரைபடத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கும். என்ன இருந்தாலும் வரைபடத்தில் குறைந்த அளவில், இருபரிமாணத்தில் பார்ப்பதை வைத்துக்கொண்டு புரிந்துகொள்வது கஷ்டம்தான். அதற்குப் பதிலாக இயந்திரத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது அந்த வரைபடம் காட்சியளித்தால் அவர் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்தானே. இதைத் தான் ஹோண்டா பயிற்சி நிலையம் மைக்ரோவிஷன் உதவியுடன் செய்கிறது.
இன்னும் மேலே சொன்னதுபோல் மருத்துவர்கள் சிகிச்சையளிக்கும் பொழுது உதவிக்கு வரைபடங்கள், அல்லது இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை போன்ற தகவல்களை அளித்து உதவமுடியும். கடலுக்குள் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சோனார் மூலம் கிடைக்கும் தகவல்களை வரைபடங்களுடன் கூட நேரடியாக அளித்து உதவமுடியும். இராணுவத்தில் நிலவரைபடத்தை கண்களில் காட்டி செல்லும் திசையை நேரடியாகப் புரிந்து கொள்ளச் செய்யமுடியும். இப்படிப் பல வழிகளில் இது உதவியாக இருக்கும்.
லேசரைப் பயன்படுத்தக் காரணம் என்ன? லேசர்களுக்கு சில அதி உயர் பண்புகள் உண்டு, அவை சாதாரண ஒளிக்கதிர்களைப் போல விரிவடைந்து திறனை இழப்பதில்லை. ஒரு மெல்லிய இழைபோல நேர்க்கோட்டில் அதிக இழப்பில்லாமல் பயனிக்கும். அவற்றுக்கு மிக அதிக தொலைவு ஒப்புமை (Directional Coherence or Temporal Coherence) இதன் மூலம் இவற்றை துல்லியமாக ஒரு திசையில் செலுத்தமுடியும். இன்னும் முக்கியமான விஷயம், லேசர்களின் இந்த ஒப்புமை திறத்தால் இவற்றை மிகச் சிறிய புள்ளியில் குவிக்கமுடியும் (Diffraction-limited focusing). எனவே விழித்திரை போன்ற அவ்வளவு சிறிய துல்லியமான இடத்தில் திரையிட லேசர்களை விட்டால் வேறு வழியில்லை.
இப்படி நேரடியாக லேசரை கண்களுக்குள் பாய்ச்சுவதால் ஆபத்தில்லையா? பொதுவில் லேசர்கள் ஆபத்தானவைதான். ஆனால் இங்கு 'அலகிடும் லேசர்கள்' (Scanning Lasers) என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் மிகவிரைவாக ஆடியைத் தொடர்ச்சியாகத் திருப்புவதன்மூலம் லேசரின் திசையை மாறிக் கொண்டேயிருக்கும். நம் கண்களுக்கு ஒரு புள்ளியில் பார்வையைக் குவிக்கும் திறன் 0.25 நொடிக்கு மேல் கிடையாது (வேறு வார்த்தைகளில் சொன்னால், கால் நொடிக்குமேல் நம்மால் ஒரு திசையில் பார்த்துக்கொண்டிருக்க முடியாது, விழிக்கோளம் அசைந்து மாற்றிவிடும்). இந்த அலகிடும் முறை, கண்ணின் சிமிட்டல் திறன் (Blink Response) இரண்டையும் கொண்டு கண்ணின் எந்த ஒருபகுதியிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் லேசர் பாயமல் பார்த்துக் கொள்ள முடியும். இதன் மூலம் அவற்றின் ஆபத்து தவிர்க்கப்படும். என்ன சிக்கலாக இருக்கிறதா? இதே முறையில்தான் நம் அங்காடியில் பார்கோட் அலகிடும் கருவிகள் செயல்படுகின்றன.
இந்தக் கருவிக்கு வருங்காலத்தில் நிறையப் பயன்கள் இருக்கும்.
* * *
இனி கொஞ்சம் தனி விஷயம். கிட்டத்தட்ட இதேபோல ஒரு கருவியை ஒரு நிறுவனத்திற்கு வடிவமைக்கும் முயற்சியில் இப்பொழுது நான் இருக்கிறேன். நான் வடிவமைத்துக் கொண்டிருப்பது கொஞ்சம் வித்தியாசமானது. இதன் பெயர் விபரம் காட்டும் தலைக்கவசம் (Helmet Mounted Display). சில மாதங்களுக்கு முன்னால் பார்முலா-1 கார் பந்தய வீரர் மிகைல் ஷ்உமாக்கர் (Michael Schumacher) ஒரு புதிய தலைக்கவசத்தைச் சோதித்துப் பார்த்தார். அவருடைய பார்வை நேராக இருக்க, காரின் வேகம், இயந்திரச் சுழற்ச்சி போன்ற முக்கிய தகவல்கள் அவருடைய பார்வையில் நேரடியாகச் சாலையில் தெரியுமாறு காட்டப்பட்டன. இதனால் வேகமாகச் செல்லும்பொழுது காரின் நிலவரம் தேடி அவர் கண்களைச் சாலையிலிருந்து எடுக்கவேண்டிய அவசியமில்லை. அவருக்கு இந்தக் கவசம் மிகவும் பிடித்துப் போயிருப்பதாகச் சொல்கிறார்கள். விரைவில் அவருடைய தம்பியும் இன்னொரு பந்தய வீரருமான ரால்?ப் ஷ்மாக்கரும் (Ralf Schumacher), மெக்ளாரன் காரோட்டி டேவிட் கூத்தார்ட் (David Coulthard) -ம்கூட இதுபோன்ற கவசங்களைச் சோதித்து வருகிறார்கள். இந்தக் கவசங்களை உருவாக்கும் நிறுவனம் ஜெர்மனியைச் சேர்ந்த Schuberth என்ற நிறுவனம். பார்முலா-1 கவசம் என்றால் என்ன விலை என்பதை அறிந்துகொள்ளமுடியும்.
<img src='http://www.tamillinux.org/venkat/myblog/archives/kopin_display.jpg' border='0' alt='user posted image'>
இப்பொழுது நான் ஈடுபட்டிருக்கும் வடிவமைப்பு இதேபோன்ற கவசத்தைச் சராசரி ஸ்கீயிங் ஆர்வலர்களுக்கும் கைக்கெட்டும் வகையில் விலையைக் குறைத்துச் செய்வது. மலைச் சரிவில் அதிவேகத்தில் இறங்கிக்கொண்டிருப்பவர் தன்னுடைய வேகம், இருக்குமிடம் (GPS) போன்ற விபரங்களைக் கவசத்தில் நேரடியாகக் காட்டும் முயற்சி. இதில் நான் பயன்படுத்தும் கருவிகளுக்குள்ளே என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது 1.1 செ.மி அளவுள்ள திரைதான். அதாவது கிட்டத்த உங்கள் கட்டைவிரல் நகத்தில் கணினியின் முழுத்திரையையும் காட்டும் உத்தி. இதைத் தயாரிப்பவர்கள் கோப்பின் என்ற நிறுவனம். இதற்கு மேல் இதைப் பற்றி நான் இங்கே எழுதினால், எனக்குப் பணம் கொடுக்கும் நிறுவனத்தினர் என்னைத் தொலைத்துவிடுவார்கள்.
நன்றி - வெங்கட்
|
|
|
| §¸ûÅ¢-À¾¢ø ; ¸õÀ¢äð¼÷ ºõÀó¾Á¡É¨Å |
|
Posted by: E.Thevaguru - 05-04-2004, 01:58 PM - Forum: கணினி
- Replies (14)
|
 |
<b>கேள்வி-பதில்-À¡¼õ-1</b>
1) எனது கம்பியூட்டரில் வேலை செய்துகொண்டிருக்கும்போது அடிக்கடி Reboot ஆகின்றது. இதனால் வேலைகள் தடைப்படுவதோடு எரிச்சலையும் ஏற்படுத்துகின்றது. இதற்கு காரணம் எதுவாயிருக்கும்?
2) ATX பாங்கு (Style) மின் வினியோகத்தில் மதர்போட்டிற்கு மின்விநியோகிப்பதற்காக பொருத்தப்படும் கனெக்டரின் பெயர் என்ன?
3) பழுதாய்ப்போன CD-Rom drive கழற்றிவிட்டு அதனால் கம்பியூட்டரின் முன் பக்கத்தில் ஏற்பட்ட இடைவெளியை அடைக்காமல் விடுவதனால் ஏற்படும் தீமை ஏது?
4) ATX மின் சப்ளை கீழ்காணும் மின் அழுத்தங்களை கம்பியூட்டருக்கு விநியோகிக்கின்றது ஒன்றை தவிர, அது எது?
2-0 V, 3.3 V, 5.0 V, 12.0 V.
5) கம்பியூட்டரை கழற்றி திருத்தம் செய்வதற்கு முன், பாகங்கள் பழுதாவதை தவிர்ப்பதற்காக நாம் செய்யவேண்டிய முதல் வேலை என்ன?
6) ஒரு சாதாரண பிளாஸ்ரிக் பாக் ஐ நாம் அளையும்போது எம்மிடம் ஏற்றப்படும் Electrostatic Voltage எதுவாக இருக்கும்?
10.0 V, 100.0 V, 500.0 V, 1200.0 - 20000.00 V, இதில் எது சரி?
பரிசோதனையாக இது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, வரவேற்பிருப்பின் கேள்விகள் தொடரப்படும். பதில்களை நீங்கள் ஒரிரு வரிகளில் இடலாம்.
பதில்களை 6வது போஸ்ற் இல் காணலாம்
|
|
|
| þÉõ «øÄÐ «¨¼Â¡Çõ ¸¡Ï¾ø |
|
Posted by: E.Thevaguru - 05-04-2004, 11:00 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (1)
|
 |
இனம் அல்லது அடையாளம் காணுதல்
இவையிரண்டும் வெவ்வேறு அர்த்தம்கொண்ட இரு வேறு சொற்கள்.
இனம்: என்பதன் அர்த்தம் :- வகை, தொகுதி, சாதி, வர்க்கம், குலம், திரள், பசுக்கூட்டம், சுற்றம், ஆசாமி என்பதாகும்.
அடையாளம்: என்பது:- அங்கம், இலக்கணம், இலாஞ்சணம், அறிகுறி, குறிப்பு, இலட்சினை, முத்திரை, அங்கமச்சம், சின்னம் என்பதாகும்.
1) கள்வன் யார் என இனம் காணப்படவில்லை என்பது தவறாகும்
2) நோயை ஏற்படுத்திய கிருமி எது என இனம் காணப்படவில்லை என்பதும் சரியே.
காரணம் கிருமி பக்ரீரியாவா? வைரஸா? எத்தொகுதியை சேர்ந்தது என்பது பற்றியதாகும்.
3) நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது எனகூறப்படுவதே தவிர இன அணிவகுப்பு
நடைபெற்றது என கூறப்படுவதில்லை.
4) கைவிரலில் மைபூசி அடையாளப்படுத்தப்படுகிறது (சரி)
5) மக்கள் மத்தியில் உள்ள துரோகிகளை நாம் இனம் காணவேண்டும் (தவறு)
அடையாளம் காணவேண்டும் என்பதே சரியாகும்.
6) இந்த ஆடு எந்த இனத்தை சேர்ந்தது? (சரி). ஜமுனாபாரியா அல்லது வேறு ஏதாவதா?
7) சூத்திரதாரிகள் யார் என இனம் காணப்படவில்லை என்பது தவறு. அடையாளம் காணப்படவில்லை என்பதே சரியாகும்.
அத்தோடு நிலைபரம் என்பதுதான் சரியான சொல், நிலவரம் அல்ல என்பதையும் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.
எனவே இந்த விடயத்தை கவனித்து மொழி திரிபுபடுவதை தடுத்து நிறுத்த உதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
|
|
|
| மூன்றெழுத்து |
|
Posted by: இளைஞன் - 05-02-2004, 07:48 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
<b>மூன்றெழுத்து</b>
எச்
ஐ
வி
நிராயுதபாணிகளுக்கு
எச்சரிக்கை!
டபிள்யூ
டபிள்யூ
டபிள்யூ
தொழில்நுட்பத்தின்
எச்சம்!
டபிள்யூ
ரி
சி
போர் தொடக்க
உடன்படிக்கை!
யு
எஸ்
ஏ
பயங்கரவாதத்தின்
தேவதை!
முடிவு
அழிவு!
------------------------------------------------
பிகு: இது வார்ப்பு இணையத்தளத்தின் கடந்த மாத இதழில் இடம்பெற்ற எனது கவிதை. www.vaarppu.com
|
|
|
|