![]() |
|
உலக நடப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: உலக நடப்பு (/showthread.php?tid=7153) |
உலக நடப்பு - Mathan - 05-14-2004 இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் <b><span style='color:#f50000'>இந்தியா பாஜக 187 காங்கிரஸ் 216 மற்றவை 134 [b]தமிழ்நாடு</b> திமுக 40 அஇஅதிமுக 00 மற்றவை 00 </span> நன்றி - வெப் உலகம் - Mathan - 05-14-2004 மத்தியில் சோனியா காந்தியின் ஆட்சி, தமிழ்நாட்டில் கருணாநிதி கூட்டணி அமோக வெற்றி மக்கள் தெளிவாகவே உள்ளார்கள் என்று பாராட்டியுள்ளார் கலைஞர் கருணாநிதி அவர்கள். இந்தியாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், யாரும் நம்பமுடியாத முடிவுகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, வாஐ;பாயின் பா.ஐ.கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நம்பகமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன், காங்கிரஸ் ஆட்சியமைப்பது முடிவாகியுள்ளது. தமிழ்நாட்டில், nஐயலலிதாவின் கட்சியை முற்றாக ஓரங்கட்டியுள்ளார்கள் தமிழ்நாட்டு மக்கள். தி.மு.க. தலைமையிலான தேசிய ஐனநாயக முன்னணி கிட்டத்தட்ட அத்தனை ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. மொத்தமுள்ள 40 ஆசனங்களையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியுள்ள நிலையில், ஒரு ஆசனம் கூடக் கிடைக்காமல், அ.இ.அ.தி.மு.க.வுடன் இணைந்த பாரதீய ஐனதா கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் ரஐனிகாந்தும் படுதோல்வியடைந்துள்ளார்கள். புதினம் - Mathan - 05-14-2004 ரஜினிக்கு முக்காடு போட்ட மக்கள்: ராமதாஸ் தமிழக மக்கள் ரஜினியை முக்காடு போட்டு மூலையில் உட்கார வைத்துவிட்டனர் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். ரஜினியின் கடும் எதிர்ப்பு, ரசிகர்களின் பிரச்சாரத்தையும் மீறி போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் பா.ம.க. வெற்றி பெற்றுள்ள நிலையில் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சோனியா காந்தியை பதிபக்தி இல்லாதவர் என்று தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்தித் தாக்கிய முதல்வர் ஜெயலலிதா, எங்கள் கூட்டணியின் பிற தலைவர்களையும் கேவலமாக விமர்சித்தார். ஜெயலலிதாவின் கண்ணியமற்ற செயல்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள். ஒரு மாநிலத்தை ஆளும் கட்சி எல்லா இடங்களிலும் தோற்ற வரலாறே இல்லை. இப்போது போட்டியிட்ட எல்லா இடத்திலும் ஆளும்கட்சி தோற்ற ஒரே மாநிலம் என்ற வகையில் தமிழகத்தை ஜெயலலிதா முதலிடத்துக்கு கொண்டு போய்விட்டார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என ஜெயலலிதா பேசி வந்தது உண்மையானால், இந்தத் தீர்ப்பை ஏற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதிமுகபா.ஜ.க. கூட்டணி லட்சியக் கூட்டணி என்று அந்த இரு கட்சித் தலைவர்களும் சொல்லி வந்தார்கள். இதனால் அந்தக் கூட்டணி இத்தோடு முடிந்துவிடக் கூடாது. சட்டசபைத் தேர்தலிலும் இந்த 'லட்சியக் கூட்டணி' தொடர வேண்டும். இரட்டை இலைக்கு வாக்களித்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று சொன்ன ஒருவர் (ரஜினி), இந்த முறை இரட்டை இலைக்கு வாக்களித்ததாக சொன்னார். நாங்கள் போட்டியிட்ட 6 இடங்களிலும் வீழ்த்திக் காட்டுவேன் என்று சபதமிட்டு அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டார். அவருக்கு முக்காடு போட்டு மூலையில் உட்கார வைத்த தமிழக வாக்காளர்களுக்கு என் நன்றி. இந்த மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்த கருணாநிதிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்களுக்கும் நன்றி. இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். நன்றி - தட்ஸ் தமிழ் - Mathan - 05-18-2004 இந்தியாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி! - நக்கீரன் "இலங்கையைப் பொறுத்தளவில், குறிப்பாக இனச் சிக்கலைப் பொறுத்தளவில் இந்தியா தனது இன்றைய மலட்டுத்தனமான அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்." பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் 14வது மக்களவைக்கான ( லோக் சபை) தேர்தல் முடிவுகள் கனேடிய நேரத்தின்படி புதன் இரவு 10.10 மணி தொடக்கம் வெளிவரத் தொடங்கின. நாடு முழுதும் வாக்குப் பதிவுகள் இயந்திரங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டதால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி (இந்திய நேரம் காலை 8 மணி) 10 நிமிடங்களில் முன்னணியில் நிற்கும் கட்சிகள், கட்சி வேட்பாளர்கள் விபரங்களை ஊடகங்கள் வெளியிட்டன. தொடக்கத்தில் இடம்பெற்ற முதலாம் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பை (ஏப்பிரல் 20, 22) அடுத்து தனியார் தொலைக்காட்சிகள், செய்தி ஏடுகள் நடத்திய கருத்துக் கணிப்புக்கள் இந்திய தேசிய காங்கிரசை விட பாரதீய ஜனதா தலைமை தாங்கும் தேசிய சனநாயக முன்னணிக்கே அதிக எண்ணிக்கையிலான இடங்கள் கிடைக்கும் என்றும் மீண்டும் வாஜ்பாய் பிரதமராக வருவார் எனவும் எதிர்கூறின. ஆனால் அடுத்த கட்ட வாக்கெடுப்புக்குப் பின்னர் (ஏப்ரில் 26, மே 5, மே 10) எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் தேசிய சனநாயக கூட்டணிக்கு கூடுதலான இடங்கள் கிடைக்கும் என்றாலும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு வேண்டிய பெரும்பான்மை பலம் பாரதீய ஜனதா கூட்டணிக்கோ அல்லது காங்கிரஸ் கூட்டணிக்கோ கிடைக்காது என்று கூறின. எனவே தொங்கு பாராளுமன்றம் அமையும் சூழ்நிலை உருவாகும் என அவை தெரிவித்தன. இந்தியா மொத்தம் 28 மாநிலங்களையும் 7 யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய கொண்ட பெரிய நாடு. மக்கள் தொகை 102 கோடி. அதில் வாக்காளர் தொகை 65 கோடி. இந்திய நாடாளுமன்றம் மேல்சபை கீழ்ச் சபை என இரண்டு அவைகளைக் கொண்டது. இதில் கீழ்ச் சபைக்கு (மக்கள் அவை) ஐந்தாண்டுக்கு ஒருமுறை நேரடித் தேர்தலும் மேல் சபையான ராஜ்ய சபைக்கு (மாநிலங்கள் அவை) மறைமுகத் தேர்தலும் நடை பெறுகிறது. மக்கள் அவையின் மொத்த உறுப்பினர்களது எண்ணிக்கை 543 ஆகும். கடந்த பெப்ரவரி 6ஆம் நாள் மக்களவை கலைக்கப்பட்டது. அதே மாதம் 19 ஆம் நாள் அதிகாரபூர்வ தேர்தல் அறிவிப்பு வெளிவந்தது. அன்றிலிருந்து கடந்த மூன்று மாதங்களாக நாடு தழுவ அனல் தெறிக்கும் பரப்புரைத் திருவிழா நடந்தது. இப்போது வெளிவந்துள்ள முடிவுகள் ஊடகங்களின் கருத்துக் கணிப்புக்களை தவிடுபொடியாக்கி விட்டன. தேசிய சனநாயகக் கூட்டணியைவிட காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையான இடங்கள் கிடைத்துள்ளன. இதுவரை வெளிவந்த 539 முடிவுகளில் இந்திய தேசிய காங்கிரஸ் அணிக்கு 219 இடங்களும், தேசிய சனநயாக கூட்டணிக்கு 188 இடங்களும் பிற கட்சிகளுக்கு 132 இடங்களும் கிடைத்துள்ளன. யரருமே எதிர்பார்க்காத ஒரு மவுனப் புரட்சியை நடத்தி வாக்காளப் பெருமக்கள் பாரதீய ஜனதாவை பெட்டி படுக்கையுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாததைக் கண்டுகொண்ட பிரதமர் வாஜ்பாய் ஆட்சித் தலைவர் அப்துல் கலாமைச் சந்தித்து தனது விலகல் கடிதத்தைக் கொடுத்துள்ளார். தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. கேரளா, மேற்கு வங்காளத்தில் கம்ய10னிஸ்டு கட்சிகள் பெரும் வெற்றி ஈட்டியுள்ளன. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி இருப்பதை அடுத்து மத்தியில் கம்ய10னிஸ்டு கட்சிகளின் ஆதரவோடு புதிய ஆட்சியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கம்யூனிஸ்ட்; கட்சிகள் மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 63 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. பிந்தி வந்த செய்திகள் அடுத்த பிரதமர் சோனியா காந்தி என உறுதியாகக் கூறுகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் "சோனியாதான் பிரதமர்' என்று இன்று அறிவித்துள்ளனர். மேலும் லல்லு பிரசாத் யாதவ், கலைஞர் கருணாநிதி, டாக்டர் ராமதாஸ், வைகோ, ஹர்கிஷன்சிங் சுர்ஜித், எச். ராஜா போன்ற தலைவர்களும் சோனியா காந்தி பிரதமர் ஆவதை ஏற்கனவே ஏற்று கொண்டுள்ளனர். எனவே சோனியா பிரதமர் ஆவதற்கு எந்த தடையும் இருக்காது. சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம்சிங் தனது கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் மத்தியில் பிரதமர் நாற்காலியில் உட்கார முடியாது என்று வீரம் பேசினார், எனது ஆதரவு வேண்டும் என்றால் அதற்கான விலை துணைப் பிரதமர் பதவி என்று கடந்த சில நாட்களாக பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது அவரது ஆசை நிராசை ஆகிவிட்டது. புதிய நாடாளுமன்றம் மே 22 இல் கூட இருக்கிறது. மக்களைவையின் ஆயுள் முடிய சரியாக மேலும் 8 மாதங்கள் இருக்கும் போது பாரதீய ஜனதா ஏன் இன்னொரு தேர்தலுக்கு அவசரப் பட வேண்டும்? அவசரப்பட்டு ஏன் மூக்கை அறுத்துக் கொள்ள வேண்டும்? ஆசைதான் அதற்குக் காரணம். கடந்த ஆண்டு இறுதியில் வட மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஷ்கார், ராஜஸ்தான், தில்லி மிசோராம் ஐந்திலும் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றில் கோட்டை விட்டது. தில்லியை மட்டுமே அதனால் காப்பாற்ற முடிந்தது. இந்த மாநிலங்களில் (மிசோரம் நீங்கலாக) வெற்றி பெற்ற பாரதிய ஜனதா தனக்குச் சாதகமான தேர்தல் அலை வீசுவதாக நினைத்துக் கொண்டு மக்களவையைக் கலைத்து அதற்கான தேர்தலை சூட்டோடு சூடாக நடத்தி வெல்லத் திட்டம் தீட்டியது. 'இந்தியா ஒளிர்கிறது' (India is shining ) என்ற முழக்கத்தோடு பாரதீய ஜனதாக் கட்சி களம் இறங்கியது. ஆளால் அதள் போதாத காலம் பிரதமர் வாஜ்பாயின் சொந்தத் தொகுதியான லக்னாவில் அவரது முகவர் பெண்களுக்கு இரண்டு டொலர் பெறுமதியான இலவச சேலைகளைக் கொடுத்த போது அவற்றைப் பெற முண்டியடித்த பெண்களில் 22 பேர் நெரிசலில் சிக்கி இறந்தார்கள். அதனைப் பார்த்து வெருண்டு போன பாரதீய ஜனதா 'இந்தியா ஒளிர்கிறது' (India is shining ) என்ற முழக்கத்துக்கு உடனடியாக முழுக்குப் போட்டது! சோனியா காந்தி அந்நியர் என்ற பாரதீய ஜனதாவின் பரப்புரை மக்கள் மத்தியில் எடுபடவில்லை. குஜராத்தில் இடம் பெற்ற மதக் கலவரம் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் மோடிக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது. கலவரத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் மீது மாநில அரசு மெத்தனமாக நடந்து கொண்டு அவர்கள் நீதியின் பிடியில் இருந்து தப்பிக்க மாநில அரசே உதவி செய்தது என உச்ச நீதி மன்றம் முதலமைச்சர் மோடியின் தலையில் குட்டியும் அதனை அவர் பொருட்படுத்தவில்லை. பாரதீய ஜனதாவிற்குப் பின்னால் இயங்கும் வி.எச்;பி, ஆர்எஸ்எஸ் போன்ற தீவிர அடிப்படை இந்து தீவிரவாதிகளின் போக்கு இந்தியாவின் மதசார்பற்ற கொள்கைக்கு அறை கூவலாக இருந்தது. இது மதசார்பற்ற கட்சிகள் பக்கம் மக்களைப் போக வைத்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வரலாறு படைத்து விட்டது. தி.மு.க. தலைமையிலான சனநாயக முற்போக்குக் கூட்டணி புதுவை உட்பட போட்டியிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முதல் 1996இல் தி.மு.க. - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் அ.தி.மு.க. இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அதோடு கூட்டு வைத்திருந்த பாரதீய ஜனதா கட்சியும் கூண்டோடு கைலாயம் போய்விட்டது. தேர்தலில் வென்ற வேட்பாளர்கள் ஒன்று முதல் இரண்டு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. -பா.ஜ. கூட்டணி வேட்பாளர்களைத் தோற்கடித்திருக்கிறார்கள். பெரியகுளம் தேர்தல் தொகுதியில் மட்டும் சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி. தினகரன் 26,000 வாக்குகளால் தோற்றிருக்கிறார். சனநாயக முற்போக்குக் கூட்டணியின் இந்த வியத்தகு வெற்றிக்கு கலைஞர் கருணாநிதியின் தேர்தல் வியூகம், ம.தி.மு.க. பொதுச் செயலாளரின் சூறாவளிப் பரப்புரை முக்கிய காரணிகள் ஆகும். வைகோ 60 நாட்களில் 35,000 கி.மீ. பயணம் செய்து 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் காட்டாட்சியை அக்கு வேறு ஆணி வேறாகக் கிழித்து எறிந்தார். வழக்கம்போல இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அமைச்சர்கள் நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்தார்கள். இரண்டு மாதமாக அவர்கள் கோட்டைப் பக்கமே போகவில்லை. மக்களைக் கவர்ந்து இழுக்க அ.தி.மு.க. நடிகர்கள் நடிகைகள் பட்டாளம் களத்தில் இறங்கி வேலை செய்தது. ஆட்சி அதிகாரம் ஆள் அம்பு முழு அளவில் பயன்படுத்தப் பட்டது. பணம் தண்ணீராகச் செலவு செய்யப்பட்டது. ஜெயலலிதா சந்தித்த படு தோல்விக்கு அவரது அகம்பாவம், ஆணவம், ஆடம்பரம், அதிகாரவெறி, தலைக்கனம், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ஆட்சிமுறை போன்றவை முக்கிய காரணிகளாகும். ஒரு ஆட்சி எப்படி எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படி அப்படி எல்லாம் அவரது ஆட்சி இருந்தது. ஜெயலலிதா தனது மூன்றாண்டு கால காட்டாச்சியில் எல்லாத் தரப்பு மக்களது ஆதரவையும் இழந்துள்ளார். அவர் தனது முன்னைய தோல்விகளில் இருந்து எந்தப் பாடத்தையும் படிக்கவில்லை. எதையும் மறக்கவும் இல்லை. அரச ஊழியர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பல தரப்பினரது வெறுப்பையும் கோபத்தையும் ஜெயலலிதா தாராளமாக சம்பாதித்துக் கொண்டார். கடந்த ஆண்டு யூலை மாதம் வேலை நிறுத்தம் செய்த இரண்டு இலட்சம் அரச ஊழியர்களை ஜெயலலிதா ஒரே நாளில் வேலை நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி உலக மகாசாதனையை நிலை நாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர்களை அநாகரிகமாக ஒருமையில் தேர்தல் மேடைகளில் வாய்க்கு வந்தபடி திட்டியது அவருக்கும் அவரது அரசுக்கும் எதிராக வீசிய அலைக்கு தீனி போட்டது. சோனியா காந்தி அந்நியர் அவர் பிரதமராக வர முடியாது, அவர் பதிக்கு துரோகம் செய்தவர் என்ற ஜெயலலிதாவின் தரக்குறைவான தாக்குதல்கள் மக்களது கோபத்தைக் கிளறவே துணை செய்தது. வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்து 19 மாதங்கள் சிறையில் அடைத்து அரசியல் பழிவாங்கியது மக்களது வெறுப்பை அவர் மீது திருப்ப வைத்தது. இந்தத் தேர்தலில் மூக்கை உடைத்துக் கொண்ட இன்னொரு பிரபல்யம்; நடிகர் ரஜனிகாந்த். தன்னிடம் ஏதோ ஆனை சேனை இருப்பது போல கற்பனை செய்து கொண்டு பா.ம.கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக அவரும் அவரது இரசிகர்களும் செய்த பரப்புரை படு தோல்வியில் முடிந்தது. மக்கள் பா.ம.கட்சிக்கு பெருமளவு வாக்களித்து அந்தக் கட்சியின் வேட்பாளர்களை வெற்றிவாகை சூட வைத்ததின் மூலம் ரஜனிகாந்துக்கு மக்கள் நல்ல பாடம் படிப்பித்துக் கொடுத்திருக்கிறார்கள். அவரது ஒவ்வொரு வேர்வைத் துளிக்கும் ஒவ்வொரு தங்கம் கொடுத்த தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு முக்காடு போட்டு மூலையில் உட்கார வைத்து விட்டார்கள். தொல். திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சி போன்ற சாதிக் கட்சிகள் அமைத்த மூன்றாவது அணியும் தேர்தல் அலையில் அள்ளுப்பட்டுப் போய்விட்டது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சாதியை முதலீடாக வைத்து பிற்போக்கு அரசியல் நடத்த நினைப்பவர்களுக்கு இந்தத் தோல்வி நல்ல பாடம். மத்தியில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் தமிழ்த் தேசிய சக்திகளின் கையை ஓங்க வைத்துள்ளன. வைகோ, நெடுமாறன், சுப. வீரபாண்டியன் போன்ற தமிழ்த் தேசியவாதிகளது தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த பொடா சட்டம் காங்கிரஸ் ஆட்சியால் கைவிடப் படும் என நாம் நம்பலாம். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றங்கள் ஏற்பட வழியுண்டு. பாரதீய ஜனதா அரசில் வெளிநாட்டு அமைச்சராக இருந்த யஷ்வந்த் சிங்ஹா இந்தத் தேர்தலில் ஹசாரிபாக் (ஜார்க்கண்ட்) தொகுதியில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். வெளியுறவு அமைச்சராக மீண்டும் பதவியேற்ற லட்சுமன் கதிர்காமர் முதல் வேலையாக அவரை ஓடோடிப் போய் பார்த்துப் பேசினார் என்பது தெரிந்ததே. இலங்கையைப் பொறுத்தளவில், குறிப்பாக இனச் சிக்கலைப் பொறுத்தளவில் இந்தியா தனது இன்றைய மலட்டுத்தனமான அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள மக்களோடு ஒத்த உரிமையுடனும் ஒத்த நிறையுடனும் வாழக்கூடிய அரசியல் யாப்பு மாற்றத்துக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் வரலாறு படைத்த சனநாயக முற்போக்கு கூட்டணி சட்ட சபைக்கான தேர்தலிலும் தொடர வேண்டும். அப்படித் தொடருமானால் தமிழ்த் தேசியத்தின் முதல் எதிரியான ஜெயலலிதாவை அரசியல் அரங்கில் இருந்து விரட்டி அடித்து விடலாம். நக்கீரன் - Mathan - 05-18-2004 மதமாற்ற தடை சட்டம் ரத்து அரசு ஊழியர் தண்டனை ரத்து கருணாநிதி மீதான வழக்கு வாபஸ் ஜெ. 'அந்தர் பல்டி' மதமாற்றத் தடை சட்டம், திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிரான வழக்குகள், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள், ரேசன் கார்டுகளில் குத்தப்பட்ட எச் முத்திரை ஆகிய அனைத்தும் உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். விவசாயிகளுக்கு ரத்து செய்யப்பட்ட இலவச மின்சாரமும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரத்து செய்யப்பட்ட இலவச பஸ் பாஸ்களும் மீண்டும் உடனடியாக வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அத்தோடு கல்லூரி மாணவர்களுக்கும் பஸ் கட்டணத்தில் புதிதாக சலுகையும் அளிக்கப்படும். பள்ளிகளில் குழந்தைகளுக்கான சத்துணவில் வாரம் ஒரு நாள் மீண்டும் முட்டை வழங்கப்படும். மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த பெரும் அடியைத் தொடர்ந்து இந்த முடிவுகளை ஜெயலலிதா எடுத்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: ரூ. 5,000க்கு மேல் சம்பளம் உள்ளவர்களுக்கு ரேசன் கடைகளில் எச் முத்திரை குத்தி அரிசி வழங்கப்படாது என்று வெளியிடப்பட்ட அறிவிப்பு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. உடனடியாக அனைவருக்கும் ரேசன் அரிசி வழங்கும் வகையில் எச் முத்திரை குத்தப்பட்டவர்களுக்கு புதிய அரிசி கார்டு வழங்கப்படும். எச் முத்திரை பதிக்கும் முறை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே எச் முத்திரை பதிக்கப்பட்ட கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பொருட்கள் மீண்டும் வழங்கப்படும். மாத வருவாய் ரூ. 5000 என்ற வருவாய் வரம்பும் நீக்கப்படுகிறது. கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை ரத்து செய்வதற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும். கருணாநிதி, இளங்கோவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீது எஸ்மா, டெஸ்மா சட்டத்தின் கீழ் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும். விவசாயிகளுக்கு முழுமையாக இலவச மின்சாரம் வழங்கப்படும். அதே போல இந்து ஆசிரியர் என்.ராம் உள்ளிட்ட அனைத்துப் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அவமதிப்பு வழக்குகளையும் உடனடியாக வாபஸ் பெறப்படும். இவ்வாறு ஜெயலலிதா அறிவித்துள்ளார். நிதி பற்றாக்குறை காரணமாகவே இந்த சலுகைகளை ரத்து செய்வதாக முன்பு அறிவித்திருந்த ஜெயலலிதா தற்போது தான் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தட்ஸ் தமிழ் |