Yarl Forum
ஜக்குபாய்! புதிய படம் தொடங்கினார் ரஜினி! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ஜக்குபாய்! புதிய படம் தொடங்கினார் ரஜினி! (/showthread.php?tid=7158)

Pages: 1 2


ஜக்குபாய்! புதிய படம் - sWEEtmICHe - 05-03-2004

[b][size=20]ஜக்குபாய்

[size=14]ஜக்குபாய்! புதிய படம் தொடங்கினார் ரஜினி!
- ரசிகர்கள் உற்சாகம்!

<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/normal_sWEEtmICHe%2Brajini_jagu.jpg' border='0' alt='user posted image'>''ரஜினிக்கு பாபாதான் கடைசி படம்'' ''இல்லையில்லை,
அவர் இன்னும் நிறைய படங்களில் நடிப்பார்'' -இப்படி மக்கள் மத்தியில் வந்து
கொண்டிருக்கும் மாறுபட்ட கருத்துகளுக்கு பளிச்சென்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரஜினி.
தன்னுடைய புதிய படத்திற்கு எளிமையாக தன் வீட்டிலேயே பூஜை போட்டிருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அவர் அடுத்து நடிக்கப்போகும் படத்திற்கு ''ஜக்குபாய்''
என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஒரு தீவிரவாதி கெட்டப்புடன் ரஜினி அமர்ந்திருப்பது
போலவும், அவர் அருகில் ஒரு ஏ.கே 47 ரக துப்பாக்கி இருப்பது போலவும்
வெளியிடப்பட்டிருக்கும் இந்த பூஜை ஸ்டில் பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டிருக்கிறது.
இந்த விளம்பரத்தை மையமாக கொண்டு இனி செய்யுள், விளக்கவுரையெல்லாம் பத்திரிகைகள்
எழுதக்கூடும். சில பத்திரிகைகள் இப்போதே இதுதான் ரஜினி படத்தின் கதை என்று எழுத
ஆரம்பித்துவிட்டன. (இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. ஏனென்றால் ''இது என்னோட கதை
இல்லீயே'' என்று ரஜினி வந்து சொல்லவா போகிறார்?)

விஷயம் அதுவல்ல இப்போது. பொதுவாக ரஜினியின் படங்கள் பூஜை போடப்பட்டு
உடனடியாக படப்பிடிப்பு துவங்கிவிடும். ஆனால், இந்த முறை பூஜை போடப்பட்டு
இரண்டு மாதங்கள் கழித்துதான் படப்பிடிப்பே துவங்குகிறது. அதாவது ஜுலை மாதம்தான்
படப்பிடிப்பு! அப்படியிருக்க, இப்போதே பூஜை போடப்பட்டதன் பின்னணி?

பா.ம.க போட்டியிடும் தொகுதிகளில் ரஜினி பிரச்சாரம் செய்வார் என்று பரவலாக பேசப்பட்டாலும்,
ரஜினிக்கு அதில் விருப்பம் இல்லை என்று தெரிகிறது. கடந்த தேர்தலில் வெறும் வாய்ஸ் மட்டுமே
கொடுத்திருந்தார். ஆனால் மக்கள் வேறு அணிக்கு வாக்களித்திருந்தார்கள். அதுபோலவே இந்த
தேர்தலிலும் நடந்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் அவருக்கு இருக்கிறது. அதன்
காரணமாகவே பிரச்சாரத்திற்கு நேரடியாக செல்ல வேண்டாம் என்று யோசிக்கிறாராம்.
இப்படி பிரச்சாரத்திற்கும் போகாமல், பளிச்சென்று அரசியலிலும் குதிக்காமல் இருக்கும் அவர் தன்
ரசிகர்களை உற்சாகப்படுத்த வேறு என்னதான் வழி என்று யோசிக்கும் போதுதான் இந்த புதிய
படத்தின் அறிவிப்பு ஐடியா வந்ததாக சொல்கிறார்கள்.

அவர் நினைத்தது போலவே ரசிகர்கள் புதிய உற்சாகத்துடன் களம் இறங்கியிருக்கிறார்கள். ரஜினியின்
பிரஸ் மீட் அறிக்கையை ஆடியோ பதிவாக்கி அதை பா.ம.க போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும்
ஒலி பரப்பி வருகிறார்கள்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் ரஜினி படமான பாட்ஷா ஓடிய தியேட்டர்
ஒன்றை முற்றுகையிட்ட பா.ம.க வினர் அப்படத்தை திரையிட விடாமல் தடுத்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் அவர்கள் போட்டியிடும் ஆறு தொகுதிகளில் ''எங்கு ரஜினி படம் ஓடினாலும்
அதை தடுத்து நிறுத்துவோம்'' என்று ஆவேசப்பட்டிருக்கிறார்கள். விநியோகஸ்தர்களுக்கும்
ரஜினிக்கும் இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ''எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்
. பா.ம.க வேலையை, பா.ம.க பார்க்கட்டும்'' என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்
சத்யநாரயணா! இப்படி உரலுக்குள் தலையை கொடுத்த மாதிரி தவித்துக் கொண்டிருக்கும்
ரஜினி தரப்பு, ஜக்குபாயை எடுத்து உருப்படியாக ரிலீஸ் செய்ய முடியுமா? இதுதான் இப்போதைய
கேள்வி! ....-ஆர்.எஸ்.அந்தணன் ..... நன்றி
அன்புடன் மிச்சி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sWEEtmICHe - 05-04-2004

<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/sWEEtmICHe%2B%2B%2B%2Bjaggubhai.jpg' border='0' alt='user posted image'>


- sWEEtmICHe - 05-04-2004

<img src='http://tamilstate.com/tamilSTATE.COM_RajaniNewMovie.jpg' border='0' alt='user posted image'>


- Mathan - 05-04-2004

ரஜனி இப்போது இருக்கும் நிலையில் புதிதாக படமும் வெளியிடவில்லை என்றால் அதோகதிதான். ம் எப்படி இருந்த ஆள் இப்படி ஆயிட்டார்.


- sOliyAn - 05-04-2004

எப்படி ஆயிட்டார்? சாதிச்சுட்டார்.. அதுக்கும்மேலயும் ஆசைப்படலாமா?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- vasisutha - 05-04-2004

ஜக்குபாய் மக்குபாய் ஆகாமல் இருந்தால் சரி.


- anpagam - 05-04-2004

<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->ஜக்குபாய் மக்குபாய் ஆகாமல் இருந்தால் சரி.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: 8)

இப்போ தமிழ் சினமாவில் துவக்கத்திலையே சர்சைகளை உர்வாக்கி விளம்பரம் வலு நுணுக்கமாக பெறுகின்றார்கள் அவ்வகையில் கதை தெரியாவிடினும் முதல் துவக்கத்திலையோ வேண்டும் என விளம்பரம் பரபரப்புகாக (ரசிகளுக்காக மட்டும் இல்லாமல் மக்களை குளப்பி) இப்படி ஆரம்பத்தில் துவக்கி பின் அதை மாற்றுவது வளமையாகி வருகின்ற இதுவும் ஒரு வகை விளம்பரமாகிறது
எது எப்படியோ இவ் முதல் விளம்பர சர்சைக்காகவே விடபட்டிருக்கலாம்
பொறுத்திருந்து பாருங்கள்


- sOliyAn - 05-05-2004

நான் சொல்லுறேன்.. ரஜனி படம் இனி தோல்வியை நோக்கித்தான்.. நூறு தரம் சொன்னமாதிரி ஞாபகம் வைச்சிருங்க!


- sWEEtmICHe - 05-05-2004

தேரியவில்லை பார்ப்போம்


- sWEEtmICHe - 05-05-2004

தேரியவில்லை பார்ப்போம்


- Eelavan - 05-05-2004

ரஜனி ஒரு நடிகன் என்ற முறையில் சில நல்ல படங்கள் கொடுத்திருக்கலாம் தனது வித்தியாசமான நடை உடை பாவனைகளால் ரசிகர் கூட்டத்தைக் கவர்ந்திருக்கலாம்.கொடுத்தவரை போதும் என நிறுத்திக் கொண்டால் போதும் இல்லாவிட்டால் தாங்கமுடியாத அவமானத்தைத் தான் பெற நேரிடும்

அவரை கடவுள் ஸ்தானத்தில் வைப்பதும் தமிழ் நாட்டின் ஆபந்தாவனாகக் காட்டுவதும் அதிகப்படி


- Mathan - 05-05-2004

உண்மைதான் ஈழவன், நடிகர் என்ற முறையில் நான் அவரை ரசிக்கின்றேன், ஆனால் கடவுள் மற்றும் தலைவர் என்ற அளவுக்கு ரஜனி ஏதும் செய்யவில்லை என்பதுதான் எனது கருத்து. அரசியலுக்கு இதோ வருவேன் அதோ வருகின்றேன் என்றே சொல்லி மக்களின் எதிர்பார்ப்புக்களை கிளறி சில படங்களை ஓட வைத்துவிட்டார், இனி அந்த பழைய தந்திரங்கள் எல்லாம் செல்லுபடியாகாது என்றே நானும் நினைக்கின்றேன்,


- shanmuhi - 05-14-2004

ரஜினியின் படம் பின்தள்ளிப் போகிறது !

ரஜினி நடிக்கும் ஜக்குபாய் என்ற திரைப்படம் முன்னர் எதிர் பார்த்ததைவிட பின்தள்ளிப் போகிறது பொங்கலுக்கே வெளிவருமாம்.
பணத்தை உழைப்பதற்கும் ஒரு வரையறை இருக்கிறது என்பதால் ரஜினி தொடர்ந்து படம் எடுப்பதில் பல பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புண்டு.
ரஜினி படங்கள் மூன்று மாதங்களில் தயாராவது வழமை ஆனால் இப்படம் ஆறு மாதங்களில் தயாராகவுள்ளது.
அவசரமாக தயாரித்து பாபா போல தரமற்ற படத்தை தருவதைவிட தரமான ரசிகர்கள் விரும்பும் படத்தை நோக்கி ஜக்குபாய் நகர்கிறது.


- shanmuhi - 05-15-2004

நோட்டம்: ஜக்குபாய்

தமிழில் எந்தப் புதுப்பட அறிவிப்பும் இப்படியொரு பரபரப்பைக் கிளப்புமா என்று தெரியவில்லை. ஆனால் ரஜினியின் புதுப்பட அறிவிப்பு மட்டும் கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் தொடர்ந்து சினிமா வட்டாரத்தைக் கடந்தும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு "பாபா'. கடந்த வாரம் "ஜக்குபாய்'. அதே பரபரப்பு தொடர்கிறது.

ரஜினியின் ஒவ்வொரு படமும் பல கோடி ரூபாய் புரளும் பெரும் வர்த்தக மதிப்பைக் கொண்டிருப்பதால் மற்ற படங்களுக்கு இல்லாத எதிர்பார்ப்பும் பரபரப்பும் உருவாகிறது என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

உண்மையில் சமீப காலங்களில் அரசியலுக்கு நெருக்கமாக அவர் இருப்பதால் அல்லது அப்படியொரு தோற்றத்தை அவர் தொடர்ந்து தக்க வைத்திருப்பதால் அவரது ஒவ்வொரு புதுப்பட அறிவிப்பும் திரை வட்டாரம் கடந்தும் கவன அலைகளை உருவாக்குகிறது.

கடந்த 9 ஆண்டுகளில் ரஜினி நடித்து வெளியான படங்கள் ஐந்துதான். தமிழக அரசியலில் ரஜினி அதிகமாக மையப்படுத்தப்பட்ட காலமும் இதுதான். இதே காலத்தில்தான் பட எண்ணிக்கையையும் அவர் குறைத்துக் கொண்டார். தமிழ்த் திரையுலகம் தன்னைக் கடந்து சென்றுவிட்டதாக நினைத்தோ அல்லது தனது சுற்றை முடித்துக்கொள்ள வேண்டிய வேளை நெருங்கிவிட்டதாக நினைத்தோ அவர் இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம்.

எப்படியிருப்பினும் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையிலான நீண்ட இடைவேளை அவரது ரசிகர்களைப் பொறுமையிழக்கச் செய்தது. "தலைவர் அரசியலுக்கு வந்துவிடுவார்' என்ற நம்பிக்கையில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு அவர்கள் விரும்பிய பதிலை நேரடியாகச் சொல்ல முடியாமல் தவித்த ரஜினிஇ அவர்களைச் சற்றேனும் ஆறுதல்படுத்தும் முயற்சியாகத்தான் "பாபா'வைத் தந்தார். இப்போதும் அதே நோக்கில்தான் "ஜக்குபாய்' அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

"அபூர்வ ராகங்கள்' முதல் "பாபா' வரை கடந்த 27 ஆண்டுகளில் 151 படங்களில் நடித்திருக்கும் ரஜினிக்கு உலகெங்கிலும் 15 லட்சம் ரசிகர்கள் இருப்பதாக அவரது ரசிகர்கள் நடத்தும் இணைய தளம் சொல்கிறது. இந்தக் கணக்கு உண்மைதானா என்று துருவத் தேவையில்லை. என்றாலும் அவர் படத்துக்கான ஈர்ப்பு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி நீண்டிருப்பது உண்மை.

கொஞ்சம் காமெடிஇ கொஞ்சம் காதல்இ வித்தியாசமான சண்டைக் காட்சிகள்இ தாளம் போட வைக்கும் பாடல்கள்இ பஞ்ச் டயலாக்... என ரஜினி படம்இ "படம் பார்த்த திருப்தியை' நிச்சயம் தரும் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.

வில்லனாக அறிமுகமாகிஇ ஹீரோவாக உயர்ந்துஇ சூப்பர் ஸ்டாராகச் சக்கைபோடு போட்ட ரஜினி ஆரம்ப காலங்களில்இ ஆக்ஷன்இ சென்டிமென்ட் கலந்த படங்களையே அதிகம் தந்தார். பின்னர் காமெடி தூக்கலான படங்களில் ஆர்வம் காட்டினார். உண்மையிலேயே அவை பெரும் வரவேற்பைப் பெற்றன.

1992-லிருந்துதான் ரஜினியின் படங்களில் ("மன்னன்' முதல்...) அரசியல் நெடி தூவப்பட்டது. அது மெல்லஇ மெல்ல அதிகமாகி 1996-க்குப் பிறகு உச்சம் பெற்று இப்போது அந்த நிலையிலிருந்து பின்வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

"ஜக்குபாய்' அறிவிப்பு வெளியாகி ஒரு வாரத்திற்குள் ரசிகர்கள் "பஞ்ச் டயலாக்' பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இப்போதுள்ள அரசியல் தட்பவெப்பத்துக்கு ஏற்ப அவர்களே இப்படித்தான் இருக்கும் என்று கற்பனை செய்து "டயலாக்' எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

"நான் சொல்றதையும் செய்வேன்... சொல்லாததையும் செய்வேன்' (அண்ணாமலை); "எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது... ஆனா எப்ப வரணுமோ அப்ப கரெக்டா வருவேன்' (முத்து); "ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி' (பாட்ஷா); "ஆண்டவன் சொல்றான்... அருணாசலம் செய்யறான்' (அருணாசலம்); "என் வழி... தனி வழி' (படையப்பா); "கதம்இ கதம்... முடிஞ்சது முடிஞ்சு போச்சு' (பாபா) -இப்படி ரஜினி படங்களின் பஞ்ச் டயலாக் ஒவ்வொன்றும் எல்லோரையும் பேச வைத்தது.

"நான் ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி' என்ற வசனத்தைக் குழந்தைகள் ரஜினி மேனரிஸத்துடன் சொல்லும்போதுஇ பெற்றோர்கள்இ உற்றோர்கள் புளகாங்கிதமடைந்தார்கள். ஒவ்வொரு பஞ்ச் வசனத்துக்கும் "அகராதி' போடுமளவுக்கு அர்த்தங்கள் சொல்லி மீடியா இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினி படம் பார்த்தவர்கள் பெரும்பாலும் இப்படிப்பட்ட பஞ்ச் வசனங்களை ரசித்தார்கள்; ஜாலியாகத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்களே தவிரஇ அதைக் கடந்து அவர்கள் சீரியஸôக இதற்கு அர்த்தம் கண்டுபிடிக்க விரும்பவில்லை. ஆனால் ரஜினி ரசிகர்கள் இந்த வசனங்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாங்கள் விரும்பியபடி பொருள்கொண்டு தங்களுக்குள் ஒரு "யாகமே' நடத்திவிட்டார்கள்.

இதன் எதிரொலியாகத்தான் "லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்...' என்று ரசிகர்கள் தரப்பிலிருந்து வந்த பஞ்ச் வசனத்தையும் ரஜினி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.

"தளபதி' (1991) வரை பொருத்தமான பாத்திரமாக இருக்கும் பட்சத்தில் மற்ற இயக்குநர்களின் படங்களிலும் நடிக்கத் தயாராயிருந்த ரஜினிஇ அதற்குப் பிறகு அவ்வாறு இருக்க முடியவில்லை. அவருக்கென்று "கதை' தேட வேண்டியிருந்தது அல்லது உருவாக்க வேண்டியிருந்தது. அந்தக் கதையைஇ ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் படமாக்கும்இ வெற்றிப் படமாக்கும் இயக்குநர்களும் தேவைப்பட்டார்கள். ரஜினியின் வழக்கமான படத்தைக் காட்டிலும் கூடுதலாகவும் எச்சரிக்கையாகவும் செய்ய வேண்டிய வேலை இது.

"சூப்பர் ஸ்டார்' அந்தஸ்தையும் கடந்து அரசியல் களத்திலும் அடர்த்தியாக விரிந்திருந்த அவரது சொல்வாக்கும் செல்வாக்கும்இ ரஜினி என்ற நடிகரை மிகுந்த நெருக்கடிக்குள்ளாக்கின. ரஜினி நேரடி அரசியலுக்கு வந்திருந்தால் எப்போதோ இந்த நெருக்கடியிலிருந்து தப்பித்திருக்கலாம். அதுவும் செய்யாமல்இ அதே நேரத்தில் அரசியலில் அவருக்கிருந்த "இடத்தை'த் தொடர்ந்து தக்க வைத்திருக்க ஒரு நடிகனாகவும் நீடிக்க வேண்டிய கட்டாயத்தில் முன்னிலும் இறுக்கமான சூழலுக்குத் தள்ளப்பட்

டிருக்கிறார்.

96-க்குப் பிந்தைய தேர்தல் அனுபவங்கள் அவருக்குள் ஏற்படுத்திய பாதிப்பின் எதிரொலியாக இடைக்காலத்தில் மெüனம் காத்த ரஜினிஇ இந்தத் தேர்தலில் மீண்டும் வெளிப்படையாகக் குரல் கொடுக்க நேர்ந்திருப்பதற்கும் இப்படிப்பட்ட நெருக்கடிதான் மூல காரணம்.

"பாபா'வைக் கடுமையாக விமர்சித்ததற்காகப் பா.ம.க போட்டியிடும் 6 தொகுதிகளில் மட்டும் பாஜக - அதிமுக அணிக்கு ஆதரவளிப்பதாக உணர்ச்சி பொங்க அறிவித்த ரஜினிஇ அதற்குப் பிறகு அதே வேகத்தில் செயல்படத் தயக்கம் காட்டுகிறார்.

இந்தத் தொகுதிகளில் நேரடியாக ரஜினி பிரசாரம் செய்வார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாகஇ ரஜினியின் வாய்ஸ் ஒலிக்கும் ஆடியோ கேஸட்டுகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. தொகுதிக்கு 30இ000 கேஸட்டுகள் வீதம் 6 தொகுதிகளில் 1இ80இ000 கேஸட்டுகள் வழியாக ரஜினியின் குரல் ஒலிப்பதில்தான் ரசிகர்கள் ஆறுதல் தேட வேண்டும் போலிருக்கிறது.

ரஜினி ரசிகர் மன்றத் தலைமைப் பொறுப்பாளர் சத்யநாராயணாகூடஇ "தேவைப்பட்டால் பிரசாரத்துக்குப் போவது பற்றி யோசிப்பேன்' என்று சொல்லியிருக்கிறார்.

ஒவ்வொரு முறையும்இ "இதோ... தலைவர் புறப்பட்டுவிட்டார்...' என்று ரசிகர்கள் எழுச்சியுடன் கிளம்பும்போது சற்றே தள்ளிப்போய் மறுபடியும் புறப்பட்ட புள்ளிக்கே "தலைவர்' வந்து நிற்பது போல அவர்களுக்குப் படுகிறது.

இந்த முறையும் அப்படியொரு உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகப் புதிய பட அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட்டிருக்கிறார். உண்மையில்இ தேர்தல் முடிந்து மத்தியில் புதிய அரசு அமைந்த பிறகு ஒரு மாதம் கழித்துதான் அதாவது ஜூலையில்தான் ரஜினி புதுப் படத்துக்கு அதிகாரப்பூர்வமாகப் பூஜை போடப்போகிறார். என்றாலும் வாக்குப்பதிவு நடப்பதற்கு ஒரு வாரம் முன்பே "ஜக்குபாய்' அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

வழக்கம்போல முதல் அறிவிப்பிலேயே ரஜினியின் "கெட்-அப்' வித்தியாசமாக இருக்கிறது. ஒரு தீவிரவாதியைத் தெய்வீக அன்னை நெறிப்படுத்துவதுதான் கதை என்றும்இ நதிநீர்ப் பிரச்சினையை மையப்படுத்தும் விதத்தில் இரண்டு ஊர்களுக்கிடையிலான தண்ணீர்ச் சண்டையில் ரஜினி போராடி நீர் பெற்றுத் தருவதுதான் கதை என்றும் நாள்தோறும் புதுப்புதுக் "கதைகள்' வெளியாகி வருகின்றன.

படம் வெளியாவதற்குள் மீடியாவில் இதுபோன்று ஏகப்பட்ட "கதை'கள் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு படத்துக்கு இத்தனை பேர் "கதை பண்ணுவது' தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.

"முத்து'இ "படையப்பா' போல இந்தப் படத்திலும் அரசியல் இருக்கும்... ஆனால் அரசியல் படம் இல்லை என்கிறார் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்.

அதென்ன அரசியல்..?

""எப்ப வருவேன்... எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது... ஆனா எப்ப வரணுமோ அப்ப கரெக்டா வருவேன்'' என்ற ரஜினியின் பஞ்ச் வசனத்தை (முத்து) மறுபடியும் நினைவுபடுத்திக்கொண்டுஇ ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். கூடவே அரசியல் கட்சிகளின் தலைவர்களும்.

ரசிகர்களை இன்னும்கூட காத்திருக்க வைக்கலாம். அவர்களும் தயாராக இருக்கலாம்.

தலைவர்களை..? சினிமா அரசியலுக்குத் தள்ளியது. அரசியல் மீண்டும் சினிமாவுக்குத் தள்ளுகிறது.

கரெக்டா ரஜினி சார்..?


நன்றி : தினமணி


- AJeevan - 05-15-2004

ரஜினிக்கு கிடைத்த தோல்வி அனைத்து கலைஞர்களுக்கும் நல்லதொரு பாடம். கலைஞர்களுக்கு அரசியல் தேவையில்லை என்பதை மக்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

எப்ப வருவதென்று இல்லை. எப்பவுமே வரமுடியாது என்பது தெளிவு.

ஒருகாலத்தில் ரஜினிக்கு கிடைத்த வாய்பை தவறவிட்டார். அந்தக் காலம் மீண்டும் வருமென்று சொல்ல முடியாது.

இனி ஒரு MGR பிறக்கவே முடியாது.


- கபிலன் - 05-15-2004

ரஜனியின் பா(;ட்);ச்சா இனிமேல; பலிக்காது என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன...
முதல்வர் கனவுகள் வைத்திருக்கும் நட்சத்திரங்கள் இனிமேலாவது தெளிவு பெறுவார்களா?...........????


- shanmuhi - 06-08-2004

ரஜினிக்கு பிளாஸ்டிக் சர்ஜனி: அப்பல்லோவில் அனுமதி

சென்னை:

உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ரஜினிகாந்த்துக்கு உதட்டில் வெள்ளைப் புள்ளிகள் உள்ளன. 'ஜக்குபாய்' படம் தொடங்கப்பட்டு உள்ளதால்இ படப்பிடிப்புக்கு முன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உதட்டை சரி செய்ய ரஜினி முடிவு செய்துள்ளார்.

இதற்காகத் தான் அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்இ இன்று மாலை அல்லது நாளை அறுவை சிகிச்சை நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

'பாபா' படம் எடுக்கப்படும் முன்பு கேரளாவில் உள்ள குமரகம் சென்று ஆயுர்வேத முறைகள் மூலம் முகப் பொலிவை அதிகரிக்க ரஜினி சிகிச்சை எடுத்தார்.

ரஜினிக்கு இப்போது வயது 55 என்பது குறிப்பிடத்தக்கது.

¿ýÈ¢- thatstamil.com


- tamilini - 06-08-2004

என்ன தான் செய்தாலும். அவர் பல் பிடுங்கிய பாம்பு தான் இனிமேல்.


- tamilini - 06-08-2004

றயனி அண்மையில் வழங்கிய பேட்டி என்று நினைக்கிறேன். இந்த இணைப்புக்கு சென்றால் வாசிக்க முடியும்.


http://www.tamilcinema.com/cinenews/Hotnew...une/050604a.asp


- Paranee - 06-09-2004

அது யாரு ?
Quote:றயனி