05-03-2004, 09:18 PM
[b][size=20]ஜக்குபாய்
[size=14]ஜக்குபாய்! புதிய படம் தொடங்கினார் ரஜினி!
- ரசிகர்கள் உற்சாகம்!
<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/normal_sWEEtmICHe%2Brajini_jagu.jpg' border='0' alt='user posted image'>''ரஜினிக்கு பாபாதான் கடைசி படம்'' ''இல்லையில்லை,
அவர் இன்னும் நிறைய படங்களில் நடிப்பார்'' -இப்படி மக்கள் மத்தியில் வந்து
கொண்டிருக்கும் மாறுபட்ட கருத்துகளுக்கு பளிச்சென்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரஜினி.
தன்னுடைய புதிய படத்திற்கு எளிமையாக தன் வீட்டிலேயே பூஜை போட்டிருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அவர் அடுத்து நடிக்கப்போகும் படத்திற்கு ''ஜக்குபாய்''
என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஒரு தீவிரவாதி கெட்டப்புடன் ரஜினி அமர்ந்திருப்பது
போலவும், அவர் அருகில் ஒரு ஏ.கே 47 ரக துப்பாக்கி இருப்பது போலவும்
வெளியிடப்பட்டிருக்கும் இந்த பூஜை ஸ்டில் பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டிருக்கிறது.
இந்த விளம்பரத்தை மையமாக கொண்டு இனி செய்யுள், விளக்கவுரையெல்லாம் பத்திரிகைகள்
எழுதக்கூடும். சில பத்திரிகைகள் இப்போதே இதுதான் ரஜினி படத்தின் கதை என்று எழுத
ஆரம்பித்துவிட்டன. (இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. ஏனென்றால் ''இது என்னோட கதை
இல்லீயே'' என்று ரஜினி வந்து சொல்லவா போகிறார்?)
விஷயம் அதுவல்ல இப்போது. பொதுவாக ரஜினியின் படங்கள் பூஜை போடப்பட்டு
உடனடியாக படப்பிடிப்பு துவங்கிவிடும். ஆனால், இந்த முறை பூஜை போடப்பட்டு
இரண்டு மாதங்கள் கழித்துதான் படப்பிடிப்பே துவங்குகிறது. அதாவது ஜுலை மாதம்தான்
படப்பிடிப்பு! அப்படியிருக்க, இப்போதே பூஜை போடப்பட்டதன் பின்னணி?
பா.ம.க போட்டியிடும் தொகுதிகளில் ரஜினி பிரச்சாரம் செய்வார் என்று பரவலாக பேசப்பட்டாலும்,
ரஜினிக்கு அதில் விருப்பம் இல்லை என்று தெரிகிறது. கடந்த தேர்தலில் வெறும் வாய்ஸ் மட்டுமே
கொடுத்திருந்தார். ஆனால் மக்கள் வேறு அணிக்கு வாக்களித்திருந்தார்கள். அதுபோலவே இந்த
தேர்தலிலும் நடந்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் அவருக்கு இருக்கிறது. அதன்
காரணமாகவே பிரச்சாரத்திற்கு நேரடியாக செல்ல வேண்டாம் என்று யோசிக்கிறாராம்.
இப்படி பிரச்சாரத்திற்கும் போகாமல், பளிச்சென்று அரசியலிலும் குதிக்காமல் இருக்கும் அவர் தன்
ரசிகர்களை உற்சாகப்படுத்த வேறு என்னதான் வழி என்று யோசிக்கும் போதுதான் இந்த புதிய
படத்தின் அறிவிப்பு ஐடியா வந்ததாக சொல்கிறார்கள்.
அவர் நினைத்தது போலவே ரசிகர்கள் புதிய உற்சாகத்துடன் களம் இறங்கியிருக்கிறார்கள். ரஜினியின்
பிரஸ் மீட் அறிக்கையை ஆடியோ பதிவாக்கி அதை பா.ம.க போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும்
ஒலி பரப்பி வருகிறார்கள்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் ரஜினி படமான பாட்ஷா ஓடிய தியேட்டர்
ஒன்றை முற்றுகையிட்ட பா.ம.க வினர் அப்படத்தை திரையிட விடாமல் தடுத்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் அவர்கள் போட்டியிடும் ஆறு தொகுதிகளில் ''எங்கு ரஜினி படம் ஓடினாலும்
அதை தடுத்து நிறுத்துவோம்'' என்று ஆவேசப்பட்டிருக்கிறார்கள். விநியோகஸ்தர்களுக்கும்
ரஜினிக்கும் இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ''எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்
. பா.ம.க வேலையை, பா.ம.க பார்க்கட்டும்'' என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்
சத்யநாரயணா! இப்படி உரலுக்குள் தலையை கொடுத்த மாதிரி தவித்துக் கொண்டிருக்கும்
ரஜினி தரப்பு, ஜக்குபாயை எடுத்து உருப்படியாக ரிலீஸ் செய்ய முடியுமா? இதுதான் இப்போதைய
கேள்வி! ....-ஆர்.எஸ்.அந்தணன் ..... நன்றி
அன்புடன் மிச்சி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->