Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 470 online users.
» 0 Member(s) | 468 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,297
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,623
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,050
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,457
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  எல்லாம் புரிந்தும் ஏன் இப்படியும் சிலர்....?!
Posted by: kuruvikal - 05-17-2004, 11:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பெருகி வரும் சமுதாயச் சீரழிவை நோக்கிய செயற்பாடுகளிற்கு முடிவு கட்டுவது போல் எல்லாளன் படையின் செயற்பாடுகளும் எச்சரிக்கையும் வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பல சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள்,ஈடுபடுபவர்கள் என சமூகக் குற்றவாளிகள் எல்லோரும் சிறிலங்கா அரச படைகளினாலும் காவல்துறையினராலும் பாராமுகப்போக்கில் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கொடும் சமூகச் சீரழிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 5 பேர் கடத்தப்பட்டு அதில் கடும் குற்றவாளியாகக் கருத்தப்படும் (சிறிலங்கா காவல்துறையின் பதிவுகளின் பிரகாரம்) ஒருவருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது...மிகுதி நால்வரும் கடும் எச்சரிக்கைக்குப் பின்னர் நையப்புடைக்கப்பட்டு கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் எல்லாளன் படையினரால் விடுவிக்கப்பட்டதாக சிறிலங்கா காவல்துறையை மேற்கோள் காட்டி தமிழ் நெற் கூறுகிறது...!

இச்செய்தி வந்து ஓய முதல் இதோ இப்படியும் ஒரு செய்தி வருகிறது...

-----------------------------
<i>முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் பயணிகளுடன் தவறாக நடந்து கொள்வதாக முறைப்பாடு

வவுனியாவில் முச்சக்கரவண்டிகளை செலுத்தும் சாரதிகள் படு மோசமாக நடந்துக்கொள்வதாகவும் இதற்கு சமூகத்தில் ஆர்வம் உள்ளவர்களும் காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எதிர்காலத்தில் இதன் விளைவுகள் படுமோசமாக அமைந்து விடும் என்று தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தில் சவாரிக்கு போகவரும் பெண்களிடம் முச்சக்கர வண்டி சாரதிகள் இரட்டை பொருள்படும் சொற் பிரயோகங்களை பாவிப்பதாகவும், தவறான முறையில் நடக்க எத்தனிப்பதாகவும், இதன் காரணத்தால் பெண்கள் தனியாக போவதில் கூட அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் இடம் பெறும் வீதிவிபத்துக்களுக்கு முச்சக்கர வண்டி ஓட்டுனர்களும் காரணமாக இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். போதிய அனுபவம் இல்லாமலும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமலும் முச்சக்கர வண்டிகள் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சில முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் தென்னிந்திய பாணியில், அடிபாட்டுக்குத் தயாராக சைக்கிள் செயின்கள் கத்திகள் தடிபொல்லுகள் கொண்டு திரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பேருந்து நடத்துனர்களுக்கும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கும் முறுகல் நிலையிருந்தது. இது முடிவுக்கு வந்த பின்னர் கடந்த சனிக்கிழமை சிற்றூர்தி சாரதிகளுக்கும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டு மோதலில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆறு பேர்காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக தாம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி திரு.விஜேநாயக்க தெரிவித்தார். போக்குவரத்து காவல் துறையினர் வீதியின் பல பகுதிகளிலும் நிற்கின்றனர், இவர்கள் இத்தகைய தவறுகளையும் சமூக சீர்கேடுகளையும் கண்டுகொள்ளாது என்ன செய்கின்றனர் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இவர்கள் தண்டப்பணம் அறவிடுவதில் கவனம் செலுத்துவதாகவும் ஏனைய விடயங்களில் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை என்றும் மக்கள் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். </i>
-------------------------------

மரண தண்டனை என்பது ஒரு அதி உச்ச தீர்ப்பு என்பதுடன் அடிப்படை மனிதாபிமானக் கோட்பாடுகளுக்குள் வைத்து நியாயப்படுத்த முடியாத ஒரு தீர்ப்பும் கூட...! அப்படி இருந்தும் குற்றவாளிகளை நல் வழிப்படுத்தும் நோக்கில் மரண தண்டனை பற்றிய ஒரு உளவியல் பயத்தை தோற்றுவித்து அதன் மூலம் சமூகச் சீரழிவு நோக்கிய குற்றங்களைக் கட்டுப்படுத்துவது எங்கும் பொதுவானதே...ஆனால் மனிதனில் சக மனிதனுக்கு எதிராக கொடும் குற்றங்கள் புரிபவர்கள் இதனை விளங்கிக் கொள்ளவோ அல்லது இது தொடர்பாக வரும் முன்னெச்சரிக்கைகளை உள்வாங்கிக் கொள்ளவோ முனையாது தமது சமூகச் சீரழிவு அநியாயங்களைத் தொடரும் போது பலரதும் அடிப்படை மனித உரிமைகளைக் காப்பாற்ற இப்படியானர்களின் மீதான மனிதாபிமானப் பார்வை இழக்கப்படுவது என்பது என்னவோ தவிர்க்கமுடியாது போகிறது போலும்...! இருந்தாலும் குற்றவாளிகளும் மனிதர்களே என்று தண்டனை வழங்குபவர்கள் அவர்களுக்கு ஒரு அதிகபட்ச காலத்தை தமது தீவிர ரகசிய கண்காணிப்பின் கீழ் அவர்கள் நல்லவர்களாக திருந்தி வாழ அனுமதிக்க வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் அவசியம்....!

---------------------------
<i>Ellalan Army kills youth in Jaffna

[TamilNet, May 16, 2004 16:42 GMT]
Police found the body of a person identified as Subramaniam Chandralalith, 22, shot dead in Jaffna town in the early hours of Sunday morning. He was abducted in a van by unknown persons the day before, Police sources in the northern town said. In a note found near his body, a group calling itself Ellalan Army claimed that it had killed Chandralalith and punished five others for criminal activities including robbery, rape, abduction, extortion, fraud and child molestation.
Five persons who were abducted along with him by the group on Saturday were found in different places in the town blindfolded and with their hands tied.

They had been severely beaten up before they were pushed out of the van in which they were abducted, Police sources in Jaffna said.

There are several cases pending against Subramaniam Chandralalith in the Jaffna courts, according to them.

The note found near his body warned that the Ellalan Army would continue to punish criminals if they did not cease their anti-social activities in Jaffna immediately.

Police said they had not arrested anyone in connection with the murder and abductions. They said they do not know anything about the Ellalan Army.</i>
------------------------------

<i>தகவல் மூலம்...புதினம் மற்றும் tamilnet</i>

Print this item

  சோனியாவும் இந்தியாவும்...
Posted by: kuruvikal - 05-17-2004, 06:54 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40159000/jpg/_40159995_gandhi_203_index_ap.jpg' border='0' alt='user posted image'> (bbc.com)

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாஜ்பாயின் பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பெரும் சரிவைக் கண்டதால் இடதுசாரிக் (கம்னியுசியக் கட்சிகள்) கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க நேரு குடும்ப இத்தாலிய வாரிசான சோனியா காந்தி முயன்றார்...முயல்கிறார்...!

இடதுசாரிகளைக் கண்டதுமே இந்தியாவின் பொருளாதார முள்ளந்தண்டாகத் திகழும் வெளியார் முதலீடு என்பது பீதி கொண்டு பேதி கண்டிருக்கும் நிலையில் இன்று இந்திய பங்குச் சந்தைகள் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டன...அத்தோடு இடதுசாரிக் கட்சிகளும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க அரசுக்கு வெளியில் இருந்துதான் ஆதரவளிப்போம் என்று கூறிவிட்ட நிலையில் தனது பதவியேற்பை பிந்தள்ளிக் கொண்டு போகிறார் அரசியல் அனுபவமே இல்லாத நேரு குடும்ப இத்தாலிய வாரிசு....!

இதற்கிடையில் சோனியா பிரதமர் ஆவதை இந்திய சுதேசியக் கொள்கை உடையோர் வன்மையாக எதிர்ப்பதுடன் தாம் இந்தியர் தானா என்று ஒன்றுக்கு இரண்டு தடவை தம்மைத் தாமே நுள்ளியும் பார்த்துக் கொள்கின்றனர்....!

இத்தனையும் அங்கு நடக்க.....சிறிலங்கா வெளிவிவகார மந்திரி கதிர்காமரோ... காங்கிரஸ் ஆட்சியமைத்து சோனியா பிரதமரானால் புலிகள் தலைவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது பற்றிக் ஏதேதோ எல்லாம் சொல்லிப் பயமுறுத்துகிறார்...அதுவும் அமெரிக்கத் தலைநகரில் இருந்து கொண்டு சொல்லுகிறார்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea :!:

Print this item

  நியூஜெர்ஸி தமிழ்க் கலைப் படவிழா
Posted by: AJeevan - 05-17-2004, 02:07 AM - Forum: குறும்படங்கள் - Replies (1)

[align=center:c0cc39e6c5]<img src='http://www.caindiefest.com/images/filmstrip.jpg' border='0' alt='user posted image'>[/align:c0cc39e6c5]
[align=center:c0cc39e6c5] <span style='color:brown'><b>சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி தமிழ்க் கலைப் படவிழா </b>

ஜூன் 5, 2004 ஹில்ஸ்பரோ முனிஸிபல் காம்ப்ளக்ஸ் நியூ ஜெர்ஸி [/align:c0cc39e6c5]

திரையிடப்படும் படங்கள்:-</span>

1. மனித நேயம் (இயக்கம் : சேகர்) ஏன் இந்தப் பையன் மட்டும் பள்ளி முடியுமுன் அறையை விட்டு வெளியேற விரும்புகிறான்?

2. ஜல்லிக்கட்டு : (இயக்கம் : கே எம் ராஜாங்கம்) : ஜல்லிக்கட்டு தெரியும். வரலாறு தெரியுமா?

3. Untouchable Country (இயக்கம் சீனிவாசன்) : விடுதலை யாருக்கு?

4. வாஸ்து மரபு (இயக்கம் பால கைலாசம்) : கல்லிற்கு உயிர் தரும் சிற்பி கணபதி ஸ்தபதி என்ன சொல்கிறார்?

5. சைக்கிள் (இயக்கம் : பாரதிவாசன் ) : சைக்கிள் ஓட்ட ஆசை ஆனால்?

6. அப்பா (இயக்கம் : காவ்யா புகழேந்தி ) : அப்பாவின் தொழிலைச் சொல்ல ஏன் தயக்கம்?

7. தப்புக் கட்டை (இயக்கம் : தாஸ்) மௌனம் பூண்ட தப்புக்கட்டை மீண்டும் ஒலிக்குமா?

8. நிழல் யுத்தம் (இயக்கம் : ஆஜீவன்) : நவீன தம்பதிகள் யுத்தம் யாருடன்?

9. சென்னப்பட்டணம் : (இயக்கம் : பி ஜே ஜெயபாஸ்கர்) : பட்டணம் தான் போகலாம். போனபின்?

10. Br(a)illiant : (இயக்கம் : அருண் வைத்தியநாதன்) : திருடப்போனால் துயரம் வருமா?

11. ஒரு நாள் ( இயக்கம் : பாரதிவாசன்) : உழைக்கும் குழந்தைக்கு ஒரு நாள் கழியுமா?

12. தேடல் (இயக்கம் புவனா) : தொலைந்து போன குழந்தைகளைத் தேடிச் சென்றபோது?

13. ஒருத்தி (இயக்கம் : அம்ஷன் குமார்) : கிடை மேய்க்கும் ஒருத்தி எதை மாற்றப் போகிறாள்?

[align=center:c0cc39e6c5] தொடர்பு கொள்ள : natmurug@hotmail.com

பங்குபெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

http://www.thinnai.com/pl0512041.html

[/align:c0cc39e6c5]

Print this item

  &quot;விடுதலை&quot;
Posted by: kuruvikal - 05-16-2004, 09:42 PM - Forum: நூற்றோட்டம் - Replies (13)

அன்ரன் பாலசிங்கத்தின் "விடுதலை" நூல் வெளியீட்டுவிழா யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இன்று நடைபெற்றது. லண்டனில் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னரே இந்நூல் வெளியிடப்பட்டுவிட்டது. ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளைக் கொண்டிருக்கும் இந்நூல் அதன் பின்னனைத்து பகுதிகளிலும் ஆழமான கருத்தியல் ஓட்டமுள்ள மனித இனத்துக்கு அவசியமான விடயங்களைத் தொட்டுச் செல்கிறது....!

மனிதம் பற்றியும் அதன் தோற்றங்கள் தேவைகள் பற்றியும் ஆழமாகச் சிந்திக்க பலவற்றைச் சிந்தும் இந்நூலைப் படைத்த அன்ரன் பாலசிங்கத்துக்கு எம் பாராட்டுக்கள்....!

Print this item

  திருமண வாழ்த்துக்கள்
Posted by: Mathan - 05-15-2004, 12:05 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (1)

<img src='http://img.123greetings.com/events/wed_wed_flowers/1019-013-13-1059.gif' border='0' alt='user posted image'>

<b><span style='font-size:25pt;line-height:100%'>திருமண வாழ்க்கையில் மீண்டும் இணையும் இலங்கையின் சமாதான தூதுவர் எரிக் சொல்கைம் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்கள்</b></span>

Print this item

  மன்னிப்பு கேட்கவேண்டும்
Posted by: ganesh - 05-14-2004, 01:53 PM - Forum: புலம் - Replies (63)

மன்னிப்பு கேட்கவேண்டும் நேற்று இரவு
ஜரோப்பிய வானொலி ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பாதகம்
ஏற்படும் வகையில் குமாரலிங்கம் என்பவர்
(குமார்) ? வறுமையின் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எமது இளைஞர்கள் இணைகிறார்கள் என்று
கூறி விடுதைலப்புலிகள் இயக்கத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார் இதனை ஏற்கலாமா இதற்காக
இதேவானொலியில் அல்லது அவர் இணைந்து கொள்ளும் மற்றைய வானொலியிலும் இவர் பகிரங்க மன்னிப்பு
கேட்கவேண்டும்

Print this item

  புத்தரின் பெயரால்
Posted by: Eelavan - 05-14-2004, 05:40 AM - Forum: சினிமா - Replies (1)

தமிழ் இளைஞர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட புத்தரின் பெயரால் என்ற திரைப்படம் இங்கிலாந்தில் நடைபெறும் எம்மா விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி குமுதம் சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை
இங்கிலாந்தில் ஒவ்வொரு வருடமும் எம்மா விருது வழங்கும் விழா நடக்கிறது. இந்த விருது ஆஸ்கர் விருதுக்குச் சமமானது என்ற பார்வை சர்வதேச அளவில் உண்டு. இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆவலும் ஹாலிவுட்டில் ஆரம்பித்து உலகம் முழுதும் இருப்பதால் அந்தந்த நாட்டு சினிமா தயாரிப்பாளர்களும், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களும் போட்டி போட்டுக் கொண்டு கலந்து கொள்கிறார்கள்.

இந்த வருடம் எம்மா விருது விழாவில் புத்தரின் பெயரால்... (In The Name of Buddha) என்ற தமிழ்ப் படமும் கலந்துகொண்டிருக்கிறது. தமிழ் ஈழத்திற்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாக அதில் நடித்திருக்கிறார் ஜோதிலால் என்கிற தமிழர். அவரைச் சந்தித்தோம்.



மெட்ராஸ் டாக்கீஸில் ஆப்ரேடிங் கேமராமேனாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் டைரக்டர் ராஜேஷ் டச்ரீவர் என்பவர் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் டைரக்டர் இல்லை. ஒரு ஆங்கிலப் படத்தின் படப்பிடிப்பு அங்கு நடந்து கொண்டிருந்தது. அதற்கு ஆர்ட் டைரக்டராக வேலை செய்து கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும் புத்தரின் பெயரால்..., (In The Name of Buddha) படத்தின் கதையைச் சொல்லி பிரபாகரனாக நடிக்க நிறையப் பேரைப் பார்த்து ஓய்ந்து போன என் கண்களுக்கு, நீ அச்சுஅசல் பிரபாகரனாகத் தெரிகிறாய்... நடிக்கிறாயா? என்று கேட்டு இன்ப அதிர்ச்சி தந்தார். அதற்கான உடைகளைப் போட்டுப் பார்த்ததும் எனக்கே பிரபாகரனைப் போல் ஒரு கம்பீரம், மிடுக்கு எல்லாம் வந்துவிட்டது.

இலங்கைத் தமிழ் பேசி நடித்தேன். 1980_ல் நடந்தது போல் கதை எழுதியிருந்தார். இலங்கையில் படப்பிடிப்பு நடத்துவது அவ்வளவு சாத்தியமில்லை என்பதால் அதேபோல் சாயல் கொண்ட பொள்ளாச்சி, தலைச்சேரி ஆகிய ஊர்களில் படப்பிடிப்பை நடத்தினோம். கிட்டத்தட்ட எண்பது நாட்கள். படத்தின் இரண்டு காட்சிகளைப் பற்றிச் சொல்கிறேன்...

ஒரு இலங்கைத் தமிழரின் காதலியின் கற்பை சிங்கள ராணுவம் சூறையாடுகிறது. காதலியின் கற்பைப் பறி கொடுத்தவர், பிரபாகரனைச் சந்தித்து போதும் நாம் போராடியது. இப்படியே போராடிப் போராடி நிறைய இளைஞர்களையும், அவர்களின் குடும்பங்களையும், உடைமைகளையும் பெண்களின் மானத்தையும் வாழ்க்கையையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறோம். இது எத்தனை நாட்களுக்கு? எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொள்வோம். சுதந்திர தமிழீழம் வேண்டுமா? இதற்காக இன்னும் நிறையப் பேர் சாகணுமா தலைவரே? என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறார். பிரபாகரன் அவரைச் சமாதானப்படுத்தி நாம் ஒன்றுபட்டு போராடினால் வெற்றி நிச்சயம் என்கிறார். அவரின் பதிலுக்கு சமாதானம் அடையாமல், னக்கு இந்த நாடே வேண்டாம் என்று இலங்கையை விட்டு வெளியேறுகிறார். இந்தக் காட்சியில் பிஜு, சோனியா இருவரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள்.

இன்னொரு காட்சி.



ஒரு மலையருவியில் ஒரு புத்தர் சிலை. அந்த புத்தர் சிலைக்கு முன்னே மதத்தலைவர்களும், சீடர்களும் கண்ணை மூடிப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று புத்தர் மீது இரத்தம் கலந்த தண்ணீர் வருகிறது. அது தெரியாமல் எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். மலையருவியின் மறுபக்கம் ஒரு கொலை நடக்கிறது; கொலை செய்யப்பட்டவரின் ரத்தம்தான் சிலை மீது வருகிறது.

இப்படி ஏகப்பட்ட சுவாரஸ்யமான காட்சிகள் அடங்கியதுதான் புத்தரின் பெயரால்.. என்னைப் பொறுத்தவரை வாழும் ஒரு மனிதனைப் பற்றிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்ற பெருமை. படத்தை ரெடி செய்து லண்டனுக்கு அனுப்பினோம். சிறந்த நடிகருக்கான Nominee ஆக என்னைத் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயம் எனக்குக் கிடைத்தபோது என்னால் நடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.

டைரக்டர் மணிரத்தினத்திடம் இதைச் சொன்னீர்களா? என்று கேட்டதும், அவரிடம் எப்படி இதைச் சொல்வது என்ற தயக்கம். கேமராமேன் மணிகண்டனிடம் இதைச் சொன்னதும் அவர் மணிரத்தினம் சாரிடம் சொல்லிவிட்டார். உடனே அவர் என்னிடம் அப்படியா! எவ்வளவு பெரிய விஷயம். நீ நடித்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை? என்று ரத்தினச்சுருக்கமாகக் கேட்டது எனக்குப் பெருமையாக இருந்தது.



இதைப்பற்றிய மேலகதிக விபரங்களுக்கு

http://www.inthenameofbuddha.com/main.htm

படம் யாராவது பார்தீர்களா? விமர்சனம்?

Print this item

  மனித உரிமை ???
Posted by: Mathan - 05-14-2004, 04:04 AM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (10)

ஈராக்கில் சிறைச்சாலைகளில் அமெரிக்க பிரிட்டிஷ் படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்த சில படங்களை டெய்லி மிரர் பத்திரிகையும் வேறு சில ஊடகங்களும் அண்மையில் வெளியிட்டன. அவற்றின் மேற்குலகத்தினரால் மனித உரிமை பேணுப்படும் முறையை பாருங்கள் .....

<b>An American stands over a group of bound Iraqi prisoners. (AP Photo/Courtesy of The New Yorker)</b>

<img src='http://news.bbc.co.uk/media/images/40120000/jpg/_40120899_iraq_pow_abuse116_ap.jpg' border='0' alt='user posted image'>

<b>A hooded prisoner has wires attached to his hands and is forced to stand on a box under threat of electrocution. It is believed that the wires were not actually connected to a live electrical supply. (AP Photo/Courtesy of The New Yorker)</b>

<img src='http://news.bbc.co.uk/media/images/40120000/jpg/_40120897_iraq_pow_abuse115_ap.jpg' border='0' alt='user posted image'>

Two US soldiers pose next to a human pyramid of naked Iraqi soldiers. (AP Photo/Courtesy of The New Yorker)

<img src='http://news.bbc.co.uk/media/images/40120000/jpg/_40120901_iraq_pow_abuse117_ap.jpg' border='0' alt='user posted image'>

<b>A new picture keeps the prisoner abuse scandal on the front pages. US soldiers with dogs surround a naked Iraqi prisoner as he cowers against a cell door. (AP Photo/Courtesy of The New Yorker)</b>

<img src='http://news.bbc.co.uk/media/images/40134000/jpg/_40134441_iraq_pow_abuse131_ap.jpg' border='0' alt='user posted image'>

<b>An American soldier points at the genitals of a naked Iraqi prisoner. (AP Photo/Courtesy of The New Yorker)</b>

<img src='http://news.bbc.co.uk/media/images/40120000/jpg/_40120905_iraq_pow_abuse123_ap.jpg' border='0' alt='user posted image'>

<b>The body of an Iraqi prisoner, wrapped in cellophane and packed in ice. The picture is believed to have been taken at Abu Ghraib prison. (AP Photo/Courtesy of The New Yorker)</b>

<img src='http://news.bbc.co.uk/media/images/40120000/jpg/_40120903_iraq_pow_abuse122_ap.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  சீசர் சத்திரசிகிச்சை
Posted by: Mathan - 05-14-2004, 01:36 AM - Forum: மருத்துவம் - No Replies

சீசர் (cesarean) சத்திரசிகிச்சை குறித்து சூரியன் இணையத்தளத்தில் வெளியான கட்டுரை ...

http://sooriyan.com/index.php?option=conte...&id=400&Itemid=

Print this item

  தடங்கல் - அறிவித்தல்
Posted by: yarlmohan - 05-14-2004, 12:17 AM - Forum: களம் பற்றி - Replies (56)

பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

:: கடந்த 5ம் திகதியில் இருந்து தளம் செயலிழக்கும் வரை பதியப்பட்ட கருத்துக்கள், தனிப்பட்ட செய்திகள், அக்காலப்பகுதியில் புதிதாகப்பதிந்தவர்கள் விபரங்கள் எதுவும் இங்கு பதிவில் இல்லை. 5ம் திகதியிற்குப்பின்னர் பதிந்து கொண்டவர்கள் மீண்டும் புதிதாகப் பதிந்து கொள்ளுங்கள்.

:: தொடர்ந்து சிறிய பிழைகள் இங்கு உள்ளன. விரைவில் அவைகளைத் தீர்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்.

:: இதேபோன்று முதல்பக்கத்தில் இணைக்கப்பட்ட சில ஆக்கங்களும் இழக்கப்பட்டுவிட்டன. அவற்றினை இணைத்தவர்கள் மீளவும் இணைத்துக் கொள்ளுங்கள்.

Print this item