![]() |
|
சோனியாவும் இந்தியாவும்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: சோனியாவும் இந்தியாவும்... (/showthread.php?tid=7144) |
சோனியாவும் இந்தியாவு - kuruvikal - 05-17-2004 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40159000/jpg/_40159995_gandhi_203_index_ap.jpg' border='0' alt='user posted image'> (bbc.com) நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாஜ்பாயின் பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பெரும் சரிவைக் கண்டதால் இடதுசாரிக் (கம்னியுசியக் கட்சிகள்) கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க நேரு குடும்ப இத்தாலிய வாரிசான சோனியா காந்தி முயன்றார்...முயல்கிறார்...! இடதுசாரிகளைக் கண்டதுமே இந்தியாவின் பொருளாதார முள்ளந்தண்டாகத் திகழும் வெளியார் முதலீடு என்பது பீதி கொண்டு பேதி கண்டிருக்கும் நிலையில் இன்று இந்திய பங்குச் சந்தைகள் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டன...அத்தோடு இடதுசாரிக் கட்சிகளும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க அரசுக்கு வெளியில் இருந்துதான் ஆதரவளிப்போம் என்று கூறிவிட்ட நிலையில் தனது பதவியேற்பை பிந்தள்ளிக் கொண்டு போகிறார் அரசியல் அனுபவமே இல்லாத நேரு குடும்ப இத்தாலிய வாரிசு....! இதற்கிடையில் சோனியா பிரதமர் ஆவதை இந்திய சுதேசியக் கொள்கை உடையோர் வன்மையாக எதிர்ப்பதுடன் தாம் இந்தியர் தானா என்று ஒன்றுக்கு இரண்டு தடவை தம்மைத் தாமே நுள்ளியும் பார்த்துக் கொள்கின்றனர்....! இத்தனையும் அங்கு நடக்க.....சிறிலங்கா வெளிவிவகார மந்திரி கதிர்காமரோ... காங்கிரஸ் ஆட்சியமைத்து சோனியா பிரதமரானால் புலிகள் தலைவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது பற்றிக் ஏதேதோ எல்லாம் சொல்லிப் பயமுறுத்துகிறார்...அதுவும் அமெரிக்கத் தலைநகரில் இருந்து கொண்டு சொல்லுகிறார்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
|