| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 282 online users. » 0 Member(s) | 279 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,298
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,626
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,052
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| துயர் பகிர்வோம்.. |
|
Posted by: Manithaasan - 05-23-2004, 10:36 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (10)
|
 |
<b>சங்கீதபுூஷணம் எம்.ஏ. குலசீலநாதன் அவர்கள் மறைந்தார் ;</b>ஈழமெல்லிசைக் கலையின் முன்னோடிகளில் ஒருவரும்..இலங்கை வானொலி..சிங்கப்புூர் வானொலிகளில் இசைக்கட்டுப்பாட்டாளராகப் பணிபுரிந்தவரும,;.இசைமேதை பாலமுரளிகிருஸ்ணா அவர்களின் மாணவருமான சங்கீதபுூஷணம் எம்.ஏ. குலசீலநாதன் அவர்கள் வியாழனன்று பாரிசில் காலமானார்...
ஈழத்திரையின் குத்துவிளக்கு படத்திற்காக "ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே" என்ற பாடலையும் இலங்கைவானொலியில் பல மெல்லிசை பாடல்களையும் பாடிய இவர் பாரிஸ் நகரில் புகலிடவாழ்வில் ...முகத்தார் வீடு.இன்னுமொருபெண் ஆகிய சின்னத்திரைகளுpலும் தன் குரல் வளத்தை நிரூபித்துள்ளார்.
ஆழ்ந்த இசைஞானமும்..அதிமதுரக் குரல்வளமும் கொண்ட அவரின் ஆத்மாசாந்தியடைய அஞ்சலிக்கிறேன்
|
|
|
| பிறவிப்பலனை அனுபவியுங்கள் |
|
Posted by: AJeevan - 05-23-2004, 02:39 AM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
[align=center:e747c7eca1]<img src='http://www.kumudam.com/kumudam/24-05-04/adt.jpg' border='0' alt='user posted image'>[/align:e747c7eca1]
ஊனத்தின் கொடிய வடிவம் காது கேளாமை. இதனால் மனிதப் பிறவியின் பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியாது.
ஆனால் அறிவியலின் வளர்ச்சி காரணமாக பிறவியிலேயே காது கேளாதவர்களுக்கும் காது கேட்கும் சக்தியை வழங்கும் மருத்துவச் சாதனைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானது 'காக்ளியர் இம்ப்ளான்ட்' என்னும் நவீன சிகிச்சை.
கணிப்பொறிமயமாக்கப்பட்ட இந்த செயற்கைக் காதைப் பொருத்திய பின்னர் போதிய பயிற்சிகள் மூலம் பேசும் சக்தியையும் இயல்பாகப் பெற முடியும்.
ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்படும் இக்கருவியின் விலை மிகவும் அதிகம். எனவே இந்தியாவிலேயே இதைத் தயாரிக்கும் முயற்சியில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறை (DRDO) ஈடுபட்டுள்ளது. இதற்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை கோவை விக்ரம் மருத்துவமனை தலைவர் டாக்டர். பி.ஜி. விஸ்வநாதன், இயக்குநர் அருணா விஸ்வநாதன் ஆகியோர் வழங்கி வருகின்றனர்.
[align=center:e747c7eca1]<b>காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை</b> [/align:e747c7eca1]
காதின் உள்புறத்தில் உள்ள மிக நுண்ணிய உறுப்பான காக்ளியா (நத்தைக் கூடு வடிவத்தில் இருப்பது) பழுதடைந்து விட்டால் அறுவை சிகிச்சை மூலம் 22 அல்லது 24 மின் தகடுகள் பொருத்தப்படுகின்றன.
காதின் வெளிப்புறத்தில் 'ஸ்பீச் பிராசஸர்' என்னும் சாதனமும், 'மைக்ரோஃபோனும்' பொருத்தப்படுகின்றன. வெளி சப்தங்களை இந்த 'ஸ்பீச் பிராசஸர்' டிஜிட்டல் சிக்னல்களாக மாற்றுகிறது. காதின் பின்பகுதியில் பொருத்தப்படும் 'டிரான்ஸ்மீட்டர்', தோலுக்கு அடியில் பொருத்தப்படும் 'ரிசீவர்' மூலம் காக்ளியாவினுள் உள்ள மின் தகவல்களுக்கு சிக்னல்களை அனுப்பி கேட்கும் சக்தியை உண்டாக்குகின்றன.
இந்த சிகிச்சையைச் செய்ய முன்பெல்லாம் தலையில் 15 செ.மீ., அளவுக்குக் கிழித்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. விக்ரம் மருத்துவமனையில், வெறும் 3 செ.மீ., வழியே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் வலி, தழும்பு, பக்க விளைவுகள் குறைகின்றன. 2 நாள்களிலேயே வீடு திரும்பலாம். 2 வாரங்களில் 'மேப்பிங்' செய்து காது கேட்கும் சக்தியைப் பெறலாம்.
அனுபவம், நிபுணத்துவம் மிக்க மருத்துவர்களும், நவீன கருவிகளும் விக்ரம் மருத்துவமனையில் உள்ளன. இதனால் சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருந்தும் பலர் கோவை விக்ரம் மருத்துவமனைக்கு வந்து 'காக்ளியர் இம்ப்ளாண்ட்' சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
[align=center:e747c7eca1]<b>குறட்டை _ அசட்டையாக இருக்காதீங்க </b>[/align:e747c7eca1]
குறட்டை _ தூங்கும்போது தானே வருகிறது. இதனால் அடுத்தவருக்கு மட்டுமே இடைஞ்சல், நமக்கென்ன என்று அலட்சியம் செய்துவிடாதீர்கள்.
இரண்டு விதங்களில் அது உங்களுக்கு பாதிப்பைத் தருகிறது. 1. குறட்டைச் சத்தம் அதிகரிக்கும்போது உங்களை, உங்கள் குடும்ப உறுப்பினர்களே வெறுத்து ஒதுக்கத் தொடங்குவார்கள். 2. போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் நுரையீரல் பழுதடைந்து ஆஸ்துமா ஏற்படலாம்.
காரணம் என்ன?
மூக்கின் விட்டம் வளைந்து இருத்தல், 'டெர்மினேட்' சதை அதிகமாக வளர்ந்து இருத்தல், சிறுநாக்கின் அடர்த்தி அதிகமாக இருத்தல் காரணமாக குறட்டை ஏற்படலாம்.
நிவாரணம் எப்படி?
லிகிக்ஷிறி என்னும் சிறப்பு லேசர் சிகிச்சை மூலம் சிறுநாக்கின் அடர்த்தியைக் குறைக்கலாம். 'செப்டோபிளாஸ்டி' மூலம் மூக்கின் வளைந்த விட்டத்தைச் சீரமைக்கலாம். 'டர்பினோபிளாஸ்டி' மூலம் மூக்கில் அளவுக்கு அதிகமாக வளர்ந்துள்ள சதையைக் கரைக்கலாம்.
கோவை விக்ரம் மருத்துவமனையில் ரிஜிறி லேசர், சென்சரா மைக்ராஸ்கோப் உதவியுடன் சிகிச்சைகள் துல்லியமாக வழங்கப்படுவதால் குறட்டையை நீக்கி. குடும்பத்துடன் நிம்மதியாகத் தூங்கலாம்.
[align=center:e747c7eca1]<b>குழந்தைகளுக்கும் பாதிப்பு</b>[/align:e747c7eca1]
'டான்சில்' மற்றும் 'அடினாய்டு' சதை வளர்ச்சி காரணமாக குழந்தைகளின் சுவாசப் பாதையில் தடங்கல்கள் ஏற்படலாம். இதனால் மூக்கு வழியிலான சுவாசம் குறைந்து வாயில் சுவாசிக்கும்போது குறட்டை உண்டாகிறது.
சுவாசத் தடைகளால் உடலுக்குச் செல்லும் ஆக்ஸிஷன் அளவு குறைந்து உடல், மனம், மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
நாம் விடும் ஒவ்வொரு மூச்சுக் காற்றுக்கும் ஒரு தடை ஏற்படும்போது. நமது நுரையீரல்களுக்குத் தொடர்ச்சியாக எவ்வளவு தடைகள் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
வாய் வழியே சுவாசிப்பதாலும் சில குழந்தைகளுக்கு முன்புறப் பல் வரிசை வெளியே நீளத் தொடங்குகிறது.
குறட்டை உள்ளவர்களுக்கு சளி காதுக்குள் பரவினால் கேட்கும் சக்தி குறைகிறது. சளி ஷவ்வுப் பகுதியைத் தாண்டும்போது காதில் இருந்து சீழ் வடிகிறது.
சீழ் வடியும் பிரச்சினைக்கு உரிய சிகிச்சை வழங்காவிட்டால் எலும்பு பாதிக்கப்படும். மூளைக்கு சீழ் பரவி மூளைக்காய்ச்சல், மூளையில் சீழ் கட்டி, கோமா... என உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்
vikram_hospital@yahoo.com
|
|
|
| ஊர்க்குருவியோடு எனக்கொரு வழக்கு... |
|
Posted by: kuruvikal - 05-23-2004, 02:25 AM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/pod_april04_18.jpg' border='0' alt='user posted image'>
அப்பா தந்த
பப்பா உண்டு
விதைகள் காய வைத்து
நட்டேன் நாலு விதை
கிணற்றடியில்.........
மணிக்கொரு தடவை
சென்று பார்த்து
முளைக்க வைத்த பப்பா,
எப்ப வளரும் என்னளவென்று
நாளும் பாத்து
வளர்த்த பப்பா,
நாலு காய் காய்த்திருக்க
பட்ட சந்தோசம் சொல்லிமாளாது...!
எப்ப அது பழுக்கும் என்று
காய் கண்ட பொழுதிலேயே
பங்கு போட்டிருக்க
உண்மையில் பழுத்த பொழுது
நானும் செல்லடிக்குப் பயந்து
சுதந்திரம் இழந்து
ஊரை விட்டு ஓடியிருக்க
செல்லடிக்குள்ளும்
தன் கூடு காத்து
ஊரோடு ஒட்டிய
குருவி ஒன்று
சொந்தங் கொண்டாடி
உண்டது அப்பப்பா...!
இப்ப ஒரு உண்மை
உரைக்குது அக்குருவி....
உதட்டளவில் தாயகப்பற்றுரைத்து
வாழ்ந்தால் என் மண்ணிலேயே வாழ்வேன்
வீழ்ந்தால் தமிழ் மண்ணிலேயே வீழ்வேன் - என்று
வீர வசனம் பேசியோரெல்லாம்
செல்லடிக்கல்ல
அதை சாட்டுவைத்து
செல்வத்தனம் காண
தூர தேசம் பறந்த
சுயநலக்காரர்கள் வரிசையில் - நீ
அப்பப்பாவுக்கு சொந்தமில்லை
அதன் சுவையறிய
உனக்கு உரிமையில்லை என்று...!
இப்ப என் சித்தம் தெளியுது....
தூர இருந்து நீர் சிந்திய
மேகத்துக்கு இல்லை
தண்ணி ஊற்றி
பப்பா வளர்த்த உரிமை...!
பப்பா அருகிரு
கிணற்றடி ஊற்றுக்கே
உண்டு அவ்வுரிமை...!
பப்பா நட்டாலும்
என் சுயநலத்துக்காய்
பப்பா மறந்த நானும்,
நட்டது முதலாய்
வளர்த்தது வரை கூட இருந்த
அந்தக் குருவி
துன்பத்திலும்
பப்பா காத்ததாய் சொல்கிறது...!
அப்போ அதற்குத்தானே
பப்பா உண்ண உரிமை...!
சின்னக் குருவியது
கொண்ட உண்மை தேசப்பற்றறிந்து
வெட்கித்து ஒதுங்கினேன்...!
வாழ்க குருவி
நீயே உன் தேசத்தின் தேசபக்தன்...!
இத்தோடு முடிக்கின்றேன் என் வழக்கு...!
உன்னோடு இல்லை
எனக்கொரு போட்டி
நீயாய் தந்தால்
நானும் சுவைப்பேன்
நீ காத்த பப்பா தன் சுவை...!
முதற்பதிவு இங்கே... http://kuruvikal.yarl.net/archives/2004_05.html
|
|
|
| முத்தையா முரளிதரன் |
|
Posted by: AJeevan - 05-23-2004, 01:57 AM - Forum: விளையாட்டு
- No Replies
|
 |
[align=center:1aa56da998]<img src='http://www.kumudam.com/kumudam/24-05-04/23t.jpg' border='0' alt='user posted image'>[/align:1aa56da998]
<span style='font-size:23pt;line-height:100%'>திருவள்ளுவர், பாரதியார், அப்துல்கலாம் என்று தமிழர்களை பெருமைப் பட வைத்தவர்கள் பலர் உண்டு. அந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்து தமிழர்களைப்பெருமைப்படுத்தியிருக்கிறார் முத்தையா முரளிதரன். கண்டியில் பிறந்த இந்தத் தமிழன் இன்று கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் ஏகபோகச் சக்ரவர்த்தியாக தலைநிமிர்ந்து நிற்கிறார். இதற்காக அவர் சந்தித்தப் போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.</span>
[align=center:1aa56da998]<img src='http://www.kumudam.com/kumudam/24-05-04/23.jpg' border='0' alt='user posted image'>[/align:1aa56da998]கண்டியில் உள்ள நாட்டரம் கோட்டா என்ற ஊரில் 1972_ம் ஆண்டு ஏப்ரல் 17_ம் தேதி முத்தையா முரளிதரன் பிறந்தார். இவரது அப்பா சின்னசாமி முத்தையா, லக்கிலேண்ட் குக்கி ஃபேக்டரி என்ற பெயரில் பிஸ்கட் கம்பெனியை நடத்திக் கொண்டிருந்தார். ஓரளவு வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த அவர், தன் மகன் பட்டங்களாக வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற ஆசையில் இலங்கையில் உள்ள செயிண்ட் ஆன்டன் கல்லூரியில் சேர்த்தார்.
ஆனால், முரளிதரனுக்கு படிப்பைவிட கிரிக்கெட்தான் அதிகம் பிடித்தது. கல்லூரிக்குப் பாடப்புத்தகங்களை எடுத்துச் செல்கிறாரோ இல்லையோ, கிரிக்கெட் பந்தை மறக்காமல் எடுத்துச் செல்வார். பாடம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இவர் மட்டும் அங்குள்ள மைதானத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பாராம்.
அந்த நேரத்தில்தான் சுனில் பெர்னாண்டோ என்ற கிரிக்கெட் பயிற்சியாளரின் பார்வையில் பட்டார் முரளிதரன். இந்த இளைஞனுக்குப் பயிற்சி கொடுத்தால் கிரிக்கெட்டில் பல வித்தைகளைச் செய்வான் என்று அவருக்குத் தோன்ற முரளியை தன்னுடன் அழைத்துச் சென்றார். கொழும்பில் உள்ள அங்கிரியா சர்வதேச ஸ்டேடியத்தில் பயிற்சி கொடுக்கத் தொடங்கினார்.
அப்போதெல்லாம் முரளிதரன் மிதவேகப் பந்து வீச்சாளராகத்தான் இருந்தார். ஆனால் முரளிதரனின் கைவாகு, ஒரு ஸ்பின்னருக்கு ஏற்றதாக இருக்க, அவரை ஸ்பின் பவுலிங் போட்டு பயிற்சி எடுக்க வைத்தார் பெர்னாண்டோ. இதற்கு கை மேல் பலன் வந்தது. 'தமிழ் யூனியன் அத்லெடிக் கிளப்' அணிக்காக ஆடிவந்த முரளிதரன், உள்ளூர்ப்போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் குவிக்க, தேர்வுக் குழுவின் பார்வை இவர் மீது திரும்பியது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
'பொதுவாக சிங்கள கிரிக்கெட் வீரர்களுக்கு தமிழ் வீரர்களைப் பிடிக்காது. எனவே முரளிதரன் அணியில் இடம்பெற்றாலும் அதில் நிலைத்திருப்பதும், மற்ற வீரர்களின் அன்பைப் பெறுவதும் கஷ்டம்'. என்று அங்குள்ள பத்திரிகைகள் எழுதின. ஆனால் தன் அன்பான நடத்தையாலும், ஈ.கோ இல்லாத தன்மையாலும் எல்லோர் உள்ளங்களையும் கவர்ந்தார். அவர்கள் என்ன வேலை சொன்னாலும் செய்து கொடுத்து அவர்களின் உள்ளங்களை வென்றார். அதேநேரத்தில் தன் திறமையான பந்துவீச்சால் அணியில் இருந்து பிரிக்க முடியாத அம்சமாக மாறிப்போனார் முரளிதரன்.
அர்ஜுனா ரணதுங்காவுக்கு முதலில் முரளிதரனைப் பிடிக்காது. ஆனால் காலம் செல்லச் செல்ல தன் மந்திரப் பந்துவீச்சால் ரணதுங்காவின் மனதை முரளிதரன் கட்டிப்போட, அவர் இல்லாமல் ஆடவே முடியாது என்ற நிலைக்கு ரணதுங்கா தள்ளப்பட்டார்.
கிரிக்கெட்டில் சாதாரண அணியாக இருந்த இலங்கை, முரளிதரனின் பந்துவீச்சால் கிரிக்கெட் வல்லரசாக உருவாகத் தொடங்கியது. இது மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலரது கண்களை உறுத்தியது. முரளிதரன் மீது ஏதாவது குறைகூறி அவரது வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்று ஏங்கினார்கள். கடைசியில் ஒரு வழியாக, "பந்துவீசும் போது முரளிதரனின் கை அமைப்பு சரியாக இல்லை. அவர் பந்தை வீசுவதற்கு பதில் எறிகிறார். அதனால்தான் அவருக்கு விக்கெட் விழுகிறது" என்ற பழி போட்டார்கள்.
முரளிதரனுக்கு படிக்கிற காலத்தில் இருந்தே ஒரு குறை உண்டு. உடல்ரீதியாக முழங்கையை 180 டிகிரிக்கு மேல் திருப்ப முடியாது என்பதுதான் அந்தக் குறை. இது எதிரிகளுக்கு சாதகமாக, அவரை விசாரணை என்ற பெயரில் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்குமாக அலைக்கழித்தார்கள். அவரது மன உறுதியை அது குலைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அது முரளிதரனின் வேகத்தை அதிகப்படுத்தவே செய்தது.
"மற்றவர்கள் என்னைத் தாக்கும் போதுதான் எனக்கு பலம் கூடுகிறது. என்னைக் கண்டு பயப்படும் யாரோ பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி என்னைக் கிரிக்கெட்டில் இருந்து விரட்ட நினைக்கிறார்கள். அதற்கு நாம் பணிந்துபோகக் கூடாது என்ற வேகம் என் உள்ளத்தில் தோன்றும். என் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்" என்று அடிக்கடி சொல்வார் முரளிதரன்.
முரளிதரனின் உள்ளத்தில் வேகம் மட்டுமில்லை நன்றியுணர்ச்சியும் உண்டு. தான் இலங்கைக்காக ஆடிய முதல் போட்டியில் கிடைத்த சம்பளப் பணத்தில் ஐம்பதாயிரம் ரூபாயை சுனில் பெர்னாண்டோவுக்கு கொடுத்தார். அவர்தானே முரளிதரனை சுழற்பந்து வீச்சாளராக மாற்றியவர். ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கும் இந்தக் காலத்தில் முரளி ஆச்சர்யமான மனிதர்தான்.
திருவேங்கிமலை சரவணன்
படங்கள் ஆர். சண்முகம்
Thanks: Kumudam.com
|
|
|
| உண்மையா |
|
Posted by: aathipan - 05-21-2004, 09:03 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (37)
|
 |
கொழும்பைச்சேர்ந்த தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் கூறிய செய்தி இது. அதை மறுக்க ஆதாரம் தேவைப்படுவதால் இங்கே எழுதுகிறேன். யாரும் ஆதாரம் கிடைத்தால் தெரிவிக்கவும். அவர் கூற்றை மறுக்க உதவியாக இருக்கும்.
விடுதலைப்புலிகளுக்கும் கருணா துரோகிகள் படைக்கும் மோதல் ஏற்பட்டது தெரிந்ததே. அதன்போது கிழக்கு மாகானத்தைச்சேர்ந்த 300 கருணா ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கொலைசெய்;யப்பட்டதாக அவர் கூறுகிறார். தான் அவர்களின் உடலைப்பார்த்ததாகவும் சொல்கிறார். அந்த உடல்கள் ஆடைகளற்று கிடந்ததாக கூறுகிறார். கிழக்குப்பகுதி மக்கள் வன்னிப்டையை வெறுப்பதாகவும் சொல்கிறார்.
நடந்தது என்ன? தெரிந்தவர்கள் பதில் எழுதவும்.
|
|
|
| அகிலத்தின் (Universe) அளவு..! |
|
Posted by: kuruvikal - 05-21-2004, 08:33 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (2)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/universe.jpg' border='0' alt='user posted image'>
அகிலத்தின் மாதிரி
(Image from Nature.com)
நாம் வாழும் பூமி உட்பட பல கோடி கோள்களையும் பல கோடி நட்சத்திரங்களையும் உள்ளடங்கிய அகிலம் எந்தளவு பெரியது என்பது விஞ்ஞான ரீதியான ஒரு பழைய, இன்னும் தெளிவாக விடை காணப்படாத வினா...அத்துடன் பொதுவில் அகிலத்தின் அளவு என்பது இன்னும் முடிவிலிக்குள் (infinite) பதுக்கப்பட்டே உள்ளது....
என்றாலும் இதற்கு ஒரு தெளிவான விடையைக் காண்பதற்கு அகிலத்தில் அவதானிக்கப்பட கதிர்ப்புகள் -- மைக்குறோ வேவ் -- microwave (ஒரு வகை வெப்ப அலைகள்) கொண்டு விஞ்ஞானிகள் விளைந்து, சில ஊகங்களை கணிப்பீடுகளின் வாயிலாகத் தந்துள்ளனர்...இன்றைய அளவில் அகிலத்தில் குறுக்களவு என்பது குறைந்தது 78 பில்லியன் (Billion) ஒளியாண்டுகளையும் விட அதிகமாக இருக்க வேண்டும் என்றும் முன்னைய காலங்களில் கூறப்பட்டது போன்று அகிலம் சிறிதென்பது ஏற்கத்தக்க கருத்தல்ல என்றும் அகிலத்தின் அளவு இன்று எதிர்வு கூறப்பட்டதை விட அதிகமாகக் கூட இருக்கலாம் என்றும் இது தொடர்ப்பில் தொடர்ந்து விண்ணுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் கொண்டு ஆய்வுகள் தொடர்வதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
மேலதிக தகவல்களுக்கு இங்கு அழுத்துக....
|
|
|
| விழித்தது என் மனம்....! |
|
Posted by: kuruvikal - 05-21-2004, 04:38 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/kuruvikkudu.jpg' border='0' alt='user posted image'>
பிறந்தது முதலாய்
தனிமையில் வாழ்கிறேன்
சுற்றம் இருப்பினும்
என் மனதோடு வாழ்வதென்னவோ
தனிமையில் தானே...!
அந்த மனத்துக்கு
ஓர் இதம் தேடி
மாலை மயங்க
கடற்கரை ஓடினேன்...
போன பொழுதில்
மனித ஆணும் பெண்ணுமாய்
செய்யும் கண்றாவிகள் கண்டு
சீ... என்று போனது
போன கணத்திலேயே
விலகி அருகிருக்கும்
பூங்காவில் புகுந்திருக்க
முனைந்திருந்தேன்
அங்கும் மனித அசிங்கங்கள்
கண்ணுக்கெட்டிய வரை.....
வாசலிலேயே விடை பெற்று
நகரங்கள் கடந்து
கிராமத்துக்கு ஓடினேன்
நல்ல வயற்கரை
வனப்பதில் களித்திருக்க
கனவு கண்டபடி....!
ஆனால் அங்கே
வயலும் இல்லை வனப்பும் இல்லை
வடிவாய் இருந்த கிராமமெல்லாம்
மண்மேடுகளாய்
இராணுவக் காவலரணாய்
காட்சியளிக்க
சித்தம் ஒடுங்கி
வேட்டைக்கு வரும் வேட்டுக்கு மிஞ்சி
மீண்டேன் என்கூடு...!
கொண்டேன் போதும் இந்த
நான் வைத்த தோப்பும்
என் வீடும் என்றே....!
அன்றே அத்தோடே
வேண்டாத தேடல்கள் தொலைத்து
என் மனமும் மகிழ்ச்சியோடு
ஐக்கியமானது
கனவுகள் கலைத்து
இனிதாய் தன் சுய நிகழ்வுகள்
தரிசித்தது....!
முதற் பதிவு இங்கே... http://kuruvikal.yarl.net/archives/000873.html#more
|
|
|
| வான் புலிகள் |
|
Posted by: Mathan - 05-21-2004, 09:44 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (122)
|
 |
புலிகளின் விமானம் முல்லை கடற்பரப்பில் பறப்பு: சிறிலங்கா விமானப்படை தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் பறந்ததைத் தாம் அவதானித்ததாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் முல்லைத்தீவு கடலிருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில்; பறந்து கொண்டிருந்த இந்த விமானத்தை ரேடார் கருவிகள் மூலம் தாம் அவதானித்ததாகவும், சில மணி நேரத்தின் பின் இந்த விமானம் தரையிறங்கியதாகவும் சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இந்த விமானம் பறந்து கொண்டிருந்ததாகவும், இந்த விமானம் உலங்கு வானு}ர்தி ஒன்றின் வேகத்திற்கு சமமான வேகத்தைக் கொண்டிருந்தாகவும் சிறிலங்கா விமானப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விமானம் பறந்து கொண்டிருக்கையில் சிறிலங்கா விமானப் படைக்குச் சொந்தமான விமானங்கள் எவையும் இவ்வான் பரப்பில் பறக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள சிறிலங்கா விமானப் படை வட்டாரங்கள், இந்த விமானம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாகவே இருக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளன.
இதேவேளை தம்மிடம் வன்னியில் ஒரு விமானத் தளம் இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Puthinam
|
|
|
|