Yarl Forum
அகிலத்தின் (Universe) அளவு..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: அகிலத்தின் (Universe) அளவு..! (/showthread.php?tid=7130)



அகிலத்தின் (Universe) அளவு..! - kuruvikal - 05-21-2004

<img src='http://kuruvikal.yarl.net/archives/universe.jpg' border='0' alt='user posted image'>

அகிலத்தின் மாதிரி
(Image from Nature.com)

நாம் வாழும் பூமி உட்பட பல கோடி கோள்களையும் பல கோடி நட்சத்திரங்களையும் உள்ளடங்கிய அகிலம் எந்தளவு பெரியது என்பது விஞ்ஞான ரீதியான ஒரு பழைய, இன்னும் தெளிவாக விடை காணப்படாத வினா...அத்துடன் பொதுவில் அகிலத்தின் அளவு என்பது இன்னும் முடிவிலிக்குள் (infinite) பதுக்கப்பட்டே உள்ளது....

என்றாலும் இதற்கு ஒரு தெளிவான விடையைக் காண்பதற்கு அகிலத்தில் அவதானிக்கப்பட கதிர்ப்புகள் -- மைக்குறோ வேவ் -- microwave (ஒரு வகை வெப்ப அலைகள்) கொண்டு விஞ்ஞானிகள் விளைந்து, சில ஊகங்களை கணிப்பீடுகளின் வாயிலாகத் தந்துள்ளனர்...இன்றைய அளவில் அகிலத்தில் குறுக்களவு என்பது குறைந்தது 78 பில்லியன் (Billion) ஒளியாண்டுகளையும் விட அதிகமாக இருக்க வேண்டும் என்றும் முன்னைய காலங்களில் கூறப்பட்டது போன்று அகிலம் சிறிதென்பது ஏற்கத்தக்க கருத்தல்ல என்றும் அகிலத்தின் அளவு இன்று எதிர்வு கூறப்பட்டதை விட அதிகமாகக் கூட இருக்கலாம் என்றும் இது தொடர்ப்பில் தொடர்ந்து விண்ணுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் கொண்டு ஆய்வுகள் தொடர்வதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்


மேலதிக தகவல்களுக்கு இங்கு அழுத்துக....


- tamilini - 05-27-2004

தகவல்களிற்கு நன்றி! குருவிகள்


- kuruvikal - 05-28-2004

அட லேற்றா வந்தாலும் லேற்ரஸ்ரா ஒரு தாங்ஸ் சொல்லுறிங்க....நன்றிங்க....! :wink:

தொடர்ந்து படியுங்க....இப்ப இங்க இல்ல... எனி வரும் செய்திகளையும் எண்டு சொன்னம்...! புரியல்லையெண்டா அழுவாதிங்க...மனசு தாங்காதுங்க...எங்க மனசில்ல... உங்க மனசு...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->