Yarl Forum
வான் புலிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: வான் புலிகள் (/showthread.php?tid=7132)

Pages: 1 2 3 4 5 6 7


புலிகளின் விமானம் - Mathan - 05-21-2004

புலிகளின் விமானம் முல்லை கடற்பரப்பில் பறப்பு: சிறிலங்கா விமானப்படை தெரிவிப்பு


தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் பறந்ததைத் தாம் அவதானித்ததாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் முல்லைத்தீவு கடலிருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில்; பறந்து கொண்டிருந்த இந்த விமானத்தை ரேடார் கருவிகள் மூலம் தாம் அவதானித்ததாகவும், சில மணி நேரத்தின் பின் இந்த விமானம் தரையிறங்கியதாகவும் சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இந்த விமானம் பறந்து கொண்டிருந்ததாகவும், இந்த விமானம் உலங்கு வானு}ர்தி ஒன்றின் வேகத்திற்கு சமமான வேகத்தைக் கொண்டிருந்தாகவும் சிறிலங்கா விமானப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த விமானம் பறந்து கொண்டிருக்கையில் சிறிலங்கா விமானப் படைக்குச் சொந்தமான விமானங்கள் எவையும் இவ்வான் பரப்பில் பறக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள சிறிலங்கா விமானப் படை வட்டாரங்கள், இந்த விமானம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாகவே இருக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளன.

இதேவேளை தம்மிடம் வன்னியில் ஒரு விமானத் தளம் இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Puthinam


- Mathan - 05-21-2004

புலிகளின் விமான வெள்ளோட்டம்
கடற்படை ராடரில் தெரிந்ததாம்

தமிழீழ விடுதலைப் புலிகள் விமானம் ஒன்றை வெள்ளோட்டம் விட்டுச் சோதித்திருக்கிறார்கள் என்று கடற்படை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து சுமார் 12 மைல் து}ரம் விமானம் ஒன்றைச் சோதனைக்காகப் பறக்கவிட்டுத்திருப்பி இறக்கியிருக்கிறார்கள் என்று அச்செய்தி கூறுகின்றது.

இரணைமடுப் பகுதியில் விமான ஒடுபாதையொன்றைப் புலிகள் அமைத்திருக்கிறார்கள் என்று அண்மையில் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருந்ததும் சுட்டிக்காட்டப்பட ;டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் கடற்படைக்கலம் ஒன்றின் ராடர்| திரையில் வானத்தில் ஒரு பொருள் பறப்பது அவதானிக்கப்பட்டதாகவும் அந்த மர்மப் பொருள் முல்லைத்தீவின் கரைக்கப்பால் கடலை நோக்கி நகர்வது ராடரில் தெரிந்ததாகவும், சுமார் 12 கடல் மைல் து}ரம் பறந்ததின் பின்னர் தரையை நோக்கித் திரும்பியதாகவும், அத்துடன் ராடர் திரையிலிருந்து மறைந்துவிட்டதாகவும் கடற்படை யினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நேரத்தில் விமானப்படை விமானம் எதுவும் அப்பகுதி வானில் பறக்கவில ;லையென்று விமானப்படை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். அப்பொருள் ஒரு விமானமாக இருக்கலாம் என்பதில் கடற்படையினரால் உறுதியாகக் கூறமுடியாவிட் டாலும் அதன் வேகத்தையும் திசையையும் கவனிக்கும்போது அது ஒரு விமானமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

கிளிநொச்சிப் பகுதியில் விமானம் போன்ற பறக்கும் சாதனம் ஒன்றைப் புலிகள் வைத்திருப்பது பற்றிய புலனாய்வுத் தகவல்கள் தம்மிடமிருப்பதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயன்


- Mathan - 05-21-2004

புலிகளிடம் வான ஊர்தியா? பாதுகாப்புத்துறை கலக்கம்

முல்லைத்தீவுக் கடலில் புலிகளின் வானு}ர்தி ஒன்று பறந்து திரிந்ததாக வெளியான ஊடகத் தகவல்களை அடுத்து அரசின் பாதுகாப்பு உயர் மட்டங்களில் அது தொடர்பாகக் கலக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

இந்த விவரத்தை அடுத்து விமானப் படையின் உயரதிகாரிகளை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று அவசரஅவசரமாக அழைத்து நிலைமைகளை ஆய்வு செய் திருக்கின்றார். புலிகள் வைத்திருக்கக்கூடிய விமானங்கள், வான ஊர்திகள் அவற்றின் உத்தேச செயல்திறன், அதனால் இலங்கையின் கேந்திர முக்கியத்து வம்வாய்ந்த நிலைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்து ஆகியவை குறித்தும் ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.
இத்தகைய வசதியைப் புலிகள் கொண்டிருப்பதால் எழக்கூடிய ஆபத்தை எதிர்கொள் வதற்காக இலங்கைப் பாதுகாப்புத்துறை செய்யவேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கை கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக ஒரு தகவல் தெரிவித்தது.

இந்த ஆபத்தை சமாளிப்பதற்குத் தேவையான கருவிகள், ஆயுதங்கள் முன்னெச்சரிக்கைத் திட்டங்கள் ஆகியவற்றைப் பெறுவதற்கு விரைந்து நட வடிக்கை எடுக்கவும் இக்கூட்டத்தில் பச்சைக்கொடி காட்டப்பட்டதாக அறியவந்தது. புலிகள் தங்கள் வான்படையையும் விரிவுபடுத்துகின்றார்கள் என்ற தகவல் இலங்கை யின் பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதை அறியமுடிகின்றது.

உதயன்


- Kanani - 05-21-2004

அட இது நம்மாள் வைச்சிருந்த புஷ்பக விமானம் என்று நினைக்கிறன்....சிங்களம் ஏன் இப்பிடிக் கலங்குது? இராமன் படையிடம் உதவி கேட்கத் துடிக்கினமோ?


- tamilini - 05-23-2004

சந்தோசம் தானே. வன்னியில் நாம் சிறிது காலம் மரங்களை நம்பி வாழ்ந்தது இன்னும் நினைவு இருக்கிறது.


- sOliyAn - 05-24-2004

ஏங்க, குரங்குகளுக்குதானே மரங்கள் தேவை?! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Paranee - 05-24-2004

நடந்து வந்த பாதையை மறக்கலாமா சோழியன் அண்ணா !

குரங்கின் வழிதானே நாமும் வந்தோம்.


- kuruvikal - 05-24-2004

ஏன் சோழியான் அண்ணா நடந்து வந்தப் பாதையைப் பாக்கிறியள் இல்ல....அதுதானே கடந்து வந்திட்டமே இப்ப நடக்கிறதே இல்ல கார்தானே என்று பெருமை போல....என்னதான் பெருமை கொண்டாலும் சோழியான் அண்ணா நாமெல்லாம் வானரக்கூட்டத்தின் சொந்தம் எண்டுதான் நாம் கடந்த வந்த வரலாறு சொல்லுது....! :wink:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sOliyAn - 05-24-2004

வரலாறு என்பதை இதிகாசம் என மாற்றினால் பொருந்துமென நினைக்கிறேன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Eelavan - 05-24-2004

அப்ப விஞ்ஞானம் சொல்வது?


- sOliyAn - 05-25-2004

விஞ்ஞானம் எல்லாரையும்தானே சொல்லுது.. ஆனால் இதிகாசம் தென்னிந்தியரையும் இலங்கையரையும் வானரம், கழுகு, அரக்கர் என்றல்லவா சொல்லுது?!


- Eelavan - 05-25-2004

அதுமட்டுமா தென்னிந்தியர் சகோதரர் மனவியைக் கவர்பவர்கள் இலங்கையர் பிறன் மனை கவர்பவர்கள் வட இந்தியர் மட்டும் ஏகபத்தினி விரதர்கள்
புரானங்கள் என்றால் கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருக்கும் நல்லதை எடுத்து தீயதை விடுவோம்


- Paranee - 05-25-2004

ம்
வட இந்தியர்கள் மட்டும் ஏகபத்தினி விரதர்கள் அல்ல சந்தேகம் பிடித்த பத்தினி விரதர்கள்

இதிகாசங்கள் இடிகாசங்களாக மாறி இழிவாகி நிற்கின்றன.


<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->அதுமட்டுமா தென்னிந்தியர் சகோதரர் மனவியைக் கவர்பவர்கள் இலங்கையர் பிறன் மனை கவர்பவர்கள் வட இந்தியர் மட்டும் ஏகபத்தினி விரதர்கள்
புரானங்கள் என்றால் கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருக்கும் நல்லதை எடுத்து தீயதை விடுவோம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


- kuruvikal - 05-27-2004

[b]இந்தியாவில் தடை நீடிப்பு துரதிஷ்டவசமானது விமானப்படை எம்மிடம் இருப்பது உண்மை: தமிழ்ச்செல்வன்.

வீரகேசரி வியாழக்கிழமை, 27 மே 2004,

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையினை இந்தியா நீடித்துள்ளமை துரதிஷ்டவசமான நிகழ்வாகும். புலிகளை இந்தியா அங்கீகரித்து தார்மிக ஆதரவினை வழங்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் உணர்வும், எதிர்பார்ப்புமாகும். ஆனால் இதற்கு மாறாக தடையை இந்தியா நீடித்துள்ளமை துரதிஷ்டவசமானது என்று புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தமிழ்ச்செல்வன் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றுள்ளது. அந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பொறுத்தே எதிர்காலத்தில் நாம் இந்திய அரசு தொடர்பாக விமர்சனங்களை கூற முடியும் என்றும் தமிழ்ச் செல்வன் இங்கு கூறினார்.

விடுதலைப் புலிகளிடம் விமானப் படை மற்றும் விமானம் இருப்பது உண்மை. விமான ஓடு பாதை இருப்பதும் உண்மை.

இது நீண்ட காலத்துக்கு முன்னர் கட்டி எழுப்பப்பட்டதாகும் என்றும் தமிழ்ச்செல்வன் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். விடுதலைப் புலிகளிடம் விமானம் உண்டா? முல்லைத்தீவு பகுதியில் அது விழுந்ததா? என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது அரசாங்கமும், படைத்தரப்பும் காலத்துக்கு காலம் கூறும் விடயம் இது. விடுதலைப் புலிகளிடம் விமானப் படையிருப்பது வெளிப்படையான விடயம். இது புதிய விடயமல்ல. புதிய விடயமாக கேள்வி எழுப்புவது தான் புரியாத புதிராகவுள்ளது என்றும் அவர் கூறினார்.

நன்றி புதினம்...!

-------------------------

தமிழ்ச்செல்வன் கூறியது உண்மையே...குருவிகளின் அறிவுக்கு எட்ட 1994/95 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த மேதின ஊர்தி பவனியில் இதைச் சித்தரிக்கும் காட்சி கொண்ட ஒரு ஊர்தி சென்றதைக் கண்டதாக அதைக் கண்ணுற்ற பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்....! 1995 இன் பிற்பகுதியிலேயே யாழ்ப்பாணம் சிங்கள அரச படைகளினால் சூரியக்கதிர் (ரிவிரெச) இராணுவ நடவடிக்கை மூலம் கட்டம் கட்டமாக ஆக்கிரமிக்கப்பட்டது...! (our view)


- tamilini - 05-27-2004

sOliyAn Wrote:ஏங்க, குரங்குகளுக்குதானே மரங்கள் தேவை?! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
என்ன அண்ணை அமெரிக்காவின் குடிமகன் போல பேசுறீங்கள்.
அவர்களுக்கு கூட விமான தாக்குதல் பற்றி இப்போது தெரியும் என்று நினைக்கிறேன்.
இந்த விசயத்தில் அண்ணை லாடனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
இதோ உங்கள் நினைவுக்கு சில பெயர்கள். கீபீர், புக்காரா, சூப்பர் சொனீக் சீப்பிலேன்.


- sOliyAn - 05-28-2004

வன்னி விமானத்துக்கு..?!


- Eelavan - 05-28-2004

புஷ்பக விமானம்(எங்கள் பெயராகவும் இருக்கும் புஷ் என்ற பெயரைப் பார்த்தால் எதிரிகளுக்குப் பயமும் வரும்)


- Mathivathanan - 05-28-2004

பாக்கிங்.. அண்டகிறவுண்ட் பங்கறுக்குள்ளைதானோ.. அல்லாட்டில் றண்வேயிலையோ..?
சும்மா சொல்லக்கூடாது.. நல்லாத்தான் உழைக்கிறாங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 05-28-2004

அப்பேற்பட்ட அமெரிக்காவே பங்கருக்க பதுக்கி வைச்சிருக்கேக்க....அவங்கள் செய்தாத்தான் என்ன...எல்லாம் எங்களுக்காகப் பிள்ளையள் படாத பாடுபடுறாங்கள்...அதை நோண்டி நாறடிக்கிறதுக்கெண்டு கொஞ்சம் தலைகால் புரியாம ஆடுதுகள்... உள்ள உளவுப் படைகளட்ட வேண்ட வேண்டிய காசையெல்லாம் வாங்கி பொக்கெற்றுக்க அடக்கிக் கொண்டு....! இதைவிட அது கோடி மடங்கு மேல்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- Mathan - 05-28-2004

உழைக்கிறாங்கள் ? புரியவில்லையே தாத்ஸ் :?