Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முத்தையா முரளிதரன்
#1
[align=center:1aa56da998]<img src='http://www.kumudam.com/kumudam/24-05-04/23t.jpg' border='0' alt='user posted image'>[/align:1aa56da998]
<span style='font-size:23pt;line-height:100%'>திருவள்ளுவர், பாரதியார், அப்துல்கலாம் என்று தமிழர்களை பெருமைப் பட வைத்தவர்கள் பலர் உண்டு. அந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்து தமிழர்களைப்பெருமைப்படுத்தியிருக்கிறார் முத்தையா முரளிதரன். கண்டியில் பிறந்த இந்தத் தமிழன் இன்று கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் ஏகபோகச் சக்ரவர்த்தியாக தலைநிமிர்ந்து நிற்கிறார். இதற்காக அவர் சந்தித்தப் போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.</span>
[align=center:1aa56da998]<img src='http://www.kumudam.com/kumudam/24-05-04/23.jpg' border='0' alt='user posted image'>[/align:1aa56da998]கண்டியில் உள்ள நாட்டரம் கோட்டா என்ற ஊரில் 1972_ம் ஆண்டு ஏப்ரல் 17_ம் தேதி முத்தையா முரளிதரன் பிறந்தார். இவரது அப்பா சின்னசாமி முத்தையா, லக்கிலேண்ட் குக்கி ஃபேக்டரி என்ற பெயரில் பிஸ்கட் கம்பெனியை நடத்திக் கொண்டிருந்தார். ஓரளவு வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த அவர், தன் மகன் பட்டங்களாக வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற ஆசையில் இலங்கையில் உள்ள செயிண்ட் ஆன்டன் கல்லூரியில் சேர்த்தார்.

ஆனால், முரளிதரனுக்கு படிப்பைவிட கிரிக்கெட்தான் அதிகம் பிடித்தது. கல்லூரிக்குப் பாடப்புத்தகங்களை எடுத்துச் செல்கிறாரோ இல்லையோ, கிரிக்கெட் பந்தை மறக்காமல் எடுத்துச் செல்வார். பாடம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இவர் மட்டும் அங்குள்ள மைதானத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பாராம்.

அந்த நேரத்தில்தான் சுனில் பெர்னாண்டோ என்ற கிரிக்கெட் பயிற்சியாளரின் பார்வையில் பட்டார் முரளிதரன். இந்த இளைஞனுக்குப் பயிற்சி கொடுத்தால் கிரிக்கெட்டில் பல வித்தைகளைச் செய்வான் என்று அவருக்குத் தோன்ற முரளியை தன்னுடன் அழைத்துச் சென்றார். கொழும்பில் உள்ள அங்கிரியா சர்வதேச ஸ்டேடியத்தில் பயிற்சி கொடுக்கத் தொடங்கினார்.

அப்போதெல்லாம் முரளிதரன் மிதவேகப் பந்து வீச்சாளராகத்தான் இருந்தார். ஆனால் முரளிதரனின் கைவாகு, ஒரு ஸ்பின்னருக்கு ஏற்றதாக இருக்க, அவரை ஸ்பின் பவுலிங் போட்டு பயிற்சி எடுக்க வைத்தார் பெர்னாண்டோ. இதற்கு கை மேல் பலன் வந்தது. 'தமிழ் யூனியன் அத்லெடிக் கிளப்' அணிக்காக ஆடிவந்த முரளிதரன், உள்ளூர்ப்போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் குவிக்க, தேர்வுக் குழுவின் பார்வை இவர் மீது திரும்பியது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

'பொதுவாக சிங்கள கிரிக்கெட் வீரர்களுக்கு தமிழ் வீரர்களைப் பிடிக்காது. எனவே முரளிதரன் அணியில் இடம்பெற்றாலும் அதில் நிலைத்திருப்பதும், மற்ற வீரர்களின் அன்பைப் பெறுவதும் கஷ்டம்'. என்று அங்குள்ள பத்திரிகைகள் எழுதின. ஆனால் தன் அன்பான நடத்தையாலும், ஈ.கோ இல்லாத தன்மையாலும் எல்லோர் உள்ளங்களையும் கவர்ந்தார். அவர்கள் என்ன வேலை சொன்னாலும் செய்து கொடுத்து அவர்களின் உள்ளங்களை வென்றார். அதேநேரத்தில் தன் திறமையான பந்துவீச்சால் அணியில் இருந்து பிரிக்க முடியாத அம்சமாக மாறிப்போனார் முரளிதரன்.

அர்ஜுனா ரணதுங்காவுக்கு முதலில் முரளிதரனைப் பிடிக்காது. ஆனால் காலம் செல்லச் செல்ல தன் மந்திரப் பந்துவீச்சால் ரணதுங்காவின் மனதை முரளிதரன் கட்டிப்போட, அவர் இல்லாமல் ஆடவே முடியாது என்ற நிலைக்கு ரணதுங்கா தள்ளப்பட்டார்.

கிரிக்கெட்டில் சாதாரண அணியாக இருந்த இலங்கை, முரளிதரனின் பந்துவீச்சால் கிரிக்கெட் வல்லரசாக உருவாகத் தொடங்கியது. இது மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலரது கண்களை உறுத்தியது. முரளிதரன் மீது ஏதாவது குறைகூறி அவரது வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்று ஏங்கினார்கள். கடைசியில் ஒரு வழியாக, "பந்துவீசும் போது முரளிதரனின் கை அமைப்பு சரியாக இல்லை. அவர் பந்தை வீசுவதற்கு பதில் எறிகிறார். அதனால்தான் அவருக்கு விக்கெட் விழுகிறது" என்ற பழி போட்டார்கள்.

முரளிதரனுக்கு படிக்கிற காலத்தில் இருந்தே ஒரு குறை உண்டு. உடல்ரீதியாக முழங்கையை 180 டிகிரிக்கு மேல் திருப்ப முடியாது என்பதுதான் அந்தக் குறை. இது எதிரிகளுக்கு சாதகமாக, அவரை விசாரணை என்ற பெயரில் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்குமாக அலைக்கழித்தார்கள். அவரது மன உறுதியை அது குலைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அது முரளிதரனின் வேகத்தை அதிகப்படுத்தவே செய்தது.

"மற்றவர்கள் என்னைத் தாக்கும் போதுதான் எனக்கு பலம் கூடுகிறது. என்னைக் கண்டு பயப்படும் யாரோ பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி என்னைக் கிரிக்கெட்டில் இருந்து விரட்ட நினைக்கிறார்கள். அதற்கு நாம் பணிந்துபோகக் கூடாது என்ற வேகம் என் உள்ளத்தில் தோன்றும். என் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்" என்று அடிக்கடி சொல்வார் முரளிதரன்.

முரளிதரனின் உள்ளத்தில் வேகம் மட்டுமில்லை நன்றியுணர்ச்சியும் உண்டு. தான் இலங்கைக்காக ஆடிய முதல் போட்டியில் கிடைத்த சம்பளப் பணத்தில் ஐம்பதாயிரம் ரூபாயை சுனில் பெர்னாண்டோவுக்கு கொடுத்தார். அவர்தானே முரளிதரனை சுழற்பந்து வீச்சாளராக மாற்றியவர். ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கும் இந்தக் காலத்தில் முரளி ஆச்சர்யமான மனிதர்தான்.

திருவேங்கிமலை சரவணன்
படங்கள் ஆர். சண்முகம்

Thanks: Kumudam.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)