Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 471 online users.
» 0 Member(s) | 469 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,297
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,623
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,050
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,457
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  காணொளிக்கு(video) ஏன் தனி முக்கியத்துவம்?
Posted by: aathipan - 05-20-2004, 06:45 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (8)

எதற்காக காணொளிக்கு களத்தில் தனியாக தலைப்பிட்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை அறிவியற்களத்தின் கீழ் சேர்த்துக்கொள்ளலாமே?

காணொளிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்கு ஏதும் தனிப்பட்ட சிறப்புக் காரணம் உண்டா?

அன்புடன்
ஆதிபன்

Print this item

  இவர்களுக்கு ஓர் பகிரங்க சவால்...
Posted by: kuruvikal - 05-20-2004, 03:21 AM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

<img src='http://kuruvikal.yarl.net/archives/humanrights.jpg' border='0' alt='user posted image'>

<i>மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு (யாழ்ப்பாணம்)(University Teachers for Human Rights -Jaffna )என்னும் பெயரில் செய்திகளையும் அறிக்கைகளையும் வெளியிடுவதற்கு கொழும்பிலும் வெளிநாடுகளிலும் இருந்து கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து என்ற மாயப்போர்வைக்குள் எழுதும் இவர்கள் தகுதியானவர்கள் தானா? இவர்கள் வெளியிடும் அறிக்கைகளின் நம்பகத் தன்மை என்ன? தம்மை நடுநிலைவாதிகள் எனச் சொல்லிக்கொள்ளும் இவர்கள் உண்மையில் பக்கச்சார்பற்றவர்களா?</i>...<b>Eelanathan... http://kavithai.yarl.net/.[/b]

இந்த அன்பருடன் கருத்தால் இணைந்து நாம் இவர்களுக்கு விடுக்கின்றோம் ஒரு பகிரங்கச் சவால்....


இவர்கள் யார்....???!
சந்திரிக்கா அம்மையார்
ஜெயசிக்குரு நடத்தி
பொழிந்து தள்ளிய ஆட்லறிக்குள்ளும்
ஈயத்துகளுக்குப் பதிலாய்
பஞ்சு வைத்து அனுப்பியதாக
கதையளந்தவர்கள்...!

சுப்பசொனிக் கொட்டிய குண்டில்
வடமராச்சியில் மாணவர்
இரத்தத்தில் மிதந்த போது
சாயம் பூசி நாடகம் நடித்ததாக
அறிக்கை விடுபவர்கள்...
ஆனால்
சிறிலங்கா இராணுவ
தாங்கி சுமந்து வந்த
சமாதானப் புறா
புலிகள் குண்டில் காயமடைந்ததற்காய்
ஐ நா சபைக்கு
"மனித உரிமை" காக்கக் கோரி
அறிக்கை விட்டவர்கள்....!

இவர்களிடம் ஒன்று கேட்கிறோம்
அதுவும் சவாலைக் கேட்கிறோம்....
உண்மையில் உங்கள் இதயத்தில்
சமூக அக்கறை இருப்பின்
இந்த அறிக்கை விடும் தொழில் துறந்து
சிங்கள அரசின்
வெட்டுப் புள்ளியால்
வீதியில் நிற்போருக்கு
வாழ்க்கையில் வளமான வழிகாட்டிட
பல்கலைக் கழகத்துக்கு வெளியே
பல்கலையும் புகட்டி
சமூகத்துக்கு தாம் கற்றது கொண்டு
செய்யட்டும் பார்ப்போம்
ஓர் அரிய சேவை என்றுமே....!

யதார்த்தத்தில் அதுவே
உங்கள் சமூக மனித உரிமை
வலுப்படுத்தி நிற்கும்...!
அன்றி நாளை
உங்கள் அறிக்கைக்கு
என்ன அர்த்தம் என்று கேட்கும் குரல்களே
அதிகரிக்கும்....!
அதுவே நீங்கள்
படித்த முட்டாள்கள் என்று
பறைசாற்றியும் நிற்கும்....!

நட்புடன் குருவிகள் ---- http://kuruvikal.yarl.net/

Print this item

  தந்தையர் தின வாழ்த்துக்கள்...
Posted by: shanmuhi - 05-19-2004, 11:27 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (4)

<img src='http://www.frenchspot.com/Holidays/Father/FDGraphics/dad15.jpg' border='0' alt='user posted image'>

அன்புள்ள நெஞ்சம் கொண்ட அன்னை தந்தையர்
அறத்தினில் நாட்டம் கொள்ள வைத்தவர்
அன்பான சிறந்த உள்ளம் கொண்டவர்கள்
அதனால்தானே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என
ஒளவையார் மொழிந்திட்டாரோ..

பெயரின் முதல் எழுத்தாய் பதிந்திட்டவர்
இணையில்லா வாழ்வில் இன்பத்தைத் தந்தவர்
இளமை தனில் கல்வி கற்க வைத்தே
உலகம் போற்ற உத்தமராய் வாழ வழி காட்டிய
இணை இல்லா இதயங்களை
இரு விழியாய் எண்ணி வணங்குவோம்

இத்தனை பெருமைதனை அளித்த
இணையில்லா பெயரின் முதல் எழுத்தாய் அமைந்த...
இன்னவர் பிள்ளையென உலகம் போற்ற
இனிதே வாழ்ந்திடுவோம்.

Print this item

  கிளாலி பயணம்
Posted by: Mathan - 05-19-2004, 11:19 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (11)

ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள் - 1

மதி அக்கா தனது யாழ்ப்பாண கொழும்புப் பயணம் பற்றி எழுதினாலும் எழுதினா,எனக்குள்ளும் ஒரு ஆசை,நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியூர் வந்தது அண்மைக் காலமேயென்றாலும்,நிறைய வித்தியாசமான அனுபவங்களை கண்டிருக்கிறேன்.அவற்றையெல்லாம் குடிலிலை எழுதினா சொந்த ஊருக்குப் போக விருப்பம் இருந்தும் போக முடியாமல் கொஞ்சப்பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு,ஊர் போய் வந்த திருப்தி கிடைக்கும்.

சரி எழுதலாம் எங்கேயிருந்து ஆரம்பிப்பது.எதைச் சொல்லவருகிறாயோ அதிலிருந்து தொடங்கவேண்டியதுதானே என்று சொல்லுவது கேட்கிறது.அதுதானே பிரச்சனையே.இதிலே எத்தனை பேருக்கு யாழ்ப்பாணம் கொழும்பு பிரயாணம் தெரியும்.அப்ப அவையளுக்கு எதிலிருந்து சொல்லுவது.சரி எல்லோருக்கும் விளங்கட்டும்.விளங்கிறமாதிரி சொல்லுவம்.

முதல்ல யாழ்ப்பாணத்திலையிருந்து கொழும்பு பயணம் மதி அக்கா சொன்ன மாதிரியோ அல்லது ரமணி அண்ணா மறுமொழியிலை சொன்னமாதிரியோ புகைவண்டிப்பிரயாணமாகத் தான் இருந்ததாம்.அது என்ன இருந்ததாம்?அதைத் தான் நான் பார்க்கேலையே பிறகு எப்பிடி இருந்தது என்று சொல்லுறது அதுதான் மற்றவர்களை மேற்கோள் காட்டி இருந்ததாம்.

<img src='http://kavithai.yarl.net/archives/jaffna_map.jpg' border='0' alt='user posted image'>

படம் பார்த்தா கொஞ்சம் விளங்கும்

காங்கேசன் துறையிலிருந்து தொடங்குகிற புகைவண்டி அப்படியே யாழ்ப்பாணம் மத்தி வந்து(இடையிலை நிறைய இடமிருக்கு சொன்னால் குழம்பிவிடும்) ஆனையிறவுப் பாதையாலை வவுனியா போய் அப்பிடியே கொழும்பு போகும் என்பது செவி வழிக்கதை.

<img src='http://kavithai.yarl.net/archives/srilanka_train.jpg' border='0' alt='user posted image'>

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்முதலா யாழ்ப்பாணத்திலை ஒரு சில நாள் புகைவண்டி பார்த்திருக்கிறேன் போனதில்லை.ஒரு கட்டத்திலை வவுனியாவுக்கு இங்காலை புகைவண்டி மறிக்கப்பட்டாச்சு.கொஞ்ச நாள் தண்டவாளம் இருந்திச்சு பிறகு அதையும் அண்ணன்மாரும் பொதுமக்களும் எடுத்துக் கொண்டு போயிட்டினம்.வழித்தடம் மட்டும் அநாதையா இருந்திச்சுது இப்ப அதையும் மூடி மரங்கள் பற்றைகள் வளர்ந்திட்டுது,இந்தா இதாலைதான் முந்தி ரயின் ஓடிச்சுது எண்டு அம்மாமார் பிள்ளைகளுக்குக் காட்டுறதுக்கு கூட ஒண்டுமில்லை.

அப்ப பிறகு யாழ்ப்பாணத்திலை இருந்து ஒருத்தரும் கொழும்பு போகேலையோ.நீங்கள் கேட்பீர்கள் போனவை ஆனா பெரும் சாகசங்கள் செய்துதான் போகவேண்டியிருந்தது அந்த சாகசங்கள்
தொடரும்............

<b>நன்றி - ஈழநாதனின் வலைப்பூ</b>

Print this item

  பிளேயர் மீது தாக்குதல்
Posted by: Mathan - 05-19-2004, 03:33 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (4)

Blair hit during Commons protest

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40171000/jpg/_40171315_paint2_203.jpg' border='0' alt='user posted image'>

Mr Blair was replying to the Tory leader when the dust was thrown

<b>The House of Commons has been suspended during Prime Minister's question time after what appeared to be purple powder was thrown at Tony Blair.</b>

Mr Blair was speaking during his weekly half-hour appearance in the Commons when a projectile filled with purple powder hit him on his back.

MPs were immediately evacuated. Early tests suggest the powder was "benign" and not dangerous.

Fathers 4 Justice claimed responsibility for the incident.

<b>Reaction</b>

Scotland Yard confirmed that two men had been arrested.

The incident comes just weeks after a £600,000 temporary security screen was installed in the Commons.

<span style='color:#0900ff'>He threw what looked like a paint ball at the prime minister and shouted Fathers 4 Justice

Mark Oaten
Lib Dem MP

It appears the projectile may have been thrown from an area of the gallery reserved for MPs' guests and notable visitors.

Deputy Prime Minister John Prescott and Chancellor Gordon Brown, who were sitting either side of Mr Blair, both looked up at the public gallery as the dust descended at 12.18 BST.

MPs were seen wafting something away from themselves as the House was suspended.

<b>Jacket stained</b>

A spokesman for Fathers 4 Justice said two members of the group were involved in the incident to highlight MPs' failure to help fathers gain access to children through the courts.

Labour MP Kevin Brennan said a stain was "clearly visible" on the back of Mr Blair's jacket as the dust hit him.

Tory ex-minister Michael Portillo said he thought "one dose" of the dust had been thrown "before the prime minister reacted".

"The prime minister only appeared to look round to his side at the second dose," he said.

"I thought it was likely to stain his coat or something, but as far as I could see, it was actually falling behind him."

<b>Blair calm</b>

Commons leader Peter Hain said: "This was a serious incident. I have asked for an immediate report on the circumstances and what additional security provisions may be necessary."

Liberal Democrat MP Mark Oaten, who was in the chamber during question time, said he heard a large shout from the public gallery area from an individual who appeared to be "running forward".

"He threw what looked like a paint ball at the prime minister and shouted Fathers 4 Justice," he said.

"At that point the prime minister remained remarkably calm, I thought, if not a bit confused and the Speaker quite rightly suspended the session.

"Police were then seen rushing into the chamber to try to arrest the individual. There was absolutely no panic at all.

"I am absolutely convinced what happened today was a serious security breach and it could have put the prime minister's life at risk."

Prime Minister's questions is not expected to be reconvened. </span>

Print this item

  வேண்டுகோள்!
Posted by: sOliyAn - 05-19-2004, 12:47 AM - Forum: புலம் - Replies (11)

புலம்பெயர் நாடுகளில் பல தமிழ் பாடல்கள் ஒலித்தட்டு வடிவமாக வெளிவந்துள்ளன... அவற்றை எல்லாம் திரட்டும் நோக்குடன் ஒரு இணையத்தளத்தை ஆரம்பிக்கும் முயற்சியில் ஓரளவாவது பலன் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, புகலிட நாடுகளில் வெளிவந்த தமிழ் பாடல் ஒலித்தட்டுகள் வைத்திருப்போர் தயவு செய்து என்னுடன் தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
rajhan@msn.com

Print this item

  குடும்பம் ?
Posted by: Mathan - 05-18-2004, 07:47 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (7)

உங்கள் சிந்தனைக்காக . . .

கணவன் - மனைவி சண்டையால் பச்சிளம் குழந்தை மரணம்

கணவன் தனது மனைவியை தும்புத்தடிýயால் தாக்கியபோது மனைவியின் இடுப்பிலிருந்த 2 வயதுக் குழந்தை தாக்கப்பட்டு நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது. கடந்த 8 ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் அக்கரைப்பற்று - பதுர்பள்ளியடிýயைச் சேர்ந்த அப்துல் வஹாப் அறூஸ் என்பவர் தன் மனைவியைத் தும்புத்தடிýயால் அடிýத்தபோது மனைவியின் இடுப்பிலிருந்த 2 வயதுக் குழந்தை தாக்கப்பட்டு நிலத்தில் வீழ்ந்தது. பேச்சு -மூýச்சின்றி கிடந்த குழந்தை அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு மேலதிக, சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை கடந்த 14 ஆம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்தது.

இதையடுத்து, மேற்படிý நபர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாவட்ட பதில் நீதிவான் எஸ்.எம். முகைதீன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேலும், இறந்த நியாஸ் - சர்மிளாவெனும் குழந்தை அப்துல் வஹாப் அறூஸின் மனைவியின் முதல் திருமணத்தின் போது பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினக்குரல்

Print this item

  பிரதமராக சோனியா மறுப்பு
Posted by: Mathan - 05-18-2004, 01:06 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (13)

பிரதமராக சோனியா காந்தி மறுப்பு!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பிரதமர் பதவிக்கு 320 மக்களவை உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றவருமான சோனியா காந்தி, பிரதமர் பொறுப்பேற்க மறுத்துவிட்டார்!

டெல்லி உள்ளிட்ட இந்திய அரசியலில் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ள இம்முடிவை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், கருணாநிதி, ஹர்கிஷன், சரத்பவார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் சோனியா காந்தி நேரடியாக தெரிவித்துவிட்டதாக டெல்லி செய்திகள் கூறுகின்றன.

குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று இன்று காலை அவரை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, இப்படிப்பட்ட எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. அனைத்து கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன் நாளை மீண்டும் குடியரசுத் தலைவரை சந்திப்பேன் என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார்.

அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திற்குச் சென்ற சோனியா காந்தி பிரதமராக தான் பொறுப்பேற்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பிரதமராக தான் பொறுப்பேற்க விரும்பவில்லை என்பதனை மே 15 ஆம் தேதி நடந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்திலேயே சோனியா காந்தி அறிவிக்க திட்டமிட்டிருந்தார் என்றும், ஆனால் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவதை ஆதரிக்கும் அரசியல் தலைவர்களின் வற்புறுத்தலால் தனது முடிவை அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தனது அன்னிய நாட்டவர் பிரச்சனை புதிய அரசை பலவீனப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே பிரதமர் பதவி ஏற்காமல் சோனியா காந்தி ஒதுங்கிக் கொள்வதாகக் கூறுப்படுகிறது.

தனது முடிவிற்கான காரணத்தை இன்று மாலை 5 மணிக்கு ஒரு அறிக்கையாக சோனியா காந்தி வெளியிடுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தி பிரதமராக பதவியேற்க மறுத்துவிட்டாலும், மூத்த தலைவர் மன்மோகன் சிங் பிரதமராக ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும், அவருக்கு காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும், இடதுசாரி உள்ளிட்ட மற்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்திட வேண்டும் என்றும் அவர் விரும்புவதாக கூறப்படுகிறது.

வெப் உலகம்

Print this item

  ஹக்கீமினால் ஏமாற்றப்பட்ட பெண்
Posted by: Mathan - 05-18-2004, 12:01 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (24)

ரவூப் ஹக்கீமினால் ஏமாற்றப்பட்ட எம்.பி.யின் மகள், ருபவாஹினியில் விளக்கமளித்துள்ளார்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கப்பற்துறை அமைச்சருமான ரவூப் ஹக்கீம், திருமணம் செய்துகொள்வதாக உறுதிகூறி, தன்னோடு நீண்டகாலம் தொடர்பில் இருந்து, பின்னர் ஏமாற்றி விட்டதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேவின் Nஐ.கூறேயின் மகள் குமாரி கூறே தெரிவித்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான குமாரி கூரேயை தான் மணமுடிப்பதாக உறுதிகூறி, நீண்டகாலம் ஏமாற்றி வந்ததாகவும், தன்னை அடிக்கடி சந்திக்கும்படி அமைச்சர் அழுத்தம் கொடுத்ததால் மவுன்ட் லவனியாவில் ஒரு வாடகை இல்லத்தில் தான் தங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள குமாரி கூரே, ரவூப் ஹக்கீம் இப்படித் தன்னை ஏமாற்றி விட்டதால், தான் தற்கொலை செய்துகொள்ள முயன்றதையும், தனது நண்பியொருவர் தன்னைக் காப்பாற்றியதையும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளார்.

தனது அழகில் மயங்கியதால், இரண்டு குழந்தைகளுடன் ஏற்றுக்கொள்வதாக உறுதி கூறினார் ஹக்கீம் என்று குறிப்பிட்டுள்ள குமாரி, ரவூப் ஹக்கீமிற்கு பல பெண்களின் தொடர்புகளுமிருந்ததை தான் பின்னரே அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐh-எல விலுள்ள ரவூப் ஹக்கீமின் இல்லத்திலும் தான் தங்கியிருந்த நாட்களை நினைவுகூர்ந்த குமாரி, ஐh-எலவில் அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்தில், வேறு பெண்களுடன் அவர் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்ததால் தான் பெரிதும் வேதனையடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தங்களிடையே பெரிய விவாதம் எழுந்ததாகவும், இனிமேல் எந்தத் தொடர்புகளுமின்றி, தன்னுடன் வாழ்வதாக தனக்கு அப்போது ஹக்கீம் வாக்குறுதி அளித்திருந்தார் என்றும், இப்போது ஏன் தன்னை ஏமாற்றிவிட்டார் என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் குமாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதினம்

Print this item

  இன்னும் காதல் இலக்கணம்...
Posted by: kuruvikal - 05-18-2004, 12:43 AM - Forum: கவிதை/பாடல் - Replies (13)

<img src='http://kuruvikal.yarl.net/archives/love.jpg' border='0' alt='user posted image'>

கண்ணடிக் காதல்
கைக்குட்டைக் காதல்
வேலியால் வளர்ந்த காதல்
எல்லாம் போயே போச்சு
ஈ மெயில் காதல்
சற் காதல்
டேற்றிங் காதல் என்று
காதலில் புதுவகை வந்தாச்சு
கேட்டால் சொல்கிறான்
இது காதலின்
புதுயுகம் என்று...!

அதுதானாக்கும்
கண்ட இடத்திலும் கட்டிப்பிடிச்சு
காளையும் கன்னியும்
மெய்மறந்து களித்திருக்க
பார்த்தவர் சிலர்
முகம் சுழிச்சு முணுமுணுக்க....
அது என் சுதந்திரம்
என்கிறான்
கலி காலக் காதல் கொண்டான்...!

எட்ட நின்று
கண்ணும் மனதும் கொண்டு
பேசி வளர்த்த
காதல் நாகரிகம்
போயே போச்சு....
கிட்ட இருந்து
நண்டு பிடிச்சு
காதல் இன்றிக்
காமம் வளர்க்கும்
நிலையும் ஆச்சு....!

கருக் கலைப்பென்றால்
மிருகத்துக்கென்றிருந்தது போய்
இன்று
மனிதருக்கு என்று ஆச்சு....!
மாத்திரை முதல்
விதம் விதமாய் அதுவும்
மனிதரைக் காதலிக்குது....!
இவை கண்டு...
பழைய கனவில் சிலர்
கலி முற்றிப் பேச்சென்று
முணுமுணுக்க
அதைக் கேட்பார்
யாரும் இல்லை
என்ற நிலையும் ஆச்சு இன்று....!

ஆனால் இன்னும்
ஒன்று மட்டும் நிதர்சனமாய்...
மனிதன் மாறிவிட்டான் - கூடவே
அவனிரு மனமும் மாறிப்போச்சு
அவை கொண்ட
ரசனையும் மாறிப்போச்சு...!
இருந்தும்
இயற்கை மட்டும்
மாறவேயில்லை
அதற்குச் சாட்சியாய்
இதோ ஒரு காதல் ஜோடி
நாகரிகமாய் காதல்
செப்பினம்...!

முதற்பதிவு செய்யப்பட்ட இடம்...
http://kuruvikal.yarl.net/archives/000778.html#more

Print this item