Yarl Forum
பிரதமராக சோனியா மறுப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பிரதமராக சோனியா மறுப்பு (/showthread.php?tid=7140)



பிரதமராக சோனியா மறுப் - Mathan - 05-18-2004

பிரதமராக சோனியா காந்தி மறுப்பு!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பிரதமர் பதவிக்கு 320 மக்களவை உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றவருமான சோனியா காந்தி, பிரதமர் பொறுப்பேற்க மறுத்துவிட்டார்!

டெல்லி உள்ளிட்ட இந்திய அரசியலில் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ள இம்முடிவை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், கருணாநிதி, ஹர்கிஷன், சரத்பவார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் சோனியா காந்தி நேரடியாக தெரிவித்துவிட்டதாக டெல்லி செய்திகள் கூறுகின்றன.

குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று இன்று காலை அவரை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, இப்படிப்பட்ட எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. அனைத்து கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன் நாளை மீண்டும் குடியரசுத் தலைவரை சந்திப்பேன் என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார்.

அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திற்குச் சென்ற சோனியா காந்தி பிரதமராக தான் பொறுப்பேற்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பிரதமராக தான் பொறுப்பேற்க விரும்பவில்லை என்பதனை மே 15 ஆம் தேதி நடந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்திலேயே சோனியா காந்தி அறிவிக்க திட்டமிட்டிருந்தார் என்றும், ஆனால் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவதை ஆதரிக்கும் அரசியல் தலைவர்களின் வற்புறுத்தலால் தனது முடிவை அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தனது அன்னிய நாட்டவர் பிரச்சனை புதிய அரசை பலவீனப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே பிரதமர் பதவி ஏற்காமல் சோனியா காந்தி ஒதுங்கிக் கொள்வதாகக் கூறுப்படுகிறது.

தனது முடிவிற்கான காரணத்தை இன்று மாலை 5 மணிக்கு ஒரு அறிக்கையாக சோனியா காந்தி வெளியிடுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தி பிரதமராக பதவியேற்க மறுத்துவிட்டாலும், மூத்த தலைவர் மன்மோகன் சிங் பிரதமராக ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும், அவருக்கு காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும், இடதுசாரி உள்ளிட்ட மற்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்திட வேண்டும் என்றும் அவர் விரும்புவதாக கூறப்படுகிறது.

வெப் உலகம்


- Mathan - 05-18-2004

காங். மூத்த தலைவர் மன்மோகன் சிங் பிரதமராகிறார்?

<img src='http://www.webulagam.com/homepage/mainimages/img2_5182004_42833am.jpg' border='0' alt='user posted image'>

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் பிரதமர் பதவியை ஏற்கக் கூடும் என்று தெரிகிறது.

குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை இன்று நண்பகல்வாக்கில் சோனியா காந்தி சந்தித்துப் பேசினார்.

அப்போது அவருடன் மன்மோகன் சிங்கும் உடன் சென்றிருந்தார். ஏற்கனவே நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதித் துறை பொறுப்பை வகித்த மன்மோகன் சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்தபோது தான் புதிய பொருளாதாரக் கொள்கையை வகுத்து அமல்படுத்தத் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பா.ஜ.க தரப்பில் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்றும், அவர் பிரதமர் போன்று உயரிய பதவியை வகிக்கக் கூடாது என்றும், அவரது பதவியேற்பு நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப் போவதாகவும் பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள புதிய திருப்பம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் பதவிக்கான போட்டியில் மன்மோகன்சிங்கும், பிரணாப் முகர்ஜியும் இருந்தபோதிலும் பிரணாப் முகர்ஜி பிரதமராவதற்கு இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால் மன்மோகன் சிங்கே பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வெளியிடுவார் என்று டெல்லியில் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப் உலகம்


- Mathan - 05-18-2004

இதேவேளையில் சோனியா பதவி ஏற்க தடை விதிக்க முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


- Mathan - 05-18-2004

பிரதமர் பதவி எனது நோக்கம் அல்ல - சோனியா காந்தி திட்டவட்ட அறிவிப்பு!

இந்த நாட்டிற்கு மதச்சார்பற்ற பலமான, நிலையான ஒரு ஆட்சியைத் தருவதே எனது பொறுப்பே தவிர, பிரதமர் பதவி என்றும் எனது நோக்கமாக இருந்ததே இல்லை என்று சோனியா காந்தி அறிவித்துவிட்டார்!

320 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று பிரதமராக பதவியேற்கயிருந்த நிலையில், அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்ட சோனியா காந்தி தனது முடிவிற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் சற்றுமுன் துவங்கிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் தான் தயாரித்து வைத்திருந்த அறிக்கையை சோனியா காந்தி படித்தார்.

"இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்கக் கூடிய ஒரு நிச்சயமான சூழ்நிலையில் எனது உள் குரலைக் கேட்டேன், நான் இந்தப் பொறுப்பை ஏற்பதா? அல்லது தவிர்ப்பதா? என்று. நான் இந்தப் பொறுப்பை தாழ்மையுடன் மறுத்துவிட வேண்டும் என்று அந்தக் குரல் கூறியது. அதுவே எனது முடிவு. நான் பிரதமர் பதவி ஏற்கப் போவதில்லை."

இவ்வாறு சோனியா காந்தி கூறியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு சோனியா நெருங்கி முடிவை மாற்றிக் கொள்ளுமாறு உணர்ச்சி கொந்தளிப்புடன் வலியுறுத்தினர்.

அவர்கள் பேசுவதை சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்த சோனியா காந்தி, தனது உரையை தொடர்ந்தார்.

"எனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கடுமையான அழுத்தம் தருகின்றனர். எனது நோக்கம் இந்த நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை காப்பதும், இந்திரா காந்தியும், எனது கணவர் ராஜீவ் காந்தியும் காத்த கொள்கைகளை நிலை நிறுத்துவதும்தான் எனது நோக்கம். என்னுடைய முடிவை நீங்கள் புரிந்துகொண்டு மதிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். நான் எனது முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை."

"எனது உள் குரல் கூறியதை சொல்கின்றேன். இந்த நாட்டிற்கு மதச்சார்பற்ற பலம் வாய்ந்த, நிலையான ஆட்சியை தருவதே மட்டுமே எனது நோக்கமாகும். பிரதமர் பதவி அல்ல. மதச்சார்பற்ற கொள்கையை காக்கவேண்டும் என்கின்ற எனது உறுதி மிகத் திடமானது. அதிகாரத்தை என்றும் நான் விரும்பியது கிடையாது" என்று கூறிவிட்டு சோனியா காந்தி அமர்ந்தார்.

சோனியா காந்தி ஆங்கிலத்தில் படித்த தனது அறிக்கையை பிறகு ஹிந்தியிலும் படித்தார். அவர் படித்து முடித்ததும், காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் சோனியாவை சூழ்ந்துகொண்டு முடிவை மாற்றிக் கொள்ளுமாறு வலியுறுத்தினர். ஆனால், எந்த பதிலும் கூறாமல் சோனியா அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசி முடித்த பிறகு தனக்கு பதிலாக நாடாளுமன்ற கட்சித் தலைவராக பொறுப்பேற்கப் போவது யார் என்பதை சோனியா காந்தி அறிவிக்க உள்ளார்.

வெப் உலகம்


- Mathan - 05-18-2004

பதவிக்காக நாட்டின் அரசியல் அமைப்பையே சந்திரிக்கா மாற்ற முயற்சிக்கும் போது சோனியா வித்தியாசமானவர் தான்.


- kuruvikal - 05-18-2004

சோனியா ஒன்றும் பதவி ஆசை திறந்த முனிபத்தினியல்ல...பிள்ளைகள் நச்சரிச்சவையாம் அம்மா உன்னையும் கொன்று போடுவாங்கள் பேசாம இரம்மா எண்டு...அது போக உள்ளூரில பல பேருக்கு அம்மா அரியாசனம் ஏறூரதில விருப்பமே இல்லையாம்...பல தீக்குளிப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் பலர் கிளம்பினவையாம்...இதையெல்லாம் கண்டு அம்மா பயப்பிடாவிட்டாலும் கூட இருந்தவ பயந்திட்டினம் போல....அதுக்கு மேல அம்மையார் அரியாசனம் ஏறி இருந்தா இன்னும் ஒரு 6 மாதத்தில ஆட்சி கவிழேக்க வி ஜே பிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்திருக்கும்....ஏதே நல்ல காலம் அம்மாவுக்கு உள்மனசு உறுத்தினதில பதவி வேண்டாம் எண்டிட்டாவாம்...இப்படியே ஈழத்தமிழர் விவகாரத்திலும் கடவுள் அருளால் அம்மாவின்ற உள் மனசு உறுத்தி நல்வழி நடத்த இப்பவே கடவுளைக் கும்பிடுங்கோ....!

எண்டாலும் நாங்கள் கொஞ்சம் கவலை இல்லாமலும் இருக்கலாம் அம்மாவை வழி நடத்திறது வி பி சிங்காமே...இந்திய அமைதிப்படையை வாபஸ் வாங்கினவர்...ராஜீவ் காந்தி மேல போபர்ஸ் ஊழல் வழக்கை தீவிரப்படுத்தியவர்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:


- Eelavan - 05-18-2004

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனக் கூறிக்கொள்ளும் இந்தியாவில் இப்படியான கோமாளி அரசியல் நாடகங்களுக்குப் பஞ்சமில்லை.காவி கட்டிய சாமியார்கள் நாட்டைக் கெடுப்பதிலும் பார்க்க இந்திய இத்தாலியரான சோனியா பெரிதாக ஒன்றும் செய்துவிட மாட்டார்.

ஆனாலும் கட்சியின் நலனை முன்னிட்டே அவர் இவ்வாறு முடிவு எடுத்திருக்கிறார் என நம்பலாம் ஏனென்றால் ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதார்.சோனியா வெறும் பொம்மையே இலங்கை விடயத்தில் கூட சோனியா ஏதும் முடிவு எடுத்தால் அவர் முடிவாக இருக்காது ஆட்டுவிப்பவரின் குரலாகத் தான் இருக்கும்


- Mathan - 05-18-2004

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->சோனியா ஒன்றும் பதவி ஆசை திறந்த முனிபத்தினியல்ல...பிள்ளைகள் நச்சரிச்சவையாம் அம்மா உன்னையும் கொன்று போடுவாங்கள் பேசாம இரம்மா எண்டு...அது போக உள்ளூரில பல பேருக்கு அம்மா அரியாசனம் ஏறூரதில விருப்பமே இல்லையாம்...பல தீக்குளிப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் பலர் கிளம்பினவையாம்...இதையெல்லாம் கண்டு அம்மா பயப்பிடாவிட்டாலும் கூட இருந்தவ பயந்திட்டினம் போல....அதுக்கு மேல அம்மையார் அரியாசனம் ஏறி இருந்தா இன்னும் ஒரு 6 மாதத்தில ஆட்சி கவிழேக்க வி ஜே பிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்திருக்கும்....ஏதே நல்ல காலம் அம்மாவுக்கு உள்மனசு உறுத்தினதில பதவி வேண்டாம் எண்டிட்டாவாம்...இப்படியே ஈழத்தமிழர் விவகாரத்திலும் கடவுள் அருளால் அம்மாவின்ற உள் மனசு உறுத்தி நல்வழி நடத்த இப்பவே கடவுளைக் கும்பிடுங்கோ....!  

எண்டாலும் நாங்கள் கொஞ்சம் கவலை இல்லாமலும் இருக்கலாம் அம்மாவை வழி நடத்திறது வி பி சிங்காமே...இந்திய அமைதிப்படையை வாபஸ் வாங்கினவர்...ராஜீவ் காந்தி மேல போபர்ஸ் ஊழல் வழக்கை தீவிரப்படுத்தியவர்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  :twisted:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ராஜீவ் காந்தி இறந்தவுடனேயே சோனியா அரசியலில் குதித்து விடவில்லை, அவர் அதில் இருந்து ஒதுங்கியே இருந்தார், அதன் பின்பு பாரதிய ஜனதா கட்சியின் எழுச்சியும் காங்கிரஸ் மக்களை வசீகரிக்க கூடிய தலைவர் இல்லாமல் தடுமாறியதுமே சோனியாவை அரசியலுக்கு இழுத்து வந்தன. மேலும் சொல்லப் போனால் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வருவதையே சோனியா எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


- Mathan - 05-18-2004

நளினிக்கு மன்னிப்பு வழங்கிய சோனியா புலிகள் மீதான தடையினை நீக்குவார்ம.ம.மு. தலைவர் சந்திரசேகரன் நம்பிக்கை


தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினை இந்திய அரசாங்கம் நீக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பெ.சந்திரசேகரன் சென்னையில் நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

தமிழர்களது பிரச்சினையில் இந்திய அரசாங்கம் மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். தற்போது ஈழத்தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள் தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சந்திரசேகரன் மேலும் தெரிவித்ததாவது:

ஆயுதம் ஏந்தி போராடும் போராளிகள் என்ற நிலையில் இருந்து மாறி ஜனநாயகமுறைப் படி அவர்களது ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிட்டு 22 இடங்களில் வெற்றி பெற்று மக்களின் முழு ஆதரவை பெற்று உள்ளனர். எனவே இந்தியாவில் அவர்கள் மீது உள்ளதடையை இந்திய அரசு நீக்க வேண்டும்.

எனவே இந்தியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சோனியாவை சந்தித்து இந்த கோரிக்கையினை முன் வைக்க இருக்கிறோம். அதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 22 தமிழ் எம்.பி.க்கள் எதிர்வரும் ஜூலை மாதம் டில்லிக்கு வந்து சோனியாவை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைக்க இருக்கிறோம்.

நிச்சயமாக அவர் எங்கள் கோரிக்கையை ஏற்பார். ஏற்கனவே ராஜீவ் கொலையின் வழக்கில் தொடர்புடைய நளினிக்கு கூட மன்னிப்பு வழங்கி இருக்கிறார். எனவே விடுதலைப் புலிகள் மீதான தடையை சோனியா நீக்க முன்வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேலும் எங்கள் தரப்பு நியாயம் பற்றி இந்திய தலைவர்கள் அனைவரையும் சந்தித்து எங்கள் குழு எடுத்து கூறும்.

தற்போது இலங்கையில் உள்ள சந்திரிகா ஆட்சியில் ஈழப் பிரச்சினை தீரவாய்ப்பு இல்லை.ரணில் தலைமையில் ஆட்சிவர வேண்டும் அல்லது அவரைவிட தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர் ஆட்சிக்கு வந்தால் தான் இந்த பிரச்சினை தீரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வீரகேசரி


- Eelavan - 05-18-2004

இந்தியாவில் இப்போது ஈழம் பற்றிய அபிப்பிராயம் மாறி வருவதாகத் தான் தெரிகிறது வருங்காலம் இனி கடும்போக்காக இருக்கமாட்டாது என ஒரு ஆய்வுக்கட்டுரையில் படித்தேன்

அத்தோடு கசப்புணர்வுகள் நீங்கி இந்தியர்கள் குறிப்பாக தமிழ்நாட்டவர் மத்தியில் ஈழத்தமிழர் பற்றிய கணிப்பீடு மாறி வருகின்றது.இது இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு நல்லதொரு அறிகுறி

உதாரணத்துக்கு சுந்தர் என்பவருடைய குடிலில் வந்த மறுமொழி

http://sundaravadivel.blogspot.com/2004/05...og-post_11.html


- Mathan - 05-19-2004

இணைப்புக்கு நன்றி ஈழவன். இதோ சுந்தர வடிவேல் எழுதிய கட்டுரையும் அதற்கு ராஜா எழுதிய பதிலும் ......

தட்டுவோம், திறக்கும் - சுந்தர வடிவேல்

பத்தொன்பது வருடங்களுக்கு முன் இதே மே மாதம், 15ம் தேதி. 1985. ஒரு பயணியர் படகு. பெயர் குமுதினி. நெடுந்தீவிலிருந்து குறிக்கட்டுவன் தோணித்துறைக்குப் போனது. பயணம் செய்தது எத்தனை பேரென்று யாருக்குத் தெரியும்? ஐம்பதிருக்கலாம். ஆறு சிங்களக் கடற்படையினரும் ஏறினார்கள். நடுக்கடலில் ஒவ்வொரு பயணியையாக அழைத்தார்கள். உன் பெயரைச் சத்தம் போட்டுச் சொல் என்றார்கள். நடுங்கிய பயணிகள் சொன்னார்கள். வயசெத்தனை, எந்த ஊரு, எங்க போறே, கத்திச் சொல் என்றார்கள். சொன்னார்கள். பிறகு வெட்டிக் கொன்றார்கள். இரண்டு வயதுக் குழந்தை, பெண்கள் என்று நாற்பத்தெட்டு தமிழர்களை அந்தப் படகில் வைத்துக் கொன்றார்கள். நைனத் தீவுக் கடற்படைக் காரர்கள்தான் இந்தப் படுகொலைகளைச் செய்தது என்று நீதிமன்ற முறையீடு. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கண்ணால் கண்ட சாட்சிகளை வைத்து அது சிங்களக் கடற்படையினரே என்று வாதிட்டது. லலித் அதுலத் முதலியோ "யார் செய்தது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை"யென்று சொல்லிப் போய்விட்டார். நீதி மன்றத்தில் பத்தொன்பது வருடங்களாகத் தூங்குகிறது குமுதினிப் படகுப் படுகொலைக் கோப்பு. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி இந்தப் பிறவியில் கிடைக்குமா?

காங்கோ இனப் படுகொலையில் இதே மாதிரி ஒரு படகுக் கொலை நடந்தது உலகத்துக்கே தெரிகிறது. நியூயார்க் படகு விபத்தில் பத்து பேர் செத்துப் போனதற்கு உலகம் முழுக்கப் பதறுகிறது. 1994ல் க்யூபாவிலிருந்து தப்பிக்க 72 பேரோடு கிளம்பியவொரு படகு அந்நாட்டுக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டு, அதில் 41 பேர் செத்ததற்கு போப்புசாமி ஆறுதலாவது சொன்னாராம். ஆனால் இந்தக் குமுதினிப் படகுப் படுகொலையைப் பற்றி இணையத்தில் தேடிப் பார்த்தால், கிடைக்கும் பதிவுகளை ஒரு கையினால் விரல் விட்டு எண்ணி விடலாம். காங்கோ, நியூயார்க் சம்பவங்கள் கடந்த ஒரு வருடத்துக்குள் நடந்தவை. இப்போதிருக்கும் தொலைத் தொடர்பு வசதி 1985இலே இல்லையென்பதால்தான் அதைப் பற்றிய செய்திகள் இணையத்திலே கிடைக்கவில்லை என்பது காரணமா? அல்லது குறை நம்மிடம் இருக்கிறதா? நாம் எதையும் அம்பலப் படுத்துவதில்லை. எண்ணிக் குமைவதை யாரிடமும் சொல்வதில்லை. அதனாலேயே நாம் உலகின் பார்வையிலிருந்து விலகிக் கிடக்கிறோமா? நாம் பட்ட பழைய கஷ்டங்களை யாரிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது, எல்லாம் விதி, தலையெழுத்து என்ற மனப்பான்மை நமக்கு இருக்கிறதோ? சின்னதாயிருந்தாலும், பெரிதாயிருந்தாலும் நம்மிடையே நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பேரொலியுடன் அம்பலப் படுத்துவதன் மூலம்தானே பரபரப்பான இவ்வுலகின் கவனத்தை நாம் ஈர்க்க முடியும்? போராட்டமும், குரலெழுப்புதலும்தானே நமக்குத் தீர்வைத் தரும்? எனவே மனித உரிமைகள் மீறப்படும்போது நாம் துளியும் சகித்துக் கொள்ளாமல் (Zero Tolerance) குரலெழுப்ப வேண்டும்.

குமுதினி - ராஜாவின் மறுமொழி

தட்டுவோம், திறக்கும் என்ற சென்ற பதிவுக்கு நண்பர் ராஜா மறுமொழியிட முயன்றிருக்கிறார். என் மறுமொழிப் பெட்டியில் ஏதோ பிழை. அவரால பதிய முடியலை. தனியஞ்சலில் அனுப்பினார். அவருடைய மறுமொழி இதோ:

"இந்தக் குமுதினிப் படகுப் படுகொலையைப் பற்றி நான் கேள்விபட்டதில்லை. இது போல இன்னும் எத்தனையோ வெளியே வராத விசயங்கள் ஈழத்தில் நடந்துள்ளன. ஈழத்தைப் பற்றிப் பேசினாலோ, எழுதினாலோ அது தேசத் துரோகம் என்பது போல நம் நாட்டிலேயே எண்ணப்படும் போது நாம் அமெரிக்காவையும் மற்ற நாடுகளையும் ஏன் சலித்து கொள்ள வேண்டும்? ராஜிவ் கொலை என்பது மன்னிக்க முடியாத, தன்னிலை விளக்கத்திற்கும் (துன்பியல் சம்பவ???்) உட்படுத்த முடியாத, நம் உணர்வுகளைக் காயப்படுத்திய, மாறாத ஒரு வடுவை நம் நெஞ்சங்களில் ஏற்ப்படுத்திவிட்ட ஒரு பாதகசெயல் என்ற விதத்தில் எனக்குப் புலிகள் மேல் தீராத ஆற்றாமை உண்டு. ஆனால் இப்போது நம் அமைதிப் படையினர் அங்கே செய்த கொடுமைகளைப் பற்றி அம்மக்கள் சொல்லக் கேட்கும் போது அவர்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறதோ என்று கொஞ்சம் மனதில் படுகிறது. அந்த ஒரு தவறை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு நாம் இன்னும் ஈழம் பற்றியும், அம்மக்கள் படும் துயரம் பற்றியும் கிஞ்சித்தும் அக்கறையில்லாமல் இருப்பது, ஈழம் பற்றிப் பேசினாலே பொடா பாயும் என்று பயமுறுத்துவதும் நம் தமிழ் இனத்துக்கே நாம் செய்யும் வரலாற்றுத் துரோகம். ஒரு தமிழனாகிய எனக்கே இந்தக் குமுதினி படுகொலை இதுவரை தெரிய வில்லை, என்னைப் போன்ற பலருக்கும் இது வரை இது தெரியவில்லை என்பதும் இது பற்றிய செய்தியை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பதும் நம் தமிழ்நாட்டு ஊடகங்கள் நமக்கு செய்து வரும் மிகப் பெரிய துரோகம். முதலில் சரிய செய்யப்பட வேண்டியது இது தான்.

வெட்டி வீழ்த்தப்பட்டு, வெட்டுக் காயங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு முதல் உதவி முதலில் நாம் செய்வோம். உதவிக்கு அடுத்த வீட்டுக்காரன் கதவை தட்டுவது பற்றியெல்லாம் அப்புறம் யோசித்துக் கொள்ளலாம்".


- Mathan - 05-19-2004

<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனக் கூறிக்கொள்ளும் இந்தியாவில் இப்படியான கோமாளி அரசியல் நாடகங்களுக்குப் பஞ்சமில்லை.காவி கட்டிய சாமியார்கள் நாட்டைக் கெடுப்பதிலும் பார்க்க இந்திய இத்தாலியரான சோனியா பெரிதாக ஒன்றும் செய்துவிட மாட்டார்.

ஆனாலும் கட்சியின் நலனை முன்னிட்டே அவர் இவ்வாறு முடிவு எடுத்திருக்கிறார் என நம்பலாம் ஏனென்றால் ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதார்.சோனியா வெறும் பொம்மையே இலங்கை விடயத்தில் கூட சோனியா ஏதும் முடிவு எடுத்தால் அவர் முடிவாக இருக்காது ஆட்டுவிப்பவரின் குரலாகத் தான் இருக்கும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உலகிலேயே இரண்டாவது பெரிய மக்கள் தொகையை கொண்ட ஒரு நாட்டில் ஒரு சொந்த தலைவரை கண்டு பிடிக்க முடியாமல் இருப்பது வருத்ததிற்குரியது தான். அதே நேரம் பாரதிய ஜனதா கட்சி சோனியாவின் பிறப்பு குறித்த சர்சையை எழுப்புவது அவரை ஜனநாயக வழியில் தோற்கடிக்க முடியாததால் தான். மற்றும் படி அவர்களுக்கு தேச பக்தி எல்லாம் ஒன்றும் இல்லை.

மற்றும் வெளிநாட்டு கொள்கை போன்ற விடயங்களில் பொதுவாக அந்த துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளை கேட்டே தலைவர்கள் முடிவெடுப்பார்கள். சோனியா மட்டும் அல்ல வாஜ்பாயையும் கூட அப்படித்தான்.


- Mathan - 05-19-2004

சோனியா பிரதமராகின்றார் என்று முன்பு செய்திகள் வெளியான போது அது குறித்து இந்திய மக்கள் சிலர் வெளியிட்ட உணர்வுகள் . . .

<img src='http://newsvote.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/04/south_asia_reaction_in_delhi/img/6.jpg' border='0' alt='user posted image'>

'Where are the Indians?'

Student Shivanjali Choksey said she had nothing against Congress in general, only Mrs Gandhi.

"We are a country of a billion people, we can't find a single qualified leader to rule our country?" she asked, though others were happy to have new leaders.

<img src='http://newsvote.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/04/south_asia_reaction_in_delhi/img/4.jpg' border='0' alt='user posted image'>

'Not hard-core Indian'

Businessman Pawanesh Pajnu said the fact that Mrs Gandhi was born in Italy was not what mattered to him.

"I am concerned with sentiment. She is not hard-core Indian, she can't relate to the common man at all and that bothers me," he said.


- kuruvikal - 05-19-2004

சோனியா நல்லவரோ கெட்டவரோ என்பதல்ல...சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இலங்கை தொடர்பான நிலைப்பாடு என்ன....??! ராஜீவ் காந்தியையும் ஜே ஆரின் தந்திர வலையில் சிக்க வைத்து வேடிக்கை பார்த்தவர்கள் தான் இந்திய வல்லுனர்கள்....அது போக ராஜீவ் காந்தியின் வெளிநாட்டுக் கொள்கை என்பது பலத்த விமர்சனத்துக்குரியதாகவே இன்றும் இருக்கிறது. குறிப்பாக நட்பு நாடுகளாக விளங்கிய இலங்கை நேபாளம் போன்றவற்றுடன் அவசியத்துக்கு அப்பாலான தூர நோக்கற்ற தலையீடுகள்..!

நேரு வீட்டில் பேசுவதை வெளியில் சொல்ல பலர் இருக்கிறார்கள்....சோனியா ராஜீவையோ அல்லது இந்திராவையோ கட்டுப்படுத்தக் கூடிய பலமிக்கவராக ஒரு போதும் இருந்ததில்லை....! இவரை விட அரசியல் பலமானவர் சஜ்ஜையின் மனைவி மேனகா காந்தி...ஆனால் அவர் வழி தனிவழியாதலால் ....நேரு குடும்பக் கட்சியான காங்கிரசை காப்பாற்ற சோனியா தேவைப்பட்டார்...மீட்டுக் கொண்டு வந்தார்கள்..விளம்பரப் பொருளாக்கி வெற்றி கண்டார்கள்...இதற்கொன்றும் அரசியல் சாணக்கியம் அவசியமில்லை...வல்லுனர்களின் வல்லமையும் தேவையில்லை...!

இந்தியாவின் வெளி உறவுக் கொள்கை என்பது அமெரிக்காவினது போன்றதல்ல...இந்தியாவுக்கு அருகில் இருக்கும் நாடுகள் எதனுடனும் இன்று இந்தியாவுக்கு நல்லுறவில்லை...இப்படியாக எந்த ஒரு வல்லாதிக்கம் விரும்பும் நாடும் தனிமைப்பட்ட சூழலில் தன் வல்லாதிக்க கனவை நேரடி அழுத்தங்களுக்கு அப்பால் நனவாக்குவது என்பது கடினமே...!

ஒரு ஆட்சி அமைப்புக்கே திண்டாடும் ஒரு தலைமை உடைய கட்சி இந்தியா எதிர்கொண்டுள்ள எத்தனையோ சவால்களை எப்படிச் சமாளிக்கப் போகின்றது...????! சோனியா பிரதமரானால் என்ன ஆகாவிட்டால் என்ன இந்திய வல்லுனர்கள் தான் இந்தியாவை வழிப்படுத்துவதென்றால் பிறகேன் சோனியா சோனியா என்று இத்தனை நாட்கள் சோனியாவுக்குப் பின்னால் அலைகிறார்கள்...ஏன் காங்கிரசில் சோனியாவைவிட வலுவான தலைவர் அல்லது மூத்த உறுப்பினர்கள் இல்லையா...???! இந்திரா காலத்தில் இருந்து இருப்பவர்களே இருக்கின்றார்..இந்தச் சோனியா இந்திராவுடன் கூட பகைத்தவர் என்பது அவர்களின் குடும்ப விடயம்....!

ஆக காங்கிரஸ் கட்சி என்பது நேரு குடும்ப வாடை விடும் போது மட்டுமே இந்தியாவில் தலை தூக்க முடியும் என்ற நிலையே இருக்கிறது...இந்த நிலை என்பது ஒரு நாட்டின் உண்மையான திறமைத்துவமான வினைத்திறனான தலைமையை ஒரு போது உருவாக்கித்தர எப்போது வாய்ப்பளிக்காது....! காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்ப வாடை வீசாது தற்செயலாக வந்த நரசிமராவே இந்தியாவின் இன்றைய பொருளாதார மேம்பாட்டின் வித்தகர்...இதை ஏன் நேரு குடும்பம் அன்று சாதிக்கவில்லை....????!


:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: