![]() |
|
வேண்டுகோள்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: வேண்டுகோள்! (/showthread.php?tid=7138) |
வேண்டுகோள்! - sOliyAn - 05-19-2004 புலம்பெயர் நாடுகளில் பல தமிழ் பாடல்கள் ஒலித்தட்டு வடிவமாக வெளிவந்துள்ளன... அவற்றை எல்லாம் திரட்டும் நோக்குடன் ஒரு இணையத்தளத்தை ஆரம்பிக்கும் முயற்சியில் ஓரளவாவது பலன் ஏற்பட்டுள்ளது. ஆகவே, புகலிட நாடுகளில் வெளிவந்த தமிழ் பாடல் ஒலித்தட்டுகள் வைத்திருப்போர் தயவு செய்து என்னுடன் தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. rajhan@msn.com - shanmuhi - 05-19-2004 வரவேற்கத்தக்க முயற்சி. புகலிட நாடுகளில் வெளிவந்த தமிழ் பாடல் ஒலித்தட்டுகள் வைத்திருப்போர் பற்றி அறியும் பட்சத்தில் தெரிவிக்கின்றேன் - sOliyAn - 05-19-2004 மிகவும் நன்றி! - sOliyAn - 05-23-2004 அன்புறவுகளே! தங்களது அபிப்பிராயங்களையும்... பாடல் உதவிகளையும் எதிர்பார்க்கிறேன்! www.tamilamutham.de - tamilini - 05-24-2004 <!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->வரவேற்கத்தக்க முயற்சி. புகலிட நாடுகளில் வெளிவந்த தமிழ் பாடல் ஒலித்தட்டுகள் வைத்திருப்போர் பற்றி அறியும் பட்சத்தில் தெரிவிக்கின்றேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> - sOliyAn - 05-25-2004 வீழ்வது நாமாயினும் வாழ்வது (நம்) தமிழாகட்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Chandravathanaa - 05-25-2004 [url=http://www.eelanatham.yarl.net/]ஈழநாதனின்முயற்சி போல இதுவும் மிகவும் நல்லதொரு முயற்சி. தொடருங்கள். எனக்கு ஏதாவது ஈழத்து மெல்லிசைப்பாடல், பாடகர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் கண்டிப்பாக உங்களுக்கு அறியத் தருகிறேன்.[/color] - Chandravathanaa - 05-25-2004 நான் ஒன்று பதியத் தொடங்கினேன். அது நீண்ட நாட்களாக அப்படியே இருந்து விட்டது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளேன். - AJeevan - 05-25-2004 <span style='font-size:22pt;line-height:100%'>முயற்சிக்கு வாழ்த்துகள். சுவிசில் உருவாக்கப்பட்ட இசைத்தட்டொன்றை கூடிய விரைவில் அனுப்பி வைக்கிறேன். இலங்கை தமிழ் பாடல்கள் சிலவும் என்னிடமுள்ளன. தரம் நன்றாக இல்லை. என்ன செய்யலாம்? AJeevan</span> - sOliyAn - 05-25-2004 பாடல்கள் அனுப்பும்போது அதை வெளியிட்டவர்களது விபரங்களையும் கூடியவரை அறியத் தாருங்கள்.. சம்பந்தப்பட்டவர்களது அனுமதியை பெற வசதியாகவிருக்கும். நன்றி சந்திரவதனா, அஜீவன்! அஜீவன்! பாடல்களை அனுப்புங்கள்.. கிடைக்கும் பாடல்களை சேகரிப்போம்.. தரமான ஒலிப்பதிவுகள் கிடைக்கும்போது பிரதியீடு செய்யலாம். மேலும், ஈழத்தில் வெளியான மெல்லிசை பொப்பிசை போன்ற பாடல்களையும் சேகரிக்குமாறு சில நண்பர்கள் கூறுகிறார்கள். கிடைத்தால் அறியத்தாருங்கள். - AJeevan - 05-25-2004 என்னிடமிருக்கும் அனைத்து ஈழத்து கலைஞர்களது பாடல்களையும் கூடிய விரைவில் அனுப்பி வைக்கிறேன். இப்படியான முயற்சிகள் சிறு முயற்சி போல் தோன்றினாலும் இதுவே இக் கலைஞர்களது பதிவுகளாகி நிற்கும். உதாரணமாக சோழியனிடமிருந்து (இப்போது) மறைந்த இசை மேதை குலசீலநாதனது பாடலைக் கேட்க நேர்ந்த போது அவரது குரலினிமையால் சொக்கி நின்ற சிங்கை மக்கள் மத்தியில் இவருக்கு நம்மவர்கள் நல்லதொரு அங்கிகாரத்தை தரவில்லையே என்று நினைத்தேன். இன்று கூட பலருக்கு இப்படியொருவர் இருந்ததே தெரியாமல் புதைக்கப்பட்டிருந்திருக்கிறார். இறந்து போன பின் கொடுக்கும் மரியாதை தேவையற்றது. இருக்கும் போது யாராவது செய்தால் அதுதான் பெரியது. இன்றும் முகம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடல் கலைஞர்களுக்கு இது ஒரு, மாபெரும் தொண்டாகும். சோழியனின் முயற்சிக்கு முடிந்தவர்கள் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். என்னால் முடிந்தவற்றை நிச்சயம் செய்யக் காத்திருக்கறேன். வாழ்த்துகள்............. AJeevan - sOliyAn - 05-26-2004 எம்மவர்களின் தற்போதைய போக்கைப் பொறுத்தவரையில் அங்கீகாரம் சில சார்புத்தன்மைகளைப் பொறுத்து அளிக்கப்படுகிறதோ என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது. இதை அவர் பற்றிய விபரங்களை ஏனைய இணையங்கள் எந்தளவுக்குத் தந்தன என்று நோக்கையிலும் புரியும். இது கவலைக்குரிய அதேநேரம் தரமில்லாதவர்களை முன்னிறுத்தவும் உதவிபுரியும் வழி என்பது எனது அபிப்பிராயம். |