Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஹக்கீமினால் ஏமாற்றப்பட்ட பெண்
#1
ரவூப் ஹக்கீமினால் ஏமாற்றப்பட்ட எம்.பி.யின் மகள், ருபவாஹினியில் விளக்கமளித்துள்ளார்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கப்பற்துறை அமைச்சருமான ரவூப் ஹக்கீம், திருமணம் செய்துகொள்வதாக உறுதிகூறி, தன்னோடு நீண்டகாலம் தொடர்பில் இருந்து, பின்னர் ஏமாற்றி விட்டதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேவின் Nஐ.கூறேயின் மகள் குமாரி கூறே தெரிவித்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான குமாரி கூரேயை தான் மணமுடிப்பதாக உறுதிகூறி, நீண்டகாலம் ஏமாற்றி வந்ததாகவும், தன்னை அடிக்கடி சந்திக்கும்படி அமைச்சர் அழுத்தம் கொடுத்ததால் மவுன்ட் லவனியாவில் ஒரு வாடகை இல்லத்தில் தான் தங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள குமாரி கூரே, ரவூப் ஹக்கீம் இப்படித் தன்னை ஏமாற்றி விட்டதால், தான் தற்கொலை செய்துகொள்ள முயன்றதையும், தனது நண்பியொருவர் தன்னைக் காப்பாற்றியதையும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளார்.

தனது அழகில் மயங்கியதால், இரண்டு குழந்தைகளுடன் ஏற்றுக்கொள்வதாக உறுதி கூறினார் ஹக்கீம் என்று குறிப்பிட்டுள்ள குமாரி, ரவூப் ஹக்கீமிற்கு பல பெண்களின் தொடர்புகளுமிருந்ததை தான் பின்னரே அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐh-எல விலுள்ள ரவூப் ஹக்கீமின் இல்லத்திலும் தான் தங்கியிருந்த நாட்களை நினைவுகூர்ந்த குமாரி, ஐh-எலவில் அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்தில், வேறு பெண்களுடன் அவர் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்ததால் தான் பெரிதும் வேதனையடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தங்களிடையே பெரிய விவாதம் எழுந்ததாகவும், இனிமேல் எந்தத் தொடர்புகளுமின்றி, தன்னுடன் வாழ்வதாக தனக்கு அப்போது ஹக்கீம் வாக்குறுதி அளித்திருந்தார் என்றும், இப்போது ஏன் தன்னை ஏமாற்றிவிட்டார் என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் குமாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
Chandrika alliance accused of trying to implicate Hakeem

By Sinha Ratnatunga
Correspondent

Colombo: President Chandrika Kumaratunga's ruling Freedom Alliance (UPFA) has been accused of trying to implicate the leader of a minority political party in a sex-scandal.

Following the marathon seven-hour effort on April 22 to elect the Speaker of the newly-elected Parliament, a vote UPFA lost to the opposition, Kumaratunga's coalition has employed a new campaign to win today's elections for the post of deputy speaker and chairman of parliamentary committees.

The elections are seen as a test of strength for the new government elected on April 2 because the UPFA, with 106 seats does not have even a simple majority in the 225-seat Parliament.

A pro-opposition Sunday newspaper published a detailed account of two MPs of the Muslim Congress together with a group of UPFA politicians about duping a woman to be video-taped saying she had a clandestine affair with Muslim Congress leader Rauf Hakeem.

On Sunday night, state run television channels denied the newspaper account and broke all ethics codes by airing the woman's account of a clandestine relationship with Hakeem with a visual of the woman's face.

Most of the video was poorly recorded and clearly edited, but was shown both during the night's main news bulletin with a fuller version immediately thereafter.

Yesterday morning however, the editor of the Sunday newspaper that originally ran the story, played on a TV channel an audio-tape of a recorded telephone conversation he had with the divorced woman. In that tape, she castigates the President and her partymen for tricking her, and offering her a job in the US if she admitted to a sexual relationship with the married Hakeem. She said she was also asked to say that the Muslim Congress leader consumed alcohol.

Hakeem has denied these allegations saying that the woman had only asked him to help with securing a job overseas and accused the government of resorting to "despicable tactics".

Yesterday morning, his Muslim Congress condemned these tactics by the government and said they would continue to vote with the opposition.

Hakeem was sacked as Minister of Ports and Shipping by President Kumaratunga in mid-2001, which immediately triggered the collapse of her government a few months later when the Muslim Congress and several key ministers of that government crossed-over and joined the opposition.

President Kumaratunga's efforts to win the support of the other smaller parties like the Workers Congress and the National Heritage Party of the Buddhist monks have not yielded results.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
ஹக்கீமுக்கு எதிராக அரசு கீழ்த்தரமான பிரசாரம்!
சட்ட நடவடிக்கைக்கு அவரது கட்சி தயார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பலவீனப்படுத்துவதற்காகவே அரச ஊடகங்களில் தலைவர் ரவூப் ஹக்கீம் குறித்து கீழ்த்தரமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சதித்திட்டத்திற்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மு.கா. உயர்பீடம் நேற்றுமுன்தினம் இரவு அவசரமாகக் கூடி ஆராய்ந்தது எனவும் அவர் கூறியிருக்கின்றார். ஹஸன் அலி எம்.பி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட ;டிருப்பதாவது:- ஒரு பெண்மணியைப் பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் கௌரவத்துக்கு களங்கத்தை ஏற்படுத்த அரசு பெரிய சதித்திட்டம் ஒன்றைத் தயாரித்திருக்கின்றது. அதன் வெளிப்பாடாகவே அரசின் இலத்தி ரனியல் மற்றும் அரச ஊடகங்களில் தலைவர் ஹக்கீமை ஒரு பெண்ணுடன் தொடர்புபடுத்தி அரசு செய்தி வெளியிட்டிருக்கின்றது. அரசு தனது குறுகிய அரசியல் லாபங்களுக்காகவே இவ்வாறான கீழ்த்தரமான - விசமத்தனமான - பிரசாரங்களை முடுக்கிவிட்டிருக்கின்றது. அரசு மேற்கொண்டிருக்கின்ற இந்தச் சதித்திட்டம் தொடர்பாகக் கட்சியின் உயர்பீடம் நேற்றுமுன்தினம் இரவு ஒன்பது மணிதொடக்கம் நேற்று அதிகாலை இரண்டு மணிவரை கூடி ஆராய்ந்தது.

இச் சதித்திட்டத்திற்கெதிராக சட்ட நடிவடிக்கை எடுப்பதற்காக ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய குழு வொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவம், கௌரவம் என்பவற்றை சிதறடித்து, கட்சியைப் பலவீனப்படுத்த அரசு மேற்கொண்டிருக்கின்ற திட்டங்களை சகல தரப்பினரும் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர். அவற்றை முறியடிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் திடசங்கற்பம் பூண்டிருக்கின்றது -இப்படி ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.

உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
இதென்ன பெரிய விசயம்...ஏழு முடிக்கலாம்தானே இஸ்லாமியச் சட்டப்படி....எனி அரசியல்ல இறங்கிட்டா ஏழென்ன எழுபதுதானே....இதெல்லாம் அரசியலில சகஜமப்பா....!

பாவம் இந்தப் பெண்ணினம் விழிக்கிறம் விழிக்கிறம் எண்டு கொண்டு தூங்கிக் கொண்டிருக்கினம்....! அதுதான் போத்து வைச்சிருக்கினம் போல...அடையாளம் தெரியாம முகமூடிகள் போட்டு...பின்னாடி மாத்தச் சுகமல்லே....! எல்லாம் ஆண்டவன் பெயரால நடக்குது...நடக்கட்டும் நடக்கட்டும்...ஒரு நாள் கடவுளே வந்து உவைக்குத் தீர்ப்புச் சொல்லாமலா போவார்....! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
4 எம்.பி.மார் மீது ஒழுக்காற்று நடவடிýக்கைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தீவிரமாக ஆராய்வு

லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துக்கு எதிராக சதி செய்ததாக கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிýக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக ஐவர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று மு.கா. அதி உயர் பீடக் கூýட்டத்தின் போது அமைக்கப்பட்டுள்ளது.

வெளி அரசியல் சக்தியொன்றுடன் இணைந்து ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் நடத்தப்பட்ட இரகசிய சதி நாடகம் அம்பலத்துக்கு வந்ததையடுத்தே, இந்த விசாரணைக் குழுவை அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்குக் கிடைத்த ஒளிநாடாவொன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் பார்வைக்கு அனுப்பப்பட்டதையடுத்தே இந்த இரகசிய சதி நாடகம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

தலைமைத்துவத்தினால், நம்பிக்கையாகக் கருதப்பட்ட ஒருவரும் அவரது சகாக்கள் மூýவரும் இணைந்து தலைமைத்துவத்துக்கு எதிராக சதி செய்ததாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கூýடிýய மு.கா.வின் உயர் பீடக் கூýட்டத்தில் பல சான்றுகளுடன் பலரும் குற்றம் சுமத்தியதையடுத்தே மேற்படிý நால்வர் மீதும் ஒழுக்காற்று நடவடிýக்கை எடுப்பது குறித்து ஆராயும் குழு கட்சியின் உப தலைவரும் சட்டத்தரணியுமான என்.எம்.சஹீத் தலைமையில் நியமிக்கப்பட்டது.

இக் குழுவில் மௌலவி ஏ.எல்.எம்.கலீஸ், வை.எல்.எஸ்.ஹமீத், சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ், முன்னாள் சிரேர்;ட பொலிஸ் அத்தியட்சர் மஜீத் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மீது அவதூறு கற்பிக்கும் விதத்தில் ஒரு பெண்னுடன் அவரைச் சம்பந்தப்படுத்தி அரச ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தகவல்களை வெளியிட்டது. இதன் பின்னணியில் அரச தரப்பைச் சார்ந்த சிலரும் சம்பந்தப்பட்டிýருப்பதாக அறியவந்துள்ளது.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் சதி முயற்சியில் ஈடுபட்டவர்களில் இருவர் மேற்படிý அவதூறுச் செய்திகளின் பின்னணியில் இயங்கி வருவதாகவும் நம்பகமாகத் தெரியவந்திருப்பதாக அறியவந்துள்ளது.

மேற்படிý இரண்டு விடயங்கள் தொடர்பாகவும் எத்தகைய நடவடிýக்கை எடுக்கலாமென்று குழு ஆராய்ந்து மிகக் குறுகிய காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கக் கேட்கப்பட்டுள்ளது.

ஞாயிறு இரவு நடைபெற்ற கூýட்டத்துக்கு மேற்படிý சதி முயற்சியிலீடுபட்டவர்கள் எனக் கருதப்படும் இரண்டு எம்.பி.க்கள் சமுகமளிக்கவில்லை எனவும் ஏனைய இரு சகாக்களும் கூýட்டத்துக்கு வந்து இடை நடுவில் வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒளி நாடாவைப் போட்டுப்பார்த்துக் கொண்டிýந்தபோதே அவர்களிருவரும் மெதுவாக அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.

இது இவ்விதமிருக்க இக் கூýட்டத்தின் போது தலைமைத்துவத்தின் மீது பூரண நம்பிக்கை தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றுப்பட்டதாக மு.கா. பொதுச் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
Uproar in Sri Lankan parliament

By Frances Harrison
BBC correspondent in Colombo

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40165000/jpg/_40165717_hakeembody.jpg' border='0' alt='user posted image'>

<b>Mr Hakeem says the allegations against him are scandalous and cheap</b>

<b>There has been uproar in the Sri Lankan parliament over allegations of an extra-marital affair involving a senior MP who says he has been libelled.
It was only the second sitting of parliament since elections in April produced a minority government.</b>

The first day saw an opposition speaker being elected amid scenes of utter chaos that lasted the whole day.

Tuesday's session began with the head of the Sri Lanka Muslim Congress dismissing allegations of the affair.


Rauf Hakeem told the house the allegations that he had an affair with a woman had been fabricated to bring him into disrepute and put pressure on him and his party to support the government.

The latest dispute does not bode well for this parliament's ability to conduct its business smoothly.

'Scandalous and cheap'

The backing of Mr Hakeem's party would help give the government a majority which it currently lacks and there have been several attempts to try and oust him as leader.

Mr Hakeem said this scandalous and very cheap kind of politics had impacted in a serious way on his personal life - causing suffering to his children.

The details of the allegations against Mr Hakeem have been printed in the state-run newspaper as well as broadcast on state television.

The private media in Sri Lanka have carried stories supporting Mr Hakeem's contention that the allegations were fabricated.

Both media now run the risk of being sued for libel by those mentioned in their stories.

Monk missing

And if this were not drama enough a Buddhist monk elected to parliament complained his life was at risk after he received death threats.

He went on to say that a fellow monk also elected to parliament had been assaulted and abducted on the eve of the sitting and had disappeared without trace.

The state-run newspaper reported that the monk - who defied his all-clerical party to support the government - was beaten by a gang of monks wearing saffron robes and then bundled into a van which sped off into the night.

The newspaper said the police have appealed to the Sri Lankan public to help find the missing monk-turned-politician.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
இதில அவதூறுகள் இருப்பதாகத் தெரியல்ல...பாதிக்கப்பட்ட பெண்ணே சொல்லி இருக்கிறார்....ஆனால் அவர் தான் ஒரு அழுத்ததிற்குப் பிந்தான் உண்மையை வெளியில் சொன்னதாகச் சொல்கிறார்...எனி அவதூறு அது இது எண்டு சொல்லி தன்ர இமேஜைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார் போல...தலைவர்....இப்படி என்றால் வாலுகளும் வால் பிடிகளும்....??????!

உண்மைகள் வெளிக்கும் போது முகத்திரைகள் கிழிவது இயல்பு....என்று எனி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இதில அவதூறுகள் இருப்பதாகத் தெரியல்ல...பாதிக்கப்பட்ட பெண்ணே சொல்லி இருக்கிறார்....ஆனால் அவர் தான் ஒரு அழுத்ததிற்குப் பிந்தான் உண்மையை வெளியில் சொன்னதாகச் சொல்கிறார்...எனி அவதூறு அது இது எண்டு சொல்லி தன்ர இமேஜைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார் போல...தலைவர்....இப்படி என்றால் வாலுகளும் வால் பிடிகளும்....??????!

உண்மைகள் வெளிக்கும் போது முகத்திரைகள் கிழிவது இயல்பு....என்று எனி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்....!

:twisted:  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Cry :oops: :?:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
தனித்தரப்புக்கோரிக்கையை பலவீனப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி எம்மீது சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் குற்றச்சாட்டு நிலைப்பாட்டில் உறுதி எனவும் தெரிவிப்பு


ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அரசாங்கமும் இணைந்து கட்சியின் தலைமைக்கு எதிராகவும், கட்சிக்கெதிராகவும் எத்தகைய சதியினை மேற்கொண்டாலும் சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக பங்குபற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். எனக்கெதிராக தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சதிக்கு அஞ்சி எமது தனித்தரப்புக்கோரிக்கையினைக் கைவிடப்போவதில்லை. முஸ்லிம் தனித்தரப்புக்கோரிக்கை யினை பலவீனப்படுத்துவதற்காகவே கட்சியின் மீதும், கட்சித்தலைமை மீதும் சேறுபூசும் சதி முயற்சியினை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதனை முறியடிக்க முஸ்லிம் சமூகம் முஸ்லிம் காங்கிரசுடன் ஒன்றிணையும் என்பது உறுதி என்றும் ரவூப்ஹக்கீம் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக பங்கு பற்றுவது தொடர்பான கோரிக்கையினை கடந்த ஆட்சிக்காலத்தில் ரவூப்ஹக்கீம் முன்வைக்கவில்லை என்றும் தற்போதே இக்கோரிக்கையினை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறித்தும், தனிப்பட்ட முறையில் அரசாங்க ஊடகங்கள் ஹக்கீம் மீது பழிசுமத்தியுள்ளமை தொடர்பாகவும் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரவூப் ஹக்கீம் கேசரிக்கு மேலும் தெரிவித்ததாவது,பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக பங்குபற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக இருப்பதனால் அதனை பலவீனமடையச் செய்வதற்காகவே ஜனாதிபதியும், அரசாங்கமும் தனிப்பட்ட முறையில் என்மீதும் கட்சிமீதும் அபாண்டமான பழியை சுமத்தியுள்ளன.

இத்தகைய அபாண்டமான சதிமுயற்சி எனது தனிப்பட்டவாழ்க்கையையும் பாதிக்கத் தக்கவகையில் அமைந்துள்ளது. எமது உறுதியான நிலைப்பாட்டை பல வீனப்படுத்துவதற்காக இத்தகைய கீழ்த்தரமான பழிகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த சதி முயற்சி குறித்து ஆதாரங்கள் எமக்கு கிடைத்துள்ளது. சதிமுயற்சியின் பின்னணி குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் அரசியல் அதியுயர் பீடக்கூட்டத்தில் எடுத்துக்கூறியுள்ளேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட அரசியல் உயர்பீடம் ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும், இத்தகைய சதிமுயற்சியினை வன்மையாக கண்டித்துள்ளது.

இந்த சதி குறித்து உத்தியோகபூர்வமான அறிக்கையினையும் கட்சிவெளியிடும்.

கட்சிக்கு எதிராகவும், கட்சியின் தலைமைக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சதி முயற்சி குறித்து ஆராய்ந்து எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கை குறித்து சிபார்சு செய்வதற்கு 5 பேர் கொண்ட குழு ஒன்றையும் கட்சி நியமித்துள்ளது.

எனக்கெதிராக தனிப்பட்டமுறையில் ஜனாதிபதியாலும், அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்பட்டுள்ள சதி முயற்சிக்கெதிராக சட்டநடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றோம்.

வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#10
பெண் ஒருவருடன் முறைகேடான தொடர்பு அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டு
சேறு பூசும் நடவடிக்கையால் கலங்கமாட்டேன் என்கிறார் ஹக்கீம்

பெண் ஒருவருடன் முறைகேடான உறவு வைத்திருந்ததாக ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி மற்றும் டெயிலி நிய10ஸ் பத்திரிகை என்பன தன் மீது சேற்றை வாரியடித்திருப்பதாகவும் ஆயினும், இது தனது கடமையை தொடர்ந்து மேற்கொள்வதைப் பாதிக்காது என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவ10ப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மே மாதம் 16 ஆம் திகதியன்று ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி என்பன நான் பெண் ஒருவருடன் முறைகேடான தொடர்பைக் கொண்டி ருந்ததாக குற்றம் சாட்டின. இதே குற்றச்சாட்டு மே மாதம் 17 ஆம் திகதி வெளிவந்த டெயிலி நிய10ஸ் பத்திரிகையின் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

நான் இது குறித்து கவலையடைந்துள்ளபோதிலும் பாராளுமன்றத்தில் முக்கிய வாக்கெடுப்பு நிகழ்வினை நோக்காகக் கொண்டு அரசியல்வாதி மீது அழுத்தம் ஒன்றை பிரயோகிக்கும் விதத்தில் அரச ஊடகமானது துர்;பிரயோகம் செய்யப்பட்டது குறித்து அதிர்ச்சியடையவில்லை. அரச ஊடகம் இவ்வாறான தரக்குறைவான செயலில் இறங்கியது கண்டிக்கத்தக்கது.

இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, மற்றும் அடிப்படையற்றவை என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை.

சமூகத்திலும் கட்சியிலும் நாட்டிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல முக்கிய விடயங்கள் வருகின்ற சில நாட்களில் எழவுள்ளன. இந்த விடயங்கள் குறித்து எனது முழுமையான சிதறடி க்கப்படாத கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. குற்றச்சாட்டுத் தொடர்பான நீண்டகாலம் செல்லக்கூடிய சட்ட நடவடிக்கைகளின் மீதான கவனத்தைச் விடவும் இவ்விடயங்கள் தொடர்பாக நான் எனது கவனத்தை செலுத்தவுள்ளேன். வழக்கறிஞர்கள் மூலம் அவதூறு வழக்கொன்றை என்னால் தாக்கல் செய்யமுடியும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

இக்குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று மீண்டும் வலியுறுத்தும் அதேவேளை, எனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும், கட்சிக்கும், நாட்டி ற்கும் செய்யவேண்டிய கடமைகளை இவ்வாறான சேறு ப10சும் நடவடிக்கைகளைக் கண்டு கலங்கிவிடாமல் தொடர்ந்து செய்வேன் என்று நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#11
சிறப்புரிமையை மீறுவதாக சபாநாயகரிடம் முறையீடு

அரசாங்கம் தனது கட்டுப்பாட்டிýன் கீழ் இருக்கும் ஊடகங்களை துர்;பிரயோகம் செய்து தன்மீது பொய்யான அவதூறுகளை சுமத்தி மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்து கொண்டிýருப்பதாக பாராளுமன்றத்தில் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவ10ப் ஹக்கீம், இதனால் தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டிýருப்பதாக சபாநாயகர் லொக்கு பண்டாரவிடம் முறையிட்டிýருக்கிறார்.

பாராளுமன்றம் நேற்று காலை 10 மணிக்குக் கூýடிý புதிதாக 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின்னர், ஹக்கீம் எழுப்பிய இந்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் சிறப்புரிமைகள் குழுவிடம் அதை பாரப்படுத்தினார்.

தனது சிறப்புரிமைகளை மீறுகின்ற வகையில் பொய்யான கட்டுக்கதைகளை உருவாக்கி அரசாங்கம் மிகவும் கீழ்த்தரமான முறையில் செயற்பட்டிýருப்பதாகவும், சமாதானப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களுக்கு தனித்தரப்பு வேண்டுமென்று தான் கோரிக்கை விடுத்திருக்கின்ற இந்தத் தருணத்தில் இத்தகையதொரு அவதூறை அரசாங்கம் மேற்கொண்டிýருப்பது கவனிக்கத்தக்கது என்றும் ஹக்கீம் கூýறினார்.

அரச ஊடகங்களால் எத்தகைய அவதூறு சுமத்தப்பட்டது என்பது பற்றி ஹக்கீம் எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை.

ஆனால், எவ்வாறு தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டன என்பது பற்றி ஹக்கீம் விரிவாக எதுவும் கூýறாததால் அவரது முறைப்பாட்டை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளக் கூýடாது என்று அரச எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

இருந்த போதிலும், ஹக்கீம் இது பற்றி ஏற்கனவே தன்னிடம் அறிவித்து முறைப்படிý செயற்பட்டிýருப்பதால் அவரது முறைப்பாட்டை ஏற்று, சிறப்புரிமைகள் குழுவிடம் பாரப்படுத்துவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
பணத்துக்காக 'அரசியல் சோரம்" போனவர்கள் தனது குடும்ப வாழ்வை சீர்குலைப்பதாக சீறுகிறார் ஹக்கீம்

அபாண்டமாக பழி சுமத்தி தனது குடும்ப வாழ்வை சீர்குலைக்கும் நாசவேலையில் }லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டிருப்பதாக கடுமையான குற்றச்சாட்டைத் தெரிவிக்கும் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான ரவ10ப் ஹக்கீம், பணம், பதவிக்காக 'அரசியல் சோரம் போகும்" செயற்பாட்டில் தனது கட்சி சகாக்கள் இறங்கியிருப்பதாகச் சாடினார்.

முஸ்லிம் சமூகம் இந்தச் சதிகார நடவடிக்கைகள் குறித்து சஞ்சலப்படாமல் தெளிவுடன் இருக்குமாறு விநயமாக நேற்று செவ்வாய்க்கிழமை அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பெண் ஒருவரை ஹக்கீமுடன் சம்பந்தப்படுத்தி அரச ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் பின்னர், அந்தப்பெண் தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டி என்பன தொடர்பான உண்மை நிலைவரம் தொடர்பாக ஹக்கீமுடன் தொடர்பு கொண்ட போது, அவர் தெரிவித்தவை இங்கு தரப்படுகின்றன.

}லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்துக்காகவும், பதவிகளுக்காகவும் சோரம் போகின்ற அரசியலைச் செய்ய ஆரம்பித்திருப்பது முஸ்லிம் சமூகம் ஜனநாயக அரசியலிலே வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாழடித்து விடும் பயங்கரமான நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இவ்விடயத்தில் நாம் மிக ஆழமாகச் சிந்தித்து கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

முஸ்லிம் சமூகம் இந்தச் சந்தர்ப்பத்திலே இப்படியான சதிகார நடவடிக்கைகள் குறித்து சஞ்சலப்படாமல், இது போன்ற துரோகத்தனங்களில் ஈடுபடுகின்றவர்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக ஒன்று பட்டுச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறவிரும்புகின்றேன்.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டத்திலே இதைப் போன்ற சவால்கள் கடந்த காலங்களிலும் தலைமைத்துவம் சந்தித்திருக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்துக்கும், பதவிகளுக்கும் சோரம் போவது, கொள்கைகளை தூக்கி எறிந்து விட்டு தங்களுடைய சொந்த சுய இலாபங்களை அடைந்து கொள்கின்ற போக்கு விசனிக்கத்தக்கது.

ஆனால், அவர்களது இந்த நடவடிக்கைகள் எமது கட்சியின் வளர்ச்சிப் பாதையை எந்த விதத்திலும் பாதிக்கமாட்டாது.

நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக இருக்க வேண்டி யவர்கள் இவ்வாறு நம்பிக்கைத் துரோகமான செயல்களில் ஈடுபடுகின்ற பொழுது, எமது சமூகம் ஜனநாயகத்தில் கொண்டி ருக்கின்ற நம்பிக்கை இனியும் பலிக்குமா என்ற கேள்வியை பலரும் எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆனால், எந்தக் கட்சியினதும் பயமுறுத்தல்களுக்கும், அரச அடாவடித்தனங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும், கீழ்த்தரமான மானபங்கப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் எந்தவிதமான பீதியும், பயமுமில்லாமல் மக்கள் ஆதரவெனும் ஒரே பலத்திலிருந்து கொண்டு உரிமைப் போராட்டத்திலே நிலைத்து நின்று போராடும் என்பதை இங்கு வலியுறுத்திக் கூறவிரும்புகின்றேன்.

கட்சிக் கட்டுக்கோப்பை மீறுகின்ற அடிப்படையில் செயற்படும் எவருக்கெதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சமுதாயத்திலிருந்தும் தூக்கி எறியப்படுவார்கள். எமது கட்சியின் அரசியல் உயர்பீடம் இது குறித்து அத்தனை ஆதாரங்களையும் பரிசீலித்து குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எவ்வகையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐவர் கொண்ட குழு சிபாரிசு செய்த பின்னர், அவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இது விடயத்தில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை அவமானப்படுத்தி, மானபங்கப்படுத்தி நிலை குலைய வைத்து கட்சியை கபளீகரம் செய்து கொள்வதற்கு அரசும், அதன் அடிவருடிகளாகச் செயற்படும் ஒரு சில எட்டப்பர்களும் எத்தகைய சூழ்ச்சிகளை மேற்கொண்டாலும் மக்கள் மத்தியிலேயே உண்மைக்காகவும், நியாயத்துக்காகவும் இந்தக் கட்சியினதும் சமூகத்தினதும் உரிமைகளுக்காகவும் நான் சளைக்காமல் போராடுவேன் எனும் உத்தரவாதத்தை எனது சமூகத்துக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சவால்கள் எந்தக் கோணத்திலிருந்து வந்தாலும் அவற்றுக்கு முகம் கொடுக்கும் வலிமை என்னிடம் இருக்கின்றது. போராளிகள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் பலத்தைக் கொண்டு சவால்களை நிச்சயம் வெற்றி கொள்வேன்.

இப்படியான துரோகத்தனம் செய்பவர்கள் குறித்தும் சதிகாரர்கள் குறித்தும் நாடு முழுவதும் வாழும் மக்கள் அவர்களுக்கு எதிராக விழித்துக் கொண்டு விட்டார்கள் என்பதைச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

என்னுடைய அரசியல் எதிரிகளிடத்தில் நான் சொல்வது தங்களுடைய அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வங்குரோத்து நடவடிக்கைகளில் இறங்காமல் கொள்கை அடிப்படையில் வாதப்பிரதிவாதங்களை கட்சியுடனும், தலைமையோடும் முட்டி மோதுவதாக இருந்தால் அதற்கு முகம் கொடுக்க நான் தயாராக இருக்கின்றேன். ஆனால், அபாண்டமாக அநியாயமாக என்னுடைய கௌரவத்தையும், எனது குடும்பத்தினரின் மனைவி, மக்களின் நிம்மதியான வாழ்விலே தலையிட்டு நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என விநயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#13
ஹக்கீம் விவகாரத்தை உலமா சபை மூலமே விசாரிக்க வேண்டும்
முஸ்லிம் காங்கிரஸ் கிளர்ச்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

}லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவ10ப் ஹக்கீமுக்கு பெண்ணொருவருடன் தகாத நட்பு இருந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலான விசாரணையை பாரபட்சமற்ற உலமாக்களைக் கொண்ட குழுவொன்றின் மூலம் நடத்த வேண்டுமென்று விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரிர்hத் பதியுதீனும், நஜீப் ஏ.மஜீதும் வலியுறுத்திக் கேட்டுள்ளனர்.

களங்கப்பட்ட ஒருவர் தலைமைத்துவத்திலிருப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு உகந்ததல்லவென்றும், தலைமைத்துவம் தான்தோன்றித்தனமாகச் செயற்பட இடமளிக்க முடியாது எனவும் அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தனர்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடத்திய இந்தச் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரிசாத் பதிய10தீன், நஜீப் ஏ.மஜீத் ஆகியோருடன் முஸ்லிம் காங்கிரஸ் மஜ்லிஸ{ஸ் ர்{ரா தலைவர் மஸீஹ{தீன் இனாமுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ரிசாத் பதிய10தீன் கூறியதாவது:

எமது கட்சித் தலைவருக்கு பெண்ணொருவருடன் தொடர்பு இருந்த விவகாரம் எமக்குத் தெரியவந்தபோது அவற்றைப் பகிரங்கப்படுத்தாமல் இரகசியமாகவே தீர்க்க நானும் சகமூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் முயற்சிகளை மேற்கொண்டோம். இதில் சம்பந்தப்பட்ட குமாரி என்ற பெண் ஹக்கீமுடனான தமது தொடர்பு விவகாரத்தைப் பகிரங்கப்படுத்தப் போவதாகத் தெரிவித்த காரணத்தினாலேயே நாம் அதனை மறைத்து தலைமைத்துவத்தினதும், கட்சியினதும் மானத்தையும், கௌரவத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கினோம்.

ஆனால், கட்சியின் தலைமைத்துவம் எம்மைப் பொருட்படுத்தாமலும் எமக்கெதிராகவும் செயற்பட்டார். இந்த விவகாரத்தை அவரேதான் பின்னணியில் நின்று முதலில் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.

எம்மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது. குற்றமிழைத்தவரைப் பாதுகாக்க முயற்சித்தவர்கள் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தலைமைத்துவத்தைவிட கட்சிதான் எமக்கு முக்கியம். கட்சியை விட்டும் நாம் ஒருபோதும் வெளியேறப்போவதில்லை. கட்சியைப் பாதுகாப்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நாம் தயாராகவே இருக்கின்றோம்.

இப்போது குமாரி என்ற பெண் கூட ரவ10ப் ஹக்கீம் குழுவினரின் பாதுகாப்பிலேயே இருக்கின்றார். திங்களிரவு தனியார் தொலைக்காட்சியில் மேடையேற்றப்பட்ட நாடகம் போன்று இன்னும் பல நாடகங்கள் மேடையேற்றப்படலாம்.

நாம் எமக்கு நீதியான விசாரணையொன்றைக் கோரியுள்ளோம். தலைமைத்துவம் நியமிக்கும் விசாரணைக் குழுவல்ல பாரபட்சமற்ற உலமாக்களைக் கொண்ட குழு இந்த விவகாரத்தை முழு அளவில் விசாரித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

நாம் தான் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் அரசியலுக்கு முழுக்குப் போடுவேன். அத்துடன், எந்தவிதமான தண்டனையையும் ஏற்கவும் தயாராக இருக்கின்றேன்.

இங்கு கருத்துத் தெரிவித்த மஜ்லிஸ{ஸ் ர்{ரா தலைவர் இனாமுல்லா கூறியதாவது:

இப்பிரச்சினைக்குத் தீர்வொன்று காணப்படும் வரை ரவ10ப் ஹக்கீம் மு.கா.வின் கூட்டங்களுக்குத் தலைமை வகிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட குழு விசாரணையல்ல உலமாக்களைக் கொண்ட குழுவின் விசாரணையே தேவை.

முஸ்லிம் காங்கிரஸ{க்கு கூட்டுத் தலைமைத்துவம் அமைக்கப்பட வேண்டும். மு.கா.வில் சர்வாதிகாரத் தலைமைத்துவத்துக்கு, இடமளிக்கக் கூடாது. தற்போதைய நிலை மேலும் தொடர்ந்தால் முஸ்லிம் காங்கிரஸ் அழிந்து போகலாம் அதற்கு எந்தவிதத்திலும் இடமளிக்க முடியாது.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#14
பாத்தியளோ ஆரோ புகையக்காட்ட இப்ப நெருப்பே வெளியில தெரியுது...அது மட்டுமோ...பாத்தியளோ....பாத்தியளோ..
சொன்னம் மதம் வந்திட்டுது..உவைக்கு உந்த மதம்தான் பிரச்சனைகளின் தோற்றுவாய்.....கக்கீம் என்ன காதர் என்ன முருகன் என்ன அந்தோனி என்ன எல்லோரும் மனிதர்களே...குற்றம் செய்திருந்தால் குற்றவாளிகளே...அதை மனிதர் எல்லோருக்கும் பொதுவான சட்டதின் கீழ்தான் விசாரிக்க வேண்டும்....! அதுவும் பொது மனிதக் குற்றம்....!

குமாரி சிங்களப் பெண்போலத் தெரியுது....உதுதான் சொல்லுறது பெண்ணைத் தொடுவானேன் தொட்டபின் வருந்துவானேன் என்று....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
ரவூப் ஹக்கீமை, முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகும்படி கோரிக்கை

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமை, கட்சியிலிருந்து விலக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.

தற்போது தங்களது கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடி நிலைக்கும், உட்பூசலுக்கும் ரவூப் ஹக்கீமே காரணம் என்று குறிப்பிட்டுள்ள ஆர்.பதிஉடீன், நடுநிலை வகிக்காது பக்கசார்பாக கட்சித் தலைமை நடந்து கொண்டதால்தான் இத்தனை பிரச்சனைகள் உருவாகியுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்துக் கூறிய பதிஉடீன், கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம், தனது தவறுகளை ஏற்றுக்கொண்டு கட்சியிலிருந்து விலகவேண்டுமென, ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான நஐPட் ஏ.மஐPட், பைஃஸ்சல் கசீம், அமீல் அலி உட்பட தானும் கருதுவதாகக் கூறியுள்ளார்.

ரவூப் ஹக்கீம் விலகியபின்னர், தமது கட்சியிலிருந்து பிரிந்து போன பேரியல் அஸ்ரப், ஏ.எல்.எம்.அதவுல்லா உட்பட அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ள அழைப்பு விடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#16
SLMC suspends four of its members

Alladin Hussein in Colombo, May 19, 2004, 10.38 p.m.. The Sri Lanka Muslim Congress today suspended four of their members, which included three Parliamentarians, over disciplinary issues. The suspended SLMCers are: Parliamentarians Rishard Badiudeen, Najeeb Majeed, Hussain Bhaila and A. Inamullah.
H. Bhaila was suspended from the party, following his crossing over to the Government bench in Parliament yesterday. While, the other three was suspended over their alleged involvement in the recent sex scandal involving SLMC Leader Rauff Hakeem.

Party sources told the Lanka Academic that a committee has been appointed to look into the misconduct of these SLMC members, after which, the committee will recommend necessary action to be taken against these four.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#17
<img src='http://kuruvikal.yarl.net/archives/Hakeem.jpg' border='0' alt='user posted image'>

இவர்தான் ஹக்கீமைப் பீடித்துக் கொண்ட கலி....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பட உதவி..சூரியன் டொட் கொம் & sirasa tv srilanka மற்றும் http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
தலைவரை பாதுகாக்கும் நல்லெண்ணத்தில் செயற்பட்டதால் சதியில் சிக்கியுள்ளோம் ரிஸாத் பதூர்தீன் எம்.பி.

தலைவர் ரவூப் ஹக்கீமினால் ஏமாற்றப்பட்ட குமாரிகுரே என்ற பெண்ணுக்கு நியாயம் பெற்றுக்கொடுத்து கட்சியையும் கட்சித்தலைவரையும் பாதுகாக்கவே நாம் அந்த விடயத்தில் தலையிட்டோம். ஆனால் அந்தப்பெண் சதி செய்து எம்மைக் குற்றவாளிகூண்டில் நிறுத்தியுள்ளார். ஆகையால் இது குறித்து கட்சி பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றவாளி யார் என்பது கண்டறியப்படவேண்டும். இவ்வாறு நேற்று முன்தினம் மாலை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் வன்னிமாவட்ட மு.கா.எம்.பி. ரிஸாத் பதூர்தீன் தெரிவித்தார்.

கடந்த மாதம் 13 ஆம் திகதி நானும் திருமலை எம்.பி.நஜீப் ஏ.மஜித். மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.அமிர் அலி உட்பட நான்கு எம்.பி.க்கள் தலைவரின் வீட்டிற்குசென்றோம். தலைவரின் வீடு இருட்டாக இருந்தது. துறைமுக அதிகாரசபை பாதுகாப்பு ஊழியர்கள் காவலுக்கு இருந்தனர். அங்கு ஒரு இளம்பெண் அழுது கொண்டிருந்தார். பாதுகாவலர்களிடம் கேட்டபோது தலைவரை சந்திக்க இரவு எட்டு மணி முதல் நிற்பதாகக் கூறினார்.

அந்த பெண்ணிடம் கேட்டபோது தலைவர் தம்மை ஏமாற்றிய கதையை கூறினார். அந்தக்கதையை வெளியே யாரிடமும் கூறவேண்டாம். நாம் நியாயம் பெற்றுத்தருகிறோம் எனக்கூறினோம். தலைவரிடம் இதனைக்கூறிய போது இது எனது தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினை. இதில் தலையிட வேண்டாம் எனக்கூறினார்.

அந்தப்பெண் ஒரு நாள் என்னையும் நஜீப் எம்.பி.யையும் ஹோட்டலுக்கு அழைத்தார். தற்கொலை செய்யப் போவதாகவும் கூறினார். அதற்காக அப்பெண்ணை சந்திக்கச் சென்றோம். அங்கு எமது உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இது எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதியாகும்.

நாம் அந்தப் பெண்ணை ஜனாதிபதியிடம் அழைத்துச் செல்லவில்லை. அப்படி அப்பெண் கூறுவதை முற்றாக மறுக்கின்றோம்.

நாம் அந்த அறையில் இருந்துகொண்டு அமைச்சர் மங்கள சமரவீரவுடன் உரையாடவும் இல்லை. ரவூப் ஹக்கீம் மு.கா.தலைவர் பதவியை வகிக்க தகுதியற்றவர். மு.காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற பேரியல் அஷ்ரப், அதாவுல்லா ஆகியோர் உட்பட அனைவரும் கட்சிக்குள் இணைக்கப்படவேண்டும்.

மு.கா.தலைவர் தனித்தலைவராக இருக்கக்கூடாது. கூட்டுத்தலைமைத்துவம் அமைக்கப்படவேண்டும்.

குமாரிகுரே என்ற இப்பெண் தொடர்பான இரகசியங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டவர் ஹக்கீமே. அதன் மூலம் அனுதாபம் தேடிக்கொள்ள முனைந்துள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் மயப்படுத்தியுள்ளார்.

எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவும் தயாராக இருக்கின்றோம் என்றும் ரிஸாத் பதூர்தீன் குறிப்பிட்டார்.

திருமலை மாவட்ட எம்.பி.நஜீப் ஏ.மஜீத்தும் பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்

வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#19
குறித்த ஒருவரின் ஆசை நாயகியுடன் எனக்கு தொடர்பு எதுவுமில்லை றிஷாட் சபையில் முறையீடு

குறித்த தலைவர் ஒருவரின் ஆசை நாயகியுடன் எனது பெயரையும் தொடர்புபடுத்தி தனியார் தொலைக்காட்சியில் பேட்டி ஒன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.அது எனது சிறப்புரிமை மீறலாகும் எனவே விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஐ.தே.மு. வின் வன்னி மாவட்ட உறுப்பினர் (மு.கா) ரிஷாட் பதியுதீன் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியதும் சபாநாயகரின் அனுமதியுடன் உரைநிகழ்த்திய போதே ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு வேண்டுகோளை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த அந்த தலைவரின் ஆசை நாயகியுடன் நான் தொடர்புகள் எதனையும் வைத்திருக்கவில்லை. அந்த தலைவரை அவமானப் படுத்த அவரின் ஆசை நாயகியோடு நான் எதுவும் பேசவில்லை. ஆனால் தனியார் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் இரவு அந்த ஆசை நாயகியுடன் இடம் பெற்ற பேட்டியில் எனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதுபற்றி விசாரணை நடத்தவும் எனத் தெரிவித்தார்.

வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#20
உண்மையில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது அரசியல் சித்து விளையாட்டுக்கள் அஷ்ரப் எப்படிக் கொல்லப்பட்டார் என்பதற்கு விடை கிடைத்தால் இதற்கும் விடை கிடைக்கலாம்.

ஆனாலும் பாவம் ரவூப் கூடியிருப்பவர்களே முதுகில் குத்துவது தாங்கமுடியாது.
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)