Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 235 online users.
» 0 Member(s) | 232 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,296
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,622
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,050
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,457
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  இலங்கையில் எங்களால் அமைதியோடும் சமாதானத்தோடும் வாழ முடியும்
Posted by: AJeevan - 04-24-2004, 07:42 PM - Forum: சினிமா - No Replies

<img src='http://www.kumudam.com/eelam/010404/pg1t.jpg' border='0' alt='user posted image'>

<span style='color:brown'><b>இலங்கை இனப் பிரச்னையில் பாரபட்சமற்ற பார்வையைக் கொண்டிருக்கும் வெகுசில சிங்கள முற்போக்கு இயக்குநர்களில் சோமரத்னே திசயனாயக்கேயும் ஒருவர். பெரோஸ் போன்ற சென்ற தலைமுறை இயக்குநர்கள், உள்ளூரில் எதுவுமே நடக்காததுபோல் தம்போக்கில் படமெடுத்துக்கொண்டிருக்க அசோகா ஹண்டகாமா, பிரசன்னா விதானாகே, திசயனாயக்கே போன்ற சிலர்தான் பிரச்னையை தமக்கே உரிய தனித்துவமான பார்வையுடனும் சமூக அக்கறையுடனும் கையாண்டுள்ளனர். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு தன், 'லிட்டில் ஏஞ்சல்' படத்தோடு வந்திருந்தார் திசயனாயக்கே. 'லிட்டில் ஏஞ்ச'லுக்காகவும் சர்வதேச அளவில் ஒன்பது விருதுகளைப் பெற்றுள்ள அவரது முந்தைய படமான, 'சரோஜா'வுக்காகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு உரையாடலைத் தொடங்கினோம்.</b>

வசந்தகுமார்: பெரோஸ் போன்றவர்களைப் போல் இல்லாமல் இலங்கை தேசிய இனப் பிரச்னையைச் சார்ந்த சினிமாவைத் தேர்வு செய்தது ஏன்? அல்லது இதில் நாட்டம் ஏற்பட என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?

திசயனாயக்கே: தன்னைச் சுற்றி நிகழ்பவைகள்பால் ஈடுபாடும் அக்கறையும் கொண்டிருப்பதும், அதைத் தன் படைப்புகளில் பிரதிபலிப்பதும் ஒரு கலைஞனின் கடமை என்று நினைக்கிறேன். அந்த வகையில் ஒரு கலைஞனாக இலங்கை தேசிய இனப் பிரச்னையை என்னால் எளிதில் புறக்கணிக்க முடியாது. சிங்களர்களாக இருந்தாலும் தமிழர்களாக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான்; மனிதர்கள்தான். நம்மால் இலங்கையில் சமாதானத்தோடும் அமைதியோடும் வாழ முடியும் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்ல நான் விரும்பினேன். அப்படித்தான் என்னுடைய முதல் படமான 'சரோஜா' உருவானது.

வசந்தகுமார்: உங்களது இரண்டு படங்களுமே குழந்தைகளின் உலகைப் பற்றியவை. இது திட்டமிட்டு செய்யப்பட்டதா?

திசயனாயக்கே: குழந்தைகள்தான் பெரியவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள். அவர்களால் ஒன்றாகச் சேர்ந்து நட்புடன் வாழ முடியும்போது, ஏன் பெரியவர்களால் முடியாது? எனவே, என் இரண்டு படங்களிலும் தமிழ், சிங்கள குழந்தைகளின் நட்பைப் பயன்படுத்தினேன்.

வசந்தகுமார்: 'லிட்டில் ஏஞ்சலில்' பெரைரா என்கிற சிங்கள எஸ்டேட் அதிபர் கதாபாத்திரம் தொடக்கத்தில் தமிழின விரோதத் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆனால், இறுதியில் அவரிடம் வேலை பார்க்கும் தமிழரான வேலு, கலவரத்தில் சிக்கிக்கொள்கிற போது, பெரைரா அவரைக் காப்பாற்ற முயல்கிறார். இது நம்பும்படியாக இல்லையே?

திசயனாயக்கே: பெரைரா கதாபாத்திரம் இனவாதத் தன்மை கொண்டதே. ஆனால், வேலுவின் மகள் மூலம்தான் அவரது மகன் பேசத் தொடங்கினான், சாதாரண நிலைக்குத் திரும்பினான் என்பது தெரியவரும்போது, அவர் தன் நிலையை மாற்றிக் கொள்கிறார். அவர் அந்த தமிழ்ச் சிறுமியை நேசிக்கத் தொடங்கியதும் நாட்டின் நிலைமையே மாறிவிடுகிறது. சுயநலம் பொருட்டுதான் அவர் மனம் மாறுகிறார் என்றாலும், அவரும் ஒரு சாதாரண மனிதன்தான்.

வசந்தகுமார்: 'லிட்டில் ஏஞ்சலை' நான் இப்படி உள்வாங்கிக் கொள்கிறேன். பெரைரா, ஆட்சியாளர்களையும், தமிழ்ச் சிறுமி தமிழர்களையும், பெரைராவின் மகனான பிரச்னைக்குரிய சிறுவன் இலங்கை தேசத்தையும் பிரதிபலிக்கிறார்கள். சிறுமியின் முயற்சியால்தான் சிறுவன் சுமுகமான நிலைக்கு வருகிறான். இனபேதம் மறைந்து அமைதி திரும்புகிறது. ஆனால், சிறுமி அங்கிருந்து சென்றதும் சிறுவன் பழையபடி கலவர மனநிலைக்குத் திரும்பி விடுகிறான். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இலங்கையில் சுமுகமான சூழல் நிலவ தமிழர்களின் பங்கு தவிர்க்க முடியாதது என்பதுதானே உங்கள் நிலைப்பாடு?

திசயனாயக்கே: மிகவும் சரி. அரசியல்வாதிகள் சுயநலமிகள். அவர்களது நலனுக்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள். மக்களின் இரக்கத்தை ஈன்று பெற்று அரசியல் நலனைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள் அவர்கள். இலங்கையில் என்ன நடக்கிறதோ அதைத்தான் நான் படத்தில் பிரதி பலித்தேன்.

ஆனால் பெரைரா, அவரது மகன், சிறுமி இவர்கள் மூவரையும் முழுமையாக சிங்கள, தமிழ் சமூகத்தைப்பிரதிநிதித்துவப் படுத்துகிறவர்களாக எடுத்துக்கொள்ள முடியாது. சிறுவனும் சிறுமியும் வெவ்வேறு இனத்தினராக இருந்தாலும், அவர்களுக்கு இடையேயான நட்புக்கு அது ஒரு தடையாக இல்லை. சிறுவனின் வீட்டில் ஆடம்பர, விலையுயர்ந்த விளையாட்டுச் சாதனங்கள் நிறைய உள்ளன. ஆனால் அவனுக்கு அது போதுமானதாக இல்லை. அதையெல்லாம் கடந்த அன்பும் நேசிப்பும் அவனுக்குத் தேவை. அது அந்தச் சிறுமியிடம் ஏராளமாக இருக்கிறது. அன்புக்கும் நட்புக்கும் இனப்பாகுபாடு கிடையாது என்பதுதான் நான் சொல்ல விரும்பியது.

வசந்தகுமார்: இந்தப் படத்தின் பிரதான பின்னணி 1983_இனப்படுகொலை; பதின்மூன்று சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும், அதைத் தொடர்ந்து தமிழர்கள் பழிவாங்கப்பட்டதும்தான். இலங்கை வரலாற்றின் அழிக்க முடியாத கறை இது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மறந்து போன அதனை மறுபடியும் நினைவுபடுத்துவது இலங்கையில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்துவதாகாதா?

திசயனாயக்கே: இலங்கையில்கூட சிலர் இதனையே கேட்டனர். ஆனால் நான், இப்படம் பேச்சுவார்த்தைக்கு உறுதுணையாக இருக்கும் என்றுதான் கருதுகிறேன். இனப் பிரச்னை எவ்வளவு அசிங்கமானது, தேவையற்றது என்பதை இப்படம் மக்களுக்கு உணர வைக்கும். பதின்மூன்று பேரின் கொலைக்குப் பழிவாங்க பல்லாயிரக்கணக்கான தமிழர்களைச் சிங்களர்கள் கொன்று குவித்தனர். இதை இப்போது சுட்டிக்காட்டுவதன் மூலம், மக்களிடம் இது மறுபடியும் நிகழக்கூடாது என்கிற எண்ணமும் அதன்பால் வெறுப்புணர்வும் ஏற்பட வழி செய்யமுடியும். நாம் இப்போது சில நேரங்களில் ஹிட்லரைப் பற்றிப் பேசுகிறோம். அவர் செய்தது சரி என்று சொல்லவா? அல்ல; அதை ஞாபகப்படுத்துவதன் மூலம் அதன் தீயப் பக்கத்தைக் காட்டவே.

பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறதே! அதுவே நல்ல விஷயம்தான். ஜனாதிபதி தனக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும், பிரதம மந்திரி தனக்குத்தான் அதிக அதிகாரம் என்று சொன்னாலும் தமிழ், சிங்கள பொதுமக்களைப் பொறுத்தவரைக்கும் சமாதானம் தேவைப்படுகிறது என்பது நிதர்சனம். எனவே ஒரு சில மாதங்களில் பேச்சுவார்த்தை நல்ல ஒரு முடிவை அடையும் என்றே எதிர்பார்க்கிறேன். அவர்களால் பின்னோக்கிப் போருக்குச் செல்லமுடியாது. மீறி அவர்கள் போர்க்களத்துக்குச் சென்றால் அனைவரும் அவர்களை வெறுப்பர்.

வசந்தகுமார்: 'சரோஜா,' 'லிட்டில் ஏஞ்சல்' இரண்டுக்கும் மக்கள் மத்தியில் எந்த விதமான எதிர்வினை இருந்தது?

திசயனாயக்கே: இரண்டுமே பொது மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டன. ஆனால் இரண்டு தரப்பிலும் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் மத்தியிலிருந்து எதிர்ப்புகள் வந்தன.

வசந்தகுமார்: 'சரோஜா'வில் இறுதிக்காட்சியில் தமிழ்ப் போராளிகள் மனம் திருந்தி சிங்களவர்களுடன் இணைந்துகொள்ளும்போது, சிங்களர்கள் அவர்களை சுவீகரித்துக் கொள்வதாகவும், ஆனால் தமிழ்ப் போராளிகளால் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதாகவும் காண்பித்திருக்கிறீர்களே?

திசயனாயக்கே: அப்படி நிகழ்ந்தது. அதைத்தான் காண்பித்தேன். எதிர்த் தரப்பினரோடு சென்று கலந்துவிடுவதை தமிழ்ப் போராளிகள் விரும்பமாட்டார்கள். நான் சிங்களவனாக இருந்தாலும் சிங்களர்கள் செய்யும் எல்லாவற்றையும் சரி என்று ஒப்புக்கொள்ள மாட்டேன். அதைப்போல் தமிழ்ப் போராளிகள் செய்பவற்றையும் நூறு சதவீதம் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் அவர்கள் போராட்டத்துக்கு நியாயமான சில பிரச்னைகள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அவை தீர்க்கப்பட வேண்டும். அந்த விஷயத்தில் இலங்கை அரசு அதை அணுகியவிதம் தவறானது.

வசந்தகுமார்: இந்த இரண்டு படங்களுக்கும் இலங்கை அரசின் சென்சார் சான்றிதழ் பெறுவதில் தடங்கல் இருந்ததா?

திசயனாயக்கே: 'சரோஜா'வில் சில பகுதிகளை நீக்கச் சொல்லி என்னைக் கேட்டனர். அதற்கு தகுந்த பதில்களைக் கூறி, அவர்களுடன் விவாதித்து, அவர்களைச் சம்மதிக்க வைத்துவிட்டேன். 'லிட்டில் ஏஞ்சலி'ல் 1983 கலவரத்தை லேசாக செதுக்கச் சொன்னார்கள். நான் அவர்கள் சொன்னபடியே செய்தேன். ஆனால் இனி வருங்காலத்தில் அவர்கள் என்ன தலையீடு செய்தாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

வசந்தகுமார்: இரண்டு படங்களுக்குண்டான முதலீட்டுக்கு என்ன செய்தீர்கள்?

திசயனாயக்கே: ஆஸ்திரேலியாவில் குடியிருக்க எனக்கு ஒரு வீடு இருந்தது. அதை விற்று, அதோடு என்னிடமிருந்த கொஞ்சம் பணத்தையும் சேர்த்து, எண்பது லட்ச ரூபாய் முதலீட்டில் 'சரோஜா'வைத் தயாரித்தேன். அது வணிகரீதியாக வெற்றி பெற்றது. அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, விற்ற வீட்டை வாங்குவதற்குப் பதிலாக, 'லிட்டில் ஏஞ்ச'லுக்கு முதலீடு செய்தேன். இதிலிருந்து கிடைத்த பணத்தை, எனது சமீபத்து படமான 'ஃபைவ் ஃபைட்டரி'ல் முதலீடு செய்துவிட்டேன். இது இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வசந்தகுமார்: இந்தியத் திரைப்படங்கள் குறித்த தங்கள் கருத்து என்ன?

திசயனாயக்கே: இந்தியத் திரைப்படங்களுக்கு என்று ஒரு தெளிவான பாதை இருக்கிறது. அது 'கமர்ஷியல்' பாதை. திரைப்படத் தொழில் உயிர்ப்புடன் இருக்க இதுபோன்ற படங்கள் தேவைப்படுகின்றன. ஆனாலும் கமர்ஷியல் படங்களோடு என்னால் ஒத்துப் போகமுடியாது. இந்தியாவில் அடூர் கோபாலகிருஷ்ணன், ஷாஜிகரூன் போன்ற வெகு சிலரைத் தவிர பெரும்பாலோர் மும்பை ரகப் படங்களைத்தான் செய்கிறார்கள். இதில் கலைத்துவ, 'கமர்ஷியல்' விஷயங்களைக் கலந்த மணிரத்னம் போன்றவர்களின் படங்களை நான் வரவேற்கிறேன். </span>

நன்றி: யாழ்மணம்

Print this item

  கோபத்தை அடிக்கினால் கோழையென்று அர்த்தமல்ல.....
Posted by: AJeevan - 04-24-2004, 07:19 PM - Forum: தத்துவம் (மெய்யியல்) - Replies (3)

<img src='http://www.kumudam.com/sinegithi/010404/pg-4t.jpg' border='0' alt='user posted image'>

நாம் காலம் காலமாக சில விஷயங்களில் ஏனோ தவறான கருத்துக்களையே நிஜம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.

உதாரணமாக கோபம் கொள்வதுதான் வீரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் கோபத்தை அடக்கி வாழ்பவன் கோழை என்று எண்ணி விடுகிறோம்.

உண்மையில் கோபத்தை அடக்கும் யாரையும் நாம் கோழை என்று சொல்லக்கூடாது. அவர்கள் அதிக மனோவல்லமை பெற்றவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படித்தான் சான்றோர்கள் சொல்கிறார்கள்.

'என்னை மற்றவர்கள் கோழை என்று நினைத்தாலும் கூட சரி, நான் கோபம் கொள்ளமாட்டேன். கோபம் ஏற்படுத்தும் கெடுதல் பற்றி நான் அறிவேன். ஆகவே கோபம் கொள்ளமாட்டேன். அதனுடைய முடிவை நானே பார்த்து விடுகிறேன்' என்ற ஒரு மன உறுதியோடு நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் இருந்து பாருங்கள்;

உங்களுடைய இந்த முடிவு பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் கணித்துப் பாருங்கள். அவர்கள் உங்களை கோழை என்றே எண்ண மாட்டார்கள். வீரர் என்றே பாராட்டுவார்கள்.

பெரும்பாலும் நம்மில் பலர் தங்கள் கோபத்தைக்காட்டுவது தன் வீட்டின் அப்பாவிக் குழந்தைகளிடம்தான். அறியாப் பருவத்தில் இருக்கும் அந்தக் குழந்தைகளிடம் கோபம் வராமல் நாம் நம்மை காத்துக் கொள்வது மிக முக்கியம். குழந்தைகள் நல்ல முறையில் வளரவும் இது உதவும்.

இந்த உலகின்மீது வாழும் ஒவ்வொரு உயிருக்கும், செடி, கொடி உட்பட அனைத்துக்கும், இந்த உலகை விடுத்து வெளியேறும் வேகம் என்பது ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவு உண்டு. தென்னை மரத்துக்கு அறுபது அடி வைத்துக் கொள்ளலாம். சாதாரண செடிக்கு ஒரு அடி என்று வைத்துக் கொள்ளலாம். விடுதலை வேகம் மனித இனத்துக்கு ஆறு அடி. அந்த ஆறு அடி வளர்ந்த பிறகு, அது தணிந்துவிடுகிறது. எனவேதான் அதன்பிறகு மனிதனுக்கு வளர்ச்சியில்லை.

ஆனால் இந்த ஆறு அடி வேகம், ஒரு மாதக் குழந்தையாக இருக்கும்போதே அந்தக் குழந்தையிடம் உள்ளது; அந்தளவு வளர குழந்தையை ஊக்கி விடுகிறது; அதனால் எந்தக் காரியத்தைச் செய்தாலும் குழந்தை துடுக்காகத்தான் செய்யும். நீங்கள் ஏதேனும் தடுத்தாலும் அதைக் குழந்தையால் ஒப்புக்கொள்ள முடியாது.

சரி... நாம் என்ன செய்ய வேண்டும்? அவர்களது அந்த வேகத்தைப் பயன்படுத்தும் முறையிலேயே அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

உதாரணமாக குழந்தை ஏதோ ஒரு பொருளை எடுத்துவிட்டது. அதைப் போட்டுவிட்டால் உடைந்துவிடும் என்று எண்ணினீர்களானால் அதைவிட கவர்ச்சியான ஒரு பொருளை உடனடியாக எடுத்து அதன் கையிலே நீட்டி "இதோ பார், இது நல்ல பொருள். எவ்வளவு அழகாக இருக்கிறது" என்று புரியும்படி காட்டினால் அதை அக்குழந்தை வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கும். குழந்தைகளிடம் அன்பு காட்டி நடந்துகொள்ள வேண்டும்.

கோபம் அடங்கிய நிலையிலும் மனம் அடங்கவில்லையே என்பதுபோல, மனம் அடங்கிய நிலையிலும் கோபம் அடங்காத நிலைக்குச் சான்றுகள் பல இருப்பதாக சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

மனிதனுக்குத் தன்முனைப்பு என்று ஒன்று இருக்கிறது. தன்முனைப்பிலே 'தான்' 'தனது' என்ற இரண்டு எழுச்சிகள் உண்டு 'தான்' என்பது அதிகாரப்பற்று. 'தனது' என்பது பொருள்பற்று.

அந்த அதிகாரப்பற்று என்பது "தனக்கு மேலாக ஒருவர் திகழக் கூடாது, வளரக்கூடாது, உயரக் கூடாது" என்ற எண்ணத்தை உடையது. ஒருவர் உயர்ந்துவிட்டால், ஒருவர் செழித்துவிட்டால் அதைப் பார்த்துக் கொண்டு அவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அப்படிப்பட்டவர்களை என்ன செய்வது?

ஒன்றும் செய்ய முடியாது. காரணம் சகித்துக்கொள்ள முடியாமல் இருப்பது என்பது அவருடைய நோய். உங்களுக்கு ஏன் அந்தக் கவலை? அதை விட்டுவிடுங்கள். அந்த நோயை அவரே குணப்படுத்திக்கொள்ள வேண்டியதே தவிர அது நம்மை ஒன்றும் பாதிக்காது. அத்தகைய மனிதர் உங்களை ஏதேனும் திட்டினார், கெடுதல் செய்தார் என்றால் அவரை மனதார தினம் காலையும் மாலையும் வாழ்த்துங்கள். எல்லாம் சரியாகி விடும்.

'சரி... இயலாமையினால் தன் மீதே தனக்கு ஏற்படும் கோபத்தை எப்படி என்னால் தவிர்க்க இயலும்?' என்று நீங்கள் யோசிக்கலாம்.

உங்கள் மீது கோபம் ஏன் எழுகிறது என்று பார்த்தீர்களேயானால், இது ஒரு குற்ற உணர்வு. ஏதோ ஒரு செயலைச் செய்ய உங்களால் இயலவில்லை.

அதற்கு யாரோ தடையாக இருக்கிறார்கள். அந்தத் தடையை நீக்கி நான் வெற்றிபெற முடியவில்லையே என்ற ஒரு வேகம்தான்... அதாவது உங்கள் கோபத்தை மற்றவர் மீது காட்ட முடியாத ஒரு இடம், ஒரு சூழ்நிலை ஏற்படும்போது அந்த இடத்திலே அதே கோபம் நம்மீது திரும்புகிறது. திரும்பி, "நான் வாழ்ந்தென்ன... _வாழாவிட்டால் என்ன? நான் இப்படித் தவறு செய்துவிட்டேனே" என்கிற குற்ற உணர்வு. இது சாதாரண இயல்பு.

தன்னைக் குற்றவாளி ஆக்கிக்கொண்டு வருந்துவதைவிட, இனி என்ன செய்ய வேண்டும்? இப்போதுள்ள சூழ்நிலையில் எனக்கு அறிவு இருக்கிறது. உடல் வலிவு இருக்கின்றது. இன்னின்ன வசதிகள் இருக்கின்றன, இன்ன செல்வாக்கு இருக்கிறது. இவற்றைக் கொண்டு இந்த நிலைமையை மாற்றியமைத்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று உட்கார்ந்து சிந்தியுங்கள்.

உடனடியாக விளங்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள். இன்னொரு சமயம் மீண்டும் உட்கார்ந்து சிந்தியுங்கள். நல்ல முறையிலேயே உங்களுக்குத் தெளிவான விளக்கம் வரும். இந்த விளக்கத்தின் வழியே செயல்பட்டாலே தீர்வுகள் கிடைத்துவிடும்! அடுத்து, உங்களுக்கு யார் யார் மீது கோபம் எழுகிறதோ அவர்கள் பட்டியலைப் போட்டு ஒவ்வொருவருக்கும் ஏழு, ஏழு நாட்களை ஒதுக்கி அந்த நாட்கள் அவர்கள் மீது கோபம் கொள்ளாதவாறு ஒரு உறுதிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்

அது என்ன ஏழு நாட்கள் என்று யோசிக்கிறீர்களா?

சாதாரணமாக ஒரு உள்ளத்திற்குப் பயிற்சி எடுப்பதற்கு குறைந்தபட்சம் ஏழு நாட்கள் வேண்டும். அதற்குள் வெற்றி பெறவில்லையானால் நீங்கள் ஏழு நாட்களை இரண்டு ஏழு நாட்களாக்கிக் கொள்ளலாம். எழுபது நாட்கள்கூட நீட்டிக்கொண்டு பயிலலாம். அது அவரவர்களுடைய உணர்வைப் பொறுத்தது. நமக்கான இன்பங்களை இறையருள் தந்திருக்கின்றது. அவற்றையெல்லாம் அனுபவிப்பதற்கு அமைதிதான் வேண்டும். நமக்கு எழும் கோபம் அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிடும் என்பதுதான் விஷயம்.

அந்த இழப்பு நமக்கு வேண்டாம். இயற்கை இன்பத்தைப் பூரணமாக அனுபவிப்போம். ஒருவரோடு ஒருவர் ஒத்தும் உதவியும் இனிமையாக வாழ்வோம்.

கவலையை எப்படிப் போக்குவது?

தொடரும்.............

நன்றி: சிநேகிதி

Print this item

  யாழ் களத்தின் போக்கு....
Posted by: kuruvikal - 04-24-2004, 12:36 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (61)

குருவிகள் எழுதிய கருத்துத் தவறென்று தனி ஒருவரின் பார்வையின் கீழ் மாற்றுக் கருத்துக்கு இடமில்லாது பக்கத்தைப் பூட்டிவிட்டு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது...இதே களத்தில் நாம் எழுதிய ஒரு கருத்துக்காக இங்கே கலைஞர்கள் என்று வேடம் இடுவோர் எமக்கு எதிராக சர்வதேச காவல்துறையில் முறைப்பாடு செய்ய உள்ளதாக அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றனர்....அதற்கு இந்தக் களம் என்ன சொல்லப் போகிறது....!

இங்கு பதியப்பட்ட தனிப்பட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளது - மோகன்
அன்று எமக்கு விடுக்கப்பட்டது போல் நாளை Shanக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இக்களம் தரப் போகிறது....! இந்த எச்சரிக்கை என்பது சிலரைத் திருப்திப்படுத்த வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவு,,,கருத்துக்களத்தில் ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து எழுவது இயல்பு...அதைப் பொறுமையாக உள்வாங்க முடியாதவர்களால்தான் களம் நிர்வகிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது....!

இப்படியாக தாங்கள் விருப்பியோரை அல்லது தங்களுக்கு நெருக்கியோருக்காக நியாயத்துக்கு அப்பால தண்டனை வழங்கும் ஒரு களத்தில் நாம் எமது முயற்சிகள் கொண்டு களமாடுவதில் என்ன பலாபலன் கிடைக்கப்போகிறது...அதனால் எமது கருத்தைத் தெளிவாகச் சொல்லக் கூட முடியாத நிலைதான் தோற்றிவிக்கப்படுகிறது....அதேவேளை ஏதோ சர்வதேச பயங்கரவாதிகள் போல எமக்கு எச்சரிக்கைகளும் விடுக்கப்படுவதுதானா இக்களத்தில் களமாடுவதால் கிடைக்கும் பலன்கள்....! இதுதானா நாம் தமிழ் சமுதாயத்துக்குச் செய்யும் கைங்கரியம்.....!

எனவே எமது எச்சரிக்கை எடுக்கப்பட்டால் என்ன விட்டால் என்ன இக்களத்தில் இருந்து நாம் களமாடுவதில் இருந்து முற்றாக விலகுவதோடு எமது தரவுகள் பதிவுகள் அனைத்தையும் இக்களத்தில் இருந்து நீங்கிவிடும் வண்ணம் தாழ்மையாக கள நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கின்றோம்....!

இக்களத்தில் வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோரையும் சமமாக மதித்து களத்தை நிர்வகித்து வந்த மோகன் அண்ணாவுக்கும் யாழ் அண்ணாவுக்கும் எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்து உங்கள் பக்கச் சார்பின்மையை வெளிப்படுத்தி இக்களத்தை என்றும் மகிமை குன்றாது பாதுகாப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு வெளியேறிக் கொள்ளும் இந்த வேளையில் எம்மோடு கருத்தாடிய எல்லா கள உறவுகளுக்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்....!

என்று நட்புடன் அன்பின் குருவிகள்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

Print this item

  புற்றுநோய்க்கு புதிய வழியில் சிகிச்சை...!
Posted by: kuruvikal - 04-23-2004, 03:47 PM - Forum: மருத்துவம் - No Replies

புற்றுநோய்க்கு புதிய வழியில் சிகிச்சை அளிக்கக் கூடிய வகையிலான பரிசோதனை ஒன்றில் உயிரியல் மருத்துவ விஞ்ஞானிகள் வெற்றி அடைந்துள்ளனர்...ஆனாலும் இது எலிகளில் பரிசோதனை அளவிலேயே வெற்றி அளித்துள்ளது...!

<img src='http://www.nature.com/nsu/040419/images/ecoli_180.jpg' border='0' alt='user posted image'>
புற்றுநோய்க் கெதிரான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பக்ரீரியா...இது புற்றுநோய்க்கான மருந்தை ஊக்கப்படுத்தும் புரதத்தை கொண்டிருக்கிறது.

ஈ கொலாய் (<i>E.coli</i>) எனும் பக்ரீறியாவின் பிறப்புரிமை அலகான டி என் ஏ (DNA) இல் செய்யப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து பெறப்பட்ட பக்றரீறியாவை புற்றுநோய்த் தாக்கப்பகுதிக்குள் ஊசிகள் மூலம் செலுத்தி அவை புற்றுநோய்க்கலங்களைத் தாக்கும் வேளை புற்றுநோய்க்கான இரசாயன மருந்தை 6-MDPR(இது தானாக புற்று நோய்யால் பாதிக்கப்பட்ட கலங்களத் தேடி அழிக்காது) செலுத்துவதன் மூலம் அது குறித்த பக்ரீறியாவின் தாக்கத்துக்குள்ளான புற்று நோய்க்கலங்களைத் தாக்கி அழித்து புற்று நோயைக் குணப்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது....! குறிப்பிட்ட மருந்து குறித்த பக்ரீறியா வெளியிடும் ஒரு இரசாயனப் பதார்த்தம் (Enzyme) உடன் தாக்கத்தில் ஈடுபட்டே பக்ரீறியாவின் தாக்கத்துக்குள்ளான புற்றுநோய்க்கலங்களை அழிக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது....! இவை புற்றுநோயால் பாதிக்கப்படாத கலங்களை தாக்கி அழிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது....!

இதே போன்ற இன்னோர் பரிசோதனையை பிரித்தானிய நொட்டின்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர்...இதில் பிறப்புரிமை மாற்றம் செய்யப்படாத உணவு நஞ்சாதலில் பங்கெடுக்கும் ஒரு பக்ரீறியாவான குளஸ்றிடியதின் (<i>Clostridium</i>) வித்திகளை புற்றுநோய் தாக்குத்துக்குள்ளான பகுதிகளினுள் செலுத்த அவை ஒக்சியன் குறைந்த புற்றுநோய்க்கலங்கள் உள்ள பகுதிகளின் முளைத்து புற்றுநோய்க்கெதிரான மருத்தை ஊக்கப்படுத்தும் குளஸ்றிடியம் வெளியேற்றும் ஒரு இரசாயனப் பொருளை (Enzyme) வெளியிட அதுவும் புற்றுநோய்க்கான மருந்தும் இணைந்து புற்றுநோய்க்கலங்களை அழிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர்...! இதில் குறிப்பிட்ட பக்ரீறியா புற்றுநோய்கலங்களினுள் நுழைந்து வளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....!

எது எப்படியோ இவை அனைத்தும் எலிகளில் பரிசோதிக்கப்பட்டு முதற்கட்ட பரிசோதனை வெற்றியையே அளித்துள்ளன...மனிதரில் இம்முறைகளைப் பயன்படுத்த இன்னும் கடக்க வேண்டிய பாதைகள் நிறைய இருக்கின்றன...என்றாலும் இக்கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சை முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உண்டு பண்ண வாய்ப்புண்டு.....!

[shadow=red:bb1847954e]மேலதிக தவலுக்கு இங்கு அழுத்தவும்[/shadow:bb1847954e]


Our Thanks to Nature.com & kuruvikal.blogspot.com

Print this item

  சிந்திக்க ஓர் சீர் கவி...!
Posted by: kuruvikal - 04-23-2004, 10:46 AM - Forum: கவிதை/பாடல் - No Replies

<span style='color:red'>வரலாற்றை மறக்காதே

போர் ஓய்ந்து விட்டதனால்
போராட்டம் முடிந்ததென்று
புளகாங்கிதம் கொள்ளும்
புதல்வர்களே கேட்டிடுவீர்

சாமான்கள் போவதனால்
சமாதானம் வந்ததென்று
சந்தோசித்து நிற்கும்
சகோதரரே கேட்டிடுவீர்

சைக்கிள் பெறுவதற்கா
சமராடி நின்றோம் நாம்
அப்பிள் தின்பதற்கா
அல்லல் பட்டோம் நாம்

இப்படிச் சொல்வதற்காய்
இழிவாய்ப் பார்க்காதீர்
சமாதான விரோதியென
சாக்கடையில் தள்ளாதீர்

தடைமுகாம் கடக்காமல்
தலையாட்டி இல்லாமல்
எங்கேயும் சுற்றிவர
எங்களுக்கும் விருப்பந்தான்

துப்பாக்கிச் சத்தமின்றி
செல்லடிக்கப் பயமின்றி
சுற்றம் சுழ்ந்திருக்கும்
சுழலுக்கும் விருப்பந்தான்

அன்னியரின் தேசத்தில்
அகதியாய் அலைந்திடாமல்
எம்மண்ணை வந்தடைய
எங்களுக்கும் விருப்பந்தான்

நாள்முழுதும் மாயாமல்
கடுங்குளிரில் காயாமல்
நிம்மதியாய் வாழ்வதற்கு
நிச்சயமாய் விருப்பந்தான்

ஆனாலும் என்மனதில்
ஆழப் பதிந்திட்ட
கடந்தகால வரலாறு
கண்முன்னே நிற்கிறது

தவறுகளை மன்னித்தல்
தமிழர்குணம் என்றாலும்
கடந்தகால வரலாற்றை
கணப்பொழுது பார்த்திடுவோம்

சங்கிலியன் ஆட்சியிலே
சந்தோசமாய் நாமிருந்தோம்
சட்டம் ஒழுங்கையெல்லாம்
சரியாகப் பேணிநின்றோம்

தனியாக வாழ்ந்தஎம்மை
தங்களது வசதிக்காய்
சிறீலங்கா அரசுடனே
சேர்த்திட்டார் வெள்ளையர்கள்

அவர்தம் ஆட்சியிலே
அதிகமிது உறைக்கவில்லை
அதனாலே நாமதிகம்
அலட்டிக் கொள்ளவில்லை

எம்நாட்டை நாமே
எழிலாய் ஆண்டிடுவோம்
எல்லாரும் சமமாய்
இணைந்தே வாழ்ந்திடுவோம்

சிங்களத் தலைவர்களின்
சிங்கார வார்த்தைகளில்
நம்பிக்கை கொண்டதனால்
நாம்மோசம் போய்விட்டோம்

சும்மா இருக்காமல்
சுதந்திரத்தைக் கேட்டிட்டோம்
சுதந்திரமும் கிடைத்தது ? 48இலே
சுதந்திரமும் கிடைத்ததாம்.

அம்மே தாத்தேயென்று
அழைத்துக் கொஞ்சியோரின்
அன்பு பேச்செல்லாம்
அடியோடு போயாச்சு
அண்ணா தம்பியென்று
அழகாக நடித்தவரின்
சுயரூபம் மெல்லமெல்ல
சுழன்றாடத் தொடங்கியது

அமைதியாய் வாழ்ந்தவரை
அடித்தழிக்கும் பழக்கத்தை
ஐம்பத்தெட்டில் பண்டா
அழகாய் தொடக்கிவிட்டார்

என்பங்கைப் பாரென்று
எழுந்துநின்ற ஜேயாரும்
ஒன்றல்ல இரண்டுமுறை
ஓடஓட விரட்டிவிட்டார்

தனியாகச் சிங்களத்தை
தான்நாங்கள் பாவிப்போம்
அதிகாரத் தொனியினிலே
அறுதியிட்டுச் சொன்னார்கள்

ஒப்பந்தஞ் செய்தார்கள்
ஒருதலையாய் கிழித்தார்கள்
ஒன்றும் தரமாட்டேன்
ஓடிப்போ என்றார்கள்

சத்தியாக் கிரகஞ்செய்த
சமாதானத் தலைவருக்கு
காலிமுகத் திடலினிலே
கல்லடியும் பொல்லடியும்

அடியை வாங்கிவிட்டும்
அவர்களொன்றும் செய்யவில்லை
அஹிம்சை அஹிம்சையென்று
அடிக்கடி சொல்லிநின்றார்

அவர்களது அறிக்கைகளும்
அடிக்கடி தொல்லைதர
அதற்கென்று ஒருதிட்டம்
அழகாய் புனைந்திட்டார்

அஹிம்சை பேசியோரின்
அகன்ற வாய்களினை
அமைச்சர் பதவியுடன்
அழகாக மூடிட்டார்

பணத்தாசை பிடித்திருந்த
படித்தநம் தலைவர்கள்
பதவிக்கும் பஜிரோக்கும்
பல்லிளித்து நின்றிட்டார்

உலகத் தமிழருக்காய்
உன்னதமாய் மாநாடு
உருவாகி நிற்றல்கண்டு
உள்ளங்குமுறி நின்றார்

மகத்தான வகையினிலே
மாநாடு நடக்கையிலே
கொடூரக் காரர்கள்
கொலைக்களமாய் ஆக்கிட்டார்

துயர்நிறைந்த காட்சியினை
தூரத்தேபார்த்து நின்ற
துரோகக் கும்பலுக்கு
துரையப்பா தான் தலைவன்

தானாகப் படித்து
தமிழன் பல்கலைபோனான்
தாங்காத சிங்களவன்
தரப்படுத்தல் கொண்டுவந்தான்

எங்கே எழுந்தாலும்
எப்படித்தான் முளைத்தாலும்
எடுப்பார் சட்டத்தை
எமையடக்கிப் போட்டிடுவார்

படிப்பினிலே தமிழர்கள்
பார்புகழ வாழ்தல்கண்டு
காமினியும் மத்தியுவும்
களத்திற்கே வந்திட்டார்

ஆசியாவில் பெரிதாக
அழகாக எழுந்துநின்ற
புத்தகக் களஞ்சியத்தைப்
புசுக்கிப் போட்டிட்டார்

எங்கே எழுந்தாலும்
எப்படித்தான் முளைத்தாலும்
எடுப்பார் சட்டத்தை
எமையடக்கிப் போட்டிடுவார்

இனியும் இவரோடு
இணைந்திருக்க முடியாது
தமிழர் தலைவர்கள்
தனியாக யோசித்தார்

வல்லவர்கள் ஒன்றுகூடி
வடிவாக யோசித்து
வட்டுக் கோட்டையிலே
வரைந்திட்டார் ஒருதிட்டம்

தமிழர்கள் இந்நாட்டில்
தலைநிமிர்ந்து வாழ்வதற்காய்
தமிழீழம் அமைத்திடவே
தந்திடுங்கள் ஆணையென்றார்

வரலாறு காணாத
வகையினிலே மக்களெல்லாம்
வரிசையிலே காத்திருந்து
வாக்களித்தார் அவர்களுக்கு

பெற்றிட்ட ஆணையினை
பெரிதாக மதித்திடுவோம்
பெட்டிகளைக் கட்டுகையில்
பெரிதாகச் சத்தமிட்டார்

கொழும்பு போனதுமே
கொள்கையினை விட்டாச்சு
தலைநகரைக் கண்டதுமே
தம்மண்ணை மறந்தாச்சு

வீழ்ந்தோம் நாம்வீழ்ந்தோம்
விழாமல் வாழ்தலைவிட
வீழ்ந்தாலும் எழுந்திடலே
விரர்க்குச் சிறப்பு

தமிழர் உரிமைபெற
தலைநகரம் தேவையில்லை
தன்மான உணர்வுடனே
தனியாக நாம்முயல்வோம்

தேசத்தைக் காத்திடவே
தேசீயத் தலைவரின்கீழ்
அணியணியாய் இளைஞர்கள்
அணிவகுத்து நின்றிட்டார்

துரோகிகளை அழித்தலுடன்
துவங்கிய இப்போராட்டம்
அநியாயப் படையினையும்
அலைக்கழிக்கத் தொடங்கியது

சிங்களப் படைகள்
சிதறி ஓடியது
சிறிலங்கா அரசு
சிந்தை கலங்கியது

வெளிநாட்டு அமைச்சருக்கு
வெளிக்கிடவும் நேரமில்லை
விசயத்தைச் சொல்வதற்காய்
விரைந்திட்டார் இந்தியாவுக்கு

போராட்ட நோக்கத்தைப்
பொருட்டே படுத்தாமல்
ஈழத்து நிலைமையினை
இந்தியாவும் பார்த்தது

தமிழீழம் அமைந்திட்டால்
தமிழினமே ஒன்றுபடும்
தமிழ்நாட்டு மக்களுக்கும்
தடைபோட முடியாது

தமிழர்படும் துயரை
தாங்கிவிட முடியவில்லை
விடிவைத் தருவதற்காய்
விரைந்தே வருவோமென்றார்

நல்லவர்போல் நடித்து
நம்மீழ நாட்டிற்குள்
நாசுக்காய் காலூன்றி
நயவஞ்சனை புரிந்தார்

ஆனாலும் எம்படையை
அடக்கிவிட முடியவில்லை
அழிக்கவென்று வந்தவர்கள்
அழிந்தே போனார்கள்

தளராத எம்படைகள்
தந்திட்ட தாக்குதலால்
தானாகப் பின்வாங்கி
தளர்வுடனே போய்ச்சேர்ந்தார்

உள்ளத்தில் உறுதியுடன்
உண்மையான இலக்கிற்காய்
உறுதியாய் போராட்டம்
உயிரூட்டம் பெற்றதுவே

காமாலைக் கண்ணனுக்கு
கண்டதெல்லாம் மஞ்சள்
பைத்தியக் காரனுக்கோ
பாரிலுள்ளோர் பைத்தியங்கள்

பயங்கர வாதியாக
பவனிவரும் அமெரிக்கா
தந்ததெங்கள் படையணிக்கு
பயங்கரவாதி பட்டம்

அமெரிக்க அரசினரின்
அநியாயம் புரியாமல்
அவர்தம் நண்பர்களும்
அவ்வழியே நின்றிட்டார்

கதையை முடித்துவிட்டேன்
கதையை முடித்துவிட்டேன்
கள்ளச் சிரிப்புடனே
கதிர்காமர் துள்ளிநின்றார்

இத்துடனே முடிந்தது
இவர்களது போராட்டம்
சந்திரிக்கா அம்மாக்கு
சரியான சந்தோசம்

அடங்காத் தமிழனுக்கு
இவையெல்லாம் பொருட்டல்ல
அடுத்தகட்டத் தாக்குதலில்
அம்மாக்கு விளங்கியது

ஆனாலும் அகம்பாவம்
அவரை விடவில்லை
அழிப்பென் புலியையென்றார்
அழிந்ததுவோ அவராட்சி

சமாதானம் காணாமல்
சாயமாட்டேன் எனச் சொல்லி
ரம்மியமாய் பேசும்
ரணிலாரும் வந்திட்டார்

எதிரியுடன் பேசி
எமதுரிமை கிடைக்குமென்றால்
எங்கேயும் பேச
எப்போதும் நாம்தயார்தான்

நாம்ஆண்ட மண்மையும்
நமக்குரிய உரிமையையும்
நட்புடனே தருவரென்றால்
நாம் ஏன் உயிர் விடவேண்டும்

சமாதானம் வருவதற்கும்
சமமாக வாழ்வதற்கும்
உகந்ததொரு சுழலொன்று
உருவாகி உள்ளதுதான்

நேரான வழியினிலே
நேசக்கரம் நீட்டுகின்றோம்
அழுந்தப் பிடித்திட்டால்
அரவணைத்துக் கொண்டிடலாம்

அப்படியொரு நிலமை
அமைந்தால் நல்லதுதான்
ஆனாலும் அதற்காக
அவசரப்படக் கூடாது

கடந்த காலத்தின்
கசப்பான அனுபவங்கள்
மீண்டும் வராதென்று
முடிவெடுக்க முடியாது

அதனாலே நாமெதிலும்
அவதானமாயிருப்பேம்
எத்தகைய பாதையையும்
எதிர்கொள்ளத் துணிந்திடுவோம்

அதர்மம் நிலைக்காது
அநியாயம் வாழாது
அதனாலே எம்விடிவை
அசையாமல் நம்புகிறேன்

ஆண்ட மண்ணை நாம்
ஆளத்தான் போகின்றோம்
அதுவரையில் நடப்பதினை
அமைதியாய் பார்த்திருப்போம்.</span>

மணிவாசகன்/தமிழ் ஒசை

சிந்திக்க வலையில் தந்தது சூரியன். கொம்...!

Print this item

  காந்தீய தேசத்தில் நரபலி...!
Posted by: kuruvikal - 04-23-2004, 10:28 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

3 வயது சிறுமி நரபலி: கண்களைத் தோண்டி கொடூரம்

கோவை அருகே 3 வயது சிறுமி கண்கள் தோண்டப்பட்டு, ரத்தக் குழாய்கள் அறுக்கப்பட்டு நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறாள். இச் சம்பவத்தால் அப் பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.

கோவையைச் சேர்ந்த விவசாயி தர்மலிங்கம் மகேஸ்வரி தம்பதியின் மகள் ஷாலினி (வயது 3). மகேஸ்வரி இப்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து பிரசவத்துக்காக கோவை போரூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மகள் ஷாலினியுடன் சென்றார்.

துறுதுறுவென விளையாடிக் கொண்டிருந்த ஷாலினி இரு தினங்களுக்கு முன் திடீரென காணாமல் போனாள். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வீடே கவலையில் ஆழ்ந்திருந்தது.

இந் நிலையில் அருகே உள்ள குளக்கரையில் ஷாலினி கோரமான நிலையில் பிணமாகக் கிடந்தாள். அவளது உடலைக் கைப்பற்றிய பெற்றோர் மற்றும் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அச் சிறுமியின் கண்கள் தோண்டப்பட்டிருந்தன. கை, கால்களில் ரத்தக் குழாய்கள் அறுக்கப்பட்டு உடலில் இருந்து முழு ரத்தமும் வழிந்தோடச் செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் இந்தக் கொலை நடந்துள்ளது.

கைகளில் மடக்கும் இடத்திலும், கால்களில் முட்டிக்குப் பின் புறத்திலும் கத்தியால் ரத்தக் குழாய்களை வெட்டியிருக்கிறது நரபலிக் கும்பல். அழகிய சிறுமியின் கண்களும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் அந்தப் பகுதியையே பெரும பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த நரபலிக் கொலைக் கும்பலைப் பிடிக்க 5 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். இது கேரள மாந்தீகக் கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என்றும் கருதப்படுவதால் ஒரு போலீஸ் படை கேரளத்துக்கு விரைந்துள்ளது.

thatstamil.com

Print this item

  கடியோ கடி....
Posted by: kuruvikal - 04-23-2004, 10:25 AM - Forum: நகைச்சுவை - No Replies

வெறி பிடித்த இரு குதிரைகள் கடித்து 20 பேர் காயம்!

சேலம் மாவட்டம் ராசிபுரத்தில் 2 குதிரைகள் வெறி பிடித்து கடித்துக் குதறியதில் 20 பேர் காயமடைந்தனர், பல வாகனங்கள் சேதமடைந்தன.

ராசிபுரத்தில் சில மாதங்களாக 2 குதிரைகள் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தன. அவை யாருக்கு சொந்தம் என்றே தெரியவில்லை. குப்பைகளில் கொட்டப்படும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு அவை காலம் தள்ளி வந்தன.

சமீப நாட்களாக இந்த இரு குதிரைகளிடம் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. அடிக்கடி சப்தமாக கணைப்பதும், வேகமாக தறிகெட்டு ஓடுவதுமாக இருந்தன.

இந் நிலையில் இரு குதிரைகளும் வழியில் தென்பட்டவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தன. அப்போதுதான் அவற்றிற்கு வெறி பிடித்திருந்தது தெரிய வந்தது. தாறுமாறாக ஓடிய அந்தக் குதிரைகளிடம் ராசிபுரம்பட்டினம் சாலையில் பலரும் சிக்கி கடிபட்டனர்.

20க்கும் மேற்பட்டோர் குதிரைகளால் கடிபட்டனர். இதுதவிர வழியெங்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களையும் குதிரைகள் மிதித்துத் தள்ளின. இதனால் அந்த சாலையே அல்லோலகல்லோலப்பட்டது .

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் ஒரு குதிரை மயங்கி விழுந்து இறந்து விட்டது. இன்னொரு குதிரையை வனத்துறையினர் பிடித்துசிகிச்சை அளித்து அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இறந்த குதிரையையும் பிடிபட்ட குதிரையையும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவற்றை வெறி நாய்கள் கடித்திருந்தது தெரியவந்தது. அதனால்தான் குதிரைக்கும் வெறி பிடித்துள்ளது.

இதனால் குதிரைகளிடம் கடிபட்டவர்களுக்கும் வெறிநாய்க் கடி ஊசி போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் தற்ஸ்தமிழ் டொட் கொம்..!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :twisted:

Print this item

  அப்பா இன்றி வந்த பிள்ளைகள்....!
Posted by: kuruvikal - 04-22-2004, 08:16 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - No Replies

<img src='http://www.nature.com/nsu/040419/images/mouse_180.jpg' border='0' alt='user posted image'>

கிட்டத்தட்ட கன்னிப்பிறப்பாக்கல் மூலம் பிறந்த குட்டிகளுடன் தாய் எலி....!

வெவ்வேறு பெண் எலிகளின் முட்டைகள் இரண்டை தகுந்த முறையில் கருக்கலப்புச் செய்து பத்து எலிக்குஞ்சுகள் உருவாக்கப்பட்டுள்ளது....இதை சாதிப்பதற்கு 460 முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன...! இவ்வாறு பிறந்த எலிக்குஞ்சுகளின் ஒன்று மட்டுமே முழு வளர்ச்சி கண்டுள்ளது....!

கன்னிப்பிறப்பாக்கல் மூலம் சந்ததிகளை உருவாக்குதல் என்பது தாவரங்களிலும் இன்னும் சில பூச்சிகள் மீன்கள் மற்றும் தவளைகளில் காணப்படுவது இயல்பு....ஆனால் முதற் தடவையாக முலையூட்டிகளில் இப்பரிசோதனை வெற்றிகரமாக செய்து காட்டப்பட்டுள்ளது....!

இருந்தாலும் இப்பரிசோதனையின் வெற்றிவாய்ப்பு என்பது மிக அரிதாக இருப்பதுடன் உருவாகும் சந்ததிகள் சாதாரணத் தன்மையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் தானா பிறக்கின்றன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது..! மனிதக் குலோனிங் போல இம்முறையைக் கையாண்டு மனிதக் குழந்தைகளை உருவாக்குவதிலும் பல இடர்பாடுகள் இருப்பதுடன் இவை இயற்கையாக உருவாகும் குழந்தைகளுக்கு நிகர்ந்தவையாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியே....???!

இருந்தாலும் முட்டை, விந்துக் கருக்கட்டல் இன்றி முலையூட்டிகளிலும் முழு வளர்ச்சியடைந்து சந்ததிப் பெருக்கம் செய்யும் இயல்பைக் கொண்டிருப்பது இப்பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது....!

இப்பரிசோதனை ஜப்பானிய ரோக்கியோ விவசாயப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ளது...!

[shadow=red:c07bc0907e]<b>மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்தி பார்வை இடுக</b>[/shadow:c07bc0907e]

Our Thanks to Nature.com and kuruvikal.blogspot.com

Print this item

  சைனஸை நிச்சயமாக குணப்படுத்த முடியும்
Posted by: AJeevan - 04-22-2004, 01:20 PM - Forum: மருத்துவம் - No Replies

[align=center:629a60a41a]<img src='http://www.kumudam.com/Health/010404/p8-t.jpg' border='0' alt='user posted image'>[/align:629a60a41a]
<span style='font-size:21pt;line-height:100%'>ஜெயந்திக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். உடனுக்குடன் ஜலதோஷத்துக்கான சிகிச்சை எடுத்துக் கொள்வார். நான்கு ஐந்து நாளில் ஜலதோஷம் காணாமல் போய்விடும். திரும்ப வரும். அவதிப்படுவார்... திரும்ப சிகிச்சை... என்று இந்த பத்து வருடமும் அவர் படாத பாடு இல்லை.. தனக்கு வரும் ஜலதோஷத்திற்கான உண்மையான காரணம் என்ன என்று கண்டுபிடிப்பதில் அவர் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாததுதான் இதற்குக் காரணம். ஒருநாள் மூச்சுவிட சிரமமாக இருக்கிறது என்று ணிழிஜி டாக்டர் ஒருவரிடம் சென்றார். பரிசோதனையில் அவருக்கு சைனஸ் இருப்பது தெரிய வந்தது. இப்படித்தான் பலர் சைனஸ் தலைவலியால் அவதிப்படுவார்கள். ஆனால், அதில் சிலர்தான் சரியான சிகிச்சை பெற்று குணம் அடைவார்கள். இன்னும் சிலரோ ஏதோ சிகிச்சை பெற்று அப்பொழுது மட்டும் குணம் அடைந்து, மறுபடியும் மறுபடியும் அவதிப்படுவார்கள். இப்படிச் சிலர் அவதிப்பட்டு வெவ்வேறு டாக்டர்களை நாடி, 'இந்தச் சைனஸ் தொல்லைகளிலிருந்து விமோசனமே கிடைக்காதா?' என்று வெறுத்துப்போவதும் உண்டு. \"இன்றைய விஞ்ஞானத்தில் இனி சைனஸ் தொல்லைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. அதனால் சைனஸை நிச்சயமாக குணப்படுத்த முடியும்\" என்கிறார் சென்னை ஏவி.எம். மெடிக்கல் ஈ.என்.டி. ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ரவி. கே. விஸ்வநாதன்.

நோயாளிகளுக்கு முதலில் ஒன்றைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். அதாவது நம்மில் பெரும்பாலோர் ஜலதோஷமும், சைனஸ§ம் ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டே சிகிச்சைக்கு வருகிறார்கள். எல்லா ஜலதோஷமும் சைனஸ் ஆகிவிடாது. ஆனால் சைனஸ§க்கு மூலகாரணம் ஜலதோஷம்தான். அதாவது ஜலதோஷத்தின் ஆபத்தான இன்னொரு பக்கம்தான் சைனஸ் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜலதோஷம் என்பது மூன்று நாளிலோ அல்லது அதிகபட்சம் இரண்டு வாரத்திலோ குணமடைந்துவிடும். இது வைரஸ் தாக்குதலால் ஏற்படுகிறது. சைனஸ§க்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாலும், பெரும்பாலும் ஜலதோஷத்தின் விளைவுதான் காரணமாக அமைகிறது.

சைனஸ் என்றால் என்ன?:

நம் தலையில் கபால எலும்புகளின் முன்பக்கத்தில் உள்ள காற்றறைகளைத்தான் சைனஸ் என்று சொல்கிறோம். இவைதான் முகத்திலுள்ள எலும்புகளை மறைத்து முக அழகைத் தருகிறது. நமது முகத்தில் கன்ன எலும்புகள், மூக்கு எலும்புகள், நெற்றி எலும்புகள், பொட்டு எலும்புகள் ஆகிய இடங்களில் இந்த நான்கு இடங்களில் சைனஸ் உள்ளன. ஏதாவது ஒரு இடத்தில் நீர் தேங்கினால் அந்தப் பகுதியிலுள்ள சளிச்சவ்வு வீங்கிக்கொள்ளும். இதுதான் சைனசிட்டிஸ் என்கிற மூக்கழற்சி நோய். மூக்கடைப்பு, அடிக்கடி ஜலதோஷம், தொடர் தும்மல், தலைவலி, கண்வலி ஆகியவை சைனசிட்டிஸின் அறிகுறிகள். மூக்குத் துவாரங்களின் வழியாக நீர் வெளியேற முடியாமல் அடைப்பு ஏற்பட்டால் தானாகவே காற்றறைகளில் சைனஸ் படரும். இதனால் சளி அடைத்துக்கொண்டு சைனஸிலுள்ள காற்று முழுவதும் உறிஞ்சப்படும்போது தலைவலி உண்டாகிறது.

மூக்கின் அனைத்து செயல்களுக்கும் உறுதுணையாக இருக்கும் இந்த சைனஸ் அறைகளின் முக்கியமான பயன் _ நாம் எழுப்பும் ஒலிக்குச் சரியான அதிர்வுகள் தந்து இனிமையைச் சேர்க்கின்றன.

அடைப்பு ஏன் ஏற்படுகிறது?

இந்த சைனஸ் அறைகள் அடைத்துக்கொள்ள பல காரணங்கள் இருக்கின்றன. மூக்கின் நடுவில் இருக்கவேண்டிய தடுப்புச் சுவர் (ஷிமீஜீtuனீ) சிலருக்கு சற்று வளைந்து இருக்கும். அது வளைந்து இருக்கும் பட்சத்தில் அடைப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

அடைப்புக்கான இரண்டாவது காரணம், அந்த அறை வாசலில் ஏற்படும் சதை வளர்ச்சி. மூன்றாவதாக, தூசுகள் உள்ள இடங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அத்தூசுகள் மூக்கினுள் உள்ள ஜவ்வுகளைத் தாக்கி பாதிப்பு ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு அடினாய்டு சதை வளர்வது இன்னொரு காரணமாகும்.

சைனஸ் தொல்லைகள்!

தலை பாரமாக இருக்கும். கீழே குனியும்போது தலைவலி அதிகமாகும். காற்றறையில் நீர் தேங்கியிருப்பதால் தலையில் நீர் குலுங்குவது போல் இருக்கும். மூக்கடைப்பு என்பது சைனஸோடு சம்பந்தப்பட்டது என்பதால் மூக்கும் அடைத்துக்கொண்ட மாதிரி இருக்கும். இதனால் சுவாசிக்க சிரமமாக இருக்கும். வாசனை தெரியாது. ருசியையும் உணரமுடியாது. பேச்சில் தெளிவு இருக்காது.

பொதுவாக சைனஸ் என்பது தொண்ணூறு சதவிகிதம் ஜலதோஷத்தின் விளைவுதான் என்றாலும் அதற்கு மற்ற காரணங்களும் இருக்கின்றன. பல்லில் உண்டாகும் சொத்தைக்கும் சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. பல்லில் உள்ள சொத்தை வேர்வரை புரையோடி, அருகில் இருக்கும் சைனஸ் அறையையும் தொட்டுவிட வாய்ப்பு உண்டு. அப்போது இந்த சைனஸ் அறையிலும் சீழ் தேங்க ஆரம்பித்துவிடும்.

பல் சொத்தை மட்டுமல்ல, பல்லைப் பிடுங்கும்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது அது எந்த வகையிலும் சைனஸ் அறையைப் பாதித்து விடக்கூடாது.

இதே மாதிரி இந்த சைனஸ் அறைகளுக்கு மிக அருகிலேயே கண்கள் இருப்பதால், கண்கள் விஷயத்திலும் நாம் கவனமாக இருக்கவேண்டும். சிலருக்கு கண்களைச் சுற்றி சீழ் பிடித்து பாதிக்கப்பட்டு அதனால் பார்வைச் சிக்கல் நேரலாம். மூக்கினுள் உள்ள 'பாலிப்' என்கிற சதை வளர்ச்சியினால் கண்கள் பக்கவாட்டில் திரும்பி தவளை முகம் உண்டாகும். மூக்கில் சைனஸ் நோயைக் கவனிக்காவிட்டாலும் அது மூளைக்கு அருகிலுள்ள மிகப் பெரிய ரத்தக் குழாய்வரை சென்று பாதிக்கிறது. மேலும் மூளைக்கு மிக பக்கத்திலுள்ள ஃப்ரன்டல் சைனஸ், எத்மாய்டு சைனஸ் போன்ற அறைகளில் பாதிப்பு ஏற்பட்டாலும் அது மூளைவரை பரவி மூளைக்காய்ச்சல் வலிப்பு வரலாம். இதனால் உயிருக்கேகூட ஆபத்து நேரலாம் எனவே மூளைக்காய்ச்சலுக்கு முன்னோடியாகிறது சைனஸ்!

சைனஸை சரிப்படுத்துவது எப்படி?

சைனஸ் பிரச்சனையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று திடீர் திடீரென்று வந்து போகும் தீவிரமான வலியைத் தரும் சைனஸ். இரண்டாவது நிரந்தரமான ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ்.

முதல் வகையைச் சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதில் குணப்படுத்திவிடலாம். மிகச் சிலருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கும். இரண்டாவது வகை சைனஸை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாகச் சரிப்படுத்த முடியாது. வலியை மட்டுமே ஓÊரளவு கட்டுப்படுத்த முடியும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக்களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும். இப்போது இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் 'எண்டோஸ் கோபிக் சைனஸ் சர்ஜரி' என்ற நவீன அறுவை சிகிச்சை முறையில் குணப்படுத்துகிறோம்.

சிகிச்சை முறைகள் என்னென்ன...

முன்பெல்லாம் சைனஸ் பிரச்சனை என்றால் சைனஸ் அறையை ஓட்டை போடுவதுதான் எளிய முறையாக இருந்தது. மூக்கின் உள்ளே சிரிஞ்ச் மூலமாக நீரைப் பீய்ச்சி அடித்தால், அதுவே சைனஸ் அறைகளில் ஓட்டையை உண்டாக்கிவிடும். இதற்கு 'சைனஸ் பஞ்சர் சிகிச்சை' என்று பெயர். உள்ளே தேங்கிக் கிடக்கும் சீழ், அந்த ஓட்டை வழியாக வெளியே வந்துவிடும். காலப்போக்கில் இந்த ஓட்டை குணமாகி மூடப்பட்டுவிடும். மறுபடி எப்போது வேண்டுமானாலும் சைனஸ் வரலாம். அப்படி வரும்போது மீண்டும் ஓட்டை போட்டுத்தான் அதை வெளியேற்ற வேண்டும்.

இப்போது இந்தச் சிக்கலுக்கு தீர்வு கண்டாகிவிட்டது. எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது, அவற்றில் இருப்பது சளிதானா? அல்லது சீழா என்பதையெல்லாம் மிகத் துல்லியமாகக் கண்டறிய சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற அதிநவீன கருவிகள் வந்துவிட்டன. இதனால் அறுவை சிகிச்சையும் எளிதாகிவிட்டது.

எண்டோஸ்கோப்பி ஒரு வரப்பிரசாதம்...

மூக்கின் அனைத்து பாகங்களையும் சைனஸ் துவாரங்களில் உள்ள சிறிய பாதிப்புகளையும், கேமரா பொருத்தப்பட்ட எண்டோஸ்கோப்பி கருவி மூலம் வீடியோ திரையின் வழியாக கவனித்து நுண்ணிய கம்பி போன்ற கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படும். இதில் காயமோ, தழும்போ ஏற்படாது. உள்ளே இருக்கும் அத்தனை உறுப்புகளும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விடுவதால் அருகிலிருக்கும் பார்வை நரம்புகளுக்கோ, மூளைக்கோ துளிகூட பாதிப்பு இல்லாமல் ஆபரேஷனை செய்து முடித்துவிடலாம்.

இந்த சிகிச்சைக்காக நோயாளி மருத்துவமனையில் ஒரு நாள் தங்கினாலே போதும்.

லேசர் சிகிச்சை

லேசர் கருவியின் உதவியினால் எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்வது மேலும் வசதியானது. அதிக அளவு ரத்தம் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. பெரிய காயம் இருக்காது. விரைவில் புண் ஆறிவிடும்.

தொகுப்பு : எம். சதீஷ்</span>

Kumudam.com

Print this item

  அவனுக்கு இது ஒர் கதை.....எமக்கு....!
Posted by: kuruvikal - 04-22-2004, 11:39 AM - Forum: பொழுதுபோக்கு - No Replies

<span style='color:red'>பழுக்காய்த் துறையில் 'வோட்டர் ஜெற்

நீண்டதொரு வயல்வெளி, சேறுகள், கட்டாந்தரையாகி வறண்டு வாய்பிளந்து கிடக்கும் பாலை நிலம், எரியினால் அழிவுண்டு முட்களாக மாறியிருக்கும் புற்கட்டைகள் ஊடே அமைதியை ஆயுதமாக்கி எமது விசேட ஆயுத அணி நகர்ந்து கொண்டிருக்கிறது.ஓ! அது 19 புரட்டாதி 2000. இன்றும் என் நெஞ்சத்துப் பசுமையில் ஆழமாகப் பதிந்த கள வரலாற்றுப் பதிவுகள் பலவற்றில் இதன் பின்னான நிகழ்வும் பதிவும் பதியப் போவதற்கான முதல் நாள்.
அதிரடி நடவடிக்கை ஒன்றிற்காக விசேட வேவுப் பிரிவினரின் துணையுடன் எம் அணி நகரலானது. நேரம் ஒன்பதரை மணியிருக்கும் எதிரியின் முன்னரங்க காப்பரண் வரிசையை அடைய 500-600மீட்டர் இருக்கையில் எம் அணியின் நகர்வு நிறுத்தப்பட்டது. நல்ல நிலா ஒளி. வெட்டை வெளி எங்கும் வெள்ளொளியால் மிதக்க மனதுக்கு இதமாய் இருந்தது. மூக்கில் இருந்து நீர் வடியும் அளவுக்கு புரட்டாதி மாதத்து குளிர் மேனியை சில்லிட வைத்தது. எனினும் இலக்கே குறியான எமக்கு குளிர் து}சாகிப் போனது ஒன்றும் வியப்பில்லை.

நிலவு படும் நேரமாகிவிட்டது. கடிகாரம் அதிகாலை 1:30 மணி என்கிறது. அணிகள் மீண்டும் தம் இரகசிய நகர்வை அவனின் காப்பரண் வரிசை நோக்கி ஆரம்பித்தன. எதிரியின் பட்டொளி வீசும் மின்சார விளக்கு வரிசையில் எங்கோ ஓர் இடத்தில் இருந்த இருள் சூழ்ந்த பகுதியை எம் நகர்வுப் பாதை எனத் தீர்மானித்து நகரலானோம். காப்பரண் வரிசையை நெருங்க நெருங்க எச்சரிக்கை உணர்வு மேலோங்கியது.

சுமார் 15 மீட்டருக்குள் எதிரியை அண்மித்த நிலையில் எம்மை அவதானித்துவிட்ட எதிரி தாக்கத் தொடங்கினான். சரமாரியான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலுடன் மோட்டார் எறிகணைத் தாக்குதலையும் எதிரி மேற்கொண்டான். நாம் சென்று கொண்டிருக்கும் நடவடிக்கையின் நோக்கம் வேறு என்பதால் அவனோடு முட்டிமோத விரும்பாத நாம் எதிர்த் தாக்குதல் எதையும் மேற்கொள்ளாது காப்புகள் ஏதுமற்ற வெட்டை வெளியூடாக பராவெளிச்சங்களிற்கும் கூவி வரும் எறிகணைகளுக்கும், சீறிப் பாயும் துப்பாக்கிச் சூடுகளுக்கும் என பல தடவை நிலை எடுத்தும், சில தடவை ஓடும் போது நிலை தடுக்கி விழுவதுமாய் சுமக்க முடியா சுமையுடன் பின்வாங்கி ஓடி சில 200 மீட்டர்களுக்கப்பால் அணிகளைச் சரிபார்த்து சேதங்கள், இழப்புகள் எவையுமே இல்லை என்பதன் பின் எம் தங்குமிட முகாம் திரும்பினோம். ஏறத்தாழ இரவு 12 மணி நேரமாக இவ் நடவடிக்கையின் பின் ஓய்வுக்காக தலைசாய்த்தபோது நேரம் மறுநாட்காலை 05:00 மணியாகியிருந்தது.

"விழ..விழ..எழுவது" புலிகளின் மரபல்லவா? ஆம். அதனால் மீண்டும் செப்டம்பர் 20 விடிகாலை எமக்கானதானது. அன்று வேறு ஓர் நகர்வுப் பாதையைத் தேர்ந்தெடுத்து நகரலானோம். எமது முகாமில் இருந்து மாலை 5:30 மணிக்கு பச்சை நிற லான்ரோவர் வாகனத்தில் விசேட ஆயுதங்கள் சகிதம் சென்று எதிரிக்கு அண்மையான கிராமம் ஒன்றைச் சென்றடைந்தோம். அங்கு இரவு 1:30 மணிவரை நிலவு படுவதற்காக ஓய்வெடுத்துக் கொண்டோம். இப்போது விடிகாலைக்குள் எதிரியின் பிரதேசத்துட் சென்று பாதுகாப்பான இடத்தை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் எமது நகர்வு எதிரியின் காப்பரண்களை நோக்கி வேகமெடுத்தது.

உள்ளத்தைக் கிலி கொள்ளச் செய்யும் மின்விளக்கு வரிசை, அவற்றின் மத்தியில் எம்மை இனம் காணத் துடிக்கும் தேடல் ஒளிகள், இவற்றை விட எதிரியின் கழுகுக் கண் பார்வை என யாவையுமே எம்மை இரை எனத் தேட நாமோ இவை அனைத்துக்கும் இரையாகி விடக்கூடாது என்ற துடிப்புடன் எம் இலக்கழிக்கும் விருப்புடன் மிகவும் நுட்பமான, ஆபத்தான நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தோம். "ஊசி முனைத் துவாரமூடாக உலக்கையைச் செலுத்தும் சாதுரியமது.

நேரம் விடிகாலை 3:00 மணியிருக்கும். எல்லோர் முகத்திலும் ஒருவித பிரகாசத்தை அந்த இருள் படர்ந்த வேளையிலும் காண முடிந்தது. அப்போது நாம் அனைவரும் எதிரியின் காப்பரண்களைத் தாண்டி அவனின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவிச் சென்று கொண்டிருந்தோம்.

இடையறா நடையின் களைப்பு, தோளே ஏற்க மறுக்கும் சுமை, கால்கள் பதியமறுக்கும் முட்தரைகள், அரைவரை ஏறும் நீர் நிலைகள் ஊடே உடலே வியர்வையால் தெப்பமாய் மிதக்க எங்களின் பயணம் சொல்லணாத் துன்பங்களின் மேலே எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியினுள்ளே தொடர்ந்தது.

இதயம் லப்..டப்.. என்பதை மற்ந்து இலக்கு...அழி..இலக்கு..அழி..என ஓசைப்படலானது. நீண்ட தொலைதூரம் பயணங்களின் பின் மறுநாள் காலை 11:00 மணியளவில் பாதுகாப்பான மறைவிடம் ஒன்றைச் சென்றடைந்தோம். எதிரியைப் பொறுத்தமட்டில் அது எமக்கான மறைவிடம் ஆனால் அதுவோ எங்களுக்கோர் சொர்க்க பூமி என்பதை அங்கு சென்ற பின்னர்தான் கண்டு கொண்டோம். அவ்விடத்தை அடைந்தபோது அங்கு ஏற்கனவே தங்கி நின்ற கடற்புலிப் போராளிகள் அன்போடு எம்மை அனுசரித்து நன்றாகச் சீனியிட்டு குழைக்கப்பட்ட மாவுருண்டைப் பலகாரமும் தேனீரும் தந்தபோது எம்மீது தொற்றியிருந்த களைப்பும், தாகமும் விடைபெற்றுக் கொண்டன. நீரையே காணாது எங்களின் முகம் மாலைவரை தூக்கத்தில் ஆழ்ந்தது.

தூக்கம் கலைந்து களைப்பு தீர்ந்தபோது அப்பகுதி கல்லாறு என அறிந்து கொண்டோம். நாவற் பழங்களால் நிரம்பி வழியும் மரங்களை இருமருங்கே கொண்டு அந்த வனப்பு மிகு ஆற்றினூடே எமது இருநாட் பொழுதுகள் சங்கமித்தன.

கடற்புலிப் போராளிகள் கூட்டாகச் சேர்ந்து ஆற்று நீரின் துணையோடு சமைத்துப் பரிமாறிய ஆறுவேளை உணவின் பின் நாம் வந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் பணிக்காய் செப்டம்பர் 23, 2003 அன்று ஆயத்தமானோம். எம் திட்டத்தை நிறைவேற்ற எதிரிக் கடற்படையின் கொலைவெறி "வோட்டர் ஜெட்"களை சீட்டி அவற்றை எம் கொலை வலயத்திற்குள் வரவழைத்து தாக்கியழிக்கும் நோக்குடன் கடல் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிங்கள மீன்பிடிப்படகுகள் சிலவற்றை ஏற்கனவே எம் திட்டத்திற்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த இருவேறு கடற்புலிகளின் குழுக்கள் விடிகாலை 4:30 மணியளவில் மடக்கிப்பிடித்து அவற்றுள் 05ஐ தொழிலாளர்களை வேறு சக தொழிற்படகுகளில் ஏற்றிவிட்டு நாம் விரித்த கொலை வலையத்தின் கரைப்பகுதியை வந்தடைந்தனர். இவ் அட்டகாசத்தை எதிரி அறிய வேண்டும் என்பதற்காக படகுகள் சிலவற்றை ஏனைய தொழிலாளர்களுடன் விட்டதுடன் துப்பாக்கி வேட்டுக்களையும் தம் படகில் நின்றவாறே மேற்கொண்டிருந்தனர் கடற்புலிகள்.

இது நடந்தது மன்னாரிற்கும் புத்தறத்துக்கும் இடையிலான கற்பிட்டி கடற்பரப்பில். தமிழர் தாயகப் பகுதியாக இருந்தும் எதிரியால் பல காலமாக அவனின் ஆக்கிரமிப்பிற்குள் உள்ள தரை, கடலாதிக்கப் பகுதி என்பதால் அப்பகுதியிலேயே நடந்த இந்த சிங்கள மீனவர்களின் படகுப் பறிப்பானது எதிரியை சீண்டியிருக்க வேண்டும். நிச்சயம் எதிரி எம்மைத் தேடி வருவான் என நம்பியிருந்தோம். இதற்காகவே முழு நாள் இரவினைக் கண்விழித்துச் செலவழித்து எமது விசேட ஆயுதம் ஒன்றுக்காய் நிலையமைத்து மறுநாள் நண்பகல் கழிந்து மாலை 2:00 மணிவரை மேவி எழும் அலைகள் ஊடே கொலை வெறியர் படகுகளை எம் இரையெனத் தேடினோம். கிடைக்கவில்லை. காத்திருந்த எமக்கு கவலைதான். எனினும் இதில் பொறுத்திருந்தே சாதிக்க வேண்டுமென்பதால் மீண்டும் சில நாட்கள் மௌனம் காத்தோம்.

கற்பிட்டியின் ஒரு புறத்தே கடலுக்குள் நீண்டு நிற்கிறது குதிரை ஒன்றின் தலை. இது ஓர் நிலப்பகுதி. து}ரத்தே நின்று பார்க்க குதிரையின் தலைபோல் காட்சி தரும் வனப்பு மிகு மலை. குதிரை மலை என்பது இதனால் அது பெற்ற சிறப்புக் காரணப் பெயர். இது வரை கல்லாற்றின் முகத்துவாரம் அருகே எதிரிக்காய் காத்திருந்த நாம் குதிரை மலையின் பழுக்காய்த்துறை சென்று எதிரியுடன் சமரிடுவதாய் திட்டமிட்டோம்.

செப்டம்பர் 29,2000 அன்று கல்லாற்றிருந்து 3 மணிநேர தொடர் நடையில் சென்று ஒரு குழு நிலையமைப்பில் ஈடுபட இன்னோர் குழு விசேட தாக்குதல் ஆயுதங்கள் சகிதம் இரவோடிரவாக எதிரியின் கடல்ரோந்துப் படகுகளின் ராடர் கண்களில் மண்ணைத் து}வி விட்டு இரவு 11:00 மணிக்கு இயந்திரப் படகு இரண்டில் இரகசியமாக எம்மிடம் வந்து சேர்ந்தனர். அன்றைய இருட்பொழுது ஆயத நிலை அமைப்பு, தாக்குதலிற்கான முன்னாயத்த வேலைகள் என்பவற்றோடு கரைந்துபோக மறுநாட்காலை புலர்ந்தபோது நித்திரையின்மை, வேலைக் களைப்பு என்பவற்றால் எல்லோர் கண்களும் சிவந்திருந்த போதும் கடல்மீது எதிரி இலக்கினைத் தேடி கூர்மையாகவே இருந்தன.

இது தான் செப்டம்பர் 30,2000 எமக்கான வெற்றித் திருநாள். நிலைகளில் எதிரி கலத்தினைத் தாக்கியழிப்பதற்காய் கடல்மேல் விழி வைத்து எமதணி வீரர்கள் காத்திருக்க எதிரி ரோந்தில் ஈடுபட்டவாறு "வோட்டர் ஜெற்"றில் விரைந்து கொண்டிருந்தான். வழமைபோன்றே சிங்கள மீன்பிடிப்படகுகள் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. தமிழ் மீனவர்கள் சுதந்திரமாக, நிம்மதியாக தொழில் செய்து வாழ வேண்டிய கடற்பரப்பில் கடற்படையின் துணையோடு 20க்கும் மேற்பட்ட சிங்கள றோளர்கள். இவற்றை கடற்கரை மணல்மேடு ஒன்றில் நின்றுகொண்டு அவதானித்த கடற்புலிப் போராளிகள் இருவரை ஆயுதங்களுடன் கண்டுகொண்ட றோளர்களில் ஒன்று தான் தொழிலில் ஈடுபட்ட பகுதியை விட்டு விலகிச் சென்று ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வோட்டர் ஜெற்றிற்கு தகவல் கொடுக்க எதிரி அப்பகுதி நோக்கி தன் வேகத்தை மும்மடங்காக்கி விரைந்து வந்து 50 கலிபர் தாக்குதரை மணல்மேட்டு கரையோரம் நோக்கி மேற்கொண்டான்.

எதற்காகக் காத்திருந்தோமோ அதுவே வந்துவிட்ட பூரிப்பு எமக்கு. எனினும் எம் பூரிப்புக்கு அர்த்தம் இல்லை என்பதை மறு கணப் பொழுதுகளில் எதிரி எம் கொலை வலையத்திற்குள் வராது சென்றுவிட்ட பொழுது அறிந்து கொண்டோம். மீண்டும் ஏமாற்றங்கள் தொடர இலக்குக்கான காத்திருப்பும் தொடரலானது. இதனால் சற்று சினம் கொண்ட எம் தாக்குதல் நடவடிக்கைக்குப் பொறுப்பான ராகுலன் அண்ணன் எம் நிலையருகே வந்து கடற்புலிப் போராளியான சோலைக்குமரனைப் பார்த்து தன் வழமையான தொனியில் "..சோலை.. அதில நிக்கிறவையில இரண்டைக் கரைக்குக் கொண்டுவா.. அப்பத்தான் ஆக்கள் எங்களிட்ட வருவினம்.." என தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த றோளர்களைக் காட்டிச் சொன்னார். ராகுலன் அண்ணன் சொல்லி முடிக்க அதனைக் கட்டளையாக ஏற்றுக் கொண்ட போராளிகள் "அரக்கடி அம்மா..அரக்கு..அரக்கு..றோளரைப் பிடித்து அரக்கு...அரக்கு..." என அம்மாப்பாடி கடலில் இறக்கப்பட்டது. கடற்கரை கண்டல் பற்றைகளோடு உருமறைக்கப்பட்டிருந்த "புளுஸ்ரார்" படகு. மறுகணமே அதன் இயந்திரம் இயக்கப்பட வேகமெடுத்து அலைமீது தாவிப் பாய்ந்து றோளர்களை நோக்கிச் சீறிச் சென்றது.

சோலைதான் அதன் படகோட்டி. குமார், காந்தன் இவர்கள் இருவரும்தான் றோளர்களை மடக்க வேண்டியவர்கள். 10 நிமிடத்தில் பல றோளர்கள் தொழில் ஈடுபட்டிருக்க சோலையின் படகு றோளர் ஒன்றின் இருகே வட்டமிட குமார் றோளர் மீது பாய்ந்து தாவி சிங்கள மீனவர்களை எதுவும் செய்யக் கூடாதென எச்சரிக்கின்றான். பின்னர்தானே றோளரை கணிசமான வேகத்தில் நாம் நிலையமைத்திருந்த கரை நோக்கிச் செலுத்தினான். இதே போன்று இன்னுமோர் றோளரையும் வட்டமடித்த சோலையின் படகிலிருந்து தாவிப் பாய்ந்த காந்தன் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து கரைநோக்கி செலுத்தலானான். இப்போது வெண்ணுரை எழுப்பியவாறு சோலையின் படகு முன்னே பாய்ந்து வர இரண்டு றோளர்களும் பின்னே அணிவகுத்தன.

திரைப்படம் ஒன்றிற் பார்த்த கடற்கொள்ளைச் சம்பவம் போன்றிருந்தது. ஆனால் இது பகைவனைச் சீண்டி எம் வலைக்குள் விழ வைப்பதற்கான ஓர் நாடகமே.

"காந்தன் ஒன்றில தொழிலாளிகள் எல்லோரையும் ஏற்றி அனுப்புங்கோ" றோளருடன் கரையை அடைந்த காந்தனுக்கு ராகுலன் அண்ணன் கட்டளை இட சொற்ப நேரத்தில் அது நிறைவேற்றப்படுகிறது.

ஏறத்தாழ 10 நிமிடங்கள் கூட கழிந்திராத நிலையில் விடயமறிந்த எதிரியின் வோட்டர் ஜெற்கள் றோளர்களைத் தேடி எமது கடற்கரை நிலை நோக்கிப் பாய்ந்து வந்தன. இதற்கிடையே தொழிலாளிகள் யாவரும் றோளர் ஒன்றில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டிருந்தனர். இடையில் இவர்களை வழிமறித்த எதிரி முழு விடயத்தையும் கேட்டறிந்து கொண்டதுடன் நாம் நிலையெடுத்திருந்த கரைப்பகுதி நோக்கி 50 கலிபர் தாக்குதலை இரண்டு வோட்டர் றெ;ரிலிருந்தும் மேற்கொள்ளலானான். எனினும் எம் நிலையிலிருந்து 800 மீட்டருக்கு அப்பால் நின்றே தாக்குதலை நடத்தினான். இதனை " ...அண்ணை இன்னும் அவன் எங்களின் எல்லைக்குள் வரைல 800 மீட்டரில நின்கின்றான்"என்று தூரங்கணிக்கும் சாதனத்துடன் இருந்த போராளியின் குரல் உணர்த்தியது.

இதற்கிடையில் மிகவும் வேகமான செயற்பாட்டினால் எமது விசேட ஆயுத நிலை தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொள்ளக்கூடியவாறான ஓர் நிலைக்கு மாற்றப்பட்டுக் கொண்டது.

சில நாள் இடைவெளிக்குள்ளே நடந்த இரண்டாவது படகுப் பறிப்பினால் இதன் பின் உள்ள விபரீதத்தை எதிரி எண்ணியிருக்க வேண்டும். இதனால் எதிரி கூடிய அளவு கரையை அண்மிக்காது விட எம்மில் ஏமாற்றமே குடிகொண்டது. எனினும் இது நீடிக்கவில்லை. கற்பிட்டியிலிருந்து இன்னும் இரு "வோட்டர் ஜெற்" கள் இரட்டிப்பு மின்னல் வேகத்தில் அரக்கத் தனத்தோடு அலைகிழித்து சீறி வருவதை அவதானித்த தூரங்கணிக்கும் கருவியுடன் நின்ற போராளி எமது விசேட ஆயுத அணிப் பொறுப்பாளரான நாவண்ணன் அண்ணனைப் பார்த்து "... வேறையும் இரண்டு கற்பிட்டியிலிருந்து வருகுது.." எனக் கூற "இவையளிற்கு நிலைமை தெரியாது. இவையள் தான் எங்களிட்ட மாட்டுப்படுவினம்..""என்றார் நாவண்ணன்.

இப்போது நான்கு வோட்டர் ஜெற்களும் கடலில் நின்று சன்னதமாடின. கரைநோக்கி ஏதோ எம்மைக் கண்டுவிட்டது போன்று தொடர் 50 கலிபர் தாக்குதலை மேற்கொண்டு ஆர்ப்பரித்தன. சீறிவந்த இரண்டு ஜெற்களில் ஒன்று 50 கலிபரால் பொழிந்து முடிக்கவும் மற்றையது எம் கொலை வலையத்திற்குள் வந்து சேர "அடியடா மாங்குயில்... 600 மீட்டரில் விட்டு அடி.."என்ற கட்டளைகள் மின்னல் தெரிய முழக்கம் எழ வோட்டர் ஜெற்றின் கெவின் பகுதி வாய்பிளந்தது. தொடர்ந்து மணியத்தின் உதவியோடு மாங்குயில் குறிபார்த்துச் சுட்ட வேறு மூன்று எறிகணைகளும் ஜெற்றினைப் பதம் பார்க்க ஜெற் தன் இயக்கத்தை இழந்தது. ஜெற்றில் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைச் சிப்பாய்களில் இருவர் கடலில் பயாந்து நீந்த நால்வர் ஜெற்றின் கெவினோடு அழிந்து போயினர்.

இப்போது தொலைத் தொடர்பு சாதனத்தில் நாவண்ணன் அண்ணன் "..றோமியோ..றோமியோ.. எப்படி? நாம் சொன்ன மாதிரிச் செய்திட்டம்"... என வெற்றிச் செய்தியை தாக்குதல் நடவடிக்கைக்குப் பொறுப்பான ராகுலன் அண்ணனிற்கு அறிவித்தார். குண்டடிபட்டு செயலிழந்து போன வோட்டர் ஜெற் காற்றின் போக்கால் நாம் நிலையெடுத்திருந்த கரை நோக்கி ஒற்றிக் கொண்டிருக்க ஏனைய பகைக்கலங்கைள் சற்றுமே எதிர்பாராத இத் துணிகரத் தாக்குதலால் திகிலடைந்து ஆக்ரோசமான தாக்குதலை எம் மீது மேற்கொண்ட வண்ணமிருந்தன.

மறுமுனையில் எம் விசேட ஆயுதத்திற்கு ஆதரவாக பகைக்கலம் மீது 50 கலிபரால் குறிபார்த்த சூடுகளை வழங்கிக் கொண்டிருந்தான் கடற்புலிப் போராளி ஊக்கவீரன். இவனின் துல்லியமான தாக்குதலால் தாண்டவம் ஆடிய ஜெற்றில் ஒன்று பலத்த சேதம் அடைந்து பின்வாங்கியது.

கள நிலைமை இவ்வாறிருக்க கரையொற்றிவிட்ட ஜெற்றில் ஓடிச் சென்று பாய்ந்தேறிய அனுபவம் மிக்க இரு கடற்புலிப் போராளிகள் இதில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு 50 கலிபர் துப்பாக்கிகள், ஏகே எல்எம்ஜி -01 உட்பட, சிறு ரக துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள், வெடிபொருட்கள் உட்பட இதர இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றிக் கொண்டு வோட்டர் ஜெற்றிற்கு தீயிட்டு விட்டு கரை சேர்ந்தனர். எதிரியோ எறிகுண்டுத் தாக்குதலையும் சரமாரியான துப்பாக்கிச் சூடுகளையும் மழையெனப் பொழிந்த வண்ணமிருந்தான்.

திட்டமிட்டபடியே காத்திருந்து பகைவனைக் கவர்ந்திழுந்து எம் கொலை வலைக்குள் வீழ்த்தி வெற்றிகரமாக முடிக்கவென சபதமிட்டிருந்த போராளிகள் அனைவரும் வெற்றிப் பெருமிதத்தால் திழைத்திருந்தோம். சண்டையின் ஒரு கட்டத்தில் ஜெற்றில் இருந்து பாய்ந்து நீந்திக் கொண்டிருந்த சிப்பாய்கள் மீது 40 மிமீ டொங்கான் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் நாவண்ணன் அண்ணன் "டேய்..பொக்குள் வெடித்துச் சாவுங்கோடா.."என கத்திக் கத்தி தன்னிடமிருந்த ஆயதத்தால் எறிகுண்டுகளைச் சுட்டது எமக்கெல்லாம் வேடிக்கையாகவும் அவர் பகை மீது கொண்ட வெறுப்பையும் கோடிட்டுக் காட்டியது.

இவ்வாறாக வெற்றியை எமதாக்கிக் கொண்ட நாம் மதியம் 1:30 மணியளவில் இழப்புக்கள் ஏதுமின்றி கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்களுடன் பின்வாங்கி காட்டிற்குள் மறைந்து எமது பாதுகாப்பான இரகசிய மறைவிடம் ஒன்றை நோக்கி கால் நடையாகவே விரையலானோம். முதல் நாள் உண்ட உணவு, பருகிய நீர் என்பவற்றோடு காட்டு மிருகங்களின் பாதை வழியே நகர்ந்து கொண்டிருந்தோம். எம் நாக்கு நீரைக் கேட்கிறது ஆனால் தண்ணீர் கலன்கள் வெறுமையைத் தான் கொடுத்தன. வயிறு பசி என்ற பொழுதெல்லாம் மனது வெற்றியின் கனதியை உணவாகக் கொடுக்க கால்கடுக்க இடர்பாடு கொண்ட பாதைவழி நகர்ந்து இரவு 7:00 மணிக்கு பூக்குளத்து மறைவிடத்தை அடைய அங்கே வாசம் கிளம்பிய திருக்கை மீன் குழம்பும், சுடுசோறும் உணவாக இருந்தபோது யாவற்றையும் மறந்து உணவோடு சங்கமித்தோம்.</span>

செந்தமிழ்

நன்றி சூரியன்.com..!

Print this item