Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 257 online users.
» 0 Member(s) | 255 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,296
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,622
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,050
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,457
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  விரும்பப்படாத வீதி விபத்துக்கள்
Posted by: kuruvikal - 04-17-2004, 11:59 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

<img src='http://sooriyan.com/images/stories/jvp/acci.jpg' border='0' alt='user posted image'>

எல்லோருக்குமே ஓர் ஆசை அடிமனதில் நீறுபூத்த நெருப்பாக இருக்கின்றது. அது வேறொன்றுமல்ல. எனக்கு அகால மரணம் வந்துவிடக்கூடாது என்பதுதான் அந்தப் பிரார்த்தனை. இயற்கையாக நோய்வாய்ப்பட்டு இறப்பது என்பது வேறு. அநியாயமாகச் சாவைத் தழுவிக் கொள்வது வேறு. அதிலும் கோரச் சாவைத் தழுவிக் கொள்வது வாழ்க்கையில் எவருக்குமே வரக்கூடாத ஒன்று. ஆனால் நம் கையில்தான் எதுவும் இல்லையே. நம்மை மேலிருந்து ஆட்டுவிக்கும் அந்த இறைவனின் தீர்மானந்தான் நமது வாழக்கையின் நிகழ்வுகளாகின்றன.

சென்ற வாரம் அதாவது ஏப்ரல் மாதம் 7ந் திகதியன்று, உலகமெங்கும் உலக சுகாதார தினம் அனுஷ்டிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வருடம் உலக சுகாதார அமைப்பு, வீதி விபத்துக்கள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பி இருக்கின்றது. உலகெங்கும் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதும், அநியாயச் சாவுகள் இடம்பெறுவதும், இந்த அமைப்பின் கவனத்தை ஈர்த்தது காரணமாக, இந்தத் தினத்தை பாதுகாப்பாகத் தெருக்களில் பயணித்தலுக்காக ஒதுக்கி இருக்கின்றது.

இவர்கள் தரும் புள்ளி விபரங்களை நோக்கும்போது, வீதி விபத்துக்கள் எந்த அளவுக்கு நம் வாழ்க்கையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன என்பது தெளிவாகவே புரிகின்றது. <b>ஒவ்வொரு வருடமும் 1.2 மில்லியன் தொகையினர்</b>, வீதி விபத்துக்களால், உலகமெங்கும் கொல்லப்பட்டு வருகின்றார்களாம் என்ற தகவல் நமக்கு நிச்சயம் அதிர்சசியூட்டும் தகவல்தான். WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பும், உலக வங்கியும் இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இறந்தவர்கள் தொகையை விட, விபத்துக்களில் காயமடைந்தவர்கள் தொகை 50 மில்லியனாக இருக்கின்றது என்று சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள்.

இன்றைய நிலையில் இருதய அதிர்சசியினாலும், எயிட்ஸ் நோயின் தாக்கத்தினாலும் இறப்பவர்கள் தொகைதான் அதிகமாக இருக்கின்றது. ஆனால் இன்று விபத்துக்கள் இடம்பெறும் இந்த வேகம் தொடர்ந்தால், 2020ம் ஆண்டளவில், வீதி விபத்துக்களினால், இறப்பவர்கள் தொகைதான் முன்னிற்கப் போகின்றது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கின்றது

ஒவ்வொரு நாளும் வீதி விபத்துக்களில், 3000பேருக்கு மேற்பட்டவர்கள் இறப்பதாக இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இப்படி இறப்பவர்கள் அனேகமாக 15க்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட இளைய வயதினர்களாகவே இருப்பதாகவும் இந்த அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நாடுகள் எடுக்கத் தவறினால், அடுத்த 16 வருடங்களில், இத் தொகை 60வீதத்தால் அதிகரிக்கும் என்று இவர்கள் எச்சரிக்கவும் தவறவில்லை.

உலக நாடுகளில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவது எதனால் என்று ஒரு பட்டியல் இட்டதில். இருதய வியாதிதான் முதலிடத்தில் நிற்கின்றது. 12.6 வீதமானவர்கள், இருதய வியாதிகளுக்குப் பலியாகி வருகின்றார்கள். அடுத்தது இருதய அதிர்ச்சி. 9.6 வீதமானவர்கள் இப்படி இறக்கின்றார்கள். இதைத் தொடர்ந்து எயிட்ஸ், நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள், வயிற்றோட்டம், புற்றுநோய், மலேரியா, நீரழிவு போன்றனவற்றுடன், வீதி விபத்துக்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் 16 ஆண்டுகளில் இது பட்டியலில் வீதி விபத்துக்கள் மூன்றாவது இடத்தைப் பெற்றுவிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கின்றது.

மேற்குலக நாடுகளின் தெருக்கள்தான் இன்று உலகில் பாதுகாப்பானவைகளாக இருக்கின்றன என்கிறார்கள். இங்கு ஒவ்வொரு 100,000 பேரில் 11 பேர் வீதிவிபத்துக்கள் காரணமாகக் கொல்லப்பட்டு வருகின்றார்களாம். ஆனால் ஆபிரிக்க நாடுகளில் இதே தொகையில், இறப்பவர்கள் தொகை 28ஆக இருக்கின்றது.
உலகின் முதல் கார் விபத்து எப்பொழுது நடந்தது என்று அறிவீர்களா?
முதன்முதலாக கார் விபத்தில் இறந்த பெண்ணின் பெயர் Bridget Driscoll. இலண்டனில் Crystal Place என்ற தெருவில்,மணிக்கு 12கி.மீற்றர் வேகத்தில் ஓடிவந்த காரில் இவர் மோதி இறந்த காலம் ஆகஸ்ட் 17 ,1896 ஆகும்.

Ferrari, Lamborghini, Maserati என்ற பெயர்களில் வேகமாக ஒடக் கூடிய Sports Car களுக்கு இத்தாலி உலகப் பிரசித்தி பெற்றது. கண்மூடித்தனமாக காரை ஓட்டுபவர்களை அதிகமாகக் கொண்ட ஐரோப்பிய நாடும் இதுதான். வீதி ஒழுங்குகள் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. இங்கு தினமும் சராசரி 925 பேர் வீதிவிபத்துகளில் காயமடைந்து வருகின்றார்கள். தினமும் 18 பேர் வரையில் உயிரிழந்தும் வருகின்றார்கள் இந்த நிலையில் உலக சுகாதார தினத்தை, அதிகாரிகள் வீதிப் பாதுகாப்பு நாளாகப் பிரகடனம் செய்தார்கள். இந்த ஒரு நாளிலாவது விபத்துக்கள் ஏதும் நடக்கக் கூடாது என்பது இவர்கள் நப்பாசையாக இருந்தது.

ஆனால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.பொழுது விடிந்தபோது ஒரு மரணத்தோடுதான் விடிந்தது. இந்த நாளில் கொல்லப்பட்டவர்கள் தொகை 12 ஆகக் குறைந்ததேயொழிய, மரணத்தை இவர்களால் வீதிகளில் தடுக்க முடியவில்லை. ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், சுவீடன், ஒல்லாந்து போன்ற நாடுகளில், ஒவ்வொரு 100,000 பேரில் 5 தொடக்கம் 6பேர் வரையில்தான் இறக்கிறார்களாம். சராசரியாக ஐரோப்பிய நாடுகளில், 100,000 பேருக்கு 11 பேர் வரையில் இறந்தாலும், இத்தாலி மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றது.

2010ம் ஆண்டளவில் வீதி விபத்து மரணங்களை 50 வீதமாகக் குறைக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு இணங்க இத்தாலி, புது விதிமுறைகளை கடந்த வருடம் அறிமுகம் செய்தது. மக்கள் உடனடியாகவே எச்சரிக்கை உணர்வோடு நடக்க செயற்பட்டாலும், இது சொற்ப காலத்திற்குத்தான் தொடர்ந்தது. 3 மாதங்கள் கழிய, பழைய குருடீ கதவைத் திறவடி என்ற கதைதான்.

வீதியிலே விதி சிரிக்கவைக்கும் இந்த விபத்துக்கள் என்றுதான் குறையுமோ?


A.J.Gnanenthiran- sooriyan.com

Print this item

  விமான விபத்தில் நடிகை சௌந்தர்யா மரணம்...!
Posted by: kuruvikal - 04-17-2004, 11:34 AM - Forum: சினிமா - No Replies

<img src='http://thatstamil.com/images21/cinema/soundarya-375.jpg' border='0' alt='user posted image'>

விமான விபத்தில் நடிகை சௌந்தர்யா சாவு

பா.ஜ.கவுக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் பலியானார். உடன் சென்ற அவரது சகோதரர் அமர்நாத் உள்பட மேலும் இருவரும் பலியாயினர்.

கர்நாடகத்தைச் சேர்ந்த சௌந்தர்யாவுக்கு சமீபத்தில் தான் பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினியருடன் திருமணம் நடந்தது.

32 வயதான சௌந்தர்யா தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகும் மதுமதி உள்ளிட்ட தமிழ், கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக நடிகை, நடிகையர்கள் களமிறங்கியுள்ள நிலையில் சௌந்தர்யாவும் சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்தார். அக் கட்சிக்காக கர்நாடகத்தில் தீவிரப் பிரச்சாரம் செய்து வந்தார். நேற்று பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

இந் நிலையில் ஆந்திர மாநிலம் கரீம்நகரில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதற்காக இன்று காலை பெங்களூரில் இருந்து 4 பேர் அமர்ந்து செல்லக்கூடிய செஸ்னா 180 ரக சிறிய விமானத்தில் கிளம்பினார். உடன் அவரது சகோதரர் அமர்நாத் மற்றும் பா.ஜ.க. நிர்வாகி ஒருவரும் சென்றனர்.

<img src='http://thatstamil.com/images21/cinema/flight-225.jpg' border='0' alt='user posted image'>
சுக்குநூறாய் சிதறிக் கிடக்கும் செஸ்னா விமானம்

அக்னி ஏவியேசன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த விமானத்தை பா.ஜ.க. வாடகைக்கு எடுத்திருந்தது.
காலை பெங்களூர் புறநகரில் உள்ள ஜக்கூர் ராணுவ விமான தளத்தில் இருந்து அந்த விமானம் ஆந்திராவுக்குப் புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளில் அதில் தீப் பிடித்துக் கொண்டது.

இதையடுத்து மிக வேகமாகத் தரையில் மோதி விமானம் வெடித்துச் சிதறியது. விமான தளத்துக்குள்ளேயே அந்த விபத்து நடந்தது. இதில் சௌந்தர்யா, அமர்நாத், விமானி ஜாய் பிலிப்ஸ், ரமேஷ் சதன் என்ற பா.ஜ.க பிரமுகர் ஆகிய நால்வரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

நான்கு பேரின் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து, சிதைந்து போய்விட்டதாக கர்நாடக காவல்துறை டிஜிபி மடியாள் தெரிவித்துள்ளர்.

விமானமும் சுக்குநூறாகிப் போனது. தரையில் மோதிய வேகத்தின் அதன் கதவு 15 அடி தூரத்தில் பிய்ந்து போய் விழுந்தது.

ரஜினியுடன் படையப்பாவில் நடித்து தமிழில் பிரபலமான சௌந்தர்யா, தனது சொந்த மொழியான கன்னடத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். கார்த்திக்குடன் பொன்னுமணி, விஜய்காந்துடன் தவசி, சொக்கத்தங்கம், ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா, கமலுடன் காதலா.. காதலா.., பார்த்திபனுடன் இவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மதுமதி என்ற மாயாஜால படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

மொத்தம் நான்கு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தயாரித்த 'துவீபா' என்ற கன்னட படம் கடந்த ஆண்டு தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்து அறிந்தவுடன் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அனந்த்குமார் ஆகியோர் பிரச்சாரப் பணிகளை நிறுத்திவிட்டு சம்பவம் நடந்த விமான தளத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

<img src='http://thatstamil.com/images21/cinema/cessna-325.jpg' border='0' alt='user posted image'>

Cessna-180 single engine aircraft


thatstamil.com

Print this item

  நடிகை சவுந்தர்யா மரணம்
Posted by: Paranee - 04-17-2004, 08:47 AM - Forum: சினிமா - Replies (3)

ஹெலிகொப்டர் விபத்தில் நடிகை சவுந்தர்யா மரணம்.

<img src='http://www.thatstamil.com/images21/cinema/soundarya-375.jpg' border='0' alt='user posted image'>

http://www.thatstamil.com/news/2004/04/17/.../soundarya.html

Print this item

  தமிழீழ வரலாறில் பதியப்பட்ட ஒரு சில நாட்கள்..........
Posted by: கெளஷிகன் - 04-16-2004, 01:37 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தமிழினப் படுகொலை ஆரம்பம்:

22.05.1958 அன்று ஒரு தொடரூந்தில் பயணம் செய்துகொண்டிருந்த 500ற்கும் மேற்பட்ட தமிழர்களை சிங்களக் காடையர்கள் தாக்கி இனக்கலவரத்தை ஆரம்பித்தனர். அப்போதைய சிறீலங்காப் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்காவினது குண்டர்களாலும், சிங்களக் காவல்துறையினராலும் தமிழர்களது வீடுகள், உடமைகள் யாவும் அழிக்கப்பட்டன. 300 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


-- வல்வெட்டித்துறைப் படு கொலை:

09.05.1985 அன்று வல்வெட்டித்துறை நகர்பகுதியை சுற்றிவளைத்த சிறீலங்காப் படையினர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 50 பொதுமக்கள், பொது நூல் நிலையத்தினுள் அடைத்துவைக்கப்பட்டு குண்டுவைத்துக் கொல்லப்பட்டனர். தெருக்களில் வைத்தும் பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர். எல்லாமாக 90 பொதுமக்கள் ஜே.ஆரின் ஆயுதப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.


-- தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று பெயர் சூட்டப்பட்ட நாள்:

1972ம் ஆண்டில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களினால் 'தமிழ்ப் புதிய புலிகள்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வந்த புலிகள் இயக்கம் 'தமிழீழ விடுதலைப் புலிகள்' எனப் பெயர் மாற்றம் பெற்று இயங்கத் தொடங்கிய நாள் 05.05.1976 ஆகும்.


-- சிங்களப் படை அதிகாரி மேஜர் சிறிலால் மெண்டிஸ் பலி:

12.05.1985 அன்று உடுப்பிட்டி பேரூந்து நிலையத்தினுள் தமிழின அழிப்பிற்கென தயாராக இருந்த சிங்களப்படையினர். மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எறிகுண்டுத் தாக்குதலில் மேஜர் சிறிலால் மெண்டிஸ் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர்.


-- இரகசியப் பொலிசார் அழிப்பு:

தேசத் துரோகி துரையப்பா அழிக்கப்பட்டது தொடர்பாக பல விடயங்களைச் சேகரித்து வந்ததோடு பல காட்டிக்கொடுப்புகளிலும்


-- வவுனியாவில் இந்தியச் சிறையுடைப்பு:

01.05.1989 அன்று வவுனியாவில் இருந்த இந்தியப் படையினரின் சிறையை உடைத்து அங்கிருந்த போராளிகளும் பொதுமக்களுமாக 42 பேர் தப்பினர். இச்சிறையுடைப்பு நடவடிக்கையில் இரு போராளிகள் உட்பட நான்கு தேசத்தின் புதல்வர்கள் வீரச்சாவடைந்தனர்.


-- அபித்தா கப்பல் தகர்ப்பு:

கடலில் பல போராளிகளினது அழிவுக்கும் பல பொதுமக்களது அவல இறப்பிற்கும் காரணமாக இருந்த அபித்தா கட்டளைக் கப்பல் 04.05.1991 அன்று கடற் கரும்புலிகள் கப்டன் ஜெயந்தனாலும், கப்டன் சிதம்பரத்தாலும் அழிக்கப்பட்டது.


-- இந்தியப் பிரதமர் ராஜீவ காந்தி கொல்லப்பட்டார்:

இந்திய அமைதிப் படையை தமிழீழத்திற்கு அனுப்பி, 8000 தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இந்தியப்பிரதமர் ராஜீவ காந்தி 21.05.1991 அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். இவரால் அனுப்பிவைக்கப்பட்ட படைகளால் தமிழீழத்தின் பல கோடிப் பெறுமானமுள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்.


-- தமிழீழ வைப்பகம் ஆரம்பம்:

23.05.1994 அன்று தமிழீழ நிர்வாகக் கட்டமைப்புகளில், ஒன்றான தமிழீழ வைப்பகம் திறந்துவைக்கப்பட்டது.


-- யாழ். நூலகம் எரிக்கப்பட்டநாள்:

மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலுக்கென வந்திருந்த அமைச்சர்களான காமினி திசநாயக்கா மற்றும் சிறில் மத்தியு முதலானவர்கள் தலைமையிலான சிங்களக் காடையர்களால் தமிழ் மக்களின் பண்பாட்டு அறிவுப்பெட்டகம் 31.05.1981 அன்று தீமூட்டி எரிக்கப்பட்டது. தென்னாசியாவிலேயே அதிக நூல்களைக் கொண்டதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பண்டைய நூல்களையும் ஏட்டுச் சுவடிகளையும் கொண்ட அழகிய அரிய கலைக்கருவூலத்தை சிங்களக் காடையர்கள் எரியூட்டி சிங்களத்தின் எண்ணம் தமிழின அழிப்பு ஒன்றையே நோக்காகக் கொண்டது என்பதை புலப்படுத்தினர்.


-- கந்தர் மடம் வாக்குச்சாவடித் தாக்குதல்:

18.05.1985 அன்று நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலின் போது கந்தர்மடம் தேர்தல் சாவடியில் காவலில் பொலிசார் மீதும் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட 10 நிமிட அதிரடித் தாக்குதலில் இராணுவக் கோப்ரல் ஜெயவர்த்தனா கொல்லப்பட்டான். ஒரு இராணுவக் கோப்ரலும், 2 பொலிசாரும் காயமுற்றனர்.


-- லெப்டினன் சீலனைக் காட்டிக்கொடுத்த பொலிஸ் அதிகாரி அழிப்பு:

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதலணித் தளபதியான லெப்டினன் சீலனின் மறைவிற்குக் காரணமாக விளங்கிய இனத்துரோகி பொன்னையா சுப்பிரமணியம் 04.05.1984 அன்று மீசாலையில் வைத்து விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டான்.


-- ஓயாத அலைகள்-03 மே மாதத்தில் நகர்ந்த பாதை:

10.05..2000 அன்று நாவற்குழிப் பாலம் மீட்கப்பட்டது. 11.05.2000 அன்று தென்மராட்சிக் கோட்டத்தில் கோயிலாக்கண்டி தனங்கிளப்பு படைத்தளங்கள் கைப்பற்றப்பட்டன. யாழ். மாநகரை நோக்கிய நகர்வில் அரியாலைப் பிரதேசம், கொழும்புத்துறை இறங்குதுறைப் பகுதி கைப்பற்றப்பட்டது. 16.05.2000 அன்று தச்சன்தோப்பு நாவற்குழிப் பகுதி படைமுகாம்கள் தகர்க்கப்பட்டன. ஓயாத அலைகள் -03 படையணிகளால் கைதடிச்சந்தியில் அமைந்திருந்த இராணுவத்தளம் விடுவிக்கப்பட்டது. 20.05.2000 ஓயாத அலைகள் -03 படையணிகளால் தென்மராட்சியின் தலைநகர் சாவகச்சேரி மீட்கப்பட்டது.


-- மன்னார் பொலிஸ் நிலையத் தகர்ப்பு:

10.05.1985 தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலணிகளால் மன்னார் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது. வெற்றிகரமாக நடந்து முடிந்த இத்தாக்குதலின்போது, மன்னார் பொலிஸ் நிலையத்தின் 7 கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பல பொலிசார் கொல்லப்பட்டனர்.



thanks- akilan

Print this item

  சந்திரிக்காவும் சமாதானமும்...!
Posted by: kuruvikal - 04-16-2004, 12:36 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<img src='http://sooriyan.com/images/stories/chandrika03.jpg' border='0' alt='user posted image'>

[size=14]கடந்த இரு தசாப்த காலத்துள் நடந்த எல்லாத் தேர்தல்களிலும் தேர்தல் முடிந்த கையோடு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாத ஒரே தேர்தல் நடந்து முடிந்த தேர்தல்தான்.

யுத்த காலங்களில தேர்தல் என்றாலே வாக்குகளுக்குப் பதிலாகக் குண்டுகள்தான் எண்ணப்படும். அல்லது பிணங்கள் எண்ணப்படும். ஆனால் இம்முறை அப்படி எதுவும் நடக்கவில்லை.

இதற்குக் காரணம் சிங்கள அரசியல்வாதிகள் திடீரென்று கூர்ப்படைந்து விட்டார்கள் என்பதோ அல்லது அவர்களுடைய அபிமானிகள் திடீரென்று மனந்திருந்தி விட்டார்கள் என்பதோ அல்ல.

மாறாக நிலவும் யுத்த நிறுத்தத்தின் விளைவே இது. ஒரு விதத்தில் இந்தத்தேர்தலே யுத்த நிறுத்தத்தின் விளைவுதான். எவ்வாறெனில், யுத்தநிறுத்தத்தைக் கொண்டுவந்து ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்குச் சலுகைகள் செய்து விட்டார் என்று குற்றம் சாட்டியே அவருடைய அரசாங்கம் கலைக்கப்பட்டது. அதன் விளைவே இந்தத் தேர்தல்.

அதேசமயம் யுத்த நிறுத்தம் நீடித்திருப்பதால்தான். இத்தேர்தலை மிகவும் அமைதியாகவும், ஆறுதலாகவும், பயமின்றியும் நடாத்த முடிந்திருக்கிறது.

இது ஒன்றைக்காட்டுகிறது. தமிழர்களுக்கு அமைதி இல்லை என்றால் சிங்களவர்களுக்குக்கும் அமைதி இல்லை. தமிழர்களுக்கு நிம்மதி இல்லை என்றால் சிங்களவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது.

ஆனால் இந்தத் தவிர்க்கப்படவியலாத யதார்த்தம். நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கப்படவில்லை என்பதே இங்குள்ள பயங்கரம்.

அதிகமதிகம் இனமுரண்பாடுகளை மிகக்கூர்மையாக வெளிப்படுத்திய ஒரு தேர்தல் இது.

தமிழர்கள் எதற்காக வாக்களித்தார்களோ பெருமளவிற்கு அதற்கெதிராகவே சிங்களவர்கள் வாக்களித்திருக்கின்றார்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் தமக்கேயான நலன்களை முதன்மைப்படுத்தி வாக்களித்திருக்கிறார்கள். இதைசற்று விரிவாகப் பார்ப்போம்.

தமிழர்கள் தமது போராட்ட இலக்குகளுக்காகவும், அவற்றை அடைவதற்கான ஒரு ஊடகம் என்ற வகையில் சமாதானத்துக்காவும் வாக்களித்திருக்கிறார். வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்கள் பெருமளவிற்கு ரணிலுக்கு வாக்களித்தது என்பத அவர் சமாதானத்தின் பக்கம் நிற்பதால்த்தான்.

முஸ்லிம்கள் ரணிலை ஆதரித்திருப்பது என்பது ஒரு வர்த்தக சமூகம் என்ற வகையில் சமாதானத்தின் நன்மைகளை அனுபவிப்பதற்காகத்தான்.

ஆனால் சிங்களவர்களோ, ரணிலுடைய சமாதான முயற்சிகளை நிராகரித்திருக்கிறார்கள். யுத்த நிறுத்தத்தைக்கொண்டு வந்து அவர் புலிகளுக்கு ரகசியமாக எதையோ கொடுத்துவிட்டார் என்று சந்திரிகா கிளப்பிய ஜயங்களையும், பயங்களையும் அப்படியே விழுங்கி ரணிலைத் தோற்கடித்து விட்டார்கள்.

ரணிலுக்குக் கிடைத்த தோல்வி எனப்படுவது அவர் செய்த சமாதானத்திற்கு கிடைத்த தோல்வியும்தான்.

ரணிலை அவர்கள் தோற்கடித்ததைவிடவும் பயங்கரமான மற்றொரு விசயம் ஹெல உறுமயவுக்கு அவர்கள் கொடுத்த வெற்றிதான். இது இரண்டு பிரதான கட்சிகளின் மீதும் அவர்கள் சலிப்புற்றதின் விளைவாகவும் இருக்கலாம். ஆனால் இப்பத்தியில் சிலவாரங்களுக்கு முன்பு கூறப்பட்டதைப்போல அதி தீவிர, மதவாதசக்திகள் மூன்றாவது அணியாக எழுச்சிபெற்றவிட்டன.

இத்தகைய சக்திகள் பேரம் பேசும் பலத்தோடு நாடாளுமன்றத்துக்கு வந்திருப்பது என்பது சமாதானத்தின் வழியில் தோன்றியிருக்கும். ஒரு புதிய துர்க்குறியே. எனவே தேர்தல் முடிவுகளின்படி நாம் பின்வரும் ஏதோ ஒரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

முதலாவது, கடந்த இரு தசாப்தகால யுத்தத்திலிருந்து பெரும்பாலான சிங்கள வெகுசனம் எத்தகைய ஒரு பாடத்தையும் கற்றிருக்கவில்லை என்பது.

இரண்டாவது, அவர்களுக்கு மறதி மிக அதிகம் என்பது.

மூன்றாவது, பௌத்தத்தை மிகவும் தவறாகப்புரிந்து வைத்திருப்பதைப்போல சமாதானத்தையும் மிகத்தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது.

நாலாவது, அவர்கள் மிக மோசமாகக் குழம்பிப்போய் இருக்கிறார்கள் என்பது.

இது எது சரி? ஒவ்வொன்றும் அதற்கேயுரிய விகிதங்களில் சரிதான். இப்பத்தியில் ஏற்கனவே கூறப்பட்டபடி சிங்கள வெகுசனத்தை மிகவும் குழப்பிய ஒரு தேர்தல் இது. ஒருபுறம் அவர்கள் ரணிலைத் தோற்கடித்திருக்கின்றார்கள். இன்னொருபுறம் அவர்கள் சந்திரிகாவுக்கும் பெருவெற்றியை கொடுக்கவில்லை.

அதேசமயம் இரண்டு பெருங்கட்சிகளுக்கு வெளியே ஒரு மூன்றாவது அணியை அவர்கள் தேடியிருக்கிறார்கள்.

கொழும்பில் இருக்கும், அரசியல் ஆய்வாளர் றொகான் எதிரிசிங்க கூறுகிறார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு Charisma - ஜனவசியம் குறைவு என்று. இதைத்தவிர, நகர்புறச்சிங்களப் பெருமுதலாளிகளைத் திருப்திப்படுத்திய அளவுக்கு நாட்டுப் புறச்சிங்களவர்களையும், சிறு முதலாளிகளையும் குறிப்பாக விவசாயிகளையும் அவர் திருப்திப்படுத்தத் தவறிவிட்டார் என்றும் கூறப்படுகின்றது.

ரணிலைவிடவும் சந்திரிகா ஜனவசியம் மிக்கவர் என்று றொகான் எதிரிசிங்க கூறுகிறார். சந்திரிகாவைப் போலன்றி ரணில் அமைதியானவர், பெரிய பெரிய இலட்சியங்களைக் கதைப்பதில்லை. அதோடு சாதாரண சனங்களை நெருங்கிச்சென்று உறவாட முடியாதவர் என்றும் அவர் கூறுகிறார்.

மெய்தான், ரணிலுடைய துருத்திக்கொண்டு தெரியாத, காட்டூணிஸ்ட்களுக்கு சோதனையாக அமைந்துவிட்ட மிகச்சாதாரண முகம். மற்றும் கவர்ச்சியும் மிடுக்கும் குறைந்த குரல், நடை உடை பாவணை போன்றவற்றை வைத்துக் கூறுமிடத்து றொகான் எதிரிசிங்க நம்புவதுபோல ரணில் விக்கிரமசிங்க ஜனவசியம் குறைந்தவராக இருக்கலாம்தான்.

சந்திரிகாவைப் போல பொய் சொல்லவோ அல்லது குழம்பிக்கதைக்கவோ அல்லது தருண மறிந்து மன்னிப்புக் கேட்கவோ அல்லது கிராமிய வளக்கில் சொன்னால், மாய்மாலம் கொட்டவோ ரணிலால் முடியாதுதான். ஆனால் ரணிலின் மிகப்பெரிய கவர்ச்சி அவருடைய கண்ணுமல்ல, மூக்குமல்ல, குரலுமல்ல, நடையுமல்ல மாறாக அவர் சமாதானத்தின் நண்பனாகத் தோன்றியதுதான். என்பதனாலேயே தனக்கு வெற்றி நிச்சயம் என்று அவர் நம்பினார்.

இப்பத்தியிலும் கூட முன்பு சில தடவைகள் சமாதானத்தின் பெயரால் ரணில், வெல்லக்கூடும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் சிங்கள வெகுசனங்களின் தீர்போ வேறு விதமாய் அமைந்துவிட்டது ஆயின் எங்கே பிசகியது?

முதலாவதாக ஒன்றைச் சொல்ல வேண்டும். ரணில் சமாதானத்தின் நண்பன் போலத்தோன்றினவரே தவிர, அவரும் கூட மெய்யாகவே சமாதானத்துக்கு விசுவாசமாயிருக்கவில்லை.

அவர் சமாதானத்தை வர்த்தக மயப்படுத்துவதில் காட்டியளவு அக்கறையை சமாதானத்தை மக்கள் மயப்படுத்துவதில் காட்டியிருக்கவில்லை.

சுமார் இருதசாப்த காலமாக யுத்தம் மக்கள் மயப்பட்டுவரும் ஒரு நாட்டில் இரண்டே இரண்டு ஆண்டுகளில் சமாதானத்தை மக்கள் மயப்படுத்துவது என்பது யாரும் மந்திரவாதிகளால்தான் முடியும்.

ஆயினும் அப்படிச் சமாதானத்தை மக்கள் மயப்படுத்தும் திட்டம் எதுவும் ரணிலிடம் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர் சமாதானத்தை விசுவாசமாக இருந்ததைவிடவும் தனது மேற்கத்தைய எஜமானர்களுக்கும், தனது கட்சியின் பிரகாசமான எதிர்காலத்துக்கும் குறிப்பாக தனது தனிப்பட்ட எழுச்சிக்குமே விசுவாசமாகக் காணப்பட்டார்.

மேலும் இரண்டாண்டுகளுக்குப் பேச்சு வார்த்தைகளை இழுத்திழுத்துக்கொண்டு வந்து முடிவில் சமாதானத்தின் பெயரால் சனாதிபதிக்கும் ஒருகனவே அவரிடம் இருந்தது. அவரைப் பொறுத்தவரை சமாதானம் எனப்படுவது அதிகபட்சம், எதிர்காலத்தில் சனாதிபதியாக வருவதற்குரிய ஒர் ஏணியே. எனவே விசுவாசம் இன்றி சமாதானம் செய்த அவருடைய அரசாங்கத்தால் அதை மக்கள் மயப்படுத்த முடியாமற் போனது தவிரக்க முடியாததே.

இப்பொழுது அவர் தனது தோல்விகளுக்கு தனது கட்சியின் ஊடகப்பிரிவைக் குறைகூறுகிறார். 96 கோடி ரூபாய் செலவழித்து S.L.F.E மீதும் J.V.P மீதும் சேறு பூசுவதில் காட்டப்பட்டுள்ள தீவிரம் கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்குக் காட்டப்படவில்லை என்று இப்பொழுது கூறப்படுகின்றது.

அதாவது, அவர்களிடம் சமாதானத்தை வெகுசன மயப்படுத்தும் நடைமுறைச் சாத்தியாமான திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. இதை இன்னும் திருத்தமாகச் சொன்னால் சமாதானத்தைக் குறித்த தரிசனம் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை. யுத்தத்தை ஒத்திவைப்பதைத்தான் அவர்கள் சமாதானம் என்றுகாட்டவிரும்பினார்கள் போலும்.

எனவே சமாதானத்தை நோக்கி சனங்களை வசியம் செய்ய அவர்களால் முடியாது போயிற்று. இதனால் சந்திரிகா J.V.P கூட்டு சனங்களை வெற்றிகரமாகக் குழப்ப முடிந்தது. இதன் விளைவே ரணிலுக்குக்கிடைத்த தோல்வி.

இப்பொழுது சமாதானம் சந்திரிகாவின் கையில் - எதைச் சாட்டாக வைத்து ரணிலின் ஆட்சியைக் கவிழ்த்தாரோ அதை - சமாதானத்தை - அவர் இப்பொழுது பொறுப்பெடுக்கவேண்டிய ஒருநிலை. உண்மையில் அவர் எதிர்த்தது ரணிலைப்பலப்படுத்தும் ஒரு சமாதானத்தையே. எனவே இனி அவர் தன்னைப்பலப்படுத்தும் ஒரு சமாதானத்துக்கு வரக்கூடும்.

ஒரு ஸ்திரமான ஆட்சியை உருவாக்க முடியுமானால் அவர் சமாதானத்துக்கு வரக்கூடும் அல்லது ஒரு ஸ்திரமான ஆட்சியை உருவாக்குவதற்காகவும் அவர் சமாதானத்துக்கு வரகூடும். அப்படிவந்தால் சில சமயம் ரணிலைவிடவும் ஸ்திரமாக அவரால் சமாதானம் செய்யக் கூடியதாக இருக்கும். ஏனெனில் கொழும்பில் இப்பொழுது ஒரு அதிகாரமையம் தான் இருக்கிறது. அதோடு ரணில், சமாதானத்தின் வழியில் குறுக்கேநிற்கும் வாய்ப்புகளும் குறைவு. ஏனெனில் அவர் சமாதானத்தை வாக்களித்தே தேர்தலில் நின்றார்.

ஆனால் வெற்றிகரமாகச் சமாதானம் செய்வதென்றால் சந்திரிகா உடனடியாக இரண்டு தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கும்.

முதலாவது, புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்வது. அதாவது நடந்து முடிந்த தேர்தலில் தமிழர்கள் வழங்கிய தீர்ப்பை மதித்து நடப்பது. இதிலும் குறிப்பாக மதித்து நடப்பது. இதிலும் குறிப்பாக புலிகளின் உட்கட்சிப் பூசலில் தலையிடாதிருப்பது.

மற்றது J.V.P யையும் கூட்டாளியாக வைத்துக்கொண்டு அமெரிக்காவை நெருங்கிச்செல்வது.

இந்த இரண்டையும் அவர் செய்யமாட்டார் என்பதற்கில்லை. ஏனெனில் தனது கணவரைக் கொன்ற J.V.Pயுடன் அவர் கூட்டுச் சேரமுடியுமென்றால், புலிகளுடன் சமாதானம் செய்யமுடியாதென்றில்லை அல்லது அமெரிக்காவை நெருங்கிவர முடியாதென்றுமில்லை.

அவரைப் பலப்படுத்தும் ஒரு சமாதானத்துக்காக அவர் எதையும் செய்யார். யாரோடும் கூட்டுச்சேர்வார். சில சமயம் அந்தச் சமாதானத்துக்காக முன்பு ஒருமுறை செய்தது போல யுத்தமும் செய்யக்கூடிய ஆள் அவர்.

[Image: vote1.bmp]

நிலாந்தன் ஈழநாதம்.


நன்றி சூரியன் டொட் கொம்.

Print this item

  சுவிஸில் இலங்கைத் தமிழர் பலி
Posted by: Mathan - 04-16-2004, 08:19 AM - Forum: புலம் - Replies (14)

சுவிஸில் இலங்கைத் தமிழர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலி

சுவிற்சர்லாந்து நாட்டில் லங்சான் என்ற நகரத்தில் இலங்கைத் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த 38 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது:-

கணவருக்கும் மனைவிக்கும் இடையில் கடந்த திங்கள் இரவு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி தொலைபேசி அழைப்பின் மூலம் பொலிசுக்கு முறையிட்டு பொலிஸாரை வரவழைத்துள்ளார்.

பொலிஸார் வீட்டுக்குள் நுழைந்ததும் கணவன் சமையலறைக்குள் சென்று கத்தியை எடுத்துச் சென்று பொலிஸாரைக் குத்தியுள்ளார். இதில் ஒரு பொலிஸ்காரர் காயமடைந்தார். அடுத்த பொலிஸாரை நோக்கி கத்தியுடன் செல்கையில் அந்தப் பொலிஸ்காரர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் குறித்த நபர் அந்த இடத்திலேயே பலியானார்.

இறந்தவர் 8 வயது, 6 வயது, 4 மாதக் குழந்தைகளின் தந்தையாவார். அவரது மனைவி 25 வயதுடைய இளம் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

நன்றி - வீரகேசரி

Print this item

  ஈழத்தமிழர்களின் பலமும் பலவீனமும்
Posted by: Mathan - 04-15-2004, 11:57 PM - Forum: தமிழ் /தமிழர் - No Replies

<span style='font-size:21pt;line-height:100%'>ஈழத்தமிழர்கள் எதிலும் சற்று நின்று நிதானித்து சற்று ஆறுதலாகவே முடிவெடுப்பார்கள்.அவர்களின் பலமும் பலவீனமும் அதில்தான். அது ஆயுதப்போராட்டமாகவிருந்தாலென்ன எழுத்துச்சீர்திருத்தமாகவிருந்தாலென்ன.. உடனடியாக எடுத்தேன் கவிழ்த்தேன் என இறங்கமாட்டார்கள். எம்.ஜி.ஆர் எழுத்துசீர்திருத்தத்தை அறிவித்தபோது உடனடியாக அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பல முக்கல் முனகல்களுக்குப்பிறகுதான் கன்னித்தமிழ் கழியாமலிருப்பதற்காக ஏற்றுக்கொண்டார்கள்.

இதேபோல அவரவர் அது இது பின்னர் தப் திஸ்கி என மாறியபோதும் இவர்கள் மாறாமல் பாமினி
எழுத்துருவை வைத்தே வித்தை காட்டிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது சொல்லிவைத்தாற்போல் பல ஈழத்தமிழர்களது தளங்கள் யூனிக்கோட்டை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.</span>

இது இந்திய தமிழர் ஒருவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி. உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்

Print this item

  தமிழ் அகராதி இணையத்தில்
Posted by: Paranee - 04-15-2004, 02:31 PM - Forum: இணையம் - Replies (1)

தமிழ் அகராதி இணையத்தில்

நன்றி . யாரோ


http://www.kstarsoft.com/download_t.htm

Print this item

  மழலைகளும்...சினிமாவும்...பெற்றோரும்...குறைபாடு யாருடையது..?!
Posted by: kuruvikal - 04-14-2004, 03:37 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

[Image: thiru.bmp]

"..... மக்களுக்கு பிடித்திருக்க வேண்டுமென்பதற்காக, மக்களுக்குப் பிடித்தமானவையென்று வர்ணிக்கப்படுகின்ற கீழ்த்தரமான காரியங்களை மனங் கூசாமல் நாம் செய்ய முடியுமா? எல்லோரும் அணிகிறார்கள் என்று எல்லோருக்குமே தெரியும் என்பதற்காக கோவணத்துண்டுகளை 'கோலிங் பெல்லுக்கு' அருகே யாரும் கொழுவுவதில்லையே!..... "
தனியார் தொலைக்காட்சி சேவையொன்றில் அண்மையில் சின்னஞ் சிறுசுகளுக்கான வாராந்த நிகழ்ச்சியொன்றை தற்செயலாகப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.

நிகழ்ச்சியை நடத்தும் சிறுமியுடன் தொலைபேசி மூலமாக சின்னஞ் சிறுசுகள் தொடர்பு கொண்டு உரையாடி தங்கள்; கல்வி மற்றும் பொழுது போக்குகள் எனப் பலவாறான விடயங்களையெல்லாம் பற்றி சுவாராஸ்யமாகப் பேசியதைக் கேட்கவும் பார்க்கவும் மனதுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. சிறுவர்கள் எழுதியனுப்பிய கடிதங்களையெல்லாம் வாசித்துக் காட்டிய அச் சிறுமி அவர்கள் வரைந்து அனுப்பிய ஓவியங்களையெல்லாம் காண்பித்தார்.

இடையில் இரு மழலைகள் மிகவும் விரசமான தென்னிந்திய சினிமாப் பாடல் ஒன்று பின்னணியில் ஒலிக்க நடனமாடிய நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. அந்தப் பாடல் 'காதல்..." என்று தான் ஆரம்பிக்கிறது. ஆனால், அப்பாடலுக்கு ஆடிய சிறுவனுக்கும் சிறுமிக்கும் 5 வயது கூட ஆகாது என்று நினைக்கிறேன்.

சினிமாவில் காதலன், காதலி டூயட் பாடுவது போன்றே அந்த நிகழ்ச்சி.

இதுமட்டுமல்ல. வேறு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலே 'மன்மதராசா...மன்மதராசா...', சின்னவீடு பிடிக்குமா.....பெரியவீடு..பிடிக்குமா' போன்ற மிகவும் விரசம் ததும்பும் பாடல்களுக்கும் கூட மழலைகளை ஆட வைத்து ரசிக்கின்றார்கள். அந்த மழலைகளுக்கு மன்மதராசாவையும் யாரென்று தெரியாது.

சின்ன வீடு பெரிய வீடு என்றால் என்ன சமாச்சாரம் என்றும் புரியாது. என்ன விளங்குதோ இல்லையோ ஆடிக் குதிக்கின்றார்கள். பெற்றோர்களும் அதைப் பார்த்து குதூகலித்துப் போகிறார்கள்.

அன்றொருநாள், இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையில் காலை 7 மணிக்கும் நண்பகல் 12.45 மணிக்கும் இடையில் 'மன்மதராசா...' பாடல் ஜந்து தடவைகள் வேறுவேறு நிகழ்ச்சிகளில் ஒலிப்பரப்பானதாக நண்பர் ஒருவர் கூறி வேதனைப்பட்டார். அவரும் ஜந்து தடவைகளும் அந்த மன்மதராசாவைக் கேட்டுத்தான் இருக்க வேண்டும். அல்லது சரியாக எப்படி ஜந்து தடவைகள் என்று கணக்குச் சொல்ல முடியும்.?

இந்தப் பாடல்கள் எல்லாம் போதாதென்று, மன்மதராசாவின் மெட்டிலேயே 'போடு போடு....' பாடலும் தாய்த் தமிழகத்தில் இருந்து எம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. 'பொத்து....பொத்து...' என்றும் ஒரு பாடல். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இந்த அநியாயத்தை.

மன்மதராசா பாடல் ஜனரஞ்சகமாகி விட்டதால் அடிக்கடி போட வேண்டியிருக்கிறது என்று தனியார் ஒலிபரப்புச் சேவையொன்றின் அதிகாரியொருவர் சொன்னார். இத்தகைய விரசமான பாடல்கள் என்றால் ஜனரஞ்சகமானவையாகி விட்டனவா? அல்லது ஜனரஞ்சகமானவையாக்கப்பட்டு விட்டனவா?

மக்களுக்கு பிடித்திருக்க வேண்டுமென்பதற்காக, மக்களுக்குப் பிடித்தமானவையென்று வர்ணிக்கப்படுகின்ற கீழ்த்தரமான காரியங்களை மனங் கூசாமல் நாம் செய்ய முடியுமா? எல்லோரும் அணிகிறார்கள் என்று எல்லோருக்குமே தெரியும் என்பதற்காக கோவணத்துண்டுகளை 'கோலிங் பெல்லுக்கு' அருகே யாரும் கொழுவுவதில்லையே!

புதிய மனிதனை உருவாக்க புதிய ரசனையையும் உருவாக்க வேண்டும். இது எடுத்த எடுப்பில் செய்யப்படக்கூடியதுமல்ல: படிப்படியாகச் செய்யப்பட வேண்டும்.

ஆனால் நமது தொலைக்காட்சி சேவைகளும் வானொலிகளும் ஊடகங்களும் என்ன செய்கின்றன. மழலைகளையெல்லாம் மன்மதராசாக்களாக்குகின்றன.

ஏற்கனவே சமுதாயத்தில் பல பண்புச் சீரழிவுகள். இதற்கிடையே மழலைகளும் மன்மதராசாக்களாகி விட்டால் நாம் எங்கே போய் முடியப் போகின்றோம்.

அண்ணாவியார்.

sooriyan.com.....!

-------------------------------

<span style='font-size:21pt;line-height:100%'>உந்த மன்மதராசாவில பாடல் வரிகளில் விரசம் இருக்கோ இல்லையோ.....பொழுதுபோக்கிற்குப் பாக்கக்கூடிய சினிமா டான்ஸ் இருக்கு....!

ஆனா கொழும்பு வீதிகளிலும் பஸ்ராண்டுகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அவற்றிற்கு அருகிலும்...பஸ்ஸுகளிலும்...மேற்கில பெரும்பாலான இடங்களிலும்...மன்மதராசாக்களினதும் மன்மதராணிகளினதும் நிஜ ஆட்டங்களை சிறுவர்கள் \"Live\" ஆக காண்கின்றனரே அதை யார் தடுப்பதோ....???! இது மன்மதராசாவுக்கு ஒத்தூதவதற்கல்ல....இதோட அதையும் கவனிச்சா நல்லம் எண்டு சொல்ல வாறம்...!</span> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  வெளிநாட்டு மாப்பிள்ளை...சிறுகதை...!
Posted by: kuruvikal - 04-14-2004, 03:06 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (2)

[b]<span style='color:red'>வெளிநாட்டு மாப்பிள்ளை...சிறுகதை...!

[size=16]கந்தனின் முன்னேற்றத்தைக் கண்டு ஊரே வியந்தது. படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டு கொழும்புக்குச் சென்று கந்தன் ஜந்து வருடங்களில் முதலாளியாகிவிடுவான் என எவரும் எதிர்பார்க்கவில்லை. விவசாயத்தையும், வியாபாரத்தையும் நம்பி இருக்கும் அந்தக் கிராமத்திலிருந்து முதன் முதலாக, கந்தன் பல்கலைக்கழகம் செல்வான் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஊர்மக்களின் எண்ணக் கனவுகளுக்கு முற்றுப்புள்ளியிட்ட கந்தன் மற்றவர்களைப் போலவே வியாபாரத்துக்காகக் கொழும்புக்குச் சென்றான்.

கந்தனின் மாமா ஒருவரின் கடையில், கந்தன் உதவியாளராகச் சேர்ந்தான். அவனின் திறமையும், மருமகன் என்ற பாசமும் தனியாகக் கடையை நிர்வகிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தின. கந்தனின் மாமா, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பம்பலப்பிட்டியில் அவனுக்கு ஒரு கடையை நடத்த ஏற்பாடு செய்தார். இரண்ட வருடங்களில் வாடகைக் கடையை சொந்தமாக்கினான் கந்தன்.

கொழும்பில் உள்ள முதலாளிகள் அனைவரும் யாழப்பாணத்துக்குப் படையெடுத்தபோது கந்தனும் யாழ்ப்பாணத்தில் கடை ஒன்றை ஆரம்பித்தான். பம்பலப்பிட்டிக்கடையைப் போன்றே யாழ்ப்பாணத்துக்கடையும் சிறப்பாக நடைபெற்றது. வவுனியாவில் கடை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்த கந்தன் மாமாவிடம் ஆலோசனை கேட்டான். அவர் தன்னிடம் கணக்காளராக வேலை செய்யும் குமாரைக் கந்தனுக்கு அறிமுகப்படுத்தினார்.

குமார் வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவன். வவுனியாவில் உள்ள பல முதலாளிகளை குமாருக்குத் தெரியும். என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைந்த கந்தன், குமாரையும் அழைத்துக் கொண்டு தனது காரில் வவுனியா நோக்கிச் சென்றான். குமாரின் வீடு பிரதான வீதிக்கு அருகாமையில் இருந்தாலும் வீடு வறுமையின் கொடுமையினை சித்திரிப்பதாகக் காணப்பட்டது. வறுமையின் கொடுமைகளை கடந்த காலத்தில் அனுபவித்தவன் என்பதால் எதுவித அருவருப்புமின்றி குமாரின் வீட்டினுள் நுழைந்தான் கந்தன்.

அவர்கள் இருவரும் உள்ளே சென்றதும் குடு குடுவென ஓடிவந்த சிறுவன் குமாரைப் கட்டிப்பிடித்தான். கொழும்பிலிருந்து வவுனியா வரும் வரை வியாபாரம் பற்றியே கதைந்து வந்த கந்தன் குமாரின் குடும்பம் பற்றி கேட்காததையிட்டுக் கவலைப்பட்டான். 'குமார் அண்ணா உங்களுக்கு திருமணமானது பற்றிச் சொல்லவில்லை" 'அவ சமையல் அறையில் வேலையாயிருக்கா போல இப்போ வரச் சொல்கின்றேன்" என்று கூறியபடி சமையல் அறையில் நுழைந்தாhன் குமார்.

சிறிது நேரத்தில் சமையல் அறையிலிருந்து வெளியே தேநீர் கொண்டு வந்த குமாரின் மனைவியைப் பார்த்து திகைத்து நின்றான் கந்தன். கந்தனைப் பார்த்து சாந்தி நடுங்கிப் போனாள். தேநீரைக் கொண்டு வந்து மேசையின் மேல் வைத்து விட்டு அறைக்குள் நுழைந்தாள் சாந்தி.

'குமார் அண்ணா உங்கள் மனைவி எங்கள் ஊர்தான்" என்றான் கந்தன்

'அப்படியா உங்கள் ஊரா" என குமார் வியந்தான்.

'அப்ப நானும் உங்கடை ஊர் ஆள்தான்" என்றான் குமார். அவர்களின் உரையாடலைக் கேட்ட சாந்தியின் உடல் மேலும் நடுங்கியது. தேநீர் குடித்துவிட்டு இருவரும் வெளியே போனார்கள்.

'கந்தன் நீங்கள் சாந்தியின் ஊர் என்றபடியால் உங்களை ஒரு உதவி கேட்பேன் செய்வீங்களா?

'சரி சொல்லுங்கோ"

'நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்துகின்றோம். இந்த பிணக்கை நீங்கள் தான் தீர்க்க வேண்டும்."

'உங்களுக்கிடையே என்ன பிரச்சினை?"

குமார் தனது கதையைச் சொல்லத் தொடங்கினான்

'நான், யுத்தத்தினால் லண்டனுக்கு போக வேண்டியதாயிற்று. அங்கே சாதாரணமாகத்தான் நான் வேலை செய்தேன். எனக்கு வவுனியாவில் ஒரு தங்கச்சி இருந்தாள். அவளை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அம்மாவிற்கு ஆசை. அதனால் அவளுக்கு ஒரு எஞ்சினியர் மாப்பிள்ளை பார்த்தனர். மாப்பிள்ளைக்குச் சீதனமாக முப்பது லட்சம் தேவைப்பட்டது. என்னால் அவ்வளவு பணத்தைச் சேர்க்க முடியாது என்பதை அம்மாவிற்குச் சொன்னேன். இருபது லட்சம் அனுப்பினேன்.

அதன் பின்னர் அம்மா சொன்னா தங்கச்சி திருமணம் நடத்துவதற்கு முன்னர் உனக்கு திருமணம் நடத்த வேண்டும். அப்பதான் உன்னுடைய சீதனமாக பத்து லட்சத்தை வாங்கி முப்பதை தங்கைச்சிக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு நான் ஒத்துக்கொண்டேன்.

அதன் பின்னர் பொருத்தம் பார்ந்து சாந்தியைத் தேர்ந்து எடுத்தனர். அந்தநேரம் எனக்கு லண்டனில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் சாந்தி வீட்டாரிடம் சீதனப் பணத்தை வாங்கிவிட்டனர். என்னை லண்டனிலிருந்து திருப்பி அனுப்பினார்கள். நான் கொழும்பு வந்த போது என்னிடம் செலவுக்குக்கூட பணமில்லை. நான் இதைப் பற்றி வீட்டிலே கூறிய போது ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் என அம்மா கூறினாள்.

சாந்தி வீட்டாருடன் எல்லாப் பிரச்சினைகளும் கதைத்த படியால் முதல் போட்டு வியாபாரம் செய்யலாம் என்று அப்பா கூறினார். அவர்கள் கூறியதை நம்பி நான் திருமணத்திற்குச் சம்மதித்தேன். அவசர அவசரமாகக் கொழும்பிலே எனது திருமணம் நடைபெற்றது. ஒருமாதம் எதுவிதப் பிரச்சினையும் இன்றி வாழ்ந்தோம்.

ஒரு நாள் எத்தனை மாத லீவில் வந்தனீங்கள் எப்போ லண்டன் போகப் போகிறீர்கள் என்று சாந்தி கேட்டாள். நான் எனது நிலைமையை சாந்திக்கு விளக்கமாக கூறினேன். நான் லண்டனில் இருந்து திரும்பி வந்ததும் இனி லண்டன் செல்லமுடியாது என்பதும் நான் கூறித்தான் சாந்திக்குத் தெரியும் சாந்தி வீட்டாருக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று அன்றிலிருந்து எனது வாழ்க்கை கேள்விக்குறியாகியது. நான் விருப்பப்படாமல் நடைபெற்ற இத் திருமணத்தால் சாந்தியின் வாழ்க்கை இருண்டு விட்டது."

.................................

சாந்தியின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்த கந்தன், குமாருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவிந்தான்

கந்தனும், சாந்தியும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராகக் காதலித்ததையும், வெளிநாட்டு மோகத்தில் அவள் காதலை நிராகரித்ததையும், பல்கலைக்கழக கனவைத் துறந்து படிப்பைக் கைவிட்டதையும் எப்படி குமாரிடம் சொல்வது என்று தெரியாது கந்தன் தவித்தான்.

வார்த்தையால் எதுவும் கூறாத கந்தன், குமாரின் முதுகில் தட்டியபடி மெல்லிய புன்னகையை வெளிப்படுத்தினான். தமது பிரச்சனைகளுக்குத் முடிவு வந்துவிட்டதைப் போன்று குமார் சந்தோஷப்பட்டான்.</span>

யாவும் கற்பனை..

-எஸ்.ரமேஷ

நன்றி sooriyan.com

------------------

இக்கதையின் எழுத்தாளர் யாவும் கற்பனை என்றுதான் போட்டுள்ளார்...ஆனால் யாவும் உண்மை என்றும் துணிந்து போடலாம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item