Yarl Forum
சுவிஸில் இலங்கைத் தமிழர் பலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: சுவிஸில் இலங்கைத் தமிழர் பலி (/showthread.php?tid=7198)



சுவிஸில் இலங்கைத் தமி - Mathan - 04-16-2004

சுவிஸில் இலங்கைத் தமிழர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலி

சுவிற்சர்லாந்து நாட்டில் லங்சான் என்ற நகரத்தில் இலங்கைத் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த 38 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது:-

கணவருக்கும் மனைவிக்கும் இடையில் கடந்த திங்கள் இரவு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி தொலைபேசி அழைப்பின் மூலம் பொலிசுக்கு முறையிட்டு பொலிஸாரை வரவழைத்துள்ளார்.

பொலிஸார் வீட்டுக்குள் நுழைந்ததும் கணவன் சமையலறைக்குள் சென்று கத்தியை எடுத்துச் சென்று பொலிஸாரைக் குத்தியுள்ளார். இதில் ஒரு பொலிஸ்காரர் காயமடைந்தார். அடுத்த பொலிஸாரை நோக்கி கத்தியுடன் செல்கையில் அந்தப் பொலிஸ்காரர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் குறித்த நபர் அந்த இடத்திலேயே பலியானார்.

இறந்தவர் 8 வயது, 6 வயது, 4 மாதக் குழந்தைகளின் தந்தையாவார். அவரது மனைவி 25 வயதுடைய இளம் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

நன்றி - வீரகேசரி


- kuruvikal - 04-16-2004

சுவிஸாச்சே சொல்லவும் வேணுமா.... :roll:


- kuruvikal - 04-16-2004

<span style='color:red'><b>கணவனைக் கொன்ற இரு மனைவிகள்</b>

பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கணவரை அவரது இரு மனைவிகளும், மகனும் சேர்ந்து கொலை செய்தனர். இவருக்கு மொத்தம் 4 மனைவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த பாலன் (55), நகர சுத்தித் தொழிலாளியாக இருந்து வந்தார். இவருக்கு செல்வகுமாரி (45), வள்ளியம்மாள் (35), புஷ்பலதா (48 ) என மூன்று மனைவிகள்.

இதில் புஷ்பலதாவின் தங்கை பப்பியின் (40) கணவர் சமீபத்தில் காணாமல் போனதையடுத்து, பப்பியையும் மிரட்டி தனது தாராமாக்கிக் கொண்டார் பாலன். மேலும் பப்பியை பாலியல் ரீதியில் பயங்கர தொல்லைக்கும் ஆட்படுத்தி வந்துள்ளார் பாலன்.

ஒரு கட்டத்தில் டார்ச்சர் அதிகமாகவே, பாலனைக் கொலை செய்துவிட முடிவு செய்துள்ளார் பப்பி. தனது மகன் துரையிடம் (21) பாலனைத் தீர்த்துக் கட்ட சொல்லியிருக்கிறார். இதையடுத்து அவர் தனது நண்பன் விஜய்குமார் (30) என்பவருடன் சேர்ந்து பாலனைக் கொல்ல திட்டம் தீட்டினார்.

இந்தக் கொலைத் திட்டத்துக்கு புஷ்பலதாவும் உதவி செய்ய முன் வந்தார். தனது வீட்டில் கணவர் தங்கும் இரவு நேரத்தில் வந்து கொலையைச் செய்யுமாறு யோசனை கூறியுள்ளார் புஷ்பலதா.

இதையடுத்து இரவில் தூங்கிக் கொண்டிருந்த பாலனை துரையும் விஜய்குமாரும் சேர்ந்து கத்தியால் கழுத்தை அறுத்துக் கொல்ல, புஷ்பலதாவும் பப்பியும் கொலைக்கு துணையாக உடன் இருந்துள்ளனர்.

பின்னர் பாலனின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி பக்கத்து கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் வீசினர்.

கணவரைக் காணாமல் மற்ற இரு மனைவிகளும், அவர்களது குழந்தைகளும் தேட ஆரம்பிக்கவே அவர்களின் சந்தேகம் புஷ்பலதா, பப்பி மற்றும் துரை மீது விழுந்தது.

இதையடுத்து கிராம அதிகாரியிடம் அவர்கள் புகார் தர, குற்றத்தை ஒப்புக் கொண்டு அவர்கள் சரணடைந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும், விஜய்குமாரும் கைது செய்யப்பட்டனர்.</span>

thatstamil.com....!

------------------------


- Mathan - 04-16-2004

kuruvikal Wrote:சுவிஸாச்சே சொல்லவும் வேணுமா.... :roll:

ஏன் சுவிசுக்கு என்ன குருவி? நல்ல அமைதியான அழகான நாடுதானே?


- kuruvikal - 04-16-2004

கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- yarl - 04-16-2004

இறந்தவரின் வயதைப்போடலாம்.மனைவியின் வயதைப்போடவேண்டிய தேவை என்ன வந்தது?வர வர வீரகேசரியும மித்திரன் ஆகிறது


- Paranee - 04-17-2004

ம்

இறந்தவரின் வயதைவிட அந்த பெண்ணின் வயதுதான் முக்கியத்துவமானது.
சிறுவயது திருமணம்.
மனவெறுப்பாகவும் தோன்றலாம் சண்டைக்கு


- tamilini - 04-19-2004

:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :x


- இளைஞன் - 04-25-2004

வணக்கம் மேலே செய்தியாகக் குறிப்பிடப்பட்ட விடயம் பற்றிய மேலதிக தகவல்கள். பொதுவிற்கு ஒரு விடயம் வந்துவிட்டபடியினால் அது பற்றி அலச வேண்டிய தேவையுமளது. சரி இதோ எனது நண்பரின் மூலம் அறியப்பட்ட சில தகவல்கள்:

1. மனைவிக்கு 25 வயது என்று செய்தியில் குறிப்பிடபட்டுள்ளவிடயம் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக அமைகிறது. காரணம் முதல் பிள்ளையின் வயது 8. அப்படிப் பார்க்கப்போனால் 16 வயதில் அந்தப் பெண் திருமணம் முடித்திருக்க வேண்டும். அந்தப் பெண் சுவிஸில் திருமணம் செய்துகொண்டவர் என்று கூறப்படுகிறது, எனவே அந்தவகையில் 16 வயதில் திருமணமென்பது சட்டத்தின் சிக்கல்களை எதிர்நோக்கும்.

2. காவல்துறைக்கு தொலைபேசியில் அழைத்தது இந்தப் பெண் அல்லவாம். இவர் கூறி இன்னொரு பெண்தான் தொலைபேசி மூலம் அழைத்து பொலிஸாரை வரவழைத்தாராம். அந்தப் பெண்ணுக்குத்தான் 25 வயதாம்.

3. கணவன் குடிபோதையில் இருந்தாரெனவும், அவர் தனது கடைசிக் குழந்தையை தூக்கி வைத்திருந்தாரெனவும், போதை வெறியில் குழந்தையைக் கைநழுவவிட்டுவிட்டாரெனவும், அதனால் மனைவி அவரைப் பேசினாரெனவும் கூறப்படுகிறது. இந்த வாய்ச்சண்டையே முற்றி கடைசியில் கணவன் கத்தியெடுத்து மனைவியைக் குத்தப் போனாராம். அதன் காரணத்தினால் தான் மனைவி பொலிசாரிற்கு அறிவிக்க நேர்ந்ததாம்.

4. துப்பாக்கி சூடு நடத்திய 38 வயது தமிழர் உயிரிழந்த நிலையில் பொலிஸினை காவலில் வைத்துள்ளார்கள்.

5. Lausanne நகரில் இதற்கு முன்னரும் சில குற்றங்கள்(கொலைகள்?) நடந்துள்ளனாவாம், தமிழர்களால்!

6. மனைவியைப் பற்றியே தவறான கருத்துக்குள் மற்றவர்கள்(தமிழர்கள்) மத்தியில் நிலவுகிறதாம்.

நன்றி: தகவல் தந்த எனது நண்பிக்கு.
உண்மை பொய் ஆராய்ந்தறிக.


- vasisutha - 04-27-2004

உங்களை எல்லாம் திருத்தவே முடியாது. :evil:

(நான் சொல்வது நடந்த சம்பவத்தை அல்ல.)


- sOliyAn - 04-27-2004

அப்போ நடக்கப் போறதையா வசி?!


- anpagam - 04-27-2004

எங்களை எல்லாம் திருத்தவே முடியாது.
(நான் சொல்வது நடந்த சம்பவங்களை மட்டும் அல்ல.)
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:


- sOliyAn - 04-28-2004

திருந்தினால் நாங்கள் நாங்களாக இருக்க அடையாளம் இல்லாமற் போய்விடுமே!!


- Mathan - 04-28-2004

அடையாளத்திற்காகவே திருந்தாமல் இருப்பதாக சொல்கின்றீர்களா?


- sOliyAn - 04-28-2004

யக்கற் சப்பாத்து காற்சட்டை என்று புறத்தில கொஞ்சமாலும் திருத்திட்டாங்கள்.. அகத்திலயாவது கொஞ்சம் இருக்கட்டுமே!