| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 235 online users. » 0 Member(s) | 232 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,296
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,622
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,050
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,457
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| டாலர் தேசம் |
|
Posted by: AJeevan - 04-22-2004, 10:25 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (9)
|
 |
[align=center:77d4360876]<img src='http://www.kumudam.com/reporter/250404/pg8-t.jpg' border='0' alt='user posted image'>[/align:77d4360876]
<span style='font-size:22pt;line-height:100%'><b>பா.ராகவன்</b></span>
ஒசாமா பின்லேடனைக் கொல்வதற்கு, சி.ஐ.ஏ.வுக்கு முழு அதிகாரம் அளித்தார் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம். பிடித்துக்கொடுப்பவருக்குப் பரிசு அளிக்கலாம். தாமே பிடித்தாலும் வெகுமதிகள் உண்டு. முழு லைசென்ஸ்! ஆனால் இது எப்படி இருந்தது என்றால், மொபெட் ஓட்டத் தெரியாதவனுக்கு லாரி ஓட்டுவதற்கு லைசென்ஸ் வழங்கிய மாதிரி இருந்தது!
சி.ஐ.ஏ. மிகப்பெரிய அமைப்புதான். புத்திசாலிகளை மட்டுமே தேர்ந்தெடுத்துப் பணியாற்ற வைத்திருந்தார்கள் தான். கோடிக்கணக்கான டாலர்கள் அதற்காகவே வருஷம்தோறும் ஒதுக்கிக்கொண்டிருந்தது அமெரிக்க அரசு. அந்த அமைப்பினர் கேட்டவுடனே அல்ல; நினைத்தவுடனேயே எது வேண்டுமானாலும் கிடைத்துவிடும். அப்படியரு சலுகை உண்டு அதற்கு. மேலும் போலீஸ், ராணுவம் என்கிற இரு அமைப்புகளும் சி.ஐ.ஏ.வுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்றொரு எழுதப்படாத உத்தரவும் அப்போது அமெரிக்காவில் இருந்தது. சி.ஐ.ஏ.வைவிடப் பலமடங்கு சிறப்புகள் வாய்ந்த இன்னொரு உளவு அமைப்பான எஃப்.பி.ஐ.க்குக் கூட இத்தனை சலுகை இல்லை அப்போது.
எத்தனையோ விஷயங்களில் சி.ஐ.ஏ. குறிப்பிடத் தகுந்த சாதனைகள் புரிந்திருந்ததற்கான பரிசுகள் அவை.
<img src='http://www.kumudam.com/reporter/250404/pg8.jpg' border='0' alt='user posted image'> ஆனால் ஒசாமா பின்லேடன் விஷயத்தில் மட்டும் தமது புலனாய்வில் ஓரடிகூட அவர்களால் அப்போது முன்னேற முடியவில்லை என்பதுதான் உண்மை. முதன்முதலில் சவுதி அரேபியாவிலிருந்து புறப்பட்டு பாகிஸ்தானுக்கு ஒசாமா ரகசியப் பயணம் மேற்கொண்ட தினத்திலிருந்துதான் அவர்களும் அவரைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால், பத்து வருடங்களில் உருப்படியாக ஒரு தகவலைக்கூட அவர்களால் ஒசாமா குறித்துச் சேகரிக்க முடியவில்லை. அவரது அடுத்த 'மூவ்' இன்னதுதான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடிந்ததேயில்லை. ஒசாமாவின் படைபலம், ஒவ்வொரு நாட்டிலும் அவருக்கு இருந்த ஆதரவாளர்களின் எண்ணிக்கை, நிதியுதவி வருகிற பாதைகள், ஆயுதங்கள் போகிற பாதைகள், ஹைடெக் எலக்ட்ரானிக் உபகரணங்கள் கிடைக்கிற வழிகள், சாட்டிலைட் தொலைத்தொடர்பு வசதிகள், புதிய திட்டங்கள் என்று எதுவுமே சி.ஐ.ஏ.வுக்குத் தெரியாமலேயே இருந்தது அதுவரை.
ஐந்து வருடங்களுக்கு முந்தைய சி.ஐ.ஏ.வின் _ ஒசாமாவின் மீதான கணிப்புகளும் அதே காலகட்டத்தில் ஒசாமா சம்பந்தப்பட்ட உண்மை நிலவரங்களும் அதிர்ஷ்டவசமாக இன்று அப்படி அப்படியே இணையத்தில் கிடைக்கின்றன. இரண்டையும் ஒப்பிட்டு நோக்கினால் சிரிப்புதான் பொத்துக்கொண்டு வரும்! இதற்கான காரணமும் வெட்டவெளிச்சமானது. கொஞ்சம் பரிதாபகரமானதும்கூட.
தொண்ணூறுகளின் இறுதியிலேயே தகவல் தொழில்நுட்ப விஷயங்களில் தன்னிறைவுக்கு மேலான தரத்தை எட்டிப்பிடித்திருந்தது அமெரிக்கா. ஒசாமா என்றில்லை, கடவுளேகூட எங்கே இருக்கிறார் என்று உட்கார்ந்த இடத்திலிருந்து கண்டுபிடித்துவிட முடியும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. காரணம், செயற்கைக்கோள்கள் விஷயத்தில் அமெரிக்கா அடைந்திருந்த பிரமிக்கத்தகுந்த வளர்ச்சி.
செயற்கைக்கோள்கள் மட்டுமல்ல... எதிரிகளின் தொழில்நுட்ப நெட்_ஒர்க்கை உடைத்து உள்ளே போய்ப் பார்க்கிற டெக்னாலஜியில் அமெரிக்கர்கள் அப்போது சூரர்களாக இருந்தார்கள். ரேடியோ, தொலைபேசி, மின்னஞ்சல், இணையதளங்கள் என எந்த அலைவரிசையில் யார் இயங்கிக்கொண்டிருந்தாலும் எவ்வித சிரமமும் இல்லாமல் வழியில் குறுக்கே புகுந்து செய்தியை அவர்களால் சுலபமாக ஊடுருவ முடிந்தது.
பொதுவாக தீவிரவாத இயக்கங்கள் தமக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள இணையத்தில் ரகசிய இடம் ஏற்படுத்தி, கடும் பாதுகாப்பு வளையங்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு பேசுவார்கள். ஒரு சாதாரண ஈமெயில் அனுப்பவே யூசர் நேம், பாஸ்வேர்டு வேண்டும். இணையம் எத்தனைக்கெத்தனை சுதந்திரமான தளமோ, அத்தனைக்கத்தனை அணுக முடியாத தளமாகவும்கூட அதனைப் பயன்படுத்த முடியும். அப்படிப்பட்ட பாதுகாப்பு வளையங்களைக்கூட உடைத்து உள்ளே போய்த் தகவல் பெறத்தக்க வகையில் வளர்ச்சியுற்றிருந்தது அமெரிக்க தொழில்நுட்பத்துறை. என்கிரிப்ட் செய்யப்பட்ட தகவல்களை உடைத்துப் பெறும் தொழில்நுட்பத்தில் ராட்சஸ வளர்ச்சி கண்டிருந்தார்கள்.
இந்த பலம்தான் அமெரிக்காவின் மிகப்பெரிய பலவீனமும்கூட. குறிப்பாக, ஒசாமா விஷயத்தில்!
ஒசாமா பின்லேடனைப் பற்றிய விஷயங்களை அறியவும் அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் மேற்சொன்ன தொழில்நுட்பங்களை, அதன் முழு அளவில் அன்றைக்குப் பயன்படுத்திக்கொண்டிருந்தது சி.ஐ.ஏ. அதன்மூலம் கிடைக்கிற தகவல்களைத்தான் வேதமாகவும் நினைத்து, அதனடிப்படையிலேயே ரிப்போர்ட்டுகளும் அனுப்பிக்கொண்டிருந்தது, அரசுக்கு.
அவர்கள் செய்யத்தவறியது ஒன்றே ஒன்று! ஒசாமா சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தர, உரிய ஒற்றர்களை ஏற்பாடு செய்யாமல் விட்டது! தொழில்நுட்பத்தைவிட இது விஷயத்தில் சில மனிதர்கள்தான் நம்பகமான தகவல்களைத் தரமுடியும் என்று அவர்களுக்குத் தோன்றவேயில்லை. அதுதான் ஒசாமாவுக்கு மிகப்பெரிய பலமாகிவிட்டது!
ஒசாமா பின்லேடன் ஒரு பெரிய டெக்னீஷியன் இல்லை. ஆனால், மிகத் தேர்ந்த பல தொழில்நுட்ப வல்லுநர்களை அவர் தமக்கு ஆலோசகர்களாக வைத்திருந்தார். அமெரிக்க அரசு, டெக்னாலஜியைப் பயன்படுத்தித்தான் தமது திட்டங்களை அறிந்துகொள்ள முயற்சி செய்கிறது என்பது தெரிந்தவுடனேயே, தமது தகவல்தொடர்பு விஷயங்களை ஆப்கன் மலைப்பகுதிகளில் ஆடு, மாடு, கழுதை மேய்க்கும் பையன்களைக் கொண்டே அவர் செய்ய ஆரம்பித்தார். தமது சாட்டிலைட் தொலைபேசியையும் இணைய உரையாடல்களையும் சும்மா நலன் விசாரிக்கும் காரியங்களுக்காக மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்தார். இந்த விஷயம் வெகுநாட்களுக்கு அமெரிக்காவுக்குத் தெரியாமலேயே இருந்தது. சமீபத்தில் ஆப்கன்மீது போர் தொடுக்கிற வரையிலும்கூட ஒசாமாவின் சாட்டிலைட் தொலைபேசி உரையாடல்கள் பற்றி கச்சாமுச்சாவென்று என்னென்னவோ தகவல்கள் வந்துகொண்டே இருந்தன.
உண்மையில் ஒசாமா, தமது சாட்டிலைட் தொலைபேசியையெல்லாம் உறைபோட்டு மூடிவைத்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. என்கிரிப்டட் ஈமெயில்கள் அனுப்புவதை அவர் நிறுத்தி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். அல்கொய்தாவைச் சேர்ந்தவர்கள், ஈமெயில் மூலம் தகவல் அனுப்புவதை முற்றிலுமாக நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்கிறது, அந்த நெட்_ஒர்க்கின் இயல்பறிந்த வட்டாரம்.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, கென்யாவிலும் தான்ஸானியாவிலும் அமெரிக்கத் தூதரகங்களில் குண்டுவைத்த பிறகு, ஒசாமாவுக்கு உடல்நலன் கொஞ்சம் சீர்கெடத் தொடங்கியிருந்தது. அதாவது, அவரைக் கொல்வதற்கு சி.ஐ.ஏ.வுக்கு முழு அதிகாரம் கிடைத்த தினத்துக்கு மிகச் சில நாட்களில் கண்டறியப்பட்ட உண்மை இது.
திடீர் திடீரென்று அடிவயிற்றில் சுரீரென்று ஏற்பட்ட வலியால் அவர் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். சிறுநீரகத்திலும் ஏதோ கோளாறு இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ஒசாமாவின் வலதுகரமான அல் ஜவஹரி, எகிப்திலிருந்து சில தேர்ந்த டாக்டர்களை ஆப்கன் வரவழைத்து, ஒரு கம்ப்ளீட் செக்_அப்புக்கு ஏற்பாடு செய்தார்.
பரிசோதனையின் முடிவில் ஒசாமாவுக்கு மிகத்தீவிரமான சில உபாதைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை...
1. சிறுநீரகக் கோளாறு. ஒரு சிறுநீரகம் முக்கால்வாசி பழுதடைந்திருந்தது.
2. வயிற்றில் கற்கள் மற்றும் கட்டி.
3. குறைந்த ரத்த அழுத்த நோய்.
4. தண்டுவடத்தில் டிஸ்க் கொலாப்ஸ் ஆகியிருந்த காரணத்தால் ஏற்பட்ட தீவிரமான முதுகுவலி.
<img src='http://www.kumudam.com/reporter/250404/pg8-1.jpg' border='0' alt='user posted image'> இதில் வயிற்றிலிருந்த கட்டி மட்டுமே சுலபத்தில் குணப்படுத்தக்கூடிய விஷயம் என்று எகிப்து டாக்டர்கள் சொன்னார்கள். தண்டுவடப் பிரச்னைக்கு ஒரு ஆபரேஷன் அவசியம். சிறுநீரகக் கோளாறுக்கு டயாலிசிஸ் முக்கியம். லோ ப்ளட் பிரஷர் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வருவது. அதனைச் சில மாத்திரைகளின் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால், பரிபூரண ஓய்வு மிகவும் அவசியம்.
ஓய்வா? ஒசாமா சிரித்தார். "நான் ஓரிரு வருடங்களுக்குள் அமெரிக்காவை முற்றிலுமாக அழித்துவிட உத்தேசித்திருக்கிறேன். அதற்குள் நான் தேறி எழுந்தாக வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்" என்று சொன்னார்.
முதலில் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஒசாமா என்ன ஆஸ்பத்திரிக்குப் போய் அட்மிட் ஆகியா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்ள முடியும்? மேலும் அன்றைக்கு ஆப்கனிஸ்தானில் இருந்த எந்த மருத்துவமனையிலும் ரத்த சுத்திகரிப்புக் கருவி கிடையாது. போவதென்றாலும் ஏதாவது வெளிநாட்டுக்குத்தான் போக வேண்டும். இதெல்லாம் நடக்கிற கதையில்லை அல்லவா?
ஆகவே, ஒசாமா ஓர் உத்தரவிட்டார். அமெரிக்காவிலிருந்து இரண்டு டயாலிசிஸ் கருவிகள் வாங்குவது! ஒன்று அவரது சொந்த உபயோகத்துக்கு. இன்னொன்று ஆப்கனிலுள்ள முக்கியமானதொரு மருத்துவமனைக்கு _ நன்கொடையாக!
இதுதொடர்பாக அவர் அமெரிக்காவிலுள்ள தமது இயக்கத்தைச் சேர்ந்த யாருடனும் தொலைபேசியில் பேசவில்லை. ஏர்மெயிலில் கடுதாசி அனுப்பவில்லை. ஈமெயில் ஏதும் அனுப்பவில்லை. மெசஞ்சரில் பேசவில்லை. இணையத்தைச் சுத்தமாகவே பயன்படுத்தவில்லை. ஆப்கனிலிருந்து யாரையாவது அமெரிக்காவுக்கு அனுப்பினாரா, அக்கம்பக்கத்து தேசத்திலிருந்து யாரையாவது அனுப்பினாரா என்றால் அதுவுமில்லை.
ஆனாலும் சரியாக முப்பத்துநான்கு தினங்களில் ஒசாமா இருந்த மலைக் குகைக்கு இரண்டு டயாலிசிஸ் கருவிகள் வந்து சேர்ந்தன! அமெரிக்காவிலிருந்துதான் அவை வந்தன. எப்படி இது சாத்தியம்?
அவரை இரவு_பகலாகக் கண்காணிப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்த சி.ஐ.ஏ.வின் கண்ணைக் கட்டிவிட்டு எப்படி அவரால் இது முடிந்தது? அதுதான் ஒசாமாவின் பலம். அதுதான் அவரது பிரத்தியேகத் தொழில்நுட்பம்! "டெக்னாலஜியை முழுவதுமாகப் பயன்படுத்தக் கூடியவர்தான் ஒசாமா. ஆனால், டெக்னாலஜியைவிட மனிதர்களை அவர் அதிகம் நம்புகிறவர். மனிதர்களைக் காட்டிலும் கடவுளை நம்புகிறவர். இது சி.ஐ.ஏ.வுக்குப் புரியாது" என்று வெகுநாட்கள் கழித்து இதுபற்றிச் சொன்னார் அல் ஜவஹரி.
'ரிலே' ஓட்டம் மாதிரி ஒருவர் மாற்றி ஒருவராகவே கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக, நாடு நாடாகத் தகவலை நகர்த்தி, உரிய இடத்தில் தேவை குறித்த செய்தியைக் கொண்டு சேர்த்து, ரகசியப் பாதையில், வேண்டியதை விரும்பிய இடத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கும் ஒரு தனி கூரியர் சர்வீஸை ஒசாமா நடத்திக்கொண்டிருந்த விஷயம் அப்போதுதான் வெளியே தெரிந்தது!
தலையில் அடித்துக்கொண்டு உட்கார்ந்து மூக்கு சிந்தியது சி.ஐ.ஏ. இதில் மிகப்பெரியதொரு 'க்ளைமேக்ஸ் காமெடி' ஒன்றும் இருக்கிறது. ஆப்கனில், தாலிபன்களுக்கு எதிரான வடக்குக் கூட்டணிப் படை அரசு ஒன்று இருந்ததல்லவா அப்போது? அந்த நிர்வாகத்திடம் ஒரு நல்ல புலனாய்வுத்துறை உண்டு. மேற்கத்திய பாதிப்பு ஏதுமில்லாமல் மண்ணின் மணத்துடனேயே புலனாய்வு பயின்று தேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களை வளைத்து, ஒசாமாவைப் பற்றிய தகவல்களைக் கறக்கப் பார்த்தது சி.ஐ.ஏ.
ஒசாமா உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதையும் டயாலிசிஸ் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதையும் கரெக்டாக மோப்பம் பிடித்துச்சொன்ன அந்தப் புலனாய்வுத்துறை அதிகாரிகள், இன்னொன்றையும் சொன்னார்கள்.
"நீங்கள் அதிகம் சிரமப்படவே வேண்டாம். வெறும் டயாலிசிஸ் கருவி வந்துவிட்டதாலேயே ஒசாமா பிழைத்துவிட முடியாது. இப்போது அவர் இருக்கிற நிலைமையில், இன்னும் நாலைந்து மாதங்கள்கூட உயிர் தரிக்க வாய்ப்பில்லை. இரண்டு சிறுநீரகங்களும் முற்றிலுமாகச் செயல்படாமல் போய்விட்டன. கொஞ்சநாள் பொறுத்திருங்கள். ஒசாமா இறந்துவிட்டார் என்று தானாகவே வரப்போகிற செய்தியுடன் ஊர் போய்ச் சேருங்கள்" என்று சொன்னார்கள்.
மிகவும் நம்பத்தகுந்த செய்திதான் இது என்று இன்னும் பல தரப்பில் விசாரித்து ஊர்ஜிதப்படுத்திக்கொண்டது சி.ஐ.ஏ. ஆகவே, மேற்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச முயற்சிகளையும் தூக்கிக் கிடப்பில் போட்டுவிட்டு ஜாலியாக இருந்தார்கள்.
அவர்களுக்கு ஒசாமா யார் என்று தெரியாதது மட்டுமல்ல... அவரது வலதுகரமான அல் ஜவஹரி யார் என்பதும் அப்போது தெரியவில்லை. இரண்டுமாத காலத்தில் அந்த நபர் ஒரு குட்டிச்சாத்தான் வேலையே செய்தார்!
மரணத்தின் வாசல்படியைத் தொட்டுவிட்டிருந்த பின்லேடனை இழுத்துப் பிடித்து மீட்டுக்கொண்டுவந்த ஜவஹரியின் வேலையை ஒரு சில வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது.
உண்மையில் அந்த மறுபிறவிக்குப் பிறகுதான், செப்டம்பர் பதினொன்று தாக்குதலுக்கான திட்டங்களை முழு வேகத்தில் தீட்டி, எல்லா ஏற்பாடுகளையும் பக்காவாகச் செய்து முடித்து, ஒரு "டிரையலும்" பார்த்தார் ஒசாமா.
அந்தப் "பரிசோதனை" முயற்சியில் ஒரு தலை விழுந்தது. அமெரிக்காவுக்கு மிகவும் வேண்டப்பட்ட தலை அது. அப்போதேகூட சி.ஐ.ஏ. விழித்துக்கொண்டு என்னவாவது செய்திருக்கலாம். அழகாகக் கோட்டை விட்டார்கள்.
(தொடரும்)
Kumudam.com
|
|
|
| வருக 2004 |
|
Posted by: இளைஞன் - 04-20-2004, 06:04 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (11)
|
 |
[size=18]வருக 2004
<b>வருக</b>
வருகவென
வரவேற்று
வாழவைத்த ஆண்டுகளே
வரலாற்றில் நீர் எங்கு போனீர்?
விருந்துண்டு
விடைபெற்று
விரைந்தோடிய ஆண்டுகளே
வரலாற்றில் நீர் என்ன செய்தீர்?
இரண்டாயிரத்து மூன்றின்
எதிர்காலமே...
இரண்டாயிரத்து ஐந்தின்
இறந்தகாலமே...
வருமாண்டில் நீ என் செய்வாய்?
<b>நிகழ்க</b>
கண்ணீரைக் கழுவு
குருதிநீர் துடை
சமாதானத்தைக் குந்தவை
இரவுகள் கழி
பகலினில் விழி
ஈரங்காய வெயிலாய் எரி
பகைமைகள் மறை
பகிருதல் பறை
அவரவர் உரிமை அவர்க்கேயளி
கல்லறைகள் காணும்
பதுங்குகுழிகள் மூடு
ஆயுதங்களை உறங்க வை
அழிவுகள் நிறுத்து
அட்டகாசம் நிறுத்து
அமைதி வாழ்வு திருப்பு
அரசியல் மாற்று
ஆதிக்கம் விரட்டு
அகதி நிலை தகர்த்தெறி
நிகழ்த்து நிகழ்த்து
அதிசயம் நிகழ்த்து
<b>தருக</b>
வெள்ளை நிழல்
வேண்டாம்
வெளிச்ச இரவு
வேண்டாம்
சூரிய நிலவு
வேண்டாம்
சுடாத வெயில்
வேண்டாம்
பூவாய் மழைபெய்ய
வேண்டாம்
நிலவில் நிலமொன்றும்
வேண்டாம்
புன்னகைத் தேசம்
வேண்டும்
புதுமைத் தேசியம்
எமக்கங்கு வேண்டும்
வேண்டும்
வேண்டும்
வேண்டும்
வேண்டும் விடுதலை
வேள்வித் தீயில்
மூழ்கும் தீவின்
தேச விடுதலை
தீண்டும்
தீண்டும்
தீண்டும்
தீண்டும் தென்றலை
தீராத் தாகம்
தீரத் தழுவத்
தாராய் வரங்களை
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
மீண்டும் விடியலை
மீளக் காணும்
விழிகள் வேணும்
தாராய் வரங்களை
தூண்டும்
தூண்டும்
தூண்டும்
தூண்டும் தமிழினை
தூய்மை காக்கத்
துணிவு வேணும்
தாராய் வரங்களை
_________________________________________________
பி.கு.: இந்தக் கவிதை பாரிசில் நடந்த தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் "வருக 2004" என்கின்ற நிகழ்ச்சியில் வரவேற்புக்கவிதையாக என்னால் வாசிக்கப்பட்டது.
|
|
|
| சினிச் செய்திகள்... |
|
Posted by: kuruvikal - 04-20-2004, 12:12 PM - Forum: சினிமா
- Replies (1)
|
 |
<img src='http://thatstamil.com/images21/cinema/cauvery-450.jpg' border='0' alt='user posted image'>
ஆங்கிலப் படமொன்றில் நடிக்க மாதவன், காவேரி ஒப்பந்தமாகியுள்ளார்கள்.
டான்ஸ் ஆடத் தெரியாது, ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சிகளில் நடிக்கத் தெரியாது. ஆனாலும் தனது வசீகரமான புன்சிரிப்பாலும், எந்தக் கேரக்டரையும் இயல்பாகக் கையாளும் திறமையாலும் மாதவன் தொடர்ந்து பட வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்கிறார்.
மணிரத்னத்திடம் தொடர்ச்சியாக மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்தவர் இவர் ஒருவர்தான். மூன்றாவது படமான 'ஆய்த எழுத்து' படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன.
சதாவுடன் நடித்த 'எதிரி' படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வருகிறது. இந் நிலையில் மாதவன் ஒரு ஆங்கிலப் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
அமெரிக்காவில் செட்டிலான இந்தியரான ராஜீவ் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்துக்கு 'லவ் இன் லாஸ் ஏஞ்ஜெல்ஸ்' என்று பெயரிட்டுள்ளார்கள்.
<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album50/04_G.jpg' border='0' alt='user posted image'>
படத்தில் மாதவனுடன் ஜோடி சேருபவர் காவேரி. மலையாளக் கரையோரமிருந்து 'காசி' படத்தின் மூலம் தமிழகத்துக்கு வந்தார் காவேரி. இதர மலையாள நடிகைகளைப் போலவே இவருக்கும் ஓரிரு படங்களுக்கு மேல் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
இதனால் மனம் நொந்தவர் பெயரை கல்யாணி என்று மாற்றிக் கொண்டு தெலுங்கு பக்கம் போனார். பெயர் மாற்றிய ராசியோ என்னவோ தெலுங்கில் குறிப்பிடும்படி சில வாய்ப்புகள் வந்து பிஸியானார். ஜாக்பாட் அடித்ததுபோல் இப்போது மாதவனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
வெகு விரைவில் படப்பிடிப்புக்காக மாதவனும், காவேரியும் அமெரிக்கா கிளம்புகிறார்கள்.
<img src='http://thatstamil.com/images21/cinema/cauvery350.jpg' border='0' alt='user posted image'>
thatstamil.com
|
|
|
| இந்திய நாடாளுமன்றத் தேர்தல்...2004 |
|
Posted by: kuruvikal - 04-20-2004, 12:02 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40058000/jpg/_40058633_voting_203body_bbc.jpg' border='0' alt='user posted image'>
<b>முதல் கட்ட வாக்குப் பதிவு மும்முரம் வன்முறைக்கு 12 பேர் பலி</b>
நாட்டின் 14வது மக்களவைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதுவரை நடந்த தேர்தல் வன்முறைகளில் 6 துணை ராணுவப் படை வீரர்கள், தேர்தல் அதிகாரி, ஒரு நக்ஸலைட், லாலு கட்சியின் தொண்டர்கள் இருவர் உள்பட மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மொத்தமுள்ள 534 மக்களவைத் தொகுதிகளில் இன்று 140 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. 13 மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப் பதிவு நடக்கிறது.
ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் இன்று சட்டப் பேரவைகளுக்கான முதல் கட்டத் தேர்தலும் நடக்கிறது. பகல் 2 மணி வரை அஸ்ஸாமில் 42 சதவீதமும், கர்நாடகத்தில் 40 சதவீத வாக்குகளும், ஆந்திராவில் 35 சதவீத வாக்குகளும், சட்டீஸ்கரில் 40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
குஜராத்தில் மிக மோசமாக மதியம் 2 மணி வரை 23 சதவீத வாக்குகளே பதிவாயின.
இன்று காலை சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நான்கு இடங்களில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை உடைத்துவிட்டுச் சென்றனர்.
இங்கு நக்சல்கள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 4 துணை ராணுவப் படையினர் காயமடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாக்குச் சாவடியைத் தாக்கி அதிகாரிகளை விரட்டிய நக்சல்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு நக்சலைட் கொல்லப்பட்டார். ராஞ்சியில் தேர்தல் அதிகாரி ஒருவர் கிரனைட் குண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.
அதே போல பிகாரில் மத்திய ரயில்வே அமைச்சர் போட்டியிடும் குர்சாகிரி மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவு தொடங்கியவுடன் ஒரு வாக்குச் சாவடியின் வெளியே குண்டு வெடித்தது. இதையடுத்து அங்கு கலவரம் வெடிக்க, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார்.
மேலும் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தொண்டர்கள் இருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாமில் வாக்குப் பதிவு படு விறுவுறுப்பாக நடந்து வருகிறது. காலை 10 மணிக்குள் அங்கு 20 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன.
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் வாக்குச் சாவடிகளின் மீது தீவிரவாதிகள் நடத்திய கிரனைட் குண்டு தாக்குதலில் இரு வீரர்கள் பலியாயினர். தீவிரவாதிகள் வைத்த கண்ணி வெடியில் இருந்து காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஒமர் பரூக் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அதே போல மிசோரமிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதுவரை மொத்தம் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியாகியுள்ளனர்.
கர்நாடகத்தில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டருக்கு கத்திக் குத்து விழுந்தது. மணிப்பூரில் ஒரு வாக்குச் சாவடி அதிகாரி கடத்திச் செல்லப்பட்டார்.
இன்று குஜராத், மகாராஷ்டிரத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
ஆந்திராவில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் இன்று 21 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. அதே போல 147 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
கர்நாடகத்தில் உள்ள மொத்தம் 28 தொகுதிகளில் இன்று 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 120 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடக்கிறது.
பிகார், ஒரிஸ்ஸா, சட்டீஸ்கரில் தலா 11 மக்களவைத் தொகுதிகளிலும் அஸ்ஸாம். ஜார்க்கண்ட் மாநிலங்களில் தலா 6 தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு நடக்கிறது.
காஷ்மீர், மேகாலயாவில் 2 தொகுதிகளிலும் தாதர், டையூ தாமன், அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்கள்ல் உள்ள தலா ஒரு தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடக்கிறது.
வாக்குப் பதிவு நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
காஷ்மீர் மற்றும் அஸ்ஸாமில் 316 கம்பெனிகள் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 20,000 போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிகாரில் மட்டும் 6,400 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டு அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதே போல கர்நாடகத்தில் 5,000 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்பதால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39866000/jpg/_39866316_machine.jpg' border='0' alt='user posted image'>
மாலை 5 மணி வரை இந்த வாக்குப் பதிவு நடக்கும். சுமார் 17.5 கோடி பேர் இன்று வாக்களிக்க தகுதி பெற்றவர்களாவர். இந்த முறை முழுக்க, முழுக்க மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மூலமே ஓட்டுப் பதிவு நடக்கிறது.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40056000/jpg/_40056815_vend203.jpg' border='0' alt='user posted image'>
[size=9]Our thanks to thatstamil and bbc.com
|
|
|
| அன்னை பூபதிக்காக... |
|
Posted by: kuruvikal - 04-20-2004, 11:55 AM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
<img src='http://sooriyan.com/images/stories/ltte/ap.jpg' border='0' alt='user posted image'>
அகம்நிறை வாழ்கின்ற அன்புடைத் தெய்வமே!
அகிம்சைவழி வாழ்ந்திட்ட அன்னை பூபதியே!
இகமிங் குள்ளவரை என்றும் நிலைத்திடும்
இணையிலாப் புகழ்பூத்த இன்னுயிர் மாதே!
தகவுடை மங்கையர் திலகமே! தாயே!
தக்கவோர் கவிபுனைந்து தாள்மீது படைத்திட
மகள்நான் விருப்புற்றேன் மனத்துயர் வெளிப்படுத்தி!
மறைவின்றி வடிக்கின்றேன்! மனமுவந்து விடைதருக!
சிங்களத்தின் கொடுமையிற் சீற்றமுற்று நாமிருக்க
சிந்திய இரத்தமது உலர்ந்து வற்றுமுன்னே
வங்கக் கடல்கடந்து வந்தனர்வாழ் வளிக்கவென
வஞ்சம்செய் உளத்தினராய் வலிந்தங்கு புகுந்தனர்!
இங்குற்ற மாந்தரெலாம் இனிதே மகிழ்ந்திருக்க
இனியெமக் குத்துயரில்லை யெனக்கூறி நிமிர்ந்திருக்கப்
பொங்கிடும் மெய்யுணர்விற் கண்டனையோ அவர்குள்ளம்?
பொறுத்திருந்து செயற்படுத்தக் கொண்டனையோ திருவுளம்?
அமைதிபேண வந்தவரோ ஆக்கிரமிப் பாளரானார்!
ஆண்பெண் கிழவரொடு குழவியெனப் பேதமின்றி
எமையெண்ணிப் பார்த்திடா எரித்தும் புதைத்தும்
அளவிட முடியாத் தீமைகள் புரிகையிலே
தமையுணர்ந்து மட்டுநகர் மங்கையர் விழித்தெழத்
தலைவியாய் முன்வந் துண்ணா நோன்பிருந்து
இமயமே சரிந்திட இன்னுயிர் ஈய்ந்திட்ட
எம்முயிர்த் தாயேஎன் வினாவிற்குப் பதிலென்ன?
இன்றுநாம் உனக்கான விழாக்காணும் பொழுதினிலே
இன்துயில் புரிகின்ற பூங்காவின் நடுவினிலே
நன்றிலா விடயங்கள் நாடோறும் கண்டுமே
நானிலமும் மனம்நொந்து நயனநீர் சொரிகிறதே!
பன்றிகளாய் மனிதவினம் மாறுதல்தான் ஏன்தாயே?
பகைவருடன் கரம்கோத்துப் பாலகரைக் கொல்லுதலும்
ஒன்றிணைந்து பிரிவினைகள் மழலைகட்கு ஊட்டுதலும்
உன்மனதை வருத்தலையோ? உண்மைதனை விளம்பம்மா!
அன்னையே உன்நிலம் ஆண்டாண்டு காலமதாய்
அரக்கரின் அழிவிற்குள் அடங்கியதும், ஆங்கே
அந்நியரின் வரவதனால் அவர்பால் விளைநிலங்கள்
ஆனதனால் உன்னினம் அபலைகளாய் மாறி
இன்னுயிர்கள் துறந்தும் இடப்பெயர்வால் நலிந்தும்
ஏழ்மையுறு வாழ்வுடனே ஏதிலிக ளாகிடத்
தன்னின வரலாற்றைத் தெரிந்துமே சிலரங்கு
சதியின் வசமானாரே! தாழ்வுற்றுப் போதற்கோ?
வடக்கைமட்டும் ஏற்றிடுக! கிழக்கைநீர் மறந்திடுக!
வளமான வாழ்வங்கு வழியமைத்துக் கொடுத்திடுவோம்!
துடுக்குத் தனமாகத் தொடுத்தனர் சொல்லம்பு!
துடித்தெழுந் தான்தம்பி துட்டரை நோக்கியங்கு
திடமாகப் பதிலுரைத்தான்! தினவெடுத்த தோளுடனே!
தனித்தமி ழீழமொன்றே தாரகமொழி யென்றான்!
கடிதென மொழிந்தவுரை காத்ததுன் மண்தனை
கயவர்க ளறிவாரோ தியாகத்தின் மேன்மைதனை?
பருகிடும் தாய்ப்பாலின் சுவைதனிலே பிரிவுண்டோ?
பாய்கின்ற குருதியிலும் நிறவேறு பாடுண்டோ?
பிரபாகரன் என்னும் பெருந்தலைவன் மட்டுமன்றிப்
பிணைந்து களம்புகுந்த புலிப்படை மறவரும்
பிரதேசம் பேசவில்லை! பிறர்தமரென எண்ணவில்லை!
பிறந்தமண் காத்திட ஒருமித்துக் களம்புகுந்தார்!
பெருநிலத்தின் விடிவெண்ணி நீபுரிந்த தியாகமும்
பயனற்றுப் போனதுவோ? பகர்ந்திடுவாய் தாயே!
பண்கெட்டுப் போனதான பாடல்கள் போன்றும்,
பாதியாய்ப் பகிர்ந்தெடுத்த பளிங்குச் சிலைனெவும்,
மண்பிரிக்கப் புறப்பட்டார்! மாண்புறுமோ தாயே?
மன்னுமுயிர்க் கழிவில்லை, மாநிலத்தே யாதலினாற்
கண்திறந்து பாரம்மா! கல்லறைகள் விடுத்தெழுந்து
கண்மணிகள் தனைச்சேர்த்துக் காத்திடப் புறப்படுக!
எண்ணும் பொழுதிலென் இதயமே குமுறுதம்மா!
ஈனரின்அறி வீனத்தால் உன்உள்ளமும் வெந்ததோ?
முடிவான கருத்தொன்றை முன்வைக்க விரும்புகின்றேன்!
மனத்தின்கண் மாசகற்றி மனிதத்துடன் வேண்டுகிறேன்!
படித்தவர், பாமரர், பயிலுனர் யாராயினும்
பிரதேச வாதமெனும் புற்றுநோய்க் கிருமிதனை
நொடியினில் அகத்தினின்றும் நொருக்கிடுதல் வேண்டும்!
நூலளவு தங்கிடினும் நோய் பெரிதாகி
விடிவுதனைத் தடுத்திடும்! வேதனையை அளித்திடும்!
வளமான எதிர்காலம் அழிதற்குத் துணைபோகும்!
கனடாவிலிருந்து பவித்திரா
நன்றி தமிழ்நாதம்...பட உதவி சூரியன் டொட் கொம்...!
|
|
|
| தீக்குள் விரலை வைத்தேன் |
|
Posted by: yarl - 04-20-2004, 06:29 AM - Forum: நூற்றோட்டம்
- No Replies
|
 |
தீக்குள் விரலை வைத்தேன்
எஸ். கே. விக்னேஸ்வரன்
""பிரயாண அனுபவங்கள் என்று மட்டும் இந்நூலைக் கூறி விட முடியாது. இலங்கையின் அரசியலை வரலாற்று ரீதியாக அலசியதோடு, அங்கு வாழும் தமிழ் பேசும் மக்களது இன்றைய துயர் தரும் பிரச்சினையை அவற்றின் அடி நாதத்துடன் அங்குள்ள கலை இலக்கியப் படைப்புகளையும் விரிவான விமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ளார்."" - தீக்குள் விரலை வைத்தேன் நூலைப்பற்றி நூýன் அறிமுகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்ஸீசெ. கணேசýங்கன் அவர்கள்.
""இலங்கையின் வாழ்க்கையில் உணர்ந்தவை, சந்தித்தவை என்பதாகத் தொடங்கும் நூல், தொடங்கும் இடத்தில் இருந்து விடுபட்டு, அரசியல், பண்பாடு, இலக்கியம், போர்ச்சூழல் என்ற தளங்களில் பிரவேசிக்கின்றது. சமகாலப் பயண இலக்கியத்தின் பரிசோதனை முயற்சியாகக்கூட இந்நூலைக் கருதலாம்."" - இது நூலை வெளியிட்ட ராஜராஜன் பதிப்பகத்தார்ஸீதமது பதிப்புரையில் இந்நூல் பற்றி வெளிப்படுத்துகின்ற மதிப்பீடு.
""பயண இலக்கியம் என்பது கண்ணில் பார்த்து ரசித்தவற்றை அப்படியே சுவைபட எழுதுவது என்ற நடைமுறையை மாற்றி, பார்த்தவற்றைக் கருவியாகக் கொண்டு பார்க்க முடியாதவற்றை நுட்பமாக அறிந்து எழுதுதல் என்பதாக நான் என்னை அறியாமலே வளர்ச்சி அடைந்தேன்."" - இது மகேந்திரன் அவர்கள் இந்நூலை எழுதியுள்ள விதம்பற்றிக் கூறுகின்ற ஒரு பகுதி.
இந்த மூன்று மதிப்பீடுகளும் இந்நூல், வெறும் பயண அனுபவமாக இல்லாமல், அதை ஒட்டி இலங்கையின் சமகால நிலைபற்றிய 'பன்முகப் பார்வை"யுடன் எழுதப்பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
நூல்பற்றிய தனது சொந்தப் பதிவுகளை முன்வைக்கப்போகும் ஒருவருக்கு இத்தகைய குறிப்புகள் தவிர்க்க முடியாமல் ஒரு நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றன. தனது சொந்த அபிப்பிராயங்களைச் சொல்கின்ற அதே வேளை இந்தக் குறிப்புகள் பற்றிய அபிப்பிராயத்தையும் சொல்ýயாக வேண்டிய நிலை அவருக்கு வந்துவிடுகிறது. ஒரு வகையில் இவை வாசகர்கள் ஓர் அபிப்பிராயத்தை மேற்கொள்வதற்கான வழிகாட்டல் குறிப்புகளாக அமைந்தாலும், இன்னொரு வகையில் நூýல் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பாக மட்டுமன்றிச் சொல்லப்படாத விடயங்கள் பற்றியும் பேசவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
சந்தேகமில்லாமல் "தீக்குள் விரலை வைத்தேன்" மேலே குறிப்பிட்டிருப்பது போல் ஒரு வித்தியாசமான நூல்தான். 'பயணக்கதை' என்ற பெயரில் அது வளமையான எந்தக் 'கதை விடல்'களையும் செய்யவில்லை. நூýன் முன் அட்டையிலோ அல்லது முன்பக்கங்களிலோ அது ஒரு பயணம் சம்பந்தப்பட்ட நூல் என்று எங்கேயும் குறிப்பிடப்பட வில்லை. பின்புற அட்டையில் செ. கணேச ýங்கன் கூறுகின்ற, அவரது அறிமுகவுரையிýருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியில் இது 'பயண நூல் மட்டுமல்ல' என்ற வசனம் வருகிறது. ஒரு வகையில் இதை ஒரு பயண நூல் என்ற வகையீட்டில் அடக்க யாரும் விரும்பவில்லையோ என்று தோன்றுகின்றது. பதிப்பகத்தார்கூட 'பயண இலக்கிய மரபில்' எழுதப்பட்டுள்ளது என்றும் 'பரிசோதனை முயற்சி' என்றும்தான் கூறுகிறார்கள். இந்த வகையீட்டிற்கு நியாயமான காரணங்களும் இருப்பதாகத் தெரிகிறது. ஒன்று நூல் எழுதப்பட்ட காலம், பயணம் முடிந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னானது. ஆசிரியரின் இந்த இலங்கைப் பயணம், தன் பயண அனுபவங்களையும் அங்குள்ள நிலைமையையும் பற்றிஸீஎழுதுவதற்காகவென மேற்கொள்ளப்பட்ட ஒரு பயணம் அல்ல. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பினை ஏற்றுச் சென்று வந்த ஒரு பயணம்.ஸீஅவருடைய பெரும்பாலான பயண ஒழுங்குகள், சந்திப்புகள் அனேகமாக மு. போ. எ. சங்கத்தினராலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எனவே இப்பயணத்தை முழுக்க முழுக்க ஒரு சுயாதீனமான ஆசிரியரின் தேடலுக்கான பயணம் என்று சொல்வது சாத்தியம் இல்லை. இந்தக் காரணங்கள் 'பயண நூல்' என்று இதை வகைப்படுத்தலாமா என்ற கேள்வியை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
எவ்வாறாயினும் இந்நூல் இலங்கையின் சமகால நிலைபற்றி, அதற்கான பின்னணிகளை வரலாறு, பண்பாடு, கலைப் படைப்புகள், ஆய்வுகள் மற்றும் தனிநபர் அபிப்பிராயங்கள், அனுபவங்கள் என்பவற்றினூடாகத் தேடிக் கண்டடைந்து பதிவுசெய்ய முயன்றிருக்கிறது என்பது உண்மையே. இந்தத் தேடலும் அதற்கான உழைப்பும் ஆசிரியரிடம் காணக்கூடியதாக இருக்கிற விசேடமான பாராட்டுக்குரிய அம்சங்கள். எளிமையான சிக்கலற்ற நடை, வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்டுகின்ற ஓட்டம் என்பன நூலுக்கு இன்னும் சிறப்பைத் தருகின்றன. பல்வேறு மட்டங்களில் பல்வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்பட்ட ஆய்வுகள், சேகரிக்கப்பட்ட தகவல்கள், பதிவுசெய்யப்பட்ட செய்யப்படாத நிகழ்வுகள் போன்றவற்றை ஒன்றாக ஒரே நூýல் காணக் கிடைப்பது இந்நூலுக்குரிய தனிச் சிறப்பு.
தனது பயணம் திருமலை, மலையகம், கொழும்பு என்ற அளவுக்குள் குறுக்கப்பட்டிருந்தபோதிலும், முடிந்தளவுக்கு இலங்கையின் பல்வேறு பிரதேசங்கள் பற்றிய தகவல்களையும் அவர் திரட்டித் தொகுத்துள்ளார். இலங்கையின் இன்றைய நிலை, வரலாற்றுப் பின்னணி, அரசியல், பண்பாட்டுப் போக்குகள் என்பவை பற்றிய தகவல்களை, இலங்கை பற்றிப் போதியளவு தெரிந்துகொண்டிருக்காத வாசகர்களுக்கு இந்த நூல் வழங்குகிறது என்று சொல்லலாம்.
இலங்கை வாழ் மக்களது நடவடிக்கைகள் பண்பாடு, பழகுமுறை, உணவுப் பழக்க வழக்கங்கள், கலைப்படைப்புகள் என்பவை தொடர்பான ஆசிரியரின் கூர்ந்த அவதானிப்புகள், அவற்றை அவர் தனது பிற அனுபவங்களுடன் ஒப்பு நோக்கிப் பார்க்கும் இயல்பு, வரலாற்று வேர்களைக் காண எடுக்கும் முயற்சி என்பவற்றில் அவர் காட்டும் அக்கறை என்பவற்றிற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குறிப்பாக நடேசையா தொடர்பான அவரது பதிவுகள், மலையக மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய சித்திரிப்பு, யாழ் டச்சுக் கோட்டை பற்றிய விபரங்கள், கண்டி அரசனின் இயல்பு, யாழ் நூலகம் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், யாழ்ப் பாணத்திýருந்து முஸ்ýம்கள் வெளி யேற்றப்பட்டமை போன்றவை அவரது கூர்ந்த கவனிப்புக்கும் தேடலுக்குமான சில உதாரணங்கள். ('சேகுவாரா' இயக்கம் என அழைக்கப்படுகின்ற 'மக்கள் விடுதலை முன்னணி' பற்றிய அவரது தகவல்களில், அதன் பெயர்ஸீஎப்படி அவருக்குத் தெரியாமல் போயிற்று என்பது ஆச்சரியமூட்டுகிறது.ன தனது பயணத்தை மையமாக வைத்துச் சுவையான வாசிப்புக்கு உகந்த விதத்தில் அவர் இலங்கையைப் பற்றிய ஒரு சித்திரத்தைத் தொகுத்துத் தந்திருக்கிறார்.
335 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் இருபத்தி எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இந்த அத்தியாயங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவையாகத் தோன்றவில்லை. பெருமளவுக்கு அவை வெவ்வேறு விடயங்கள் பற்றிப் பேசுபவையாக இருந்தபோதும், நூலுக்கான நோக்குடன் அல்லாமல் வேறு ஏதோ காரணத்திற்காக (சில வேளை தொடராக வெளியிடும் வசதிக்காக இருக்கலாம்) பிரிக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. ஆயினும் இது நூýன் வாசிப்பு ஓட்டத்திற்குத் தடையாக இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் ஒரு கவனமான எடிட்டிங் அல்லது செப்பனிடல் மூலமாக இதை மேலும் இறுக்கமாக்கியிருக்க முடியும் எனத் தோன்றுகிறது. சில விபரப் பிழைகள், தகவல் குறைகள் போன்றவற்றையும் (அச்சுப்பிழைகள் அல்ல) இதன் மூலம் தவிர்த்திருக்க முடியும். உதாரணமாக, இலங்கை வாழ் முஸ்ýம்களை 'இஸ்லாமியத் தமிழர்' என்று (பக்கம் 20) எழுதுவது தமிழர் சிங்களவர் மோதல் 'மிகுந்த தொன்மையைக் கொண்ட'தாக (பக். 21) குறிப்பிடுவது, திட்டமிட்டக் குடியேற்றம் மன்னாரிலும் நடந்ததாக வருவது (பக். 23), இலங்கைப் பயணத் திகதிகளைப் பற்றிய விபரமெதுவும் இல்லாமல் (பக். 29) இருப்பது, யாழ்ப்பாணத்திýருந்து புýகளால் வெளியேற்றப்பட்ட முஸ்ýம்களின் தொகை பற்றிய தகவற்பிழை (சரியான தகவல் 40000 முஸ்ýம்கள் - பக். 82), தமிழ் மொழி முஸ்ýம்களால் அராபிய மொழியில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் தகவல் (பக். 85) இன்னமும் குடியுரிமை பெறாத இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய மலையக மக்கள் இலங்கையில் இருக்கிறார்கள் (பக். 118) போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம்.
தவிரவும் ஆசிரியரது பயணம் மு. போ. எ. சவினால் ஒழுங்கு செய்யப்பட்டதாலோ என்னவோ வேறு சில தவறுகள் ஏற்பட்டிருக்கின்றன. இலங்கையில் உள்ள பிற அரசியல், இலக்கியக் கோட்பாடுகளைக் கொண்டவர்களுடனான தொடர்பும் அவர்களுடைய கருத்துகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிடைக்காமல் போய்விடுகின்றன எனத் தோன்றுகின்றது. இந்த விடயம் தொடர்பாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பு அவருக்கு ஏற்படாததற்குக் காரணம் அவர் இ. மு. போ. எ. சவை ஒரு பரந்த ஜனநாயகப் பண்புள்ள அமைப்பாகக் கருதிவிடுவதுதான். ""முற்போக்கு எழுத்தாளர் சங்க இலக்கியப் பேரரங்கு யாரையும் ஒதுக்கிப் புறக்கணித்ததாகத் தெரியவில்லை.""(பக். 35) என்று அவர் எழுதும்போதே இந்தத் தவறு நிகழ்ந்துவிடுகிறது. இந்த நம்பிக்கைதான் பல இடங்களில் தவறான சில முடிவுகளை எடுக்கக் காரணமாகி இருக்கிறது என்று தோன்றுகிறது. உதாரணமாக, சிங்கள எழுத்தாளர் முன்னணி பற்றிய மிகை மதிப்பீடு, "இஸ்லாமியத் தமிழர்" என்ற பதத்தைப் பயன்படுத்துதல், இலங்கையின் இனப் பிரச்சினையோடொட்டிய சிக்கல்களை முடிந்தளவுக்கு மேலெழுந்த வாரியாகவே சொல்ýவிட்டு விடல் போன்ற ஒரு சிலவற்றைக் குறிப்பிடலாம்.
இலங்கையின் இன்றைய அரசியல் நிலை மு. போ. எ. சவின் வரையறைகளுக்கு மேலாக வளர்ந்து நிற்கிறது. மலையக மக்களிடையே 'மலையகத் தமிழர்' என்ற தேசிய அடையாளமும் முஸ்ýம்களிடையே "இலங்கை முஸ்ýம்கள்" என்ற தனித்துவமும் தேசிய அடையாளமும் இன்று பலம் பெற்றுவிட்டிருக்கின்றன. 'தமிழ் பேசும் மக்கள்' என்ற பொதுவான பதாகையின் கீழ் இன்று இவர்களை இணைத்துவிட முடியுமான நிலை இல்லை. அவர்களது தனித்துவமும் தேசிய அடையாளமும் அங்கீகரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலான ஓர் அரசியல் கூட்டு மட்டுமே நடைமுறை நிலைமைக்குப் பொருத்தமானது என்ற சூழலே இன்று நிலவுகிறது. 'இஸ்லாமியத் தமிழர்" போல என்ற வகையீடு முஸ்ýம்களை வெறுமனே 'கிறிஸ்தவத் தமிழர்" போல 'இஸ்லாமிய மதத் தமிழர்கள்' என்று குறிப்பிடுகிறது. இது இன்று எழுந்துள்ள இனத்துவச் சிக்கல்களைப் பற்றிய தவறான புரிதல்களுக்கு இட்டுச் செல்லக் கூடியது. முஸ்ýம்கள் தம்மைச் "சோனகர்" என்று அழைப்பது குறித்து இன்று தீவிரமாகச் சிந்தித்து வருகிறார்கள் என்றால் அது அவர்கள் தமது தனித்துவ அடையாளத்தையும் அதற்கான அங்கீகாரத்தையும் கோருகின்றார்கள் என்பதன் வெளிப்பாடுதான். இந்தத் தனித்துவ அடையாளம் தமிழர்களுடனான உறவை மோசமாக்கும் என்ற கருத்து வெறுமனே ஆபத்தானது மட்டுமல்ல, பல பின்விளைவுகளைத் தரக்கூடிய அடக்குமுறை அம்சத்தை உள்ளகத்தே கொண்டதும் ஆகும்.
நூýல் எடுத்தாளப்படுகின்ற கவிதைகள், கதைகளில் பலவும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு அல்லது ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்ட பிரச்சினைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன. தேசிய விடுதலைப் போராட்டத்தின் மறுபக்கம், இனத்துவ முரண்பாடுகளின் தன்மை, மலையகத்தின் எழுச்சி போன்ற பல்வேறு அம்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பல படைப்புகள்வந்துள்ளன. ஆத்மா, பெüசர், றஷ்மி, சோலைக்கிளி, எச். எம். பாறுலீக், முகமட் அபாலீ, அஸ்ரப் சிஹாப்தீன் போன்ற முஸ்ýம் படைப்பாளிகளையோ உமா வரதராஜன், ரஞ்சகுமார் போன்றோரையோ சந்திக்க முடிந்திருந்தால், சாந்தனின் இடைக்காலப் படைப்புகளுடன் மூன்றாவது மனிதன், சரிநிகரில் வெளியான அரசியற் கட்டுரைகள், படைப்புகள் என்பவற்றுடன் பரிச்சயம் ஏற்படுவதற்கான வாய்ப்புக் கிடைத்திருந்தால், எம். ஏ. நுஃமான், எஸ். எல். எம். ஹனிபா, எஸ். பால கிஸ்ணன், ஹஸ்புல்லா, மெüலவி சுஃபியான் போன்றோருடன் உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தால் இலங்கைப் பிரச்சினையின் இன்றைய நிலை தொடர்பான இன்னொரு பக்கத்தைத் தெளிவாக முன்வைத்திருக்க முடியும்.
பெண்ணியம் தொடர்பான ஒரு சில கருத்துகள் நூýல் ஓரிடத்தில் வந்து போகின்றன. பெண் மீதான ஒடுக்குமுறை, பாýயல் வன்முறை, அவளுக்குச் சமுதாயத்தில் உண்டான இடம் என்பன தொடர்பான எதிர்ப்புக் குரல்கள் இன்று இலங்கையில் மிகவும் இயல்பான விடயங்களாகிவிட்டன. முதலாளித்துவப் பத்திரிகைகளில்கூட இந்த விடயங்கள் வெளிவருகின்றன. ஆயினும், பெண்ணியச் சிந்தனைகள் பலமாக இங்கு வேரூன்றிவிட்டதாகக் கூற முடியாது. கலை, பண்பாடு, மொழி போன்ற விடயங்களில் இது இன்னமும் இறுக்கமான நிலையிலேயே உள்ளது. எனினும் கடந்த 10 ஆண்டுகளில் அது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும். அதற்காகப் பல பெண்கள் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திவந்துள்ளனர். ஆயினும் இந்தப் போராட்டத்தில் மு. போ. எ. சவிற்கு எந்தப் பங்களிப்பும் இல்லை என்றே சொல்ல வேண்டும். நூýல் இந்தப் பக்கம் பேசப்படவே இல்லை. ஆசிரியரின் பயணத்திற்குக் காரணமான இலக்கிய மாநாடுகள், அவற்றுடன் தொடர்புள்ள இலக்கியச் சந்திப்புகள் போன்றவற்றை ஒட்டிய கருத்தாடல்கள் விவாதங்கள் அனுபவங்கள் பற்றிய விபரங்களை இந்நூல் அவ்வளவு விரிவாகவோ ஆழமாகவோ தர முற்படவில்லை. அதே வேளை பிற விடயங்களில் அதன் பார்வை அனுபவம் முழுமையுறாமல் இருக்கிறது. இது இன்னும் சிறப்புற வந்திருக்கக்கூடிய ஒரு நூலை, இடைத்தர நூல் என்ற மட்டத்தில் இருத்திவிடுகிறது. கூடவே இக்குறிப்பின் ஆரம்பத்தில் தரப்பட்ட மதிப்புரைகளுக்குரிய கனதியைப் பெற்றுக்கொள்ளவும் நூல் தவறிவிடுகிறது.
ஆயினும் தீக்குள் விரலை வைக்கத் துணிந்த ஆசிரியரின் ஆர்வம் பாராட்டுக்குரியது. இலங்கையின் தற்கால நிலை தொடர்பாக இலங்கையரல்லாத ஒருவரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் நூல் என்ற வகையில் இது முதலாவதும் சிறப்பானதுமான ஓர் இடத்தைத் தனக்கெனப் பிடித்துக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
தீக்குள் விரலை வைத்தேன்
சி. மகேந்திரன்
வெளியீடு:
ராஜராஜன் பதிப்பகம்
19, கண்ணதாசன் சாலை
தி. நகர், சென்னை - 17.
பக். 336; விலை ரூ. 125
http://tamil.sify.com/kalachuvadu/kalachuv...php?id=13431757
|
|
|
| புலிகளைப் புரிதல் |
|
Posted by: Mathan - 04-19-2004, 09:02 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
புலிகளைப் புரிதல்
<b>"புலிகள் எப்போதும் புலிகளாகவே இருக்க வேண்டும். அப்படி இருக்கும் வரைதான் தமிழனுக்கு மரியாதை. "</b>
ஊடகவியல் பணி மிகப் புனிதமானது. எந்த அளவிற்குப் புனிதமானது என்றால், கற்பித்தற் பணியைப் போல அது புனிதமானது. ஊடகத்துறையினரைப் பொறுத்தவரை - குறிப்பாக, செய்தியாளர்கள், ஆய்வுரையாளர்கள், மற்றும் ஊடக சேவையாளர்களைப் பொறுத்தவரை - வெறுமனே ஒரு தொழிலாக, அல்லது சுயதிருப்திக்காக, அல்லது புகழுக்காக அந்தப் பணியில் ஈடுபடுவதைவிட, தாம் சார்ந்த மக்கள் சமூகத்திற்கு சீரிய கருத்துக்களை ஊட்டி, அவர்களைப் பக்குவப்படுத்தி, அவர்களுக்குத் தெளிவான சிந்தனை முறைமையைப் புகட்டுவதை அவர்கள் முதன்மையாகக் கருத வேண்டும். அதை அவர்கள் ஒரு தார்மீகக் கடமையாகக் கொள்ள வேண்டும். ஆக மொத்தத்ததில் அது ஒரு தொழில் அல்ல அது ஒரு சேவை.
இப்போது - கருணா விவகாரத்தின் முதலாவது அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. மட்டக்களப்பு அம்பாறை வழமைக்குத் திரும்பிவிட்டது. ஆனால், இதுவரை - கருணா விவகாரத்தை - வெளிநாட்டுச் செய்தியூடகங்கள் தங்கள் வியாபாரத்திற்காகப் பாவித்தன: அது அவர்களது தொழில்: அவர்களோடு கோபிப்பதில் நியாயமில்லை. சிங்களத்தரப்புச் செய்தியூடகங்கள் தங்கள் பேரினவாத நன்மைக்காகப் பாவித்தன: அவர்கள் அப்படித்தான் செய்வார்கள்: அவர்களோடு கோபிப்பதில் பயனேதுவும் இல்லை. ஆனால், சில தமிழ் ஊடகங்களும், சில தமிழ் செய்தியாளர்களும், சில தமிழ் ஆய்வாளர்களும் - கருணா தனது முயற்சியில் வெல்லவேண்டும் என விரும்பியவர்கள் போலவும், வெல்லுவார் என நம்பியவர்கள் போலவும் தென்பட்டுக்கொண்டிருந்தார்கள். கருணா விவகாரத்தை, அந்த மிகச் சிலர் கையாண்டிருந்த முறை தான் மிகுந்த மனக்கவலையைத் தருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை - அதன் போராளிகளை தங்கள் சொந்தப் பிள்ளைகள் போல தமிழ் ஆய்வாளர்கள் பார்க்க வேண்டும் என்பது எனது அவா. புலிகள் தொடர்பாக எழுதும் பொழுது, பத்திரிகைகளுக்குப் பத்தி எழுதும் ஒரு தொழில் என்பதற்கு அப்பால், தங்களது ஒரு சொந்த விவகாரத்தைப் பற்றி எழுதுகின்றோம் என்ற ஒரு நெருடல் எந்தத் தமிழனுக்கும் இருக்க வேண்டும். நான்கு பக்கமும் வேலி கட்டி, அதற்குள்ளேயே குடும்பம் நடாத்தி, உள்ளுக்குள் என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் அதை எங்களுக்குள்ளேயே மூடிமறைத்து, வெளியில் சிரித்துக்கொண்டு இன்பமுகம் காட்டும் கலாச்சாரப் பண்பு தமிழர்களுடையது. அது சுயகௌரவத்தைப் பேணிப் பாதுகாக்கும் வழிமுறைகளுள் ஒன்று. இன்னொரு வகையில் - 'எங்கள் உள்வீட்டுப் பிரச்சனை அடுத்தவர்களுக்கு எதற்கு?... எமது சிக்கல்களை நாமாகவே அவிழ்த்துக் கொள்வோம்' என்ற மனப்பாங்கு என்றும் சொல்லலாம். ஆனால், சொந்த வீட்டுக்குள் சச்சரவு வரும்போது எமக்குள் வெளிப்படும் இந்தச் சுயகௌரவ மனப்பாங்கு, சொந்த இனத்தின் விவகாரத்தில் ஏன் உருக்கொள்ளாமல் விட்டுவிடுகின்றது என்பது தான் புரியவில்லை. ஒரு விடயத்தில் எங்களுக்குத் தெளிவு வேண்டும். அதாவது - சரியும் சரியின்மையும் இருக்கலாம் நலமும் நலமின்மையும் இருக்கலாம். Perfection-னை எல்லாவற்றிலும் எதிர்பார்க்கமுடியாது - எதிர்பார்க்கவும் கூடாது. இப்பேர்ப்பட்ட ஒரு பிரமாண்டமான விடுதலை இயக்கத்தைக் கொண்டு நடாத்துகின்ற போது ஆங்காங்கே சின்னச் சின்ன கீறல்கள் விழத்தான் செய்யும்: அது தவிர்க்க முடியாதது. 'நிறைவு' என்பது அதைப் பார்ப்பவர்களின் சிந்தனையைப் பொறுத்தது. 'வீடு' என்று வரும் போது, அவர்களில் என்ன தான் குறைகள் இருந்தாலும், சொந்தப் பிள்ளைகளிலும், சகோதரர்களிலும் நாம் நிபந்தனையற்ற அன்பைப் பொழிகின்றோம் அல்லவா?.... நாடு என்று வரும்போது ஏன் எங்களால் அவ்வாறு உணரமுடியாமல் இருக்கின்றது?... எல்லாவற்றுக்கும் மேலால் - விடுதலைப்புலிகள் இயக்கம் எங்களுடைய இயக்கம்: எங்களுக்கான இயக்கம்: எங்களுடைய உற்றாரும் உறவினரும் நண்பர்களுமே புலிகளின் போராளிகள். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழர்களைப் புலிகளாகப் பார்க்கும் பக்குவத்தை உலகமே அடைந்துவிட்டது. அந்தப் பக்குவம் எங்களில் சிலருக்கே இன்னும் வரவில்லையென்றால், அது துயரமல்லவா?...
தமிழர்கள்; இன்று உலகில் இறுமாப்போடு வாழ்வதற்கு புலிகளே காரணம் என்பது அப்பழுக்கற்ற உண்மை. தனிப்பட்ட முறையில் எனக்கு தமிழனாக வாழ்வதில் ஒரு கர்வம் உண்டு. அந்தப் பெருமை புலிகளால் மட்டுமே கிடைத்தது. தமிழர்களது எதிர்காலமும், விடுதலைப்புலிகளது நல்வாழ்வும் பாலும் வெள்ளை நிறமும் போல இரண்டறக் கலந்தது. இந்த இயக்கமும், இந்தத் தலைவனும் இருக்கின்ற காலத்தில் தமிழனுக்கு ஒரு விமோசனம் கிடைக்கவில்லையென்றால், அடுத்த இரண்டாயிரம் வருடங்களுக்கு தமிழன் இப்படியே அல்ல, இதை விடவும் கேவலமான நிலையிலேயே கிடப்பான் என்பது விஞ்ஞான பூர்வமாகவும், வரலாற்று ரீதியாகவும் நீருபணமாகிவிட்ட உண்மை. இந்த நிலையில் விடுதலைப் புலிகளைப் பலவீனப் படுத்துவது போன்ற - அவை உண்மையானவையோ, அல்லது உருவாக்கப்பட்டவையோ - தகவல்களை தமிழர்களாகிய நாங்களே பரப்புவது, இனரீதியாக எவ்வகையான நன்மைகளையுமே எங்களுக்கக் கொண்டுவரப் போவதில்லை; மாறாக தீமையைத்தான் அது கொண்டு வரும்.
சில சமயங்களில் சில தமிழ் எழுத்தாளர்கள் தங்களை 'நடுநிலையாளர்கள்' என்பது போலக் காட்டிக் கொள்ள முனையலாம். அது ஒரு ?கனவான்தனமான? விடயம் என்றும் கருதலாம். அத்தோடு, ?நாங்களெல்லாம் புத்திஜீவிகள். நாங்கள் சாதாரண பாமர மக்கள் போல கண்மூடித்தனமாக ஒரு விடயத்தில் பற்றோ அல்லது வெறுப்போ கொள்ள மாட்டோம். அவர்களுக்கு ஒரு படி மேலே நின்று நிகழ்வுகளை நாங்கள் பகுத்தறிவுக் கண்கொண்டு தான் பார்ப்போம்' என்று காட்டவும் முனையலாம். அப்படியானவர்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டிய ஒரு விடயம் உண்டு. அடக்குகின்றவர்களுக்கும் அடக்கப்படுகின்றவர்களுக்கும் இடையிலான ஒரு பெரும் அரசியற் போராட்டத்தில் 'பக்கச்சார்பின்மை' என்பது அர்த்தமற்றது. அங்கே 'பக்கச்சார்பு' இருக்க வேண்டும்;. அடக்கப்படுகின்றவர்களின் பக்கம் சார்பாக இருக்கவேண்டும். எழுதும் போது ஒரு சீரிய நோக்கம் இருக்க வேண்டும். அதிலும், இது போன்ற சமூக ? அரசியல் விவகாரங்களை எழுத்திலிடும் போது அதன் நோக்கம், ஒர் உயரிய கருத்தைச் சொல்வதாக இருக்க வேண்டும். அந்தக் கருத்து அந்த எழுத்துத் தொடர்புபட்ட மக்கள் சமூகத்திற்கு அல்லது அந்த எழுத்துத் தொடர்புபட்ட மக்கள் சமூகத்தைப் பற்றி ஒரு உருப்படியான செய்தியைச் சொல்வதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் அந்த மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். ஆக மொத்தத்தில் அந்த எழுத்து சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தெளிவு இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை உலகம் தோன்றியது முதற்கொண்டு இன்றுவரையான காலகட்டத்தில் முதற் தடவையாக ஈழத்தமிழினம், வரலாற்றின் அதி சிறந்த காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கின்றது. இந்தக்காலகட்டத்தில் எமக்கு ஒரு நல்லது நடக்கவில்லையென்றால் எனது கற்பனைக்கெட்டிய தூரம்வரைக்கும் இனி எப்போதுமே அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனவே, இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லோருமே - சாதாரண பொது மக்களிலிருந்து பெரும் கல்விமான்கள், அறிவுஜுவிகள் வரை - ஒன்றுபட்டிருக்கவேண்டியது இன்றியமையாதது. தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் இரு முனைகளில் சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்கின்றார். ஒன்று - ஆயதப் போர் முனை: அதை அவரிடமே விட்டுவிடுங்கள், அவர் பார்த்துக்கொள்ளுவார். அடுத்தது ? அரசியற் போர்முனை: அது நாங்கள் எல்லோருமே சேர்ந்து வென்றெடுக்க வேண்டிய பொதுக்களம்.
இங்கே இன்னொரு விடயத்தையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உள் விவகாரங்களைச் செய்திகளின் மையப் பொருளாக்குகின்ற போது அது ஒரு 'விடுதலை இயக்கம்' என்ற அடிப்படை உண்மையை சில ஆய்வாளர்கள் மறந்து விடுகின்றார்கள். அவ்வாறு மறந்து, புலிகள் இயக்கத்தையும் ஒரு சாதாரண அரசியற் கட்சி போலப் பார்க்கத்தொடங்கும் போது, அவர்களது ஆய்வுக்கரு வலுவிழந்துவிடுகின்றது. அவ்வாறு அவர்கள் தவறான கண்கொண்டு பார்ப்பது மிகக் கவலைக்குரிய விடயமும் ஆகும். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தொழில் சார் அரசியற் கட்சி அல்ல: புலிகளின் போராளிகள் பதவிச் சலுகைகளுக்கும், மாதச் சம்பளதிற்கும், உபரிக் கொடுப்பனவுகளுக்கும் உரியவர்களும் அல்லர். புலிகள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம்: ஒரு அரசியற் கட்சியை விமர்சிப்பது போலப் புலிகள் இயக்கத்தை விமர்சிப்பது எவ்வகையிலுமே பொருத்தமற்றது. ஆய்வு செய்வதிலும் அதை எழுத்திலிடுவதிலும் எமக்கிருக்கும் வித்தகத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக எழுதுவுதைவிட, தேசத்தின் நன்மை கருதி ? எப்போதுமே ? எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது என்று ஒரு சுயதணிக்கை வைத்திருப்பது தேவையானது. தமிழீழ விடுதலைப் போராட்டம் வளர்ந்து செல்லும் பாதையை இன்னும் சற்றுச் செப்பனிட முடியும் என்று யாராவது கருதினால், தங்களது அந்த அறிவார்ந்த ஆலோசனைகளை ஆங்கிலப் பத்திரிகைகளினுடாக வழங்குவதைவிட வேறு சிறந்த வழிகளும் உண்டு.
துரதிஸ்டவசமாகப் புலிகளின் உள் வீட்டு விவகாரம் வெளியில் வந்துவிட்டிருந்தத. செய்திகளதும், ஆய்வுகளதும் முக்கிய கருப் பொருளாக கருணா விவகாரம் உருவெடுத்ததன் பின்பு விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான தங்களது பல்வேறு கருத்துக்களையும் சில தமிழ் ஆய்வாளர்கள் விலாவாரியாக விபரித்து வந்தார்கள். அவர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளில் உட்படுத்தும் தகவல்கள் உண்மையானவையா, அல்லது கற்பனையானவையா என்பது கூட அனேக வாசகர்களுக்குத் தெரிந்திருக்காது. அதன் விளைவு ? எல்லாம் தெரிந்தவர்கள் போல எம்மில் சில ஆய்வாளர்கள் வெளிப்படுத்திய உண்மையற்ற தகவல்களையும் மக்கள் உண்மையானவை என்று நம்பிவிடவும், அவ்வாறு நம்பிக் குழம்பிவிடவும் சாத்தியப்பாடுகள் இருந்தன.
தமிழ் மொழியில் உள்ள உலகத்தின் தலைசிறந்த ? செல்வாக்கு மிக்க கருத்துருவாக்க சாதனங்களுள் ஒன்று 'தமிழோசை'. BBC என்ற பெரும் உலக ஊடக சேவையின் அங்கமாக இருந்தாலும் - 'பக்கசார்பின்மை'யைக் கைக்கொள்ள வேண்டும் என்ற அந்தத் தலைமை நிறுவனத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய செயற்பட வேண்டிய விதிமுறை இருந்தாலும் - 'தமிழோசை'க்கு தமிழர்களின் ஆத்ம ஓசையாக இருக்கவேண்டிய ஒரு தார்மீகக் கடைமைப்பாடும் இருக்கின்றது என்பதை அதன் இயக்குனார்கள் தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டும். கருணா விவகாரம் போன்ற Sensitive-வான விடயங்களைக் கையாளும் போது - தமிழ் தேசிய இனத்தின் ஒட்டுமொத்தமான சுபீட்சம் கருதி - நடுநிலையாக இருந்து செய்திகள் வெளியிட வேண்டும் என்பதை விட நியாயத்தின்பால் நின்று, நன்மையின் பால் நின்று நிகழ்வுகளை ஆய்வு செய்ய வேண்டும் அல்லது செய்திகளை வெளியிட வேண்டும். ஒப்பீட்டளவில் 'தமிழோசை மேன்மையுடன் செயற்பட்டது என்றாலும் - கருணாவிடம் செவ்வி கண்டது, கருணாவின் ஆட்கள் அப்படிச் சொன்னார்கள், இப்படி உரையாற்றினார்கள் என்று செய்தி வெளியிட்டது, அல்லது தமிழ் தேசிய ஒருமைப்பாட்டிற்குப் பாதகம் செய்வோரைத் தூர விலக்காமல் ஆதரித்தது எல்லாம் தேவையற்றது. இது ஆனந்தசங்கரி ஐயா, டக்ளஸ் அண்ணர் போன்றவர்களுக்கு மட்டுமல்லாமல், ?தமிழோசை?யின் சில செய்தியாளர்களுக்கும் பொருந்தும். இவ்வாறான செயல்கள் - தமிழ் பேசும் மக்களின் அரசியல் - சமூக வாழ்வில் எவ்விதமான நற்தாக்கத்தையும் ஏற்படுத்தும் தன்மையற்றவை என்பது அல்ல மாறாக, அவை பாதகமான விளைவுகளை மட்டுமே உண்டுபண்ணக்கூடியவை.
கொழும்பின் ஆங்கிலப் பத்திரிகைகள் சிலவற்றில் ஆய்வுரைகள் வரையும் சில தமிழ் எழுத்தாளர்கள் இதுவரை நாளும் தாங்களே கேள்விகளையும் கேட்டு அவற்றுக்குத் தாங்களே விடைகளையும் பகிர்ந்து வந்திருந்தார்கள். கருணா விவகாரம் வெளிப்பட்ட உடனடி ஆரம்பத்தில் அதனை உண்மையிலேயே ஒரு வடக்கு - கிழக்கு பிரதேசவாதப் பிரச்சனை என்றும் பின்பு, புலிகளின் உயர்மட்டத் தலைவர்களுக்கிடையில் சிக்கல் என்றும் வர்ணித்தார்கள். பின்பு, பிரச்சனைக்கான மூலத்தைப் பற்றி அலசுவதை விடுத்துவிட்டு, கருணாவின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும்?... அவரின் முன்னால் உள்ள தேர்வுகள் என்ன?... கருணா விவகாரத்தைப் புலிகள் எப்படிக் கையாளலாம்?... எப்படிக் கையாள வேண்டும்?. என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்துவந்தார்கள். புலிகளுக்கு ஆலோசனைகள் கூட வழங்கினார்கள்.
ஓட்டுமொத்தமான தமிழ் தேசிய இனமே எதிர் கொண்டு நின்ற ஒரு சவாலை --ஒரு பச்சைத் துரோகத்தை - ?அம்மான்களுக்கிடையிலான பிணக்கு: பொட்டு எதிர் கருணா? என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் சுருக்கி, இல்லாத ஒரு கதையை இருப்பதாவும், இருக்கிற ஒரு கதையை இல்லாத மாதிரியும் எழுதியிருந்தார் திரு. D.B.S ஜெயராஜ் அவர்கள் (Sunday Leader: 14 ? 3 ? 04). 'இந்தக் கருணா பிரச்சனை பொட்டம்மானால் உருவாக்கப்பட்டுத் தூண்டப்பட்டது' என ஆரம்பித்து, அதற்கு ஒரு நீண்ட பட்டியலான கற்பனைக் காரணங்களையும் அடுக்கி, ?இந்தப் பிரச்சனைக்குப் பிரபாகரன் தன்னுடைய தளபதிகளிடையே கைக்கொள்ளும் ஒருவகைப் பிரித்தாளும் தந்திரோபாயமும் கூடக் காரணம்? என்று முற்றிலும் உருவாக்கப்பட்ட ஒரு 20 ஆண்டுகாலக் கட்டுக்கதையையும் அவர் வளர்த்துச்சென்றிருந்தார். பின்பு -?பிரபாகரன் மீதான கருணாவின் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள்? என்று ஈர்ப்புத்தன்மை கொண்ட ஒரு தலைப்பை இட்டு, திருவாளர் பாலசிங்கம் அவர்களின் படத்தையும் போட்டு, பாலசிங்கம் அவர்களது Tamil Guardian செவ்வியின் கவர்ச்சியான இரண்டு பந்திகளை கறுப்பு எழுத்துக்களில் பிரசுரித்து - திரு. D.B.S ஜெயராஜ் அவர்கள் எழுதியிருந்த (Sunday Leader: 21 ? 3 ? 04) இன்னொரு கட்டுரையின் உள்ளே இருந்த விடயங்கள், அவருக்கு உள்ளே என்ன இருக்கின்றது என்பதன் பிதிபலிப்பு. ஆங்கிலச் சொல் வண்ணங்களால் வெளிப்பார்வைக்குத் தமிழாபிமானச் சாயம் பூசும் அவரது எழுத்தலங்காரத்தின் பூடகமான உட்கருத்துக்களும், நுட்பமான - உள்ளார்ந்த - அர்த்தம் கொண்ட வார்த்தைப் பிரயோகங்களும் எல்லோராலும் விளங்கிக்கொள்ள முடியாததல்ல. "புலிகளிலிருந்து பிரிந்தவுடனே கருணாவுக்கு எக்கச்சக்கமான ஆதரவும் அவர் மேல் ஏராளமான இரக்கமும்" மற்றவர்களிடம் இருந்ததாக அவர் ஆரம்பித்திருந்தார். அதுவே சுத்தப் பொய். உடனடி ஆரம்பத்தில் மக்களுக்குத் திகைப்பு: ஆத்திரம். நோர்வே போன்ற வெளிநாடுகளுக்கு அதிர்ச்சி: கவலை. அது தான் உண்மை. அவர் தொடர்ந்து எழுதுகையில், "துரதிஸ்டவசமாகப் புலிகள் மற்றும் பிரபாகரனுக்கு ஆதரவும், கருணா மீது பலத்த கண்டனங்களும் பெருகி வருகின்றன. அவர் ஒரு துரோகி என்று வர்ணிக்கப்படுகின்றார். அவரது செயற்பாடுகள் துரோகத்தனமானவையாகக் காட்டப்படுகின்றன. இது சமரசமாகப் போவதற்கான நல்ல சகுணமாகத் தெரியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். புலிகள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம்: புலிகள் இயக்கம் ஒரு இராணுவ அமைப்பு: கருணா செய்தது துரோகம் இல்லையெனில், அதை வேறு எவ்வாறு தான் அழைப்பது?... உலகத்தின் எந்த ஒரு நாடாவது, அல்லது எந்த ஒர் இராணுவமானது இவ்வாறான ஒரு விசுவாசமற்ற துரோகச் செயலை சமரசமாகப் பேசித் தீர்க்கத் தயாராய் இருக்குமா?... பிரித்தானியாவில் இருந்து ஒரு பல்கலைக்கழக மாணவன் தொலைபேசியில் கேட்ட இதே போன்ற ஒரு ?சமரச முன்னெடுப்பு? கேள்விக்கு, தமிழ்ச்செல்வன் ஒரே வரியில் பதில் சொல்லியிருந்தார்: "எங்களுடைய தலைவர் இங்கே கொள்ளைக் கூட்டம் நடாத்திக் கொண்டிருக்கவில்லைத் தம்பி". அதை திரு. D.B.S ஜெயராஜ் அவர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும். அதே கட்டுரையில் அவர் தொடர்ந்து எழுதுதியிருந்தார்: "புலிகள் கருணாவுடன் தொடர்ந்து பகைமையை வளர்த்து ஆயுத நடவடிக்கையில் இறங்கினால், அவர் சிங்களப் படைகளுடன் தன்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும்". ஏன், கருணாவுக்கு வேறு மார்ககங்களே இருந்திருக்கவில்லையா?... தான் செய்த தவறை உணர்ந்து புலிகள் வழங்கிய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளல்?... புலிகளிடம் சரணடைதல்?.... அல்லது, தன்னைத் தானே அழித்துக்கொள்ளல்?..... தனது கட்டுரையை அவர் இவ்வாறு முடித்திருந்தார்: "இந்தப் பிரச்சனையின் முடிவு என்னவாக இருந்தாலும், புலிகள் பலவீனப்பட்டுவிடுவார்கள் கொல்லப்பட்டுவிட்டாலும், கருணா கிழக்கின் தியாகியாகவே திகழ்வார்". பலவீனப்பட்டுவிடுவார்கள் என்பதற்காக, கருணா மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அப்படியே விட்டுவிடச் சொல்லியிருந்தாரா, அல்லது கருணாவை இப்படியே விட்டுவைத்தால் புலிகள் பலமாக இருக்கலாம் என்றிருந்தாரா?... ஒரு துரோகியைத் ?துரோகி? என்று சொல்லப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர் மனது, அந்தத் துரோகியைத் ?தியாகி? என்று ஏற்றுக்கொள்ளவே தயாராய் இருந்திருக்கின்றதா?... உப்புச்சப்பற்ற இவ்வாறான கதைகளை எழுதுவதன் மூலம் அவர் எதை அடைய முயற்சிக்கிறார் என்பது புரியவேயில்லை. ?சண்டேலீடர்? காரனிடம் கட்டுரைக்காக வாங்கும் காசுக்காக ஒரு principle-லே இல்லாமல் எழுதுவது அவர் செய்யும் தொழிலுக்கே துரோகமாக அமையாதா?....
மிக அண்மையில் அவர் Frontline (March 27 - April 09) சஞ்சிகைக்கு இதே கருணா விவகாரத்தை வைத்து ஒரு ஆய்வு எழுதியிருந்தார். கருணாவை 'ஓயாத அலைக'ளின் கள நாயகன் என்றும், 'ஜெயசிக்குறி'யை முறியடித்த யுத்தபிதா என்றும், ஆனையிறவை வெற்றிகொண்ட அசகாயசூரன் என்றும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தாக்கம் மிகுந்த திருப்புமுனைகளை ஏற்படுத்திய இராணுவ வெற்றிகளின் சூத்திரதாரி என்றும் வர்ணித்தது மட்டுமல்ல, அவையெல்லாம் உண்மையென்று கருணாவையே நம்பவைத்தார். (இந்த 'அசகாயசூரன்' என்ன ஆனார் என்பது இப்போது தான் எல்லோருக்கும் தெரிந்துவிட்டதே!) ஆனால், உண்மையில் - 'ஜெயசிக்குறி'யைத் திருப்பி அனுப்பி, ஆனையிறவையும் துடைத்தெடுத்த கள நாயகர்களை வரிசைப்படுத்தினால், ஆகக் குறைந்தது பத்துப் பேராவது கருணாவுக்கு முன்னால் இருப்பார்கள். அது மட்டுமல்ல: வடக்குப் போர் முனையில் ஜெயந்தன் படையணி படைத்த வீரசாதனைகளையெல்லாம் கருணாவின் தனிப்பட்ட சாதனைகளாக திரு. D.B.S ஜெயராஜ் அவர்கள் உருமாற்றம் செய்கின்றார். அது, வரலாற்றுப் பதிவில் நிகழ்த்தப்படுகின்ற மாபெரும் திரிபு. அவர் எழுதும் இது போன்ற கட்டுரைகள்; உண்மைக்கு முற்றிலும புறம்பான ? அதீத கற்பனையான ? அவரே உருவாக்கிய, அல்லது எப்படியோ கிடைத்;த ஒரு சிறு கடுகை மலையாக்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்பது அவருக்கே தெரியும். வாசகர்களும், 'வேறு சில ஆட்களும்' - "புலிகளின் உட்கதை தெரிந்த ஆள்" என்று தன்னைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக, இவ்வாறு அவரே பொய்யான தகவல்களை உருவாக்கி தனது கற்பனை ஆய்வுகளை விரித்துச் செல்வது அவரது வழமையாகிவிட்டது
பொதுவாகவே, கடந்த கால நிகழ்வுகளை மீள் நோக்கினால் - புலிகள் இயக்கம் தொடர்பான அனேக ஊகங்களும், எதிர்வுகூறல்களும் பொய்த்துப்போய்விட்டன. உலகத்தின் புகழ்
பூத்த போரறிவியல் மற்றும் அரசறிவியல் ஆய்வு வித்தகர்கள் கூட அந்த விடயத்தில் தோற்றுப் போய்விட்டார்கள். சற்றே பின்னோக்கிப் பாருங்கள்: "ஓரு சுங்கான் புகைத்து முடிப்பதற்கிடையில் புலிகளின் கதை முடியும்" என்று சொன்ன டிக்சிற் ஒரே சுங்கானை இருபது வருடங்களாகப் புகைத்துக் கொண்டிருக்கின்றார். "எனது படைகளைக் கண்டவுடன் புலிப் பொடியங்கள் காற்சட்டையோடு மூத்திரம் விடுவார்கள்" என்று சொன்ன ரஞ்சன் விஜயரட்ணா, இப்போது ஆளே இல்லை. "97 வீதமான கதை முடிந்து விட்டது, 3 வீதம் தான் பாக்கி" என்று சொல்லித்திரிந்த ரத்வத்தையின் காலத்திலேயே புலிகள் சிங்களப் படைக்கு மிகக்கேவலமான தோல்விகளைக் கொடுத்தனர். சொல்லப்பட்ட எதிர்வுகூறல்கள் எல்லாமே தலைகீழ் ஆகிவிட்டன. திரும்பத் திரும்ப தங்கள் ஊகங்கள் எல்லாம் உண்மைக்கு முன்னால் தோற்றுப் போய்விடுவதைக் கண்கூடாகக் கண்டும், சில ஆய்வாளர்கள் திருந்துகின்றார்களே இல்லை. காரணம் என்னவெனில், எல்லாவற்றுக்கும் மேலான ஒரு யதார்த்த உண்மையை இந்த வித்தகர்களெல்லாம் கிரகத்துக்கொள்ளாமல் விட்டுக்கொண்டேயிருப்பது தான் அது. அது என்னவெனில், பிரபாகரன் என்பவர் ஊகங்களுக்கும் எதிர்வுகூறல்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு விசித்திரமான மனிதர் என்பது தான். பிரபாகரன் ஒரு புதிரான மனிதர். கூட இருப்பவர்களாலேயே புரிந்துகொளவதற்குக் கடினமான ஒரு தனித்துவமான மனிதர். அதிலும் குறிப்பாக - இராணுவ ரீதியாகத் தன்னைச் சுற்றிக் காலத்திற்குக் காலம் போடப்பட்டுவந்த நுட்பமான முடிச்சுக்களையெல்லாம் அவர் எவ்வளவு சாதுரியமாக அவிழ்த்து வருகின்றார் என்பது இன்றுவரையும் கண்டறியப்பட முடியாதிருக்கும் அவரது வியக்கத்தகு ஆற்றல். தமிழீழப் போர் முனைகளின் முழுமுதற் தளகர்த்தர் திருவாளர் வேலுப்பிள்ளை பிரபாகரனேயன்றி வேறு எவருமேயில்லை.
![[Image: pir.bmp]](http://sooriyan.com/images/stories/karuna/pir.bmp)
பிரபாகரனின் யுத்த முறை பற்றிய ஒரு மிக அடிப்படையான உண்மையை இந்த ஆய்வாளர்கள எவருமே சரியாகப் புரிந்துகொள்கின்றார்களில்லை என்று தான் நான் கருதுகின்றேன். அது என்னவெனில், பிரபாகரன் வகுக்கும் போர் விய10கங்கள் ஆட் தொகையின் வலுவையோ, அல்லது படைக்கலக் களஞ்சியத்தின் அளவையோ நிச்சயமாக அடிப்படையாhகக் கொண்டவையல்ல என்பது தான். 13 ஆண்டுகளுக்கு முன்னால், ஆனையிறவு மீது மேற்கொள்ளப்பட்ட - ஒரு மாத காலம் நீண்ட -வெற்றி பெற முடியாமற் போன சமரின் பின், "இலங்கையில் இரண்டு இராணுவங்கள்" இருக்கின்றன என்றவிதமான ஒரு கருத்தை BBC சொல்ல, அந்தக் கருத்துத் தொடர்பாகக் கருத்துச் சொன்ன பொட்டம்மான் சொன்னார், "இரு இராணுவங்கள் என்பதின் அளவுகோல் 'போர்வலு' எனின், அது சரியானதே". அதாவது, பிரபாகரனின் போர்வலு என்பது என்னவெனில் - தேர்ந்தெடுக்கப்பட்ட மூலோபாயம், நுண்ணறிவு கொண்ட வேவு, போர்நுட்பம் மிக்க திட்டமிடல், தேவைக்குச் சற்றும் அதிகமில்லாத ஆள் வலு, பொருத்தமான போருபகரண வழங்கல், மதிநுட்பம் வாய்ந்த படைநகர்த்தல், அர்ப்பணிப்பும் துணிவுடநுமான மனநிலை போன்ற இன்னோரன்ன காரணிகளின் மிகத் துல்லியமான அளவுகளிலான - உச்சப் பெறுபேற்றைத் தரக்கூடிய கலவை ஆகும். இந்த இடத்தில், இந்த 'ஜெயந்தன் படையணி' பற்றிய ஒரு உண்மையையும் சொல்லுவது பொருத்தமாக இருக்கும்: அது என்னவோ கருணா புலிகளில் இருந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டப் போராளிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது உண்மை தான். ஆனால், அதற்குத் தகுந்த பயிற்சிகளைக் கொடுத்து, உகந்த ஆயுதங்களை வழங்கி, பொருத்தமான சண்டைக்களங்களில் தொடர்ச்சியாக இறக்கி, தேர்ந்த அனுபவப் பாடங்களைப் புகட்டி, புலிகளின் முதன்மைப் போரணிகளுள் ஒன்றாகத் திகழந்தெழச் செய்த பெருமை - தலைவர் பிரபாகரனை மட்டுமே சாரும். "வன்னியில் ஜெயந்தன் படையணிப் போராளிகள் ஆயுதங்கள் களையப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்" என்று BBC-'தமிழோசை'க்கு கருணா சொன்ன கதைக்கு இன்னும் மெருகேற்றி, "பொட்டம்மானின் ஆட்கள் அவர்களை ஒவ்வொருவராகப் பரிசோதித்துக்கொண்டு இருக்கின்றார்கள்" என்றும் எழுதியிருந்தார் திரு. D.B.S ஜெயராஜ் அவர்கள். ஜெயந்தன் படையணி மட்டக்களப்புக் களத்தைத் திறந்த போது, தான் எழுதியது எப்பேர்ப்பட்ட பொய் என்பது அவருக்குப் புரிந்திருக்கும்.
தமிழ்ச்செல்வன் திரும்பத் திரும்ப "கருணா ஒரு தனி ஆள்" என்று சொல்லிக்கொண்டேயிருந்தார். ஆனால் திருD.B.S ஜெயராஜ் அவர்களோ ? 'கருணாவிடம் ஆறாயிரம் பேர் இருக்கின்றார்கள், ஆட்டிலறிப் பீரங்கிகள் இருக்கின்றன, பெரும் ஆயுதக்கிடங்கே இருக்கின்றது. கருணா மீது புலிகள் பாயும் போது, கருணாவும் அவர்களைச் சும்மா விட்டுவிடப் போவதில்லை. சிங்களப் படை வேறு சண்டைக்குள் இழுக்கப்படப்போகின்றது. மட்டக்களப்பு வாவிகளில் இரத்த ஆறு ஓடப் போகின்றது' என்றவிதமாகப் பயமுறுத்திக்கொண்டே இருந்தார். அதை நம்பியவர்களும், ?என்ன ஆகுமோ?!... ஏது ஆகுமோ?!...? என்று தலையில் கை வைத்துக்கொண்டிருக்க, பிரபாகரனோ, மூன்றே நாளில் விசியத்தை முடித்து, எல்லோரையும் மூக்கில் விரல்வைக்க வைத்துவிட்டார். உண்மை என்ன என்பது இப்போது ஐயம் திரிபுறத் தெளிவாகிவிட்டது. இந்த 'ஆள் வலு' தொடர்பாக, அனேகமானவர்கள் புரிந்துகொள்ளத் தவறுகின்ற இன்னொரு பரிமாணமும் உண்டு. அது போரியல் பரிமாணம் அல்ல உளவியல் பரிமாணம். சாதாரண மனிதர்கள் போராளிகளாகும் போது, அவர்களை - சுயத்தின் வரம்புகளைக் கடந்து, ஒரு பொது அபிலாசைக்காகத் துறவறம் பூணவைக்கும் தெயவீக ஆளுமை, பிரபாகரனிடம் மட்டுமே தான் உண்டு. பொதுமக்களாக சாதாரண வாழ்வில் இருந்து விட்டுப் பின்பு போராளிகளாக இருப்பவர்களாகவும், போராளிகளாக இருந்துவிட்டுப் பின்பு சாதாரண வாழ்வுக்கு வந்தவர்களாகவும் அனேகருடன் எனக்குப் பரிச்சயம் உண்டு. அவர்கள் பிரபாகரனின் போராளிகளாக இருந்தபோது முற்றிலும் மாறுபட்ட மனிதர்களாக இருந்தார்கள் இருக்கின்றார்கள்.
தேர்தலுக்குப் பின்பு, கருணா விவகாரத்தைப் புலிகள் என்னவிதமாகக் கையாளலாம்?... என்று ஆராய்ந்திருந்தார் திரு. தராகி அவர்கள். Daily Mirror (March 25, 2004) பத்திரிகையில் எழுதிய நீண்ட ஆய்வின் முடிவில் அவர் இவ்வாறு சொல்லியிருந்தார்: "புலிகளுக்கு இருக்கும் முதல் வழி கருணாவை மட்டக்களப்பு - அம்பாறைக்குள் ?பூட்டிச்சிறைப்படுத்தி?, அவர் சிங்களத்தரப்புடன் தொடர்புகளை உருவாக்குவதைத் தடுக்க வேண்டும்". இது உள் ஒன்று வைத்து வெளியில் வேரொன்று சொன்னது போல இருந்தது. அவ்வாறாக கருணாவை மட்டக்களப்பு அம்பாறைக்குள் முடக்கிவிட்டிருந்தால், அது கருணாவே கேட்ட அந்த 'மட்டக்களப்பு அம்பாறைக்கு தனியான சுய நிர்வாக அலகு' ஒன்றை உத்தியோகப்பற்றற்ற முறையில் புலிகளே கொடுத்த மாதிரியல்லவா ஆகிவிட்டிருந்திருக்கும்;?... ஆக, கருணா செய்த துரோகத் தனத்தை மறந்து - அவரை மட்டக்களப்புக்குள் முடக்கி - அவரை அப்படியே விட்டுவைப்பதன் மூலம், கருணா கேட்டதையே அவருக்குக் கொடுத்துவிடச் சொல்லியிருந்தாரா இந்த ஆய்வாளர்?
கருணா தான் முன்பு சார்திருந்த இராணுவ அமைப்பின் விதிமுறைகளை மீறியவர் என்ற வகையில் அவர் அந்த அமைப்பின் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப் படவேண்டியவர். அல்லது, அதன் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர். அவர் சிங்களப் படையுடன் சோந்துவிடுவார் என்பதற்காக அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையைப் புலிகள் கைவிட்டிருக்க முடியாது. ஒரு இராணுவக் கட்டமைப்பின் நியதி எவ்வாறு இருக்கும் என்பது பிரபல்யமான இந்தப் போரியல் ஆய்வாளருக்குப் புரியவில்லை என்பது ஆச்சர்யமானது.
இந்த ஆய்வாளர்கள் எல்லோருமே - புலிகளின் பாரம்பரியப் பின்னணியைச் சரியாகக் கிரகித்துக் கொள்ளாமல், அல்லது கிரகித்துக்கொள்ளாதது போலக் காட்டிக்கொண்டு கருத்துரைத்து வந்தார்கள் என்று தான் நினைக்கின்றேன்.
துரோகிகளைக் கையாள புலிகளுக்கு இருக்கின்ற முதலும், இடையும், கடைசியுமான ஒரே வழி, அந்த ஒரே வழி தான். அது புலிகள் வழமையாகத் துரோகிகளை எவ்வாறு கையாளுகின்றார்களோ அதே வழிதான்.
புலிகள் எப்போதும் புலிகளாகவே இருக்க வேண்டும். அப்படி இருக்கும் வரைதான் தமிழனுக்கு மரியாதை.
இணையத்தில் சூரியனுக்காக -குழைக்காட்டான்.
சுடரொளி, 18 ? 04 - 2004
|
|
|
| 'சிறுவர் அமுதம்' அமரர் சின்ன இராஜேஸ்வரன்! |
|
Posted by: sOliyAn - 04-18-2004, 01:21 AM - Forum: புலம்
- Replies (1)
|
 |
ஜேர்மனி 'சிறுவர் அமுதம்' சிறுவர் சஞ்சிகையின் ஸ்தாபகரும் ஆசிரியருமான அமரர் சின்ன இராஜேஸ்வரனின் 10வது ஆண்டு நினைவு மலரொன்றை ஜேர்மனி 'மண்' சஞ்சிகை இணைப்பாக வெளியிட்டிருக்கிறது. அதிலிருந்து சில பகுதிகள்...!!
தோற்றம்: 10.05.1950 மறைவு: 19.04.1994
10.05.1950ல் யாழ் நாச்சிமார்கோயிலடியில் பிறந்தார். ஆரம்பக்கல்வியை கிளிநொச்சி குருகுலம் பாடசாலையிலும், மேல்நிலைக் கல்வியை கிளிநொச்சி மகாவித்தியாலயத்திலும் கற்றார். 1977- 1983 காலப்பகுதியில் வீரகேசரி பத்திரிகையின் கிளிநொச்சி நிருபராகப் பணிபுரிந்தார். 1979 தொடக்கம் புலம்பெயரும்வரை கொழும்பு தொலைத்தொடர்புத் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றினார். கிளிநொச்சியில் காந்தீய இயக்கத்திலும் பல சமூக நிறுவனங்களிலும் அங்கத்துவராக இணைந்து செயற்பட்டார்.
1983ம் ஆண்டு காந்தீய இயக்கத்திலிருந்து மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்தார். தமிழ் மண்மீது, தமிழ் மக்கள்மீது இவர் கொண்ட பற்று, இலக்கிய ஆர்வம் மிக்க இவரை சிறுவர் இலக்கியப் படைபபாளியாக்கியது.
இவரது அகால மரணத்துக்குப் பின்னரும் ஓரேயொரு மகள் பிங்கலையும் மனைவி புனிதமலரும் 'சிறுவர் அமுதம்' சஞ்சிகையை குறிப்பிட்ட காலம் நடாத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிங்கலை கேல்ன் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்கிறார்.
அமரர் சின்ன இராஜேஸ்வரனைப்பற்றி சிலர் பகிரும் விடயங்களில் சில துளிகள்!!!
வ.சிவராஜா, பிரதம ஆசிரியர், 'மண்' கலை இலக்கிய சமூக சஞ்சிகை:
1.1.90ல் ஜேர்மனியில் 'சிறுவர் அமுதம்' எனும் மாத சஞ்சிகையை ஆரம்பித்து தொடர்ச்சியாக 52 மாதங்கள் வெளியிட்டார். தாய்மொழி மறந்த பெற்றோரைச் சிந்திக்கத் தூண்டி, மாதாந்தம் அமுதம் இதழில் 50க்குமதிகமான சிறார்களை எழுத வைத்தார். அச் சிறுவர்களுக்கு தனது பணச் செலவில் அரிய பல தமிழ் புத்தகங்களை பரிசளித்து வந்தார்............ சிறுவர் அமுத வளர்ச்சியோடு நின்றுவிடாது ஈழம், ஏலையா, கலைவிளக்கு, கடல், மண் எனப் பல சஞ்சிகைகளுக்கும் ஐரோப்பாவில் வெளிவந்த பத்திரிகைகளுக்கும் பலதரப்பட்ட விடயங்களை எழுதி வந்தார். அதோடு சிநற்த மேடைப் பேச்சாளர்.. ஜேர்மனியில் எங்கு தமிழ் விழாக்கள் நடைபெற்றாலும் அவரது பட்டிமன்றங்கள் இடம்பெறும்.... இவர் வெளியிட்ட இறுதி 52வது இதழ் 1994 சித்திரை இதழாகும். தொடுர்ந்து அவரது மனைவியும் மகளும் 100 இதழ் வரை வெளியிட்டு.. பணம் உதவி போன்ற பிரச்சினைகளால் இடைநிறுத்தினார்கள்.
'தமிழ்மணி' சின்னத்துரை இராஜகருணா, ஈழம் பத்திரிகை ஆசிரியர், ஜேர்மனி:
புலம்பெயர் வாழ்வில் வரலாறு பதித்த பெருமைக்குரியது சிறுவர் அமுதம் இதழ். புலம்பெயர் வாழ்விலே அயராது உழைத்து சிறுவர்களின் தமிழ் அறிவினை வளர்த்தவர் என்ற பெருமைக்குரியவர் எனது அருமை நண்பர் சின்ன இராஜேஸ்வரன் அவர்கள்..... அவரை முதன்முதலாக கண்டதும் எனது இல்லம் தேடிவந்து என்னைச் சந்தித்து பல புத்தகங்களை எனக்கு அளித்தவர்.
நான் எழுதிய சிறுவர்களின் சின்னச்சின்ன கதைகளைப் பார்த்துவிட்டு அந்தக் கதைகளை அப்படியே வாங்கிச் சென்று சிறுவர்களுக்கு ஒரு தனிப்புத்தகமாக சித்திரை 1993ல் பாலர் கதைக் களஞ்சியம் எனும் பெயரில் வெளியிட்டவர். அத்துடன் என்னிடம் இருந்து எவ்வித பணத்தையும் பெற்றுக் கொள்ளாது, தானே சிறுவர் அமுத வெளியீடாக ஆயிரக்கணக்கான பிரதிகளை வெளியிட்டு சிறுவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர்.
பொ.சிறீஜீவகன், தலைவர், ஜேர்மன் தமிழ் கல்விச்சேவை:
ஜேர்மனியில் முதன்முதலாக சிறுவர்களின் தமிழறிவுக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்குமாக 'சிறுவர் அமுதம்' என்னும் சிறுவர் இலக்கிய மாத சஞ்சிகையை உருவாக்கி தமிழ் அமுதத்தைச் சிறுவர்களுக்குக் கொடுத்தார். காலத்துக்கு ஏற்றவகையில், பழைய கதைகளையும் புதிய முறையிலும், புதிய சிந்தனைகளுடனும் அமைத்துக் கொடுத்தார். சின்னச் சின்னக் கதைகளின்மூலம் நல்லெண்ணங்களை ஏற்படுத்தினார். பலநாட்டு அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் அவர்களின் மனித நேயச் சேவைகளையும் இலகுவான தமிழ்மொழி நடையில் எழுதி சிறுவர்களுக்கு தமிழ்மொழிமூலம் வாசிக்கும் தன்மையையும் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.....
மல்லீஸ்வரி ஆதவன், தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியை, டென்மார்க்.
சின்ன இராஜேஸ்வரன் அவர்கள் தனக்குரிய சமூகக் கடமையைச் சிறப்பாகச் செய்தார். எனினும் அவரது தேவை நிறையவே இருக்கும் இச் சூழலில் அவர் நம்மையெல்லாம் விட்டுப்போனமை மிகவும் மனவேதனைக்குரிய விடயமே! அவர் விதைத்துவிட்ட விதைகளில் ஒன்றாவது முளைக்காதா? நிச்சயம் முளைக்கும். அவர் விட்டுச் சென்ற கடமையை அவர் பாணியிலேயே சிறப்பாக நடத்தும் என நம்புவோம்.
இராஜன் முருகவேல்:
புகலிடத்தில் தமிழ் சிறார்களைப்பற்றி, புகலிடச் சிறுவர் இலக்கியத்தைப்பற்றி சிந்தித்து, அதை ஓரளவாவது நிகழ்த்திக் காட்டிய முனஇனோடி அவர். பலர் அவரை மறந்தாலும், அவரால் தமிழறிவு பெற்று இந்தப் பத்தாண்டுகளில் இளைஞரான பலரது உள்ளத்தில் அவர் நிலைபெற்றிருப்பது திண்ணம்.....
(அன்னார் பற்றிய குறிப்புகள் தொடரும்..!
|
|
|
|