Yarl Forum
வருக 2004 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வருக 2004 (/showthread.php?tid=7184)



வருக 2004 - இளைஞன் - 04-20-2004

[size=18]வருக 2004

<b>வருக</b>

வருகவென
வரவேற்று
வாழவைத்த ஆண்டுகளே
வரலாற்றில் நீர் எங்கு போனீர்?

விருந்துண்டு
விடைபெற்று
விரைந்தோடிய ஆண்டுகளே
வரலாற்றில் நீர் என்ன செய்தீர்?

இரண்டாயிரத்து மூன்றின்
எதிர்காலமே...
இரண்டாயிரத்து ஐந்தின்
இறந்தகாலமே...
வருமாண்டில் நீ என் செய்வாய்?


<b>நிகழ்க</b>

கண்ணீரைக் கழுவு
குருதிநீர் துடை
சமாதானத்தைக் குந்தவை

இரவுகள் கழி
பகலினில் விழி
ஈரங்காய வெயிலாய் எரி

பகைமைகள் மறை
பகிருதல் பறை
அவரவர் உரிமை அவர்க்கேயளி

கல்லறைகள் காணும்
பதுங்குகுழிகள் மூடு
ஆயுதங்களை உறங்க வை

அழிவுகள் நிறுத்து
அட்டகாசம் நிறுத்து
அமைதி வாழ்வு திருப்பு

அரசியல் மாற்று
ஆதிக்கம் விரட்டு
அகதி நிலை தகர்த்தெறி

நிகழ்த்து நிகழ்த்து
அதிசயம் நிகழ்த்து


<b>தருக</b>

வெள்ளை நிழல்
வேண்டாம்
வெளிச்ச இரவு
வேண்டாம்

சூரிய நிலவு
வேண்டாம்
சுடாத வெயில்
வேண்டாம்

பூவாய் மழைபெய்ய
வேண்டாம்
நிலவில் நிலமொன்றும்
வேண்டாம்

புன்னகைத் தேசம்
வேண்டும்
புதுமைத் தேசியம்
எமக்கங்கு வேண்டும்

வேண்டும்
வேண்டும்
வேண்டும்
வேண்டும் விடுதலை
வேள்வித் தீயில்
மூழ்கும் தீவின்
தேச விடுதலை

தீண்டும்
தீண்டும்
தீண்டும்
தீண்டும் தென்றலை
தீராத் தாகம்
தீரத் தழுவத்
தாராய் வரங்களை

மீண்டும்
மீண்டும்
மீண்டும்
மீண்டும் விடியலை
மீளக் காணும்
விழிகள் வேணும்
தாராய் வரங்களை

தூண்டும்
தூண்டும்
தூண்டும்
தூண்டும் தமிழினை
தூய்மை காக்கத்
துணிவு வேணும்
தாராய் வரங்களை

_________________________________________________
பி.கு.: இந்தக் கவிதை பாரிசில் நடந்த தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் "வருக 2004" என்கின்ற நிகழ்ச்சியில் வரவேற்புக்கவிதையாக என்னால் வாசிக்கப்பட்டது.


- shanmuhi - 04-20-2004

வாழ்த்துக்கள்...

கவிதையை தங்கள் குரலில் கேட்கக்கூடியதாக இணைத்திருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்.


- sOliyAn - 04-20-2004

எந்த வரியை குறிப்பாக எடுத்துப் பாராட்டுவது என்று தெரியவில்லை... ஒன்றையொன்று விஞ்சி கருத்தால் ஆளுமை செய்கின்றன.
தொடருங்கள்.. புகலிட இலக்கியத்துக்கு வைடூரியங்கள் கிடைக்கும் என்பதற்கான ஒளிக்கீற்று தெரிகிறது.


- Mathan - 04-21-2004

மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள்


- ishwari - 04-24-2004

அருமையான கவிதை. அழ்ந்து அனுபவித்து ரசித்தேன். எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள்.


- இளைஞன் - 04-24-2004

நன்றிகள் சண்முகி அக்கா, சோழியான் அண்ணா, BBC, ishwari...

கவிதையை வாசித்துக் கருத்துக் கூறியமைக்கு நன்றிகள். தொடர்ந்தும் என் கவிதைகளோடு இணைந்திருந்து கருத்துக்களை முன்வைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு...

மீண்டும்
நன்றி


- Paranee - 04-25-2004

ம்
வாழ்த்துக்கள் இளைஞன்.

அருமையான கவிதை இளைஞன்
புதியதோர் உலகம்செய்யப்புறப்பட்ட இளையவன் என்பதனை தங்கள் கவிதை காட்டிநிற்கின்றது.

ஓர் கவி போதும் உங்கள் ஓராயிரம் கவிதைக்கு வித்தாக

இன்னமும் எதிர்பார்த்து

நட்புடன்


- இளைஞன் - 04-25-2004

நன்றி பரணீ அண்ணா...
என்னிடம் கவிதை எதிர்பார்ப்பது இருக்கட்டும்,
எங்கே நீண்ட நாட்களாய் உங்கள் கவிதைகளைக் காணவில்லை....??? கருப்புநிலா கையில் சேருமட்டும் கவிதை! சேர்ந்தபின்பு கவிதையில்லையா??? கருப்புநிலாவே ஒரு கவிதை என்று சொல்கிறீர்களா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sOliyAn - 04-26-2004

கருப்பா? கறுப்பா?! :oops:


- இளைஞன் - 04-26-2004

கரிப்பூ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Paranee - 04-26-2004

செருப்பு வராமல் சிரிப்போட இருக்கட்டும்


- Eelavan - 04-26-2004

ஆகாகா நகைப்பூ
வாழ்த்துக்கள் இளைஞன் கவிதை அருமை