Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
'சிறுவர் அமுதம்' அமரர் சின்ன இராஜேஸ்வரன்!
#1
ஜேர்மனி 'சிறுவர் அமுதம்' சிறுவர் சஞ்சிகையின் ஸ்தாபகரும் ஆசிரியருமான அமரர் சின்ன இராஜேஸ்வரனின் 10வது ஆண்டு நினைவு மலரொன்றை ஜேர்மனி 'மண்' சஞ்சிகை இணைப்பாக வெளியிட்டிருக்கிறது. அதிலிருந்து சில பகுதிகள்...!!

தோற்றம்: 10.05.1950 மறைவு: 19.04.1994
10.05.1950ல் யாழ் நாச்சிமார்கோயிலடியில் பிறந்தார். ஆரம்பக்கல்வியை கிளிநொச்சி குருகுலம் பாடசாலையிலும், மேல்நிலைக் கல்வியை கிளிநொச்சி மகாவித்தியாலயத்திலும் கற்றார். 1977- 1983 காலப்பகுதியில் வீரகேசரி பத்திரிகையின் கிளிநொச்சி நிருபராகப் பணிபுரிந்தார். 1979 தொடக்கம் புலம்பெயரும்வரை கொழும்பு தொலைத்தொடர்புத் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றினார். கிளிநொச்சியில் காந்தீய இயக்கத்திலும் பல சமூக நிறுவனங்களிலும் அங்கத்துவராக இணைந்து செயற்பட்டார்.
1983ம் ஆண்டு காந்தீய இயக்கத்திலிருந்து மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்தார். தமிழ் மண்மீது, தமிழ் மக்கள்மீது இவர் கொண்ட பற்று, இலக்கிய ஆர்வம் மிக்க இவரை சிறுவர் இலக்கியப் படைபபாளியாக்கியது.
இவரது அகால மரணத்துக்குப் பின்னரும் ஓரேயொரு மகள் பிங்கலையும் மனைவி புனிதமலரும் 'சிறுவர் அமுதம்' சஞ்சிகையை குறிப்பிட்ட காலம் நடாத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிங்கலை கேல்ன் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்கிறார்.

அமரர் சின்ன இராஜேஸ்வரனைப்பற்றி சிலர் பகிரும் விடயங்களில் சில துளிகள்!!!

வ.சிவராஜா, பிரதம ஆசிரியர், 'மண்' கலை இலக்கிய சமூக சஞ்சிகை:
1.1.90ல் ஜேர்மனியில் 'சிறுவர் அமுதம்' எனும் மாத சஞ்சிகையை ஆரம்பித்து தொடர்ச்சியாக 52 மாதங்கள் வெளியிட்டார். தாய்மொழி மறந்த பெற்றோரைச் சிந்திக்கத் தூண்டி, மாதாந்தம் அமுதம் இதழில் 50க்குமதிகமான சிறார்களை எழுத வைத்தார். அச் சிறுவர்களுக்கு தனது பணச் செலவில் அரிய பல தமிழ் புத்தகங்களை பரிசளித்து வந்தார்............ சிறுவர் அமுத வளர்ச்சியோடு நின்றுவிடாது ஈழம், ஏலையா, கலைவிளக்கு, கடல், மண் எனப் பல சஞ்சிகைகளுக்கும் ஐரோப்பாவில் வெளிவந்த பத்திரிகைகளுக்கும் பலதரப்பட்ட விடயங்களை எழுதி வந்தார். அதோடு சிநற்த மேடைப் பேச்சாளர்.. ஜேர்மனியில் எங்கு தமிழ் விழாக்கள் நடைபெற்றாலும் அவரது பட்டிமன்றங்கள் இடம்பெறும்.... இவர் வெளியிட்ட இறுதி 52வது இதழ் 1994 சித்திரை இதழாகும். தொடுர்ந்து அவரது மனைவியும் மகளும் 100 இதழ் வரை வெளியிட்டு.. பணம் உதவி போன்ற பிரச்சினைகளால் இடைநிறுத்தினார்கள்.

'தமிழ்மணி' சின்னத்துரை இராஜகருணா, ஈழம் பத்திரிகை ஆசிரியர், ஜேர்மனி:
புலம்பெயர் வாழ்வில் வரலாறு பதித்த பெருமைக்குரியது சிறுவர் அமுதம் இதழ். புலம்பெயர் வாழ்விலே அயராது உழைத்து சிறுவர்களின் தமிழ் அறிவினை வளர்த்தவர் என்ற பெருமைக்குரியவர் எனது அருமை நண்பர் சின்ன இராஜேஸ்வரன் அவர்கள்..... அவரை முதன்முதலாக கண்டதும் எனது இல்லம் தேடிவந்து என்னைச் சந்தித்து பல புத்தகங்களை எனக்கு அளித்தவர்.
நான் எழுதிய சிறுவர்களின் சின்னச்சின்ன கதைகளைப் பார்த்துவிட்டு அந்தக் கதைகளை அப்படியே வாங்கிச் சென்று சிறுவர்களுக்கு ஒரு தனிப்புத்தகமாக சித்திரை 1993ல் பாலர் கதைக் களஞ்சியம் எனும் பெயரில் வெளியிட்டவர். அத்துடன் என்னிடம் இருந்து எவ்வித பணத்தையும் பெற்றுக் கொள்ளாது, தானே சிறுவர் அமுத வெளியீடாக ஆயிரக்கணக்கான பிரதிகளை வெளியிட்டு சிறுவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர்.

பொ.சிறீஜீவகன், தலைவர், ஜேர்மன் தமிழ் கல்விச்சேவை:
ஜேர்மனியில் முதன்முதலாக சிறுவர்களின் தமிழறிவுக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்குமாக 'சிறுவர் அமுதம்' என்னும் சிறுவர் இலக்கிய மாத சஞ்சிகையை உருவாக்கி தமிழ் அமுதத்தைச் சிறுவர்களுக்குக் கொடுத்தார். காலத்துக்கு ஏற்றவகையில், பழைய கதைகளையும் புதிய முறையிலும், புதிய சிந்தனைகளுடனும் அமைத்துக் கொடுத்தார். சின்னச் சின்னக் கதைகளின்மூலம் நல்லெண்ணங்களை ஏற்படுத்தினார். பலநாட்டு அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் அவர்களின் மனித நேயச் சேவைகளையும் இலகுவான தமிழ்மொழி நடையில் எழுதி சிறுவர்களுக்கு தமிழ்மொழிமூலம் வாசிக்கும் தன்மையையும் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.....

மல்லீஸ்வரி ஆதவன், தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியை, டென்மார்க்.
சின்ன இராஜேஸ்வரன் அவர்கள் தனக்குரிய சமூகக் கடமையைச் சிறப்பாகச் செய்தார். எனினும் அவரது தேவை நிறையவே இருக்கும் இச் சூழலில் அவர் நம்மையெல்லாம் விட்டுப்போனமை மிகவும் மனவேதனைக்குரிய விடயமே! அவர் விதைத்துவிட்ட விதைகளில் ஒன்றாவது முளைக்காதா? நிச்சயம் முளைக்கும். அவர் விட்டுச் சென்ற கடமையை அவர் பாணியிலேயே சிறப்பாக நடத்தும் என நம்புவோம்.

இராஜன் முருகவேல்:
புகலிடத்தில் தமிழ் சிறார்களைப்பற்றி, புகலிடச் சிறுவர் இலக்கியத்தைப்பற்றி சிந்தித்து, அதை ஓரளவாவது நிகழ்த்திக் காட்டிய முனஇனோடி அவர். பலர் அவரை மறந்தாலும், அவரால் தமிழறிவு பெற்று இந்தப் பத்தாண்டுகளில் இளைஞரான பலரது உள்ளத்தில் அவர் நிலைபெற்றிருப்பது திண்ணம்.....

(அன்னார் பற்றிய குறிப்புகள் தொடரும்..!
.
Reply
#2
திரு சே.மகேந்திரன், (இளைப்பாறிய தபால் அதிபர், சிவநெறிக்காவலர்), Bergisch-Gladbach, Germany
சிறுவர் அமுதம் சஞ்சிகையின் தந்தை அமரர் சின்ன இராஜேஸ்வரன் மறைந்து பத்தாண்டுகள் நிறைவுறுகிறது. எதிர்வரும் 19.04.2004 அன்று அன்னாரை நாமெல்லோரும் நினைவுகூரும் தினமாகும்.... எம்மனக்கண்ணில் மட்டுமல்ல, இன்றைய இளையதலைமுறையினரும் மறக்க முடியாத மறையாதிருக்கும் மாயவிம்பமாக அவரின் உருவம் பதிந்துவிட்டது வியப்பில்லை.
நாம் விரும்பியோ விரும்பாமலோ வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழமுற்பட்ட சூழ்நிலையில் எங்களின் வருங்காலச் சந்ததியினரின் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது என்பதைச் சிந்தித்து செயலாற்றிய ஒரு மேதை என்றே அவரைச் சொல்லலாம்.
புலம்பெயர்ந்து வேற்றுமொழிச்சூழலில் வாழும்நிலையில் நம்மவர்கள் மத்தியில் தாய்மொழிக் கல்வியை வளர்த்தெடுக்கின்ற நோக்கத்திலே 1990ம் ஆண்டு தைமாதம் முதல் கையெழுத்துப் பிரதியாக ஆரம்பிக்கப்பட்டது. அவரின் தீவிர முயற்சியின் பயனாக நாளடைவிலே பல நூறு குழந்தை வாசகர்களின் வருகையால் அதே ஆண்டிலேயே தட்டச்சுப் பிரதியாகவும் பின்னர் கணனிப் பிரதியாகவும் பல வர்ணங்களிலே சிறுவர்களைக் கவரும்வண்ணம் கவர்ச்சிகரமான முகப்பு அட்டைகளுடன் வெளிவந்தது.
இதைத்தொடர்நஇது சிறுவர்களின் மிகப் பெரிய ஆர்வத்தைக் கண்ட இவர் 1992ம் ஆண்டு சிறுவர் கலைவிழா மிகப் பெரிய அளிவில் நடாத்தி பெரு வெற்றியும் கண்டார். .... 'தமிழீழம் எங்கள் நாடென்போம், இதற்கு ஏது இணையென்போம்' என்று தமிழ் முழக்கம் செய்து சிறுவர்களின் பிஞ்சு மனதிலே தேசபக்தியை ஊட்டிய இவர் 19.04.1994ல் சிற்றூர்தி விபத்தில் அகாலமரணமானார்...
.... அமரர் சின்ன இராஜேஸ்வரன் அவர்களின் பூதவுடல் பேழையில் வைக்கப்பட்டு கடைசிப் பயணத்திற்கு ஆயத்தமானவேளையில், அவரின் ஒரேயொரு மகள் சிறுமி பிங்கலை ஓடிவந்து அவரின் கையிலே பேனாவையும் சிறுவர் அமுதம் சஞ்சிகையையும் தாளையும் வைத்து அவரை வழியனுப்பிய காட்சி இன்றும் பசுமையாகத் தெரிகிறது...

அசோகன் நிர்மலராஜா, ஜேர்மனி பல்கலைக்கழகம்.
சின்ன இராஜேஸ்வரன் சிறப்புடைய நல்லாசிரியர். என்னை நான் அறிய முன்னர் அன்னைமொழியை ஆரம்பித்தார் எனக்கு.
நிலம் எது மொழி எது என தெரியாத பருவத்தில் புலம்பெயர் மொழியை வளமாக வளர்கையில் பலம் உன் தாய் மொழியென ஐந்து வயதில் பைந்தமிழ் பயிற்றுவித்த சின்ன இராஜேஸ்வரன் சிந்தனை கொண்டு சிறுவர்கள் ஒன்றாகக்கூட முற்றம் ஒன்று தேடி தமிழ்சுற்றம் அனைவரையும் அரவணைத்து இதய சுத்தமுள்ள தன் துணைவியுடன் ஆரம்பித்தார் ஓர் கலைக்கூடம்...........
சரிந்து வீழ்நதது அவர் பூதவுடல். தெரிந்து வாழ்வது அவர் தமிழ்த்தொண்டு. பத்தாண்டுகள் பறந்தோடிவிட்டாலும் வித்தாக்கிய தமிழுணர்வு பெரும் சொத்தாகி 'சிறுவர் அமுதம்' நூல்வடிவில் வாழும் எம் நினைவுகளுடன்...

(குறிபஇபுகள் தொடரும்....)
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)