![]() |
|
டாலர் தேசம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: டாலர் தேசம் (/showthread.php?tid=7183) |
டாலர் தேசம் - AJeevan - 04-22-2004 [align=center:77d4360876]<img src='http://www.kumudam.com/reporter/250404/pg8-t.jpg' border='0' alt='user posted image'>[/align:77d4360876] <span style='font-size:22pt;line-height:100%'><b>பா.ராகவன்</b></span> ஒசாமா பின்லேடனைக் கொல்வதற்கு, சி.ஐ.ஏ.வுக்கு முழு அதிகாரம் அளித்தார் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம். பிடித்துக்கொடுப்பவருக்குப் பரிசு அளிக்கலாம். தாமே பிடித்தாலும் வெகுமதிகள் உண்டு. முழு லைசென்ஸ்! ஆனால் இது எப்படி இருந்தது என்றால், மொபெட் ஓட்டத் தெரியாதவனுக்கு லாரி ஓட்டுவதற்கு லைசென்ஸ் வழங்கிய மாதிரி இருந்தது! சி.ஐ.ஏ. மிகப்பெரிய அமைப்புதான். புத்திசாலிகளை மட்டுமே தேர்ந்தெடுத்துப் பணியாற்ற வைத்திருந்தார்கள் தான். கோடிக்கணக்கான டாலர்கள் அதற்காகவே வருஷம்தோறும் ஒதுக்கிக்கொண்டிருந்தது அமெரிக்க அரசு. அந்த அமைப்பினர் கேட்டவுடனே அல்ல; நினைத்தவுடனேயே எது வேண்டுமானாலும் கிடைத்துவிடும். அப்படியரு சலுகை உண்டு அதற்கு. மேலும் போலீஸ், ராணுவம் என்கிற இரு அமைப்புகளும் சி.ஐ.ஏ.வுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்றொரு எழுதப்படாத உத்தரவும் அப்போது அமெரிக்காவில் இருந்தது. சி.ஐ.ஏ.வைவிடப் பலமடங்கு சிறப்புகள் வாய்ந்த இன்னொரு உளவு அமைப்பான எஃப்.பி.ஐ.க்குக் கூட இத்தனை சலுகை இல்லை அப்போது. எத்தனையோ விஷயங்களில் சி.ஐ.ஏ. குறிப்பிடத் தகுந்த சாதனைகள் புரிந்திருந்ததற்கான பரிசுகள் அவை. <img src='http://www.kumudam.com/reporter/250404/pg8.jpg' border='0' alt='user posted image'> ஆனால் ஒசாமா பின்லேடன் விஷயத்தில் மட்டும் தமது புலனாய்வில் ஓரடிகூட அவர்களால் அப்போது முன்னேற முடியவில்லை என்பதுதான் உண்மை. முதன்முதலில் சவுதி அரேபியாவிலிருந்து புறப்பட்டு பாகிஸ்தானுக்கு ஒசாமா ரகசியப் பயணம் மேற்கொண்ட தினத்திலிருந்துதான் அவர்களும் அவரைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால், பத்து வருடங்களில் உருப்படியாக ஒரு தகவலைக்கூட அவர்களால் ஒசாமா குறித்துச் சேகரிக்க முடியவில்லை. அவரது அடுத்த 'மூவ்' இன்னதுதான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடிந்ததேயில்லை. ஒசாமாவின் படைபலம், ஒவ்வொரு நாட்டிலும் அவருக்கு இருந்த ஆதரவாளர்களின் எண்ணிக்கை, நிதியுதவி வருகிற பாதைகள், ஆயுதங்கள் போகிற பாதைகள், ஹைடெக் எலக்ட்ரானிக் உபகரணங்கள் கிடைக்கிற வழிகள், சாட்டிலைட் தொலைத்தொடர்பு வசதிகள், புதிய திட்டங்கள் என்று எதுவுமே சி.ஐ.ஏ.வுக்குத் தெரியாமலேயே இருந்தது அதுவரை. ஐந்து வருடங்களுக்கு முந்தைய சி.ஐ.ஏ.வின் _ ஒசாமாவின் மீதான கணிப்புகளும் அதே காலகட்டத்தில் ஒசாமா சம்பந்தப்பட்ட உண்மை நிலவரங்களும் அதிர்ஷ்டவசமாக இன்று அப்படி அப்படியே இணையத்தில் கிடைக்கின்றன. இரண்டையும் ஒப்பிட்டு நோக்கினால் சிரிப்புதான் பொத்துக்கொண்டு வரும்! இதற்கான காரணமும் வெட்டவெளிச்சமானது. கொஞ்சம் பரிதாபகரமானதும்கூட. தொண்ணூறுகளின் இறுதியிலேயே தகவல் தொழில்நுட்ப விஷயங்களில் தன்னிறைவுக்கு மேலான தரத்தை எட்டிப்பிடித்திருந்தது அமெரிக்கா. ஒசாமா என்றில்லை, கடவுளேகூட எங்கே இருக்கிறார் என்று உட்கார்ந்த இடத்திலிருந்து கண்டுபிடித்துவிட முடியும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. காரணம், செயற்கைக்கோள்கள் விஷயத்தில் அமெரிக்கா அடைந்திருந்த பிரமிக்கத்தகுந்த வளர்ச்சி. செயற்கைக்கோள்கள் மட்டுமல்ல... எதிரிகளின் தொழில்நுட்ப நெட்_ஒர்க்கை உடைத்து உள்ளே போய்ப் பார்க்கிற டெக்னாலஜியில் அமெரிக்கர்கள் அப்போது சூரர்களாக இருந்தார்கள். ரேடியோ, தொலைபேசி, மின்னஞ்சல், இணையதளங்கள் என எந்த அலைவரிசையில் யார் இயங்கிக்கொண்டிருந்தாலும் எவ்வித சிரமமும் இல்லாமல் வழியில் குறுக்கே புகுந்து செய்தியை அவர்களால் சுலபமாக ஊடுருவ முடிந்தது. பொதுவாக தீவிரவாத இயக்கங்கள் தமக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள இணையத்தில் ரகசிய இடம் ஏற்படுத்தி, கடும் பாதுகாப்பு வளையங்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு பேசுவார்கள். ஒரு சாதாரண ஈமெயில் அனுப்பவே யூசர் நேம், பாஸ்வேர்டு வேண்டும். இணையம் எத்தனைக்கெத்தனை சுதந்திரமான தளமோ, அத்தனைக்கத்தனை அணுக முடியாத தளமாகவும்கூட அதனைப் பயன்படுத்த முடியும். அப்படிப்பட்ட பாதுகாப்பு வளையங்களைக்கூட உடைத்து உள்ளே போய்த் தகவல் பெறத்தக்க வகையில் வளர்ச்சியுற்றிருந்தது அமெரிக்க தொழில்நுட்பத்துறை. என்கிரிப்ட் செய்யப்பட்ட தகவல்களை உடைத்துப் பெறும் தொழில்நுட்பத்தில் ராட்சஸ வளர்ச்சி கண்டிருந்தார்கள். இந்த பலம்தான் அமெரிக்காவின் மிகப்பெரிய பலவீனமும்கூட. குறிப்பாக, ஒசாமா விஷயத்தில்! ஒசாமா பின்லேடனைப் பற்றிய விஷயங்களை அறியவும் அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் மேற்சொன்ன தொழில்நுட்பங்களை, அதன் முழு அளவில் அன்றைக்குப் பயன்படுத்திக்கொண்டிருந்தது சி.ஐ.ஏ. அதன்மூலம் கிடைக்கிற தகவல்களைத்தான் வேதமாகவும் நினைத்து, அதனடிப்படையிலேயே ரிப்போர்ட்டுகளும் அனுப்பிக்கொண்டிருந்தது, அரசுக்கு. அவர்கள் செய்யத்தவறியது ஒன்றே ஒன்று! ஒசாமா சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தர, உரிய ஒற்றர்களை ஏற்பாடு செய்யாமல் விட்டது! தொழில்நுட்பத்தைவிட இது விஷயத்தில் சில மனிதர்கள்தான் நம்பகமான தகவல்களைத் தரமுடியும் என்று அவர்களுக்குத் தோன்றவேயில்லை. அதுதான் ஒசாமாவுக்கு மிகப்பெரிய பலமாகிவிட்டது! ஒசாமா பின்லேடன் ஒரு பெரிய டெக்னீஷியன் இல்லை. ஆனால், மிகத் தேர்ந்த பல தொழில்நுட்ப வல்லுநர்களை அவர் தமக்கு ஆலோசகர்களாக வைத்திருந்தார். அமெரிக்க அரசு, டெக்னாலஜியைப் பயன்படுத்தித்தான் தமது திட்டங்களை அறிந்துகொள்ள முயற்சி செய்கிறது என்பது தெரிந்தவுடனேயே, தமது தகவல்தொடர்பு விஷயங்களை ஆப்கன் மலைப்பகுதிகளில் ஆடு, மாடு, கழுதை மேய்க்கும் பையன்களைக் கொண்டே அவர் செய்ய ஆரம்பித்தார். தமது சாட்டிலைட் தொலைபேசியையும் இணைய உரையாடல்களையும் சும்மா நலன் விசாரிக்கும் காரியங்களுக்காக மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்தார். இந்த விஷயம் வெகுநாட்களுக்கு அமெரிக்காவுக்குத் தெரியாமலேயே இருந்தது. சமீபத்தில் ஆப்கன்மீது போர் தொடுக்கிற வரையிலும்கூட ஒசாமாவின் சாட்டிலைட் தொலைபேசி உரையாடல்கள் பற்றி கச்சாமுச்சாவென்று என்னென்னவோ தகவல்கள் வந்துகொண்டே இருந்தன. உண்மையில் ஒசாமா, தமது சாட்டிலைட் தொலைபேசியையெல்லாம் உறைபோட்டு மூடிவைத்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. என்கிரிப்டட் ஈமெயில்கள் அனுப்புவதை அவர் நிறுத்தி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். அல்கொய்தாவைச் சேர்ந்தவர்கள், ஈமெயில் மூலம் தகவல் அனுப்புவதை முற்றிலுமாக நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்கிறது, அந்த நெட்_ஒர்க்கின் இயல்பறிந்த வட்டாரம். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, கென்யாவிலும் தான்ஸானியாவிலும் அமெரிக்கத் தூதரகங்களில் குண்டுவைத்த பிறகு, ஒசாமாவுக்கு உடல்நலன் கொஞ்சம் சீர்கெடத் தொடங்கியிருந்தது. அதாவது, அவரைக் கொல்வதற்கு சி.ஐ.ஏ.வுக்கு முழு அதிகாரம் கிடைத்த தினத்துக்கு மிகச் சில நாட்களில் கண்டறியப்பட்ட உண்மை இது. திடீர் திடீரென்று அடிவயிற்றில் சுரீரென்று ஏற்பட்ட வலியால் அவர் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். சிறுநீரகத்திலும் ஏதோ கோளாறு இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ஒசாமாவின் வலதுகரமான அல் ஜவஹரி, எகிப்திலிருந்து சில தேர்ந்த டாக்டர்களை ஆப்கன் வரவழைத்து, ஒரு கம்ப்ளீட் செக்_அப்புக்கு ஏற்பாடு செய்தார். பரிசோதனையின் முடிவில் ஒசாமாவுக்கு மிகத்தீவிரமான சில உபாதைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை... 1. சிறுநீரகக் கோளாறு. ஒரு சிறுநீரகம் முக்கால்வாசி பழுதடைந்திருந்தது. 2. வயிற்றில் கற்கள் மற்றும் கட்டி. 3. குறைந்த ரத்த அழுத்த நோய். 4. தண்டுவடத்தில் டிஸ்க் கொலாப்ஸ் ஆகியிருந்த காரணத்தால் ஏற்பட்ட தீவிரமான முதுகுவலி. <img src='http://www.kumudam.com/reporter/250404/pg8-1.jpg' border='0' alt='user posted image'> இதில் வயிற்றிலிருந்த கட்டி மட்டுமே சுலபத்தில் குணப்படுத்தக்கூடிய விஷயம் என்று எகிப்து டாக்டர்கள் சொன்னார்கள். தண்டுவடப் பிரச்னைக்கு ஒரு ஆபரேஷன் அவசியம். சிறுநீரகக் கோளாறுக்கு டயாலிசிஸ் முக்கியம். லோ ப்ளட் பிரஷர் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வருவது. அதனைச் சில மாத்திரைகளின் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால், பரிபூரண ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வா? ஒசாமா சிரித்தார். "நான் ஓரிரு வருடங்களுக்குள் அமெரிக்காவை முற்றிலுமாக அழித்துவிட உத்தேசித்திருக்கிறேன். அதற்குள் நான் தேறி எழுந்தாக வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்" என்று சொன்னார். முதலில் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஒசாமா என்ன ஆஸ்பத்திரிக்குப் போய் அட்மிட் ஆகியா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்ள முடியும்? மேலும் அன்றைக்கு ஆப்கனிஸ்தானில் இருந்த எந்த மருத்துவமனையிலும் ரத்த சுத்திகரிப்புக் கருவி கிடையாது. போவதென்றாலும் ஏதாவது வெளிநாட்டுக்குத்தான் போக வேண்டும். இதெல்லாம் நடக்கிற கதையில்லை அல்லவா? ஆகவே, ஒசாமா ஓர் உத்தரவிட்டார். அமெரிக்காவிலிருந்து இரண்டு டயாலிசிஸ் கருவிகள் வாங்குவது! ஒன்று அவரது சொந்த உபயோகத்துக்கு. இன்னொன்று ஆப்கனிலுள்ள முக்கியமானதொரு மருத்துவமனைக்கு _ நன்கொடையாக! இதுதொடர்பாக அவர் அமெரிக்காவிலுள்ள தமது இயக்கத்தைச் சேர்ந்த யாருடனும் தொலைபேசியில் பேசவில்லை. ஏர்மெயிலில் கடுதாசி அனுப்பவில்லை. ஈமெயில் ஏதும் அனுப்பவில்லை. மெசஞ்சரில் பேசவில்லை. இணையத்தைச் சுத்தமாகவே பயன்படுத்தவில்லை. ஆப்கனிலிருந்து யாரையாவது அமெரிக்காவுக்கு அனுப்பினாரா, அக்கம்பக்கத்து தேசத்திலிருந்து யாரையாவது அனுப்பினாரா என்றால் அதுவுமில்லை. ஆனாலும் சரியாக முப்பத்துநான்கு தினங்களில் ஒசாமா இருந்த மலைக் குகைக்கு இரண்டு டயாலிசிஸ் கருவிகள் வந்து சேர்ந்தன! அமெரிக்காவிலிருந்துதான் அவை வந்தன. எப்படி இது சாத்தியம்? அவரை இரவு_பகலாகக் கண்காணிப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்த சி.ஐ.ஏ.வின் கண்ணைக் கட்டிவிட்டு எப்படி அவரால் இது முடிந்தது? அதுதான் ஒசாமாவின் பலம். அதுதான் அவரது பிரத்தியேகத் தொழில்நுட்பம்! "டெக்னாலஜியை முழுவதுமாகப் பயன்படுத்தக் கூடியவர்தான் ஒசாமா. ஆனால், டெக்னாலஜியைவிட மனிதர்களை அவர் அதிகம் நம்புகிறவர். மனிதர்களைக் காட்டிலும் கடவுளை நம்புகிறவர். இது சி.ஐ.ஏ.வுக்குப் புரியாது" என்று வெகுநாட்கள் கழித்து இதுபற்றிச் சொன்னார் அல் ஜவஹரி. 'ரிலே' ஓட்டம் மாதிரி ஒருவர் மாற்றி ஒருவராகவே கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக, நாடு நாடாகத் தகவலை நகர்த்தி, உரிய இடத்தில் தேவை குறித்த செய்தியைக் கொண்டு சேர்த்து, ரகசியப் பாதையில், வேண்டியதை விரும்பிய இடத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கும் ஒரு தனி கூரியர் சர்வீஸை ஒசாமா நடத்திக்கொண்டிருந்த விஷயம் அப்போதுதான் வெளியே தெரிந்தது! தலையில் அடித்துக்கொண்டு உட்கார்ந்து மூக்கு சிந்தியது சி.ஐ.ஏ. இதில் மிகப்பெரியதொரு 'க்ளைமேக்ஸ் காமெடி' ஒன்றும் இருக்கிறது. ஆப்கனில், தாலிபன்களுக்கு எதிரான வடக்குக் கூட்டணிப் படை அரசு ஒன்று இருந்ததல்லவா அப்போது? அந்த நிர்வாகத்திடம் ஒரு நல்ல புலனாய்வுத்துறை உண்டு. மேற்கத்திய பாதிப்பு ஏதுமில்லாமல் மண்ணின் மணத்துடனேயே புலனாய்வு பயின்று தேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களை வளைத்து, ஒசாமாவைப் பற்றிய தகவல்களைக் கறக்கப் பார்த்தது சி.ஐ.ஏ. ஒசாமா உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதையும் டயாலிசிஸ் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதையும் கரெக்டாக மோப்பம் பிடித்துச்சொன்ன அந்தப் புலனாய்வுத்துறை அதிகாரிகள், இன்னொன்றையும் சொன்னார்கள். "நீங்கள் அதிகம் சிரமப்படவே வேண்டாம். வெறும் டயாலிசிஸ் கருவி வந்துவிட்டதாலேயே ஒசாமா பிழைத்துவிட முடியாது. இப்போது அவர் இருக்கிற நிலைமையில், இன்னும் நாலைந்து மாதங்கள்கூட உயிர் தரிக்க வாய்ப்பில்லை. இரண்டு சிறுநீரகங்களும் முற்றிலுமாகச் செயல்படாமல் போய்விட்டன. கொஞ்சநாள் பொறுத்திருங்கள். ஒசாமா இறந்துவிட்டார் என்று தானாகவே வரப்போகிற செய்தியுடன் ஊர் போய்ச் சேருங்கள்" என்று சொன்னார்கள். மிகவும் நம்பத்தகுந்த செய்திதான் இது என்று இன்னும் பல தரப்பில் விசாரித்து ஊர்ஜிதப்படுத்திக்கொண்டது சி.ஐ.ஏ. ஆகவே, மேற்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச முயற்சிகளையும் தூக்கிக் கிடப்பில் போட்டுவிட்டு ஜாலியாக இருந்தார்கள். அவர்களுக்கு ஒசாமா யார் என்று தெரியாதது மட்டுமல்ல... அவரது வலதுகரமான அல் ஜவஹரி யார் என்பதும் அப்போது தெரியவில்லை. இரண்டுமாத காலத்தில் அந்த நபர் ஒரு குட்டிச்சாத்தான் வேலையே செய்தார்! மரணத்தின் வாசல்படியைத் தொட்டுவிட்டிருந்த பின்லேடனை இழுத்துப் பிடித்து மீட்டுக்கொண்டுவந்த ஜவஹரியின் வேலையை ஒரு சில வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. உண்மையில் அந்த மறுபிறவிக்குப் பிறகுதான், செப்டம்பர் பதினொன்று தாக்குதலுக்கான திட்டங்களை முழு வேகத்தில் தீட்டி, எல்லா ஏற்பாடுகளையும் பக்காவாகச் செய்து முடித்து, ஒரு "டிரையலும்" பார்த்தார் ஒசாமா. அந்தப் "பரிசோதனை" முயற்சியில் ஒரு தலை விழுந்தது. அமெரிக்காவுக்கு மிகவும் வேண்டப்பட்ட தலை அது. அப்போதேகூட சி.ஐ.ஏ. விழித்துக்கொண்டு என்னவாவது செய்திருக்கலாம். அழகாகக் கோட்டை விட்டார்கள். (தொடரும்) Kumudam.com Re: டாலர் தேசம் - AJeevan - 04-30-2004 [align=center:e91ca97319]<img src='http://www.kumudam.com/reporter/020504/pg8.jpg' border='0' alt='user posted image'>[/align:e91ca97319] <span style='font-size:22pt;line-height:100%'><b>பா.ராகவன்</b></span> ஒரு தேசத்தின் சரித்திரப் பக்கங்களை ஒரு தீவிரவாதக்குழு கணிசமாக அபகரித்துக்கொள்வதென்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது விஷயத்தில், அமெரிக்கா_அல்கொய்தா யுத்தங்களுக்கு நிகராக இன்னொரு தேசத்தையும், இன்னொரு தீவிரவாத இயக்கத்தையும் உதாரணத்துக்குக்கூட எடுத்துக்காட்ட முடியாது. ஏன், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடக்கவில்லையா, இஸ்ரேலுக்கும் ஹமாஸ§க்கும் பகையில்லையா, நேபாள அரசுக்கும் மாவோ தீவிரர்களுக்கும் சண்டையில்லையா என்று வரிசையாக இன்னும்கூட நாலைந்து உதாரணங்கள் தோன்றலாம். ஆனால், இவை எதுவுமே அமெரிக்கா_அல்கொய்தா யுத்தத்துடன் ஒப்பிட முடியாதவை. மற்ற அனைத்து தேசங்களிலும் அரசுக்கு எதிராகப் போராடும் தீவிரவாத இயக்கங்களுக்கு இருக்கக்கூடிய நோக்கம் பொதுவானது. அதாவது விடுதலை வேட்கை சம்பந்தப்பட்டது அதெல்லாம். இலங்கையில் தமிழர்களின் சுதந்திரத்தை முன்வைத்து விடுதலைப்புலிகள் சண்டை போடுகிறார்கள். இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் பாலஸ்தீன நிலப்பரப்பை மீட்பது தொடர்பான யுத்தம்தான் ஹமாஸின் அஜெண்டாவில் பிரதானமானது. நேபாளத்தில் மன்னர் ஆட்சிமுறை அருவருப்பாக இருக்கிறது என்பதுதான் அங்குள்ள தீவிரவாதிகளின் கோபம். செசன்யா, ஆப்கனிஸ்தான் போன்ற மற்ற பல தேசங்களிலும் இந்தியாவில் காஷ்மீரை முன்வைத்துச் செய்யப்படும் தீவிரவாத நடவடிக்கைகளிலும்கூட மேற்சொன்ன நிலவியல் காரணங்கள்தான் பிரதானமானவை. ஆனால், அமெரிக்கா_அல்கொய்தா யுத்தம் ஒன்றுதான் தனிப்பகை தொடர்பானது. அமெரிக்காவை ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகுக்கும் எதிரியாக பின்லேடன் அறிவித்ததற்கும், யுத்தம் தொடர்ந்ததற்கும்கூட அரசியல்தான் காரணம். ஆனால், இது சற்று வேறுவிதமான அரசியல். எந்தச் சார்பும் இல்லாத கண்ணுடன் பார்க்க முடியுமானால் இந்த விஷயத்தை இப்படிப் பார்க்கலாம்: அமெரிக்காவுக்கு இஸ்லாமிய தேசங்கள் மீது எந்தவிதத் தனிப்பகையும் கிடையாது. மாறாக, எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு தேசங்கள்தான் அமெரிக்காவின் சொத்து மதிப்பைக் கணிசமாக உயர்த்தி வந்திருக்கின்றன. அச்சத்தின் காரணத்தால் சில தேசங்களும், நட்பு அடிப்படையில் சில தேசங்களும், ஆக்கிரமிப்பு காரணமாகச் சில தேசங்களும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா தம் செல்வத்தை எடுத்தாண்டுகொள்ள அனுமதித்து வந்திருக்கின்றன. பதிலுக்கு, அமெரிக்காவிடமிருந்தும் பல உதவிகள் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, பொருளாதார, வர்த்தக, ராணுவ உதவிகள். இது இஸ்லாமிய தேசங்களில் மட்டும் நடந்த சங்கதியல்ல. அமெரிக்கா, எந்த ஒரு நாட்டின்மீது யுத்தம் தொடுத்தாலும் அல்லது உறவு வளர்த்தாலும் அதற்கு மேற்சொன்ன பொருளாதாரக் காரணம் அவசியம் உண்டு. 'தன்நலன்' என்பது தவிர அத்தேசத்துக்கு வேறு எந்தவிதமானதொரு சிறப்புக் காரணமும் எப்போதும் இருந்ததில்லை. அத்தேசத்தின் நானூறு ஆண்டு கால சரித்திரம் சொல்லும் உண்மை இதுவேயாகும். அதிபர்கள் மாறலாம். ஆட்சி மாறலாம். ஆனால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மட்டும் எந்தக் காலத்திலும் மாறியதில்லை. தனக்கு லாபம் உண்டென்றால் அத்தேசம் இஸ்லாமிய நாடு என்றோ, வேறு மதங்களின் அடிப்படையில் ஆட்சி நடக்கும் நாடு என்றோ பார்ப்பதேயில்லை. சொல்லப்போனால் கியூபாவுக்குத் தராத குடைச்சலை அமெரிக்கா வேறு எந்த ஒரு இஸ்லாமிய தேசத்துக்கும் அளித்ததில்லை. கியூபா என்ன இஸ்லாமிய நாடா? அட, வியட்நாமை எடுத்துக்கொள்ளுங்கள்! எத்தனை வருஷங்கள் நீண்ட யுத்தம்! எத்தனை ஆயிரம் பேர் மாண்டுபோனார்கள்! இத்தனைக்கும் வியட்நாம் ஒரு ஏழை நாடு. மெக்ஸிகோ, ருவாண்டா, ஈக்வடார், ஸ்பெயின் என்று தொடங்கி அமெரிக்கா தன் 'முத்திரை' பதிக்காத தேசமே இல்லை. இது விஷயத்தில் அமெரிக்காவுக்கு இஸ்லாமிய தேசம், கம்யூனிச தேசம், இன்னொரு தேசம் என்றெல்லாம் பாகுபாடுகள் கிடையாது. தனது சௌக்கியத்துக்காக மட்டுமே அமெரிக்கா இதுகாறும் யுத்தங்கள் செய்து வந்திருக்கிறது. ஆனால், இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநிதியாகத் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு, ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின்மீது யுத்தம் அறிவித்தது மாதிரி வேறு யாரும் செய்யவில்லை என்பதால்தான், அமெரிக்கா ஒரு இஸ்லாமிய விரோத நாடு என்பதான கருத்தாக்கம் மிகவும் வலுப்பெற்றது. உண்மையில் இதுவிஷயத்தில் அமெரிக்கா, இஸ்லாமிய விரோத தேசம் அல்ல. அமெரிக்கா நீங்கலான ஒட்டுமொத்த மானுட குலத்துக்கே விரோதமான நடவடிக்கைகளைத்தான் தொடர்ந்து அத்தேசம் எடுத்து வந்திருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான அமெரிக்க சரித்திரத்தை இதுவரை ஆராய்ந்து வந்ததில் நாம் பெறக்கூடிய விடை இதுவாகத்தான் இருக்கிறது. இதையெல்லாம் ஒரு வல்லரசு, தொடர்ந்து வல்லரசாக நீடிப்பதற்காக மேற்கொள்ளும் சாதாரண நடவடிக்கைகள் என்றும் சொல்லலாம். ஆனால், இன்றைக்கு தீவிரவாதிகளால் உலகுக்கே அச்சுறுத்தல் என்று சொல்லி, தீவிரவாத ஒழிப்பு இயக்கத்தை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கும் தேசமும் அதுவே. அமெரிக்காவின் இந்நடவடிக்கையை ஒரு ஜம்போ சைஸ் 'சமூகநீதி'ப் போராட்டமாகப் பார்க்கிறவர்களும் உண்டு. அதைக்கூட, தனக்கொரு ஆபத்து என்று வந்தபிறகுதான் அத்தேசம் மேற்கொண்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உலக வர்த்தக மையத் தாக்குதல் என்பது வெறும் ஒரு கட்டடத்தை இடித்த விஷயமல்ல. அமெரிக்கா என்கிற மிகப் பிரும்மாண்டமான தேசத்தின் ஆன்மாவையே அசைத்துப் பார்த்த சம்பவம். உலகெங்கும் இருக்கும் தீவிரவாத இயக்கங்கள் மிச்சம் மீதி இருந்த துளி அச்சத்தையும், தயக்கத்தையும் உதறித் தள்ள வைத்தசம்பவம் அது. துணிந்து இறங்கினால் எப்பேர்ப்பட்ட கொம்பனையும் ஒரு ஆட்டு ஆட்டிப் பார்த்துவிட முடியும் என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு அழுத்தந்திருத்தமாக ஏற்படுத்திய சம்பவம். அந்த செப்டம்பர் 11_ம் தேதி சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்கா, ஆப்கன்மீது போர் தொடுத்ததும் தொடர்ந்து தாலிபன்கள், 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என்று கண்காணாமல் ஓடி மறைந்ததும் ஒசாமா மறைவிடத்துக்குப் போனதும், எல்லாம் ஒரு பொதுப்பார்வையில் நமக்குச் சொல்வது _ இனி இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கொட்டம் அடங்கிவிடும் என்பது. ஆனால், உண்மை அதுவல்ல. முன்னைவிடப் பல மடங்கு வீரியத்துடன் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன என்பதற்கான மறைமுக அறிகுறியே இது. இதனை உறுதிப்படுத்தும்விதமாக உலகெங்கும் உள்ள பல முக்கியமான தீவிரவாத இயக்கங்களுக்கு இடையில் மிக நெருக்கமான ஒருங்கிணைப்பு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை சொல்வதை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டாக வேண்டும். சந்தேகத்துக்கு இடமின்றி இதெல்லாம் துரதிர்ஷ்டவசமானவைதான். நிம்மதியைக் குலைக்கிற விஷயங்கள்தான். ஆனால், இதெல்லாம் 'புதிய நூற்றாண்டு' என்று கோலாகலமாக வரவேற்கப்பட்ட 2000_வது வருஷம் பிறந்தபோது நிச்சயிக்கப்பட்டவையே. சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமல்லவா? ஒசாமாவின் நான்கு அம்ச செயல்திட்டம்? அதன் தொடர்ச்சிதான்! படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிற தனது செயல்திட்டங்களை ஒரு மங்களகரமான காரியத்துடன் ஆரம்பிக்க நினைத்துத்தான் ஒசாமா தன் மகனின் திருமணத்தைத் தன் செயல்திட்டத்தின் முதல் பாயிண்டாக வைத்திருக்க வேண்டும். உண்மையில் ஒரு கல்யாணக் கச்சேரி பண்ணிப் பார்க்கிற விதமான நிலையிலெல்லாம் அப்போது ஆப்கன் இல்லை. அதுவும் ஒசாமா மகனின் திருமணம்! ஆனாலும், அது நடந்தது. சவுதி அரேபியாவிலிருந்து ஒசாமாவின் தாயார் ரகசியமாக ஆப்கனுக்கு அழைத்துவரப்பட்டு, அவரது முன்னிலையில் அத்திருமணம் நடந்தது. ஒசாமாவின் மூன்று பழைய மனைவிகளும் லேட்டஸ்ட் அடிஷனான ஏமன் புது மனைவியும் அபூர்வமாக அருகருகே நின்று ஆசீர்வதிக்க, ஒரு நல்ல தகப்பனாக இறைவனைப் பிரார்த்தித்து, தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார் ஒசாமா. திருமணப் பரிசாக ஒரு கவிதை வேறு எழுதி வாசித்து அளித்ததாகத் தெரிகிறது (ஏமன் துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பலைத் தாக்கி வீழ்த்திய சம்பவத்தைக் குறிப்பிட்டு, ‘'திரிகள் இனி காணாமல் போய்விடுவார்கள். நமது ஒளிமயமான எதிர்காலம் வெகு பக்கத்தில்தான் இருக்கிறது; நீ ஹனிமூனை முடித்துவிட்டு சீக்கிரம் வந்தால் நான் உனக்கு அதைக் காட்டுகிறேன்' என்கிற அர்த்தத்தில் வருகிறது அக்கவிதை. மூல அரபியிலிருந்து ஆங்கிலத்தில் அர்த்தம் மட்டும்தான் கொடுக்கப்படுகிறதே தவிர, கவிதை வரிகளாகக் கிடைக்காத காரணத்தால் சரியான மொழிபெயர்ப்பு சாத்தியமாக இல்லை). இங்கே ஒசாமாவின் மகன் திருமணம் நடந்த அதேசமயம், அமெரிக்காவிலும் ஒரு கல்யாணம் நடந்தது. அத்தேசம் தனது நாற்பத்து மூன்றாவது அதிபராக ஜார்ஜ் புஷ்ஷைத் தேர்ந்தெடுத்து வெள்ளை மாளிகைக்கு அனுப்பியது. முன்னதாக, 'விட்டால் போதுமடா சாமி' என்று பில் கிளிண்டன் தன் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குப் போய்விட்டிருந்தார். அதிபராக அவர் இருந்த எட்டு வருஷ காலத்தில் ஒருநாள்கூட அவரால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. எத்தனை வழக்குகள்! எத்தனை விசாரணைகள்! எத்தனை அவமானங்கள்! எத்தனை பித்தலாட்டங்கள்! தேசமே தீவிரவாத அச்சுறுத்தலில் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தவேளையில் பெண்கள் விவகாரத்தை முன்னிட்டு ஓர் அதிபர், காங்கிரஸின் நீதி விசாரணைக்கு உள்பட நேர்ந்தது _ ஆயிரம் சொன்னாலும் அமெரிக்க சரித்திரத்தில் அழிக்கமுடியாதபடிக்கு ஏற்பட்ட கறைதான். பின்னால் அல்கொய்தாவின் முழுநீளத் திருவிளையாடல்கள் ஆரம்பமானபோது, கிளிண்டன் ஆட்சிக் காலத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. புலனாய்வுத்துறை பல்குத்திக் கொண்டிருந்தது என்றெல்லாம் ஆளாளுக்கு சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்தார்கள். உண்மையில் கிளிண்டன், உள்நாட்டுப் பாதுகாப்பு விஷயத்தில் எந்தக் குறையும் வைக்கவில்லை. அவரது காலத்தில் அமெரிக்காவுக்குள் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை. அவரே செய்தது தவிர! தவிரவும் அல்கொய்தா நீங்கலான இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்கள் பலவற்றின் முகாம்கள் வட அமெரிக்கக் கண்டத்திலிருந்து கணிசமாகத் தூக்கியடிக்கப்பட்டதும் கிளிண்டன் காலத்தில் நடந்தவைதான். மத்திய ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலிருந்து ஹமாஸ§க்கு வந்து கொண்டிருந்த நிதி உதவிகளைத் தடுத்து நிறுத்தியது, சாரிடபிள் டிரஸ்டுகளின்பேரில் அமெரிக்காவில் நிதி வசூல் செய்து, தீவிரவாத இயக்கங்களுக்கு அளித்து வந்தவர்களை கோழி அமுக்குவது மாதிரி அமுக்கி, அடக்கி வைத்தது, ஆசிய நாடுகளுடன் கணிசமான நல்லுறவு முன்னேற்றம் கண்டது போன்ற அனைத்தும் கிளிண்டன் ஆட்சியில் நடைபெற்றவையே. இதையெல்லாம் அவர் செய்தாரா, அவர்பேரில் வேறு யாராவது செய்தார்களா என்பதெல்லாம் முக்கியமில்லை. ஆனால், அவரது ஆட்சிக்காலத்தில் நடந்தவை. ஆகவே, அதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டாக வேண்டும். எல்லாவற்றையும்விட அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருந்த காலகட்டம் அது. ஹிலாரியின் சில புத்திசாலித்தனமான ஆலோசனைகளை அமல்படுத்தி, பல வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்கள் அமெரிக்காவில் கடை திறக்க ஏற்பாடு செய்து, பிரச்னையைக் கணிசமாகத் தீர்த்தவர் கிளிண்டன். இதன்மூலம் பல லட்சக்கணக்கான அமெரிக்கப் பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்தது அங்கே. கிளிண்டன் இருந்தவரை அமெரிக்காவில் எந்தவிதமான நாசவேலையையும் செய்யாமல் அமைதிகாத்த பின்லேடனுக்கு, அங்கே நடந்த ஆட்சி மாற்றமும் ஒரு விதத்தில் தனக்களிக்கப்பட்ட 'சிக்னலாக'த் தெரியத் தொடங்கியது. வந்திருப்பவர் புஷ். தமது பழைய பகையாளி சீனியர் புஷ்ஷின் திருக்குமாரர். 'கொஞ்சம் மக்குதான்' என்று பரவலாக எல்லோராலும் கணிக்கப்படுபவர். கண்ணில் மண்ணைத் தூவுவது சுலபம் என்று எல்லோருமே சொல்கிறார்கள். அதிகம் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. உடனே ஆரம்பித்துவிடலாம் என்று அவருக்குத் தோன்றியது. புத்தரிலிருந்து தொடங்கலாம் என்று முடிவு செய்தார் _ பாமியானில் தவமிருந்த புத்தர். ஆப்கனுக்குக் கிடைத்துவந்த பல்வேறு சர்வதேச நிதியுதவிகள் அப்போது கணிசமாகத் தடைப்பட்டிருந்தன. அனைத்துக்கும் அமெரிக்க நிர்ப்பந்தங்களே மூலகாரணமாக இருந்தன. தாலிபன்களின் அடிப்படைவாத, அராஜக அரசை விமர்சித்துத் தொடர்ந்து அமெரிக்கா விடுத்துவந்த அறிக்கைகளும், ஆப்கனுக்குச் செய்துவந்த உதவிகளை நிறுத்தும்படி அது தன் தோழமை நாடுகளைக் கேட்டுக்கொண்டதும், ஐ.நா.வை இதுவிஷயத்தில் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததும் பின்லேடனுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தன. அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்குத் தம் எதிர்ப்பை ஆப்கன் அரசு காட்டியே தீர வேண்டும்; அந்த எதிர்ப்பு நடவடிக்கை, சர்வதேச கவனத்தைக் கவரும்விதமாகவும் இருக்க வேண்டும் என்று பின்லேடன் நினைத்தார். நன்கு யோசித்து, தீர்க்கமாக முடிவெடுத்தே பாமியான் மலைப்பகுதி புத்தர் சிலைகளைத் தம் இலக்காகத் தேர்ந்தெடுத்தார். தாலிபன் தலைவர் முல்லா ஓமரும் அதற்குச் சம்மதித்தார். (தொடரும்) Kumudam.com Re: டாலர் தேசம் - AJeevan - 05-04-2004 [align=center:0882f156b5]<img src='http://www.kumudam.com/reporter/060504/pg8-t.jpg' border='0' alt='user posted image'>[/align:0882f156b5] <span style='font-size:22pt;line-height:100%'><b>பா.ராகவன்</b></span> [fliph:0882f156b5] <img src='http://www.kumudam.com/reporter/060504/pg8-1.jpg' border='0' alt='user posted image'>[/fliph:0882f156b5]அமெரிக்காவின் நாற்பத்து மூன்றாவது அதிபராக ஜார்ஜ் புஷ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது, அமெரிக்க மக்கள் அதனை ஒரே ஒரு வார்த்தையில்தான் குறிப்பிட்டார்கள். 'அதிர்ஷ்டம்.' சந்தேகமில்லாமல் அது அதிர்ஷ்டம்தான். பத்துப் பதினைந்து வருஷம் சீனியர் புஷ் திட்டமிட்டுத் தன் மகனை தேசிய அரசியலில் பயிற்சியளித்து வளர்த்தார். உட்காருவது எப்படி, நடப்பது எப்படி, சிரிப்பது எப்படி என்று அழகிப்போட்டிப் பெண்களுக்குக் கொடுக்கிற மாதிரியான பயிற்சிகள்அவருக்குக் கொடுக்கப்பட்டன. சுலபத்தில் கிடைக்காத பல பெரிய மனிதத் தொடர்புகள் புஷ்ஷ§க்கு கவனமாக ஏற்படுத்தித் தரப்பட்டன. அரசு ஊழியர் தரப்பு, என்.ஜி.ஓ.க்கள் தரப்பு, தனியார் துறையினர், பெண்கள் அமைப்புகள், மாணவர்கள் என்று டிபார்ட்மெண்ட் டிபார்ட்மெண்டாக முக்கியஸ்தர்களுடன் அவருக்குத் தொடர்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டன. இதெல்லாம் சீனியர் புஷ், ரீகனின் துணை அதிபராகப் பதவி வகித்த காலத்திலிருந்தே நடந்துவந்தவை. என்ன பிரச்னை என்றால், இந்த ஜூனியர் புஷ்ஷ§க்கு ஏனோ ஆரம்பத்திலிருந்தே மக்களைக் கவரும் சக்தி அத்தனை போதுமானதாக இல்லை. அவருக்கு, அவரது குடும்ப பிசினஸான பெட்ரோலிய உற்பத்தியில் கிடைக்கிற காசே போதுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. அமெரிக்காவின் முன்னணி பெட்ரோலிய நிறுவனங்களுள் ஒன்று புஷ் குடும்பத்தினுடையது. முன்பே நாம் பார்த்தபடி, சீனியர் புஷ் தன் ரத்தத்தையும், வியர்வையையும் முதலீடு செய்து வளர்த்த பிசினஸ் அது. அப்பா சம்பாதித்த பெரிய பெயர். நல்ல பிசினஸ். ஜம்மென்று கோட்டு சூட் போட்டுக்கொண்டு அதனை கவனித்தபடிக்கு காலத்தை ஓட்டிவிடலாம் என்றுதான் முதலில் புஷ் நினைத்தார். தனக்கு அரசியலெல்லாம் ஒத்துவராது என்பது 1978_லேயே அவருக்கு ஒரு மாதிரி புரிந்துவிட்டிருந்தது. அந்த வருஷம் அவர் மக்கள் சபைத் தேர்தலுக்கு நின்று பார்க்கலாமே என்று முயற்சி செய்து படுதோல்வி கண்டிருந்தார். மாறாக, டெக்ஸாஸ் மாகாண பேஸ்பால் க்ளப் முதலாளிகள் சங்கத்தில் இணைந்து, அதில் நிறைய ஷேர் வாங்கி, நிறைய காசும் பார்த்தார். அரசியலைக் காட்டிலும் மற்றவற்றில் தன்னால் நிறைய சாதிக்க முடியும் என்பதுதான் புஷ்ஷின் அந்தக் கால சித்தாந்தமாக இருந்தது. ஆனால், 1992_ம் வருஷம் சீனியர் புஷ் தோல்விகண்டு அரசியல் துறவறம் மேற்கொள்ள நேர்ந்தபோது, வலுக்கட்டாயமாகக் தன் மகனை தீவிர அரசியலுக்குள் திணிக்க முற்பட்டார். அதெப்படி, ஒரு குடும்பத்தில் ஒருத்தர் மட்டும் அதிபராக இருந்தால் போதுமா என்ன? எதற்கு தண்டத்துக்கு ஒரு மகனைப் பெற்று வைத்திருப்பது? திட்டமிட்டு, கவனமாகப் பயிற்சிகள் அளித்து, மனத்தில் நாற்காலி வெறி ஏற்படுத்தி, 'இனி உன் பாதை அரசியல்தான்' என்று தெளிவாகப் பாதை காட்டித்தான் சீனியர் புஷ் தன் மகனை அப்போது டெக்ஸாஸ் மாகாணத்தின் கவர்னர் பதவிக்கு நிறுத்தினார். 1994_ம் வருஷம் நடந்த விஷயம் இது. மிகச் சில வாக்குகள் வித்தியாசத்தில்தான் அப்போதே ஜார்ஜ் புஷ்ஷால் அந்த கவர்னர் பதவியைப் பெற முடிந்தது. ஆனால், நாலு வருஷம் பதவியில் இருக்க முடிந்ததால் புஷ்ஷ§க்கு அரசியல் கொஞ்சம் புரிந்தது. அதன் நெளிவுசுளிவுகள், தகிடுதத்தங்கள், எங்கே தட்டினால் என்ன விழும் என்கிற சூட்சுமம் எல்லாம் புரிந்தது. ஆகவே, 98_ம் வருஷம் மீண்டும் கவர்னராவதில் அவருக்கு சிரமம் ஏதும் இருக்கவில்லை. இம்முறை கொஞ்சம் கௌரவமான வெற்றியே அவருக்குக் கிடைத்தது என்று சொல்ல வேண்டும். ஆனால், புஷ்ஷ§க்கு அப்போதே பேசத் தெரியவில்லை. அதாவது, அதிபர்கள் வழக்கமாக அங்கே பேசக்கூடிய நாகரிக இங்கிலீஷ் அவருக்கு வரவில்லை. படுகொச்சையாக, இலக்கணப் பிழைகளுடன்தான் அவரால் ஆங்கிலம் பேச முடிந்தது. இதனை அநேகமாக அமெரிக்கப் பிச்சைக்காரர்கள் சமூகம் வரைக்கும் கிண்டலடித்துக்கொண்டுதான் இருந்தது (இன்றுவரை இது தொடர்கிறது). தவிரவும், அடித்தட்டு மக்களைக் கவரக்கூடிய எந்தவொரு அம்சமும் புஷ்ஷிடம் இல்லை. அவரது ஒரே தகுதி, சீனியர் புஷ்ஷின் மகன். அவ்வளவுதான். வாரிசு அரசியல் வளர்க்க வந்த வம்சக் கொழுந்து. [fliph:0882f156b5]<img src='http://www.kumudam.com/reporter/060504/pg8.jpg' border='0' alt='user posted image'>[/fliph:0882f156b5] டெக்ஸாஸின் கவர்னர் என்றால், அத்தனையன்றும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியல்ல அங்கே. ஒருமாதிரி ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் புஷ் தன் எதிர்கால நலனுக்கான சமூகசேவைகளை அங்கே புரிந்துகொண்டிருந்தார். எதிர்க்கட்சியான டெமாக்ரடிக் தலைவர் வேறு அப்போது அங்கே மிகுந்த செல்வாக்குப் படைத்தவராயிருந்தார். சீனியர் புஷ்ஷின் அரசியல் செல்வாக்குதான் மகன் புஷ்ஷ§க்கு உதவி செய்துகொண்டிருந்தது. அதே செல்வாக்குதான், 2000_ம் வருஷப் பொதுத்தேர்தலுக்கான ரிபப்ளிகன் கட்சி வேட்பாளராக அவரை நிறுத்தவும் உதவிபுரிந்தது. அப்போது அவரைத் தேர்தலில் எதிர்த்து நின்றவர் அல்பர்ட் கோர் என்கிற அல்கோர். கிளிண்டனின் அரசில் துணை ஜனாதிபதியாக இருந்தவர். அற்புதமான திறமைகள் படைத்த அரசியல்வாதி. மகா சாமர்த்தியசாலி. மக்கள் மனம் புரிந்தவர். செல்வாக்கு விஷயத்தில் எந்தப் பிரச்னையும் வராதவர் என்று நம்பப்பட்டவர். மேலும், கவிதை மாதிரி இங்கிலீஷ் பேசுபவர். சந்தேகமில்லாமல் புஷ் உதைபடப்போகிறார் என்றுதான் எல்லோருமே நம்பினார்கள். அதற்கு ஏற்றமாதிரி, தேர்தலுக்கு முன் நடந்த பேட்டிகளில் அல்கோரின் பேச்சுத்திறமைதான் வெகுவாக சிலாகிக்கப்பட்டது. தொலைக்காட்சியில் அந்த நேருக்குநேர் வாதங்களைப் பார்த்த அமெரிக்க மக்கள், புஷ்ஷின் ஆங்கிலப் 'புலமை' கண்டு சிரித்தார்கள். மேலும் பிரச்னைகளை அவர் எப்படிக் கையாளுவார் என்பதே புரிந்துகொள்ள முடியாதவண்ணம் இருந்தது. ஒருவிஷயம் மட்டும்தான் எல்லோருக்கும் புரிந்தது. புஷ் தன் பிரசாரத்தில் கணிசமாக வரிகள் குறைக்கப்படும் என்று வாக்களித்திருந்தார். அது ஒரு நல்ல காரியம் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அதற்காக மட்டுமே ஒருவரை அதிபராக்கிவிட முடியுமா என்ன? தேர்தல் முடிவுகள் வரத்தொடங்கிய தினம் அமெரிக்காவே பரபரப்புக்குள்ளானது. அதற்குமுன் அத்தனை நெருக்கமாக ஓட்டுகள் வந்ததில்லை. ஒன்று அல்லது இரண்டு. இரண்டு அல்லது மூன்று. இத்தனை நெருக்கமான வாக்குகள் வித்தியாசத்தில்தான் இரண்டு பேருக்குமே ஓட்டுகள் வந்திருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த இடங்களிலிருந்து செய்திகள் வந்துகொண்டிருந்தன. 'கோர்தான் ஜெயிக்கப்போகிறார்' என்று அமெரிக்காவெங்கும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஏனெனில், நிறைய ஓட்டுகள் உள்ள பெரிய பகுதியான ஃப்ளோரிடாவில் அல்பர்ட் கோர்தான் ஜெயிக்கிறார் என்று எக்ஸிட் போல் முடிவுகள் சொல்லிவிட்டன. மறுநாள் காலை அந்த வதந்தியும் உண்மையானது. எண்ணப்படாத சில ஓட்டுகள் தவிர, மிச்சமுள்ள எண்ணி முடிக்கப்பட்ட ஓட்டுகளின் அடிப்படையிலும் அல்கோர்தான் முன்னணியில் இருந்தார். இன்னும் மிச்சமிருந்தது 'எலக்டொரல் காலேஜ்' ஓட்டுகள் மட்டுமே. அதென்ன எலக்டொரல் காலேஜ்? அமெரிக்காவில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் எக்கச்சக்க விதிமுறைகள் உண்டு. நேரடியாக விழுகிற ஓட்டுகள், தபால் ஓட்டுகள், ராணுவத்தினர் ஓட்டுகள் என்று இங்கே நம்மூரில் இருக்கிற பல்வேறு விதமான ஓட்டுகள் மாதிரி, அங்கேயும் உண்டு. கூடுதலாக ஒன்று, எலக்டொரல் ஓட்டு. இது என்னவெனில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தமது கௌரவப் பிரதிநிதியாகச் சிலரைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்தந்தத் தொகுதிகளிலிருந்து மக்கள் சபைக்குப் போகிற பிரதிநிதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த 'கௌரவப் பிரதிநிதி'களின் எண்ணிக்கையில் கூடுதல் குறைச்சல் இருக்கும். தேர்தல் முடிவுகள் கொஞ்சம் முன்னப்பின்ன ஆகும்போது, இந்த கௌரவப் பிரதிநிதிகளின் ஓட்டு, வெற்றி பெறுபவரைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும். பாப்புலர் ஓட்டுகளில் தோற்றால்கூட இந்த எலக்டொரல் ஓட்டுகளின் மூலம் ஜெயித்துவிட முடியும். தற்கால அமெரிக்கர்களுக்கு இந்த விஷயத்தில் அத்தனை பரிச்சயம் கிடையாது. ஏனெனில் கடந்த நூறு வருஷங்களில் நடந்த அமெரிக்கத் தேர்தல்களில் இந்த கௌரவ ஓட்டுகளுக்கு அப்படியன்றும் முக்கியத்துவம் ஏற்பட்டதில்லை. கட்டக்கடைசியாக 1888_ல் நடந்த பொதுத்தேர்தலில் (க்ரோவர் க்ளீவ்லண்டும் பெஞ்சமின் ஹாரிசனம் மோதினார்கள் அப்போது. ஹாரிசன் வென்றார்.) எலக்டொரல் ஓட்டு அதிபரைத் தீர்மானித்திருந்தது. அதன்பின் ஏதுமில்லை. இது நவம்பர் 2000. ஃப்ளோரிடாவில் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் புஷ் முன்னணியில் இருந்தாலும் ஒட்டு மொத்த இருபத்தைந்து எலக்டொரல் ஓட்டுகளும் அவருக்குப் போய்விடும். அதே ஒரு ஓட்டில் அல்கோர் முன்னணியில் இருந்தாரானால் அதே இருபத்தைந்து எலக்டொரல் காலேஜ் ஓட்டுகளும் அவருக்குப் போய்விடும்! இந்த இக்கட்டான சூழலின்போதுதான் ஃப்ளோரிடா தேர்தலில் நிறைய முறைகேடுகள் நடந்திருப்பதாக கசமுசாக்கள் எழுந்தன. கள்ள ஓட்டு விவகாரங்கள். பல பேர் ஓட்டுப் போடவில்லை என்கிற தகவல்கள். போட்டதெல்லாம் யாரோ என்கிற குற்றச்சாட்டுகள். மறு வாக்கெடுப்பு முறையீடுகள். ரீகவுண்ட் விண்ணப்பங்கள். புஷ்ஷ§க்கு ஃப்ளோரிடாவில் பாப்புலர் ஓட்டுகளில் முன்னணி கிடைத்திருந்ததாக அறிவிக்கப்பட்டது. கொதித்தெழுந்த அல்கோரின் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்துக்குப் போனார்கள். தேர்தல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டுக்குத்தான் முதலில் வழக்குபோனது. ஆனால், நீதிபதிகள் கேஸை ஃப்ளோரிடா உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என்று திருப்பி அனுப்பினார்கள். இடையில் என்னென்னவோ கச்சடா கசமுசாக்கள் நடந்ததாக அமெரிக்க மீடியா பலநாள் கழுதையாகக் கத்திக்கொண்டிருந்தது நினைவிருக்கலாம். எந்த ஊராக இருந்தால் என்ன? ஜனநாயகம் என்றும் தேர்தல் என்றும் வந்துவிட்டபிறகு இதெல்லாம் சகஜமாகிவிட்ட விஷயங்கள். அவ்வளவுதான். பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த அல்கோரின் வெற்றிக்கனவு கலைந்தது. ஃப்ளோரிடாவில் புஷ் வெற்றி பெற்றதாக நீதிமன்றம் அறிவித்தது. மயிரிழையில் அவர் அமெரிக்க அதிபரானார். இந்த கலாட்டாக்களால்தான் 2000_ம் ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் ஜெயித்த புஷ், அடுத்து ஜனவரியில் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொள்ள நேர்ந்தது. ஆரம்பமே களைகட்டிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். மக்கள் மத்தியில் அப்போது எழுந்த சலசலப்பு அத்தனை சீக்கிரம் அடங்குவதாகத் தெரியவில்லை. புஷ்ஷை அவர்கள் ஒரு சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கத் தொடங்கினார்கள். மீடியா சுத்தமாக அவரை ஆதரிக்க மறுத்தது. அதிபர் மாளிகை அறிக்கைகளுக்கு ஏனோதானோவென்றுதான் பத்திரிகைகள் வேண்டாவெறுப்பாக இடம்கொடுத்தன. வழக்கமாக, ஒரு புதிய அதிபர் பதவி ஏற்றதும் இருக்கக்கூடிய பரபரப்புகள் ஏதுமில்லை. அதிபர் மாளிகை நிருபர்கள் பெரும்பாலான நேரம் கேண்டீனிலேயே இருந்தார்கள். 'சந்தேகமில்லாமல் இவர் சீக்கிரமே வீட்டுக்குப் போய்விடுவார்' என்று வெளிப்படையாகவே பேசத் தொடங்கினார்கள். அதிபரின் ப்ரஸ் மீட்டுகளுக்கு எப்போதும் கூடும் நிருபர் கூட்டத்தில் பாதிகூடக் கூடுவதில்லை என்றானது. பார்த்தார் புஷ். என்னவாவது செய்து கொஞ்சமேனும் நல்ல பெயர் தேடிக்கொள்ளாவிட்டால் பிழைப்பது கஷ்டம் என்பது அவருக்குப் புரிந்தது. என்ன செய்யலாம்? தான் வாக்களித்தபடி வரிகளைக் குறைக்கிற விஷயத்தையே முதலில் கையிலெடுத்தார். அது ஒரு நல்ல முயற்சி என்றுதான் சொல்லவேண்டும். சராசரி மக்களை பாதிக்கக்கூடிய பல்வேறு வரியினங்களில் புஷ் கணிசமான மாறுதல்களைச் செய்தார். பல வரிகளை நீக்கியதும் சிலவற்றைக் கணிசமாகக் குறைத்ததும் அவர் பதவிக்கு வந்ததும் செய்த நல்ல காரியம் என்று சொல்ல வேண்டும். ஆனால், இதனாலெல்லாம் யாரும் அங்கே திருப்தியடைவதாகத் தெரியவில்லை. ஒரு முழு பதவிக்காலத்தைக்கூட அவர் தாண்டுவது கஷ்டம் என்றுதான் எல்லோருமே சொன்னார்கள். ஏழெட்டு மாதங்களை ஒருவாறு புஷ் 'ஓட்டினார்' என்றுதான் சொல்ல வேண்டும். அவரது அதிபர் நாற்காலி பிழைத்ததற்கு மூலமுதற்காரணம் ஒசாமா பின்லேடன். அமெரிக்கா மீதான தனது இறுதித் தாக்குதலுக்கு அவர் அப்போது செப்டம்பர் 11_ம் தேதியை முகூர்த்த தினமாக நிச்சயித்திருந்தார். (தொடரும்) Kumudam.com Re: டாலர் தேசம் - AJeevan - 05-16-2004 [align=center:45a4840567]<img src='http://www.kumudam.com/reporter/060504/pg8-t.jpg' border='0' alt='user posted image'>[/align:45a4840567] <span style='font-size:22pt;line-height:100%'><b>பா.ராகவன்</b></span> <img src='http://www.kumudam.com/reporter/160504/pg8-2.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/160504/pg8-1.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/160504/pg8.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/reporter/160504/pg8-3.jpg' border='0' alt='user posted image'> உலக வர்த்தக மையக் கட்டடங்களும் ராணுவத் தலைமையகமான பெண்டகனும் தாக்கப்பட்ட நேரத்தில், புஷ் அரசின் முதன்மை மூளை என்று வருணிக்கப்படும் உள்துறைச் செயலாளர் காலின் பாவல், பெரு தேசத்தின் தலைநகரான லீமாவில் இருந்தார். அந்த நாட்டில் அப்போதுதான் புதிய அதிபர் ஒருவர் பொறுப்பேற்றிருந்தார். அவர் பெயர் அலெக்சாண்ட்ரோ டொலடோ. சும்மா கொஞ்சம் நல்லுறவு வளர்ப்பதற்காக அங்கே பலதேச உச்சி மாநாடு ஒன்று கூட்டப்பட்டு, அதில் பங்கேற்பதற்காக பாவல் போயிருந்தார். கியூபா தவிர, பிராந்தியத்திலிருந்த 34 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தார்கள். காலை நேரமல்லவா? டிபன் சாப்பிடுவதற்கென்று பாவல் கையலம்பிக்கொண்டு உட்கார்ந்ததும் அந்தச் செய்திப்பேய் வந்துவிட்டது. அவரது எக்ஸிகியூட்டிவ் அசிஸ்டெண்ட் க்ரெக் கெல்லி (அமெரிக்கப் பதவிகள் பெயரெல்லாம் கொஞ்சம் தமாஷாக இருக்கிறதல்லவா? அமைச்சர்களை செகரட்டரியாகவும் செகரட்டரிகளை அசிஸ்டெண்டுகள் என்றும் அழைப்பது அந்த ஊர் ஸ்டைல்), அறைக்கதவைப் பிளந்துகொண்டு பாய்ந்து வந்து சேதி சொன்னார். அவர் சொன்ன நேரத்தில் பெண்டகன் தாக்கப்பட்டிருக்கவில்லை. இரண்டு விமானங்கள் மோதி வர்த்தக மையக் கட்டடங்கள் தகர்க்கப்பட்ட செய்தி மட்டும்தான். காதில் விழுந்த மாத்திரத்திலேயே பாவல், "அது விபத்தல்ல", என்று உடனே இடைமறித்துச் சொன்னார். "ஒன்று மோதினால் விபத்து. இரண்டு என்றால் தீவிரவாதம்." நாற்காலியைவிட்டு அப்போதே அவர் எழுந்துவிட்டிருந்தார். உடனடியாக உச்சிமாநாட்டில் தொடர்ந்து தாம் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையைச் சுருக்கமாக பெருவின் பிரசிடெண்டுக்கு விளக்கிவிட்டு, விமான நிலையத்துக்கு விரைந்தார். அங்கிருந்து Êஏழு மணிநேரப் பயணம், அமெரிக்காவுக்கு. இருக்கையில் அமர்ந்ததுமே வெள்ளை மாளிகையைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றார். ம்ஹ¨ம். பாதுகாப்பு நிமித்தம் சகல வெளிதேசத் தொலைத்தொடர்புகளையும் அமெரிக்கா அப்போது நிறுத்தியிருந்தது. ஈமெயில் அனுப்பவாவது முடியுமா என்றால் அதுகூட முடியவில்லை. ஒரு தேசம் சுத்தமாகத் தன் கதவுகளை மூடிக்கொள்வது என்றால் அதுதான். பஸ், ரயில், விமானங்களைப் போகவிடாமல் நிறுத்துவது சுலபம். ஆனால் ஒட்டுமொத்தத் தொலைத்தொடர்பு சௌகரியங்களையும் கம்ப்ளீட்டாக நிறுத்தி, உலகிலிருந்து ஒரு தேசம் தன்னைத் துண்டித்துக்கொள்வதென்பது கற்பனைகூடச் செய்து பார்க்கமுடியாத விஷயம். ஆனால் அப்போது அமெரிக்கா அதைச் செய்தது! என்னவாவது செய்து உள்நாட்டில் யாருடனாவது உடனே பேசியாகவேண்டும். என்ன செய்யலாம்? அதிபுத்திசாலியான பாவலுக்கு உடனே ஒரு யோசனை வந்தது. விமானங்களிலுள்ள ரேடியோ மூலம் தகவல் பரிமாறும் வசதி உண்டு. அதாவது பாதுகாப்பு வளைய சௌகரியமெல்லாம் இல்லாத திறந்த அலைவரிசை, ரேடியோ தொலைத்தொடர்பு. இதில் ரகசியமெல்லாம் பேசக்கூடாது. என்னவாவது ஆபத்து என்றால் மட்டும் அபயக்குரல் எழுப்பப் பயன்படுத்துவார்கள். அதனைப் பயன்படுத்தி, தனது டெபுடி செகரட்டரி ரிச்சர்ட் ஆர்மிட்டேஜை ஒருவழியாகப் பிடித்தார், பாவல். நடந்தது என்ன என்பது பற்றி மிக விரிவாக, முழுமையாகக் கேட்டு மனத்தில் பதித்துக்கொண்டார். ஆர்மிட்டேஜ்தான் பெண்டகனும் தாக்கப்பட்டுவிட்ட தகவலை பாவலுக்குச் சொன்னது. வானில் பறக்கிற எல்லா விமானங்களையும் இப்போது சந்தேகிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் சொன்னதன் முழு அர்த்தம் புரிய பாவலுக்கு வெகுநேரம் ஆகவில்லை. ரீகன் காலத்திலிருந்தே பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்க அரசின் கில்லாடிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிற 64 வயதுக்காரர் அவர். அமைதியாக உட்கார்ந்து யோசித்தார். என்னென்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், யார் யாரிடம் விவாதிக்க வேண்டும், உலகுக்கு இதனை எப்படி எடுத்துச் சொல்லவேண்டும் _ என்பதுதான் அவரது சிந்தனையின் சாரம். பாவலுக்குத் தகவல் கிடைத்த அதே நிமிஷத்தில்தான் அதிபர் புஷ்ஷ§க்கும் செய்தி போனது. அவரும் அப்போது தலைநகரில் இல்லை. ஃப்ளோரிடா மாகாணத்தில் சரஸொட்டா என்கிற ஊரில் ஒரு எலிமெண்ட்ரி ஸ்கூலில் என்னமோ லெக்சர் கொடுக்கப்போயிருந்தார். செய்தி கேள்விப்பட்டதும் புஷ் சொன்ன வார்த்தை _"பைலட்டுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்குமோ என்னவோ!" 'ஒரு விமானமல்ல; இரண்டு' என்று எடுத்துச் சொன்னபிறகுதான் அவர் புத்தியில் பல்பு எரியத் தொடங்கியது. முகம் இருண்டு, வியர்த்தும்விட்டது. சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பிறகு மெல்லிய குரலில் சொன்னார்: "அவர்கள் யுத்தம் தொடங்கிவிட்டார்கள். நாமும் தயாராக வேண்டியதுதான்." அவசர அவசரமாக ஒரு பத்துப் பன்னிரண்டு வரிகளில் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி எழுதப்பட்டது. அந்தப் பள்ளியின் ஆடிட்டோரியத்துக்கே தொலைக்காட்சிக்காரர்களை உடனே வரவழைத்து, அங்கேயே புஷ் பேசினார். 'சந்தேகமில்லாமல் இது தீவிரவாதிகளின் தாக்குதல்.' அதைத்தான் அவர் முதலில் சொன்னார். அந்தச் சில வரிகளைப் படித்து முடிப்பதற்குள்ளாக நிறைய இடங்களில் தடுமாறினார். பல சொற்கள் அர்த்தம் மாறிப் பொருள் தரக்கூடியவையாக இருந்தன. பதற்றம்தான் காரணம் என்று சொன்னார்கள். இப்படியரு நெருக்கடி நேரத்தில் அதிபருக்கு இத்தனை பதற்றம் ஆகாது என்றும் சொன்னார்கள். டி.வி.க்காரர்கள் கிளம்பிய சூட்டிலேயே அதிபரும் விமானநிலையத்துக்குக் கிளம்பிவிட்டார். விமானம் ஏறுமுன் வாஷிங்டனைத் தொலைபேசியில் அழைத்து அவர் அளித்த உத்தரவு: "என் மனைவியும் மகள்களும் பாதுகாப்பான இடத்துக்கு உடனே போகவேண்டும். அவர்களது பாதுகாப்பில் சிறு பிசகும் நேரக்கூடாது!" உடனே, வெள்ளை மாளிகையில் இருந்த லாரா புஷ்ஷ§க்கும் அவரது இரட்டைப் பெண் குழந்தைகளுக்கும் தகவல் தரப்பட்டது. அவர்கள் வாஷிங்டன் நகரின் அதிபயங்கரமான போக்குவரத்து நெரிசலில் 45 நிமிடங்கள் நீந்தி, ரகசியப் பாதுகாப்புப் படையின் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கே அவர்களுக்கு சங்கேத வார்த்தைகள் வழங்கப்பட்டு, உடனடியாக ஆளுக்கொரு ரகசிய இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இதெல்லாம் அன்று காலை 9.39க்கு பெண்டகன் மீது விமானம் மோதியதிலிருந்து சரியாக ஒரு மணி நேரத்துக்குள் நடந்தவை. 9.50க்கெல்லாம் வாஷிங்டனுக்குக் கிளம்பிவிட்டார் புஷ். கிளம்பும்போதே தமது உதவி ஜனாதிபதி டிக்செனியைத் தொலைபேசியில் அழைத்தார். "நாம் யுத்தகளத்தில் இருக்கிறோம். உடனே காங்கிரஸை கூட்டி, சுருக்கமாக விஷயத்தை விளக்கிவிட்டு வந்து சேர்" என்று உத்தரவிட்டுவிட்டு, "பெருவிலிருந்து காலின் பாவல் புறப்பட்டுவிட்டாரா?" என்று கேட்டு விசாரித்து உறுதிப்படுத்திக்கொண்டார். அப்போதுதான் போனை வைத்த டிக்செனி உடனே மீண்டும் புஷ்ஷை அழைத்து, "அவசரமாக ஒரு உத்தரவிட வேண்டும். சந்தேகத்துக்கு இடமான எந்த கமர்ஷியல் விமானம் பறந்தாலும் அமெரிக்க ராணுவ விமானம் அதனைச் சுட்டு வீழ்த்த அனுமதி வேண்டும்" என்று கேட்டார். கேட்டுக்கொண்டும் கொடுத்துக்கொண்டும் இருக்கிற நேரமா அது! "என்ன வேண்டுமோ செய்துகொள்" என்றார் புஷ். தலைநகரின் அதிகார மையங்களில் செய்திகள் வந்து குவிந்தவண்ணம் இருந்தன. நான்காவதாகக் கடத்தப்பட்ட விமானம் என்ன ஆனது, எங்கே போனது என்று இன்னும் தெரிந்திருக்கவில்லை. கடத்தல்காரர்களின் இலக்கு வெறும் கட்டடங்களாக மட்டும் இருக்க முடியாது; தாக்குதல் வேறு வடிவத்திலும் திடீரென்று தொடங்கலாம் என்பதாகப் புலனாய்வு அதிகாரிகள் சந்தேகப்பட்டார்கள். அதாவது, அமெரிக்க அரசின் மிக உயர்ந்த பதவிகளில் இருப்போர் அனைவருக்குமே ஆபத்து என்பதாகச் சொல்லப்பட்டது. இத்தகவலை Êஏழெட்டுத் தரப்பிலிருந்து அடுத்தடுத்துக் கேட்க நேர்ந்த டிக்செனிக்கு உடனே கவலை வந்து, மீண்டும் புஷ்ஷை போனில் அழைத்தார். "தயவுசெய்து நீங்கள் வாஷிங்டன் வரவேண்டாம்" என்று சொன்னார். முதலில் அதைக் கடுமையாக மறுத்தாலும், கொஞ்சம் யோசித்தால் அவர் சொல்வதுதான் சரி என்று புஷ்ஷ§க்கும் தோன்றியது. ஆகவே, புறப்பட்ட விமானத்தை திசை திருப்பி, லூசியானாவிலுள்ள பார்க்ஸ்டேல் விமானப்படை தளத்துக்குப் போகச் சொன்னார். பத்தேமுக்கால் மணி சுமாருக்கு லூசியானாவில் இறங்கியதும் புஷ் செய்த முதல் காரியம், ரகசிய இடத்துக்குப் போன தன் மனைவி பத்திரமாக இருக்கிறாரா என்று போன் செய்து விசாரித்ததுதான். நாடே பதறிக்கொண்டிருந்தபோது, இப்படி உயிருக்கு பயந்து எங்கோ வந்து ஒளிந்துகொண்டிருக்க வேண்டியிருக்கிறதே என்று புஷ்ஷ§க்கு குற்ற உணர்ச்சி இல்லாமலில்லை. ஆனால், அந்த நேரத்தில் அவரால் எந்த ஒரு முடிவையும் உடனே எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அங்கிருந்தபடியே போன் போட்டு, தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் டொனால்டு ரம்ஸ்பீல்டுடன் பேசினார். என்ன நடக்கிறது என்று கேட்டறிந்தார். அழிவின் பாதிப்புகள் குறித்து விசாரித்தார். உயிர் பிழைத்தோருக்கு மருத்துவ சிகிச்சை எங்கெங்கே, யார் யாரால் தரப்படுகிறது என்று கேட்டுக்கொண்டார். சம்பவ இடத்திலேயே மேயர் இருப்பதில் தாம் திருப்திகொண்டிருப்பதாகச் சொல்லச் சொன்னார். மேலும் பிற்பகல் 3.30க்கு தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தைக் கூட்டச்சொல்லிக் கேட்டுக்கொண்டார். எப்படியும் தான் வந்து கலந்துகொள்வதாக உறுதியளித்தார். அந்த 3.30 மணிக் கூட்டத்தில்தான் முதன்முதலாக அல்கொய்தா என்கிற சொல் உபயோகிக்கப்பட்டது. தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியவர் பின்லேடன்தான் என்று உறுதிபடத் தீர்மானிக்கப்பட்டது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானங்களில் பயணம் செய்தோரின் விவரங்களை அலசிப் பார்த்ததில், பெண்டகன் கட்டடத்தின்மீது மோதிய பயணிகள் விமானம் போயிங் 77_ல் இருந்த மூன்று பேரின் முகங்கள் அமெரிக்க உளவுத்துறைக்கு மிகவும் பரிச்சயமானவை. அல்கொய்தா இயக்கத் தலைவர்கள்தான் அவர்கள் என்று சூடம் அணைத்து சத்தியம் செய்தது அமெரிக்கப் புலனாய்வுத் துறை. அதில் ஒரு ஆள் மிகவும் பழக்கமானவர். அவர் பெயர் காலித் அல் மிதார். மலேசியாவில் உள்ள சி.ஐ.ஏ.வின் கிளை அலுவலகத்தினரால் முந்தைய வருடம்தான் கண்காணிக்கப்பட்டவர். ஒரு அல்கொய்தா ரகசிய மாநாட்டில் சி.ஐ.ஏ.வின் கூலி ஏஜெண்ட் ஒருத்தனால் அடையாளம் காட்டப்பட்ட போராளி. காலித் அல் மிதாரின் அடையாளங்களை, அவனைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துக்கொண்ட மலேசிய சி.ஐ.Êஏ. அதிகாரிகள், அதனை இன்னொரு அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐக்கு அனுப்பி, 'இந்த ஆளை கவனியுங்கள்' என்று ஒரு வருடம் முன்னர்தான் சொல்லியிருந்தார்கள். எஃப்.பி.ஐ. அதிகாரிகள், தமது 'கவனிக்கப்பட வேண்டியவர்கள்' பட்டியலில் காலிதின் பெயரைச் சேர்த்து, அவனைத் தொடர்ந்து இரவு பகலாகக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். அவன் தொடர்ந்து அமெரிக்காவிலேயேதான் அந்த ஆண்டு முழுவதும் இருந்திருக்கிறான். ஆகவே, அவனது முகத்தை அடையாளம் காணுவதில் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. மேலும், இந்த மாதிரியரு பிரும்மாண்டமான தாக்குதல் திட்டத்தை அல்கொய்தா தவிர வேறெந்த ஒரு தீவிரவாத அமைப்பும் செய்ய முடியாது என்று தக்க ஆதாரங்களுடன் எடுத்துச்சொன்னார் ரம்ஸ்பீல்டு. ஆனால், எஃப்.பி.ஐ.யின் இயக்குநரான ராபர்ட் முல்லருக்கு ஒரு சந்தேகம் தீராமல் இருந்தது. எத்தனையோ பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி அதெப்படி ஒரே சமயத்தில் நான்கு விமானங்களைக் கடத்திவிட முடியும்? எனில், இதில் உள்கை சம்பந்தப்படாமலிருக்குமா? புஷ்ஷால் இந்தச் சந்தேகத்தைக் காதுகொடுத்துக் கேட்கவே முடியவில்லை. அவருக்கு மட்டுமல்ல; அங்கே கூடியிருந்த அத்தனை பேருக்குமே அடிமனத்தில் அந்தக் கேள்வி இருக்கத்தான் செய்தது! ஆனால், வாய்விட்டுச் சொல்லத்தான் யாருக்கும் முடியவில்லை. ஒருவாரம் முன்னதாகத்தான் ராபர்ட் முல்லர் இயக்குநராகியிருந்தார். ஆகவே பளிச்சென்று கேட்டுவிட்டார். எப்படியாவது சீக்கிரம் விமானங்களை மீண்டும் இயக்கவேண்டும் என்று புஷ் விரும்பினார். தீவிரவாதிகளுக்கு பயந்து விமான சர்வீஸை நிறுத்திவைத்திருந்ததை மிகவும் அவமானகரமானதொரு விஷயமாகவே அவரால் பார்க்க முடிந்தது. பாதுகாப்புக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், 'அவர்கள் சிரிக்க ஒரு வாய்ப்பு' என்பதாகவே புஷ் அதனைப் பார்த்தார். "மீண்டும் ஓரிரு தினங்களில் இயக்கலாம். அதில் பிரச்னையில்லை. ஆனால் தீவிரவாதிகளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர்கள் எப்போதும் மீண்டும் தாக்கலாம். இது ஒரு ஆரம்பம்தான் என்று நினைக்கிறேன்" என்றார் ரம்ஸ்பீல்டு. ஆனால், அன்றைய தினத்தில் இனிமேல் வேறு தாக்குதல் நடவடிக்கைகள் நிகழ வாய்ப்பில்லை என்று எல்லோருமே நினைத்தார்கள். எப்போது பத்து மணிக்கு முன்னதாக அடுத்தடுத்து மூன்று இலக்குகளை வீழ்த்தி ஒரு முயற்சியில் தோல்வி கண்டார்களோ, இனி அடுத்தது நடக்க_குறைந்தது 24 மணி நேரமாவது ஆகும் என்று சொன்னார்கள். அந்த நான்காவது விமானம் எதனை நோக்கிச் செலுத்தப்பட்டது என்பதே இறுதிவரை தெரியவில்லை. பாதி வழியிலேயே விழுந்து நொறுங்கிவிட்டது. விமானத்துக்குள்ளேயே தீவிரவாதிகளை எதிர்த்து பயணிகள் சண்டையிட்டிருக்கலாம். ஆகவே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து விமானம் நிலைகுலைந்திருக்கலாம் என்று நினைத்தார்கள். சரி, மிச்சத்தை நாளை பார்ப்போம் என்று புஷ் எழுந்துகொண்டார். மனைவியைத் தொலைபேசியில் அழைத்து 'வெள்ளை மாளிகைக்கு வந்துவிடு' என்று சொன்னார். நாலரைமணிக்குத் தான் அங்கே வந்துவிடுவதாகவும் சொன்னார். உண்மையில் அவர் மிகவும் அதிர்ச்சியடைந்து, களைப்புற்றிருந்தார். கொஞ்சநேரம் படுத்துத் தூங்கலாம் என்பதே அவர் விருப்பமாக இருந்தது அப்போது. ஆனால், அன்றைக்கு அமெரிக்காவில் யாருக்குமே தூக்கம் வரவில்லை. நேற்றுவரை விண்ணைத் தொட்டுக்கொண்டிருந்த இரு கோபுரங்கள் இன்று இல்லை என்கிற உணர்வு, ஒரு பூதம் மாதிரி எல்லோர் மனத்தையும் கவ்வி அலைக்கழித்துக் கொண்டிருந்தது. (தொடரும்) Kumudam.com - AJeevan - 05-23-2004 [align=center:f51a8a5f38]<img src='http://www.kumudam.com/reporter/230504/pg8t.jpg' border='0' alt='user posted image'>[/align:f51a8a5f38] <span style='font-size:22pt;line-height:100%'> அல்கொய்தா தாக்குதல் நடந்த மறு விநாடி தொடங்கியே ஆப்கன் மீதான யுத்தத்துக்கு அமெரிக்கா தயாராகிவிட்டதாக இன்றுவரை உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. உண்மையில் அந்தச் சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் கழித்துத்தான் யுத்தம் குறித்த முடிவுக்கே அமெரிக்க அதிபர் வந்தார். ஏதாவது செய்து அல்கொய்தாவினரை ஒட்டுமொத்தமாக அழித்துவிட வேண்டும் என்று நினைக்கவும் பேசவும் செய்தார்கள்தான் என்றாலும், ஒரு நேரடி யுத்தத்தை அவர்கள் தீர்மானித்தது செப்டம்பர் 16_ம் தேதிதான். கேம்ப் டேவிட் என்கிற இடத்தில் முதலில் ஒரு ரகசியக்கூட்டம் கூட்டப்பட்டது. முன்னதாக, அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் அத்தனை பேரும் அவரவர் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து ஆளுக்கொரு திட்டம் தயாரித்துவைத்திருந்தனர். என்ன செய்வது, எப்படிச் செய்வது, என்ன செலவாகும், எத்தனை நாட்கள் பிடிக்கும் _ அவரவர் திட்டங்களுடன் இந்த நான்கு கேள்விகளுக்கும்கூட விடை எழுதிக்கொண்டு வரும்படி அதிபர் புஷ் உத்தரவிட்டிருந்தார். <img src='http://www.kumudam.com/reporter/230504/pg8.jpg' border='0' alt='user posted image'> தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சில அதிகாரிகள் மட்டுமே அந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதிபர் புஷ், உள்துறைச் செயலாளர் காலின் பாவெல், ராணுவச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்டு, உதவி ஜனாதிபதி டிக் செனி, சி.ஐ.ஏ.வின் இயக்குநர் டெனட், எஃப்.பி.ஐ. இயக்குநர் ராபர்ட் முல்லர், அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் _ இவர்கள் தவிர, குறிப்புகள் எடுக்க இரண்டு அசிஸ்டெண்டுகள். யுத்தம்தான். அல்கொய்தாவை ஒழிப்பதுதான் ஒரே நோக்கம். ஆனாலும் அது அமெரிக்கா _ அல்கொய்தா யுத்தமாக மட்டும் இருக்கக்கூடாது; நல்ல சக்திக்கும் தீயசக்திக்கும் இடையிலான யுத்தமாக மட்டுமே கருதப்பட வேண்டும். அதற்கான யோசனைகளை முதலில் தீர்மானித்துவிட்டுப் பிறகு வேலையில் இறங்கலாம் என்று புஷ் கருதினார். கவனிக்க, இந்த இடத்தில்கூட அமெரிக்கா மட்டும் நேரடியாகக் களத்தில் இறங்குகிற உத்தேசத்தில்தான் புஷ் இருந்தார். இங்கிலாந்து உள்ளிட்ட பிற கூட்டணி தேசங்களை உதவிக்கு அழைக்கிற யோசனை அவருக்கு அப்போது இல்லை. இந்த ஆபரேஷனுக்கு சி.ஐ.ஏ. மட்டுமே போதுமானது என்பதுதான் அவரது தீர்மானம். ஏனெனில், பல்லாண்டுகளாக அல்கொய்தா பற்றிய ஆராய்ச்சியிலும் பின்தொடர்தலிலும் களையெடுப்பு நடவடிக்கைகளிலும் ஊறி ஊறி, சி.ஐ.ஏ.வின் அனைத்து ஆபீஸர்களுமே கிட்டத்தட்ட அரை அல்கொய்தாவினர் ஆகியிருந்தார்கள் அப்போது. அதாவது, அல்கொய்தாவினரின் இயல்புகள் அனைத்துமே அவர்களுக்கு அத்துபடியாகியிருந்தது. நிகரற்ற சுதந்திரமுடன் ஒரு பெரிய வாய்ப்பை அளித்தால், மந்திரித்து விடப்பட்டவர்கள் மாதிரி போய் மோதி அழித்துவிடுவது இம்முறை அவர்களுக்குச் சிரமமாக இராது என்று புஷ் நினைத்தார். <img src='http://www.kumudam.com/reporter/230504/pg8-1.jpg' border='0' alt='user posted image'> அது ஓரளவு உண்மையும்கூட. ஆனால், அனைத்து சாத்தியங்களையும் ஆராயாமல் ஓரடிகூட எடுத்துவைக்கக்கூடாது என்று காலின் பாவெல் கருதினார். அங்கு கூடியிருந்தவர்களுக்கு ஓர் ஆரோக்கியமான தடைச் சக்தியாக அவர்தான் விளங்கினார். ஏனெனில், உணர்ச்சிவசப்பட்டிருந்த நிலையிலிருந்த புஷ் என்னவாவது விவகாரமான முடிவுகளை எடுத்துவிட்டால், அது என்றென்றைக்கும் அமெரிக்காவின் அழிக்க முடியாத கறையாகிவிடும் அபாயம் உண்டு. செய்யப்போவது கொலைகள். ஆப்கனை சட்னியாக்கிவிடுவது என்று முடிவாகிவிட்டது. அல்கொய்தாவை இருக்குமிடம் தெரியாமல் வேரறுத்துவிடுவது. இது ஒழுங்காக நடப்பதும் நடக்காததும் அமெரிக்கப் படைகளின் கையில் இருக்கிறது. ஆனால், ஆப்கன் தாக்குதல் காரணமாக அமெரிக்காவுக்கு எந்தக் கெட்டபெயரும் வரக்கூடாதென்றால், அது அங்கே கூடியிருந்த பெரும்புள்ளிகள் எடுக்கும் தீர்மானங்களில்தான் இருக்கிறது. யாருமே குறைசொல்ல முடியாதபடிக்கு ஒரு போர்த் திட்டம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தார் பாவெல். <img src='http://www.kumudam.com/reporter/230504/pg8-2.jpg' border='0' alt='user posted image'> அதனால்தான் அவர், அமெரிக்கா மட்டும் நேரடியாக மோதாமல், கூட்டணி நாடுகளை உடன் இணைத்துக்கொண்டு போரைத் தொடங்கவேண்டும் என்று சொன்னார். முன்னதாக, சுமார் எண்பது நாட்டு அதிபர்களுடனும் பிரதமர்களுடனும் அவர் தாமே நேரடியாகத் தொலைபேசியில் பேசி, விவாதித்து அமெரிக்காவின் ஆப்கன் நடவடிக்கைகள் குறித்து ஓரளவு விளக்கி ஆதரவு கேட்டிருந்தார். உள்நாட்டில் போதிய மக்கள் ஆதரவில்லாமல், மீண்டும் ஒரு புரட்சிக்கான வெளிப்படையான சாத்தியங்களுடன் கலவரம் கொண்டிருந்த பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபின் ஆதரவு இவ்விஷயத்தில் மிக முக்கியமானதென்று எடுத்துச்சொன்னார். ஆப்கனைச் சுற்றியுள்ள துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய தேசங்கள் விரும்பியோ, நிர்ப்பந்தத்தின் பேரிலோ யுத்தம் ஆரம்பித்த சூட்டில் தம் எல்லைகளை மூடிவிடவேண்டும் என்று அவர் நினைத்தார். ஆப்கனிலிருந்து ஒரு கொசுகூட வெளியே தப்பிப் போகக்கூடாது என்பதே அவர் திட்டம். எப்படியும் எக்கச்சக்கப் பணம் செலவிடவேண்டிவரும் என்று நினைத்தார் சி.ஐ.ஏ. இயக்குநர் டெனட். அவரது முக்கிய குறி, ஆப்கனின் வடக்குக் கூட்டணிப் படை. வேண்டிய அளவு பணம், ஆயுதபலம், உளவுத்துறை ஒத்துழைப்பு. இந்த மூன்றையும் வெள்ளமாக வழங்கும்பட்சத்தில் தாலிபன் அரசுக்கு எதிரான யுத்தத்தை வடக்குக் கூட்டணிப் படையைக் கொண்டே தொடங்கி, முடித்துவிட முடியும் என்று சொன்னார் அவர். மறுபுறம் எஃப்.பி.ஐ. இயக்குநர் முல்லர், அமெரிக்காவிலுள்ள ஆப்கானியர்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொன்னார். ஏனெனில் அன்றைய தேதியில் அமெரிக்காவெங்கும் தாலிபன்கள், அல்கொய்தாவினர், வடக்குக் கூட்டணிப்படையினர் என்கிற முத்தரப்பினரின் அனுதாபிகளும் அமெரிக்காவில் வசித்து வந்தனர். தாக்குதல் சம்பவமே இவர்களது ஒத்துழைப்பில்லாமல் நடந்திருக்க முடியாது என்னும் நிலையில், ஒரு முழு நீள யுத்தம் என்று வரும்போது உள்நாட்டுப் பாதுகாப்பு மிகவும் இன்றியமையாததாகிறது. இதையெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது ராணுவச் செயலாளர் ரம்ஸ்ஃபீல்டுக்குக் கவலை வந்துவிட்டது. இதென்ன, குவைத் யுத்தத்தின்போது சதாம் உசேன் விஷயத்தில் நடந்துகொண்ட மாதிரி அல்லவா இருக்கிறது? ஒரு தனிநபருக்கு எதிரான அமெரிக்காவின் யுத்தமாகவா நாம் திட்டமிடுகிறோம்? தீவிரவாதத்தை ஒழிப்பது என்பதுதான் அமெரிக்காவின் முடிவு. அதற்கான பரந்துபட்ட திட்டமாக இவையெல்லாம் இல்லையே என்று அவர் சொன்னார். சுமார் நாலரை மணிநேரம் இடைவிடாமல் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, பாயிண்ட் பாயிண்டாகத் தீர்மானங்கள் வரையறுக்கப்பட்டன. அவை, இவை: <img src='http://www.kumudam.com/reporter/230504/pg8-3.jpg' border='0' alt='user posted image'> 1. இது அமெரிக்காவுக்கும் அல்கொய்தாவுக்கும் இடையில் நடக்கப்போகிற யுத்தம் இல்லை. பயங்கரவாதத்துக்கும் நல்ல சக்திகளுக்கும் இடையிலான தர்ம யுத்தம். அப்படித்தான் சொல்லவேண்டும். அதற்கான முயற்சிகளை முதலில் எடுக்கவேண்டும். 2. இங்கிலாந்து உள்ளிட்ட கூட்டணி நாடுகளின் ஆதரவைக் கோரிப்பெறுவது, யுத்தத்தில் அவர்களின் பங்கை மிகவும் மதிப்பது. 3. ஆப்கனிலுள்ள வடக்குக் கூட்டணிப்படையை ஒரு மாற்று அரசாக முன்வைத்து, அவர்களுக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்து, போர்க்களத்தில் அவர்களை முன்னால் போக விடுவது. 4. செலவைப் பொருட்படுத்தாமல் அல்ஜீரியா, ஜோர்டன், எகிப்து போன்ற தேசங்களின் அரசு மற்றும் தனியார் உளவு அமைப்புகளின் ஒத்துழைப்பைக் கோரிப் பெறுவது. அல்கொய்தாவினரின் நடவடிக்கைகளுடன் மிகுந்த பரிச்சயம் உள்ள அவர்களின் அனுபவத்தை விலைகொடுத்துப் பெறுவது. 5. அமெரிக்காவின் சார்பில் சி.ஐ.ஏ.வே தலைமையேற்று யுத்தத்தை நடத்தும். முழு அளவிலான பொருளாதார, ராணுவ உதவிகள் வழங்கப்படும். நெருக்கடியான சந்தர்ப்பங்களில் மேலிட உத்தரவுகளுக்காக எப்போதும் காத்திருக்காமல் சுதந்திரமாகச் செயல்பட்டு எவ்விதமான முடிவையும் சி.ஐ.ஏ. எடுக்கலாம். கேள்வி கேட்கப்பட மாட்டாது. 6. பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் தம் ஆதரவைத் தெரிவித்திருப்பதற்குப் பதிலாக அந்நாட்டுக்கு அணு ஆயுத உதவிகள் செய்ய அமெரிக்கா தயார் என்று வாக்களிப்பது. அதனைக்கொண்டே யுத்தத்தில் பாகிஸ்தானின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வது. 7. உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எஃப்.பி.ஐ. கவனித்துத் தீர்மானித்துச் சொல்லவேண்டும். 8. ஆப்கனுக்கு எவ்வகையிலும் ஈராக்கை உதவ விடக்கூடாது. சதாம் உசேனைத் தனியே கண்காணிக்க வேண்டும். ஈராக்குடனான ஆப்கன் தொடர்புகள் அனைத்துக்கும் முதலில் தடை உண்டாக்கவேண்டும். தவிரவும், சுமார் எண்பது தேசங்களில் பரவியுள்ள அல்கொய்தாவின் நெட் ஒர்க்கைச் செயலிழக்கச் செய்யவேண்டும். இதை சி.ஐ.ஏ.வே முதலில் செய்தாக வேண்டும். 9. சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று சொல்லிவிட்டதால், ஆப்கன் தாக்குதலுக்கான திட்டத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கூட்டணி நாடுகளுடன் பேசப் போகமுடியாது. உடனடியாக பிற தீவிரவாத இயக்கங்களின் ஜாதகங்கள், பலங்கள் குறித்த முழுமையான அறிக்கையைத் தயார் செய்ய வேண்டும். ஏனோதானோ என்றில்லாமல் உண்மையிலேயே உருப்படியான அறிக்கையாக அது அமைந்தாக வேண்டும். 10. இந்த ஆப்கன் தாக்குதலுக்கான முழுச் செலவுத்திட்டம், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்காக அமெரிக்கா முதலீடு செய்யும் முதல்கட்டத் தொகை பற்றிய விரிவான நிதியறிக்கை தயாராகவேண்டும். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுள் விவரம் தெரியவந்தவை மேற்சொன்ன பத்து பாயிண்டுகள்தான். ஆனால், ரகசியமாக மேலும் ஏழு அல்லது எட்டுத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேல் விவரம் இல்லை. தீர்மானமும் தெளிவான திட்ட வரைபடமும் தயாரானதும், தாலிபன் அரசுக்கு நாற்பத்தெட்டு மணிநேர அவகாசம் கொடுத்து, பின்லேடனை ஒப்படைக்கும்படி சொன்னார் அதிபர் புஷ். இதெல்லாம் ஒரு ஃபார்மாலிடிதான் என்று முல்லா ஓமருக்கும் தெரியும், ஜார்ஜ் புஷ்ஷ§க்கும் தெரியும். ஆனாலும் இதனையெல்லாம் செய்யாமல் இருக்க முடியாதே. தாலிபன்களின் தலைவர் முல்லா ஓமர், மிகத் தெளிவாகச் சொன்னார். \"என் பார்வையில் ஒசாமா பின்லேடன் எந்தத் தவறும் செய்யவில்லை. செப்டம்பர் 11_ம் தேதி தாக்குதல் சம்பவத்துடன் அவருக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. ஒருவேளை அவர் விசாரிக்கப்பட்டே ஆகவேண்டும் என்றால், முதலில் அவர் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களை அமெரிக்கா வெளியிடவேண்டும். அவை சரியான ஆதாரங்களாக இருக்கும்பட்சத்தில், இரு தேசங்களும் பொதுவானதொரு மூன்றாவது தேசத்திடம் அவரை ஒப்படைக்கிறோம். அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஒருபோதும் சம்மதிக்கமாட்டோம். பின்லேடன் எங்கள் மதிப்புக்குரிய விருந்தாளி!\" கொஞ்சம் ஊன்றிக் கவனிக்கவேண்டும். முல்லா, பின்லேடனை சர்வதேச நீதிமன்றத்திடம்கூட ஒப்படைப்பதாகச் சொல்லவில்லை. வேறு ஏதாவது ஒரு தேசத்திடம் ஒப்படைப்பதாகவே சொன்னார். இதன் காரணம் எளிதில் ஊகிக்கக்கூடியது. அமெரிக்கா தொடர்பாக சர்வதேச நீதி மன்றத்துக்கு ஏதாவது வழக்குப் போனால் அதன் கதி என்னவாகும் என்பதை ஏற்கெனவே நிகரகுவா விஷயத்தில் நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா? சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை அமெரிக்கா மதிக்கிற வழக்கம் கிடையாது என்பதுதான் மூன்றாம் உலக நாடுகளின் ஒட்டுமொத்த அபிப்பிராயம். அதனால்தான் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நடுநிலைமை பேணக்கூடிய அமெரிக்கா அல்லாத, அதன் கூட்டணியைச் சேராத வேறு ஏதாவது ஒரு தேசத்திடம் பின்லேடனை ஒப்படைப்பதாக முல்லா ஓமர் தெரிவித்தார். ஆனால், புஷ் அந்தக் கருத்தை முற்றிலுமாக நிராகரித்தார். 'வேறு வழியில்லை. யுத்தம் செய்ய வருகிறோம், தயாராக இருங்கள்!' என்று வெளிப்படையாக அறிவித்தார். (தொடரும்)</span> Re: டாலர் தேசம் - AJeevan - 05-31-2004 [align=center:de8e3f4cb9]<img src='http://www.kumudam.com/reporter/030604/pg8-t.jpg' border='0' alt='user posted image'>[/align:de8e3f4cb9] தோராபோரா. இது ஒரு மலைப்பிரதேசம். மலை என்றால் பறங்கிமலை மாதிரி மலை அல்ல. இமயமலை மாதிரி சிக்கல்மிக்க மடிப்புகள் கொண்ட ஒரு மலைத்தொடர். ஆப்கனிஸ்தானில் ஜலாலாபாத்துக்குத் தெற்கே இது அமைந்திருக்கிறது. நன்றாக கால் நீட்டிப்படுத்த காவல் தேவதை மாதிரி, இதன் கிழக்கு எல்லை பாகிஸ்தான் பார்டர் வரைக்கும் நீள்கிறது. பெஷாவர் நகரிலிருந்து ஆப்கனுக்குள் நுழைவதென்றால் தோராபோரா தரிசனமில்லாமல் முடியாது. கைபர் கணவாயைத் தாண்டிவிட்டால் தோராபோராவைக் கடந்துதான் ஊர்ப்பக்கம் போக முடியும். ஆப்கனிஸ்தானின் பிரசித்திபெற்ற நதிகளான வாஸிருதான், அகம்தன் போன்றவை இங்கேதான் உற்பத்தியாகின்றன. இந்த மலைக்குப் பல விசேஷங்கள் உண்டு. இதன் பல பகுதிகள் மைசூர் சாண்டல் சோப் நிறத்தில் காணப்படும். இது ஓர் அபூர்வம். உலகில் வேறெந்த மலையும் வெளேரென்று இருக்காது. பனி மூடிய வெண்மை அல்ல இது. இயற்கையான பாறைகளின் வெண்மை. மேலும் எக்கச்சக்க இயற்கை குகைகளும் இங்கே உண்டு. கோடிக்கணக்கான ஆண்டுகள் இறுகிய இதன் மேற்புறம், குண்டு வீச்சில் சிறுவிரிசல் கூடக் கொள்ளவில்லை என்பது அமெரிக்கப் படைகளுக்கு இன்றுவரை தீராத ஆச்சர்யம். இயற்கையான குகைகள் தவிர, பின்லேடனின் அல்கொய்தா ஆட்கள் தமக்கென பிரத்தியேகமாகக் கட்டிக்கொண்ட செயற்கை குகைகளும் இம்மலைத்தொடரின் பல பகுதிகளில் உண்டு. யுத்த காலத்தில் வெறும் பேரீச்சம்பழ பாக்கெட்டுகளை மட்டுமே எடுத்துக்கொண்டு இங்கே குடிபெயர்ந்த பின்லேடனும் அவரது வீரர்களும் மாதக்கணக்கில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இங்கே தாக்குப்பிடிக்க முடிந்திருக்கிறது. யுத்த தளவாடங்கள், கம்ப்யூட்டர்கள், சாட்டிலைட் தொலைபேசிகள் மற்றும் பேரீச்சம்பழ பாக்கெட்டுகள். அவ்வளவுதான். ஆப்கன் யுத்தம் தொடங்கிய ஒன்பதாவது வாரம் இவற்றுடன், கழுதைகள் உதவியுடன் தோராபோராவுக்குக் குடிமாறி வந்து சேர்ந்தார் பின்லேடன். அதே ஒன்பதாவது வாரத்தில்தான் அமெரிக்கப் படைகளும் தோராபோராவைக் குறிவைத்தன. வடக்குக் கூட்டணிப் படைகளின் இன்ஃபார்மர்களாகச் செயல்பட்ட சில ஆதிவாசிகள்தான் முன்னதாக அல்கொய்தா ஆட்கள் மலைப்பகுதிக்கு வந்திருப்பதை மோப்பம் பிடித்துச் சொல்லியிருந்தார்கள். பொதுவாக யாரும் மோப்பம் பிடிக்கிற விதத்தில் தமது நடமாட்டத்தை பின்லேடன் அமைத்துக்கொள்ள மாட்டார். ஒரே இரவில் இரண்டு மூன்று இடங்களில் அவரது ஆட்களைப் பார்த்ததாகக் குழப்பமான தகவல்கள் வரும். சம்பந்தமில்லாத நான்காவது இடத்துக்குத்தான் அவர்கள் போயிருப்பார்கள். இதுதான் வழக்கம். ஆனாலும், எப்படியோ அம்முறை அல்கொய்தாவினரின் நடமாட்டத்தைத் துல்லியமாக மோப்பம்பிடித்துத் தகவல் சொல்லிவிட்டார்கள் உளவாளிகள். உடனே புறப்பட்டுவிட்டது அமெரிக்க விமானப்படை. முதலில் சிறு உளவு விமானங்களை தோராபோரா மலையின் மீது பறக்கவிட்டார்கள். விமானங்கள் புறப்பட்டவுடனேயே வடக்குக் கூட்டணிப் படை வீரர்களையும், ஆதிவாசி வழிகாட்டிகளையும் நாலாபுறமும் முன்னேறச் சொல்லி அனுப்பிவிட்டு, ஒவ்வொரு குழுவுடனும் பத்து அல்லது பன்னிரண்டு அமெரிக்க வீரர்கள் உடன் சென்றார்கள். கவனிக்கவும். இவர்களும் ப்ரொஃபஷனல் தரைப்படை வீரர்கள் அல்ல. விமானப்படை வீரர்கள்தான். தரைப்படை அப்போதுகூட ஆப்கனுக்குள் நுழைந்திருக்கவில்லை. முன்பே பார்த்தபடி அதில் அவர்களுக்கு மிகுந்த தயக்கமே இருந்து வந்தது. திட்டமிட்டு தோராபோரா மலையைச் சுற்றி வளைத்தன வடக்குக் கூட்டணிப் படைகள். அவர்களின் முதல் வெற்றி, மலையின் வடக்கு வாசலான மிலவா பள்ளத்தாக்கில் கிடைத்தது. ரஷ்யப்போரில் பங்குபெற்ற மூன்று சீனியர் வீரர்கள் அந்தப் படையில் இருந்தார்கள். அவர்கள் கண்ணில் ஒரு அல்கொய்தா பதுங்குமுகாம் தென்பட்டுவிட்டது. கவனமாக அடியெடுத்துவைத்து, சற்றும் எதிர்பாராத தருணத்தில் அவர்கள் நடத்திய தாக்குதலில் முதன்முதலாகச் சில அல்கொய்தா வீரர்கள் அங்கே பலியானார்கள். உடனே சுதாரித்துக்கொண்ட எஞ்சிய வீரர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் திருப்பித் தாக்கிவிட்டு கூடாரத்தைக் காலி செய்துவிட்டு ஓடிப்போனார்கள். ரஷ்யப் போரில் பங்குபெற்று தோராபோரா மலையின் நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் அப்போது கூட்டணிப்படைக்கு ஆதரவாக இருந்ததுதான் அமெரிக்காவுக்கு அமைந்த மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். முதல் முகாமைக் கண்டுபிடித்த உற்சாகத்தில், அடுத்தடுத்து நாலைந்து முகாம்களை அவர்களால் சுலபமாகச் சுற்றிவளைக்க முடிந்தது. ஓரிடத்தில் யுத்தம் நடந்துகொண்டிருக்கும்போது தாக்குப்பிடிக்க முடியாமல் அல்கொய்தாவினர் தப்பியோட முடிவு செய்யும்போது, ரேடியோ சிற்றலைகளைப் பயன்படுத்தி அடுத்த இடத்தில் பதுங்கியிருக்கும் தமது கூட்டாளிகளுக்குத் தகவல் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். கீழே யுத்தம் நடந்துகொண்டிருக்கும் அதேசமயம், மேலே உளவு விமானத்தில் பறந்துகொண்டிருக்கும் அமெரிக்க வீரர்கள் அந்த ரேடியோ அலைகளை இடைமறித்துக்கேட்டு அவர்கள் தப்பியோடும் பாதையைக் கண்டறிந்து சொல்வார்கள். உடனே, எதிர்ப்புறத்திலிருந்து கூட்டணிப்படையின் இன்னொருபிரிவு வந்துவிடும். இப்படியான திட்டமிட்ட செயல்பாட்டால், தோராபோராவில் வேட்டை தொடங்கிய முதல் சில தினங்களிலேயே அமெரிக்கக் கூட்டுப்படைக்குச் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகள் கிடைத்தன. சுமார் இருநூறு அல்கொய்தா வீரர்களை அவர்கள் அந்தத் தாக்குதல்களில் கொன்றார்கள். அதேசமயம் வடக்குக் கூட்டணிப்படைத் தரப்பிலும் இழப்பு கணிசமாகவே இருந்தது. மலைப்பகுதி, அல்கொய்தாவுக்கு ஹோம்லேண்ட் மாதிரி. மேலே இருந்துகொண்டு இருநூறு மீட்டர் தொலைவுவரை சளைக்காமல் சுடக்கூடிய நவீன ஆயுதங்களை அவர்கள் வைத்துக்கொண்டிருந்ததால், சகட்டுமேனிக்கு கூட்டு ராணுவப்படையிலும் இழப்புகள் ஏற்பட்டன. அல்கொய்தாவின் படைபலம் குறைவாகவும், அமெரிக்கப் படையின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்ததால்தான் அந்தக் குறிப்பிட்ட தாக்குதலில் அமெரிக்காவால் நிறைய வெற்றி காண முடிந்தது என்பதையும் சொல்ல வேண்டும். பல இடங்களில் அல்கொய்தாவினர் சரணடையவும் முன்வந்தார்கள். நிபந்தனையற்ற சரணாகதிக்கு மட்டும் சம்மதித்தது அமெரிக்க ராணுவம். தோராபோராவில் அமெரிக்க ராணுவத்துக்குக் கிடைத்துவந்த வெற்றிகளைத் தொடர்ந்து எப்படியும் விரைவில் பின்லேடனைப் பிடித்துவிடலாம் என்கிற நம்பிக்கை உண்டானது. அதனால்தான் காலாட்படையையும் துணிந்து யுத்தம் தொடங்கிய பத்தாவது வார இறுதியில் கொண்டுவந்து இறக்கினார்கள். தரைப்படை வந்தது, பின்லேடனைப் பிடிக்க உதவியதோ இல்லையோ, அமெரிக்காவுக்காகப் போராடிக் கொண்டிருந்த வடக்குக் கூட்டணிப்படை வீரர்களுக்கு மிகுந்த தெம்பைத் தந்தது அது. மேலும் தொழில்நுட்பத் தேர்ச்சியுடன் கூடிய அவர்களது போர் வியூகங்கள் அவர்களுக்கு மிகவும் புதிதாக இருந்ததால், கூடுதல் பரவசம் தந்தது. தமது ஒத்துழைப்பைப் பரிபூரணமாகத் தந்து ஒருவழியாகப் பதினொராவது வார இறுதியில் தோராபோரா மலைப்பகுதியை முழுவதுமாகச் சுற்றிவளைத்து முன்னேற ஆரம்பித்தார்கள். இதனிடையே, மலைக்குகைகளை எப்படி கண்டுபிடிப்பது என்கிற சூட்சுமத்தை அமெரிக்க வீரர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். ஒரு பதுங்கு குகை என்றால் வாசல் தெளித்து, கோலம் போட்டா எண்ட்ரன்ஸ் இருக்கும்? இருக்கிற இடமே தெரியாதபடிதான் இருக்கும். இயற்கையான மலையின் மர்மங்களைப் பயன்படுத்தி, அதன் பள்ளங்களை லேசான பூச்சு வேலைகளுக்குப் பின் மேல்புறம் மூடி குகைகளாக்குவார்கள். உட்புறம் குடைந்து மறுவாசல் அமைப்பது ஒரு கட்டாயம். இது செயற்கை குகைகளில் மட்டும்தான். இயற்கையான குகைகள் என்பவை மிகவும் நீளமானவை. சில குகைகள் இருபது மீட்டர் நீளம்கூட இருக்கும். ஆனால், அமெரிக்கப்படை கண்டறிந்த அல்கொய்தாவின் செயற்கை குகைகள் மிகவும் சிறியவை. பத்துக்குப் பத்து அறை மாதிரிதான் அவை இருந்தன. ஆனால், மேல்புறம் ஓர் ஆள் நுழையும் அளவு மட்டுமே வழி இருந்தது. கடும் இருட்டுக்குக் கண்ணைப் பழக்கிக்கொண்டு உள்ளே இறங்கினால் மிகவும் குளிராகவும், கதகதப்பாக இருப்பதுபோலவும் ஒரே சமயத்தில் இருவேறு உணர்ச்சிகளை உணரலாம் என்று சொன்னார்கள் அமெரிக்க வீரர்கள். யாரும் கண்டுபிடித்து வராதவரை அங்கே பதுங்கியிருப்பது அல்கொய்தா வீரர்களுக்குப் பாதுகாப்பாகத்தான் இருந்தது. ஆனால், சுற்றிவளைக்கப்பட்ட பிறகு அங்கிருந்து மேலே வந்து தப்பிப்பது மிகவும் கஷ்டம் என்பதால்தான், அவர்களில் பலர் சரணடைய வேண்டியதானது. இதுவிஷயத்தில் அமெரிக்கர்கள் செய்த ஒரே புத்திசாலித்தனமான காரியம் என்னவெனில், செயற்கை குகை ஒன்றை முதலில் கண்டுபிடித்த உடனேயே சுற்றிவளைக்காமல், அதன் மறுவாசல் எங்கே இருக்கும் என்று ஊகித்துத் தேடி முதலில் அதனை அடைத்துவிட்டு வந்து சுற்றி வளைத்ததுதான். அதனால்தான் அவர்களால் கொத்துக் கொத்தாகப் பல அல்கொய்தாவினரைப் பிடித்துவிட முடிந்தது. இந்தச் சமயத்தில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. யாருமே எதிர்பாராத விஷயம் அது. யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது யாராவது கேஷ§வலாக உட்கார்ந்து சிரித்தபடி ஒரு டி.வி. பேட்டி கொடுப்பார்களா? பின்லேடன் அதனைச் செய்தார். ஜலாலாபாத்துக்கு அருகே ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட அந்த வீடியோ கேசட் (நவம்பரில் இது கிடைத்தது. அக்டோபர் 7_ம் தேதி யுத்தம் தொடங்கிய நாற்பத்திரண்டாவது தினம்.) திட்டமிட்டு தாலிபன் வீரர்களால் அங்கே விட்டுச் செல்லப்பட்டிருந்தது. செப்டம்பர்_11 சம்பவம் குறித்தான பின்லேடனின் பிரகடனங்களும், யுத்தத்தில் வீரர்கள் எழுச்சி கொள்ளும் விதமான வார்த்தைகளும், ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் திரண்டுவந்து தாலிபன்களுக்கு உதவ வேண்டியது பற்றிய வேண்டுகோளும் அந்த வீடியோ கேசட்டில் இருந்தன. சவுதி அரேபியாவிலிருந்து பின்லேடனின் விருந்தாளியாக வந்திருந்த ஒரு ஷேக்குடன் (இவரது பெயர் அலிபின் அல்லது அல் காம்தியாக இருக்கலாம் என்று சி.ஐ.ஏ. சொன்னது. ஆனால், உறுதி செய்யப்படவில்லை.) பின்லேடன் பேசிக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்டிருந்தது அது. அந்த டேப்பில் பின்லேடன் சொல்லியிருந்தவற்றுள் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. செப்டம்பர் 11_ம் தேதி தாக்குதல் பற்றிய அவரது வருணிப்பில் பின்வரும் தகவல்கள் இருந்தன: 1. தாக்குதலில் ஈடுபட்ட எமது வீரர்களுக்கு. அவர்கள் விமானத்தில் ஏறுவதற்குச் சில நிமிடங்கள் முன்புவரைகூட அவர்கள் எந்த இலக்கைத் தாக்க அனுப்பப்படுகிறார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. அதேமாதிரி குழுக் குழுவாகப் பிரித்து செய்யப்படுகிறது இது என்றும் அவர்களுக்குத் தெரியாது. அதாவது, ஒரு விமானத்தில் ஏறும் வீரர்களுக்கு, அடுத்தபடியாக இன்னொரு விமானம் நம்மைத் தொடர்ந்து வரப்போகிறது என்பதே இறுதிவரை தெரியாது. 2. முதல் விமானம் இலக்கைத் தாக்கிய விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அடுத்தடுத்து குழுக்களில் இருந்தவர்கள் மகிழ்ச்சியில் கூத்தாடுவதாகக் கேள்விப்பட்டேன். திட்டத்தில் தம்மைத்தவிரவும் பலர் பங்குபெற்றிருக்கிற விஷயமே அவர்களுக்கு அப்போதுதான் தெரியும். அமைதியாக இருந்து காரியத்தை முடிக்கக் கேட்டுக்கொண்டேன். 3. விமானத்திலுள்ள எரிவாயுவுலிருந்து தீ கிளம்பினால் அதன் வெப்பம் இரும்பை உருக்கும் என்று நான் நினைத்தேன். என் அனுபவத்தில் போட்ட கணக்குத்தான் இது. அது பிசகாமல், விமானம் மோதியதும் கட்டடத்தில் இருந்த இரும்புகள் உருகத் தொடங்கின. அதனால்தான் அழிவு சாத்தியமானது. அமெரிக்கத் தாக்குதலில் பின்லேடன் சம்பந்தப்படவில்லை என்று தொடர்ந்து சொல்லிவந்த தாலிபன்களின் குரல் இதனால் அமுங்கிப்போனது. அமெரிக்காவின் பதில் தாக்குதலில் நியாயம் உள்ளதாக உலகம் பூரணமாக நம்ப ஆரம்பிக்கவும் இந்த வீடியோ டேப் மிகவும் உதவி செய்தது. "என்னதான் இஸ்லாமிய சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்து அதில் பின்லேடன் பேசியிருந்தாலும், செப்டம்பர்_11 தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய விவரம் அதில் இருந்தபடியால் அது இஸ்லாமிய சமூகத்தினரிடையே எந்தவித அனுதாபத்தையும் உண்டாக்காது" என்று டொனால்டு ரம்ஸ்பீல்டு இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவித்தார். புஷ்ஷ§க்குத்தான் கோபம் தலைக்கேறி இருந்தது. பின்லேடன் கிடைக்கவில்லை. ஆனால், வீடியோ டேப் கிடைத்தது! நூற்றுக்கணக்கில் அல்கொய்தாவினர் சரணடைவதாகச் செய்தி வந்துகொண்டிருந்தாலும் (அது உண்மையும்கூட.) பின்லேடன் இருப்பிடம் பற்றியோ, முல்லா ஓமர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது பற்றியோ நம்பகமான ஒரு செய்திகூட அதுவரை வராததில் அவருக்கு மிகவும் கடுப்பானது. எதிர்பார்த்ததைவிடவும் போர் இழுத்துக்கொண்டே போவதும் அவருக்குக் கலவரமாக இருந்தது. உண்மையில் ஆப்கன் என்பது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலம் சைஸ்தான். அத்துனூண்டு இடத்தில் இரண்டு தலைகளைத் தேடிப்பிடிக்கத் துப்பில்லாமல் இப்படியா இழுத்துக்கொண்டிருப்பார்கள்? 'ஏதாவது செய்யுங்கள். அவனைப் பிடித்துவிட்டோம் என்று சொல்லுங்கள்' என்று தமது தளபதிகளுக்கு இறுதி உத்தரவு அனுப்பிவிட்டு, 'காபூல் எப்படி இருக்கிறது இப்போது?' என்று விசாரித்தார் ரம்ஸ்பீல்டிடம். காபூல். புராதனமான அந்த நகரம் அப்போது இருந்த நிலைமையை வெறும் சொற்களில் விவரித்துவிட முடியாது! (தொடரும்) Kumudam.com - Eelavan - 06-02-2004 குமுதத்தில் இந்த டாலர் தேசம் தொடரை எழுதி வருபவரான பா.ராகவன் சிறந்த எழுத்தாளர் ரசிக்கும் படி எழுதும் கலை வாய்க்கப் பெற்றவர் அவரது குடில் இதோ போய் ரசியுங்கள் http://www.tamiloviam.com/writerpara/main.asp?fldrID=1 - AJeevan - 06-15-2004 <b>டாலர் தேசம் </b> -பா.ராகவன் <img src='http://www.kumudam.com/reporter/130604/pg8.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/130604/pg8-2.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/130604/pg8-1.jpg' border='0' alt='user posted image'> ஜார்ஜ் புஷ் பதவிக்கு வந்தபோது, ‘சில காரியங்களைக் கண்டிப்பாகத் தன் ஆட்சிக்காலத்துக்குள் முடித்துவிடவேண்டும்’ என்று ஒரு லிஸ்ட் போட்டுக்கொண்டுதான் அதிபர் மாளிகைக்குள்ளே கால் எடுத்து வைத்தார். ஈராக்கில் சதாமை ஒழிப்பது என்பது அந்தப் பட்டியலில் முதலில் இடம்பிடித்திருந்த விஷயம். புஷ்ஷின் தந்தையான சீனியர் புஷ் காலத்திலேயே நடந்திருக்கவேண்டிய காரியம் அது. குவைத் யுத்தத்தைத் தொடர்ந்துஇ ‘சதாமைத் தட்டிவைக்கக் கிடைத்த வாய்ப்பை அமெரிக்கா தவறவிட்டது’ என்றே அதன் நட்பு நாடுகள் பல அப்போது சொல்லியிருந்தன. அன்றைக்கே சதாமின் ஆட்சியை ஒழிப்பது என்பதை அமெரிக்கா தன் செயல்திட்டங்களுள் ஒன்றாக வைத்திருந்திருக்குமானால் அது சுலபமான காரியமாகவே இருந்திருக்கக்கூடும். ஏனெனில் 2000_ம் ஆண்டில் சதாம் கண்டிருந்த அபாரமான வளர்ச்சிகளெல்லாம் அந்தத் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அவருக்கு இல்லை. மேலும்இ குவைத் மீது அநியாயமாக அவர் படையெடுத்துச் செய்த அழிச்சாட்டியங்கள் உலக நாடுகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. ‘இந்த மனுஷன் ஒழியமாட்டானா’ என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், சீனியர் புஷ்ஷ§க்கு குவைத்தை விடுவித்தால் மட்டும் போதும் என்று அப்போது தோன்றியது. இதற்கான காரணத்தை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். என்றாலும் சுருக்கமாக இப்போது நினைவுபடுத்திக் கொண்டுவிடுவோம். அமெரிக்காவின் முக்கியமான எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்று புஷ்ஷின் குடும்பச் சொத்து. அதிபராக புஷ் சம்பாதித்ததைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு வருமானம் சேர்க்கிற விஷயம் அது. மத்திய கிழக்கு தேசங்கள் அனைத்துமே எண்ணெய் என்னும் பொன் விளைகிற பூமிதான் என்றாலும், ஈராக்கில் அதன் வளம் மிக அதிகம். ஈராக்கின் எண்ணெய் வளத்தை அநியாயத்துக்கு இழப்பது அமெரிக்காவுக்கும் நல்லதல்ல; அதிபர் புஷ்ஷின் சொந்த நிறுவனத்துக்கும் நல்லதல்ல என்பதால்தான்இ அப்போது சதாமைப் பதவியிலிருந்து விலக்க நடவடிக்கை ஏதும் எடுக்காமல், சமர்த்துப் பையன் மாதிரிஇ குவைத்தைக் காப்பாற்றியதோடு தன் பணி முடிந்தது என்று திரும்பிவிட்டார் சீனியர் புஷ். சதாமுக்கு மாற்றாக வேறு யாராவது ஒரு புது ஷேக்கை அதிபர் நாற்காலியில் உட்கார வைத்து, அவர் சதாமைக்காட்டிலும் பேஜார் தரக்கூடியவராக இருந்துவிட்டால் என்ன செய்வது? இந்தப் பயம்தான் காரணம். சதாமை மிரட்டி உருட்டியாவது தன் காரியம் தடையின்றி நடைபெறச் செய்துவிடலாம் என்று நினைத்தார் சீனியர் புஷ். அப்படியன்றும் அவர் நினைப்பு அப்படியே பலித்துவிடவில்லை. சதாம் தொடர்ந்து வாலை மட்டுமல்ல; உடம்பின் அத்தனை உறுப்புகளையும் ஆட்டிக்கொண்டுதான் இருந்தார். புஷ்ஷின் பதவிக்காலம் முடிந்து கிளிண்டன் வந்து, அவரும் போய் ஜார்ஜ் புஷ் அதிபராக வந்தபோது, ‘இந்தப் பிரச்னையை முதலில் தீர்த்துவிடவேண்டும்’ என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா? அதனால்தான் ஜார்ஜ் புஷ் ஆட்சிக்கு வந்த மிகச் சில நாட்களுக்குள்ளாகவே ஈராக்கிடம், ‘அபாயகரமான ஆயுதங்கள் இருக்கின்றன; அதனால் மானுடகுலத்துக்கே ஆபத்து’ என்னும் புதிய பாடல் எழுதிஇ இசை அமைக்கப்பட்டு பாடப்பட ஆரம்பித்தது. ஆயுதம் என்றால்? ரசாயன, உயிரியல் ஆயுதங்கள். இதையும் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். ‘ஏழைகளின் அணுகுண்டு’ என்று வருணிக்கப்படும் மிக அபாயகரமான ஆயுதங்கள். குவைத் யுத்தத்துக்கு முன்பாகவே ஈராக்கில் நடந்த கொடூரமான இனப்படுகொலைகளைச் சுட்டிக்காட்டி, ‘‘சதாம் உசேன் தொடர்ந்து ரசாயன ஆயுதங்களையும் உயிரியல் ஆயுதங்களையும் தயாரித்து வருகிறார்; இன்னும் அதை நிறுத்தவில்லை; இப்போது ஈராக்கில் ஏகப்பட்ட ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம்; சில ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன’’ என்று சொன்னார் புஷ். ஏற்கெனவே 98_ல் இதே பாட்டை வேறு டியூனில் அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து பாடி ஒரு யுத்தம் நடத்தியதும் நினைவிருக்கலாம். ஆனால்இ சதாம் ஆரம்பத்திலிருந்தே தன்னிடம் அப்படிப்பட்ட ரசாயன ஆயுதங்கள் எதுவும் கிடையாது என்று அடித்துச் சொல்லி வந்திருக்கிறார். ஆயினும் ஜார்ஜ் புஷ் பதவிக்கு வந்ததும், இந்தப் பிரச்னைதான் முதலில் கையில் எடுக்கப்பட்டது. இது தொடர்பான புகார் ஒன்றையும் முறைப்படி ஐ.நா.வுக்கும் அனுப்பினார் அவர். ஐக்கிய நாடுகள் சபை நோட்டீஸ் அனுப்பியபோது, சதாம் உசேன் தனது வெளிவிவகாரத்துறை அமைச்சர் நாஜிசப்ரி மூலம் ஒரு பதில் கடிதம் கொடுத்தார். (இது நடந்தது, 2002 _ செப்டம்பரில்.) ‘ஈராக்கிடம் எவ்வித ரசாயன _ உயிரியல் ஆயுதமும் இல்லை’ என்று அக்கடிதத்தில் சத்தியமே செய்திருந்தார் சதாம். சரி, ‘உன்னிடம் எதுவுமில்லை என்றால் நாங்கள் வந்து பரிசோதித்துவிட்டுப் போவதில் உனக்கென்ன கஷ்டம்? _என்று கேட்டது அமெரிக்கா. இங்கேதான் பிரச்னை ஆரம்பமானது. ஈராக் ஒரு சர்வாதிகார தேசம் என்றபோதும், சதாம் ஒரு கொடுங்கோலன்தான் என்றபோதும், ஈராக் மக்களுக்கே சதாமைப் பிடிக்கவில்லை என்றபோதும் _ அதெப்படி இன்னொரு தேசத்தின் ராணுவம் வந்து அங்கே பரிசோதனை செய்யலாம்? உலகில் வேறு எந்த ஒரு தேசமாவது இப்படியரு மிரட்டல் விடுத்தால் அதை அமெரிக்கா சும்மா பார்த்துக்கொண்டிருக்குமா? உண்மையில்இ இதற்கான ஆதாரக் காரணங்களே வேறு. ‘செப்டம்பர் _ 11 தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற ஆப்கன் யுத்தத்தில் அங்கே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தாலும்இ தாக்குதலின் முக்கிய இலக்கான பின்லேடனைப் பிடிக்க முடியவில்லை என்பது அமெரிக்காவுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. ஏதாவது மிகப்பெரிய காரியமாகச் செய்து, வெற்றி கண்டாலொழிய அந்த அவமானத்தைத் துடைக்க முடியாது’ என்று நினைத்தார் அதிபர் புஷ். மேலும், பின்லேடன் அண்ட் கோவுக்கு ஈராக் தொடர்புகள் நிச்சயம் இருக்கும் என்றும் அமெரிக்க உளவுத்துறை அப்போது சந்தேகப்பட்டது. சந்தேகத்தையே செய்தியாக்கி, ‘செப்டம்பர் _ 11’ சம்பவத்தில் ஓரெல்லை வரை ஈராக்கின் பங்களிப்பு அவசியம் உண்டு என்று திட்டமிட்டு பிரசாரம் செய்துஇ அதைப் பெரும்பாலான மக்கள் நம்பும்படியும் செய்தது சி.ஐ.ஏ. இது தொடர்பாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் ‘செப்டம்பர் _ 11 சம்பவத்தில் ஈராக்குக்கும் பங்கு இருக்கும்’ என்று சுமார் எழுபது சதவிகித அமெரிக்கர்கள் சொல்லியிருந்தார்கள்! ஆகவே, ‘ஏதாவது பெரிதாகச் செய்வது’ என்னும் புஷ்ஷின் நோக்கத்துக்கு அந்தச் சமயத்தில் ஈராக்கைவிட உன்னதமான இலக்கு வேறு இல்லை! இதனால்தான் ‘உன்னிடம் ரசாயன ஆயுதங்கள் இருக்கிறதா இல்லையா என்று நான் வந்து பரிசோதித்துவிட்டுச் சொல்லுகிறேன்’ என்று சொன்னது அமெரிக்கா. சதாம் உசேன் மிகவும் கடுப்படைந்தார். ‘நீ என்ன பெரிய கொம்பா? நீ யார் வந்து என்னைப் பரிசோதிப்பது? ஐ.நா. கேள்வி கேட்டது; நான் உரிய பதில் சொன்னேன். அதோடு தீர்ந்தது விஷயம். உன் மிரட்டல் வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம்’ என்று நேரடியாகவே புஷ்ஷ§க்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால், புஷ் சும்மா இருக்கவில்லை. தனது சொந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, ஐ.நா.வை அவர் தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டே இருந்தார். ஆகவே, வேறு வழியில்லாத ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில், அமெரிக்கா வந்து ஈராக்கில் பரிசோதனை நடத்த சதாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று தானும் கூடச் சேர்ந்து பாட ஆரம்பித்தது. வேறு வழியில்லாமல்தான் இதற்கு சதாமும் சம்மதித்தார். ஒரு பக்கம் வேண்டாவெறுப்பாக அனுமதி அளித்தாலும், மறுபுறம் தமது ராணுவ அதிகாரிகளையும், விஞ்ஞானிகளையும், ஆயுதத் தயாரிப்பாளர்களையும், உயர்மட்ட அமைச்சர்களையும் அழைத்து, ஈராக்கின் ஆயுத இருப்பு பற்றியும் ரசாயன _ உயிரி ஆயுதங்கள் ஏதும் இருப்பதற்கான சாட்சியங்கள் கிடையாது என்பது பற்றியும் தக்க ஆதாரங்களுடன் ஒரு விரிவான அறிக்கை தயாரிக்கச் சொன்னார். உண்மையில் அது ஒரு கின்னஸ் ரெக்கார்ட்! (ஆனால், சதாம் அப்ளை பண்ணவில்லை!) கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு பிரும்மாண்டமான அறிக்கை தயாரித்தது ஈராக். ஈராக்கின் ராணுவ பலம் குறித்து அவர்களுக்கே தீர்மானமான தெளிவு உண்டாகும் விதத்தில் மிகவும் நுணுக்கமான விவரங்களுடன் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை, ‘ஈராக்கில் ஒரு ரசாயன, உயிரி ஆயுதமும் இல்லை’ என்று தெளிவாக எடுத்துச் சொன்னது. அமெரிக்க அதிகாரிகள் பரிசோதனைக்காக ஈராக் வந்து இறங்கிய அதேசமயம், அந்த அறிக்கையை ஐ.நா.வுக்கு அனுப்பிவைத்தார் சதாம் உசேன். சரிஇ பரிசோதனைக்குப்போன அமெரிக்க அதிகாரிகள் என்னதான் சொல்லுகிறார்கள் பார்க்கலாம் என்று காத்திருந்தது ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில். மாதக்கணக்கில் நீண்ட அந்தப் பரிசோதனையில் துப்புரவாக சல்லடை போட்டுத் தேடியும் ரசாயன ஆயுதம் பற்றிய எந்தவொரு ஆதாரத்தையும் அமெரிக்காவால் கண்டெடுக்க முடியவில்லை. ஆயினும் சளைக்காமல், ‘சதாம் அனுப்பிய அறிக்கை ஒரு புரட்டல்; ஆயுதங்களை எங்கோ பதுக்கி வைத்திருக்கிறார்; ஒரு தீபாவளி கொண்டாடாமல் கண்டுபிடிப்பது கஷ்டம்’ என்று சொன்னது அமெரிக்கா. ‘கொஞ்சம் பொறுமையாக இருங்கள், உங்கள் கருத்தையும், சதாம் அளித்த பன்னிரண்டாயிரம் பக்க அறிக்கையையும் வைத்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவோம்’ என்று கேட்டுக்கொண்டார்கள் ஐ.நா. அதிகாரிகள். அந்த அறிக்கையில், ‘ஆராய்வதற்கு ஒன்றுமே இல்லை’ என்று சொல்லிவிட்டார் அமெரிக்க அதிபர் புஷ். எப்படியும் ஈராக்கைத் தாக்குவது என்று அவர் முடிவு செய்துவிட்டார். ‘ஆப்கன் யுத்தத்தில் பின்லேடன் பிடிபடாமல் அன்றுவரை தேடுதல் வேட்டை தொடர்ந்துகொண்டே இருந்த கடுப்பு ஒரு பக்கம். யுத்தத்தின் விளைவான பொருளாதார இழப்புகள் மறுபக்கம். மக்கள் மத்தியில் கசப்பு உருவாகியிருக்குமோ என்கிற கவலை இன்னொரு பக்கம். குறைந்தபட்சம் சதாம் உசேனையாவது ஒழித்துக்கட்டினால்தான் தன்னால் பதவியில் நீடித்திருக்க முடியும்’ என்று அவர் நினைத்தார். உடனடியாக இதுவிஷயத்தில் அமெரிக்காவை ஆதரிக்கும் நாடுகள் எவை எவை என்று பட்டியல் போடப்பட்டது. தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் தொடர்ச்சியாகவே சொல்லப்பட்ட ஈராக் தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்குக் கணிசமான தேசங்களின் ஆதரவு கிடைத்தது. ஏனெனில் பின்லேடனைக் காட்டிலும் சதாம் உசேனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். எப்படியும் ஈராக்கில் சதாமின் ஆட்சியை ஒழித்துவிடமுடியும் என்று நம்பிக்கை கொள்கிற அளவுக்கு அமெரிக்காவுக்கு ஆதரவுகள் பெருகியதும்இ பகிரங்கமாக ஈராக் மீது போர் அறிவித்தார் புஷ். ஐ.நா.வின் வேண்டுகோளைப் புறக்கணித்து, முற்றிலும் எதேச்சதிகார மனோபாவத்துடன் அமெரிக்கா மேற்கொண்ட செயல் அது. (அது வேண்டாத காரியம்தான் என்பது போரின் முடிவில் தெரியவந்தது. அதைப் பிறகு பார்ப்போம்.) 2002 _ தொடக்கத்திலிருந்தே இந்தப் போருக்கான பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வந்த அமெரிக்காஇ 2003_ம் ஆண்டு மார்ச் மாதம் 19_ம் தேதி ஈராக் மீதான யுத்தத்தைத் தொடங்கியது. அதே மார்ச் 19_ம் தேதி மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சதாம் உசேன் டி.வி.யில் தோன்றி, அமெரிக்கா தொடங்கியிருக்கும் யுத்தம் குறித்து நாட்டு மக்களுக்கு அறிவிப்பு செய்தார். அந்தப் பேச்சில், பகிரங்கமாக அமெரிக்கர்கள் அத்தனைபேரையும் ‘கிரிமினல்கள்’ என்று அவர் சொன்னார். (தொடரும்) Kumudam.com - AJeevan - 06-25-2004 <img src='http://www.kumudam.com/reporter/270604/pg8t.jpg' border='0' alt='user posted image'> ஆனமட்டும் ஐ.நா. தடுத்துப் பார்த்தது. எதற்கு தண்டத்துக்கு ஒரு சண்டை, வீண் செலவு என்று கதறிப் பார்த்தது. ம்ஹ§ம். கேட்கவில்லையே புஷ். அபாயகரமான ரசாயன, உயிரியல் ஆயுதங்கள் வைத்திருக்கிறார் சதாம் உசேன் என்று சொல்லி, வார்த்தைகளால் அவரை மானிட குலத்தின் எதிரியாகச் சித்திரித்து ஈராக்கின் மீது யுத்தம் தொடங்கினார். மார்ச் 19, 2003 அன்று யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. ஏப்ரல் ஒன்பதாம் தேதி பாக்தாத் விழுந்தது. உடனே ஈராக்கின் நிர்வாகத்தை அமெரிக்க _ பிரிட்டன் கூட்டு ராணுவப்படையே ஏற்றுக்கொண்டது. டிசம்பர் 14_ம் தேதி சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து குண்டுகள் வெடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இன்றுவரை அந்தச் சத்தம் குறைந்தபாடில்லை. ஆனால் என்ன காரணம் சொல்லி அமெரிக்கா அந்த யுத்தத்தைத் தொடங்கியதோ, அந்தக் காரணமே ஆதாரமில்லாதது என்பது நிரூபணமாகிவிட்டது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுப்படி ஈராக்கில் எந்தவிதமான ரசாயன, உயிரியல் ஆயுதங்களும் இல்லவே இல்லை. இதனை இன்றைக்கு அமெரிக்காவே ஏற்றுக்கொண்டிருக்கிறது. சதாம் உலக உத்தமர் என்று இதற்கு அர்த்தமல்ல. எண்பதுகளில் தமது எதிரிகளைக் கூண்டோடு ஒழிக்க அவர் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது உண்மையே. ஆயிரக்கணக்கான குர்து இன மக்களை அவர் அந்த ஆயுதங்களைப் பிரயோகித்துத்தான் கொன்று வீசினார். இது ஈராக்கில் எல்லோருக்கும் தெரியும். உலகுக்கே தெரியும். ஆனால் அதன்பின் சதாம், ரசாயன ஆயுதங்களைத் தயாரிப்பதிலோ, விலைக்கு வாங்குவதிலோ ஆர்வம் செலுத்தியதாகத் தெரியவில்லை. <img src='http://www.kumudam.com/reporter/270604/pg8.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/270604/pg8-1.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/270604/pg8-2.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/reporter/270604/pg8-3.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/270604/pg8-4.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/270604/pg8-5.jpg' border='0' alt='user posted image'> மாறாக, அபாயகரமான ஏவுகணைகளைத் தொடர்ந்து தயாரிப்பதில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். வளைகுடா யுத்தத்தின்போது சதாமின் ஸ்பெஷல் தயாரிப்பான 'ஸ்கட்' ஏவுகணை வித்தை காட்டியதை உலகே அறியும். அதன் குறிப்பிடத்தகுந்த வெற்றிக்குப் பிறகு சதாம் ரசாயன ஆயுதங்களின்பால் நாட்டம் செலுத்தவே இல்லை. ஆனாலும் சதாமை ஒழிப்பது என்று முடிவு செய்த அமெரிக்காவுக்கு மேற்படி குற்றச்சாட்டை விட்டுவிடமுடியாத அரசியல் நெருக்கடி இருந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஈராக் மீதும் போர் தொடுத்தது. ஆகவே, சதாம் உசேன் ரசாயன ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்கிற பல்லவி அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. இன்றைக்கு சதாமைக் கைப்பற்றி, ஈராக்கில் தாம் விரும்பிய வண்ணம் ஓர் இடைக்கால அரசை ஏற்பாடு செய்ய முடிந்தபிறகு, "ஆமாம், ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுகிறோம்" என்று சொல்லுவதற்கு அத்தேசம் வெட்கப்படவே இல்லை. ஈராக்கியர்கள்தான் காறித்துப்பிவிட்டார்கள். "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று சொல்லுபவர்கள் ஜனநாயகவாதிகளாகவா நடந்துகொண்டார்கள்?இவர்களும் பயங்கரவாதிகளாகத்தானே நடந்துகொண்டார்கள்!" என்று கேட்கிறார்கள். அமெரிக்கா அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. போர் முடிந்த ஆறு மாதத்தில் இடைக்கால ஆட்சி அமைக்கப்படும் என்று சொல்லியிருந்தாலும் அவர்களுக்கு அது சாத்தியமாக இல்லை. கிட்டத்தட்ட ஒரு வருடகாலம் முடிந்தபிற்பாடுதான் அவர்களால் ஓர் இடைக்கால அரசுக்கான ஆசாமிகளைப் பொறுக்கியெடுக்க முடிந்திருக்கிறது. ஷேக் காஜி அல் யாவர் என்றொருவரைப் பிடித்து "இவர்தான் புதிய பிரதமர்" என்று இப்போது அடையாளம் காட்டியிருக்கிறார்கள். "சுதந்திர ஈராக் இனி விரைவில் உருவாகும். சவாலை ஏற்று அல் யாவர் சிறப்பாகப் பணியாற்றுவார். அவருக்கு எல்லா ஒத்தாசைகளையும் அமெரிக்கா செய்துகொடுக்கும்" என்று புஷ் அறிவித்திருக்கிறார். ஹோஷியர் ஜெபாரி என்பவர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், ஃபலா அஸல் அல் நகிப் என்பவர் உள்துறை அமைச்சராகவும், ஹஸீம் சலான் அல் குஸேய் என்பவர் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், அதில் அப்துல் மஹதி என்பவர் நிதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் யார், எங்கிருந்து முளைத்தார்கள் என்று இன்னும் வெளியுலகத்துக்கு முழு விவரம் தெரியாது. ஆனால் சிறப்பான ஆட்சியாளர்கள் என்று அமெரிக்கா சான்றிதழ் கொடுக்கிறது. என்ன அடிப்படை? அதையெல்லாம் கேட்கக் கூடாது. ஜூன் 30_ம் தேதி மேற்படி அமைச்சர் குழுவினர் அல் யாவர் தலைமையில் ஈராக்கில் இடைக்கால ஆட்சி அமைத்ததும், ஈராக்கில் அமைதியும் ஜனநாயகமும் ஓடோடி வந்துவிடும் என்று அமெரிக்கா சொன்னது. சிரிப்பாக இல்லை? அதுதான் அமெரிக்கா. இந்த ஒரு யுத்தத்துக்காக மட்டும் அமெரிக்கா எத்தனை பில்லியன் டாலர்களைச் செலவழித்திருக்கிறது என்பதற்குக் கணக்கு வழக்கே இல்லை. சதாம் உசேன் என்கிற ஒரு தனிநபரை ஒழிக்கவேண்டும் என்பதற்காக ஈராக் என்கிற தேசத்தையே கொளுத்தலாம் என்பது அமெரிக்காவின் சித்தாந்தமாக இருந்திருக்கிறது. எப்போது ஈராக்கிடம் ரசாயன ஆயுதங்கள் இல்லை என்பது தெரியவந்ததோ, அந்தக் கணமே ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் ஈராக் யுத்தம் பற்றிய தமது அதிருப்தியை வெளியிட ஆரம்பித்தார்கள். செப்டம்பர் 11 சம்பவத்துடன் சதாம் உசேன் அரசுக்கு ஏதோ ஒÊரு தொடர்பு இருக்கும் என்கிற வதந்தியை திட்டமிட்டுப் பரப்பி, அதற்குச் சம்பந்தமில்லாத இன்னொரு எல்லையில் நின்று _ ரசாயன ஆயுதங்களைக் காரணம் காட்டி _ ஈராக் மீது போர் தொடுத்தது அமெரிக்கா. முதலில் புஷ் செய்வது சரிதான் என்றே அமெரிக்கர்கள் நினைத்தார்கள். இயல்பாகவே அமெரிக்கர்களுக்கு சதாம் உசேனைப் பிடிக்காது. ஆனால் ஆப்கன் யுத்தத்தை ஆதரித்த அளவுக்கு அவர்கள் ஈராக் யுத்தத்தை ஆரம்பத்திலிருந்தே முழுமையாக ஆதரித்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆயிரம் சொன்னாலும் பின்லேடனையும் சதாம் உசேனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க அவர்களால் முடியவில்லை என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம், மேலே சொன்ன ரசாயன ஆயுத விவகாரம். அடிப்படையில் அமெரிக்கர்களின் மனோபாவப்படி, போரையெல்லாம் அவர்கள் ரொம்பப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். "அதெல்லாம் அரசாங்கத்தின் தலைவலி" என்று ஒரு வரியில் முடித்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். ஒரு வினாடி யோசிப்பார்கள். இந்தப் போர் தேவைதான் என்று தோன்றினால் ஆதரிப்பதாக அறிவிப்பார்கள். (இதற்கெல்லாம் வக்கணையாக நூறு கருத்துக் கணிப்புகள் நடத்தப்படும்!) வேண்டாம் என்று தோன்றினால் வேஸ்ட் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். வியட்நாமில் நடந்தமாதிரி பெரிய பாதிப்புகள் ஏதாவது வந்தால்தான் கொஞ்சம் தீவிரமாகக் கவலைப்படுவார்கள். அமெரிக்கர்களின் போர் பற்றிய எண்ணங்களை, கார்கில் யுத்தம் நடந்தபோது நம் மக்கள் அடைந்த மன எழுச்சியோடெல்லாம் ஒப்பிடவே முடியாது _ ஏனெனில் அடிக்கடி அவர்கள் போர்களைப் பார்த்து வருவதுதான். உலக நாடுகளெல்லாம் கிரிக்கெட் ஆடவும் ஃபுட்பால் ஆடவும் ஊர் ஊராக அணிகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன என்றால், அமெரிக்கா மட்டும் சண்டை போடுவதற்காகத் தம் ராணுவத்தை அனுப்பிக்கொண்டிருக்கிறது. இது இன்று நேற்று நடக்கிற விஷயம் இல்லை என்பதால், அமெரிக்கர்கள் பொதுவில் இதைப் பெரிதாக நினைப்பதில்லை. அவர்களது பிரதான கவலைகளெல்லாம் வேலை வாய்ப்புகள் பற்றியும் பொருளாதார மேம்பாடு பற்றியும்தான். ஒரு யுத்தம் அவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது மிக முக்கியமான விஷயம். யுத்தத்துக்குப் போன ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் சொல்லும் துயரக்கதைகளைக் கேட்டுக்கேட்டு மிகவும் மனப்பதற்றம் கொள்வார்கள். ஐயோ என்று அவர்களுக்காகப் பதறுவார்களே தவிர, எதற்கு இந்த யுத்தம் என்றோ, அரசாங்கம் அநியாயம் செய்கிறது என்றோ விமரிசனம் செய்யமாட்டார்கள். மாறாக, யுத்தத்தின் பொருட்டு ஏதாவது புதிய வரி விதிக்கப்படுமா, குடியேற்றச் சட்டங்களில் என்னவாவது திருத்தம் செய்யப்படுமா, செக்யூரிடி கெடுபிடி அதிகரித்து அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுமா என்றுதான் முதலில் கவலைப்படுவார்கள். உண்மையில் சொல்லப்போனால் செப்டம்பர் 11 சம்பவம் நடந்தபோது அறிவிக்கப்பட்ட ஆப்கன் யுத்தம் ஒன்றைத்தான் அவர்கள் உணர்ச்சிபூர்வமாக அணுகினார்கள். அமெரிக்க சரித்திரத்திலேயே அது முதல்முறை. அதே சமயம் ஏதாவது யுத்தம் சார்ந்து அவர்கள் அரசுமீது அதிருப்தி கொள்வார்களேயானால், அடுத்து வரும் பொதுத்தேர்தலில் அதனை அவசியம் காட்டிவிடுவது வழக்கம். என்ன சமாதானம் சொன்னாலும் அந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் சமரசம் செய்துகொள்வதே இல்லை. இதுவும் சரித்திர உண்மை. ஈராக் விஷயத்தில் அமெரிக்கா நடந்துகொண்ட விதம் அமெரிக்கர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இந்த அதிருப்தி நிச்சயம் எதிர்வரும் அமெரிக்கப் பொதுத்தேர்தலில் எதிரொலிக்கும் என்று பல வல்லுநர்கள் இப்போதே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஐ.நா. தடுத்தும் கேளாமல், ரசாயன ஆயுதம் இருப்பதாகச் சொல்லி, போரைத் தொடங்கியது முதல் குற்றம். ஈராக் முழுவதையும் துவம்சம் செய்துவிட்டு, அப்படி எந்த ஆயுதமும் அங்கே இல்லை என்று கண்டுபிடித்துச் சொன்னது அடுத்த குற்றம். போர் முடிந்துவிட்டதாகச் சொன்னாலும் இன்றுவரை தொடரும் குண்டுவெடிப்புகளைக் கட்டுப்படுத்தவோ, எஞ்சியுள்ள சதாம் ஆதரவாளர்களை முற்றிலுமாகப் பிடிக்கவோ முடியாமல் தவிப்பது மூன்றாவது குற்றம். நான்காவதும் அதிமுக்கியமானதுமான குற்றம், போர்க்கைதிகளாகப் பிடிபட்ட ஈராக் ராணுவத்தினரை அமெரிக்க _ பிரிட்டிஷ் ராணுவம் சிறைச்சாலைகளில் நடத்திய விதம். நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்ட தேசங்கள் என்று வருணிக்கப்படும் அமெரிக்காவும் பிரிட்டனும் ஈராக் போர்க்கைதிகள் விஷயத்தில் அத்தனை கேவலமாக நடந்துகொண்டிருக்க வேண்டாம் என்பதுதான் ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் தீர்ப்பு. 2004 மார்ச் மாதம் தொடங்கி இது தொடர்பாக வெளிவந்த புகைப்படங்கள், கல்லைக்கூடக் கதறச்செய்யக் கூடியவை. போர்க்கைதிகளை அடித்தும் உதைத்தும் நிர்வாணப்படுத்தி மேலே சிறுநீர் கழித்தும் முகத்தைத் துணியால் மறைத்து, பிறப்புறுப்பைத் தாக்கியும் அமெரிக்க ராணுவம் செய்த அராஜகங்களைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. மூடி மறைக்கவே முடியாத புகைப்பட ஆதாரங்கள் வெளியானபிறகு, வேறு வழியில்லாமல் அமெரிக்காவும் பிரிட்டனும் மன்னிப்புக் கேட்டன. இனிமேல் இந்த மாதிரியெல்லாம் நடக்காது என்று அவசர அவசரமாக வாக்குறுதி அளித்திருக்கின்றன. உலகம் முழுவதையும் பாதித்த இந்தச் சம்பவம், அமெரிக்கர்களைச் சற்று அதிகமாகவே பாதித்தது. போரை அவர்கள் அத்தனை விரும்பவில்லை என்றாலும், சதாம் உசேன் பிடிபட்ட சந்தோஷத்தில் புஷ்ஷை மன்னிக்க அவர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் ஈராக் சிறைச்சாலைகளில் நடக்கும் கொடூரத்தைப் புகைப்படங்களில் பார்த்தபிறகு கட்டுக்கடங்காத வெறுப்புணர்வே அவர்களிடம் பெருகியிருக்கிறது. உலகின் காவலர்களாகத் தம்மை நினைத்து இறுமாந்திருந்தவர்கள், தம்மையே கிரிமினல்களாக உணரத் தொடங்கி அவமானத்தில் கூனிக் குறுகியிருக்கிறார்கள். இது நிச்சயம் எதிர்வரும் தேர்தலில் புஷ்ஷ§க்கு மிகப்பெரிய சரிவைத் தரும் என்பது அமெரிக்க மீடியாவின் கணிப்பு. அமெரிக்காவின் நாற்பத்து மூன்றாவது அதிபராகக் கடந்த 2001_ம் ஆÊண்டு பதவியேற்ற ஜார்ஜ் புஷ்ஷ§க்கு இந்த வருடத்துடன் பதவிக்காலம் முடிவடைகிறது. பதவியில் இருந்த காலமெல்லாம் அவர் யுத்தம் செய்திருக்கிறார். சில புதிய யுத்தங்களுக்கும் திட்டம் தீட்டியிருக்கிறார். நிற்க நேரமில்லாமலேயே அவருடைய நான்காண்டு பதவிக்காலமும் ஓடிக் கழிந்திருக்கிறது. மயிரிழையில் ஆட்சிப்பொறுப்பு அதிர்ஷ்டம் அடித்தவர் அவர். அந்த ஃப்ளோரிடா மாகாண எலக்டொரல் ஓட்டுகள் ஞாபகமிருக்கிறதல்லவா? அதுவே கூட, ஜார்ஜ் புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ், ஃப்ளோரிடாவின் கவர்னராக இருந்ததால்தான் சாத்தியமானது என்று இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அல்கோர் ஜெயித்து ஆட்சிக்கு வந்திருக்க வேண்டியது. அதிர்ஷ்டவசமாகவோ, திருட்டுத்தனமாகவோதான் புஷ் ஆட்சிக்கு வந்தார் என்கிறது இன்றைய அமெரிக்க மீடியா. ஆயிரம் சொன்னாலும் புஷ் அதிபராகி, நான்கு வருடங்களையும் ஓட்டிவிட்டார். இனி அடுத்தது என்ன? (தொடரும்) - AJeevan - 06-25-2004 <!--QuoteBegin-AJeevan+-->QUOTE(AJeevan)<!--QuoteEBegin--><img src='http://www.kumudam.com/reporter/270604/pg8t.jpg' border='0' alt='user posted image'> -பா.ராகவன் ஆனமட்டும் ஐ.நா. தடுத்துப் பார்த்தது. எதற்கு தண்டத்துக்கு ஒரு சண்டை, வீண் செலவு என்று கதறிப் பார்த்தது. ம்ஹ§ம். கேட்கவில்லையே புஷ். அபாயகரமான ரசாயன, உயிரியல் ஆயுதங்கள் வைத்திருக்கிறார் சதாம் உசேன் என்று சொல்லி, வார்த்தைகளால் அவரை மானிட குலத்தின் எதிரியாகச் சித்திரித்து ஈராக்கின் மீது யுத்தம் தொடங்கினார். மார்ச் 19, 2003 அன்று யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. ஏப்ரல் ஒன்பதாம் தேதி பாக்தாத் விழுந்தது. உடனே ஈராக்கின் நிர்வாகத்தை அமெரிக்க _ பிரிட்டன் கூட்டு ராணுவப்படையே ஏற்றுக்கொண்டது. டிசம்பர் 14_ம் தேதி சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து குண்டுகள் வெடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இன்றுவரை அந்தச் சத்தம் குறைந்தபாடில்லை. ஆனால் என்ன காரணம் சொல்லி அமெரிக்கா அந்த யுத்தத்தைத் தொடங்கியதோ, அந்தக் காரணமே ஆதாரமில்லாதது என்பது நிரூபணமாகிவிட்டது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுப்படி ஈராக்கில் எந்தவிதமான ரசாயன, உயிரியல் ஆயுதங்களும் இல்லவே இல்லை. இதனை இன்றைக்கு அமெரிக்காவே ஏற்றுக்கொண்டிருக்கிறது. சதாம் உலக உத்தமர் என்று இதற்கு அர்த்தமல்ல. எண்பதுகளில் தமது எதிரிகளைக் கூண்டோடு ஒழிக்க அவர் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது உண்மையே. ஆயிரக்கணக்கான குர்து இன மக்களை அவர் அந்த ஆயுதங்களைப் பிரயோகித்துத்தான் கொன்று வீசினார். இது ஈராக்கில் எல்லோருக்கும் தெரியும். உலகுக்கே தெரியும். ஆனால் அதன்பின் சதாம், ரசாயன ஆயுதங்களைத் தயாரிப்பதிலோ, விலைக்கு வாங்குவதிலோ ஆர்வம் செலுத்தியதாகத் தெரியவில்லை. <img src='http://www.kumudam.com/reporter/270604/pg8.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/270604/pg8-1.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/270604/pg8-2.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/reporter/270604/pg8-3.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/270604/pg8-4.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/270604/pg8-5.jpg' border='0' alt='user posted image'> மாறாக, அபாயகரமான ஏவுகணைகளைத் தொடர்ந்து தயாரிப்பதில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். வளைகுடா யுத்தத்தின்போது சதாமின் ஸ்பெஷல் தயாரிப்பான 'ஸ்கட்' ஏவுகணை வித்தை காட்டியதை உலகே அறியும். அதன் குறிப்பிடத்தகுந்த வெற்றிக்குப் பிறகு சதாம் ரசாயன ஆயுதங்களின்பால் நாட்டம் செலுத்தவே இல்லை. ஆனாலும் சதாமை ஒழிப்பது என்று முடிவு செய்த அமெரிக்காவுக்கு மேற்படி குற்றச்சாட்டை விட்டுவிடமுடியாத அரசியல் நெருக்கடி இருந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஈராக் மீதும் போர் தொடுத்தது. ஆகவே, சதாம் உசேன் ரசாயன ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்கிற பல்லவி அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. இன்றைக்கு சதாமைக் கைப்பற்றி, ஈராக்கில் தாம் விரும்பிய வண்ணம் ஓர் இடைக்கால அரசை ஏற்பாடு செய்ய முடிந்தபிறகு, \"ஆமாம், ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுகிறோம்\" என்று சொல்லுவதற்கு அத்தேசம் வெட்கப்படவே இல்லை. ஈராக்கியர்கள்தான் காறித்துப்பிவிட்டார்கள். \"பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று சொல்லுபவர்கள் ஜனநாயகவாதிகளாகவா நடந்துகொண்டார்கள்?இவர்களும் பயங்கரவாதிகளாகத்தானே நடந்துகொண்டார்கள்!\" என்று கேட்கிறார்கள். அமெரிக்கா அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. போர் முடிந்த ஆறு மாதத்தில் இடைக்கால ஆட்சி அமைக்கப்படும் என்று சொல்லியிருந்தாலும் அவர்களுக்கு அது சாத்தியமாக இல்லை. கிட்டத்தட்ட ஒரு வருடகாலம் முடிந்தபிற்பாடுதான் அவர்களால் ஓர் இடைக்கால அரசுக்கான ஆசாமிகளைப் பொறுக்கியெடுக்க முடிந்திருக்கிறது. ஷேக் காஜி அல் யாவர் என்றொருவரைப் பிடித்து \"இவர்தான் புதிய பிரதமர்\" என்று இப்போது அடையாளம் காட்டியிருக்கிறார்கள். \"சுதந்திர ஈராக் இனி விரைவில் உருவாகும். சவாலை ஏற்று அல் யாவர் சிறப்பாகப் பணியாற்றுவார். அவருக்கு எல்லா ஒத்தாசைகளையும் அமெரிக்கா செய்துகொடுக்கும்\" என்று புஷ் அறிவித்திருக்கிறார். ஹோஷியர் ஜெபாரி என்பவர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், ஃபலா அஸல் அல் நகிப் என்பவர் உள்துறை அமைச்சராகவும், ஹஸீம் சலான் அல் குஸேய் என்பவர் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், அதில் அப்துல் மஹதி என்பவர் நிதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் யார், எங்கிருந்து முளைத்தார்கள் என்று இன்னும் வெளியுலகத்துக்கு முழு விவரம் தெரியாது. ஆனால் சிறப்பான ஆட்சியாளர்கள் என்று அமெரிக்கா சான்றிதழ் கொடுக்கிறது. என்ன அடிப்படை? அதையெல்லாம் கேட்கக் கூடாது. ஜூன் 30_ம் தேதி மேற்படி அமைச்சர் குழுவினர் அல் யாவர் தலைமையில் ஈராக்கில் இடைக்கால ஆட்சி அமைத்ததும், ஈராக்கில் அமைதியும் ஜனநாயகமும் ஓடோடி வந்துவிடும் என்று அமெரிக்கா சொன்னது. சிரிப்பாக இல்லை? அதுதான் அமெரிக்கா. இந்த ஒரு யுத்தத்துக்காக மட்டும் அமெரிக்கா எத்தனை பில்லியன் டாலர்களைச் செலவழித்திருக்கிறது என்பதற்குக் கணக்கு வழக்கே இல்லை. சதாம் உசேன் என்கிற ஒரு தனிநபரை ஒழிக்கவேண்டும் என்பதற்காக ஈராக் என்கிற தேசத்தையே கொளுத்தலாம் என்பது அமெரிக்காவின் சித்தாந்தமாக இருந்திருக்கிறது. எப்போது ஈராக்கிடம் ரசாயன ஆயுதங்கள் இல்லை என்பது தெரியவந்ததோ, அந்தக் கணமே ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் ஈராக் யுத்தம் பற்றிய தமது அதிருப்தியை வெளியிட ஆரம்பித்தார்கள். செப்டம்பர் 11 சம்பவத்துடன் சதாம் உசேன் அரசுக்கு ஏதோ ஒÊரு தொடர்பு இருக்கும் என்கிற வதந்தியை திட்டமிட்டுப் பரப்பி, அதற்குச் சம்பந்தமில்லாத இன்னொரு எல்லையில் நின்று _ ரசாயன ஆயுதங்களைக் காரணம் காட்டி _ ஈராக் மீது போர் தொடுத்தது அமெரிக்கா. முதலில் புஷ் செய்வது சரிதான் என்றே அமெரிக்கர்கள் நினைத்தார்கள். இயல்பாகவே அமெரிக்கர்களுக்கு சதாம் உசேனைப் பிடிக்காது. ஆனால் ஆப்கன் யுத்தத்தை ஆதரித்த அளவுக்கு அவர்கள் ஈராக் யுத்தத்தை ஆரம்பத்திலிருந்தே முழுமையாக ஆதரித்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆயிரம் சொன்னாலும் பின்லேடனையும் சதாம் உசேனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க அவர்களால் முடியவில்லை என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம், மேலே சொன்ன ரசாயன ஆயுத விவகாரம். அடிப்படையில் அமெரிக்கர்களின் மனோபாவப்படி, போரையெல்லாம் அவர்கள் ரொம்பப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். \"அதெல்லாம் அரசாங்கத்தின் தலைவலி\" என்று ஒரு வரியில் முடித்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். ஒரு வினாடி யோசிப்பார்கள். இந்தப் போர் தேவைதான் என்று தோன்றினால் ஆதரிப்பதாக அறிவிப்பார்கள். (இதற்கெல்லாம் வக்கணையாக நூறு கருத்துக் கணிப்புகள் நடத்தப்படும்!) வேண்டாம் என்று தோன்றினால் வேஸ்ட் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். வியட்நாமில் நடந்தமாதிரி பெரிய பாதிப்புகள் ஏதாவது வந்தால்தான் கொஞ்சம் தீவிரமாகக் கவலைப்படுவார்கள். அமெரிக்கர்களின் போர் பற்றிய எண்ணங்களை, கார்கில் யுத்தம் நடந்தபோது நம் மக்கள் அடைந்த மன எழுச்சியோடெல்லாம் ஒப்பிடவே முடியாது _ ஏனெனில் அடிக்கடி அவர்கள் போர்களைப் பார்த்து வருவதுதான். உலக நாடுகளெல்லாம் கிரிக்கெட் ஆடவும் ஃபுட்பால் ஆடவும் ஊர் ஊராக அணிகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன என்றால், அமெரிக்கா மட்டும் சண்டை போடுவதற்காகத் தம் ராணுவத்தை அனுப்பிக்கொண்டிருக்கிறது. இது இன்று நேற்று நடக்கிற விஷயம் இல்லை என்பதால், அமெரிக்கர்கள் பொதுவில் இதைப் பெரிதாக நினைப்பதில்லை. அவர்களது பிரதான கவலைகளெல்லாம் வேலை வாய்ப்புகள் பற்றியும் பொருளாதார மேம்பாடு பற்றியும்தான். ஒரு யுத்தம் அவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது மிக முக்கியமான விஷயம். யுத்தத்துக்குப் போன ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் சொல்லும் துயரக்கதைகளைக் கேட்டுக்கேட்டு மிகவும் மனப்பதற்றம் கொள்வார்கள். ஐயோ என்று அவர்களுக்காகப் பதறுவார்களே தவிர, எதற்கு இந்த யுத்தம் என்றோ, அரசாங்கம் அநியாயம் செய்கிறது என்றோ விமரிசனம் செய்யமாட்டார்கள். மாறாக, யுத்தத்தின் பொருட்டு ஏதாவது புதிய வரி விதிக்கப்படுமா, குடியேற்றச் சட்டங்களில் என்னவாவது திருத்தம் செய்யப்படுமா, செக்யூரிடி கெடுபிடி அதிகரித்து அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுமா என்றுதான் முதலில் கவலைப்படுவார்கள். உண்மையில் சொல்லப்போனால் செப்டம்பர் 11 சம்பவம் நடந்தபோது அறிவிக்கப்பட்ட ஆப்கன் யுத்தம் ஒன்றைத்தான் அவர்கள் உணர்ச்சிபூர்வமாக அணுகினார்கள். அமெரிக்க சரித்திரத்திலேயே அது முதல்முறை. அதே சமயம் ஏதாவது யுத்தம் சார்ந்து அவர்கள் அரசுமீது அதிருப்தி கொள்வார்களேயானால், அடுத்து வரும் பொதுத்தேர்தலில் அதனை அவசியம் காட்டிவிடுவது வழக்கம். என்ன சமாதானம் சொன்னாலும் அந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் சமரசம் செய்துகொள்வதே இல்லை. இதுவும் சரித்திர உண்மை. ஈராக் விஷயத்தில் அமெரிக்கா நடந்துகொண்ட விதம் அமெரிக்கர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இந்த அதிருப்தி நிச்சயம் எதிர்வரும் அமெரிக்கப் பொதுத்தேர்தலில் எதிரொலிக்கும் என்று பல வல்லுநர்கள் இப்போதே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஐ.நா. தடுத்தும் கேளாமல், ரசாயன ஆயுதம் இருப்பதாகச் சொல்லி, போரைத் தொடங்கியது முதல் குற்றம். ஈராக் முழுவதையும் துவம்சம் செய்துவிட்டு, அப்படி எந்த ஆயுதமும் அங்கே இல்லை என்று கண்டுபிடித்துச் சொன்னது அடுத்த குற்றம். போர் முடிந்துவிட்டதாகச் சொன்னாலும் இன்றுவரை தொடரும் குண்டுவெடிப்புகளைக் கட்டுப்படுத்தவோ, எஞ்சியுள்ள சதாம் ஆதரவாளர்களை முற்றிலுமாகப் பிடிக்கவோ முடியாமல் தவிப்பது மூன்றாவது குற்றம். நான்காவதும் அதிமுக்கியமானதுமான குற்றம், போர்க்கைதிகளாகப் பிடிபட்ட ஈராக் ராணுவத்தினரை அமெரிக்க _ பிரிட்டிஷ் ராணுவம் சிறைச்சாலைகளில் நடத்திய விதம். நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்ட தேசங்கள் என்று வருணிக்கப்படும் அமெரிக்காவும் பிரிட்டனும் ஈராக் போர்க்கைதிகள் விஷயத்தில் அத்தனை கேவலமாக நடந்துகொண்டிருக்க வேண்டாம் என்பதுதான் ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் தீர்ப்பு. 2004 மார்ச் மாதம் தொடங்கி இது தொடர்பாக வெளிவந்த புகைப்படங்கள், கல்லைக்கூடக் கதறச்செய்யக் கூடியவை. போர்க்கைதிகளை அடித்தும் உதைத்தும் நிர்வாணப்படுத்தி மேலே சிறுநீர் கழித்தும் முகத்தைத் துணியால் மறைத்து, பிறப்புறுப்பைத் தாக்கியும் அமெரிக்க ராணுவம் செய்த அராஜகங்களைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. மூடி மறைக்கவே முடியாத புகைப்பட ஆதாரங்கள் வெளியானபிறகு, வேறு வழியில்லாமல் அமெரிக்காவும் பிரிட்டனும் மன்னிப்புக் கேட்டன. இனிமேல் இந்த மாதிரியெல்லாம் நடக்காது என்று அவசர அவசரமாக வாக்குறுதி அளித்திருக்கின்றன. உலகம் முழுவதையும் பாதித்த இந்தச் சம்பவம், அமெரிக்கர்களைச் சற்று அதிகமாகவே பாதித்தது. போரை அவர்கள் அத்தனை விரும்பவில்லை என்றாலும், சதாம் உசேன் பிடிபட்ட சந்தோஷத்தில் புஷ்ஷை மன்னிக்க அவர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் ஈராக் சிறைச்சாலைகளில் நடக்கும் கொடூரத்தைப் புகைப்படங்களில் பார்த்தபிறகு கட்டுக்கடங்காத வெறுப்புணர்வே அவர்களிடம் பெருகியிருக்கிறது. உலகின் காவலர்களாகத் தம்மை நினைத்து இறுமாந்திருந்தவர்கள், தம்மையே கிரிமினல்களாக உணரத் தொடங்கி அவமானத்தில் கூனிக் குறுகியிருக்கிறார்கள். இது நிச்சயம் எதிர்வரும் தேர்தலில் புஷ்ஷ§க்கு மிகப்பெரிய சரிவைத் தரும் என்பது அமெரிக்க மீடியாவின் கணிப்பு. அமெரிக்காவின் நாற்பத்து மூன்றாவது அதிபராகக் கடந்த 2001_ம் ஆÊண்டு பதவியேற்ற ஜார்ஜ் புஷ்ஷ§க்கு இந்த வருடத்துடன் பதவிக்காலம் முடிவடைகிறது. பதவியில் இருந்த காலமெல்லாம் அவர் யுத்தம் செய்திருக்கிறார். சில புதிய யுத்தங்களுக்கும் திட்டம் தீட்டியிருக்கிறார். நிற்க நேரமில்லாமலேயே அவருடைய நான்காண்டு பதவிக்காலமும் ஓடிக் கழிந்திருக்கிறது. மயிரிழையில் ஆட்சிப்பொறுப்பு அதிர்ஷ்டம் அடித்தவர் அவர். அந்த ஃப்ளோரிடா மாகாண எலக்டொரல் ஓட்டுகள் ஞாபகமிருக்கிறதல்லவா? அதுவே கூட, ஜார்ஜ் புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ், ஃப்ளோரிடாவின் கவர்னராக இருந்ததால்தான் சாத்தியமானது என்று இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அல்கோர் ஜெயித்து ஆட்சிக்கு வந்திருக்க வேண்டியது. அதிர்ஷ்டவசமாகவோ, திருட்டுத்தனமாகவோதான் புஷ் ஆட்சிக்கு வந்தார் என்கிறது இன்றைய அமெரிக்க மீடியா. ஆயிரம் சொன்னாலும் புஷ் அதிபராகி, நான்கு வருடங்களையும் ஓட்டிவிட்டார். இனி அடுத்தது என்ன? kumudam.com (தொடரும்)<!--QuoteEnd--><!--QuoteEEnd--> |