![]() |
|
கோபத்தை அடிக்கினால் கோழையென்று அர்த்தமல்ல..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: கோபத்தை அடிக்கினால் கோழையென்று அர்த்தமல்ல..... (/showthread.php?tid=7174) |
கோபத்தை அடிக்கினால் க - AJeevan - 04-24-2004 <img src='http://www.kumudam.com/sinegithi/010404/pg-4t.jpg' border='0' alt='user posted image'> நாம் காலம் காலமாக சில விஷயங்களில் ஏனோ தவறான கருத்துக்களையே நிஜம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக கோபம் கொள்வதுதான் வீரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் கோபத்தை அடக்கி வாழ்பவன் கோழை என்று எண்ணி விடுகிறோம். உண்மையில் கோபத்தை அடக்கும் யாரையும் நாம் கோழை என்று சொல்லக்கூடாது. அவர்கள் அதிக மனோவல்லமை பெற்றவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படித்தான் சான்றோர்கள் சொல்கிறார்கள். 'என்னை மற்றவர்கள் கோழை என்று நினைத்தாலும் கூட சரி, நான் கோபம் கொள்ளமாட்டேன். கோபம் ஏற்படுத்தும் கெடுதல் பற்றி நான் அறிவேன். ஆகவே கோபம் கொள்ளமாட்டேன். அதனுடைய முடிவை நானே பார்த்து விடுகிறேன்' என்ற ஒரு மன உறுதியோடு நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் இருந்து பாருங்கள்; உங்களுடைய இந்த முடிவு பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் கணித்துப் பாருங்கள். அவர்கள் உங்களை கோழை என்றே எண்ண மாட்டார்கள். வீரர் என்றே பாராட்டுவார்கள். பெரும்பாலும் நம்மில் பலர் தங்கள் கோபத்தைக்காட்டுவது தன் வீட்டின் அப்பாவிக் குழந்தைகளிடம்தான். அறியாப் பருவத்தில் இருக்கும் அந்தக் குழந்தைகளிடம் கோபம் வராமல் நாம் நம்மை காத்துக் கொள்வது மிக முக்கியம். குழந்தைகள் நல்ல முறையில் வளரவும் இது உதவும். இந்த உலகின்மீது வாழும் ஒவ்வொரு உயிருக்கும், செடி, கொடி உட்பட அனைத்துக்கும், இந்த உலகை விடுத்து வெளியேறும் வேகம் என்பது ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவு உண்டு. தென்னை மரத்துக்கு அறுபது அடி வைத்துக் கொள்ளலாம். சாதாரண செடிக்கு ஒரு அடி என்று வைத்துக் கொள்ளலாம். விடுதலை வேகம் மனித இனத்துக்கு ஆறு அடி. அந்த ஆறு அடி வளர்ந்த பிறகு, அது தணிந்துவிடுகிறது. எனவேதான் அதன்பிறகு மனிதனுக்கு வளர்ச்சியில்லை. ஆனால் இந்த ஆறு அடி வேகம், ஒரு மாதக் குழந்தையாக இருக்கும்போதே அந்தக் குழந்தையிடம் உள்ளது; அந்தளவு வளர குழந்தையை ஊக்கி விடுகிறது; அதனால் எந்தக் காரியத்தைச் செய்தாலும் குழந்தை துடுக்காகத்தான் செய்யும். நீங்கள் ஏதேனும் தடுத்தாலும் அதைக் குழந்தையால் ஒப்புக்கொள்ள முடியாது. சரி... நாம் என்ன செய்ய வேண்டும்? அவர்களது அந்த வேகத்தைப் பயன்படுத்தும் முறையிலேயே அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். உதாரணமாக குழந்தை ஏதோ ஒரு பொருளை எடுத்துவிட்டது. அதைப் போட்டுவிட்டால் உடைந்துவிடும் என்று எண்ணினீர்களானால் அதைவிட கவர்ச்சியான ஒரு பொருளை உடனடியாக எடுத்து அதன் கையிலே நீட்டி "இதோ பார், இது நல்ல பொருள். எவ்வளவு அழகாக இருக்கிறது" என்று புரியும்படி காட்டினால் அதை அக்குழந்தை வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கும். குழந்தைகளிடம் அன்பு காட்டி நடந்துகொள்ள வேண்டும். கோபம் அடங்கிய நிலையிலும் மனம் அடங்கவில்லையே என்பதுபோல, மனம் அடங்கிய நிலையிலும் கோபம் அடங்காத நிலைக்குச் சான்றுகள் பல இருப்பதாக சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். மனிதனுக்குத் தன்முனைப்பு என்று ஒன்று இருக்கிறது. தன்முனைப்பிலே 'தான்' 'தனது' என்ற இரண்டு எழுச்சிகள் உண்டு 'தான்' என்பது அதிகாரப்பற்று. 'தனது' என்பது பொருள்பற்று. அந்த அதிகாரப்பற்று என்பது "தனக்கு மேலாக ஒருவர் திகழக் கூடாது, வளரக்கூடாது, உயரக் கூடாது" என்ற எண்ணத்தை உடையது. ஒருவர் உயர்ந்துவிட்டால், ஒருவர் செழித்துவிட்டால் அதைப் பார்த்துக் கொண்டு அவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அப்படிப்பட்டவர்களை என்ன செய்வது? ஒன்றும் செய்ய முடியாது. காரணம் சகித்துக்கொள்ள முடியாமல் இருப்பது என்பது அவருடைய நோய். உங்களுக்கு ஏன் அந்தக் கவலை? அதை விட்டுவிடுங்கள். அந்த நோயை அவரே குணப்படுத்திக்கொள்ள வேண்டியதே தவிர அது நம்மை ஒன்றும் பாதிக்காது. அத்தகைய மனிதர் உங்களை ஏதேனும் திட்டினார், கெடுதல் செய்தார் என்றால் அவரை மனதார தினம் காலையும் மாலையும் வாழ்த்துங்கள். எல்லாம் சரியாகி விடும். 'சரி... இயலாமையினால் தன் மீதே தனக்கு ஏற்படும் கோபத்தை எப்படி என்னால் தவிர்க்க இயலும்?' என்று நீங்கள் யோசிக்கலாம். உங்கள் மீது கோபம் ஏன் எழுகிறது என்று பார்த்தீர்களேயானால், இது ஒரு குற்ற உணர்வு. ஏதோ ஒரு செயலைச் செய்ய உங்களால் இயலவில்லை. அதற்கு யாரோ தடையாக இருக்கிறார்கள். அந்தத் தடையை நீக்கி நான் வெற்றிபெற முடியவில்லையே என்ற ஒரு வேகம்தான்... அதாவது உங்கள் கோபத்தை மற்றவர் மீது காட்ட முடியாத ஒரு இடம், ஒரு சூழ்நிலை ஏற்படும்போது அந்த இடத்திலே அதே கோபம் நம்மீது திரும்புகிறது. திரும்பி, "நான் வாழ்ந்தென்ன... _வாழாவிட்டால் என்ன? நான் இப்படித் தவறு செய்துவிட்டேனே" என்கிற குற்ற உணர்வு. இது சாதாரண இயல்பு. தன்னைக் குற்றவாளி ஆக்கிக்கொண்டு வருந்துவதைவிட, இனி என்ன செய்ய வேண்டும்? இப்போதுள்ள சூழ்நிலையில் எனக்கு அறிவு இருக்கிறது. உடல் வலிவு இருக்கின்றது. இன்னின்ன வசதிகள் இருக்கின்றன, இன்ன செல்வாக்கு இருக்கிறது. இவற்றைக் கொண்டு இந்த நிலைமையை மாற்றியமைத்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று உட்கார்ந்து சிந்தியுங்கள். உடனடியாக விளங்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள். இன்னொரு சமயம் மீண்டும் உட்கார்ந்து சிந்தியுங்கள். நல்ல முறையிலேயே உங்களுக்குத் தெளிவான விளக்கம் வரும். இந்த விளக்கத்தின் வழியே செயல்பட்டாலே தீர்வுகள் கிடைத்துவிடும்! அடுத்து, உங்களுக்கு யார் யார் மீது கோபம் எழுகிறதோ அவர்கள் பட்டியலைப் போட்டு ஒவ்வொருவருக்கும் ஏழு, ஏழு நாட்களை ஒதுக்கி அந்த நாட்கள் அவர்கள் மீது கோபம் கொள்ளாதவாறு ஒரு உறுதிப்பாட்டை மேற்கொள்ளுங்கள் அது என்ன ஏழு நாட்கள் என்று யோசிக்கிறீர்களா? சாதாரணமாக ஒரு உள்ளத்திற்குப் பயிற்சி எடுப்பதற்கு குறைந்தபட்சம் ஏழு நாட்கள் வேண்டும். அதற்குள் வெற்றி பெறவில்லையானால் நீங்கள் ஏழு நாட்களை இரண்டு ஏழு நாட்களாக்கிக் கொள்ளலாம். எழுபது நாட்கள்கூட நீட்டிக்கொண்டு பயிலலாம். அது அவரவர்களுடைய உணர்வைப் பொறுத்தது. நமக்கான இன்பங்களை இறையருள் தந்திருக்கின்றது. அவற்றையெல்லாம் அனுபவிப்பதற்கு அமைதிதான் வேண்டும். நமக்கு எழும் கோபம் அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிடும் என்பதுதான் விஷயம். அந்த இழப்பு நமக்கு வேண்டாம். இயற்கை இன்பத்தைப் பூரணமாக அனுபவிப்போம். ஒருவரோடு ஒருவர் ஒத்தும் உதவியும் இனிமையாக வாழ்வோம். கவலையை எப்படிப் போக்குவது? தொடரும்............. நன்றி: சிநேகிதி - shanmuhi - 05-22-2004 அருமையான கட்டுரை. - sOliyAn - 05-24-2004 ம்.. மிகவும் கஸ்டமான காரியத்தை செய்யச் சொல்லுறாங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 05-24-2004 ஆரம்பத்தில் தலைப்பைப் பாத்துப் பயந்திட்டம்..."கோபத்தை அ<b>டி</b>க்கினால் கோழையென்று அர்த்தமல்ல....."இப்படி இருக்குத் களத் தலைப்பு... அதுபோக கோபம் என்பது ஒரு உயிரிக்கான உணர்வு...அதை தேவையான போது தேவையான அளவில் தேவைகேற்ப வெளிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டியவனே மனிதன்....! அதைவிடுத்து கோபத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தல் என்பது கடவுளுக்கும் ஆகாத விசயம்...நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே....! பலதைச் சொல்லலாம் ஆனால் சிலவற்றைத்தான் செய்யலாம்..முயற்சித்தால் முடிவு தெரியும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|