![]() |
|
கடியோ கடி.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: கடியோ கடி.... (/showthread.php?tid=7179) |
கடியோ கடி.... - kuruvikal - 04-23-2004 வெறி பிடித்த இரு குதிரைகள் கடித்து 20 பேர் காயம்! சேலம் மாவட்டம் ராசிபுரத்தில் 2 குதிரைகள் வெறி பிடித்து கடித்துக் குதறியதில் 20 பேர் காயமடைந்தனர், பல வாகனங்கள் சேதமடைந்தன. ராசிபுரத்தில் சில மாதங்களாக 2 குதிரைகள் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தன. அவை யாருக்கு சொந்தம் என்றே தெரியவில்லை. குப்பைகளில் கொட்டப்படும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு அவை காலம் தள்ளி வந்தன. சமீப நாட்களாக இந்த இரு குதிரைகளிடம் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. அடிக்கடி சப்தமாக கணைப்பதும், வேகமாக தறிகெட்டு ஓடுவதுமாக இருந்தன. இந் நிலையில் இரு குதிரைகளும் வழியில் தென்பட்டவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தன. அப்போதுதான் அவற்றிற்கு வெறி பிடித்திருந்தது தெரிய வந்தது. தாறுமாறாக ஓடிய அந்தக் குதிரைகளிடம் ராசிபுரம்பட்டினம் சாலையில் பலரும் சிக்கி கடிபட்டனர். 20க்கும் மேற்பட்டோர் குதிரைகளால் கடிபட்டனர். இதுதவிர வழியெங்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களையும் குதிரைகள் மிதித்துத் தள்ளின. இதனால் அந்த சாலையே அல்லோலகல்லோலப்பட்டது . இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் ஒரு குதிரை மயங்கி விழுந்து இறந்து விட்டது. இன்னொரு குதிரையை வனத்துறையினர் பிடித்துசிகிச்சை அளித்து அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இறந்த குதிரையையும் பிடிபட்ட குதிரையையும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவற்றை வெறி நாய்கள் கடித்திருந்தது தெரியவந்தது. அதனால்தான் குதிரைக்கும் வெறி பிடித்துள்ளது. இதனால் குதிரைகளிடம் கடிபட்டவர்களுக்கும் வெறிநாய்க் கடி ஊசி போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் தற்ஸ்தமிழ் டொட் கொம்..! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :twisted:
|