| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 213 online users. » 0 Member(s) | 210 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,298
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,627
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,052
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| கனடிய தேர்தல் |
|
Posted by: Mathan - 06-04-2004, 01:49 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
தோல்வி முகம் நோக்கி லிபரல் கட்சி! இந்தியா போல் இங்கும் மத்தியில் கூட்டணி அரசு! - நக்கீரன்
இது தேர்தல் காலம். சிறீலங்காவின் 13வது நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 2இல் தேர்தல் நடந்தது. பக்கத்து நாடான இந்தியாவின் 14 வது மக்களவைக்கு (லோக் சபா) அதே மாதம் 20 தொடங்கி மே 10 வரை 5 கட்ட தேர்தல் நடந்தது. இந்த இரண்டு நாடுகளிலும் ஆளும் கூட்டணி அரசு தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் இடம் பெற்றுள்ளது.
கனடாவில் இந்த மாதம் 28ஆம் நாள் 34வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் வசந்த காலம் அல்லது இலையுதிர் காலத்தில்தான் நடைபெறுவது வழக்கம். இம்முறை வழக்கத்திற்கு மாறாக கோடையில் தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த மே 23 இல் பிரதமர் போல் மாட்டின் பொதுத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார்.
கனடா பரப்பளவில் உலகில் இரண்டாவது பெரிய நாடு. அதன் மொத்த பரப்பளவு 9.97 மில்லியன் சகிமீ ஆகும். மக்கள் தொகை 30.1 மில்லியன் (3 கோடி). வாக்காளர்களின் எண்ணிக்கை 22.7 மில்லியன். கடந்த நொவெம்பர் 2000 இல் நடந்த தேர்தலில் 13 மில்லியன் அல்லது 61.2 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்தனர். நாடாளுமன்ற உறுப்பிர்களின் தொதை இம்முறை 301இல் இருந்து 303 ஆக அதிகரித்துள்ளது.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சிக்கு 168, கனேடிய பழமைவாதக் கட்சிக்கு 73, பாட்டி கியூபெக்வாவுக்கு 33, புதிய மக்களாட்சிக் கட்சிக்கு 14, சுயேட்சைகள் 9, வெற்றிடம் 4 என மொத்தம் 301 ஆசனங்கள் இருந்தன.
கடந்த மூன்று தேர்தல்களிலும் (ஒக்தோபர் 1993, யூன் 1997, நொவம்பர் 2000) கனேடிய லிபரல் கட்சியே அமோக வெற்றி பெற்று பிரதமர் யேன் கிரச்சியன் தலைமையில் ஆட்சி செய்தது.
ஆனால் இம்முறை தேர்தல் அறிவிப்பு வெளிவந்து 11 நாட்கள் கூட ஆகாத நிலையில் லிபரல் கட்சி தோல்வி முகம் நோக்கிப் போகிறது என கருத்துக் கணிப்புக்கள் அடித்துச் சொல்கின்றன. மேலும் அடுத்த அரசு சிறுபான்மை அரசுதான் என இந்தக் கருத்துக் கணிப்புக்கள் சுட்டுகின்றன.
மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் களத்தில் இறங்கிய பிரதமர் போல் மாட்டினும் அவரது லிபரல் கட்சியும் கண்ணைக் கட்டி திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்டுள்ள நிலையில் உள்ளது. லிபரல் கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை அட்லான்டிக் பகுதி நீங்கலாக எங்கும் பலத்து வீசுகிறது.
தேசிய அளவில் லிபரல் கட்சிக்கு 34, கனேடிய பழமைவாதக் கட்சிக்கு 30, புதிய மக்களாட்சிக் கட்சிக்கு (என்டிபி) 16 மற்றும் பசுமைக் கட்சிக்கு (Green Party ) 6 விழுக்காடு ஆதரவு இருப்பதாக Ipsos-Reid அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்புத் தெரிவிக்கிறது.
ஒன்ரோறியோ மாகாணத்தை பொறுத்தளவில் லிபரல் - கனேடிய பழமைவாதக் கட்சி இரண்டுக்கும் முறையே 36 விழுக்காடு ஆதரவும், புதிய மக்கள் கட்சிக்கு 21 விழுக்காடு ஆதரவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை உறுப்பினர்களை ஒன்ரோறியோ மாகாணம் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிறது.
இதுவரை காலமும் ஒன்ரோறியோ லிபரல் கட்சியின் கோட்டையாக விளங்கி வந்தது. முன்னைய தேர்தல்களில் லிபரல் கட்சி இரண்டு சூன்று தொகுதிகள் நீங்கலாக ஏனைய தொகுதிகளைக் கைப்பற்றி வந்திருக்கிறது. ஆனால் இம்முறை மொத்தம் 103 தொகுதிகளில் பாதிக்கு மேலான தொகுதிகளை இழக்கும் அபாயத்தை எதிர் நோக்குகிறது.
பிரதமர் மாட்டினுக்கும் லிபரல் கட்சிக்கும் என்ன நடந்தது? அடுத்த வசந்த காலத்தில் வைக்க வேண்டிய தேர்தலை அவசரப்பட்டு பத்து மாதம் முன்னரே வைத்து வெற்றிவாகை சூடி மீண்டும் ஆட்சிக் கதிரையில் அமரலாம் என்ற மாட்டினது கனவு இப்படி அசுர வேகத்தில் ஏன் கலைய வேண்டும்? மாட்டின் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டாரா?
போல் மாட்டினுக்கும் அவரது கட்சிக்கும் எதிராக வீசும் அலைக்கு நான்கு முக்கிய காரணிகளைக் குறிப்பிடலாம்.
1) பதினொரு ஆண்டு காலம் லிபரல் கட்சி ஆட்சி செய்து விட்டது. எனவே ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்த வேளை வந்துவிட்டதென மக்கள் நினைக்கிறார்கள்.
2) கியூபெக் மாகாணத்தில் பிரிவதா இல்லையா என்பதையிட்டு நடந்த நேரடி வாக்கெடுப்பின் போது (1995) 250 மில்லியன் டொலர்களைச் செலவழித்ததில் ஊழல் நடந்துள்ளது என கனேடிய கணக்காய்வாளர் தெரிவித்தார். இதனை அடுத்து புலன் விசாரணை மேற்கொண்ட கனேடிய காவல்துறை இருவரைக் கைது செய்து கிரிமினல் வழக்குத் தொடுத்துள்ளது. இதனால் மக்களது கோபம் ஊழலுக்கு இடம் கொடுத்த லிபரல் கட்சி மீது திரும்பியுள்ளது.
3) என்ன நேர்ந்தாலும் எது வந்தாலும் வரியை உயர்த்த மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து ஒன்ரோறியோ மாகாண ஆட்சிக் கதிரையை ( ஒக்தோபர் 2003 ) பிடித்த மாகாண லிபரல் கட்சி இப்போது முன்னர் கைவிடப்பட்ட மருத்துவ காப்புறுதிக் கட்டணத்தை மீளக் கொண்டு வந்துள்ளது. இந்தக் கட்டணம் ஆண்டுக்கு 20,000 டொலர்களுக்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் மீது விதிக்கப்படும். ஆகக் கூடிய கட்டணம் ஆண்டுக்கு 900 டொலர்கள். இது லிபரல் கட்சித் தலைவர்கள் படு பொய்யர்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத ஏமாற்றுப் பேர்வழிகள் என்ற கெட்ட பெயரை மக்கள் மத்தியில் எற்படுத்தியுள்ளது.
4) கனேடியன் அலயன்ஸ் கட்சியும் - புது முற்போக்கு பழமைவாதக் கட்சியும் ஒன்றாக இணைந்து பலமான கனேடிய பழமைவாதக் கட்சியாக உருப்பெற்றுள்ளது.
மக்கள் லிபரல் கட்சியை பழிவாங்கத் துடிப்பதற்கு மேற்காட்டிய காரணிகள்தான் முதன்மையானவை என நான் நினைக்கிறேன்.
இந்த வாக்காளப் பெருமக்கள் இருக்கிறார்களே அவர்கள் அரசியல்வாதிகள் அள்ளி வீசும் உறுதிமொழிகளைக் கேட்டு முதலில் ஏமாந்து விடுகிறார்கள். ஆனால் உண்மை தெரிந்ததும் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் மன்னர்கள்.
இந்திய மக்களவைத் தேர்தலிலும் சட்டசபைத் தேர்தலிலும் ஆட்சியில் இருந்த கட்சிகளை வாக்காளர்கள் தோற்கடித்து விட்டார்கள். உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, குஜயராத் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி, ஆந்திராவில் (லோக்சபை, சட்டசபை) சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், கேரளத்தில் (லோக் சபை) இந்திய காங்கிரஸ், கர்நாடகத்தில் (லோக்சபை, சட்டசபை) காங்கிரஸ் கட்சி படு தோல்விகளைச் சந்தித்தன.
இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையில் பாரதூரமான கொள்கை வேறுபாடு கிடையாது. மார்க்சீச சித்தாந்த அடிப்படையில் கனேடிய பழமைவாதக் கட்சி வலது சாரிக் கட்சி. புதிய மக்களாட்சிக் கட்சி இடதுசாரிக் கட்சி. லிபரல் இரண்டுக்கும் நடுவில். ஒரு புறம் பார்த்தால் கொஞ்சம் வலதுசாரி. மறுபுறம் பார்த்தால் கொஞ்சம் இடதுசாரி.
பெரும்பாலும் கனேடிய அரசை இங்குள்ள உளவுத்துறை, காவல்துறை, அமைச்சு மேலதிகாரிகள் போன்றவர்களே இயக்குகிறார்கள்.
அதிகாரிகள் சொன்ன இடத்தில் அமைச்சர்கள் கையெழுத்து வைக்கிறார்கள். சுரேஷ் மாணிக்கவாசகம் கைது செய்யப்பட்டதற்கு அதிகாரிகளது கெடுபிடிதான் காரணம். உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தாங்கள் எடுக்கும் கொழுத்த சம்பளத்தை நியாயப்படுத்த அவ்வப்போது பயங்கரவாதிகள் எனக் குற்றம்சாட்டி வெள்ளையர் அல்லாதாரைக் கைது செய்கிறார்கள்.
மொகமட் சேகி மகூப் (Mohamed Zedki Mahjoub)
என்ற எகிப்பதியர் தேசிய பாதுகாப்பு சான்றிதழின் கீழ் யூன் 2000 இல் கைது செய்யப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக ரொறன்ரோ தடுப்பு மையத்தில் (இது கியூபாவில் உள்ள அமெரிக்க Guantanamo Bay தடுப்பு முகாமுக்கு ஒப்பான கனேடிய தடுப்பு முகாம் என நீதிபதி ஒருவர் கண்டித்திருக்கிறார்) சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது எந்தவித நீதி விசாரணையும் இதுவரை இல்லை. அவர் நாடு கடத்தப்படவும் இல்லை. பின் லேடனுக்கு சொந்தமான ஒரு பண்ணையில் வேலை செய்தததையும் அவரை நான்கு முறை சந்தித்ததையும் ஒப்கொள்ளும் மொகமட் பின் லேடன் அப்போது ஒரு பயங்கரவாதியாகப் பார்க்கப்படவில்லை என்கிறார்.
இப்படி கனேடிய உளவுத்துறையும் காவல்துறையும் அமெரிக்க உளவுத்துறைக்கு கொடுத்த முற்றிலும் பிழையான தகவலின் அடிப்படையில் அகப்பட்டுக் கொண்டவர் மாகர் அரார் (Maher Arar) என்ற கனேடிய குடிமகன். சிரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அங்கிருந்து ஓடிவந்து கனடாவில் அரசியல் புகலிடம் தேடிக் கொண்டார். இவர் ஒரு கணனி மென்பொருள் பொறியியலாளர். செப்தெம்பர் 2002இல் விடுமுறையைக் கழிக்க தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் தியூனீசியா போனார். திரும்பும் போது அமெரிக்கா ஊடாக தனியே புறப்பட்டு வந்தார். அப்போதுதான் சனி உருவில் தோன்றிய அமெரிக்க உளவுத்துறையிடம் மாட்டிக் கொண்டார்.
அமெரிக்க உளவுத்துறை அவரைக் கைது செய்து தடுப்பு முகாமில் வைத்து வாரக் கணக்காக விசாரித்தார்கள். விசாரணையின் பின் எந்த நாட்டைவிட்டு உயிருக்குப் பயந்து ஓடி வந்தாரோ அதே சிரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு ஓராண்டு காலம் 6 அடி நீளம், 7 அடி உயரம், 3 அடி அகலம் உள்ள ஒரு பாதாள சிறையில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். அவருக்கு தெரியாத சங்கதி கனேடிய காவல்துறைதான் அமெரிக்க உளவுத்துறைக்கு அவரை பயங்கரவாதி எனக் காட்டிக் கொடுத்தது என்ற உண்மை. இது பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது என்ற கதைதான்.
கனடாவில் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசில் எந்தவித அதிகாரமும் கிடையாது. அவர்கள் வெறும் கை உயர்த்தும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அமைச்சர்களில் பிரதமருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் கொஞ்சம் அதிகாரம் உண்டு. அவர்களை அடுப்படி அமைச்சர்கள் (kitchen cabinet) என்று அழைப்பார்கள்.
போல் மாட்டின் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 9 பில்லியன் (900 கோடி) டொலர்களை லிபரல் கட்சி நல்வாழ்வுத் திட்டங்களுக்குச் (health care) செலவழிக்கும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு சித்தாந்த அடிப்படையில் மிக நெருக்கமாக இருக்கும் கனேடிய பழமைவாதக் கட்சி தொழில் நிறுவனங்களின் வரிகளைக் குறைத்து இராணுவச் செலவை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
புதிய மக்களாட்சிக் கட்சி செல்வந்தர்கள் மீது விதிக்கப்படும் வரியை அதிகரித்து சமூக ஏணியில் கீழ் மட்டத்தில் உள்ள எளிய மக்களது நல்வாழ்வு, கல்வி, வதிவிட மேம்பாட்டுக்கு உதவப் போவதாகத் தெரிவித்துள்ளது. அதே சமயம் வரவு-செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை ஏற்படாது சமன் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?
முதலில் யாருக்கு வாக்கு அளிக்கக் கூடாது என்பதைப் பார்ப்போம். கனேடிய பழமைவாதக் கட்சி பணக்காரர்களது கட்சி. இந்த நாடு வெள்ளை இனத்தவர் கையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிற கட்சி. இராக் மீது அமெரிக்கா நடத்திய சட்டத்துக்கு மாறான தாக்குதலை ஆதரிக்கும் கட்சி. எல்லாவற்றிற்கும் மேலாக வி.புலிகள் உட்பட அரச அடக்கு முறைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடும் விடுதலை இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என நினைக்கிற கட்சி. எனவே மறந்தும் யாரும் இந்தக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்;பது சொல்லாமலே விளங்கும்.
அடுத்து லிபரல் கட்சி. அமெரிக்காவை முந்திக் கொண்டு வி.புலிகளை பயங்கரவாத இயக்கம் என முத்திரை குத்திய கட்சி. இந்த விடயத்தில் முன்னைய முற்போக்கு பழமைவாதக் கட்சியின் வெளியுறவுக் கொள்கையையே இந்தக் கட்சியும் அட்சரம் தவறாமல் பின்பற்றுகிறது.
நோர்வே அரசின் அமைதி முயற்சியை ஆதரிக்கிறதாக லிபரல் அரசு வாயளவில் சொல்கிறதே ஒழிய நடைமுறையில் பேச்சுப் பல்லக்கு தம்பி கால் நடை மாதிரி நடந்து கொள்கிறது.
சென்ற ஆண்டு இலங்கைக்கு செலவு மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் பில் கிறகம் வன்னி போகவில்லை. அதையிட்டு யாழ்ப்பாணத்தில் கேள்வி கேட்கப் பட்டபோது 'அதற்கான வாய்ப்பு வரவில்லை' என்ற மழுப்பல் பதில் அமைச்சரிடம் இருந்து வந்தது.
வேடிக்கை என்னவென்றால் இலங்கைக்கான கனேடிய தூதுவர் வி.புலித் தலைவர்களை வன்னி சென்று நேரில் சந்திக்கிறார். கைகொடுத்து குசலம் விசாரிக்கிறார். அவர்களோடு நின்று படம் எடுத்துக் கொள்கிறார். ஆனால் கனேடிய அரசு வி.புலிகளை மட்டுமல்ல அதன் ஆதரவாளர்களையும் கனடா வருவதற்கு தடை விதித்துள்ளது.
தமிழீழத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மக்களுக்கு மகத்தான தொண்டு செய்கிறது. முன் பள்ளிகள், வீடுகள், சத்துணவு மையங்கள், குழந்தைகள் இல்லங்கள், கணனி பயிற்சி மையங்கள் என பல சமூக, நல்வாழ்வு, கல்விப் பணிகளை மேற் கொண்டு வருகிறது. அந்த அமைப்புககு வரி விலக்கு கொடுக்க கனேடிய வருவாய்த் துறை திணைக்களம் கடந்த 8 ஆண்டுகளாக மறுத்து வருகிறது.
தமிழர் புனர்வாழ்வுக் கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கனடா வந்த வண.பிதா. கஸ்பர் ராஜ் விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகள் கைது செய்து கை விலங்கு பூட்டி வந்த விமானத்தில் கனேடிய அரசு அவரை நாடு கடத்தியது. இதையிட்டு குடிவரவு அமைச்சர் மற்றும் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எழுத்தில் செய்து கொண்ட முறைப்பாடு செவிடன் காதில் ஊதிய சங்குபோல் பயனற்றுப் போனது. சாட்டுக்கு ஒரு லிபரல் நாடாளுமன்ற உறுப்பினராவது வாய் திறக்கவில்லை.
எனவே லிபரல் கட்சி கனேடிய தமிழ் மக்களின் உயிர் மூச்சான விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடிக்கிறதேயொழிய நடைமுறையில் அதற்கு மாறாகவே செயல் படுகிறது.
நாளை சிறீலங்கா அரசின் பிடிவாதப் போக்கால் அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தால் லிபரல் கட்சி அரசு வி.புலிகளை பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத இயக்கம் என பிரகடனப்படுத்தி விடும். அiதிப் பேச்சு வார்த்தை நடப்பதால்தான் வி.புலிகள் பயங்கரவாத இயக்கப் பட்டியலில் சேர்க்கப்படாது விடப்பட்டுள்ளது.
எஞ்சி இருப்பது புதிய மக்களாட்சிக் கட்சி. இந்தக் கட்சி ஒரு முற்போக்கான கட்சி. குடிவரவாளர்களை நட்போடு பார்க்கும் கட்சி. அதன் தலைவர் யக் லேய்ரன் கனேடிய தமிழ் மக்களது சிக்கல்களையும் அபிலாசைகளையும் நன்கு அறிந்தவர். ரொரன்றோ மாநரக சபையின் நீண்ட கால உறுப்பினர். வீடில்லாத ஏழைகளுக்கு குரல் கொடுத்தவர். தமிழீழ மக்களது விடுதலைப் போராட்டத்துக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தவர்.
இவர் லிபரல் கட்சி வேட்பாளர் டெனிஸ் மில் போட்டியிடும் ரொறன்ரோ-டன்போத் தொகுதியில் போட்டி இடுகிறார். லேய்ரன் அவர்கது மனைவி ழுடiஎயை ஊhழற பக்கத்துத் தொகுதியான வுசinவைல-ளுpயனiயெ வில் போட்டி இடுகிறார். இந்தத் தொகுதியில் வசிக்கும் தமிழ் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை இவர்களுக்கு அளித்து வெற்றி அடையச் செய்ய வேண்டும்.
ஏனைய தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்ள புதிய மக்களாட்சி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். அப்படி வாய்ப்பில்லாத போது லிபரல் கட்சிக்கு வாக்களித்து அந்தத் தொகுதியில் கனேடிய பழமைவாதக் கட்சி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
எப்படி வாக்களித்தாலும் யூன் 28 அன்று வேறு என்ன வேலை அல்லது சோலி இருந்தாலும் வாக்குச் சாவடிக்குத் தவறாது சென்று தமிழ் வாக்காளர்கள் தங்களது விலை மதிக்க முடியாத வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். மக்களாட்சியில் மக்களுக்கு உள்ள ஒரே பலம் வாக்குப் பலம் மட்டுமே என்பதை மறக்க வேண்டாம்.
நக்கீரன் / சூரியன் வெப்தளம்
|
|
|
| துயர் பகிர்வோம் |
|
Posted by: shanmuhi - 06-03-2004, 12:53 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (3)
|
 |
நெருக்கடியான கால கட்டங்களிலும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜி.நடேசன் தனது தனித்துவமான நடு நிலையுடன் சுதந்திரமான கருத்துகள் மூலம் செய்திகளை வெளியே கொண்டு வந்தவர். தமிழ் தேசிய உணர்வுடன் தனது கட்டுரைகளை உரிய காலப்பகுதியில் வெளியிட்டு உண்மைகளை தெரிய வைத்தவர்.
<b>அன்னாரின் குடும்பத்தினருக்கு கண்ணீரோடு கலந்த அனுதாபங்கள்....</b>
|
|
|
| அப்பால் தமிழ் |
|
Posted by: இளைஞன் - 06-03-2004, 10:46 AM - Forum: இணையம்
- Replies (1)
|
 |
வணக்கம் அனைவருக்கும்...
"அப்பால் தமிழ்" இணையத்தளம் மீண்டும் தனது வரவைப் புதுப்பித்துள்ளது. பல புதிய ஆக்கங்களுடனும், செயற்பாடுகளுடனும் இணையத்தில் வெளிவருகிறது. அப்பாலிருந்து அப்பால் செய்திகளைத் தாங்கி வருவதுடன், மாதம் ஒருமுறை "வண்ணச்சிறகு" என்னும் கலை இலக்கிய சஞ்சிகையையும் இணையத்தில் வெளியிட உள்ளது. ஒருமுறை சென்று பாருங்கள்.
<b>அப்பால் தமிழ்</b>
www.appaal-tamil.com
|
|
|
| ஊடக நண்பரெல்லாம் ஒதுங்கியிருங்கள். |
|
Posted by: shanthy - 06-03-2004, 09:49 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
ஊடக நண்பரெல்லாம் ஒதுங்கியிருங்கள்.
ஊடகவாயிலெல்லாம் உங்கள் பெயர்
இரங்கல்கள்....ஒன்று கூடல்கள்....
சோக இசைகள்....துயர்பகிரும் குரல்கள்.....
எல்லா வீட்டிலும் இழவு விழுந்த துயர்.....
எப்படி நடந்தது.....?
விரியும் விழிகளுக்குள் தெரியும் சோகத்தை
அந்த விழிகள் மட்டுமே அறியும்....
ஊடகத்துறைபுகும் தமிழர் ஒவ்வொருவருக்குமாய்
விடப்பட்ட சாவு எச்சரிக்கையாய்....
உங்கள் சாவு...எங்களுக்கான
எச்சரிக்கைக் கொலையிது....
உணர்வாய்ப் பேசி....உரக்கக் குரல் உயர்த்தி....
எழுவாய் மீண்டுமென எழுத மனசில்லை....
ஒன்றரை மணிநேரம் யாருமே அருகின்றி
அநாதைப் பிணமாய் நீர் கிடந்த
நிழற்படம் தான் விழியெல்லாம் நிறைகிறது.....
என்ன கொடுமையிது....?
உண்மை சொல்லும் குரல்களுக்கு
இதுதான் முடிவாமோ....?
கூட இருந்தவரே கொடுவிசமாய் மாறியெங்கள்
ஒளியின் தணல் அணைப்போம் என்றவர்
கனவுத்திரை கிழிய உண்மை சொன்ன
ஊடகத்துறை சார்ந்த உணர்வாளர்
யாவருடன் நீங்களுமாய்....
மட்டுநகர் உண்மையுடன் மண்ணின் நியாயங்கள்
உலகின் திசையெங்கும் உரைத்த பெருமகனே
உங்களின் சாவு எங்கள் எல்லோரின்
குரல்களுக்கும் எச்சரிக்கைதானின்று.....
எப்படி நடந்தது....?
உங்கள் நண்பரெல்லாம் ஏங்கித் தவிக்கின்றார்
உலகத் தமிழரெல்லாம் உயிர்வலியில் துடிக்கின்றார்
உங்கள் குரல் மீளக்கேட்டு எங்கள்
மனசெங்கும் துயரின் பாடல்......
இன்னும் யார் யாரோ....
அவர்கள் குறிப்பேட்டில்.....????
'ஊடக நண்பரெல்லாம் ஒதுங்கியிருங்கள்"
இன்னும் உம்போன்றோரை
இழந்திட மனிசில்லை....
வேறெப்படிச் சொல்லி விதியை நோக....?
எங்கள் விதியிதுவாய் எண்ணி நொந்தபடி....
இக்கவி உமக்குச் சமர்ப்பணமாய்....
31.05.04.
|
|
|
| வசந்தம் வந்தது.... |
|
Posted by: kuruvikal - 06-02-2004, 11:55 PM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/nicepic.jpg' border='0' alt='user posted image'>
சற்றே தலைசாய்க்க
தாய் மடி தேடினேன்
உதிரத்தில் கிடந்தது,
தாய் மண்ணில்
ஓரடி தேடினேன்
எங்கும் புதைகுழிகளாய்க் கிடந்தது,
ஏதிலியாய் நகர்ந்து
நகரத்தில் தேடினேன்
எங்கும் நரகமாய்க் கிடந்தது,
திக்கற்ற பறவையாய்
பலகாலம் பறந்து கண்டேன்
பூமித்தாயே
எங்கோ ஓர் மூலையில்
உன் மடியில் ஓர் வசந்தம்....!
நன்றி.... http://kuruvikal.yarl.net/
|
|
|
| நட்பின் கரங்கள் |
|
Posted by: sharish - 06-02-2004, 12:28 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (5)
|
 |
[size=18][b]நட்பின் கரங்கள்
நூலகத்தில் ஏதோ ஒரு
புத்தகத்தை தேடிக்கொண்டிருக்க
இன்னும்...
ஏதோ ஒரு புத்தகம் என்
கண்ணில் பட்டு
நெஞ்சைத்தொட்டு
கையில் தவழ்கிறது...
அதே புத்தகத்தை
தேடிக்கொண்டே...
யாரோ ஒருவன் வருகிறான்...!
ஒற்றைக் கால் இழந்தாலும்
கலங்காத நடை
ஓர விழிகளில்
ஒரு துளி சோகம்
பாற்பதற்கு...
எதையோ இழந்தவனாய்...
பின்புதான் புரிந்தது
அவன்
அனைத்தையும் இழந்தவனாம்...!
பாலஸ்தீனத்தில் இருந்து
அகதியாகி
ஐந்து வருடமும்
அனாதையாகி
ஆறு வருடமுமாம்...!
என் சொந்த வீட்டைப்போலவே
அவனது வீட்டின்
சுவர்களிலும்
கூரையிலும்
கதவுகளிலும்
துப்பாக்கி துளைகளும்
இரத்தக் கறைகளும்
படிந்திருக்கின்றனவாம்...!
நான் அவனை
என் தற்காலிக...
துப்பாக்கி துளைகள் இல்லாத
வாடகை வீட்டுக்கு அழைத்தேன்...!
ஆவலாய்...
கதவைத் திறந்த என்
அன்னை...
அன்போடு கேட்டாள்
யார் இந்த புதுத்தம்பி...?
இவன் என் தம்பி அல்ல
என் புதிய நண்பன்...!
உனக்கும்...
இவன் நண்பன் அல்ல...
ஏனெனில்...
இவன்
"அம்மா" என்று அழைக்க
யாருமே இல்லையாம்...!!!
த.சரீஷ்
23.05.2004 (பாரீஸ்)
|
|
|
| Help |
|
Posted by: sethu - 06-01-2004, 04:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
Mr. Nadesan was 49 at the time of death and father of four children. Please help to his family. If you like to help them Call To :- 004722302312 , 004741677366 , Send Mail:- sethu107@hotmail.com
Bank Name:-Sethurupan Nadarajah Gransdalen 23D 1054 Oslo Norway Account Nr:- 05391787672
Bank address: Postbanken, 0021 OSLO
Norway
If you are in Srilanka you Must have to contact with Mr. S.Srikajan 0777349655
|
|
|
| படித்ததில் பிடித்த கவிதை - மு.மயூரன் |
|
Posted by: Paranee - 06-01-2004, 12:59 PM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
படித்ததில் பிடித்த கவிதை
5.28.2004
நீ வேணும் - கவிதை
சத்தம் போட்டுக் காதல் கேட்டு பதிலை நீயும் பெற வேணும்
யுத்தம் போகும் வீரர் போல் நீ நிமிர்ந்து நின்றே பேசோணும்
கண்ணைப் பார்த்து கதைத்தவாறே எந்தன் எல்லாம் அள்ளோணும்
கண்ணீர், கோபம், புன்னகை என்று உந்தன் எதையும் சொல்லோணும்
ஓடும் ரயில் போய்ச் சேரும் வரையில் ஆன்மீகத்தை அலசோணும்
சூடாய் எங்கள் வீட்டுக்குள்ளே அரசியல் எல்லாம் உரசோணும்
கடலின் தரையில் பாலியல் கொஞ்சம் பயமில்லாமல் பேசோணும்
மடியின் மேலே தலையை வைத்து கவிதை சொல்லக் கேட்கோணும்
கொட்டும்மழையில் ஒட்டிக்கொண்டே ஆணாய்ப்பெண்ணாய் மாறோணும்
தொட்டுப்பார்த்தும் உற்றுப்பார்த்தும் ஹோமோன் எல்லாம் பூக்கோணும்
ஏதுமெனக்கு கண்ணீர் வந்தால் தோளில் என்னைத் தாங்கோணும்
மாதவிலக்கின் சோர்வில் எந்தன் மார்பின் மேலே தூங்கோணும்
என்னைப்போலே நீயும் கூந்தல் வசதிப்படிதான் வளர்க்கோணும்
உன்னைப்போலே தாயாய் மாற என்னைக் கொஞ்சம் பழக்கோணும்
மெல்லிய தோலின் கொழுப்பினடியில் வைரத்தசையை வளர்க்கோணும்
தொல்பொருள்காலத் தொல்லைகள் வந்தால் து}ரத்
துரத்தியடிக்கோணும்
மற்றவரோடும் பழகிப்பார்த்து காதலன் என்னைத் தெரியோணும்
மற்றவன் இன்னும் பொருத்தமென்றால் கலந்துபேசிப் பிரியோணும்
அடிமைக்காதல் வேண்டாம் நாங்கள் மனிதக்காதல் செய்யோணும்
வெடிபட்டாலும் பரவாயில்லை விடுதலையோடே சாகோணும்
விலங்கு பூட்டும் சலங்கையெல்லாம் குப்பைக்குள்ளே வீசோணும்
இலங்கை நாட்டின் தமிழைப்போலே வெப்பத்தழலாய் நீ வேணும்
வெட்டிக் கடவுள்,கற்பு,பெண்மை எல்லாப் பொய்யும் எரிக்கோணும்
கட்டுத்தளைகள் அறுத்து வெறுத்து விட்டுத் தொலைவாய்ப் பறக்கோணும் .
மு.மயூரன்
22-2-2002
|
|
|
| சவுதியில் அல் குவைடா தாக்குதல்....! |
|
Posted by: kuruvikal - 06-01-2004, 01:28 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://wwwi.reuters.com/images/2004-05-31T160424Z_01_GALAXY-DC-MDF582006_RTRIDSP_2_INTERNATIONAL-SECURITY-SAUDI-DC.jpg' border='0' alt='user posted image'>
மீட்புப்படை வீரர்கள்....உலங்குவானூர்தியில் இருந்து பயணக்கைதிகள் இருந்த கட்டடத்தின் மீது குதிக்கும் காட்சி..(reuters)
<b>சௌதி அரேபியா: அல்கொய்தா தாக்குதலில் 8 இந்தியர்கள் பலி</b>
சௌதியில் அல்கொய்தா தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களில் 8 இந்தியர்கள் உள்பட 22 பேர், கமாண்டோ படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியாயினர்.
80க்கும் மேற்பட்டவர்களை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். இதில் வெங்கடமணி பாஸ்கர் என்ற துபாய் வாழ் இந்தியர் உள்பட 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அல் கோபர் நகரத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் 4 முஸ்லீம் தீவிரவாதிகள் புகுந்தனர். ஒவ்வொரு அறைக்குள்ளும் புகுந்து வெள்ளைக்காரர்களையும், முஸ்லீம் அல்லாதவர்களையும் தேடித் தாக்குதல் நடத்தினர்.
பின்னர் அவர்களில் பலரை ஒரு அறையில் பிணைர் கைதிகளாக அடைத்து வைத்தனர். இதையடுத்து அவர்களை மீட்க சௌதி கமாண்டோ படையினர் ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 இந்தியர்கள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இருந்து வெங்கடமணி பாஸ்கர் (44) என்ற இந்தியர் உட்பட 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பாஸ்கர் துபாயில் வசிக்கும் கம்ப்யூட்டர் நிறுவன மேலாளர் ஆவார். தொழில் நிமித்தமாக அடிக்கடி இவர் சௌதி அரேபியா செல்வது வழக்கம். இந்த முறை அவர் செல்லும்போது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத திகில் அனுபவத்துக்கு உள்ளானார்.
ஒயாசிஸ் ஹோட்டலில் தங்கியிருந்தார் பாஸ்கர். ஹோட்டலின் சேவை பிரிவுக்கு தொலைபேசி மூலம் அவர் தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம், அறையிலேயே தங்கியிருங்கள். அறைக் கதவை இரட்டைத் தாழ்ப்பாள் போட்டு மூடிக் கொள்ளுங்கள். யார் வந்து கதவைத் தட்டினாலும் கதவைத் திறக்க வேண்டாம் என்று வரவேற்பாளர் கூறியுள்ளார்.
இதனையடுத்து பாஸ்கர் அறைக் கதவை சாத்திக் கொண்டார். சிறிது நேரத்தில் துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தமும், மரண ஓலமும் அவருக்குக் கேட்கத் தொடங்கியது. இதனையடுத்து நடந்தது குறித்து அவர் கூறியதாவது:
கொஞ்ச நேரம் கழித்து என்னுடைய அறைக் கதவு தட்டப்பட்டது. கதவில் உள்ள துளை வழியாக வெளியே பார்த்தேன். ஓட்டல் சிப்பந்தியின் தலையின் இரண்டு பக்கமும் இரண்டு துப்பாக்கிகள் தெரிந்தன. நான் கதவைத் திறக்கவில்லை.
வெடிகுண்டுகள் தரையில் எறியப்படும் சத்தமும், அதைத் தொடர்ந்து வெடிக்கும் சத்தமும் எனக்குக் கேட்டது. ஹோட்டலுக்கு வெளியே போலீஸாருடன் இருந்த எனது சக ஊழியரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டேன். ஜன்னல் கதவு வழியாகக் குதித்துவிடட்டுமா என்று கேட்டேன்.
கால்கள் உடைந்து போனாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் உயிரையாவது காப்பாற்றிக் கொள்ளலாமே என்று தோன்றியது. ஆனால் தொடர்ந்த அறையிலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன்.
பின்னர் குளியறைக்குள் நுழைந்து, கண்ணாடிகள் அனைத்தையும் துண்டு, போர்வை கொண்டு மூடினேன். அப்படியே உள்ளேயே அமர்ந்து கொண்டேன். இறுதியில் கமாண்டோ படையினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து என்னை மீட்டனர் என்றார்.
ஹெலிகாப்டர் மூலம் ஹோட்டலின் மேல் தளத்தில் குதித்த கமாண்டோக்கள் திடீரென உள்ளே புகுந்து 60 பிணைக் கைதிகளை மீட்டனர்.
அல்கொய்தாவைச் சேர்ந்த பாகிஸ்தானியர் உள்பட 7 தீவிரவாதிகளை படையினர் கைது செய்தனர்.
இந்தத் தாக்குதலில் 8 இந்தியர்கள், 3 பிலிப்பினோக்கள், 3 அரேபியர்கள், 2 இலங்கை நாட்டவர்கள், ஒரு அமெரிக்கர், ஒரு இத்தாலியர், ஒரு ஆங்கிலேயர், ஒரு ஸ்வீடன் நாட்டவர், ஒரு தென் ஆப்பிரிக்கா நாட்டவர், ஒரு எகிப்து சிறுவன் (10) ஆகியோர் கொல்லப்பட்டனர்.
(thatstamil)
|
|
|
|