![]() |
|
படித்ததில் பிடித்த கவிதை - மு.மயூரன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: படித்ததில் பிடித்த கவிதை - மு.மயூரன் (/showthread.php?tid=7091) |
படித்ததில் பிடித்த கவ - Paranee - 06-01-2004 படித்ததில் பிடித்த கவிதை 5.28.2004 நீ வேணும் - கவிதை சத்தம் போட்டுக் காதல் கேட்டு பதிலை நீயும் பெற வேணும் யுத்தம் போகும் வீரர் போல் நீ நிமிர்ந்து நின்றே பேசோணும் கண்ணைப் பார்த்து கதைத்தவாறே எந்தன் எல்லாம் அள்ளோணும் கண்ணீர், கோபம், புன்னகை என்று உந்தன் எதையும் சொல்லோணும் ஓடும் ரயில் போய்ச் சேரும் வரையில் ஆன்மீகத்தை அலசோணும் சூடாய் எங்கள் வீட்டுக்குள்ளே அரசியல் எல்லாம் உரசோணும் கடலின் தரையில் பாலியல் கொஞ்சம் பயமில்லாமல் பேசோணும் மடியின் மேலே தலையை வைத்து கவிதை சொல்லக் கேட்கோணும் கொட்டும்மழையில் ஒட்டிக்கொண்டே ஆணாய்ப்பெண்ணாய் மாறோணும் தொட்டுப்பார்த்தும் உற்றுப்பார்த்தும் ஹோமோன் எல்லாம் பூக்கோணும் ஏதுமெனக்கு கண்ணீர் வந்தால் தோளில் என்னைத் தாங்கோணும் மாதவிலக்கின் சோர்வில் எந்தன் மார்பின் மேலே தூங்கோணும் என்னைப்போலே நீயும் கூந்தல் வசதிப்படிதான் வளர்க்கோணும் உன்னைப்போலே தாயாய் மாற என்னைக் கொஞ்சம் பழக்கோணும் மெல்லிய தோலின் கொழுப்பினடியில் வைரத்தசையை வளர்க்கோணும் தொல்பொருள்காலத் தொல்லைகள் வந்தால் து}ரத் துரத்தியடிக்கோணும் மற்றவரோடும் பழகிப்பார்த்து காதலன் என்னைத் தெரியோணும் மற்றவன் இன்னும் பொருத்தமென்றால் கலந்துபேசிப் பிரியோணும் அடிமைக்காதல் வேண்டாம் நாங்கள் மனிதக்காதல் செய்யோணும் வெடிபட்டாலும் பரவாயில்லை விடுதலையோடே சாகோணும் விலங்கு பூட்டும் சலங்கையெல்லாம் குப்பைக்குள்ளே வீசோணும் இலங்கை நாட்டின் தமிழைப்போலே வெப்பத்தழலாய் நீ வேணும் வெட்டிக் கடவுள்,கற்பு,பெண்மை எல்லாப் பொய்யும் எரிக்கோணும் கட்டுத்தளைகள் அறுத்து வெறுத்து விட்டுத் தொலைவாய்ப் பறக்கோணும் . மு.மயூரன் 22-2-2002 |