![]() |
|
ஊடக நண்பரெல்லாம் ஒதுங்கியிருங்கள். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஊடக நண்பரெல்லாம் ஒதுங்கியிருங்கள். (/showthread.php?tid=7086) |
ஊடக நண்பரெல்லாம் ஒதுங - shanthy - 06-03-2004 ஊடக நண்பரெல்லாம் ஒதுங்கியிருங்கள். ஊடகவாயிலெல்லாம் உங்கள் பெயர் இரங்கல்கள்....ஒன்று கூடல்கள்.... சோக இசைகள்....துயர்பகிரும் குரல்கள்..... எல்லா வீட்டிலும் இழவு விழுந்த துயர்..... எப்படி நடந்தது.....? விரியும் விழிகளுக்குள் தெரியும் சோகத்தை அந்த விழிகள் மட்டுமே அறியும்.... ஊடகத்துறைபுகும் தமிழர் ஒவ்வொருவருக்குமாய் விடப்பட்ட சாவு எச்சரிக்கையாய்.... உங்கள் சாவு...எங்களுக்கான எச்சரிக்கைக் கொலையிது.... உணர்வாய்ப் பேசி....உரக்கக் குரல் உயர்த்தி.... எழுவாய் மீண்டுமென எழுத மனசில்லை.... ஒன்றரை மணிநேரம் யாருமே அருகின்றி அநாதைப் பிணமாய் நீர் கிடந்த நிழற்படம் தான் விழியெல்லாம் நிறைகிறது..... என்ன கொடுமையிது....? உண்மை சொல்லும் குரல்களுக்கு இதுதான் முடிவாமோ....? கூட இருந்தவரே கொடுவிசமாய் மாறியெங்கள் ஒளியின் தணல் அணைப்போம் என்றவர் கனவுத்திரை கிழிய உண்மை சொன்ன ஊடகத்துறை சார்ந்த உணர்வாளர் யாவருடன் நீங்களுமாய்.... மட்டுநகர் உண்மையுடன் மண்ணின் நியாயங்கள் உலகின் திசையெங்கும் உரைத்த பெருமகனே உங்களின் சாவு எங்கள் எல்லோரின் குரல்களுக்கும் எச்சரிக்கைதானின்று..... எப்படி நடந்தது....? உங்கள் நண்பரெல்லாம் ஏங்கித் தவிக்கின்றார் உலகத் தமிழரெல்லாம் உயிர்வலியில் துடிக்கின்றார் உங்கள் குரல் மீளக்கேட்டு எங்கள் மனசெங்கும் துயரின் பாடல்...... இன்னும் யார் யாரோ.... அவர்கள் குறிப்பேட்டில்.....???? 'ஊடக நண்பரெல்லாம் ஒதுங்கியிருங்கள்" இன்னும் உம்போன்றோரை இழந்திட மனிசில்லை.... வேறெப்படிச் சொல்லி விதியை நோக....? எங்கள் விதியிதுவாய் எண்ணி நொந்தபடி.... இக்கவி உமக்குச் சமர்ப்பணமாய்.... 31.05.04. - kuruvikal - 06-03-2004 காலமறிந்து தந்த அருங்கவிக்கு எம் பாராட்டுக்கள்....! - shanmuhi - 06-03-2004 சமர்ப்பணமாய்.... பதித்த கவி அருமை.... - Eelavan - 06-03-2004 சமர்ப்பணமாய் எழுதிய கவிதை என்பதிலும் பார்க்க பேச்சுச் சுதந்திரம்,ஊடகச் சுதந்திரம் என்று பேச்சளவில் ஊளையிடுவோருக்கு கொடுக்கப்பட்ட பதிலடி என்று கொள்ளலாம் |