Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 213 online users.
» 0 Member(s) | 210 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,298
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,627
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,052
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  அன்பால் அணைக்க ஒரு அன்புச்சோலை...
Posted by: kuruvikal - 06-06-2004, 02:28 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (2)

<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/anpucholai_2.jpg' border='0' alt='user posted image'>
(tamilnet)

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
தங்கள் பிள்ளைகளை இழந்து தனிமையில் வாழும் முதியோருக்கு உதவும் வகையில் அன்புச்சோலை எனும் அன்பு இல்லத்தை புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரின் பாரியார் சகிதம் சென்று திறந்துவைத்து முதியோருக்கு பரிசில்களையும் வழங்கினார்....!

முதுமையிலும் வாழ்வு உண்டு...அது வீழும் பருவமல்ல....என்பதை மனத்தில் உறுதியாகக் கொண்டு அனைத்து முதியோரும் செயற்படுதல் வருங்காலத்திற்கு மிகவும் அவசியம்....! அதை ஈழத்தில் வலுவாகக் கட்டியெழுப்ப அன்புச்சோலை கைகொடுக்கட்டும்...!

உலகில் மனிதவலுத் தேவையைப் பூர்த்தி செய்ய முதியோரின் பக்கங்களிப்பு எதிர்காலத்தில் மிகமுக்கிய பங்களிப்பு செய்ய வேண்டி வரும் என்பது இன்று மேற்குலகிலேயே கருத்தில் எடுக்கப்பட்டு விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன...! காரணம் இன்னும் சில தசாப்தங்களின் பின் முதியோரின் எண்ணிக்கை இளையோரின் எண்ணிகையைவிட பல மடங்கு அதிகரிக்கும் என்று ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டுள்ளதால்...!

Print this item

  ஐரோப்பிய கிண்ணம் 2004
Posted by: ganesh - 06-05-2004, 11:41 PM - Forum: விளையாட்டு - Replies (77)

2004

Print this item

  ஞாபகம் வருதோ?
Posted by: vasisutha - 06-05-2004, 09:17 PM - Forum: புலம் - Replies (29)

ஞாபகம் வருதோ?

1)பலாமரம்
2)மாமரம்
3)வாழைமரம்

<img src='http://www.yarl.com/forum/files/palamaram.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://www.yarl.com/forum/files/pic_33.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://www.yarl.com/forum/files/vazhai.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  இத்தலைப்பு மாற்றப்பட்டுள்ளது
Posted by: ganesh - 06-05-2004, 08:27 PM - Forum: புலம் - No Replies

இத்தலைப்பு மாற்றப்பட்டுள்ளது

Print this item

  D DAY
Posted by: Mathan - 06-05-2004, 05:52 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (7)

<span style='font-size:30pt;line-height:100%'>D DAY என்றால் என்ன?</span>

Print this item

  மலரினும் மெல்லியது காதல்
Posted by: Mathan - 06-05-2004, 04:43 AM - Forum: தமிழும் நயமும் - Replies (4)

மலரினும் மெல்லியது காதல்

காமம் தவறல்ல. பால் கவர்ச்சி என்பது இயற்கையின் செயல் - அற்புதச் செயல். அதன் சக்திதான் எவ்வளவு! 'காதல் முட்டாளை புத்திசாலியாக்குகிறது, புத்திசாலியை முட்டாளாக்குகிறது' என்றார் ஓர் அறிஞர். தினத்தந்தியில் சில கார்ட்டூன்களுக்குக் கீழே எழுதுவார்கள் "இதற்கு வசனம் தேவையில்லை" என்று. இதற்கும் அப்படித்தான். உங்கள் அனுபவமே போதும் புரிந்துகொள்ள.

மலரினும் மெல்லிது காமம், சிலர் அதன் செவ்வி தலைப்படு வார்

(குறள்: 1289; புணர்ச்சிவிதும்பல்)

என்றான் வள்ளுவன். அது மல்யுத்தமல்ல. கஜுராஹோ நிலைகளை எல்லாம் முயற்சி செய்வதல்ல. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் தன்னைப் பார்த்து மயங்குவதாகக் கற்பித்துக் கொள்ளுவதல்ல. எதெல்லாம் இல்லை என்று சொல்லலாமே அல்லாது, இதுதான் என்று சொல்வது மிகக் கடினம். அதனால்தான் அது 'மலரினும் மெல்லிது'. அதனால்தான் அதன் 'செவ்வி'யை 'சிலர்'தான் அறிவார்கள். எல்லோருக்கும் தெரிந்துவிடாது, வசப்பட்டுவிடாது.

செவ்வி என்றால் என்ன? அழகு, காலம், பருவம், தகுதி, ஏற்ற சமயம், காட்சி, புதுமை, வாசனை என்று இத்தனை பொருள்கள் உள்ளன அந்த செவ்வி என்ற வார்த்தைக்கு. சற்றே யோசித்துப் பார்த்தால் காதலுக்கு எல்லாமே பொருந்தும்! இதில் ஏதாவது சரிப்படாவிட்டாலும், அவ்விருவரிடையே நிகழ்வது விலங்குப் புணர்ச்சியாகவும், விலைப் புணர்ச்சியாகவும், வன்புணர்ச்சியாகவும், பொருந்தாப் புணர்ச்சியாகவும் முடிந்துவிடுமே அன்றி இருதரப்பிலும் அனுபவித்து, ஒவ்வொரு மயிர்க்காலிலும் உணர்ந்து, இருவரும் மற்றவரின் முழுத் துய்ப்புக்கு முயன்று, ஈடுகொடுத்து, மற்றவருக்கு ஆட்பட்டு, ஆட்படுத்திய 'செவ்வி' கொண்ட இன்ப நுகர்வாக இருக்காது.

செவ்வி என்றால் அழகு. காமத்தின் செவ்வியென்பது காமம் கொண்டவரின் அழகின்பாற்பட்டது. எவ்வளவுதான் மறுத்தாலும், உடல் காமத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அப்படியானால் எல்லாப் பெண்களும் ஐஸ்வரியா ராயாகவும் எல்லா ஆண்களும் மாதவனாகவும் இருக்கவேண்டுமா? அதுதான் இல்லை. ஒருவர் மற்றவரிடம் தன்னைக் கவரும் அம்சங்கள் இருப்பதைக் காணவேண்டும். மகாபாரதத்தில் 'யட்சப் பிரச்னம்' கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு பொய்கைக்குச் சென்று குடிநீர் கொண்டு வர பஞ்சபாண்டவர்கள் ஒவ்வொருவராகப்
போகின்றனர். தருமரைத் தவிர மற்ற நால்வரும் போய், ஒருவரும் திரும்பவில்லை. இறுதியாக தருமர் போகிறார். ஒரு யட்சன் அந்தப் பொய்கைக்குக் காவல் இருக்கிறான். தண்ணீர் எடுக்க முயலும் தருமரிடம் அவன் சொல்கிறான்:

"என் கேள்விகளுக்குச் சரியான பதில் சொன்னால் உன் சகோதரர்களை உயிர்ப்பிக்கிறேன். இல்லாவிட்டால் அவர்களைப் போல நீயும் உயிர்விட வேண்டியதுதான்" என்கிறான். தருமரும் "சரி, கேள்" என்கிறார். யட்சன் கேட்ட கேள்விகளுள் ஒன்று "உலகிலேயே மிக அழகானவள் யார்?" என்பது. அதற்கு
தருமனின் விடை "காதலனின் கண்களில் காதலி" என்பது. மெய்தான், எத்தனை உலக அழகிகள் இருந்தால் என்ன, தன் காதலியின் (மணமானவர்கள் மனைவி என்று படிக்கவும்) அழகுக்கு முன்னே அவர்கள் எம்மாத்திரம்! இருவரும் மற்றவரின் ஏதோவொன்றை வியந்து, விரும்பி, மயங்கித் தன்வயமிழக்காவிட்டால் அக்காதல் ஆழமற்றதாகிவிடும். இன்பம் துய்த்த மறுகணமே கொல்லும் 'கறுப்பு விதவை' (Black widow) என்னும் சிலந்தியின் செயலைப் போன்ற, தன்னலத்தையே அடிப்படையாகக் கொண்டதாகிவிடும்.

தகுதி என்ற சொல் மிக முக்கியமானது. சாதாரணமாகப் பொருளாதாரம், ஜாதி, அந்தஸ்து, உத்தியோகம், திறமை, செல்வாக்கு என்றெல்லாம் பொருள் கொண்டுவிடுவர். இவை உயர உயர அவர்கள் இன்னொரு பாலாருக்கு அதிகக் கவர்ச்சியாகத் தோன்றுவர். உதாரணமாக ஒரு சிறந்த ஓவியனை, சிறந்த
நாட்டியத் தாரகையை விதப்பான (admiring) காமக்கண்ணோடு பார்ப்பவர் பலர் இருப்பார். ஆனால் அத்தகைய காமம் நீடிப்பதில்லை. இத்தகைய தகுதிகளை உடையவர்களும் தம்மால் யாரையும் எளிதில் அடைய முடியும் என்று கணக்குப் போடுவர். இது சில இடங்களில் பலித்தாலும், பல இடங்களில் பொய்க்கும்.

எனவே தமிழ்ச் சான்றோர் கருத்துப்படி ஒரு பெண்ணைக் காமத்தோடு தீண்டத் தகுதி உடையவன் அவளை மணந்தவன் ஒருவனே. இந்த வரையறை ஆண்களுக்கும் பொருந்தும் என்று கொண்டுவந்தவன் மகாகவி பாரதி,

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அ·து பொதுவில் வைப்போம்

(பெண்கள் விடுதலைக் கும்மி)

என்று கூறியதன் மூலம். இப்போது பரவலாக ஒருவரை ஒருவர் அலுவலகத்திலும் இதர சூழ்நிலைகளிலும் தீண்டுதல் சகஜமாகிவிட்டது. இதைத் தவறு என்று சொல்லும் கட்டுப்பெட்டி அல்ல நான். ஆனால் காமத்தின் செவ்வி துய்க்கக் கணவன் - மனைவி உறவு என்னும் தகுதி இல்லையென்றால் அது இறுதியில் நன்மையில்
முடியாது. தகாத உறவுகளுக்கான பெரிய விலையை மனிதகுலம் செலுத்தத் தொடங்கிவிட்டது என்று சொல்வதோடு நின்று, மிச்சத்தை உங்கள் உய்த்துணர்வுக்கு விடுகிறேன்.

செவ்வி என்பதற்கு பருவம், காலம், ஏற்ற சமயம் என்ற பொருள்களும் உள்ளன. இவற்றைப் புரிந்துகொள்வது கடினமல்ல என்பதால் நான் இங்கு விவரிக்கவில்லை. காட்சி என்றும் ஒரு பொருள் உள்ளது. இதை வெறும் கண்ணால் பார்ப்பது என்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 'தரிசனம்' என்று கொள்ளவேண்டும். இந்தக்
காதல் தன்னுள்ளே தோற்றுவிக்கும் காட்சி என்ன, தன் வாழ்வை இது எப்படி அடியோடு புரட்டிப் போட்டுவிடும், அதன் உச்சத்தில் தான் முன்பு எப்போதும் உணராத உயரத்தைத் தொடுவோம் -- இவைதான் தரிசனம். இந்தக் கேள்விகளில் கிடைக்கும் விடை எதுவேனும் மனிதனை விலங்கு நிலைக்கு இறக்குவதானால் அவன் காமத்தின் செவ்வி தலைப்பட்ட சிலருள் இல்லை.

செவ்வி என்றால் புதுமை. அவசரமாக ஓடிப்போய் ஒவ்வொரு முறையும் புதிதாய் ஒவ்வொருவரோடு உடலுறவு கொள்வது (one night stand) என்பதாக எண்ணிவிட வேண்டாம். நாம் யாரைக் காதலிக்கிறோமோ அவரே ஒவ்வொரு நாளும் புதியவராக, புதுப்புதுச்சுவை தருகிறவராக இருக்கிறாரா? இது அந்த ஆணிடமோ, பெண்ணிடமோ இருக்கும் உள்ளார்ந்த குணமாக அல்லாது, நமது அன்பு மிகுதியாலே அவரிடம் 'காணும்' புதுமையாகக் கூட இருக்கலாம்.

'செட்னா' என்று புதுக்கோளைக் கண்டறிந்திருக்கின்றனர். பத்தாவது கோள் என்று சொல்கின்றனர். சரி, இவர்கள் கண்டுபிடிக்கும் வரை அந்தக் கோள் இல்லாமலா போயிருந்தது? இல்லையே! ஆனால் தெரிந்துகொண்டவுடன் 'அட, இவ்வளவு நாளா அது இருந்திருக்குது, நமக்குத் தெரியாமல் போயிடுச்சே' என்று தோன்றுவதில்லையா! அதுபோலத்தான் காதலியின் முயக்கமும். ஒவ்வொருமுறையும் அவளுடைய புதிய பரிமாணத்தை, சுவையைக் கண்டதும் நாம் நம்முடைய அறியாமையைத் தான் வைதுகொள்ள வேண்டியதாயிருக்கிறது. அதைத்தான் வள்ளுவர் கூறினார்:

அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதொறும் சேயிழை மாட்டு

(குறள்: 110; புணர்ச்சி மகிழ்தல்)

[ஒன்றைப் புதிதாகக் கற்கின்ற ஒவ்வொரு முறையும் நம்முடைய அறிவுக்குறைவு வெளிப்படுவதுபோல, அழகிய நகைகளை அணிந்த இவளிடம் ஒவ்வொரு கூடலிலும் புதிதாய் ஒன்றைக் காண்பதும் நிகழ்கிறது].

ஆக, காமசுகம் என்பதில் செவ்வி என்பதற்கு இணையான அழகு, காட்சி, புதுமை ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதையும், அது எப்படிச் சிலருக்கே வாய்க்கும் என்பதையும் கொஞ்சம் நுணுகிப் பார்த்தோம்.

மீண்டும் ஆரம்பத்தில் பார்த்த குறள் சொன்னபடி 'மலரினும் மெல்லி'தாகிய காமத்தின் 'செவ்வி தலைப்படும்' சிலரில் நீங்களும் ஒருவரா? யோசித்து விடை கூறுங்கள். அவசரமில்லை

நன்றி - மதுரபாரதி / இ சங்கமம்

Print this item

  எயிட்ஸ்
Posted by: Mathan - 06-05-2004, 03:42 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

வளர்முக நாடுகளுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள எச்.ஐ.வி

ஆபிரிக்க, கரிபிய, பசிபிக் நாடுகளில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் அபிவிருத்திக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று ஐரோப்பிய ஆர்வலர் குழுக்கள் எச்சரிக்கை செய்துள்ளன.

15 வயதுக்குட்பட்ட 3.4 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் எய்ட்ஸின் விளைவாக அவர்களது தாயை அல்லது தந்தையை அல்லது இருவரையுமே இழந்துள்ளனர் என்று கொன்கோர்ட் எனப்படும் அரசாங்க சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 2,000 க்கும் அதிகமான ஐரோப்பிய அபிவிருத்தி நிறுவனங்களை உள்ளடக்கிய தாய் அமைப்பாக கொன்கோர்ட் விளங்குகிறது.

இந்த அநாதைப் பிள்ளைகளில் 80 சதவீதமானோர் உப சாரா ஆபிரிக்க பிராந்திய நாடுகளில் வசிக்கிறார்கள் என்று மனிதநேய அமைப்பான கொன்கோர்ட் கூறுகிறது. ஆபிரிக்க, கரிபிய, பசுபிக் பிராந்திய நாடுகள் எச்.ஐ.வி.எய்ட்சினால் ஏற்படக்கூடிய மிக மோசமான பொருளாதார அபிவிருத்தி விளைவுகளை தவிர்க்க வேண்டுமானால் அநாதை மற்றும் பாதிப்படையக்கூடிய சிறுவர்களின் எதிர்காலத்திற்காக தாமதமின்றி முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகும் என்று கொன்கோர்ட் வலியுறுத்தியுள்ளது.

உலகளாவிய அபிவிருத்தியை அச்சுறுத்தும் உலகளாவிய பிரச்சினை இதுவாகும் என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ள கொன்கோர்ட் இந்தக் கொள்ளை நோய் தோன்றியதிலிருந்து உலகெங்கிலும் 60 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி. கிருமித் தொற்றுக்கு ஆளானார்கள் என்றும் 20 மில்லியன் பேர் இதற்குப் பலியானார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.தொற்றுக்கு உள்ளானவர்களில் 95 சதவீதமானோர் வளர்முக நாடுகளை சேர்ந்தவர்களாவர்.

ஆபிரிக்க, கரிபிய, பசிபிக் பிராந்தியஐரோப்பிய ஒன்றிய அமைச்சரவை அண்மையில் பொட்சுவானா நகரான கபெரேனில் நடத்திய 29 ஆவது கூட்டத் தொடரில் சிவில் சமூக குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கையில் எச்.ஐ.வி./ எய்ட்ஸ் கொள்ளை நோயை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. சிறுவர்களே இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

வருடம் ஒரு தடவை நடத்தப்படும் ஆபிரிக்க, கரிபிய, பசிபிக் பிராந்திய ஐரோப்பிய ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளினதும் ஆபிரிக்க, கரிபிய, பசிபிக் பிராந்தியத்திலுள்ள 77 நாடுகளினதும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பல நாடுகளில் எச்.ஐ.வி. தொற்றுக்களின் அதிகரிப்பு விகிதம் குறைந்துவர ஆரம்பிக்கும் இவ்வேளையில் அநாதைப் பிள்ளைகளிலும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சிறுவர்களிலும் இதன் தாக்கம் இன்னமும் காணப்படுவது மிக மோசமான நிலைமையாகும் என்று கொன்கோர்ட் அறிக்கையின் இணை ஆசிரியர் குகி லார்யா தெரிவித்தார்.

பல நாடுகளில் அநாதைப் பிள்ளைகள் மற்றும் இந்நோயினால் பாதிப்படையக் கூடிய சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளின் தாற்பரியம் உணரப்படுவதில்லை என்று கொன்கோர்ட் கூறுகிறது. சிறுவர்களுக்கு அரசியல் செல்வாக்கும் நல்ல குரல்வளமும் இல்லாதிருப்பது அவர்களது நலன்களை பாதுகாப்பதற்கு பெரும் தடையாக இருக்கிறது என்றும் கொன்கோர்ட் குறிப்பிட்டுள்ளது.

எச்.ஐ.வி/எய்ட்ஸ் காரணமாக அநாதைப் பிள்ளைகளினதும் பாதிப்படையக் கூடிய சிறுவர்களினதும் தொகை அதிகரித்துவரும் அதேவேளையில் இப்பிரச்சினையினால் பாரம்பரிய உள்ளூர் பராமரிப்பு சேவைகளும் அருகிவருகின்றன என்றும் கொன்கோர்ட் கூறுகிறது.

பாதுகாப்பு வலையமைப்புகளின் பலவீனம் காரணமாக மேலும் மேலும் சிறுவர்கள் வீதிச் சிறுவர்களாக அல்லது சிறு பராய விபசாரிகளாக அல்லது சிறு பராய போராளிகளாக அல்லது வேறு வழிகளில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவோராக மாறிவிடும் அபாயம் எதிர்நோக்கப்படுகிறது என்று பிளான் நெதர்லன்ட்ஸ் அமைப்பைச் சேர்ந்த மேறியோஸ் வன்டர்சான்ட் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஆபிரிக்க, கரிபிய, பசிபிக் பிராந்திய நாடுகளும் எச்.ஐ.வி/ எய்ட்ஸ் பிரச்சினைக்கும் இதனால் ஏற்படக்கூடிய வறுமை நிலைமைக்கும் தீர்வு காணக்கூடிய பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டளவில் உலக வறுமையை அரைவாசியாக குறைப்பதுடன் கல்வி, சுகாதார துறைகளை விருத்தி செய்வதென 2000 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மிலேனியம் அபிவிருத்திக் குறிக்கோள்களில் இந்நடவடிக்கைகளும் அடங்குகின்றன. ஆனால் ஆபிரிக்க, கரிபிய, பசிபிக் பிராந்திய நாடுகளில் வறுமையினால் ஏற்படும் நோய்கள் மற்றும் மகப்பேற்று சுகாதாரம் ஆகியன தொடர்பாக பெப்ரவரி மாதத்தில் நடை பெற்ற ஐரோப்பிய ஒன்றிய, ஆபிரிக்க கரிபிய, பசிபிக் பிராந்திய கூட்டுக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மூன்று மிலேனியம் அபிவிருத்திக் குறிக்கோள்களான சிசு மரண விகிதத்தை குறைத்தல், மகப்பேற்று சுகாதாரத்தை விருத்தி செய்தல், எச்.ஐ.வி/எய்ட்ஸை கட்டுப்படுத்தி அது பரவுவதை தடுப்பது ஆகியனவே குறிப்பிட்ட காலக்கெடுவான 2015 க்குள் நிறைவேற்றப்பட முடியாதவையாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையின்படி, சுகாதாரம் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் ஆகியன சம்பந்தப்பட்ட துறைகளுக்கான உதவித் தொகை ஒதுக்கீடுகள் தற்போதையதைப் போன்றே தொடருமானால் சுகாதாரம் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் ஆகியன தொடர்பான குறிக்கோள்களை நிறைவேற்ற முடியாதென்று லார்யா கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட சகல பகுப்பாய்வுகளிலிருந்தும் இது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார்.

கொன்கோர்ட், பிளான் யுரொப் அமைப்புக்கள் வறுமை காரணமாக ஏற்படும் நோய்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும்போது பெண்கள் சிறுவர்கள் முதியோர் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஆபிரிக்க, கரிபிய, பசிபிக் பிராந்திய நாடுகளிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளன. பாலியல் மகப்பேற்று சுகாதாரம் சிறுவர்களுக்கான தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை அரசாங்கங்கள் அவற்றின் அபிவிருத்திக் கொள்கைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இவ்வமைப்புக்கள் கேட்டுள்ளன.

எச்.ஐ.வி/எய்ட்ஸ் கொள்ளை நோயை ஒழிக்கவும் அதற்கான தடுப்பு நடவடிக்கையை அமுல் செய்வதற்கும் பங்காளி நாடுகள் நிதியளிக்க வேண்டுமெனக் கோரும் என்ஜிஓக்கள் வளர்ந்தவர்களும் இளைஞர் யுவதிகளும் திருப்திகரமானதும் ஆரோக்கியமானதுமான பாலுறவு வாழ்க்கையை அனுபவிப்பதற்கான வாழ்க்கைத்திறனை விருத்திசெய்ய அவசியமான கல்வியையும் சேவைகளையும் விநியோகங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளன.

முக்கியமாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றுள்ள சிறுவர்களுக்கு சுகாதார பராமரிப்பையும் மட்ட ஆதரவையும் வழங்குவதற்கான பிரமாணங்களை ஐரோப்பிய ஒன்றிய வரவுசெலவுத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென கொன்கோர்ட் கேட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய ஆபிரிக்க கரிபிய, பசிபிக் சபை எச்.ஐ.வி/எய்ட்ஸ் பிரச்சினைக்கு பயன்தரும் வகையில் தீர்வுகாண உறுதிவாய்ந்ததும் பொறுப்பானதுமான தலைமைத்துவத்தை வழங்க வேண்டுமென்றும் கொன்கோர்ட் கூறுகிறது.

ஐ.பீ.எஸ்/வீரகேசரி

Print this item

  மெதுவாக உன்னைத் தொட்டு
Posted by: Mathan - 06-04-2004, 10:05 PM - Forum: குறும்படங்கள் - No Replies

மெதுவாக உன்னைத் தொட்டு..


கடந்த வாரம் கனடாவில் வேலவன் சினிமாவில் ரவி அச்சுதனின் மற்றுமொரு வெளியீடான 'மெதுவாக உன்னைத் தொட்டு.' எனும் முழுநீளத் திரைப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.. 1995 களிலிருந்து ரவி அச்சுதன் தனது கலைப்படைப்புகளாகிய நவராகங்கள், நாடகங்கள், திரைப்படங்கள், மூலம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் மத்தியில் (கனடாவில்) தனக்கென்றொரு பெயரைத் தக்க வைத்துக்கொண்டிருக்கின்றார்..

இதுவரை காலமும் கனடாவில் மட்டும் தனது படைப்புக்களை ஒளிப்பதிவு செய்து வந்த ரவி அச்சுதன் முதல் முறையாக 'மெதுவாக உன்னைத் தொட்டு..' மூலம் இலங்கை, இந்தியா, கனடா என்று மூன்று நாடுகளையும் இணைத்து மூன்று நாடுகளிலும் வாழும் கலைஞர்களை நடிக்க வைத்து ஒரு புதுமையைச் செய்துள்ளமை பாராட்டப் படவேண்டியது..

அண்மையில் வெளியான 'கனவுகள்' எனும் இவரின் இன்னுமொரு திரைப்படத்தின் மூலம் இந்தியர்களின் வழமையான மசால திரைப்டங்களை அப்படியே மற்றுமொரு பிரதியாக்கித் தந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர் மத்தியில், புலம்பெயர்ந்த மக்களின் எதிர்பார்ப்புக்கள், போராட்டங்களை படமாக்கித் தந்து பலரின் பராட்டைப் பெற்றவர் ரவி அச்சுதன். 'மெதுவாக உன்னைத் தொட்டு..' திரைப்படத்தில் ரவி அச்சுதனின் பங்களிப்பு நடிப்பு, கமெரா, எடிட்டிங், இயக்கம் எனும் போது அவற்றை மிகவும் கவனமாகவும் கச்சிதமாகவும் செய்துள்ளார் என்றே கூறவேண்டும்..

'மெதுவாக உன்னைத் தொட்டு..' திரைப்படத்தைப் பார்த்த போது பல இந்தியத் தமிழ் திரைப்படங்களைப் பார்த்த ஒரு உணர்வு எனக்குள் எழுந்தது.. இந்தியத் தமிழ் திரைப்படம் போல் ஒரு திரைப்படத்தைத் தருவது ரவி அச்சுதனின் கனவு எனின் அதில் அவரிற்கு இரட்டிப்பு வெற்றி கிடைத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.. காரணம் அவர் ஒரு இந்தியத் தமிழ் திரைப்படத்தின் திரைக்கதையை எமக்குத் தராமல் பல திரைப்படங்களின் தொகுப்பை எமக்காகத் தந்துள்ளார்..

திரைக்கதை இதுதான்.. ராகேஷ் எனும் இளைஞனை அவன் எழுதிய ஒரு கவிதைக்காக சந்தேகத்தின் பேரில் இலங்கை இராணுவம் பிடித்து துன்புறுத்துகின்றது. தமது மகன் எங்கிருந்தாலும் உயிருடன் இருக்க வேண்டும் என்று விரும்பிய ராகேஷின் பெற்றோர் அவனைத் தமது சொத்துக்களை விற்று கனடாவிற்று அனுப்ப முடிவெடுக்கின்றார்கள்.. பெற்றோரின் சொல்லைத் தட்ட முடியாமல் கனடா செல்லச் சம்மதிக்கின்றான் ராகேஷ். அவனது பயணம் ஆரம்பமாகிறது.. பயணத்தின் முதல் கட்டமாக இந்தியா வருகின்றான் ராகேஷ். இந்தியாவின் நிலையைக் காட்டுவதற்காகவோ இல்லாவிட்டால் திரைக்கதைக்கு முக்கியம் என்று எண்ணியோ என்னவோ ராகேஷ் வந்து இறங்கியவுடன் தனது பொருட்களை எல்லாம் ஒரு ஓட்டோகாறனிடம் பறி கொடுத்து விடுகின்றான். இந்தியாவில் சீர்காழியில் தங்கியிருக்கும் ராகேஷ் இந்தியப் பெண்மணியான சுஜி மேல் காதல் கொள்வதும்.. பின்னர் கனடா வந்து தான் தங்கியிருந்த உறவினரின் வீட்டுக்காறப் பெண் மாயாவிற்கு தன்மேல் காதல் என்று தெரியவந்த போது தான் இந்தியாவில் ஒரு பெண்ணைக் காதலிப்பதாக மாயாவின் காதலை அவன் ஏற்க மறுப்பதும்.. சுஜி தனது முறைமாப்பிள்ளையை மணம்முடித்து விட்டாள் என்ற பொய்யான தகவலை நம்பி மாயாவை அவளின் பெற்றோர் மேல் உள்ள நன்மதிப்பால் திருமணம் செய்யச் சம்மதிப்பதும்.. பின்னர் கனேடிய நாகரீகத்தில் மூழ்கிப்போய் இருக்கும் மாயாவின் குணத்தை எண்ணி குழம்புவதும்... இறுதியில் இந்தியக் காதலிக்குத் திருமணமாகவில்லை முறைமாப்பிள்ளை செய்த போக்கிரித்தனம் அது என்று தெரிந்து கொண்டு இந்தியா சென்று அவளிற்குத் தாலி கட்டுவதும்.. என்று 80களில் வெளியான பல இந்திய வியாபாரத் திரைப்படங்களைப் போல் சுபமாக முடிகின்றது.. 'மெதுவாக உன்னைத் தொட்டு'.

திரைக்கதையை மேலோட்டமாகப் பார்த்தால் சிலவேளைகளில் ஓ.கே சொல்லி விடலாம்.. ஆனால் ஒரு திரைப்படத்தில் திரைக்கதையை ரசிக்க வைப்பதும் வெறுக்க வைப்பதும் திரைக்கதை சொன்ன விதம் சம்பவங்கள் அமைக்கப்பட்ட விதம் என்றால் ரவி அச்சுதன் இரண்டாவது வகையை நன்றாகவே செய்துள்ளார்..

ஒரு இளைஞனிற்கு ஒரு பெண்மேல் காதல் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும்.. ஒரு பெண்ணின் தனித்தன்மை, ஆளுமை, திறமை என்று. ஆனால் 'மெதுவாக உன்னைத் தொட்டு நாயகனுக்கோ.. இடை, தொடை, மார்பு என்று பெண்ணின் அங்களைக் காட்டிக் காதலை வரவழைத்திருக்கின்றார்கள். இந்திய ஜனரஞ்சகத் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் தாம் போட்ட பணத்தை எப்படியாவது திருப்பி எடுத்து விடவேண்டும் என்ற நோக்கத்தோடு பெண்களைப் போதைப் பொருளாகவும் வெறும் பாலியல் பிண்டங்களாகவும் காட்டிவருவதை தவிர்க்க முடியாது என்று கூறுகின்றார்கள், ஆனால் ரவிஅச்சுதனிற்கு அந்தத் தேவை ஏன் என்று புரியவில்லை. அவரின் 'கனவு'களைப் பார்த்து சிறிது நம்பிக்கையை வரவழைத்துக் கொண்ட என்னை 'மெதுவாக உன்னைத் தொட்டு' மூலம் அதாள பாதாளத்திற்குள் தள்ளி விட்டார் ரவிஅச்சுதன். மிகவும் வேதனையாகவே உள்ளது..

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழருக்கு கதைக்கா பஞ்சம் எதற்காக புளித்துப்போன இந்தியச் சினிமாவை நாம் அப்படியே 'காப்பி' அடிக்க வேண்டும். 'காப்பி' அடிப்பதென்று முடிவெடுத்துவிட்டால் ஏன் வீணாக இந்தியா செல்கின்றீர்கள்.. அருகில் இருக்கும் ª?£லிவூட்டை காப்பி அடிக்கலாமே.. கொஞ்சம் புதுமையாகவாவது இருக்கும்.

'மெதுவாக உன்னைத் தொட்டு' திரைப்படத்தை முற்று முழுதாக நிராகதித்து விட முடியாது.. கலைஞர்களின் நடிப்பு, நகைச்சுவை, பாடல்கள,; காட்சி அமைப்பு என்று சில பிளஸ் பாயிண்டுகளும் உள்ளன. அண்மையில் சிங்களத்திரைப்படமான 'சின்ன தேவதை' திரைப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எமது மக்கள் வளர்வதற்கு காத தூரம் இருக்கின்றது என்பது மட்டும் புலனாகின்றது.

Thanx: சுமதி ரூபன் / திண்ணை

Print this item

  உதவி கோருகின்றது
Posted by: sethu - 06-04-2004, 12:32 PM - Forum: புலம் - Replies (1)

உங்கள் கரங்களும் இணையட்டும்.

துரோகத்தனம் கொன்றழித்த மூத்த ஊடகவியலாளர் , நாட்டுப்பற்றாளர் நடேசன் அவர்களது குடும்பத்திற்கு உலகத்தமிழரிடம் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உதவி கோருகின்றது. துணிந்தவொரு ஊடகவியலாளனின் உயிரைப்பறித்த கொடியவரின் பலியெடுப்பில் பலியெடுக்கப்பட்ட ஊடகவியலாளனை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு கைகொடுக்கும் வகையில் தங்களிடமிருந்து உதவி கோருகின்றோம்.உதவவிரும்பும் பற்றாளர்கள் கீழ்க்காணும் வங்கிக்கணக்கிலக்கங்களுக்கு தங்களது உதவிகளை அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

Bank Name:-Sethurupan Nadarajah

Gransdalen 23 D

1054 Oslo Norway


Account Nr:- 05391787672


Bank address: Postbanken, 0021 OSLO


Norway







மேலதிக தகவல்கள் தொடர்புகளுக்கு இலங்கையில் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பாளர் சிறீகஜன் தொலைபேசியிலக்கம் - 0777349655.

ஐரோப்பாவில் தொடர்புகளுக்கு - 004722302312 , 004741677366. மின்னஞ்சல் முகவரி -

Print this item

  தலைப்பும் கருத்தும்
Posted by: இளைஞன் - 06-04-2004, 12:04 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (12)

Mathivathanan Wrote:மருத்துவப்பிரிவிலை தலையங்கம் தேங்காயெண்ணெய் யாயிருந்தாலும் ஆசுப்பத்திரி.. வாட்டு.. டாக்குத்தர்மார்.. வருத்தம் பார்க்கிறது.. டாக்குத்தர் விடுப்பு.. டாக்குத்தர்மாரின் விருப்பு வெறுப்பு.. சிங்கள தமிழ் டாக்குதர்மாருடைய கவனிப்புகள்.. இதுகள்பற்றி எழுதவேண்டிவரும்.. அதுதான் எழுதியிருக்காக்கும்..
Idea Idea Idea

Eelavan Wrote:மன்னிக்கவும் இளைஞன் இதில் நானும் தலைப்புக்குச் சம்பந்தமில்லாது கருத்து எழுதியவன் என்ற முறையில் மன்னிப்புக் கேட்கிறேன்.

ஆனாலும் கருத்துத் திசை மாறும் வேளையிலேயே கத்தரித்திருந்தால் இவ்வளவு வளர்ந்திருக்காதல்லவா?

kuruvikal Wrote:இது தலைப்புடன் சம்பந்தப்படாத போதும் எச்சரிக்கை ஒன்று இங்கு வைக்கப்பட்டதால் அது தொடர்பில் எழுந்த எமது எண்ண அலைகளை இங்கு முன்வைக்கின்றோம்....!

-------------------------------

இதென்ன கருத்துக்களமா அல்லது தகவற் தளமா...???! யாழ் டொட் கொம் எனும் ஒரு தகவற் தளத்துள் அடங்கும் ஒரு கருத்துக்களம்...அதிலேயே ஒருவர் இப்படி எழுதாதே அப்படி எழுது என்கிறார் .... மற்றவர் இதற்குமேல் எழுதாதே என்கிறார்....???! :roll:

கருத்துக்களம் என்றால் எதுவிடயமாகவும் ஒரு வாதப்பிரதிவாதம் இருக்க வேண்டும் அதன் போது கருத்துக்கள் திசைமாறிச் செல்வது போல் இருந்தாலும் இலக்கை நோக்கி மீட்டுவர வேண்டியது கருத்தாளர்களின் கடமையே அன்றி...அதை எழுதாதே இதை எழுதாதே என்று எச்சரிப்பதானது கருத்தாடுபவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு கைங்கரியமாகத் தெரியவில்லை.....! அச்சுறுத்திப் பணிய வைப்பதாகவே தெரிகிறது....! அது சுதந்திரமாக கருத்தாடும் வகையில் கருத்தாளர்களை உள்ளிளுக்க உதவுமா....????! :roll: :?:

சரி... அது இருக்கட்டும்...இந்த மட்டுறுத்தினர்கள் (ஒரு சிலரைத் தவிர) தாங்கள் கருத்தாளர்கள் அல்ல ஏதோ ஒரு தனி வகை என்பது போல பாவனை செய்வதும் சக கருத்தாளர்களுடன் கைகோர்த்து நிற்காமல் தாம் ஒரு நிர்வாகக் கிறுக்கர்கள் போல் பாவனை செய்வதும் மற்றைய கருத்தாளர்கள் மீது குறைந்தது இக்களத்தின் கருத்தாளன் என்ற குறைந்தளவு மதிப்பீடு கூட இல்லாமல் நடப்பதும் ஒன்றும் சிறந்ததாகத் தெரியவில்லை....! Idea

கருத்துச் திசைமாறுகிறது என்று கண்டால் எச்சரிப்பேன் வெட்டுவேன் புடுங்குவேன் என்று நில்லாமல் பதவியை கொஞ்சம் அரக்கி வைத்துவிட்டு களத்தில் இறங்குங்கள்....உங்கள் திறமையைக் காண்பித்து தலைப்புடன் சம்பந்தப்பட்ட உங்கள் கருத்துக்களால் கருத்தினை திசைப்படுத்துங்கள்...அதுதான் கருத்துக்களத்திற்கும் சக கருத்தாளர்களுக்கும் செய்யும் பெறுமதிமிக்க செயலாக இருக்க முடியும்...அதைவிடுத்து திடீர் திடீர் என்று தோன்றி எச்சரிப்பதும் தணிக்கை செய்வதும் பின் மறைந்து போவதும் ஒன்றும் களக் கருத்தாளர்களை நெறிப்படுத்தும் கைங்கரியமாகத் தெரியவில்லை....! இதெப்படி இருக்கிறது தெரியுமா வகுப்பறை மொனிரரே வெளியில உலாவித் திரிந்து கொண்டு வகுப்புக்கு அடிக்கடி வந்து "டேய் ஒருத்தரும் வெளியில போகக் கூடாகது சரியா" என்பது போல இருக்கிறது....! :twisted:

களவிதிகள் எல்லாவற்றையும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் திணிக்க முயலாமல் கொஞ்சம் சில நெகிழ்வுத் தன்மையைக் காண்பிக்கக் கூடிய களவிதிகளில் கொஞ்சம் நெகிழ்வுப் போக்கை காண்பிப்பதே கருத்தாளர்கள் தம் கருத்தை சுதந்திரமாக முன்வைக்க உற்சாகளிக்க முடியும்....!

அதேபோல் களவிதியும் பக்கச் சார்பில்லாமல் எல்லோருக்கு எதிராகவும் தேவையான வேளையில் கருத்துக்கள் சிதைந்து சச்சரவுகள் தோன்றாமல் இருக்க பயனபடுத்தப்படுவது அவசியமே....அதனை நட்புடன் செய்யுங்கள் இராணுவம் போல் சர்வாதிகாரம் போல் செய்யாதீர்கள்....அது கருத்தாடுபவர்கள் மனச்சோர்வடையவே வழி செய்யும்....! இது ஆங்கிலக் களமல்ல....தமிழ் களம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்....எனவே குறிப்பிட்ட சில தமிழ் ஆர்வலர்களை மட்டுமே இங்கு கருத்தாட வைக்க முடியும் என்ற வரையறையையும் மனதிற் கொள்வது பயன்தரும்....! Idea

Print this item