06-04-2004, 12:04 PM
Mathivathanan Wrote:மருத்துவப்பிரிவிலை தலையங்கம் தேங்காயெண்ணெய் யாயிருந்தாலும் ஆசுப்பத்திரி.. வாட்டு.. டாக்குத்தர்மார்.. வருத்தம் பார்க்கிறது.. டாக்குத்தர் விடுப்பு.. டாக்குத்தர்மாரின் விருப்பு வெறுப்பு.. சிங்கள தமிழ் டாக்குதர்மாருடைய கவனிப்புகள்.. இதுகள்பற்றி எழுதவேண்டிவரும்.. அதுதான் எழுதியிருக்காக்கும்..
![]()
![]()
Eelavan Wrote:மன்னிக்கவும் இளைஞன் இதில் நானும் தலைப்புக்குச் சம்பந்தமில்லாது கருத்து எழுதியவன் என்ற முறையில் மன்னிப்புக் கேட்கிறேன்.
ஆனாலும் கருத்துத் திசை மாறும் வேளையிலேயே கத்தரித்திருந்தால் இவ்வளவு வளர்ந்திருக்காதல்லவா?
kuruvikal Wrote:இது தலைப்புடன் சம்பந்தப்படாத போதும் எச்சரிக்கை ஒன்று இங்கு வைக்கப்பட்டதால் அது தொடர்பில் எழுந்த எமது எண்ண அலைகளை இங்கு முன்வைக்கின்றோம்....!
-------------------------------
இதென்ன கருத்துக்களமா அல்லது தகவற் தளமா...???! யாழ் டொட் கொம் எனும் ஒரு தகவற் தளத்துள் அடங்கும் ஒரு கருத்துக்களம்...அதிலேயே ஒருவர் இப்படி எழுதாதே அப்படி எழுது என்கிறார் .... மற்றவர் இதற்குமேல் எழுதாதே என்கிறார்....???! :roll:
கருத்துக்களம் என்றால் எதுவிடயமாகவும் ஒரு வாதப்பிரதிவாதம் இருக்க வேண்டும் அதன் போது கருத்துக்கள் திசைமாறிச் செல்வது போல் இருந்தாலும் இலக்கை நோக்கி மீட்டுவர வேண்டியது கருத்தாளர்களின் கடமையே அன்றி...அதை எழுதாதே இதை எழுதாதே என்று எச்சரிப்பதானது கருத்தாடுபவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு கைங்கரியமாகத் தெரியவில்லை.....! அச்சுறுத்திப் பணிய வைப்பதாகவே தெரிகிறது....! அது சுதந்திரமாக கருத்தாடும் வகையில் கருத்தாளர்களை உள்ளிளுக்க உதவுமா....????! :roll: :?:
சரி... அது இருக்கட்டும்...இந்த மட்டுறுத்தினர்கள் (ஒரு சிலரைத் தவிர) தாங்கள் கருத்தாளர்கள் அல்ல ஏதோ ஒரு தனி வகை என்பது போல பாவனை செய்வதும் சக கருத்தாளர்களுடன் கைகோர்த்து நிற்காமல் தாம் ஒரு நிர்வாகக் கிறுக்கர்கள் போல் பாவனை செய்வதும் மற்றைய கருத்தாளர்கள் மீது குறைந்தது இக்களத்தின் கருத்தாளன் என்ற குறைந்தளவு மதிப்பீடு கூட இல்லாமல் நடப்பதும் ஒன்றும் சிறந்ததாகத் தெரியவில்லை....!![]()
கருத்துச் திசைமாறுகிறது என்று கண்டால் எச்சரிப்பேன் வெட்டுவேன் புடுங்குவேன் என்று நில்லாமல் பதவியை கொஞ்சம் அரக்கி வைத்துவிட்டு களத்தில் இறங்குங்கள்....உங்கள் திறமையைக் காண்பித்து தலைப்புடன் சம்பந்தப்பட்ட உங்கள் கருத்துக்களால் கருத்தினை திசைப்படுத்துங்கள்...அதுதான் கருத்துக்களத்திற்கும் சக கருத்தாளர்களுக்கும் செய்யும் பெறுமதிமிக்க செயலாக இருக்க முடியும்...அதைவிடுத்து திடீர் திடீர் என்று தோன்றி எச்சரிப்பதும் தணிக்கை செய்வதும் பின் மறைந்து போவதும் ஒன்றும் களக் கருத்தாளர்களை நெறிப்படுத்தும் கைங்கரியமாகத் தெரியவில்லை....! இதெப்படி இருக்கிறது தெரியுமா வகுப்பறை மொனிரரே வெளியில உலாவித் திரிந்து கொண்டு வகுப்புக்கு அடிக்கடி வந்து "டேய் ஒருத்தரும் வெளியில போகக் கூடாகது சரியா" என்பது போல இருக்கிறது....! :twisted:
களவிதிகள் எல்லாவற்றையும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் திணிக்க முயலாமல் கொஞ்சம் சில நெகிழ்வுத் தன்மையைக் காண்பிக்கக் கூடிய களவிதிகளில் கொஞ்சம் நெகிழ்வுப் போக்கை காண்பிப்பதே கருத்தாளர்கள் தம் கருத்தை சுதந்திரமாக முன்வைக்க உற்சாகளிக்க முடியும்....!
அதேபோல் களவிதியும் பக்கச் சார்பில்லாமல் எல்லோருக்கு எதிராகவும் தேவையான வேளையில் கருத்துக்கள் சிதைந்து சச்சரவுகள் தோன்றாமல் இருக்க பயனபடுத்தப்படுவது அவசியமே....அதனை நட்புடன் செய்யுங்கள் இராணுவம் போல் சர்வாதிகாரம் போல் செய்யாதீர்கள்....அது கருத்தாடுபவர்கள் மனச்சோர்வடையவே வழி செய்யும்....! இது ஆங்கிலக் களமல்ல....தமிழ் களம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்....எனவே குறிப்பிட்ட சில தமிழ் ஆர்வலர்களை மட்டுமே இங்கு கருத்தாட வைக்க முடியும் என்ற வரையறையையும் மனதிற் கொள்வது பயன்தரும்....!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உங்களிற்கு <b>தகுதியான</b> மட்டுறுத்துனர் கிடைக்கவேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். அதுவரை தகதியில்லாதவர்களை தகுதியுள்ளவர்களாக்கு முயற்சித்து உங்கள் திறமையைக் காட்டு ங் கோ.