Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 136 online users.
» 0 Member(s) | 134 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,298
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,629
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  திறன் வாய்ந்த வீடியோ மென்பொருள்கள் (இதன் S/N ம் உள்ளது)
Posted by: kavithan - 06-12-2004, 10:23 PM - Forum: வீடியோ தொழில்நுட்பம் - Replies (2)

வணக்கம் நண்பர்களே
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஒளிப்பதிவு என்று பார்த்தால் எனக்கு அவ்வளவு அனுபவம் அனுபவம் இல்லை. ஆனால் மென்பொருள் என்று பார்த்தால் சிறிதளவு அனுபவம் உண்டு. அந்தவகையில் நான் பொழுது போக்காக உபயோகிக்கும் சில மென்பொருள்களை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என்ற உங்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.இவ் மென் பொருள்கள் மைக்ரோமீடியா மென்பொருள் கம்பனியின் உடையது.இதனை http://www.macromedia.com என்ற தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இங்குள்ள அனைத்துமென் பொருள்களும் ஒரு மாதத்திற்கு இலவசம். அவற்றில் Mcromedia Flash MX 2004,Director MX 2004, என்பனவற்றில் வீடியோ Editing குகளைச் மேற்கொள்ளலாம். இதில் Director MX 2004 மிகவும் திறன் வாய்ந்த வீடியோ மென்பொருள், Macromedia Flash MX 2004 மிகமிக திறன்வாய்ந்த அனிமேசன் மென்பெருள்.


நீங்கள் Macromedia Flash MX 2004 ஜ தரவிறக்கம் செய்யும் போது Macromedia Studio MX 2004 இல் அடங்குகின்ற Dreamweaver MX ,Fireworks MX போன்றவற்றையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Macromedia Studio MX 2004 க்கான Serial Number கருத்தைப் பொறுத்தே நான்நேரடியாக உங்களுக்கு இவ்வாறானவற்றை வழங்க முடியும். :?:


http://www.macromedia.com/software/
நன்றி

<b><span style='font-size:25pt;line-height:100%'>கவிதன்</b></span>

Print this item

  கரப்பான் பூச்சியும் விவேக்கும்...
Posted by: kuruvikal - 06-12-2004, 02:19 PM - Forum: சினிமா - Replies (1)

<img src='http://thatstamil.com/images22/cinema/cockroach-26.jpg' border='0' alt='user posted image'>---------<img src='http://thatstamil.com/images22/cinema/vivek1-50.jpg' border='0' alt='user posted image'>

மிரிண்டாவில் கரப்பான் பூச்சி!: நடிகர் விவேக் மீது வழக்கு!!

மிரிண்டா குளிர் பானத்தில் கரப்பான் பூச்சி மிதந்ததால், மிரிண்டாவுக்காக விளம்பரப் படத்தில் நடித்த நடிகர் விவேக் உள்ளிட்ட 5 பேர் மீது 2 வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சேதுராமன், கண்ணன் ஆகியோர் ஒரு கடையில் மிரிண்டா குளிர்பானம் வாங்கி அருந்தினர்.

அப்போது ஒரு பாட்டிலில் கரப்பான் பூச்சி கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தனர். கரப்பான் பூச்சியைப் பார்க்காமல், அந்தப் பாட்டிலில் உள்ள குளிர்பானத்தை சிறிது குடித்துவிட்ட கண்ணனுக்கு தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து இரண்டு பாட்டில்களையும் காசு கொடுத்து வாங்கிக் கொண்ட இரு வழக்கறிஞர்களும் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் மிரிண்டா குளிர்பான நிறுவன உயர் அதிகாரி பிரகாஷ் அய்யர், புரசைவாக்கம் பகுதிக்கான வினியோக உரிமை எடுத்துள்ள கலைமணி, விஜயக்குமார், மிரிண்டா விளம்பரத்தில் நடித்து அதை மக்களிடம் பிரபலப்படுத்திய நடிகர் விவேக் ஆகியோரை குற்றவாளிகளாக புகாரில் சேர்த்துள்ளனர்.

இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

(thatstamil)

Print this item

  உங்களுக்கு மென்பொருள்களை உபயோகித்துப் பார்க்க ஆவலா!
Posted by: kavithan - 06-11-2004, 11:04 PM - Forum: வீடியோ தொழில்நுட்பம் - Replies (33)

அன்பின் நண்பர்களே,

எனக்குத்தெரியும் எத்தனையோ பேர் கணனி மென் பொருள்களைக் கையாண்டு பார்க்க ஆவலாக இருப்பீர்கள் என்று. நான் இன்று உங்களுக்காக ஒரு இணையத் தளத்தைத் தருகிறேன்.அங்கு ஏராளமான மென் பொருள்கள் குவிந்து கிடக்கின்றன. எல்லாம் இலவசம் ஒரு மாதத்துக்கு, சில முற்றிலும் இலவசம்.
http://www.tucows.tierra.net/mmedia.html

கவிதன்
கனடா

http://www.tucows.tierra.net/mmedia.html


இன்னும் தொடரும் நண்பர்களே, உங்கள் கருத்துக்களைப் பொறுத்து..............

Print this item

  சீனத் தமிழ்
Posted by: கெளஷிகன் - 06-11-2004, 06:07 PM - Forum: தமிழும் நயமும் - Replies (75)

rtsp://audio.chinabroadcast.cn/spread/tamil/2004/06/tamil_2589_2004-06-07_22-00-00.rm

Print this item

  திரைப்பட விழா
Posted by: Mathan - 06-11-2004, 01:08 PM - Forum: குறும்படங்கள் - No Replies

சுவிஸ் திரைப்பட விழா தகவல்களை இந்த தளத்தில் பார்க்கலாம் .....

http://www.solothurnerfilmtage.ch/

Print this item

  வணக்கம்
Posted by: kavithan - 06-11-2004, 04:41 AM - Forum: அறிமுகம் - Replies (81)

<b>பிரியமான வணக்கம்</b>
அன்பான வணக்கத்தை
அனைவருக்கும் சொல்லிட
அவா.

ஆனால்

தளத்தின்
கருத்துக்களத்தைப் பற்றி
கடுகளவும் அறியாதநான்-இப்ப தான்
கண்டுபிடிச்சன்

பிந்தி சொன்னாலும்
பிரியமுடன் சொல்கிறேன்
என் வணக்கத்தை
என் அருமை சகோதர சகோதரிகளுக்கு

<b>கவிதன்</b>
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  அன்று ஒரு நாள் 1983 ஆடி 23......
Posted by: kavithan - 06-11-2004, 12:40 AM - Forum: கவிதை/பாடல் - Replies (9)

<span style='font-size:25pt;line-height:100%'><b>அன்று ஒரு நாள் 1983 ஆடி 23.....</b>
<b>தமிழர்களின் மனதில் அழிக்க முடியாத சோகம் நிறைந்த நாள்</b></span>

<img src='http://www.yarl.com/forum/files/july23_kodumai.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:30pt;line-height:100%'><b>அன்று ஒரு நாள் 1983 ஆடி 23......</b></span>

<b><span style='font-size:25pt;line-height:100%'>அது தான்,
பல தமிழர்களின்
மனதையும்!
உடலையும்!
உடமைகளையும்!
உறவுகளையும்!
தகனமாக்கிய நாள்.

அன்பான குடும்பம்.
அருமையான உறவுகள்.
அசையாத சொத்துக்கள்.
அசையும் சொத்துக்கள்-என
அந் நாட்டின் தலைநகரில்,
அழகான வாழ்க்கை.

ஆனால்.......
யாருக்குத் தெரியம்!
யாவையும் இழந்து!
நிர்கதியாகி!
நிம்மதி இழந்து!
தெருவில் நிற்போம் என்றோ!
தெற்கில் இருந்து வடக்கு நோக்கி விரட்டப்படுவோம் என்றோ!
கொன்று குவிக்கப் படுவோம் என்றோ!
கொடும் பாவிகளால் துன்புறத்தப்படுவோம் என்றோ!
எரித்து நாசமாக்கப்படும் எமது உடமைகள் என்றோ!
ஏரியில் வீசியெறியப்படும் எமது உடல்கள் என்றோ!.
கறுப்பு யூலை உருவாகும் என்றோ!

இவை எல்லாம் கனவா?
இவை எல்லாம் நனவா?
இல்லை..இல்லை!
இவையெல்லாம் நியம்.
ஆமாம்,
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்துமூன்று,
ஆடி இருபத்து மூன்று தொட்டு,
ஒரு வாரத்துள்
ஒரு சில உயிர்களையா?
ஒரு சில ஆயிரம் பெறுமதியான சொத்துக்களையா?
இழந்தோம் நாம்???????
இல்லை!இல்லை! இல்லை!
மூவாயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களையும்,
பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களையும்,
இழந்தோம் நாம்.

இதுமட்டுமா
வேலையை இழந்தோம்.
மானத்தை இழந்தாம்.
மரியாதையை இழந்தோம்
எம் கல்விச் செல்வமாம்
யாழ் நூலகத்தை இழந்தோம்
இன்னும்! இன்னம்!
எவை! எவையோ! இழந்தோம்.

ஆனாலும் நாங்கள் சோரவில்லை.
பொறுமை இழந்தோம்!
பொங்கி எழுந்தோம்!
புதிய புலிகளை
புரிந்து கொண்டோம்,
பூகம்பம் ஆனோம்!
அடங்கிப்போயினர்,
அடக்கியவர்கள்!

இப்போ....
அமைதிப் பேச்சுக்கு
\"ஆமாம்\" சொல்லி
அரைகுறை மனதுடன்
அரவணைக்கிறார்கள்
ஆரியர்கள்.
ஆனாலும்,
வெற்றி நமதே!
தமிழீழம் எமதே!</span></b>[/color]

கவிதன்





[b][size=18]1981ஆடி(யூலை)கலவரத்தை சித்தரிக்கும் படங்கள்
http://www.sangam.org/FB_PHOTOHISTORY/HistoryIndex.htm

Print this item

  யார் தான் தியாகி.பொன்.சிவகுமாரன்?
Posted by: kavithan - 06-11-2004, 12:21 AM - Forum: கவிதை/பாடல் - Replies (14)

ஆனி 5ம் திகதி தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் 27வது தினத்தை நினைவு கூரும் முகமாகவும், ஆனி 6ம் திகதி தமிழீழ மாணவர்தினத்தை நினைவூட்டும் வகையிலும் அமைந்த இக்கவிதை தியாகி.பொன்.சிவகுமாரன்
அவர்களுக்கே சமர்ப்பணம்.

<img src='http://www.appaal-tamil.com/images/stories/ilakkiyam/sivakumar.jpg' border='0' alt='user posted image'>

<b>யார் தான் தியாகி.பொன்.சிவகுமாரன்?</b>
தமிழினத்தின் விடிவுக்காய்
தன்னையே அர்ப்பணித்து
தாயக உணர்வை மாணவர்க்கு ஊட்டியவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்

விடுதலைப் போராட்டத்துக்காய்
விஸ்பரூபம் எடுத்து, முதன் முதலில்
வித்தாகிப் போனவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்

அடக்கு முறைகளுக்கு
அடி கொடுக்க
ஆயுதம் எடுத்தவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்

வெட்டுப் புள்ளிக்கு
வேட்டு வைக்க - புலி
வேடமிட்டவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்

படுகொலைகளுக்கு
பதில் சொல்ல - தலைவன்
வழியில் வந்தவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்

சிங்களப் படைகள்
சிறை பிடித்து சித்திரவதை செய்த போதும்
சிதையாத மனத்துடன் சீறிப்பாய்ந்தவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்

எதிரிகள் சுற்றி வளைக்க, அவர்கள் கையில் அகப்படாது
எமனின் கைக்கு
ஏற குப்பியைக் கடித்தவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்

மாணவர் சமுதாயத்துக்கு
மறக்கமுடியாத நாளை
மரணத்தால் எழுதியவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்


04/06/2004
கவிதன்
கனடா

Print this item

  மாணவர் படை.....
Posted by: kavithan - 06-10-2004, 11:48 PM - Forum: கவிதை/பாடல் - Replies (17)

<b>மாணவர் படை.....</b>

எழுக எழுக மாணவர்படையே
எம் இனம் காத்திட எழுந்திடுவீரே
எதிரிகள் பாசறை அடித்திடுவோமே
எரிமலையாக வெடித்திடுவோமே.

உலக உருண்டையில் உள்ளவற்றில்
உணர்ச்சிகரமான படையிது
உன்னதமாக நாம் செயற்பட்டு
உதவிடுவோம் உலகத்தமிழுக்கு.

இளய சமுதாயத்தின்
இராயாங்கப் படையிது
இலக்கினை எளிதாக அடைந்து
இருண்ட உலகுக்கு ஒளியேற்றிடுமே.

ஊர் ஊராய் உள்ளவற்றில்
ஊக்க முள்ள படையிது
ஊனமுற்ற உறவுகளுக்கு
ஊன்று கோலாய் இருந்திடுமே.

ஆளமான கருத்துக்களை
ஆணிவேராய் கொண்ட படையிது
ஆழும் வர்க்கத்துக்கு
ஆரோக்கியமான எதிர்க்கட்சியாய் இருந்திடுமே.

ஈழம் என்ற கொள்கையை
ஈன்ற படையிது
ஈழ வேந்தன் ஆட்சியில்
ஈழ மாணவர்கள் உரிமைக்காய் உதித்ததுவே.

அன்பு, அறிவு என்பவற்றை - தன்
அகத்தே கொண்ட படையிது
அடிமைத்தனமான பேச்சுக்களை
அகற்றி எறிய உருவானது இதுவே.


"மாணவர் படை மாபெரும்படை"

கவிதன்
(கனடா)

Print this item

  தமிழ் செம்மொழி ஆக்கப்படுவதால் கிடைக்கும் பயன்கள்
Posted by: aathipan - 06-09-2004, 05:24 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

தமிழ் செம்மொழி ஆக்கப்படுவதால் கிடைக்கும் பயன்கள்
கருணாநிதி அறிக்கை


சென்னை, ஜுன்.9-

தமிழ் செம்மொழி ஆக்கப் படுவதால் கிடைக்கும் நன் மைகள் எவை என்பதை கருணாநிதி விளக்கினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மகிழ்ச்சி

பல்வேறு முற்போக்குச் சட்டங் களும், திட்டங்களும் நிறைவேற் றப்படுமெனச் சுட்டிக் காட்டி நெஞ்சினிக்கப் பல செய்திகளைத் தரும் குடியரசுத் தலைவர் உரையில், எட்டாவது அட்ட வணை மொழிகளை மத்திய ஆட்சி மொழிகளாக்கிட ஆய்வு நடக்குமென்பதுடன், ``தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் படும்" என்ற தேன் தோய்த்த பலாச்சுளைச் செய்தியும் கூறப் பட்டுள்ளது. இச் செய்தி கேட்டு இங்குள்ள தமிழர் மட்டுமின்றி கடல் கடந்து வாழ் தமிழர்களும் ஆடிப்பாடி அக மகிழ்ந்து வாழ்த் தொலி முழங்குகின்றனர்.திராவிட முன்னேற்றக் கழகம் தனது தொடக்கக் காலம் முதல் இந்திய ஆட்சி மொழி பிரச்சி னையில் அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இருக் கின்ற மொழிகளை மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குங்கள் என் பதை வலியுறுத்தி வந்திருக்கிறது.1965-ம் ஆண்டு மாநிலங்கள வையில் நமது தலைவர் அறிஞர் அண்ணா மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்பதை வலியுறுத்தி பேசினார்.

கடிதம்

கழக ஆட்சியில் நான் முதல்வ ராக இருந்தபோது, பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு 3-3-2000 அன்று கடிதம் எழுதினேன்.அதற்கு முன்பும், அதற்குப் பின்பும் எழுதப்பட்ட பல கடிதங்களுக்கு சாதகமான பதில் எதுவும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசிடமிருந்து நமக்கு கிடைத்தபாடில்லை.

கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் நாளன்று தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சி களின் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய பிரதமர் வாஜ்பாயை சந்தித்து தமிழைச் செம்மொழி யாக அறிவிக்க வேண்டுமென்று கோரி மனு கொடுத்தனர்.

நான் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோதும், எதிர்க்கட்சி யிலே இருக்கின்றபோதும் தமிழை செம்மொழி என அறி விக்க வேண்டுமென்பதற்காக அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு பல கடிதங்கள் எழுதியிருக் கின்றேன்.

பயன்கள்

தமிழ் செவ்வியல் மொழியாக ஆக்கப்படுவதால் தமிழகத்திற்கு என்னென்ன பயன்கள் ஏற்படும் என்பதையும் விளக்கிட விரும்புகிறேன்.

* மத்திய அரசு தமிழை செம் மொழி என்று அறிவித்தால் உட னடியாக இந்தியப் பல்கலைக் கழக மானியக் குழு அதனை ஏற்கும். அதன்பின் அனைத்து இந்திய பல்கலைக் கழகங்களிலும் தமிழ்த்துறை தனித் துறைகளாக உருவாகும். தமிழ் மொழி, தமிழகக் கலை, இலக்கிய ஆய்வு கள் முனைப்பாக நடைபெறும்.

* இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு தமிழை செம் மொழியாக ஏற்றால், உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத் தும் அதை ஏற்கும்.

* தமிழ் மொழிக்கும், தமிழர்க் கும் உலக அளவில் தன் மதிப்பு உயரும்.

* பன்னாட்டு மொழிக் கலைக் களஞ்சியங்களில் - தமிழ் இலக் கியங்கள், கட்டுரைகள், வரலாறு, பண்பாட்டுக் கருத்துக்கள் இடம் பெறும்.

ரூ.100 கோடி

* பல்கலைக்கழகங்களில் தற் போது தமிழ் மொழி கீழ்த்திசை மொழி என்று கருதப்படுகிறது. இந்நிலை மாறி இந்தியப் பல்கலைக்கழகங்களிலும், உலகப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் மொழிக்குத் தனி இருக்கை நிறு வப் பெறும். அத்துறைகள் தனித் தன்மையுடன் செயற்பட வாய்ப்பு ஏற்படும்.

* சமஸ்கிருதத்திற்கு இந்திய அரசு நேரடியாக 40 கோடி ரூபா யும், அரசு சார்பு நிறுவனங்கள் வாயிலாக 100 கோடி ரூபாயும் ஒதுக்கி, அந்த மொழியின் வளர்ச் சிக்கு உதவி வருவது போல் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் உதவி கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

* தமிழ்நாட்டிலும், இந்திய நாட்டிலும் பரந்து விரிந்து கிடக் கும் கல்வெட்டாய்வு, ஓலைச் சுவடி ஆய்வுகள் சமஸ்கிருதத்தை மையப்படுத்தியே ஆராயப்படு கின்றன. இநëத நிலையில் தமிழ் மொழியை மையப்படுத்தி உண் மையான வரலாற்று பண்பாட் டுக் கருத்துக்கள் வெளிவர முடி யும்.

* அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு வேகமூட்டும் வகையில் மேலும் பல திட்டங்கள் வகுத்துச் செயல் பட வாய்ப்பு ஏற்படும்.

* இந்திய மொழிகளில் மட்டும் அல்லாது ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் தமிழ் இலக்கியங்களும், நவீன படைப் புகளும் மொழி பெயர்க்கப்பட்டு உலகெங்கும் பரவும்.

நன்றி

எனவே, தமிழுக்கும், தமிழர்க் கும் எழுச்சி மிகுந்த - ஏற்றம் நிறைந்த எதிர்காலம் அமை வதற்கு இன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சார்பில் குடியரசுத் தலைவர் உரையில் கொடி உயர்த்தப் பட்டிருப்பதற்கு உடன்பிறப்பே; உன் சார்பிலும், உலகத் தமிழர் சார்பிலும் நன்றி! நன்றி! ஓராயிரம்; லட்சம்; ஒரு கோடி நன்றி.

இவ்வாறு கருணாநிதி கூறி யுள்ளார்.

Print this item