| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 333 online users. » 0 Member(s) | 330 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,300
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,629
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| அபாயம் |
|
Posted by: canada - 06-16-2004, 10:54 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (227)
|
 |
சர்வதேச குற்றவாளிகளின் தலைவன்
KTR.
பருத்தித்துறை தம்பசிட்டியைத் தனது புூர்வீகமாகக் கொண்ட முவு ராஜசிங்கம். ஆரம்பத்தில் நெல்லியடி கட்டைவேலி MPCS ல் தலைவராக இருந்த போது பல இலட்சம் பணத்தை மோசடி செய்தவர். 1979ம் ஆண்டு இவ் மோசடி காரணமாக சிறீலங்காப்பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வந்த தலைமறைவானார். இதுதான் இவரது முதல் குற்றவியல் செயற்பாடு. ஆயிரக்கணக்கான ஏழைகளின் பணத்தை மோசடி செய்த ராஜச....கம் உயர் சாதி வர்க்கத்தைச் சேர்ந்த சாதித்திமிர் பிடித்த சாதிவெறியன்.
SLAP ஆதரவாளரான துரோகி அல்பிரட் துரையப்பாவின் வடமராட்சி எடுபிடிகளில் ஒருவன். தெல்லிப்பழையைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து இரண்டு பெண்பிள்ளைகளின் தந்தை. ஒரு பெண் தாய்லாந்து சர்வதேச பாடசாலையிலும் , மற்றவர் சிங்கப்புூரிலும் கல்வி கற்றுக்கொண்டனர். இவரது மனைவி மிகவும் வயோதிபத் தோற்றமுடையவர் என்பதால் திருமணமாகாத மனைவியின் சகோதரியான ரஜனி என்பவருடன் தனது காமலீலைகளைப் பகிர்ந்து கொள்வார்.
இதேவேளை முவுசு தாய்லாந்திலுள்ள UNHCR இலும் தன்னைப்பதிந்து கொண்டார். மகள் UNHCR இல் மொழிபெயர்ப்பு வேலைகளும் செய்து வருபவர்.
1985ம் ஆண்டு முதல் தாய்லாந்தில் தனது தளத்தினை அமைத்துக்கொண்ட KTR ஆரம்பத்தில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை ஏற்படுத்திக்கொண்டார். அத்துடன் இந்திய எண்ணைக் கம்பனிகளுடனும் சில வர்த்தக உறவுகளை சந்திரசாமி என சிலகாலங்களுக்கு முன்னர் நன்கு ஊடகங்களில் அறியப்பட்ட மோசடிப்பேர்வழியுூடாக ஏற்படுத்திக்கொண்டார். இவருடைய இந்த வியாபாரங்கள் சட்டரீதியாக இப்படி இருக்க மறுவழியில் சட்டபுூர்வமற்ற ஆட்கடத்தல் (AGENT) போதைவஸ்து வியாபாரம் குறைந்த சம்பளத்தில் தாய்லாந்து இளம் பெண்களை கூலிக்கமர்த்தி விபச்சாரத்தொழில் என்பன இந்தியா இலங்கை என விஸ்தரிக்கப்பட்டது.
சில காலங்களுக்கு முன்னர் கொழும்பு கசீனோ கிளப்பிலும் மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட தாய்லாந்துப்பெண்கள் கைது செய்யப்பட்ட செய்திகளை பத்திரிகைகளில் யாவரும் வாசித்திருப்பீர்கள். இவ்விபச்சாரத் தொழிலில் KTR இற்கும் சம்பந்தமிருந்தது. இதுபற்றிய விரிவான செய்திகள் இன்னொரு கட்டுரையில் தருகின்றேன்.
KTR தனது கறுப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்ற எடுத்த பல வியாபார முயற்சிகள் நட்டத்தில் போக மிகவும் பணக்கஸ்ரத்துக்குள்ளானார். இதையடுத்து தன்னிடமிருந்த BMW BENZ கார்களைக்கூட விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்பது KTR இன் வாழ்க்கையில் ஏற்பட்ட மிக துன்பகரமான காலம் எனலாம்.
எப்போதும் தன்னை ஒரு பெரிய தொழில் அதிகாரியாகவும் , ஆங்கிலப்புலமையுள்ளவராகவும் காட்டிக்கொள்ளும் முவுசு ஒரு படி மேலே சென்று அங்கோலா அரசாங்கத்தின் ஓர் ஆலோசகராகவும் செயற்பட்டதாகவும் தன்னைப்பற்றி அறியாதவர்களிடம் கூறிக்கொள்வார். KTR தன்னைப்பற்றிய மாயைகளை எப்போதும் தன்வசம் வைத்துக்கொள்வதில் மிகவும் வல்லவர்.
ஒமேகா வரதனுக்கும் முவுசு இற்கும் இடையேயான தொடர்பு.
தாய்லாந்தில் ஆரம்ப காலங்களில் தடம்பதித்தவர்களில் ஒமேகா வரதனும் ஒருவர். இவரும் KTR ம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதில் சேர்ந்தே செயற்பட்டனர். அதே போன்று போதைவஸ்து வியாபாரத்திலும் சேர்ந்தே செயற்பட்டனர். ஆட்கடத்தலும் , போதைவஸ்தும் பின்னிப்பிணைந்தே ஐரோப்பாவிற்குச் சென்றது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய். எமது தமிழ்ப்படங்களில் சுூட்கேஸ் மாற்றுவதைப் பார்த்திருப்பீர்கள் தானே இதுபற்றி அதிகம் விபரிக்கத்தேவையில்லை.
ஒமேகா வரதன் என்ற பெயர் எப்படி வந்தது ? என்பதனை வாசகர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டாமா ?
வரதன் தாய்லாந்தில் உள்ள 'ஒமேகா" கொட்டலில் தான் வரும் பயணிகளை தங்க வைப்பார். அதனால் பயணிகள் வைத்த பெயர்தான் ஒமேகா வரதன். இவருக்கு வேறு பெயரும் உள்ளது. அது இதனை எழுதும் போது ஞாபகத்துக்கு வரவில்லை. பின்னைய காலங்களில் வரதன் தனது று}ட்டால் வேறு பயண முகவர்கள் ஆட்களை அனுப்பும் நடைமுறைகளை கையாண்டால் தாய்லாந்து பொலிசாருக்கு அதிலிருந்து அடிபட வைத்து விடுவார். இவரால் நட்டமடைந்த பல ஏஜென்சிக்காரர்கள் பாங்கொக் தெருக்களில் திரிகிறார்கள். இப்போது ஒமேகா வரதன் இங்கு ஓர் கொம்பனி ஒன்றினை சட்டபுூர்வமாக நடத்தி வருகின்றார். MORE NEWS SOON FROM
CRISTI
ASSOCIATION OF CHRISTIAN TAMIL IN SIAM (ACTS) SUKKUMVIT
BANKOK 10110
|
|
|
| மரம் |
|
Posted by: AJeevan - 06-16-2004, 12:31 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
மரம்
மரத்துக்கு உயிர் உண்டென்று அறிவோம்
வசந்தத்தில் துளிர்த்தும் மலர்ந்தும்
கோடையில் செழித்து நின்றும்
இலையுதிரில் துகிலுரித்தும்
மரம் உணர்வுகளும் காட்டும்
மரத்துக்குப் பேசத் தெரியும்
மரத்தின் மொழி
உடலின் மொழி
பாடி லாங்வேஜ் என்கிற பதமே
மரம் தந்ததுதான்
சில மரங்கள் ஜீவிதமானவை
தலைமுறைகள் கண்டவை
என்றபோதினும்
வீரியத்திலும் விளைச்சலிலும்
இளைக்காதவை
மரத்துக்குப் பேதங்கள் இல்லை
தன் நிழலில் உறங்குபவனும்
தன்னருகே சிறுநீர் கழிப்பவனும்
அதற்கு ஒன்றுதான்
மரத்துக்குக் கட்சிகள் இல்லை
எல்லா கட்சிக் கொடிகளுக்கும்
பேனர்களுக்கும் இடம் தருகிற
சமத்துவபுரம் அது
மரத்துக்கு அழத் தெரியாது
கிளை வெட்டும்போதுகூட
கைபற்றித் தடுப்பதில்லை
மரத்துக்குப்
பங்காளிச் சண்டைகள் இல்லை
வெவ்வேறு மரத்தின் வேர்கள்
இணைந்தும் பிணைந்தும்
எல்லை தாண்டியும் ஓடுவதுண்டு
மரத்துக்கு அசூயை இல்லை
அதன்
இலையோடும் கிளைகளில்
பட்சிகளும் எறும்புகளும்
வேரோடும் பூமிக்கடியில்
புழுக்களும் பூச்சிகளும்
ஒட்டி உறவாடுவதுண்டு
மரத்துக்கு
வாழ்க்கை அலுப்பதில்லை
காலம் பூராவும்
ஒரே இடத்தில்
நின்று கொண்டிருக்கிறபோதிலும்
மரத்துக்குத் தேவை அதிகமில்லை
மழையில்லா வறட்சிக்கும்
கொளுத்துகின்ற கோடைக்கும்
அரசாங்க உதவியெதுவும்
அது எதிர்பார்ப்பதில்லை
மரத்துக்கு
ஜீவகாருண்யம் அதிகம்
அதன் சேவைகளைப்
பயன்படுத்திக் கொள்வோரிடம்
கட்டணம் வசூலிப்பதில்லை
மரம்
யாருடனும் எதற்கும்
சண்டைக்குப் போவதில்லை
"ஏன் மரம் மாதிரி நிற்கிறாய்" என்று
யாரும் யாரையேனும் திட்டினாலும்
மவுனமாய்ப் பார்த்தலன்றி
ஆட்சேபணை செய்வதில்லை
"ஏன் மனிதன் மாதிரி செய்கிறாய்" என்று
யாரையும் கேட்காத
அறிவும் கொண்டது மரம்
-http://pksivakumar.blogspot.com/
|
|
|
| சிந்தனை வட்டம் குறும்பட விழா |
|
Posted by: AJeevan - 06-15-2004, 11:11 PM - Forum: குறும்படங்கள்
- Replies (1)
|
 |
<b>சிந்தனை வட்டம் குறும்பட விழா</b>
நியூஜெர்சியில் சிந்தனை வட்டம் சார்பில் குறும்பட விழா இனிதே நடந்து முடிந்தது. பதின்மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டன, அவற்றில் பல விவரணப் படங்கள், சில கதையோடு கூடிய குறும்படங்கள் மற்றும் ஒருத்தி என்ற முழுநீளத் திரைப்படம் வரிசையாய் இடம் பெற்றது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் செம்மையாகச் செய்திருந்தனர். தமிழ்க் குறும்படங்கள் திரையிட வேண்டும் என்ற அவர்களது முயற்சி மற்றும் நோக்கம், வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். திரையிட்ட எந்தப் படத்திலும் வர்த்தகத் தன்மைக்காக விட்டுக் கொடுத்துப் போகும் தேவைகள் இல்லாமல், சொல்ல வந்ததை அழகாகவும், தெளிவாகவும் சொல்லின. நான் சில தனிப்பட்ட அலுவல்கள் காரணமாக சில படங்களைக் காண இயலவில்லை, எனவே அவை தவிர்த்து, நான் ரசித்தவைகளில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!
<b><span style='color:red'>மனிதநேயம் என்றோரு ஐந்து நிமிடக் குறும்படத்தில், ஒரு ஊனமுற்ற மாணவனுக்காகப் பரிந்து பேசி, வாத்தியாரிடம் 'சீக்கிரம் போக வேண்டும்' என்று அனுமதி கேட்கும் மாணவனைப் பற்றிய படம். அந்த ஊனமுற்ற மாணவனைத் தோளில் தூக்கிக் கொண்டு, கதவைத் தொடுவதில் ஜெயித்துக் காட்டுவதன் மூலம் மனித நேயத்தை உணர்த்துகிறான் சிறுவன். , ஒரு வர்த்தக ரீதியானப் படத்தில் இருக்கும் அம்சமான பாடல் மற்றும் பிரச்சார தொனியும் நெருடலாய் இருந்தது. நீளத்தைக் குறைத்திருக்கலாம்...இருப்பினும் நேர்த்தியாய் இருந்த படங்களில் இதுவும் ஒன்று!
[b]ஜல்லிக்கட்டு</b> என்ற விவரணப்படம், ஜல்லிக்கட்டு என்று மாட்டை அடக்குவது வீர விளையாட்டா என்ற ஒரு அற்புதமான கேள்வியை எழுப்பியது. ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என்ற இரண்டு பிரிவினரையும் பேட்டிகள் கண்டு, முடிவைப் பார்வையாளர்களிடமே புத்திசாலித்தனமாக விட்டது. "ஒரு மாட்டை அம்பது பேர் சேர்ந்து அடக்கறது வீரம்னு சொல்லிக்கறது கேவலமா இல்லை? இது தமிழர்களின் வீர விளையாட்டுன்னு சொல்றதை விட, உயிரை விடுவதற்காகத் தானே முன் வந்து செய்து கொள்கிற ஏற்பாடு என்று தான் சொல்ல வேண்டும்" என்று ஒருவர் கூறினார். ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்களில் ஒருவர்," எங்க ஊரு சாமிக்கு ரத்தம் கொடுக்கணும். சும்மாப் போய்க் கேட்டா யாராவது கொடுப்பாங்களா? அதுனால தான் ஜல்லிக்கட்டு நடத்தி, அது மூலமாக் கிடைக்கற ரத்தத்தை சாமிக்குப் படைக்கிறோம்!" சர்வசாதாரணமாக ஒரு அம்சமான தோரணையோடு சொன்னார். ஜல்லிக்கட்டு மூலம் மனிதர்கள் கிழிபடுவதையும், கதறுவதையும் பார்க்கும் போது, ஜல்லிக்கட்டுத் தேவையில்லாத சமாச்சாரம் என்று தான் எனக்கும் தோன்றியது. பீரோ, சைக்கிள், தட்டு போன்ற பரிசுகளுக்காக உயிரோடு விளையாட வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.
<b>'The Untouchable Country'</b> என்ற குறும்படம், 'இதன் மூலம் யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல' என்ற Disclaimerஓடு போடப்பட்டது. தலித்துகளின் குரல் கேட்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, பல விஷயங்கள் அலசப்பட்டன. மனிதர்களை சாதியின் மூலம் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று பார்க்கும் போது, வெட்கம் பிடுங்கித் தின்கிறது. மனதைப் பிசைந்த காட்சிகள் பல வந்த போதும், அவைத் தொகுக்கப்பட்ட விதத்தில் நேர்த்தியும் நேர்மையும் இல்லை! பல இடங்களில் உயர்வகுப்பினர் என்று பம்மாத்துப் பண்ணி சாதியின் பெயர்களைத் தவிர்த்தவர்கள், (எப்போதும் போல) பிராமணர்களின் பெயரைச் சொல்வதிலும், அவர்களின் குறியீடுகளைக் காட்டுவதிலும் எந்த விதத் தயக்கமும் காட்டவில்லை! (தேவர்கள் என்ற பெயர் இரு முறை சொல்லப்பட்டது ஆச்சர்யமாகத் தான் இருந்தது). இது போக, சாதிக் கொடுமைகளிலிருந்து தப்பிக்க மதமாற்றம் தான் ஒரே வழி என்ற தொனியில் சில கருத்துக்களும் இடம் பெற்றது. தலித்துகள் என்று பெயரிட்டு, இறந்த பன்றிகளைத் தூக்கிப் போடவும், மலம் வாரவும் மனிதர்களை ஒதுக்கி வேற்றுமை பாராட்டும் எவரும் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக வேண்டுமானால் இருக்கட்டும், அவர்கள் மனிதர்களில்லை!
<b>'சென்னப் பட்டணம்'</b> என்ற குறும்படம் நகைச்சுவையாகவும், அதே சமயம்யதார்த்தமாகவும் இருந்தது. மூர்த்தி என்பவர் அசத்தலாய் நடித்திருந்தார். சென்னை நகரமானது சுலபமாய் ஏமாற்றும் நபர்களைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், சில நல்லவர்களையும் கொண்ட ஒரு நகரம் என்பதைப் படு நேர்த்தியாகச் சொல்லியிருந்தார். இந்தப் படத்தைத் தொகுத்தவர் பிரபலமான சுரேஷ் அர்ஸ். ஒரு சில இடங்களில் காட்சியின் நீளத்தைக் குறைப்பதற்காக 'FADE IN' உபயோகப்படுத்தி,சடாரென்று அடுத்தக் காட்சிக்கு விரைவாய்ப் படத்தை செலுத்தியிருக்கிறார். படம் சற்று கூட போரடிக்காமல், சுவையாய் இருந்தது. இயக்குனர் பி.ஜே. ஜெயபாஸ்கருக்கு வாழ்த்துக்கள்!
<b>நிழல் யுத்தம்</b> என்று அஜீவன் இயக்கத்தில் ஒரு படம் திரையிடப்பட்டது. அற்புதமான ஒளிப்பதிவு..பல காட்சிகளில் 'லைட்டிங்' பிரமாதமாய் இருந்தது. ஆனால் படத்தொகுப்பு சுமாராய்த் தான் இருந்தது. இலங்கைத் தமிழ் வசனங்கள் படம் முழுதும் நிரம்பியிருந்ததால்..ஒன்றுமே புரியவில்லை (?!) அதற்கான சப்டைட்டில்களும் சுவிஸ் மொழியில் போட்டதால், போச்ச்ச்ச்! எனினும், இவரின் முயற்சி பாராட்டப் பட வேண்டியது. வேகமானப் படத்தொகுப்பு மற்றும் கதையில் கவனம் இன்னும் செலுத்த வேண்டும். 'There are signs of great talent'!
<b>தேடல்</b> என்றொரு குறும்படம்..ஊர்வசி அர்ச்சனா நடித்தது என்றவுடன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், நாடக தொனியை ஏற்படுத்தியது. உதாரணத்திற்கு, 'அதோ அங்கே ரெண்டு பசங்க உட்கார்ந்திருக்காங்களே...போய் என்னன்னு கேட்போம் வாங்க!' என்பது போன்ற வசனங்கள் படங்களில் தவிர்க்கப்பட வேண்டியவை. ஆனால், படத்தின் கருவானது இயந்திரத்தனமான உலகில் குழந்தைகள் எங்ஙனம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதன் அலசல். அதனால், பலரின் இதயத்தைத் தொட்டது!
<b>ஒருத்தி </b>என்றொரு முழுநீளத் திரைப்படம் கடைசியாகத் திரையிடப்பட்டது. அன்றைய தினத்தில் தயாரிப்பு நேர்த்தி (Production Values) மற்றும் இயக்க உத்திகளில் அற்புதமாகவும், கி.ராஜநாராயணின் கதையைத் தழுவியும் எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படம். இதன் இயக்குனர் அம்ஷன் குமாருக்கு மனமார்ந்தப் பாராட்டுக்கள். இதைத் தயாரித்தது திண்ணை ஆசிரியர் கோ.ராஜாராம் என்பதும், இணைத்தயாரிப்பு செய்தது காஞ்சனா தாமோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு தாழ்த்தப்பட்ட இளம் பெண், தனது புத்தி சாதுர்யத்தால் கிராமத்தைக் காப்பாற்றிய போதும், உயர்சாதிப் பையனோடு அவளுக்கேற்பட்டக் காதலைப் பெரியவர்கள் மறுக்கின்றனர். 'வேண்டுமென்றால் வேறு ஊரில் போய் கல்யாணம் செய்து கொள்' என்று பெருந்தன்மையாய் (?!) அனுமதியும் வழங்குகின்றனர். அவள் அதனைப் புறக்கணித்து, தன் மக்களுக்காகக் காதலைத் துறந்து ஊரோடு வாழ்வதில் மகிழ்ச்சி அடைகிறாள்.
படம் 1800ல் நடப்பது போல் அமைக்கப்பட்டிருந்தாலும், ஒரு காட்சிக் கூட தற்காலத்தைக் காட்டும் விதமாய் இல்லாமல், நன்றாக செய்திருந்தனர். செவனி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தவர் நல்ல தேர்வு. படத்தில் பாலாசிங் போன்ற தெரிந்த முகங்களும் இருந்தது (நன்றாகச் செய்திருந்தார்) நல்ல பலம்! எல். வைத்தியநாதனின் பின்னணி இசை, காதல் காட்சிகளின் போது ரீங்காரமிட்டது. அந்தக் காலத்தில், இரு தார மணத்தை சர்வசாதாரணமாய்ப் பெண்கள் எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதை செவனிக் கதாபாத்திரம் மூலம் இயக்குனர் சொல்லும் போது, வருத்தமாகத் தான் இருந்தது. ஆங்கிலத் துரை சம்பந்தப்பட்டக் காட்சிகளில் எல்லாம், கொஞ்சம் பிசகியிருந்தாலும், மக்கள் பொசுக்கென சிரித்திருப்பார்கள். ஆனால், இயக்குனர் புத்திசாதுர்யமாக அவற்றைக் கையாண்டிருக்கிறார்.
செவனி, ஆடு மேய்க்கும் கம்பின் மூலம் நிலப்பரப்பை துரைக்கு விளக்கும் போது, கை தட்ட வேண்டும் போல் இருந்தது. (நல்ல உத்தி). படத்தில் மிக மிக யதார்த்தமான காட்சிகள், மெல்லிய நகைச்சுவை, அற்புதமான களம் என்று சகலமும் சரியாய் இருந்ததோடு, கல்வியறிவு தான் ஒடுக்கப்பட்டவர்களை மீட்க முடியும் என்ற நல்லக் கருத்தோடு (பிரச்சார நெடி இல்லாமல்) குறிப்பால் உணர்த்திய வண்ணம், படத்தை தூக்கி நிறுத்தியது.
இந்தப் படமானது அன்பே சிவத்தோடு போட்டியிட்டு இந்தியன் பனோரமாவில் விருது பெற்றது (?!) என்று அறிவிக்கும் போது சொன்னதாய் ஞாபகம், அப்படி நடந்திருந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இயக்கிய அம்ஷன் குமாருக்கும், தயாரித்த ராஜாராமுக்கும், பங்குபெற்ற அத்தனைக் கலைஞர்களுக்கும் மனமார்ந்தப் பாராட்டுக்கள். நல்ல படம் வேண்டும் என்று நினைப்பவர்கள், இது போன்ற படங்களைக் கட்டாயம் ஊக்குவிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
படங்கள் முடிந்தவுடன் கலந்துரையாடல் நடந்தது. அதில் படத்தைப் பற்றி அலசியதை விட, கருத்துக்களைப் பற்றியே..அதுவும் தலித், சாதிக் கொடுமைகளைக் கண்டிக்கும் விதமாகவேப் பல நேரங்களில் அமைந்ததைத் தவிர்த்திருக்கலாம். இருப்பினும், சிலர் படங்களை அக்கு வேறு ஆணி வேறாக விமர்சித்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கினார்கள். இது போன்ற விழாக்கள் மிகுந்த நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. வந்திருந்த கூட்டத்தில் முக்கால்வாசி பேர், கடைசி வரை ஆர்வத்தோடு கலந்து கொண்டதே, விழா அமைப்பாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மதிய உணவு, மாலை தரப்பட்ட அதிரசம் மற்றும் முறுக்கு..இவை கண்ணும் செவியும் ஓய்வெடுத்த நேரத்தில், வயிற்றுக்கு ஈயப்பட்டது. நாக்கும் நன்றி சொல்லும் விதமாய், அவை அமைந்தது சொல்லப்பட வேண்டிய விஷயம். ஒரு நல்ல நாளை ஏற்படுத்திக் கொடுத்த சிந்தனை வட்டத்திற்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!
- அருண் வைத்யநாதன்
பின்குறிப்பு:- பாஸ்டனிலிருந்து பாலாஜி, ஜெர்சி சிட்டியிலிருந்து சுதர்ஷன் கிருஷ்ணமாச்சாரி, வாஷிங்க்டனிலிருந்து ஸ்ரீகாந்த் (இசை அமைப்பாளர்), கனெக்டிக்கட்டிலிருந்து ஒரு நண்பர் என்று பல இடங்களிலிருந்து வலைப்பதிவாளர்கள், மரத்தடிக் குழும நண்பர்கள் வந்து விழாவை சிறப்பித்தார்கள். இவர்கள் அனைவரையும் சந்தித்தது பெரும் மகிழ்ச்சி! நண்பர். சுந்தரவடிவேல் வந்தாலும் வருவேன் என்று சொல்லியிருந்தார், வரமுடியவில்லைப் போலிருக்கிறது! நிகழ்ச்சியில் எடுத்தப் புகைப்படங்களை நண்பர் பி.கே.சிவக்குமார் வலையேற்றியிருக்கிறார். எனது படமான BR(A)ILLIANT திரையிடப்பட்டது. அது குறித்து, நண்பர் சுதர்ஷன் வலைப்பதிந்திருக்கிறார்.
# posted by Arun Vaidyanathan @ 10:49 AM</span>
|
|
|
| புலம்பலுக்குள் ஒரு புன்னகை...! |
|
Posted by: kuruvikal - 06-15-2004, 10:10 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (10)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/sa1.jpg' border='0' alt='user posted image'>
இஸ்ரேல் இருப்புக்காய் அனுப்பியது
கிபீரும் ஆட்லறியும்
இந்தியா இரகசியமாய் அனுப்பியது
மிக்கும் மிரண்டாவும்
அமெரிக்கா அண்டப்புளுகுக்காய் அனுப்பியது
பெல்லும் கிறீன்பரேட்டும்
ரஷ்சியா டொலருக்காய் அனுப்பியது
தரையில் தாங்கியும் ஆகாயத்தாங்கியும்
சீனா சிங்களத்தோடு உறவுக்காய் அனுப்பியது
எப் 7ம் ரி 56 உம்
பாகிஸ்தான் பகட்டுக்காய் பரிசளித்தது
மல்டிபரலும் பல்டி அடியும்
சிம்பாவே சிம்பிளாய் அனுப்பியது
சிணுங்க ஒரு ஆயுதக்கப்பல்
இன்னும்
விட்டது குறையாய் தொட்டது குறையாய்
யார்யாரோ எல்லாம்
ஆயுதவியாபாரச் சந்தை விரித்தார்
எங்கள் அன்னை பூமியின்
அழிவுகளின் மேல்....
இத்தனைக்கும் சாட்சியாய்
இதோ அவள்....
இருந்தாலும்
முகத்தில் ஒரு புன்னகை
சொந்தக் கருவறை பிரசவித்த
வேங்கைகளின் வீரத்தால்
எதிரியின் நிலைகுலைவுக்காய்
எழுந்த சூறாவளியிலும்- அவள்
விடுதலைக் காற்றை
சுவாசித்ததாலோ என்னவோ....!
நன்றி.... http://kuruvikal.yarl.net/
|
|
|
| மரிக்கப்போகும் தற்காலக் கணணிகள்.... |
|
Posted by: kuruvikal - 06-15-2004, 07:59 PM - Forum: கணினி
- Replies (2)
|
 |
கணினியின் மரணம் - வெங்கட்ரமணன்
இன்று ராய்ட்டர் நிறுவனத்தில் வெளியான செய்தியன்று நம்மிடம் இப்பொழுது பயனில் இருக்கும் கணினிகள் விரைவில் மரித்துப் போகும் என்று சொல்ல வருகிறது. இந்தச் சாவு செய்தியை நம்மிடம் சொல்வது சன் மைக்ரோஸிஸ்டம் நிறுவனம். அதனுடைய புதிய வர்த்தகத் திட்டத்தின் அடிப்படையில் அவர்களிடம் மென்கலன் வாங்குபவர்களுக்கு, கணினி சம்பந்தமான அவர்களுடைய சேவைகளுக்கு ஒப்பந்தம் செய்துகொள்பவர்களுக்கு, கணினி இலவசமாகத் தரப்படும் என்று சொல்கிறார்கள்.
இதே செய்தியை கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் மைக்ரோஸாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் கூடச் சொன்னார். சமீபகாலத்தில் மைக்ரோஸாப்ட்டும்-சன்னும் மிக நெருக்கமாக உறவாடுகின்றன. (எனக்கென்னமோ இன்னொரு அபாயக் கூட்டணியான ஜார்ஜ் புஷ்-டோனி ப்ளேர் நினைவில் வருகிறார்கள். புஷ் சொல்வதை அப்படியே எதிரொலிப்பவராகத்தானே டோனி ப்ளேர் இருக்கிறார்). நெருக்கத்தைப் பகிரங்கமாக்கிக் காட்டவோ என்னவோ சன் மைக்ரோஸாப்டைத் துல்லியமாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. கணினி இலவசமாகக் கிடைக்கும் என்று கேட்ஸ் சொன்னால் "ததாஸ்து" என்கிறது சன்.
இலவசமாகக் கணினி கிடைத்தால் பெருக வேண்டுமல்லவா? நான் ஏன் சாகும் என்று சொல்கிறேன்??
* * *
கடந்த பல வருடங்களாகக் கணினி (குறிப்பாக மேசை, மற்றும் மடிக்கணினிகள்) விலை மிகவும் குறைந்து வருகிறது. இப்பொழுது நான் வசிக்கும் டொராண்டோ நகரில் சிறு கடைகளில் போய் தனித்தனி பாகங்களாக வாங்கி இணைத்தால், ஒரு அற்புதமான கணினியை 300-400 கனேடியன் டாலர்களுக்கு (10,000-13,000 இந்திய ரூபாய்களுக்கு) கோர்த்துக் கொள்ளமுடியும். ஏன், டெல் போன்ற முதன்மை கணினி நிறுவனத்திலேயே 450 கனேடியன் டாலர்களுக்கு நல்ல தரமான கணினி கிடைக்கிறது. நான் முதன் முதல் பெண்டியம் 75 மெஹாஹர்ட்ஸ் கேட்வே கணினியை, 1995ல் வாங்கியபொழுது அதன் விலை கிட்டத்தட்ட 70,000 ரூபாய்கள் கிட்டத்தட்ட பத்து வருடங்களில் திறன் பத்து மடங்கு அதிகரித்த கணினியின் விலை, ஆறு-ஏழு மடங்கு குறைந்துபோய்விட்டது. இப்பொழுது சராசரி கனேடிய இல்லங்களில் 2 கணினிகளாவது இருக்கின்றன (என்னுடைய வீட்டில் நான்கு; என் மேசைக்கணினி, மடிக்கணினி, தமிழ்லினக்ஸ் இணையதளம் வழங்கும் கணினி இதெல்லாம் போக என் குழந்தைகளுக்காக ஒரு கணினியும் உண்டு). கணினியின் விலை வரலாறு காணாத அளவிற்கு வேறெந்த நுகர்வோர் சாதனங்களையும்விடக் குறைந்துகொண்டே இருக்கிறது. இது வரும் நாட்களிலும் தொடரும் என்று நம்பலாம்.
மறுபுறம், கணினியை இயக்கும் இயக்குதளம் மற்றும் பயன்பாடுகளின் விலை பெருகிக் கொண்டே போகிறது. எனக்குத் தெரிந்தவகையில் விண்டோஸ் 3.11ன் விலை 40 டாலர்களாக இருந்தது, இப்பொழுது விண்டோஸ் எக்ஸ்பியின் விலை 200 டாலர்கள். மைக்ரோஸாப்ட் ஆபீஸின் விலை 50 டாலர்களாக இருந்தது இப்பொழுது 400 டாலர்கள். அதாவது, ஒரு கணினி-விண்டோஸ்-ஆபீஸ் கொண்ட தொகுப்பில் விண்டோஸ்-ஆபீஸின் விலை கிட்டத்தட்ட 20 சதவீதமாக இருந்ததுபோக இப்பொழுது 150% சதவீதமாக அதிகரித்திருக்கிறது. வரும் நாட்களில் இன்னும் இதன் சதவீதப் பங்கு அதிகரிக்கும் என்று நம்பலாம்.
இந்த நிலையில் இப்பொழுதெல்லாம் கணினி வாங்கவேண்டும் என்று திட்டமிடுபவர்களுக்கு அதன் வன்கலன் விலையைவிட இயக்குதளம்/பயன்பாடுகளின் விலை முக்கியம். (விண்டோஸ் எக்ஸ்பி, ஆபீஸ், அடோபி போட்டோஷாப், நார்ட்டன் ஆண்டிவைரஸ், இப்படி அத்தியாவசியமான ஒவ்வொன்றுக்காக விலையைச் சேர்த்துக் கொண்டோ போனால் இதன் அபத்தம் நிச்சயம் உறைக்கும்).
இது எல்லாவற்றுக்கும் மேலாக மென்கலனின் வாழ்நாள் மிகவும் குறைவு. விண்டோஸ் 95, 98, 2000, எம்ஈ, எக்ஸ்பி என்று அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதால் அதே கணினியை வைத்துக் கொண்டு இந்த ராஜாக்களுக்குக் கட்டும் கப்பம் மிகவும் அதிகம்.
* * *
இதை மாற்ற லினக்ஸ் மற்றும் தளையறு மென்கலன்கள் பெரிதும் உதவுகின்றன. ஆனால் இந்தக் கட்டுரை அதைப்பற்றியது இல்லை. கணினியின் சாவு குறித்தது. எனவே லினக்ஸை கொஞ்சம் மறந்துபோவோம்.
* * *
இந்த அபத்தம் கட்டாயம் மைக்ரோஸாப்ட் போன்ற மென்கலன் வியாபாரிகளுக்கு உறைக்கத் தொடங்கியிருக்கிறது. அதற்காக அவர்கள் விலையைக் குறைத்துத் தங்கள் இலாபத்தில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வார்களா? மைக்ரோஸாப்ட்/சன் தங்கள் வியாபார உத்தியை மாற்றத் தொடங்குகிறார்கள். வருங்காலத்தில் மென்கலன் ஒப்பந்தத்தில் கையப்பமிட்டால் கணினியை மைக்ரோஸாப்டோ, சன் நிறுவனமோ இலவசமாக உங்களுக்குத் தருவதாகச் சொல்லத் தொடங்குகிறார்கள்.
கவனிக்கவும், இது விண்டோஸ் எக்ஸ்பியை "வாங்குவது" இல்லை. விண்டோஸ் எக்ஸ்பி "ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது". அதாவது அடுத்த ஆயிரம் டாலர்கள் கொடுத்தால் மைக்ரோஸாப்ட் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உங்களுடைய கணினி தேவையைக் கவனித்துக் கொள்ளும். கேட்பதற்கு எளிதாகத்தான் இருக்கிறது. சொல்லப்போனால் நடைமுறையிலும் எளிதாகத்தான் இருக்கும் போலத் தோன்றுகிறது. பின் என்ன சிக்கல்?
வாங்கினால் உங்களுக்குச் சொந்தம். அதில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒப்பந்தக் கணினியில் என்னென்ன இயக்கலாம் என்பதைக் கணினி தரும் நிறுவனம் உங்களுக்கு அறிவுறுத்தும். அதாவது, விண்டோஸ் எக்ஸ்பி பிடித்திருக்கிறது, மைக்ரோஸாப்ட் ஆபீஸ் தேவையாக இருக்கிறது என்றால் சரி. அடுத்ததாக அடோபி போட்டோஷாப் வேண்டும் என்றால், மைக்ரோஸாப்ட் ஒப்பந்தத்தை மீற வேண்டிவரும். ஏனென்றால் மைக்ரோஸாப்ட் 'டிஜிட்டல் இமேஜ் ஸ்வீட்" என்றொரு தயாரிப்பை வைத்திருக்கிறது. அதுதான் உங்களுக்கு ஒத்துவரும் என்று முடிவு செய்வார்கள். எனவே, அடோபியின் தயாரிப்பை உங்களால் பயன்படுத்த முடியாது.
"ஹாங், அப்படியெல்லாம் இல்லை, நாங்கள் அதையும் அனுமதிப்போம்" என்று பெயரளவில் சொல்வார்கள். ஆனால் அவர்களுடைய ஒப்பந்த விலை உங்களுக்கு அதைச் சொல்லாமல் சொல்லும். உதாரணமாக டிஜிட்டல் மீடியா ஸ்வீட் இல்லாத (கணினி, இயக்குதளம், ஆபீஸ்) பொதிக்கு ஆயிரம் டாலர்கள் விலை என்றால், மீடியா ஸ்வீட்டும் சேர்த்தால் ஆயிரத்து நூறு டாலர்கள் என்று இருக்கும். தனியாக போட்டோஷாப்பின் விலை அறுநூறு டாலர்கள் என்று இருக்கும்பொழுது, நீங்கள் தானாக மீடியா ஸ்வீட்டிடம் சிறைப்படுவீர்கள். இப்படி ஆக்டோபஸின் கால்களாக சன்னோ, மைக்ரோஸாப்ட்டோ உங்களை நெருக்கும்.
இதெல்லாம் ஒன்றும் புதியதில்லை. ஏற்கனவே மைக்ரோஸாப்ட் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. இப்பொழுது கணினி வாங்கும்பொழுது இயக்குதளம், ஆபீஸ் பொதி, உலாவி, மின்னஞ்சல் நிரலி என்று எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகத் தலையில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆபீஸ் வாங்கினால் அவுட்லுக் மின்னஞ்சல் நிரலி கூடவே வரும். அக்ஸஸ் இல்லாத ஆபீஸ் பொதியை விட அக்ஸஸ் சேர்த்தது கொஞ்சம்தான் விலை அதிகம், எனவே தேவை இருக்கிறதோ இல்லையோ, அக்ஸ்ஸ் சேர்த்த பொதியாகவே வாங்கிப் போட்டுக்கொள்ளலாம். நாளைக்குப் பயன்படக்கூடும்.
இது நாள்வரை கணினி தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு மைக்ரோஸாப்ட் வாங்கும்பொழுதே நுகர்வோர்கள் தலையில் கட்டிவந்தார்கள். பலத்த போட்டியிருக்கும் கணினி உற்பத்தித் துறையில் இப்பொழுது அதன் சாத்தியங்கள் குறைந்து வருகின்றன. லினக்ஸ் போன்ற இயக்குதளங்கள் சராசரி வீட்டுப் பயனுக்குத் தயாராகிவரும் நிலையில் நாளை டெல், ஹெச்பி போன்ற தயாரிப்பாளர்கள் "வின்டோஸ் வேண்டாம், நாங்கள் லினக்ஸ் போட்டு கணினியை விற்கிறோம்" என்று ஒரு உந்தலில் சொன்னால், இன்னும் இரண்டு தயாரிப்பாளர்கள் அதற்குப் போட்டியா லினக்ஸ் பொதிக்கப்பட்ட கணினியை விற்கத்தொடங்கினால் மைக்ரோஸாப்ட் கட்டாயம் ஆடிப்போகும். அதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. (இந்தியாவில் லினக்ஸ் கணினிகளை ஹெச்பி விற்கிறது).
இதற்கு மாற்றாக சாட்சிக்காரன் காலில் விழுவதற்குச் சண்டைக்காரன் காலில் விழலாம் என்று மைக்ரோஸாப்ட்/சன் முடிவெடுக்கின்றன. ஆதாயத்தில் ஒரு பகுதியைக் குறைத்துக் கொண்டு கணினியை இலவசமாகக் கொடுத்தால் சந்தையைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும். இதுதான் அவர்களின் வியாபார உத்தி.
இலவசமாகக் கிடைப்பது எதுவுமே சிக்கலில்லாமல் இருக்காது. இரண்டு வருடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு கணினியை வாங்கினால் அதில் இருப்பவை எல்லாம் அவர்களுடைய விண்டோஸ்ம், ஆபீசும் இல்லாமல் இரண்டு வருடம் கழித்து பயன்படாது. அந்த நிலையில் நீங்கள் புதிதாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டு புதிய கணினியைப் பெற்றுக் கொள்வீர்கள். இப்படி வாழ்நாள் முழுவது உங்கள் குடுமி அவர்கள் கையில்.
* * *
இப்படி வருகின்ற கணினிகள் நமக்கு இன்றைக்குத் தெரிந்த கணினிகளாக இராது. அவற்றில் வேண்டிய நிரலியைப் போட்டுக்கொண்டு வேண்டியபடி இயக்க உங்களால் முடியாது. அதில் பாட்டுக் கேட்கலாமா, டிவிடி போட்டுப் படம் பார்க்கலாமா என்று அவர்கள்தான் முடிவு செய்வார்கள். இன்றைக்குக் கணினியில் இருக்கும் பெரிய கவர்ச்சியே அது பயனருக்கு ஏற்றபடி எப்படிப்பட்ட சாதனமாகவும் உருவெடுக்கும் திறமைதான்.
உதாரணமாக என்னுடைய வீட்டில் வழங்கியாக இருந்து கொண்டு தமிழ்லினக்ஸ்.ஆர்க் தளத்தை இயக்கும் கணினி ஒரு சாதாரண அலுவலகப் பயனுக்காக வாங்கப்பட்டது. பின்னர் அதை ஆய்வகத்தில் வேறுசில இயந்திரங்களைக் கட்டுப்படுத்த ஏற்றவகையில் மாற்றியமைத்தேன். அதற்கும் வேறு கணினி கிடைத்தவுடன் அலுவலகத்தில் தூக்கிப் போட்டுவிட்டார்கள். நான் அதில் இன்னும் கொஞ்ச நினைவுச் சில்லுகள், இன்னொரு கடினவட்டு இரண்டையும் இணைத்து லினக்ஸ் நிறுவி அதை முழுச் சேவைவழங்கிக் கணினியாக மாற்றியமைத்தேன். நாளை சன் மைக்ரோஸிஸ்டம் தரும் இலவசக்கணினியில் இதெல்லாம் சாத்தியமாக இருக்காது, அதன் வீடியோ அட்டை என்னவென்று உங்களுக்குத் தெரியாது, அதில் கடின வட்டை அதிகரிக்க முடியாது (அந்தக் கடினவட்டு சன் நிறுவனத்திற்காகப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்கும், அவர்களிடம் மாத்திரம்தான் கிடைக்கும். பழுது ஏற்பட்டால் எக்கச்சக்க விலைகொடுத்து அவர்களிடம் பாகங்கள் வாங்க வேண்டும்).
மொத்தத்தில் நாம் அறிந்த கணினியாக அது இருக்காது. நம் செல்லக் கணினி செத்துப்போகும்.
* * *
கிட்டத்தட்ட செல்பேசிகள் அப்படித்தானே இருக்கின்றன? இரண்டு வருட ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் இலவச போன். ஆனால் அதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது (அதில் ஒரு நல்ல அகராதியைப் பொதித்துக் கொள்வது இயல்பில் சாத்தியமே, ஆனால் அதன் மூடிய வடிவம் அதற்கு இடம் தராது). ஒரு காலத்தில் இல்லத்தில் இருக்கும் தொலைபேசிகள்கூட அப்படித்தான். இந்தியத் தொலைபேசித் துறையில் வந்து கருப்பு நிறத்தில் விரலைவிட்டுச் சுற்றும் பெட்டியைத்தான் தருவார்கள். அதன் பின்னால் இருக்கும் இணைப்பு வயர்கள் நேரடியாகக் கம்பத்தில் இணைக்கப்பட்டிருக்கும். காலம் காலமாக உங்களைக் கம்பத்தில் கட்டிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னர் அதன் அபத்தம் உறைக்க, நுகர்வோர்கள் பொறுமை இழந்தவுடன், இல்லங்களில் ஒரு RJ45 துளையைப் போட்டுவிட்டு அத்துடன் தொலைபேசிக்காரர்கள் நிறுத்திக் கொள்ளத் தொடங்கினார்கள். அந்தத் துளையில் அதி அற்புத பனாசோனிக் தொலைபேசியோ, பழைய சுழல் எண்கள் கொண்ட டப்பாவையோ இணைப்பது உங்கள் தெரிவு.
மைக்ரோஸாப்ட்டும் சன்னும் உங்களைக் கற்காலத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தமாக இருக்கிறார்கள். சென்று வாருங்கள்.
வெங்கட்ரமணன் - ஒரு நாடோடியின் வடதுருவ வலைக்குறிப்புகள்
தகவல் சூரியன் டொட் கொம்...!
|
|
|
| தமிழு குறும்படம் |
|
Posted by: AJeevan - 06-15-2004, 05:09 PM - Forum: குறும்படங்கள்
- No Replies
|
 |
<b>தமிழு </b>
[size=15]ரா. சின்னத்துரை
இது குறும்படங்கள் சீசன். புதுசுபுதுசாய் விதவிதமாய் குறும்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. "தமிழு' அந்த ரகம்.
பெண் மீதான வன்முறைகள் உலகம் முழுவதும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அதுவும் உடல் சார்ந்த பாலியல் ரீதியில் செய்யப்படும் வன்முறைகள்தான் அவற்றில் அதிகம். அப்படி ஒரு வன்முறையைப் பற்றி பேசுகிறது "தமிழு' குறும்படம்.
சுமார் 40 நிமிடம் ஓடும் இந்தப் படம் கடலூர் மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. செக்ஸ் தொழிலாளியின் மகள் பாத்திரமாக படைக்கப்பட்டிருக்கிறது "தமிழு' பாத்திரம். நம் தொழிலுக்கு மகளும் வந்துவிடக் கூடாது என்கிறாள் தமிழுவின் தாய். உடல் வன்முறையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் உயர் ஜாதியினர் வாழும் ஊரின் ஓரத்தில் வாழ்பவர்கள் தமிழுவின் தாய் மற்றும் சார்ந்தோர்கள். உயர்சாதி இளைஞனை தமிழு காதலிக்கிறாள். அவனும் காதலிக்கிறான். பின்பு தன் சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான்.
திருமணத்திற்கு பின் கொஞ்ச நாளிலேயே மீண்டும் தமிழிடம் வந்து மனைவியைக் குறை கூறுகிறான். ஆனால் தமிழு மறுக்கிறாள். இந்த மறுப்பில் கனமான வார்த்தைகள் பிரயோகப்படுத்தப்படுகிறது தமிழுவால்..... இது அவளின் முன்னாள் காதலனால் சாதியைப் பற்றிய பேச்சாக திரிக்கப்படுகிறது. தமிழுக்கு எதிராக ஊரே கிளம்புகிறது. ஊரின் வன்முறைக்கு முன்பே அவள் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறாள்..... அதோடு படம் முடிகிறது.
நம் சமூகத்தில் அடித்தட்டு நிலையில் நிகழும் மோதல்கள் ஜாதீய மோதலாக உருமாறுவது பற்றிய சித்தரிப்பு நல்ல சித்திரம். சில வசனங்கள் "நச்'சென்று இருக்கின்றன. எல்லா பாத்திரங்களில் வருபவர்களும் அவரவர் திறமையை சரியாகப் பயன்படுத்தி இருந்தாலும் இயக்குனர் தான் கைகொண்டிருக்கும் கதையை சிறப்பாக கையாண்டிருந்தாலும் நடிகர்கள் விஷயத்தில் கிராமப்புற அடித்தட்டு மக்களின் உடல் அமைப்புகளை பிரதிபலிக்கும்படியான விஷயங்களில் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும் பாத்திரங்களில் வரும் சில கலைஞர்கள் அந்த கதாபாத்திரத்தை சரிவர, புரியாமல் நடித்திருக்கின்றனர். என்றாலும் ஒரு நல்ல கதையை சமூகத்தில் நிலவும் ஒரு வன்முறையை நன்றாக பதிவு செய்துள்ளார் இயக்குனர்.
<b>?</b>
குறும்படத்தை விமர்சனம் செய்தவர்கள் அதன் இயக்குனரையோ கலைஞர்களையோ குறிப்பிடாதது ஏனோ?
-AJeevan
http://tamil.sify.com/pennaenee/fullstory....php?id=13490924
&
http://ajeevan.blogspot.com/
http://ajeevan.blogspot.com/
|
|
|
| பெண்களை போதைப் பொருளாகப் பார்க்கிறார்கள் & பேட்டி |
|
Posted by: AJeevan - 06-15-2004, 03:18 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (22)
|
 |
<img src='http://www.kumudam.com/junction/010604/pg3-t.jpg' border='0' alt='user posted image'>
‘இயக்குநர் இருக்கையில் பெண்கள்’ _ (women in the director's chair WIDC) இப்படியரு வித்தியாசமான தலைப்போடு ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச ஃபிலிம் மற்றும் வீடியோ திருவிழா அமெரிக்காவில் நடந்து வருகிறது. முழுக்க முழுக்க பெண் இயக்குநர்களின் படைப்புகளைத் திரையிடுகிற திருவிழா இது. டபிள்யூ ஐடிசி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த விழாவில், இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டு திரும்பியிருக்கிறார் லீனா மணிமேகலை. பார்வையாளராக அல்ல; பங்கேற்பாளராக. அந்த அனுபவத்தை லீனாவே விவரிக்கிறார்.
‘‘இந்த வருடம் நடந்தது டபிள்யூ ஐடிசியோட இருபத்திமூன்றாவது ஃபெஸ்டிவல். அஞ்சு நாட்கள்ல மொத்தம் ஐம்பது படங்களைத் திரையிட்டாங்க. பதினைந்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பெண் படைப்பாளிகளோட விதவிதமான படங்களைப் பார்க்க முடிஞ்சுது.
கமர்ஷியல் படங்களுக்கான ஃபெஸ்டிவல் எவ்வளவு பாப்புலரோ, அதே அளவு இந்த விழாவும் பாப்புலர். ஆனா இங்க திரையிடப்பட்டது எல்லாமே எக்ஸ்பரிமென்டல் அடிப்படையிலான படங்கள். கமர்ஷியல் வடிவத்துல இல்லாம, வித்தியாசமான, புதுமையான அணுகுமுறையைக் கொண்ட படங்கள். எல்லாப் படங்களுமே ஏதோ ஒரு விதத்துல, மரபுகளை உடைத்தெறியற, நம்ம சமூக அமைப்பை, கலாச்சாரத்தைக் கேள்வி கேக்கற படங்களாக இருந்தன. தர்க்க ரீதியா ஒவ்வொரு விஷயத்தையும் கேள்விக்குள்ளாக்குகிற அவங்களோட பார்வை பிரமிப்பா இருந்துச்சு.
குறிப்பா என்னை இம்ப்ரஸ் பண்ணின விஷயம் என்னன்னா, ஒவ்வொரு பெண் இயக்குநரும் தேர்ந்தெடுத்திருந்த கருக்கள்தான். பொதுவா, ‘இந்த விஷயங்களைத்தான் விஷ§வலா பதிவு செய்யணும். இதையெல்லாம் படமா எடுக்கக்கூடாதுன்னு ஒவ்வொரு படைப்பாளியின் மனசுக்குள்ளும் சில தடைகள்இ தயக்கங்கள் இருக்கும். இந்த விஷயத்தில் பெண் படைப்பாளிகள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனா அந்தத் தயக்கங்களையெல்லாம் நான் பார்த்த படங்கள் சுத்தமா உடைச்சு எறிஞ்சிடுச்சு.
இயற்கைக்கு மாறான விஷயங்களாக இருந்தாலும் சரி, நம்ம மனசுக்கு சரின்னு பட்டதை விஷ§வலா பதிவு செய்யலாங்கிற தெளிவை அழுத்தமா உருவாக்கிடுச்சு.
இந்த விழாவில பல்வேறு பிரிவுகள்ல படங்களை திரையிட்டாங்க. ஸ்ட்ரேடஜிச் அஃபன்ஸ்னு ஒரு பிரிவு. அமெரிக்காவோட அரசியல் அமைப்பு பத்தியும் கொள்கைகள் பத்தியும், பாதுகாப்புங்கற பேர்ல அவங்க அடிக்கிற கூத்துக்கள் பத்தியும் கேள்வி மேல கேள்வி கேட்கிற துணிச்சலான படங்களை இதில் திரையிட்டாங்க. அமெரிக்காவில இருந்துகிட்டே அந்த நாட்டோட முரண்பாடான கொள்கைகள் பத்தி காரசாரமா விமர்சனம் பண்ற தைரியமும், துணிச்சலும் அங்குள்ள படைப்பாளிகள் கிட்ட இருக்கு. அந்த நாட்டு மக்கள்கூட அரசோட தவறான முடிவுகளை எதிர்த்துக் குரல் கொடுக்கிறவங்களா இருக்காங்கங்கறதையும் உணர முடிஞ்சுது.
இந்த செக்ஷன்ல ‘லெட் மை கண்ட்ரி அவேக்’ன்னு ஒரு படம். ஈராக் மீது புஷ் அரசு போர் தொடுத்ததை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் நடந்த போராட்டங்களையும், மக்களோட எதிர்ப்பு உணர்வுகளையும் டாக்குமென்ட்ரியா பண்ணியிருந்தாங்க. ரொம்ப எஃபக்டிவா இருந்தது இந்தப் படம்.
அடுத்து, பிளாக் பிளானட்ங்கற பிரிவு, என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. எல்லாமே இனவெறி மற்றும் அதோட கொடூர முகங்கள் பற்றிய படங்கள். இன துவேஷமே எங்க நாட்டில இல்லன்னு தம்பட்டம் அடிச்சிக்கிட்டாலும், இன்னிக்கும், சம்பந்தப்பட்ட நாட்டு மக்களோட மனசில அந்தத் தீ எரிஞ்சிட்டுத்தான் இருக்குங்கறதை எமோஷனலா பதிவு செஞ்சிருந்தாங்க.
‘லெட்மி ஹியர் யுவர் பாடி டாக்கு’ங்கிற செக்ஷன்ல, பெண்களோட உடல் தொடர்பான கேள்விகளையும், நம்பிக்கைகளையும் உள்ளடக்கிய படங்கள் இடம் பெற்றிருந்தன. அந்தப் பிரிவில் நான் ரொம்ப ரசிச்சது, ஒன் இன் எய்ட்ங்கிற படம். மார்பகப் புற்று நோயால பாதிக்கப்பட்ட ஒரு பெண், அதற்கு எதிராக எப்படிப் போராடறா? அந்தப் போராட்டத்தில எத்தனை சவால்களைச் சந்திக்கிறா? எந்த மாதிரியான ஆதரவு அவருக்குக் கிடைக்குதுன்னு ஆராய்கிற படம். இந்தப் படம் ரியலிஸ்டிக்காவும் டச்சிங்காவும் மட்டுமல்ல, என்டர்டைனிங்காவும்இ காமெடியாவும் இருந்தது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.
(இண்டர்)நேஷனல் கமாடடீஸ்’ங்கிற செக்ஷன்லதான் என்னோட பறை டாக்குமென்டரியை திரையிட்டாங்க. உலகம் முழுக்க பெண்களை எப்படி போகப் பொருளாகப் பார்க்கறாங்க, பல்வேறு நாடுகளுக்கு இடையில் பரிமாறிக் கொள்ளப்படறாங்கன்னு அழுத்தமா சொல்ற படங்களை இந்த செக்ஷன்ல பார்த்தேன். ‘சம்திங் பிட்வீன் ஹர் ஹேன்டி’ன்னு ஒரு படம். தென்கிழக்கு ஆசியப் பகுதியில் பெண்கள் பாலியல் அடிமைகளா தள்ளப்படறது பத்தியும், அதற்கான காரணங்கள், அதிலிருந்து விடுபட்டவங்களோட வாழ்க்கை முறை பத்தியும் எமோஷனலா பதிவு செய்திருந்தாங்க.
ஸ்கிரீனிங் மட்டுமல்லாமல் கலந்துரையாடலும் அன்னிக்கு இருந்தது. ‘வளரும் நாடுகளில் பெண்கள்’ எனும் தலைப்பில நான் என்னுடைய ரிப்போர்ட்டை பிரசன்ட் பண்ணினேன்.
பிரிசன் லல்லபிஸ்ங்கற டாக்குஃப்யூச்சர் பத்தி நான் கண்டிப்பா சொல்லியாகணும். கர்ப்பிணியா இருக்கிற ஐந்து பெண்கள் போதைப் பொருள் வழக்கு தொடர்பா சிறையில் அடைக்கப் படறாங்க. அவங்களுக்கு பிறக்கற குழந்தைகள் ஒரு வயசு வரையிலும் அம்மாக்களோடு இருக்க அனுமதிக்கப்படறாங்க. அதற்குப் பிறகு அந்தக் குழந்தைகள் வெளியே அனுப்பப்படறாங்க. அந்த தாய்மார்கள் அடைகிற சந்தோஷம், குழந்தைகளைப் பிரிஞ்ச பிறகு அவங்களுக்கு ஏற்படற சோகம், தங்களோட பிள்ளைகளைப் பார்க்கறதுக்காக அவங்க படற கஷ்டங்கள், சிதறிப்போன அவங்களோட குடும்பம்ன்னு பல்வேறு உணர்வுகளை ரொம்ப அற்புதமா இந்த டாக்குமென்டரியில் டச் பண்ணியிருந்தாங்க.
இந்த ஃபெஸ்டிவல் முடியற அன்னைக்கு டிரின் மின்_ஹாங்கற அற்புதமான பெண் படைப்பாளிக்கு மரியாதை செலுத்தற விதமா, அவங்க கடைசியா டைரக்ட் செய்த நைட் பேசன்ஜர் படத்தைத் திரையிட்டாங்க. இயக்குநர், பெண்ணியவாதி, கவிஞர்ன்னு மின்_ஹாவுக்கு ஏகப்பட்ட முகங்கள்.
அவங்களோட கடைசி படம், ‘ஒரு படம் இப்படித்தான் ஆரம்பிக்கணும், இப்படித்தான் முடியணும். இந்த மாதிரி காட்சி அமைப்புகள் தான் இருக்கணுங்கிற தியரியையெல்லாம் உடைச்சு எறிஞ்சிடுச்சு. தத்துவம், கவிதைஇ ரியலிசம், உருவகம்னு எல்லாவிதமான கலை வடிவங்களையும் உள்ளடக்கிய அந்தப் படத்தைப் பார்க்க பிரமிப்பா இருந்துச்சு.
மக்களோட கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பதிவு செய்ற எத்னோகிராபிங்கிற செக்ஷன்ல என்னோட மாத்தம்மா படத்தைத் திரையிட்டாங்க. மீடியா உலகில் மிக முக்கியமான திருவிழாவாகக் கருதப்படற டபிள்யூஐடிசியில என்னோட இரண்டு டாக்குமென்டரிகள் திரையிடப்பட்டது ரொம்ப பெருமையான, சந்தோஷமான விஷயம்.
நான் அமெரிக்கா போனது அந்த விழாவுக்காக மட்டும்தான். ஆனா, அங்குள்ள தமிழர் சங்கங்கள் என்னோட டாக்குமென்டரிகள் பத்திக் கேள்விப்பட்டு உடனடியா பத்து, பன்னிரண்டு ஸ்கிரீனிங்ஸ் அரேஞ்ச் பண்ணாங்க. நியூயார்க், சிகாகோ, மேரிலாண்ட்ன்னு பயங்கர டூர். கொலம்பியா பல்கலைக்கழகம், விவேகானந்தர் பேசின சிகாகோ பல்கலைக்கழகம்ன்னு புகழ் பெற்ற இடங்களில் ஸ்கிரீன் பண்ணினது என்னால மறக்கவே முடியாத விஷயம்’’ பெருமிதமாய்ச் சொல்கிறார் லீனா.’’
_ ஆனந்த்
படங்கள்: ஆர். கோபால்
Kumudam.com
டாக்குமென்றி படமெடுத்து மிலியனர் ஆக முடியுமா?
<img src='http://sifyimg.speedera.net/sify.com/news_info/tamil/pennaenee/images/penjune484.jpg' border='0' alt='user posted image'>
-லீனா மணிமேகலை
செயல்களைக் குறித்த விமர்சனங்களைவிட, தமிழ்நாட்டில் அந்தச் செயல்களைச் செய்தவர்கள் யார்? அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள்? அவர்களுக்கு அந்தச் செயலைச் செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? என்பதைக் குறித்தெல்லாம் விமர்சனங்கள் எழும். இதற்கு சமீபத்திய உதாரணம் லீனா மணிமேகலை!
அரக்கோணத்திற்கு அருகிýருக்கும் மாங்காட்டுச்சேரி கிராமத்தில், அருந்ததியினர் சமூகத்தில் இன்றைக்கும் ஆண்குழந்தை வேண்டி, உடல் நலம் பெற வேண்டி பெண் குழந்தைகளை, அவர்களின் சிறு தெய்வமான "மாத்தம்மா'விற்கு நேர்ந்து விடுவதையும், முறையான உறவுகள் இன்றி அவர்களின் வாழ்க்கையும், அவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளின் வாழ்க்கையும் சூன்யமாவதை, தன்னுடைய "மாத்தம்மா' ஆவணப்படத்தில் சுட்டிக் காட்டியிருந்தவர் லீனாமணிமேகலை.
"தýத் பிரச்சனைகளை படமாக்கி காசு பார்க்கிறார் லீனா. அவர் அடிப்படையில் தýத் அல்ல' என்பது போன்ற விஷமப் பிரச்சாரங்கள், ஏதோ சில ஆதாயத்துக்காக உள்ளூரில் பரப்பப்பட்டாலும், லீனா மணிமேகலையின் படைப்பு நேர்மை, அமெரிக்காவில் நடந்த 23வது சர்வதேசப் பெண் இயக்குனர் களுக்கான திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டதின் மூலம் நிறுவப் பட்டிருக்கிறது.
""ஏறக்குறைய 50லிக்கும் மேற்பட்ட நாடுகளிýருந்து பெண் இயக்குனர்களின் படைப்புகள் திரையிடப்பட்ட இந்த விழாவில், என்னுடைய "மாத்தம்மா', "பறை' இரண்டு படங்களுமே திரையிடப்பட்டதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி'' என்ற லீனா மணிமேகலையிடம் நாம் முன் வைத்த சில கூர்மையான கேள்விகளும், அவரின் முனை மழுங்காத பதில்களும்....
"தýத் பிரச்சனைகளை காசாக்குகிறீர்கள்' என்ற விமர்சனத்திற்கு உங்களின் பதில்?
அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டு. டாகுமெண்டரியை விற்று யாரும் மில்ýயனராக முடியுமா? "மாத்தம்மா' எங்களின் "கனவுப்பட்டறை' தயாரிப்பு. நிறையபேருக்கு ஒவ்வொரு முறையும் எங்கள் சொந்த செலவிலேயே சி.டி.யில் படத்தை மாற்றி கொடுப்போம். "பறை' "அகில உலக டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கம்' சார்பில், யேசுமரியானின் பெருமுயற்சியில் தயாரிக்கப்பட்டது. இதில் எண்ணற்ற வர்களின் பணம் இருக்கிறது. அவர்களுக்கான பணம் இந்த சி.டி.யை விற்பதில்தானே திரும்பக் கிடைக்கும்?
ஒடுக்கப்பட்டவர்களின் வேதனை யை, சாதி இந்துக்களின் அராஜகப் போக்கின் பதிவுதான் "பறை'. 45 நிமிட நேர இந்த ஆவணப்படத்தில் 22 இடத்தில் வெட்ட வேண்டும் என்றது சென்சார். இதை நான் ஒத்துக்கொள்ளவில்லை. சென்சாரை மீறி தனிச்சுற்றுக்குதான் இதை கொடுத்து வருகிறோம்.
வணிக ரீதியான படங்கள் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பக் கருவிகளைத்தான் நானும் பயன்படுத்துகிறேன். இதற்கான காமிராவை வாடகைக்கு எடுப்பதிýருந்து, படப்பிடிப்பு நடத்துவது வரை எதிலும் தனிப்பட்ட சலுகைகள் என்பது எதுவும் கிடையாது. அப்படி இருக்கும்போது, இதற்கென்று ஒரு விலையை நிர்ணயிப்பதால்தானே இதில் போட்ட முதலீட்டை எடுக்க முடியும்? ஒரு ஜனரஞ்சக சினிமாவை சில நூறுரூபாய் கொடுத்து பார்க்கும்போது, தாழ்த்தப்பட்டவர்களின் நிலையைப் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டே எடுத்திருக்கும் "டாகுமெண்டரி'யைக் காசு கொடுத்து வாங்கிப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் நினைப்பதில் என்ன தவறு? இங்கு நிறையபேருக்கு டாகுமெண்டரி என்றால் "ஓசி'யில் பார்க்க வேண்டியதுதான் என்ற நினைப்பு இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
அருந்ததியர் விடுதலை முன்னணியின் தயாளன், ""மாத்தம்மா' படம், படப்பிடிப்பு நடந்த மாங்காட்டுச்சேரி கிராமத்திலேயே திரையிடப்பட வில்லை. அது உண்மைக்கு புறம்பான விஷயங்களைப் பேசுகிறது. அதை தடை செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளாரே...? (கோபத்தில் முகம் சிவக்கிறது)
யார் இந்த தயாளன்? உண்மையிலேயே அருந்ததியர் விடுதலையில் அவருக்கு ஆர்வம் இருந்தால், அங்கு நடக்கும் அவலங்களை தடுத்து நிறுத்த வேண்டும். பிரச்சனையின் ஆழத்தை, அவலத்தை அந்தப் பகுதி மக்களைக் கொண்டேதான் பதிவு செய்திருக்கிறேனே தவிர, துணை நடிகைகளை நடிக்க வைத்து அல்ல. மாங்காட்டுச்சேரியில் திரையிட வில்லையே தவிர, அரக்கோணத்தில் திரையிடும்போது, மாங்காட்டுச் சேரியிýருந்து சம்பந்தப்பட்ட வர்களை, அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில்தான் திரையிட்டேன். அதோடு பாதிக்கப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களையும் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறேன்.
தýத் பிரச்சனைகளை பேசுவதற்கும், படமாக்குவதற்கும் நான் தýத்தாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மனுஷியாக இந்தப் பிரச்சனைகளை நான் எடுத்துக்கொண்டேதான் இருப்பேன்.
விழாவில் எந்த மாதிரியான திரைப்படங்கள் திரையிடப்பட்டது?
வளரும் நாடுகளில் பெண்கள் மீதான, குறிப்பாக தýத் பெண்கள் மீதான வன்முறை தொடர்பாக நான் எடுத்த "பறை' திரைப்படம் திரையிடப்பட்டது. நம் நாட்டில் சாதி, மதங்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் அவலங்களைப் போலவே, இனவெறியால் அயல்நாடுகளில் நடக்கும் பாýயல் வன்முறைகள் பற்றி நிறைய படங்கள் திரையிடப்பட்டது. மேலும், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை தீவிரமாகக் கிண்டலடிக்கும் படங்கள், பாýயல் சுதந்திரம் குறித்த படங்கள், அரசியýல் மத நம்பிக்கைகளின் திணிப்பு, இன்றைய சூழ்நிலையில் பின்பற்றப்படும் கடந்தகால கலாச்சார அதிர்வுகள் பற்றிய படங்கள் ஆகிய தலைப்புகளில் பல திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
அமெரிக்காவில் எந்தெந்த இடங்களில் திரையிடப்பட்டது?
சிகாகோ தமிழ்ச்சங்கம், வாஷிங்டன் தமிழ்ச்சங்கம், மிட்லிஈஸ்ட் தமிழ்ச்சங்கம், நியூயார்க் தமிழ்ச்சங்கம், நியூஜெர்சி, எய்ட், கொலம்பியா பல்கலைக்கழகம், பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகம், யுனிவர்சிட்டி ஆப் மேரிலேண்ட் ஆகிய இடங்களில் ஏறக்குறைய பன்னிரண்டு மாநிலங்களில் இந்த விழாவிற்கான படங்கள் திரையிடப்பட்டது.
சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள, படங்களில் இருக்கும் கருத்துகள் தவிர, அந்தப் படம் பற்றிய விமர்சனங்கள் கணிப்புகள் பற்றிய பத்திரிகைச் செய்திகள் மற்றும் மீடியா ரிப்போர்ட்டும் முக்கியம். அதை அடிப்படையாக வைத்துதான், என்னுடைய மாத்தம்மாவும் பறையும் தேர்ந்தெடுக்கப் பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்டதின் மூலம், தýத் பெண்கள் மீதான பாýயல் வன்முறைகளை சர்வதேச அளவில் கொண்டு சென்ற திருப்தி ஏற்பட்டிருக்கிறது. அதோடு முன்னிலும் வேகமாகவும், தெளிவாகவும் நிறைய விஷயங்களை அணுகக்கூடிய விஷய ஞானம் கிடைத்திருக்கிறது. புதிய நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் கிடைத்திருக்கிறது.
அமெரிக்கா வாழ் இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் எப்படி உள்ளது?
அமெரிக்காவில் "எச்' விசாவில் இருப்பவர்கள், இந்தியாவுக்கு வந்து பெண்களைத் திருமணம் செய்து கொண்டு போகின்றனர். அப்போதுதான் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அமெரிக்காவில் கிடைக்கும். அங்கு சென்றவுடன் நமது பெண்களை வெளியுலகமே தெரியாத அளவுக்கு கூண்டுக்கிளியாக்கி வருகின்றனர். திருமண பந்தத்தைத் தொடரவும் முடியாமல், துண்டிக்கவும் வழியில்லாமல் நாளுக்கு நாள் இந்திய அபலைகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. பாதிக்கப்பட்ட அமெரிக்கா வாழ் பெண்களின் துயர் துடைக்க பல சங்கங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களைப் பற்றியே ஒரு டாகுமெண்டரி எடுக்கலாம் என்ற எண்ணம்கூட ஏற்பட்டது. அவ்வளவு சோகம் ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் இருக்கிறது.
உள்ளூர் பிரச்சனையை உலகளாவிய அரங்கத்துக்கு கொண்டு சென்றதில் நிறைய கருத்து வேறுபாடுகள் எழுந்ததா?
பிரச்சனை நடக்கும் இடம் வேறாக இருக்கிறதே தவிர, பிரச்சனையின் மையம் பெண்தான் என்பதில் பொதுமை இருக்கிறது. பகை, போர் போன்ற சூழ்நிலைகளில்கூட பெண்ணுடைய உடல்தான் களமாக இயக்கப்படுவதை உணர முடிந்தது. மாங்காட்டுச்சேரியில் நடக்கும் விஷயம் எங்கேயோ கம்போடியாவிலும் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. இந்த பகிர்ந்து கொள்ளல் நிச்சயம் பெண்ணியத்தின் சாளரத்தை அல்ல; கதவுகளையே திறக்கும்!
- ரவிக்குமார்
http://tamil.sify.com/pennaenee/index.php
|
|
|
| கருனா |
|
Posted by: sethu - 06-14-2004, 01:09 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
முகவரி நீக்கப்பட்டுள்ளது
கருனா
வின் மெயில் விலாசத்தை சிங்கள ஊடகம் ஒன்டு செய்தியில் வெளியிட்டிருக்கிறது கரனாவுடன் தொடர்புகளை பேன முடீயம் என்டும் கிடக்க கருனாக்கு செய்தி அனுப்பி பாருங்கோ நானும் போட்டன் அம்மான் உடனை நான் ஆர் என்டு சொன்னார். தான் மட்டக்களப்பில் இருப்பதாகவும் சொல்லுறார்.
|
|
|
|